சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : ஜப்பான் 

Japanese nuclear crisis escalates as emergency workers withdrawn

அவசரக்கால பணியாளர்கள் திரும்பப் பெறப்படுகையில், ஜப்பானிய அணுக் கசிவு நெருக்கடி பெருகிவிட்டது

By Patrick O’Connor
16 March 2011

Use this version to print | Send feedback

தொடரும் வெடிப்புக்கள், தீ விபத்துக்கள் ஆகியவற்றால் ஜப்பானில் பாதிப்பிற்குட்பட்ட புகுஷிமா அணுசக்தி நிலையத்திலுள்ள பல அணு உலைக் கூடங்கள் முழுக் கரைப்பு என்னும் இடருக்கும் உட்பட்டுள்ளன. புதன் பிற்பகல் ஜப்பானிய அரசாங்கமானது நிலையத்தில் செயற்பாடுகளை கதிரியக்க வெளியிடலால் தற்காலிகமாக நிறுத்திவிட்டது. இது தற்காலிகமாக பேரழிவைக் கட்டுப்படுத்தும் பணியாளர்களின் பெருந்திகைப்புடன் கூடிய முயற்சிகளையும் நிறுத்தியுள்ளது.

ஜப்பானிய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் யுகியோ எடனோ இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், கதிர்வீச்சு அளவுகள் 1,000 millisieverts க்கள் என உயர்ந்துவிட்டதாக இது ஓராண்டில் மக்கள் பாதுகாப்பாக இருக்கக்கூடிய அளவைவிட 1,000 மடங்கு அதிகமாகும்ஆனால், 600-800 மடங்கு எனக்குறைந்துவிட்டது என்று கூறினார். நிலையத்தில் றியக்டர் கொள்கலன் உலை எண்3 இப்பொழுது சேதமுற்றுவிட்டதாக அஞ்சப்படுகிறது. கணிசமான அளவு கதிர்வீச்சு நீராவியையும் கசியவிட்டுக் கொண்டிருக்கக்கூடும். “எனவே பணியாளர்கள் உலையில் மிகக் குறைந்த பணியைக்கூட இப்பொழுது செய்ய முடியாதுஎன்றார் எடனோ. “ஏனெனில் கதிரியக்க ஆபத்தை எதிர்நோக்கி நாங்கள் வெறுமனே நிற்கிறோம்.”

அணுசக்தி பொறியியல் வல்லுனர் ஆர்னி கண்டர்சன் வாஷிங்டன் போஸ்ட்டிடம் அவசரக்காலப் பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்பேரழிவைத் தடுக்கும் முயற்சியை அவர்களை கைவிட்டுவிட்ட அடையாளம் என எனக்குத் தோன்றுகிறது, இதன் பின் அனைத்தும் தூய்மைப்படுத்தப்படலாம் என அவர்கள் கருதுகிறார்கள் போலும்என்று கூறினார்.

இதுவரை வெளிப்பட்டுள்ள சரியான கதிரியக்க அளவு மற்றும் பேரழிவு தரக்கூடிய கரைப்பு தோன்றுவதற்கான சூழலைச் சுற்றியுள்ள தன்மை பற்றியும் பெரும் உறுதியற்ற தன்மைதான் உள்ளது. அணுசக்தி நிலையத்தைச் செயல்படுத்தும் TEPCO (டோக்கியோ மின்சக்தி நிறுவனம்) அனைத்தையும் மூடிமறைக்கும் அடையாளங்களைத்தான் காட்டுகிறது. இது நிறுவனத்தின் மோசமான பாதுகாப்புச் சான்றுகளுக்கு இயைந்துதான் உள்ளது. அதேபோல்தான் ஜப்பானிய, சர்வதேச அணுசக்தி வல்லுனர்களின் முரண்பாடான அறிக்கைகளும் உள்ளன.

