சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

The case of Fabien Engelmann in France

Trade unionist, ex-member of Lutte Ouvrière and the NPA—and neo-fascist

பிரான்சின் ஃபாபியான் ஏங்கல்மன் விவகாரம்

தொழிற்சங்கவாதியும் தொழிலாளர் போராட்டம் மற்றும் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியின் முன்னாள் உறுப்பினரும் மற்றும் ஒரு நவ பாசிஸ்ட்டும்.

By Olivier Laurent
21 March 2011
Use this version to print | Send feedback

பிரெஞ்சு செய்தி ஊடகம் சமீபத்தில் ஒரு CGT (தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு) தொழிற்சங்கத் தலைவர் ஃபாபியான் ஏங்கல்மன் பற்றிய தகவலை கொடுத்துள்ளது. அவர் 10 ஆண்டுகள்தீவிர-இடதுஅமைப்புக்களில் கழித்துள்ளார், முதலில் தொழிலாளர் போராட்டம் (Lutte Ouvriere— LO), பின் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியில் (NPA). இப்பொழுது அவர் வரவிருக்கும் தேர்தல்களில் நவ பாசிச தேசிய முன்னணியின் (FN) வேட்பாளாராக நிற்கவுள்ளார். இந்த அமைப்புக்களின் அறிக்கைகளுக்கு மாறாக, ஏங்கல்மன்னின் அரசியல் போக்கு ஒரு சிதைவு அல்ல, அவற்றின் சொந்த முன்னோக்குகளின் விளைவுகள்தாம்.

31 வயதான எங்கல்மன் கிழக்கு பிரான்ஸிலுள்ள சிறிய நகரமான லோரைனில் Nilvange ல் உள்ளூர் அரசாங்க ஊழியராக உள்ளார். Nilvange நகரவை சோசலிஸ்ட் கட்சியின் (PS) கீழ் 1965ல் இருந்து உள்ளது. தொடர்ச்சியான PS அரசாங்கங்கள் ஏற்பாடு செய்திருந்த எஃகு ஆலைகள் மூடுதல் என்ற நிலையில், இந்த எஃகு உற்பத்தி செய்யும் பகுதி 1980 களில் இருந்து 1990கள் வரை ஆயிரக்கணக்கான வேலைகளை இழந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் ஃபாபியான் ஏங்கல்மன் FN ல் சேர்ந்தார். Marine Le Pen தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், அமைப்பைசாத்தான்களற்று ஆக்கிவிட்டதாகஅவர் கூறியபின் இது நடந்துள்ளது. உண்மையில் FN பெருகிய முறையில் பிரான்சின் முக்கிய அரசியலில் ஒருங்கிணைந்துள்ளது. இக்கட்சி இடதிற்கு நகர்ந்துவிட்டது என்பதால் என்ற பொருளைக் கொடுத்து விட முடியாது. மாறாக முழு பிரெஞ்சு அரசியல் மற்றும் தொழிற்சங்க ஸ்தாபனங்களும் வலதிற்குத்தான் விரைவில் நகர்ந்துவருகின்றன. (See “French media gives glowing coverage of new National Front leader.”

ஜனவரி 24ம் திகதி Le Figaro வில் ஏங்கல்மன் பற்றிய ஒரு கட்டுரை வெளிவந்தபின், CGT பெப்ருவரி 16 அன்று அவரைக் கட்சியில் இருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியது. உள்ளுர் தொழிற்சங்கக் கிளை அவருக்குப் பெரும் ஆதரவைக் கொடுத்துள்ளது. அரசியலில் பாகுபாடு காட்டப்படுகிறது என்னும் காரணத்தைக் கூறி, தான் CGT க்கு எதிராக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

NPA உம் ஏங்கல்மன் பற்றி ஒரு அறிக்கை வெளியிட்டு, அவருடையதுஒரு மிக அபூர்வமான விவகாரம் என்று கூறியுள்ளது.

