சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக் 

WikiLeaks founder was warned of CIA “dirty tricks” campaign

CIA ன்இழிந்த தந்திரப்பிரச்சாரங்கள் பற்றி விக்கிலீக்ஸ் நிறுவனர் எச்சரிக்கப்பட்டார்

By Patrick Martin
18 March 2011

Use this version to print | Send feedback

ஆஸ்திரேலியாவிலுள்ள The Age என்னும் நாளேடு புதன்கிழமையன்று கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி விக்கிலீக்ஸின் இணை-நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலியப் பாதுகாப்பு அமைப்புக்களின் விசாரணைகளுக்கு உட்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டார் என்று கூறியுள்ளது.

அக்கட்டுரையின்படி, “விக்கிலீக்ஸிற்குள் இருக்கும் ஆதாரங்கள் The Age இடம் ஆஸ்திரேலிய உறவுத்துறை அதிகாரி ஒருவர் தனிப்பட்ட முறையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 11ல் ஆஸ்திரேலியப் பாதுகாப்பு உளவுத்துறை அமைப்பின் விசாரணைகளுக்கு அசான்ஞ்  உட்பட்டுள்ளார் என்றும், அவரையும் விக்கிலீக்ஸுடன் தொடர்புடைய மற்றவர்களைப் பற்றிய தகவலும் உளவுத்துறைத் தொடர்புப் பிரிவகளின் வேண்டுகோளுக்கு இணங்க அமெரிக்காவிற்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

ஆஸ்திரேலிய உளவுத்துறை அதிகாரிகுறிப்பாக அசான்ச் அமெரிக்க உளவுத்துறைச் சமூகத்திடமிருந்துஇழிந்த தந்திரங்களைஎதிர்பார்க்கும் இடரில் உள்ளார், பாலியல் தொடர்பாகப் பொறிவைத்து அவரைப் பிடிக்கும் வாய்ப்பும் உள்ளது என எச்சரிக்கப்பட்டார்என்று செய்தித்தாள் கூறியது.

இந்த எச்சரிக்கைக்கு 9 நாட்களுக்குப் பிறகு ஒரு ஸ்வீடன் நாட்டுச் செய்தித்தாள் ஸ்வீடனின் பொலிஸ் அசாஞ்ச் மீது இரு பெண்களை பாலியல் தாக்குதல் நடத்தியது எனக் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பற்றி விசாரணை நடத்த விரும்புகிறது என்ற செய்தியை வெளிப்படுத்தியது. ஆகஸ்ட் 23ம் தேதி அசாஞ்ச் அல்ஜசீரா தொலைக்காட்சி இணையத்திடம் அம்மாதம் முன்னதாக ஆஸ்திரேலிய உளவுத்துறை கொடுத்த எச்சரிக்கை பற்றிக் கூறியிருந்தார். அது நேற்று மெல்போர்ன் செய்தித்தாளில் வந்துள்ள தகவலை நேரடியாக உறுதிப்படுத்துகிறது.

அசாஞ்ச் குற்றம் செய்ததற்கான சான்றுகள் ஏதும் இல்லை என்று ஒரு சுவிஸ் அரசாங்க வக்கீல் கூறியதையடுத்து, மற்றொரு அரசாங்க வக்கீல் தொடுத்த வழக்கின்படி ஒரு ஐரோப்பிய கைதுப் பிடி ஆணை சுவீடனுக்கு பெரிய பிரித்தானியாவிலிருந்து அவரைத் தம் நாட்டிற்கு அழைத்துச் செல்லும் வழக்கு ஒன்றை அசாஞ்ச் எதிர்கொண்டுள்ளார். கடந்த மாதம் அவர் சுவீடனுக்கு அழைத்துச் செல்லப்படலாம் என்று ஒரு லண்டன் நீதிபதி தீர்ப்பளித்தார். அசாஞ்சேயின் வக்கீல்கள் மேல்முறையீடு செய்வதற்கு நீதிமன்றத்திடம் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நீதிமன்ற வழக்குகள் நிலுவையிலுள்ள காலத்தில், அசாஞ்ச் கிட்டத்தட்ட வீட்டுக் காவலில் இருப்பது போல் பிரிட்டனில் உள்ளார்.

The Age ல் வந்துள்ள தகவல் சுவீடனில் அசாஞ்ச் மீது அரசாங்கம் தொடரும் குற்றச்சாட்டு அமெரிக்க மத்திய உளவுத் துறைப் பிரிவினால் (CIA) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இதில் இரு நோக்கங்கள் உள்ளன. ஒன்று, விக்கிலீக்ஸ் தொடர்ந்து அமெரிக்கப் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்துவதைத் தடுப்பிற்கு உட்படுத்த வேண்டும் என்பதாகும். இரண்டாவது, முறையான சட்டப்பூர்வ வழிவகைகளைக் கேலிக்கூத்தாக்கும் வகையில்பயங்கரவாதத்தின் மீதான போர்அடிப்படையில் அசாஞ்ச் அமெரிக்காவிற்குப் பின்னர் அழைத்துச் சென்று விசாரணைக்கு உட்படுத்துவதற்கான சூழ்நிலையைத் தோற்றுவிப்பது ஆகும்.