அதே நேரத்தில் ஜப்பானின் அவசரகால ஊழியர்கள் வெள்ளியன்று ரிக்டரில் 9.0 என இருந்த பெரிய அளவு நில அதிர்வும், அதைத் தொடர்ந்த சுனாமி ஆகியவற்றால் ஏற்பட்ட அழிவுகளைச் சமாளிப்பதிலும் துயரப்படுகின்றனர். 10,000 பேருக்கும் மேல் ஜப்பானிய பொலிசால் உறுதியாக இறந்துவிட்டனர் அல்லது காணாமற்போய்விட்டனர் என்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இறுதி எண்ணிக்கை உறுதியாக அதிகமாகக்கூடும். ஏனெனில் சுனாமியால் அழிக்கப்பட்டுவிட்ட கடலோரச் சிறு நகரங்களில் ஒன்றான மினமிசன்ரிகுவில் இருந்த கிட்டத்தட்ட 10,000 வசிக்கும் மக்களைப் பற்றி விவரம் இன்னும் தெரியவில்லை.

மீட்புக்குழுக்கள் இப்பொழுதுதான் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் நுழையத் தொடங்கியுள்ளன. நான்கு நாட்களுக்கும் மேலாக இடிபாடுகளில் அகப்பட்டுக் கொண்டும் தப்பிப் பிழைக்க முடிந்த சில நபர்கள் தான் அங்கு உள்ளனர்.

கிட்டத்தட்ட 400,000 மக்கள் வேறு இடங்களில் குடியேற்றப்பட்டுள்ளனர். வடக்கில் மொத்தம் 850,000 வீடுகள் இருந்தன என்ற தகவலின்படி, பல வெளியேறியவர்கள் இரவில் மின்சாரம் இல்லாமல் கிட்டத்தட்ட உறையக்கூடிய வெப்பநிலையை முகங்கொடுக்கின்றனர். ஜப்பானின் NHK பொது வானொலி நிலையம் அவசரக்கால பாதுகாப்பிடங்களில் உணவு, எரிபொருள் பெரிதும் தட்டுப்பாட்டில் உள்ளன என்றும், “வலுவற்ற தப்பிப் பிழைத்தவர்களை இது இன்னமும் குளிரிலும் பட்டினியிலும் வாட்டுகிறது என்றும்கூறியுள்ளது.

பல வெளியேறியுள்ளவர்கள் புகிஷிமா டைச்சி அணுசக்தி உலைக்கு அருகேயுள்ள மக்கள் ஆவர். பிரதம மந்திரி நாவோடோ கான் 20 கி.மீ.சுற்றளவு உடைய ஒதுக்குப் பகுதியில் இருக்கும் மக்கள் உடனடியாக அவ்விடத்தைவிட்டு நீங்க வேண்டும் என்று கூறியுள்ளார். மற்றும் 140,000 மக்கள், 30 கி.மீ. சுற்றளவிற்குள் நிலையத்திலிருந்து இருப்பவர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும், மின்குளிர் பிரிவுகளை அணைத்து வைக்குமாறும், கதிர்வீச்சு மாசுகளுடன் தொடர்பை தவிர்ப்பதற்காக துணிகளை வெளியேயுள்ள கொடிகளில் உலர்த்துவதற்குப் போடாமல் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

புகுஷிமா டைச்சி நிலையத்தில் 6 உலைக் கூடங்கள் உள்ளன. அருகே இருந்த கடல்தடுப்புக்களை சுனாமி தகர்த்து, உலைக்கூடங்களில் குளிர்ச்சி வசதிகளைத் தக்க வைக்க உறுதியாக இருந்த அவசரகால மின் உற்பத்தி இயந்திரங்களையும் தகர்த்தபின்னர், அவற்றில் இருந்து மின்சக்திகள் உற்பத்தி நின்றுவிட்டது. ஒரு பெரிய அவசரக்கால பெருந்திகைப்பு நடவடிக்கையாக அதிகாரிகள் கடல்நீரை உட்செலுத்தியுள்ளனர். ஆனால் இதையொட்டிய பின்விளைவு ஹைட்ரஜன் வாயு அதிகமாகுவதற்கு வகைசெய்து பல வெடித்தல்களை தூண்டிவிட்டுள்ளது. கட்டிடத்திலுள்ள பாதுகாப்பு உலைகள் எண் 1 மற்றும் 3 ஆகியவை சனி மற்றும் திங்களன்று வெடித்தன. எண் 3 நிகழ்வில் 11 உலைத் தொழிலாளர்களும் அவசர நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஜப்பானிய சிப்பாய்களும் காயமுற்றனர்.

