சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : ஜப்பான் 

Japanese earthquake causes catastrophic damage

ஜப்பானிய நில நடுக்கம் பேரழிவுச் சேதங்களை ஏற்படுத்தியது

By Mike Head
12 March 2011
Use this version to print | Send feedback

பல நூற்றுக்கணக்கான மக்கள் இறந்துவிட்டார்கள் என்று அஞ்சப்படுகிறது. ஆயிரக்கணக்கானவர்கள் வீடிழந்து நிற்கும் நிலையானது ஜப்பானை இதுகாறும் தாக்காத அளவிற்கு மிக வலுவான நில அதிர்வு தாக்கியுள்ள நிலையில் இவை ஏற்பட்டுள்ளன. நேற்று 8.9 என்று மதிப்பிடப்பட்ட அதிர்வுஉலக வரலாற்றிலேயே ஏழாவது மிகப் பெரியது இதுவாகும்பேரழிவுச் சேதங்கள், குறிப்பாக வடக்கு ஜப்பான் முழுவதிலும் ஏற்படுத்தியுள்ளது.

கடலோர நகரங்களும் சிறு நகரங்களும் முக்கிய நில அதிர்வால் ஏற்படுத்தப்பட்ட 10 மீட்டர்கள் உயரக் கொந்தளிப்பு அலைகளைக் கொண்ட சுனாமிகளால் சூழப்பட்டன. இதைத்தொடர்ந்து கிட்டத்தட்ட இடைவிடாத பெரிய பின்னதிர்வுகள் ஏற்பட்டன. அவை 7.4 ரிக்டர் பெரிய அளவுகளிலிருந்த வலிமையைக் கொண்டவை. உள்ளூர் நேரப்படி 2.46 பிற்பகலுக்கு ஏற்பட்ட ஆரம்ப அதிர்ச்சிக்கு இரண்டு மணி நேரத்திற்குள் இராட்சத அலைகளும், கடல் கொந்தொளிப்புக்களும் தரைப் பகுதியில் 10 கி.மீ. உள்ளே புகுந்தன. இவை வீடுகள், ஆலைகள், பண்ணைகள் ஆகியவை அனைத்தையும் இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டன. வசிப்பவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு ஓடுவதற்கு அதிக நேரமும் கொடுக்கவில்லை.

காலைப் பொழுது விடிந்ததும், சேதங்களின் பரப்பு வெளிப்படத் தொடங்கியது. சில நகரங்களில் அநேகமாக மரத்தினால் அமைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான வீடுகள் எல்லாம் முற்றிலும் அடித்துச் செல்லப்பட்டன. உயர்ந்த கொங்க்ரீட் கட்டிடங்கள் அவற்றின் இரண்டாவது மாடி அளவிற்கு வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கடை வளாகங்கள், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் சகதிக்குள் மூழ்கியுள்ளன. தீ தொடர்ந்து எரிகிறது, வீடுகளையும் அடுக்குமாடி கட்டிடங்களையும் நாசப்படுத்தியது.

ஒரு மில்லியன் மக்கட்தொகை கொண்ட வடகிழக்கு நகரமான செண்டாயில் 200 முதல் 300 சடலங்கள் இதுவரை கண்டு எடுக்கப்பட்டதாக பொலிசார் தகவல் கொடுத்துள்ளனர். செண்டாய் நகரம் நில அதிர்வு மையப் பகுதிக்கு வெகு அருகில் இருந்த நகரப்பகுதியாகும். டோக்கியோவிற்கு 400 கி.மீ. வட மேற்காக நில அதிர்வின் மையப் பகுதி கடலுக்கு 10 கிலோ மீட்டர் கீழே இருந்தது.

டோக்கியோ உட்பட உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை இன்று காலை 9 மாநிலங்களிலும் 427ஐ எட்டியது.இந்த எண்ணிக்கை 1,000க்கும் அதிகமாக அதிகரிக்குமென்று தேசிய பொலிஸ் அமைப்பும் பாதுகாப்பு அமைச்சரகமும் கூறியுள்ளன.