இவை அனைத்தும் ஏங்கல்மன் விவகாரம் எழுப்பியுள்ள தீவிர அரசியல் வினாக்களைத் தவிர்க்கும் முயற்சிகள்தாம். உண்மையில் ஏங்கல்மன் விவகாரம் FN, தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் அடுக்குகள் மற்றும்  LO, NPA போன்ற தவறாகப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளஇடது கட்சிஆகியவற்றிற்கு இடையேயுள்ள பிணைப்புக்களைத்தான் அம்பலப்படுத்தியுள்ளது.

இந்த அமைப்புக்களின் அறிக்கைகளுக்கு மாறாக, ஏங்கல்மன்னின் அரசியல் போக்கு ஒன்றும் தனிமைப்படுத்தப்பட்டது அல்ல. இன்னும் பிறஇடதுசெயற்பாட்டாளர்கள் மற்றும் தொழிற்சங்க அதிகாரிகளும் அவருடைய வழியைத்தான் பின்பற்றக்கூடும். Nilvange அமைந்துள்ள மாவட்டமான Moselle யிலுள்ள CGT அமைப்பின் தலைவராகவுள்ள Baptiste Talbot என்பவர் Liberation பத்திரிகையால் பேட்டி காணப்பட்ட போது அறிவித்தார்: “இப்பொழுது முதல் உள்ளுர் மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களுக்கும் நடுவே இதேபோன்ற பல விவகாரங்கள் வெளிப்பட்டால் அவை ஒன்றும் எனக்கு வியப்பைத் தராது.”

கிட்டத்தட்ட 26 உள்ளூர்க் கிளை உறுப்பினர்களுடைய ஆதரவும் ஏங்கல்மன்னிற்கு உள்ளது. “பல டஜன் CGT உறுப்பினர்கள், FN க்கு ஆதரவு கொடுப்பவர்கள் அல்லது அதில் சேர்ந்துள்ளவர்கள் இன்னும் இரு வாரங்களில்வெளியே வந்துவிடுவார்கள்என்றார் அவர்.

CGT யின் உள்ளூர்ச் செயலாளர், டெனிஸ் பெஸ், Liberation இடம், “பணியிடத்திலுள்ள செயற்பாட்டாளர்கள் எங்களிடம் கூறுவது கவலையைக் கொடுத்துள்ளது, குறிப்பாக மரின் லு பென் உடையசமூகஉரை பற்றி சில தொழிலாளர்கள் இடையே ஏற்படுத்தியுள்ள பாதிப்புப் பற்றி. அதைப்பற்றிப் பேசுவதற்கு மக்கள் இப்பொழுது அதிகம் அச்சப்படுவது இல்லை, வெளிப்படையாகவே தங்கள் நிலைமையைப் பறை சாற்றுகின்றனர்என்றார். ஒரு பெயரிடப்படாத CGT தலைவர், “எங்கள் கிளையில் நான்கில் மூன்று பகுதியினர் லு பென்னுக்கு வாக்களிக்கப் போகின்றனர் அல்லது [கன்சர்வேடிவ் ஜனாதிபதி நிக்கோலா] சார்க்கோசிக்கு வாக்குப் போடுவார்கள், அதைப்பற்றி அவர்கள் மறைக்கவில்லை The Republican Lorrain செய்தித்தாள் மேற்கோளிட்டுக் கூறியுள்ளது.

ஏற்கனவே 2007ல் CGT ஒரு கருத்துக் கணிப்பை மேற்கொண்டது. அது அதன் உறுப்பினர்களில் 11 சதவிகிதம் FN க்கு வாக்களித்தனர் என்று வெளிப்படுத்தியது. Lorraine பிராந்திய அரசாங்கத்தின் FN குழுவின் தலைவர்—CFTC அதிகாரி ஒருவர் (பிரெஞ்சு கிறிஸ்துவத் தொழிலாளர்கள் கூட்டமைப்புத் தொழிற்சங்கம்— “அனைத்து அமைப்புக்களில் இருந்தும், சிலர் உத்தியோகப்பூர்வ நிலையில் கூட CGT யில் இருப்பவர்கள்” FN செயற்பாட்டாளர்களாக உள்ளனர் என்று கூறினார்.