இன்னும் அதிக வெடிப்புக்கள் உலைக் கூடங்கள் எண்2 மற்றும் 4 ஆகியவற்றை நேற்று தாக்கின. இரண்டாவது எண் உலைக்கூடத்தில், இன்னும் அதிக கடல்நீரை உட்செலுத்தும் முயற்சிகள் திங்களன்று தோல்வியுற்றன. ஏனெனில் கதிரியக்க ஹைட்ரஜன் வாயுவை வெளியிடும் கருவிகள் செயலற்றுப் போய்விட்டன. இது உலைக் கூடத்தின் மைய எரிபொருள் தண்டுகளை வெளிப்படுத்தி, கூடுதல் சூடேற்றப்படுதல், கரைப்பு ஆகியவற்றிற்கான வாய்ப்புக்களை அதிகப்படுத்திவிட்டது. மற்றொரு நெருப்பு இன்று காலை உலைக்கூடம் 4ல் கொழுந்துவிட்டு எரிந்தது. ஆனால் இப்பொழுது கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாகக் கூறப்படுகிறது. எண்5 மற்றும் 6 ஆகிய உலைக் கூடங்களில், பயன்படுத்தப்பட்டுவிட்ட எரிபொருள் தண்டுகளின் வெப்பம் அதிகமாகிக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக இன்று அவர்கள் திரும்பப் பெறப்படுமுன், 50 மின்சக்தி உலைத் தொழிலாளர்கள் பெரும் தைரியத்துடன் தங்கள் உயிரைப் பணயம் வைத்து நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயன்றனர்.

பிரான்ஸின் அணுசக்திப் பாதுகாப்பு அதிகாரம் இந்தப் பேரழிவு சர்வதேச அணுசக்தி குறித்த 7 தர அளவுகளில் 6 வது தரம் என்று அறிவித்துள்ளது. இது 1986ம் ஆண்டு செர்னோபில் பேரழிவிற்குப் பிறகு வெளியிடப்பட்ட வகைப்படுத்துப்படும் முறைக்குச் சற்று குறைவானது ஆகும். ராய்ட்டர்ஸ் அறிக்கை ஒன்றின்படி, பிரெஞ்சு அரசாங்கம் டோக்கியோவிலுள்ள தன் குடிமக்களை ஜப்பானை விட்டு நீங்குமாறும், அல்லது நாட்டின் தென்பகுதிக்குச் செல்லுமாறும் கூறியுள்ளது. வெளியேறுவதற்கு வசதியாக ஏயர் பிரான்ஸை விமானங்களை அளிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

தலைநகரான டோக்கியோவில் கதிரியக்கத் தரங்கள் சாதாரணமாக இருப்பதைவிட 20 மடங்கு அதிகமாக உள்ளன. ஆனால் இவை மிகக் குறைவுதான் என்று வல்லுனர்கள் விவரிக்கின்றனர். இந்த அளவுகள் இன்று உலையில் நடந்த கதிர்வீச்சு உயர்விற்கு முன்பு எடுக்கப்பட்டவை ஆகும். அமெரிக் கடற்படையின் விமானத் தளமுடைய தாக்கும் கப்பல் பிரிவும், விமானத் தளமுடைய USS Ronald Reagen தலைமையில் அணு உலையிலிருந்து வெளியேறும் காற்றுப் பகுதிகளை எதிர்கொள்ளுகிறோம் என்பதை அறிந்த பின் தன் பாதையைச் சுற்றிச் செல்லுவதாக அமைத்துக் கொண்டது.

பிரதம மந்திரி கான் இப்பொழுது ஒரு நெருக்கடிகால கட்டுப்பாட்டு அதிகாரத்திற்குத் தலைமை தாங்குகிறார். இதில் அரசாங்க அதிகாரிகளும் மூத்த டெப்கோ நிர்வாகிகளும் உள்ளனர். ஜப்பானியச் செய்தி ஊடகம் அணு உலைக்கூடம் எண் 2ல் வெடிப்பு ஏற்பட்டபின், டெப்கோ ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அத்தகவலை அரசாங்கத்திற்கு தெரிவிக்கவில்லை என எழுதியுள்ளது. அரசாங்கத்தின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் யுகியோ எடனோ, பின்னர் இறுதியாகக் கொடுக்கப்பட்ட தகவல்சரியாக இல்லைஎன்று கூறினார். அவர் டெப்கோ நிர்வாகிகளை, “என்ன நடக்கிறது அங்குஎன்று கடிந்து கொண்டதாகத் தெரிகிறது. “இத்துடன் டெப்கோவிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்என்று எச்சரித்தார்—“நிலையத்தி்லிருந்து ஊழியர்கள் அனைவரையும் நிர்வாகிகள் திரும்பப் பெற்றுவிட்டால்.”