இறுதி எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கக்கூடும். தொலைக்காட்சியில் இடிபாடுகளைத் தள்ளிக் கொண்டு வரும் பெரும் தண்ணீரானது வீடுகள், பெரிய கட்டிடங்கள், கார்கள், பஸ்கள் ஆகியவற்றை அடித்துத் தள்ளுவதைக் காட்டுகின்றன. காரில் இருப்பவர்கள் பெரும் வேகத்தில் பாயும் வெள்ளநீரிலிருந்து தப்பியோட முயல்வதில் வெற்றி பெற முடியவில்லை. புகுஷிமாவில் ஒரு அணை உடைந்து, வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன என்று க்யோடா செய்தி அமைப்பு இன்று காலை கூறியுள்ளது.

24 மணிநேரத்தில் 50க்கும் மேற்பட்ட பரந்த பின்னதிர்வுகள் ஜப்பானின் பெரும் பகுதியைத் தொடர்ந்து பாதிப்பிற்கு உட்படுத்துகின்றன. டோக்கியோவிற்கு அருகே எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலை இன்னும் எரிந்து கொண்டிருக்கின்றன. இவை எரிவாயு, எண்ணெய்க் கசிவுகளால் அனேகமாக ஏற்படுத்தப்பட்டிருக்கலாம். அத்தோடு தலைநகரிலும் இன்னும் பல நகரங்களிலும் பல அடுக்குமாடி வீடுகள் இன்னமும் தீப்பற்றி எரிந்த வண்ணம் உள்ளன. ஒரு கப்பலும் பயணிகள் இரயிலும் முற்றிலும் காணாமற் போய்விட்டன என்ற தகவலும் வந்துள்ளது.

குறைந்தபட்சம் இரு மின்சக்தி நிலையங்கள் சரியாகச் செயல்படாத நிலையில் ஒரு அணுசக்தி நெருக்கடிக் காலத்தைப் பிரதம மந்திரி நாவோடா அறிவித்தார். இது கதிரியக்கக் கசிவுகள் ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. டோஹோகுவிலுள்ள மின்சக்தி ஒனகவா நிலையத்திலுள்ள குளிர்ச்சிப்படுத்தும் முறை செயற்படவில்லை. க்யோடா செய்தி நிறுவனமானது ஆலையில் தீப் பிடித்து எரிந்து வருவதாகத் தகவல் கொடுத்துள்ளது. மூன்று மற்ற அணுசக்தி ஆலைகளும் முற்றிலும் பாதுகாப்பிற்காக மூடப்பட்டுள்ளன. ஆனால் அங்குள்ள 80,000 மக்கள் புகுஷிமா மாநிலத்தைச் சுற்றியுள்ள 10 கி.மீ. சுற்றளவிலிருந்து பாதுகாப்பிற்காக வெளியேற்றப்படுகின்றனர்.

ஜப்பானின் அணுசக்திக் கட்டுப்பாட்டு நிறுவனம் இன்று காலை கதிரியக்க அளவுகள் ஒரு புகுஷிமா அணுக் கதிரியக்க கருவியில் சாதாரண நிலையைவிட 1,000 மடங்கு அதிகரித்துவிட்டது என்று கூறியுள்ளது.”முன்னோடியில்லாத ஆணை என்று க்யூடா இதுபற்றி அரசாங்கம் வெளியிட்டுள்ள ஆணையைக் குறிப்பிடுகிறது. இது டோக்கியோ மின்சக்தி அமைப்பின் இரு இயந்திரங்களிலுள்ள அழுத்தங்களை நீக்குவதற்கு பாதுகாப்புக் குழாய்களைத் திறக்குமாறு உத்தரவிட்டது. அதையொட்டி பல கதிரியக்க கருவிகளில் அதிக வெப்பம் ஏற்படும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.

