சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Obama, Private Manning and human rights

ஒபாமா, இராணுவ சிப்பாய் மேனிங் மற்றும் மனித உரிமைகளும்

Barry Grey
15 March 2011
Use this version to print | Send feedback

எகிப்து, யேமன், பஹ்ரெய்னில் முற்றுகைக்குள்ளான சர்வாதிகாரங்களுக்கு ஆதரவான மற்றும் லிபியாவில் தனக்கு ஆதரவான ஒரு அரசாங்கத்தை அமைக்கும் அதன் முயற்சிகளையும் அமெரிக்கா மூடிமறைப்பதற்காக, மனித உரிமைகளின் புனிததன்மை குறித்து அது உலகத்திற்கு போதித்து வந்தாலும் கூட, ஜனாதிபதி பராக் ஒபாமா உள்நாட்டில் ஓர் அமெரிக்க குடிமகனின் சித்திரவதையை பாதுகாக்கின்றார்.       

இராணுவ சிப்பாய் பிரெட்லெ மேனிங் மீதான பெண்டகனின் வக்கிரமான துஷ்பிரயோகத்திற்கு ஆதரவாக ஒபாமாவின் தீர்மானத்திற்கு, ஓர் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் பி. ஜெ. கிரோவ்லெ பலியாகி உள்ளார். ஞாயிறன்று இராஜினாமா செய்த ஒரு நீண்டகால அரசு மக்கள் தொடர்பு அதிகாரி கிராவ்லெ, இரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸிற்கு கசியவிட்டமைக்காக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, 23 வயது நிரம்பிய இராணுவ உளவுப்பிரிவு சிறப்பு நிபுணரை, இராணுவம் கையாளும்முறை குறித்து பகிரங்கமாக விமர்சித்ததற்காக வெளியேற்றப்பட்டார்.   

கடந்த வியாழனன்று, மாசெசூட் தொழில்நுட்ப பயிலகத்தில் நிரம்பியிருந்த ஒரு சிறிய கூட்டத்திற்கு முன்பாக கிராவ்லெ பேசுகையில், மேனிங் எவ்வாறு கையாளப்படுகிறார் என்று கேட்டப்பட்டார். கேள்விகேட்ட நபர் அதை, “ஓர் இராணுவ நீதிமன்றத்தில் ஒரு சிறைக்கைதி இராணு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாககுறிப்பிட்டார். விக்கிலீக்ஸ் மற்றும் அதன் இணை-ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜின் மீது நடத்தப்பட்ட அமெரிக்க அரசாங்கத்தின் சூனியவேட்டையில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்துள்ள கிராவ்லே, மேனிங்கின் கடுங்காவலை ஒத்துக் கொண்டார். ஆனால் அவரைக் கையாளும்முறை முற்றிலும் கேலிக்குரியது, பிரயோசனமற்றது மற்றும்  முட்டாள்தனமானதென்றுகுறிப்பிட்டார்.

சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு மற்றும் ஏனைய மனித உரிமை குழுக்களின் கண்டனங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையால் ஓர் உத்தியோகபூர்வ விசாரணை கோரப்பட்டது போன்றவை உட்பட, மேனிங்கை கையாளும்விதம் மீது எழுந்த பாரிய சர்வதேச எதிர்ப்புகளுக்கு கிராவ்லே பதிலளித்து கொண்டிருந்தார்.

வெள்ளியன்று வெள்ளை மாளிகையில் நடந்த ஒரு கூட்டத்தில், கிராவ்லேயின் கருத்து குறித்தும், மேனிங்மீது நடந்துவரும் துஷ்பிரயோகத்திற்கு ஆதரவாக அவர் விடையிறுப்பைக் காட்டியது குறித்தும் ஒபாமாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. மேனிங் அதிகபட்ச கடுங்காவல் தண்டனையில், தோற்றப்பாட்டளவில் தனிமைப்படுத்தப்பட்டு, ஒரு நாளையில் 23 மணிநேரங்கள் அவருடைய சிறைக்குள் அடைக்கப்பட்டு, 24 மணிநேரமும் கண்காணிப்பின்கீழ் வைக்கப்பட்டு, இரவு நேரங்களில் உடைகளும் இல்லாமல், வாசிப்பதற்கு எதுவும் கொடுக்கப்படாமல் வைக்கப்பட்டுள்ளார். இந்த மாதத்தின் தொடக்கத்தில், ஒரு வாரத்திற்கும் மேலாக, அவர் அவருடைய சிறையின் முன்னால் காலைநேர பரிசோதனைக்காக முற்றான நிர்வாணமாக நிறுத்தப்பட்டிருந்தார்.