ஜப்பானிய அரசாங்கமானது உலையின் தனியார் நிர்வாகத்தால் தவறான தகவல் கொடுக்கப்பட்டது என்பது நிலைமை கட்டிற்குள் உள்ளது என்று கூறப்படும் உத்தியோகபூர்வ உத்தரவாதங்கள் எதுவும் நம்பகத்தன்மை உடையது அல்ல என்பதைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

புகுஷிமா பகுதி ஆளுனர் யுஹேய் சாடோ பிரதம மந்திரியிடம், “மக்கள் சீற்றமுடைந்துள்ளனர், கொந்தளித்து வெடிக்கும் கட்டத்தில் உள்ளனர்என்று கூறினார் எனத் தெரிகிறது. அணுசக்தி நிலையத்திலிருந்து 50 கி.மீ. தொலைவிலுள்ள கடலோரச் சிறு நகரான சோமாவிலிருந்த மக்களுடன் அசோசியேட்டட் பிரஸ் பேசியது: “அவர்கள் நம்மிடம் உண்மையைச் சொல்லவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன்என்று 63 வயது டோஷியகி கியுச்சி கூறினார். “நாங்கள் உண்மையில் அச்சப்படுகிறோம், ஏற்கனவே ஒன்றும் எங்களுக்குக் கவலை இல்லாமல் இல்லை. இதன் பின்விளைவுகளை அறியமுடியாது, ஏனெனில் நாங்கள் உயிர்வாழ அவர்களைத்தான் நம்பியுள்ளோம். அணுசக்தி அதிகாரிகளை முன்பு நம்பியிருந்தேன், இப்பொழுது அல்ல. அவர்கள் எங்களிடம் வெளிப்படையாக நடந்து கொள்ளவில்லை. ஏதும் எங்களுக்குக் கூறுவதில்லைஎன்று சேர்த்துக் கொண்டார்.

டெப்கோ மற்றும் பிற அணுசக்தி நிறுவனங்கள், ஜப்பானிய அரசாங்க அதிகாரிகளுடன் சேர்ந்துகொண்டு அணுசக்தி தொடர்புடைய விபத்துக்களை மூடி மறைக்கும் சான்றுகளைத்தான் நீண்டகாலமாகக் கொண்டுள்ளனர். 1995ல் ஜப்பானிய அணுசக்தி நிறுவனம் அதன் மொஞ்சு விரைவுச் செயற்பாட்டு உலைக் கூடத்தில் நடந்த விபத்தின் பாதிப்பை மறைத்தது. 1999ல் டொகைமுரா உலைக் கூடத்தில் இருந்த 3 தொழிலாளர்கள் அதிக அளவு கதிரியக்கத்தால் அவதியுற்றனர். பாதுகாப்பு நடவடிக்கைகளில் தவறு ஏற்பட்டதால் அது நடந்தது. மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் பாதுகாப்புத் தகவல்கள் குறித்து தவறுகளைத்தான் 200 முறை அவர்கள் வெளியிட்டனர் என்று டெப்கோ ஊழியர்களுக்கு தெரியவந்துள்ளது. 2007ம் ஆண்டில், 6.6 அளவிற்கு ஒரு நில அதிர்வு ஏற்பட்டபின், நிறுவனம் அதன் உலைகளில் ஒன்று அத்தகைய நிகழ்விற்கு ஈடு கொடுக்கும் வகையில் கட்டமைக்கப்படவில்லை என்று ஒப்புக் கொண்டது 

பெயரிடப்படாத மூத்த அணுசக்தி தொழில்துறை நிர்வாகி ஜப்பானிய எரிசக்தித் தொழில் மேலாளர்கள் இப்பொழுதுஅடிப்படையில் முழு பீதியுடன் உள்ளனர்முற்றிலும் சிதைந்த தன்மையில், என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளனர்என்று கூறியதாக நியூ யோர்க் டைம்ஸ் மேற்கோளிட்டுள்ளது.