நில அதிர்வு பாதித்தபின் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கானின் ஆரம்ப அறிவிப்பை மறுத்து, கதிரியக்க ஆபத்துக்கள் ஏதும் இல்லை என்று அணுசக்தி அவசரக்கால அமைப்பு கூறியுள்ளது. “வட ஜப்பானில் பரந்த இடங்களில் பெரும் சேதங்கள் ஏற்படும்என்று கான் எச்சரித்து மக்கள்வானொலி, தொலைக்காட்சியில் வரும் தகவல்களைக் கவனமாகக் கேட்டு அமைதியாக இருக்க வேண்டும்என்றார்.

இந்த நில அதிர்வு கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்கு முன்பு நியூசிலாந்தில் கிறிஸ்ட்சர்ச் நகரத்தை பேரழிவிற்கு உட்படுத்தியதை விட 160 மடங்கு கூடுதல் சக்தி வாய்ந்தது. முக்கிய நில அதிர்வு ஏற்பட்ட முப்பது நிமிடங்கள் கழிந்தபின்னரும் கூட டோக்கியோவில் இருந்த உயரமான கட்டிடங்கள் அசைந்து கொண்டிருந்தன. கைபேசி இணையங்கள் செயல்படவில்லை. மிக உயர்ந்த நில அதிர்வு அளவிற்கு ஏற்ப கட்டப்பட்டிருந்த முக்கிய கட்டிடங்கள் பெரும் நில இயக்கங்களை எதிர்த்து நிற்க முடிந்தது.

ஆயினும்கூட, நகரத்தை பின்வந்த பெரிய அதிர்வினால் தாக்கியபோது, உயரமான அலுவலகம் மற்றும் வீட்டுக் கட்டிடங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் பொறியிற் சிக்கியது போல் அகப்பட்டுக் கொண்டனர். ஒரு பட்டமளிப்பு விழாவின்போது அரங்கின் மேற்பகுதி சரிந்ததால் ஏராளமானவர் காயமுற்றனர். டோக்கியோவில் குறைந்தபட்சம் 10 இடங்களில் இருந்தேனும் புகை மண்டலங்கள் வெளிப்பட்டதோடு, 4 மில்லியன் வீடுகள் மின் தடைக்கு உட்பட்டன. நகரத்தின் மெட்ரோ முறை பல மணி நேரங்களுக்கு மூடப்பட்டது. அதேபோல் நரித்தாவிலுள்ள முக்கியச் சர்வதேச விமான நிலையமும் மூடப்பட்டது. மெட்ரோபோலிட்டன் நெடுஞ்சாலைகளும் மூடப்பட்டன.

வடக்கில் இன்னும் சேதம் கூடுதலாக இருந்தது. ஹெலிகாப்டரிலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் கடலோரச் சிறுநகரங்களில் மிகப்பெரும் வெள்ளப்பெருக்கைக் காட்டின. ஜப்பானின் வானியல் கணிப்பு மையம் இரண்டு மணி நேரத்திற்குள் சுனாமிகள் நாட்டின் கிழக்குக் கடலோரப் பகுதியான 2,100 கி.மீ நீளத்திற்குள்ள நகரங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், வடக்குத் தீவான ஹொக்கைடோவிலிருந்து மத்திய வகயாமா மாவட்டம் வரை என்று கூறியுள்ளது.

ஹோண்டா, நிசான், டோயோட்டா, சோனி, வோல்வோ உட்பட பல பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் ஆலைகளை மூடும் கட்டாயத்திற்கு இச்சேதங்கள் ஏற்படுத்தியுள்ளது, இது குறைந்தபட்சம் தற்காலிகமாகவாவது இருக்கும் என்று அறிவித்துள்ளன. டோசிகி இது டோக்கியோவிற்கு வடக்கே உள்ள மாவட்டத்திலுள்ள அதன் ஆய்வு, வளர்ச்சி மையத்தில் 43 வயது ஆண் ஒருவர் உணவுச் சிற்றுண்டி நிலையத்தில் ஒரு சுவர் சரிந்தபோது இறந்துவிட்டதாக ஹோண்டா கூறியுள்ளது. பல ஹோண்டா நிலையங்களில், இதே மாவட்டத்தைச் சேர்ந்தவர்களில், 30க்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றனர்.