செவ்வாயன்று, ஐரோப்பிய குழுவின் மனித உரிமைகள் ஆணையத்தின் உயர் ஆணையர் தோமஸ் ஹாமர்பெர்க் ஐரோப்பியப் பிடி ஆணைமனித உரிமைகளுக்கு ஓர் அச்சுறுத்தல்என்று கூறி அது அசாஞ்ச்க்கு எதிராக எப்படி மிக விளம்பரப்படுத்த முறையில் பயன்படுத்தப்படுகிறது என மேற்கோளிட்டுள்ளார். இந்த வழிவகை பல நேரமும் அரசாங்க வக்கீல்களால் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்றும் அவர் கூறினார். 2002 ல் ஐரோப்பியப் பிடி ஆணைகள்(EAW) பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்று கூறியவகையில் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் மிகத் தீவிரக் குற்றங்கள் செய்தவர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் அல்லது தண்டனை பெற்றவர்களுக்கு எதிராக, இப்பொழுது இந்த வழிவகை பொறுப்பற்ற முறையில் பயன்படுத்தப்படுகிறது.

நிரபராதிகளைச் சிறையில் வைத்தல், கண்டபடி கைதுகள், சட்டரீதியான உரிமைகள் மீறப்படுதல், சில நாடுகளில் நிரபராதி சரணடையும் முடிவிற்கு எதிராக மேல்முறையீடு செய்வது இயலாதது, ஆகியவை பற்றி மனித உரிமைகள் அமைப்புக்கள் பெரும் கவலைகளைத் தெரிவித்துள்ளனஎன்று பிரஸ்ஸல்ஸில் ஹாமர்பெர்க் கூறினார். “இப்பிரச்சினைகள் EAW க்குள் அதிகமாகியுள்ள நிலையில் மோசமாகிவிட்டவை போல் தோன்றுகின்றனஇப்பொழுது சராசரியாக மாதம் ஒன்றிற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிடி ஆணைகள் உள்ளன, இவற்றுள் பெரும்பாலானவை மிகச் சிறிய குற்றங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றனஎன்றும் அவர் கூறினார்.

EAW ஒன்றை செயல்படுத்துவதற்கு ஒரே நிபந்தனை சந்தேகத்திற்கு உரியவர் 12 மாதங்கள் சிறைத்தண்டனை குறைந்தபட்சம் கிடைக்கும் என்று குற்றம்சாட்டப்பட்டவர் மீது இருக்க வேண்டும் என்று இருக்கும் உண்மையை மனித உரிமை ஆணையர் சிறப்பாகச் சுட்டிக் காட்டியுள்ளார். உண்மையான தண்டனை ஒருபுறம் இருக்க, சந்தேகத்திற்கு உரியவர் மீது கணிசமான சான்றுகள் இருக்க வேண்டும் என்ற தேவையில்லை என்பதும் நடைமுறையில் உள்ளது.

செய்தி ஊடகத்திற்குக் கொடுத்த அறிக்கை ஒன்றில், பிரிட்டனின் இலாப நோக்கு இல்லாத நியாயமான சர்வதேச வழக்குகள் (Fair Trials International) அமைப்பின் தலைவர் கதரின் ஹெர்ட்  EAW க்கள் பரந்த அளவில் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கான சான்றுகளைக் கூறினார். “பல சாதாரண மக்கள்ஆசிரியர்கள், தீயணைப்போர், விடுதிகளின் உணவுத் தயாரிப்பவர்கள் மற்றும் மாணவர்கள்உடைய உயிர்களும் வருங்காலமும் ஐரோப்பியப் பிடி ஆணையினால் பாழாகின்றன. இந்த முறை ஒரு நியாயமான, திறமையான நாட்டிற்கு அழைத்து செல்லும் முறையை அளிப்பதில் அடிப்படை அரசியல் உரிமைகளை மீறும் வகையில் உள்ளன என்று அவர் கூறினார்.

ஐரோப்பிய ஒன்றிய நீதித்துறை ஆணையர் விவியன் ரெடிங் EUObserver.com என்னும் வலைத் தளத்திடம் ஐரோப்பிய ஆணையம் தற்பொழுது EAW வழிவகைகளை மறு ஆய்வு செய்துவருகிறது, அடுத்த மாதம் திருத்தங்களுக்கான திட்டங்களை வெளியிடும் என்று அறிவித்தார். ஆனால் இவை அசாஞ்ச் வழக்கைப் பாதிக்காது எனத் தோன்றுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில் விக்கிலீக்ஸின் வலைத்தளம் ஆயிரக்கணக்கான அமெரிக்க ராஜதந்திரத் தகவல் ஆவணங்களை முக்கியமாக 2009ல் முடியும் தசாப்தம் பற்றித் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. செவ்வாயன்று துருக்கி நாட்டின் நாளேடான Daily Taraf அக்காலக்கட்டத்தில் துருக்கியத் தொடர்புடைய 11,000 ஆவணங்களை வெளியிடத் தொடங்கியது. இச்செய்தித்தாளுடன் ஒரு உடன்பாட்டை ஜூலியன் அசாஞ்சே அறிவித்துள்ளார். இதில் நிதியப் பரிவர்த்தனை ஏதும் இல்லை.

துருக்கிய நாளேடு தான் துருக்கியிலுள்ள  இராணுவம் அல்லது அரசாங்கம் அல்லது பிற அரசியல் சக்திகள் ஆகியவற்றினால் பாதிப்பிற்கு உட்படக்கூடிய சக்தியற்ற தனிநபர்களின் பெயர்களை மறைத்துவிடும் என்று தெரிவித்துள்ளது. ஆனால்ஒரு நடுநிலை சட்டப்பூர்வ வழிவகையைத் தாங்களே எதிர்கொள்ளும் சக்தி உடையவர்கள் அல்லது தங்கள் அரசியல், நிதிச் சக்தியைப் பயன்படுத்தும் திறன் உடையவர்கள் எவ்வித நீதிமுறையை அவர்கள் எதிர்கொள்ள நேர்ந்தாலும் அவர்கள் விபரங்கள் மறைக்கப்பட மாட்டாதுஎன்று கூறியுள்ளது.