மாணவ செயற்பாட்டாளர்கள் பலரும் பெயரளவிற்குதீவிர இடதுகட்சிகளில் இருந்து FN க்கு வந்துள்ளதாகச் சான்றுகள் பதிவாகியுள்ளன என்று செய்தி ஊடகம் கூறுகிறது. ஒரு உதாரணம் 21 வயதான உளவியல் கற்கும் மாணவர் Venussia Myrtil ஆவார். இவர் NPA க்கு முன்னோடி அமைப்பான LCR இன் இளைஞர் பிரிவின் மூலம் அரசியலுக்கு வந்தவர். “பெருவணிகத்திற்கு எதிராகவும், இன்னும் கூடுதலாக சமூக நீதி ஆகியவற்றிற்கு ஆதரவாகவும் டார்க்கோஸ் கல்விச் சீர்திருத்தங்களின்போது இருந்தார்”, இவர் NPA ஆதரவாளராகவும் ஆகியிருந்தார்.

இவர் இப்பொழுது FN உடைய பாரிஸுக்கு அருகேயுள்ள Yvvlines உள்ளூர்த் தேர்தல்களில் வேட்பாளர் ஆவார். தான் நீங்கியது பற்றி அவர் கொடுக்கும் விளக்கமாவது: “அவர்களுடைய [NPA உடைய] சர்வதேச நிலைப்பாடு எனக்கு எரிச்சலைக் கொடுத்தது. அதே போல் பாலஸ்தீனிய சார்புடைய ஆர்ப்பாட்டங்களில் தெருக்களில் அரேபியர்கள் பிரார்த்தனை செய்ததையும் நான் விரும்பவில்லை.”

FN இளைஞர் பிரிவு ஜனவரி மாத நடுவிலிருந்து 2,000 இளைஞர்களைச் சேர்த்துள்ளதாகவும் அவர்களில் பலர்இடது அல்லது தீவிர இடதிலிருந்துவருபவர்கள் என்றும் கூறுகிறது.

ஒருஅபூர்வ நிலைப்பாட்டைபிரதிபலிக்கிறது என்பதற்கு முற்றிலும் மாறாக ஏங்கல்மன் உதாரணம் தொழிலாள வர்க்கத்திற்கு மிகப் பெரிய முக்கியத்துவத்தை எழுப்புகிறது: அதாவது தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் கணிசமான அடுக்குகளும்தீவிர-இடதுகட்சி உறுப்பினர்களும் நவ பாசிச முகாமிற்கு மாறியிருப்பதே அது.

இத்தகைய உணர்வுகள் பிரான்சின் உழைக்கும் மக்களின் பெரும்பாலானவர்களுடைய நிலைப்பாட்டை உணர்த்தவில்லை என்றாலும்கூட, இவை ஐயத்திற்கு இடமின்றி சனத்தொகையின் பல பிரிவுகளிலும் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. செய்தி ஊடகம் பரந்த முறையில் மரின் லு பென்னிற்கு ஆதரவு கொடுத்து வருகையில், ஒரு சமீபத்திய கருத்துக் கணிப்பு தற்பொழுது 23 சதவிகிதம் FN மிக அதிக வாக்குகளை எக்கட்சியும் பெறாத அளவிற்கு அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல்கள் உடனடியாக நடத்தப்பட்டால் பெறும் என்று கூறுகிறது. தொழிலாள வர்க்கம் சமூக வெட்டுகளுக்கும் மற்றும் போர் ஆகியவற்றை எதிர்க்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தொழிற்சங்கங்கள் மற்றும்தீவிர இடதுகட்சிகளால் நெரிக்கப்படும் நிலையில், FN உடைய வலதுசாரி எதிர்ப்பு வனப்புரை சமூக எதிர்ப்பின் சொல்லாட்சியில் ஏகபோக உரிமையை திறம்படக் கொள்வதற்கு வழிவகுத்துள்ளது.