நிலநடுக்கம் பற்றிய ஆராய்ச்சியாளர்கள் சில காலமாகவே இத்தகைய பெரும் நில அதிர்வு வரக்கூடும் என்று கருதியிருந்தனர். இதன் நில அதிர்வு மையப் பகுதி பூமியின் இரு கீழ்மட்டத் தகட்டுப் பகுதிகளின் (tectonic plates) எல்லைகளை ஒட்டி அமைந்துள்ளது. பசிபிக் தகட்டுப் பகுதி மேற்குப் புறமாகச் நகர்ந்து, யுரேசியத் தகட்டின் முனைக்குச் சென்றது. முந்தைய வாரமும் பல கணிசமாக நில அதிர்வுகள் ஏற்பட்டன, அவற்றுள் ஒன்று ரிக்டர் அளவுகோலில் 7.1 அளவைக் காட்டியது.

8 என்ற அளவுடைய ஏழு நில அதிர்வுகள் 1891ல் இருந்து ஜப்பானைத் தாக்கியுள்ளன. 1923ம் ஆண்டு 7.9 அளவுடைய நில அதிர்வு டோக்கியோ மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் 147,000 பேரை பலி வாங்கியது. இதற்குக் காரணம் மரம் மற்றும் காகித வீடுகளில் எரிந்த நெருப்புக்கள்தான். 1995ல் கடுமையான கட்டிட விதிகள் தற்கால நகர்ப் புறப்பகுதிகளில் இருந்தபோதிலும்கூட, 6,000 பேர் கோப் நில அதிர்வில் இறந்து போயினர். இது முக்கியமாக வறியவர்கள், தொழிலாள வர்க்கத்தினர் இருக்கும் பகுதிகளில் நடந்தது. அரசாங்கம் உயர்தரங்களை இங்குச் செயல்படுத்துவதில் தோல்வி அடைந்தது.

நேற்று இரவு ஒரு சுனாமி எச்சரிக்கையானது பிராந்தியம் முழுவதும் கொடுக்கப்பட்ட பின்னர் முழு பசிபிக் வளையமும் உயர் எச்சரிக்கை நிலைமையில் இருத்தப்பட்டது. பசிபிக் முழுவதும் சுனாமிக்கள் ஏற்படலாம் என்று அஞ்சப்பட்டன. ஏனெனில் இந்த நில அதிர்வு இந்தோனிசியாவில் 9.1 தரம் என்ற உயர்ந்த அளவில் ஏற்படுத்தி  200,000 மக்களை டிசம்பர் 2004ல் கொன்றுவிட்ட இந்தியப் பெருங்கடலில் ஏற்படுத்திய சுனாமிக்களின் சக்திக்கு ஒப்பாக உள்ளது.