தனியாருக்கு சொந்தமான அணுசக்தி நிறுவனங்கள் தடையற்று செயல்படுவதை அனுமதிப்பதற்கான பொறுப்பை தொடர்ச்சியான ஜப்பானிய அரசாங்கங்கள் தான் கொண்டுள்ளன. கார்டியன் மூலம் வெளிவந்துள்ள விக்கீலீக்ஸில் வெளியிடப்பட்ட கசிந்த அமெரிக்க இராஜதந்திரத் தகவல் ஆவணமானது முக்கிய லிபரல் டெமக்ராடிக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் டாரோ கோனோ 2008ம் ஆண்டு அமெரிக்க அதிகாரிகளிடம் அணுசக்தித் துறைக்குப் பொறுப்புள்ள ஜப்பானிய அரசாங்கப் பிரிவுஅணுசக்தி விபத்துக்களை மூடிவைத்து, உண்மையான செலவினங்கள் மற்றும் அணுசக்தித் தொழிலில் தொடர்புடைய பிரச்சினைகளை வெளிப்படுத்துவதில்லைஎன்று கூறியதாகத் தெரிகிறது.

புகிஷிமா நிலையத்திலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பு இழப்பையொட்டி மிக அதிக இலாபங்களுக்கான உந்துதலை டெப்கோ கொண்டுள்ளது பற்றிய தகவல்கள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

பாதிக்கப்பட்ட அனைத்து உலைக் கூடங்களும் தரம் குறைந்த, கணிசமான மலிவான வகையில்தான் முக்கியக் கொள்முதலைப் பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. எஃகு மற்றும் காங்க்ரீட் வெளி உலைக்கூட உறை கதிரியக்கம் குளிர்ச்சி முறைகள் தோல்வி அடைந்தால் சுற்றுச்சூழலில் கலப்பதைத் தடுக்க வேண்டும் என்று உள்ளது. ஆனால் “Mark 1”  கொள்கலன்கள், 1960களில் General Elecgtric (GE) ஆல் வடிவமைக்கப்பட்டவை, 1970களின் தொடக்கத்திலேயே அணுசக்தி பாதுகாப்பு வல்லுனர்களால் கண்டனத்திற்கு உட்பட்டுவிட்டன. அப்படி இருந்தும், இது பற்றி ஏதும் செய்யப்படவில்லைமார்க் 1 கொள்கலன்கள் தான் 23 அமெரிக்க உலைக் கூடங்களிலும் ஜப்பானிலும் பயன்படுத்தப்படுகின்றன.

1972ம் ஆண்டு அமெரிக்க அணு சக்தி ஆணையத்தின் பாதுகாப்பு அதிகாரி ஒருவரான ஸ்டீபன் ஹனௌர் GE கொள்கலன்கள், மற்ற மாதிரிகளை விட மலிவான மாற்றீடு என்று நிறுவனத்தால் விற்கப்படுவதுஏற்கத்தகாத பாதுகாப்பு இடர்கள் இருக்கும்காரணத்தால்  நிறுத்தப்பட வேண்டும் என்று ஆலோசனையைத் தெரிவித்தார். 1975ம் ஆண்டு மூன்று GE பொறியியலாளர்கள் டேல் பிரிடன்பாக், கிரிகரி மைனர் மற்றும் ரிச்சர்ட் ஹப்பர்ட் ஆகியோர்அவர்கள் பரிசீலித்துள்ள மார்க் 1 கொள்கலம் ஆபத்து நிறைந்தது, பேரழிவு நிகழ்வை ஏற்படுத்தக்கூடும் என்ற முடிவிற்கு வந்த பின் எதிர்ப்பில் இராஜிநாமா செய்தனர்.