வெர்ஜீனியா படையினர் தளத்தின் குவாண்டிகோ இராணுவ சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மேனிங், சுமார் கடந்த எட்டு மாதங்களாக இத்தகைய நிலைமைகளைச் சகித்துக் கொண்டிருக்கிறார். அவர் எந்த குற்றத்தையும் செய்யவும் இல்லை, எந்தவொரு குற்றத்தைச் செய்ய முயற்சிக்கவும் இல்லை என்றபோதினும், அவர் ஒரு நீதிமன்ற விசாரணைக்காக காத்திருக்கிறார். விக்கிலீக்ஸிற்கு எதிராகவும், அசான்ஜிற்கு எதிராகவும் சாட்சியம் கூற மறுக்கும் அவரின் உறுதியையும், விருப்பத்தையும் உடைப்பதற்கே அவர்மீது கொடூரமான அணுகுமுறைகள் கையாளப்படுகின்றன.

“[மேனிங்கின்] கடுங்காவல், விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்கிறது என்பதுடன் அது நம்முடைய அடிப்படை தரமுறைகளுக்கும் பொருந்தி உள்ளது" என்ற உறுதிமொழிகளைப் பெண்டகனிடமிருந்து தாம் பெற்றிருப்பதாக கூறி, செய்தியாளர் கூட்டத்தின் போது, கிராவ்லெவின் விமர்சனத்தை ஒபாமா நிராகரித்தார்

தம்முடைய இராஜினாமா அறிக்கையில், மேனிங் கையாளப்படும் முறை குறித்த அவரின் கருத்துக்களை மாற்றி விடவில்லை. அதற்கு மாறாக, அவர் எழுதியது: “இன்றைய சவாலான காலகட்டத்தில் மற்றும் பாரபட்சமான ஊடக சூழலில் அதிகாரத்தைக் கையாள்வது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலும் அது நம்முடைய சட்டங்கள் மற்றும் மதிப்புகளுடன் பொருந்தி நிற்க வேண்டும்.” மேனிங் மீது நடத்தப்படும் துஷ்பிரயோகம் சட்டவிரோதமானது என்ற குற்றச்சாட்டை இது சுட்டிக்காட்டுகிறது.

ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் அமெரிக்க யுத்த குற்றங்களின் ஆதாரங்களையும், உலகம் முழுவதிலும் செய்யப்பட்ட அமெரிக்க சூழ்ச்சிகளையும் அம்பலப்படுத்திய இரகசிய வெளிவிவகாரத்துறை ஆவணங்களை கசியவிட்டது தான், மேனிங் எதற்காக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளாரோ அந்த "அத்துமீறலாக" உள்ளது. ஒரு நேர்மையான மற்றும் தைரியமான அந்த இளைஞர், மேனிங், ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் ஏனைய நாட்டு மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட பெரும் குற்றங்களுக்குப் பொறுப்பான உண்மையான குற்றவாளிகளால் சித்திரவதை செய்யப்பட்டு வருகிறார்.

ஒபாமா நிர்வாகம் கடந்த இரண்டு வாரங்களில் மேனிங் மீதான அதன் வழக்குகளை அதிகப்படுத்தி உள்ளது. மரண தண்டனையைக் கொண்டு வரக்கூடிய "எதிரிக்கு உதவினார்" என்ற குற்றச்சாட்டுகள் உட்பட, அவருக்கு எதிராக புதிய குற்றச்சாட்டுக்களை அது சேர்த்துக் கொண்டிருக்கிறது.