மணிக்கு 800 கி.மீ.வேகத்தில் பசிபிக் பகுதியை கடந்த அலைகள் நேற்று அதிகாலையிலேயே உள்ளூர் நேரப்படி கலிபோர்னியாவை அடைந்த போது சக்தி வாய்ந்திருந்தன. அங்கு அது மாநிலத்தின் வடக்கேயுள்ள கிரசென்ட் நகரத்தின் துறைமுகத்தைச் சின்னாபின்னமாக்கியது. வெளியேறும் எச்சரிக்கை கொடுத்த அபாய ஒலியின் முழக்கத்தை வசிப்பவர்கள் கேட்டு வெளியேறியதால், பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன. ஆனால் பல மரப் பகுதித் துறைமுக இடங்களை சுனாமிகள் தகர்த்து அழித்தன, இரண்டு டஜன் படகுகளையும் சேதப்படுத்தின. நகரத்திற்குத் தெற்கே 20 கி.மீ. தொலைவிலுள்ள கடற்கரையொன்றில் புகைப்படம் எடுக்க முற்பட்ட ஒருவர் கடலுக்குள் இழுக்கப்பட்டார். கூட்டாட்சி நில அதிர்வு ஆய்வாளர்கள் அமெரிக்காவை வெள்ளியன்று 3 மீட்டர் உயர அலைகள், கிரிசென்ட் நகரத்திற்குள் பாய்ந்து புகுந்து தாக்கின என்று கூறினார்கள்இவை ஹவாயைத் தாக்கிய 2 மீட்டர்கள் எழுச்சியை விட உயரமானவை. கலிபோர்னியாவின் எஞ்சிய கடலோரப் பகுதிகள் விரைவில் பெரும் எழுச்சி அலைகளை அதற்குப் பின் கண்டன. அதற்குள் தாழ்வான பகுதிகளில் இருந்த மக்கள் வெளியேறத் தொடங்கிவிட்டனர். அதிகாரிகள் பள்ளிகளை மூடினர். கடலோரப் பகுதிகளையும் எச்சரிக்கையின் பொருட்டு மூடிவிட்டனர்.

இன்று வந்துள்ள உத்தியோகபூர்வத் தகவல்கள் தெற்கு பசிபிக்கில் அதிக சேதம் ஏற்படவில்லை என்று குறிக்கின்றன. ஆனால் இரு மீற்றர் உயரமுள்ள அலைகள் ஹவாயை இன்று அதிகாலை தாக்கின. ஹவாய் அதிகாரிகளுக்கு தயாரிப்புக்களுக்காக சற்று நேரம் கிடைத்ததால், அபாய ஒலிகள் இரவு முழுவதும் ஒலித்தன. கடலோரப் பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பான சமூக மையங்கள், பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டனர். சுற்றுலாப் பயணிகள் ஹோட்டல்களின் உயர் மாடிகளுக்கு நகர்த்தப்பட்டனர்.

வெள்ளை மாளிகைச் செய்தியாளர் கூட்டம் ஒன்றில், அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா பேரழிவின் தீவிரத்தைப் பற்றிக் கவலை தெரிவித்து அமெரிக்கத் துருப்புக்கள் நிலைகொண்டுள்ள நெருக்கமான நட்பு நாடான ஜப்பானுடன்தோளோடு தோள் அமெரிக்காநின்றுஇச்சோகத்திலிருந்து மீண்டு மறுகட்டமைப்பு ஏற்படுத்தும் வரை நிற்கும்என்றார். இவர் ஆரம்பத்தில் இராணுவ உதவியை அளிக்க முன்வந்தார். தற்பொழுது அமெரிக்கா ஜப்பானில் விமானத் தளமுடைய கப்பல் ஒன்றைக் கொண்டுள்ளது என்றும் மற்றொன்று அங்கு சென்று கொண்டிருக்கிறது என்றும் ஒபாமா கூறினார். ஒரு மூன்றாவது கடற்படைக் கப்பல் மரியனஸ் தீவுகள் பக்கம் தேவை ஏற்பட்டால் உதவுவதற்குச் சென்று கொண்டிருக்கிறது.