1980 களின் நடுப்பகுதியில் ஹரோல்ட் டென்டன் என்னும் அமெரிக்க அணுசக்திக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் அதிகாரி ஒருவர், மார்க் 1 உலைக்கூடங்கள் அசாதாரணமான முறையில் 90 சதவிகித வாய்ப்பை எரிபொருள் தண்டுகள் கூடுதலாக சூடேறினாலோ, கரைந்தாலோ கொண்டிருக்கின்றன என்ற முடிவிற்கு வந்தார். டைம்ஸ் சேர்த்துக்கொள்ளுவது ஆவது: “இதைத்டொர்ந்து ஆணையம் நிறுவிய ஆய்வுக் குழுவின் தொடர் அறிக்கை, ‘மார்க் 1 மையப் பொருள் கரைப்பைத் தொடர்ந்து முதல் சில மணிநேரத்திற்குள் வேலை செய்யாமல் போய்விடும் என்பது நடக்கக் கூடியதுதான்என்று கூறியுள்ளது. ஒரு தீவிர விபத்து ஏற்பட்டால் அப்பகுப்பாய்வு 40 நிமிடத்திற்குள்ளேயே கூட கட்டுப்படுத்தும் திறன் இழக்கப்பட்டுவிடலாம்.”

புகுஷிமா நிலையத்தின் ஆயிரக்கணக்கான பயன்படுத்தப்பட்ட அணுசக்தி தண்டுகள் பற்றிய கிடங்கை ஒட்டியும் வினாக்கள் எழுப்பப்பட்டுள்ளன. அவை உலை மையப் பொருட்களையும் விடக் கூடுதலான ஆபத்தை அளிக்கக் கூடியவை ஆகும்.

பயன்படுத்தப்பட்ட எரிபொருள் தண்டுகள் ஒவ்வொரு உலைக் கூடத்தின் மேலும் பெரும் நீர்த் தேக்கத்தில் சேமித்து வைக்கப்படுகின்றன. பாதுகாப்பு மூடும் கலன் ஏதும் இதற்கு இல்லை. இந்தத் தேக்கங்களில் குறைந்தபட்சம் இரண்டாவது தங்கள் கூரைகளை ஹைட்ரஜன் வெடிப்புக்களால் இழந்துவிட்டன. அனைத்துத் தண்டுகளும் நீரில் மூழ்கி உள்ளனவா என்பது பற்றித் தெளிவாகத் தெரியவில்லை. அவை அவ்வாறு மூழ்கியிராவிட்டால், அவை அதிகச் சூடேறி ஒரு பதினைந்து நாட்களுக்குள் கதிரியக்கத்தை சுற்றுச்சூழலில் செலுத்திவிடும். அது பின்னர் பரவலாகப் படர்ந்துவிடும். “இது கரைப்பை விட மோசமானது ஆகும்என்று Union of Concerned Scientists என்று ஜப்பானில் பயன்படுத்தப்படும் GE உலைக்கூடம் போன்றவற்றிற்குப் பயிற்சியாளராக இருந்த அணுசக்தி பொறியியல் வல்லுனர் டேவிட் லோச்பாம் நியூ யோர்க் டைம்ஸிடம் தெரிவித்தார். “உலைக் கூடத்திற்கு உட்புற கனமான சுவர்கள் இருக்க வேண்டும். 1 மற்றும் 3ம் எண் உலைக் கூடங்களின் பயன்படுத்தப்பட்ட எரிபொருள் மூடப்படாமல் திறந்த வெளியில் உள்ளன.”

ரஷிய அணுசக்தி விபத்து பற்றிய சிறப்பு வல்லுனரான Louli Andreev,  செர்னோபில் தூய்மைப்படுத்துவதில் தொடர்பு கொண்டவர், கார்டியனிடம் கூறியதாவது ஏராளமான எண்ணிக்கையில் பயன்படுத்தப்பட்ட எரிவாயுத் தண்டுகள் அணு உலைக் கூடங்களுக்கு நேர் மேலே கிட்டங்கியில் உள்ளதுபோல் வைத்திருப்பது, “பாதுகாப்பைவிட இலாபத்திற்கு முக்கியத்துவம் என்பதற்கான உதாரணமாகும்.” அவர் மேலும் விளக்கியது: “ஜப்பானியர்கள் மிகவும் பேராசை பிடித்தவர்கள். ஒவ்வொரு சதுர இன்ச் இடத்தையும் பயன்படுத்துகின்றனர். ஆனால் பயன்படுத்தப்பட்ட எரிவாயுத் தண்டுகளை பாதுகாப்பற்ற முறையில் வைத்தால், கொள்கலத்தில் இருந்து நீர் அகன்றுவிட்டால் தீப்பிடிக்கும் அபாயம் உண்டு.”