தம்மை அதிகபட்ச கடுங்காவலில் இருந்தும், சிறையிலிருந்தும் நீக்க கோரி, மேனிங் இராணுவ சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கடந்த வாரம் 11 பக்க கடிதம் ஒன்றை அளித்தார். கெடுதிகளை தடுக்கும் நிலை (POI) என்பது, ஒரு தலையணையோ அல்லது போர்வையோ அளிக்காமல் இருப்பது, இரவு நேரத்தில் அடிக்கடி எழுப்பிவிடுவது, பகல் வேளையில் தூங்கவிடாமல் தடுப்பது உட்பட அவரை இழிவுபடுத்தும் மற்றும் துன்புறுத்தும் நிலைமைகளில் அவரை வைத்திருக்க, அவரின் நகரும் சுதந்திரத்தைத் தடுக்க அவரின் சிறைக்கூட அதிகாரிகளுக்கு அனுமதி வழங்குகிறது

தம்மை கெடுதிகளை தடுக்கும் நிலையிலிருந்து நீக்குமாறு இராணுவ சிறைச்சாலை உளவியலாளர்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்ததையும், அது அதிகாரிகளால் நிராகரிக்கப்படும் உண்மையையும் அந்த கடிதத்தில், மேனிங் ஆவணப்படுத்தி உள்ளார். காவலாளிகளால் அலைக்கழிக்கப்படும் விபரங்களை விவரித்திருந்ததோடு, கைதிகள் அதிகபட்ச கடுங்காவலில் அல்லது கெடுதிகளை தடுக்கும் நிலையில் இரண்டு வாரங்களுக்கும் குறைவாக தான் வைக்கப்படுவார்கள் என்றும், ஆனால் மொத்த சிறைச்சாலையிலும் தாம் மட்டுமே இத்தகைய நிலைமைகளின்கீழ் தற்போது தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுக் காட்டினார்.

மேனிங்கைச் சித்திரவதைப்படுத்துவதில் ஒபாமா காட்டும் ஆதரவு, கடந்த வாரம் அவர் அளித்த உத்தரவுகளோடு பொருந்தி நிற்கிறது. குவாண்டனமோ சிறைச்சாலை முகாமை மூடப்போவதாக முன்னர் அவர் அறிவித்ததை திரும்ப பெற்று கொண்டதுடன், அதற்கு பதிலாக இராணுவ மத்தளங்களாக இருக்கும் நீதிமன்றங்களை அங்கே நிறுவும் உத்தரவை அவர் கடந்த வாரம் பிறப்பித்திருந்தார். மேலும் எவ்வித வழக்கும் இல்லாமல் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் 48 குவாண்டனமோ கைதிகளின் காலவரையற்ற காவலை முறைப்படுத்தும், மற்றும் உறுதிப்படுத்தும் ஓர் உத்தியோகபூர்வ கட்டளையையும் அவர் வெளியிட்டார்.   

மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் குறித்து யாருக்கும் போதிக்க, ஒபாமாவிற்கோ அல்லது அமெரிக்க அரசாங்கத்திற்கோ, எந்த அருகதையும் இல்லை. புஷ்ஷின் யுத்த கொள்கைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு ஓர் எதிர்ப்பாளராக காட்டிக் கொண்டு தேர்தலில் வெற்றி பெற்ற ஒபாமா, அவருக்கு முன்பிருந்தவரால் அமைக்கப்பட்ட அனைத்து பொலிஸ்-அரசு முகமைகளையும், முறைமைகளையும் விரிவுபடுத்தி, தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

சித்திரவதையை அங்கீகரித்த புஷ் அதிகாரிகள் கொண்டு வந்த அனைத்து வழக்குகளையும் நிராகரித்துவிட்டு, அன்னியநாட்டு பயங்கரவாதிகளென்று குற்றஞ்சாட்டப்பட்டவர்கள்மீது சித்திரவதையுடன் கூடிய புலன்விசாரணை நடத்தப்படுவதை அவர் தொடர்ந்து கொண்டிருக்கிறார். உள்நாட்டில் வேவுபார்த்ததற்காக கைதுசெய்யப்பட்டவர்களையும், ஏனைய கைதிகளையும் சித்திரவதை செய்வதன் மூலமாக "அரசு இரகசியங்கள்" நீதிமன்றங்களுக்கு வராதபடி தடுக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தானிலும் ஏனைய இடங்களிலும் உள்ள கலகக்காரர்களைக் "இலக்கில் வைத்து படுகொலை செய்வதை" அவர் விரிவாக்கியுள்ளார்; குறைந்தபட்சம் ஒரேயொரு அமெரிக்க குடிமகனின் படுகொலைக்காவது உத்தரவிட்டுள்ளார்; மேலும் "சட்டவிரோத எதிராளி" என்று ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட யாரையும் ஒருதலைபட்சமாக சிறையில் அடைக்கும் ஜனாதிபதியின் "உரிமையை" அவர் காப்பாற்றிக் கொண்டுள்ளார். பேட்ரியாட் சட்டத்திலிருந்து உள்நாட்டு பாதுகாப்புத்துறை வரையில், மற்றும் வடக்கு கட்டுப்பாடு வரையில், பொலிஸ்-அரசு சட்டங்கள் மற்றும் கட்டமைப்புகளின் முழு கவசத்தையும் அவர் தக்க வைத்துள்ளார்.      