நிதிய மற்றும் ஆளும் வட்டாரங்களில், பேரழிவின் பொருளாதாரப் பாதிப்பு பற்றி கணிசமான மனத்தளர்வு வெளிப்பட்டுள்ளது. CNN கூறியது: அதாவதுவெள்ளியன்று ஒரு மிகப் பெரிய நில அதிர்வு மற்றும் சுனாமி ஜப்பானைத் தாக்கிய அளவில், உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் அதிர்ச்சிக்கு உட்பட்டனர். ஏற்கனவே எண்ணெய் விலைகள் மற்றும் மத்திய கிழக்கிலுள்ள கொந்தளிப்பு மிகுந்த அரசியல் நிலைமை பற்றிய பதட்டத்திலுள்ள சந்தைகளுக்கு மற்றொரு உறுதியற்ற தட்டு சேர்ந்துள்ளது. ”ஜப்பானின் நிக்கி பங்குச் சுட்டெண் உடனடியாக 1.7 சதவிகிதமாகச் சரிந்தது.

ஜப்பானின் பொருளாதாரத்திற்கு அல்லது உலகப் பொருளாதாரத்திற்கு இது தோற்றுவிக்கக் கூடிய பாதிப்பைப் பற்றி மதிப்பீடு செய்வது கடினம்என்று High Frequency Economics இன் தலைமைப் பொருளாதார வல்லுனர் கார்ல் வீன்பெர்க் கூறினார். ஆனால், “பொருளாதார அதிர்வுகள் எவரும் கற்பனை செய்து பார்க்கமுடியாத அளவை விட மிக அதிகமாக இருக்கலாம், இருக்கும் என்றுதான் அனுபவம் நமக்கு உணர்த்துகிறதுஎன்றார்.

ஜப்பானின் பொருளாதாரம் 1989ல் இருந்து தேக்கம் அடைந்துள்ளது. ஏற்கனவே மீள்ப்பிக்கப்பட்ட சரிவிற்கான அடையாளங்கள் உள்ளன. மொத்த உள்நாட்டு உற்பத்தி 2010 கடைசிக் காலாண்டில் 1.3 சதவிகிதம் என்று சுருங்கியது. சந்தைப் பிரதிநிதிகள் அரசாங்கம் இன்னும் அதிகக் கடனை வாங்கி மறுகட்டமைக்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்படும் என்ற எச்சரிக்கைய கொடுத்துள்ளனர். பேரழிவு நிதிய முறையில்ஜப்பானை விளிம்பில் இருந்தும் தள்ளிவிடுமாஎன்பதுதான் என ப்ளூம்பேர்க்கிடம் Mitsubishi UFG பாதுகாப்பு நிறுவனத்தின் பிரெண்டன் பிரௌன் கூறினார்.

ஜப்பானின் பொதுக்கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 228 சதவிகிதம் என்று உள்ளது. இது கிரேக்கத்தின் 144 சதவிகிதமாகவும், இங்கிலாந்தில் 77 சதவிகிதமாகவும் உள்ளவற்றுடன் ஒப்பிடத்தக்கது. ஜனவரி மாதம் Standard and Poor’s நாட்டின் நீண்ட கால அரசாங்கக் கடனின் தரத்தைக் குறைத்தது. கவலை தரும் கடன் அளவுகளைக் குறைக்க அரசியல்வாதிகளிடம் உண்மையான திட்டம் ஏதும் இல்லை என்று கூறியது.

உடனடியாக இன்னும் இலாபம் தரும் நிலைமைகளும் உள்ளன. Jeffiers என்னும் முதலீட்டு வங்கியின் காப்பீட்டுத்துறை பகுப்பாய்வாளர் ஜேம்ஸ் ஷக் காப்பீட்டுத் தொழிலின் இழப்புக்கள் குறைந்தபட்சம் 10 பில்லியன் டொலராக இருக்கும் என்று கூறியுள்ளார். ஷக், இது காப்பீட்டாளர்களுக்கு ஜப்பானிய நில அதிர்வுகளிலேயே மிக அதிகச்செலவு வைத்த நில அதிர்வாகும். ஆனால் இந்த சுமை குறையும் என்றார். ஏனெனில் ஜப்பானில் 10 சதவிகித வீடுகள்தான் நில அதிர்வுக் காப்பீட்டைக் கொண்டுள்ளன.