இந்த கொள்கைகள் ஆப்கானிஸ்தான் யுத்த விரிவாக்கத்தின் மீதும், சமூக திட்டங்கள், தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்கள் மீதும் தீவிரப்படுத்தப்பட்ட தாக்குதல்களின் ஒரு துணுக்கு தான். அதன் அனைத்து சாரங்களிலும், வெறுக்கப்பட்ட புஷ் நிர்வாகத்தின் ஒரு தொடர்ச்சியாக உள்ள, ஒரு வலதுசாரி நிர்வாகத்தை அவர்கள் வரையறுக்கிறார்கள்.

நாடு முழுவதும் மாநில அரசாங்கங்களின் மூலமாக தங்களுக்குப் பாதை அமைத்து கொள்ள தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களின் (தொழிலாளர்களின் கூட்டு பேரம்பேசும் உரிமையைப் பறிக்கும், வேலைநிறுத்தங்களை சட்டவிரோதமாக்கும், சில வேளைகளில், அரசியல் ஆலோசனைகள் பெறுவதிலிருந்தே தொழிலாளர்களை தடுக்கும் சட்டங்களின்) உதவியுடன், கடந்த தசாப்தத்தின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல், தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்கள் மீது அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் யுத்த பிரகடனத்துடன் சேர்ந்து வருகிறது. தொழிலாளர்களின் கூட்டு எதிர்ப்பின் எவ்வித வடிவத்தையும் குற்றமாக பாவிக்க குடியரசு கட்சியினர் முயன்று வரும்வேளையில், தோற்றப்பாட்டளவில் ஒபாமா மௌனம் காத்து வருகிறார்

தொழிற்சங்கங்கள் விஷயத்தில் ஜனநாயகக் கட்சியினரும், குடியரசுக் கட்சியினரும் வேறுபட்டுள்ளனர். ஜனநாயகக் கட்சியினர்  தொழிலாளர்கள்மீது தாக்குதல்களை திணிக்க தொழிற்சங்களங்களை  பயன்படுத்த விரும்புகின்ற அதேவேளையில் குடியரசுக்கட்சியினர்  அவர்களை ஓரங்கட்ட விரும்புகிறார்கள். ஆனால் இருவருமே தொழிலாள வர்க்க போராட்டத்தை ஒடுக்கும், மற்றும் தொழிலாளர்களின் நிலைமைகளை 19ஆம் நூற்றாண்டிற்குக் கொண்டு போகும் இலட்சியத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள்

ஒருங்கிணைந்த வாகனத்துறை தொழிலாளர்கள் சங்கத்தின் (United Auto Workers) உதவியுடன், இதே ஒபாமா நிர்வாகம் தான், ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் போர்டின் திணிக்கப்பட்ட திவால்நிலைமையின் பாகமாக, வாகனத்துறை தொழிலாளர்களின்மீது ஐந்து ஆண்டுகளுக்கு வேலைநிறுத்த தடை உத்தரவைப் பிறப்பித்தது.  

இராணுவ சிப்பாய் மேனிங்கின் சித்திரவதைக்கு ஒபாமா அளிக்கும் ஆதரவும், தொழிலாளர்கள் உரிமைகள் மற்றும் வாழ்க்கைநிலைமைகள்மீது நடத்தப்படும் நாடுதழுவிய தாக்குதல்களும் நெருங்கிய தொடர்பு கொண்டவையாகும். இரண்டு பெரு-வர்த்தக கட்சிகளின் சார்பாக அவற்றின்கீழ் ஒரு பொலிஸ்-அரசு கட்டமைப்பைக் கட்டியமைப்பதென்பது, அமெரிக்க தொழிலாள வர்க்கத்திடையே தீவிரப்பட்டு வரும் போராட்டங்களுக்கு எதிராக அரசு வன்முறையைப் பயன்படுத்துவதற்கு ஆயத்தமாவதாகும்.