இத்தகைய போக்குகள் தொழிற்சங்கங்கள் மற்றும்தீவிர இடதுகட்சிகள் மீதே மிகப் பெரிய பாதிப்புக்களைக் கொண்டுள்ளன. அவை எப்பொழுதும் பொருளாதாரத் தேசிய முன்னோக்கைக் கொண்டு, முதலாளித்துவ அரசாங்கம் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகளைப் பாதுகாக்கும் என்ற போலித் தோற்றங்களுக்கு ஊக்கம் அளிப்பவை. தற்பொழுது, பூகோளமயமாக்கலின் தாக்கம் மற்றும் முதலாளித்துவ சார்பு கொள்கை என்றுஇடதும்”, “தீவிர இடதும்இருக்கையில், இந்த நம்பிக்கைகள் பெருமளவிற்கு மக்களில் பெரும்பகுதியினரால் கைவிடப்பட்டுவிட்டன.

ஆனால், தொழிற்சங்கங்களும்தீவிர இடதுகளும்முதலாளித்துவஇடதின்அரசியலுக்குத் தொடர்ந்து இசைவு கொடுக்கின்றன. பல தசாப்தங்களாக அவை தொழிலாள வர்க்கத்திற்கும் முதலாளித்துவ அரசாங்கங்களுக்கும் இடையே ஒரு புரட்சிகர மோதலைத் தூண்டும் தொழிலாளர்கள் போராட்டங்களை நெரித்துள்ளன. அரசாங்கங்கள்இடதுஅல்லது வலது என்றாலும் இதே நிலைமைதான். அவை சமூகச் சிக்கனக் கொள்கைகளைத்தான் செயல்படுத்தி வருகின்றன. இவ்விதத்தில் 1995 மற்றும் 2007ல் நடந்த இரயில்வேத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்கள், ஆசிரியர்களின் ஓய்வூதிய வெட்டுக்கெதிரான போராட்டம் 2003ல் நடைபெற்றது, கடந்த ஆண்டின் எண்ணெய்த் தொழிற்துறை வேலைநிறுத்தம்ஒரு சில போராட்டங்கள் மட்டுமே குறிக்கப்பட்டுள்ளனதொழிற்சங்கங்களால் தனிமைப்படுத்தப்பட்டு தோற்கடிக்கப்பட்டுள்ளன. இவை தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களில் பேரழிவு தரும் பாதிப்புக்களை ஏற்படுத்திவிட்டன.

தொழிற்சங்கங்களும்தீவிர இடதுஅமைப்புக்களும் பல நேரமும் பிரெஞ்சு முதலாளித்துவக் குடியரசுவாத மரபுகள் தான் காரணம் என ஒரு சாட்டை மேற்கோளிடுகின்றன: அதாவது தொழிற்சங்கங்கள் வழிநடத்துவதாகக் கூறப்படும் தொழிலாளர்களின் போராட்டங்களையும் அரசியல் செயற்பாடுகளையும் இடையே பிரித்து வேறாக வைக்கும் கொள்கை பற்றி. இக்கொள்கை NPA மற்றும் LO ஆகியவற்றின் ஆதரவைக் கொண்டுள்ளது—“தொழிற்சங்கத்திற்கான சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும்என்று மேற்கோளிட்டு ஒருபொழுதும் தொழிற்சங்க அதிகாரத்துவம் வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்களை நெரிப்பது பற்றிக் குறைகூற விரும்புவதில்லை.

இந்தக் கொள்கை ஏங்கல்மன்னை சுற்றியுள்ள நவ பாசிச தொழிற்சங்க அதிகாரிகளாலும் தழுவப்பட்டுள்ளது. இவர்களைப் பொறுத்தவரை, அரசியலும் தொழிற்சங்கப் பணிகளும் இரு முற்றிலும் தன்னாட்சி கொண்ட செயற்பாடுகள் ஆகும். “FN ல் அவர் இருப்பது தொழிற்சங்கத்தில் இருப்பதுடன் பொருந்தி வராது. அது இத்தோடு எத்தொடர்பையும் கொள்ளவில்லை. மேலும் 2010ல் ஃபாபியான் [ஏங்கல்மன்] NPA தேர்தல் பட்டியலிலும் இருந்தார், அது எப்பிரச்சினையையும் கொடுக்கவில்லைஎன்று L’Est Republicain இடம் அவருடைய சக ஊழியர்களில் ஒருவர் விளக்கினார்.

உலகப் பொருளாதார நெருக்கடி மற்றும் புரட்சிகரத் தொழிலாளர்களின் போராட்டங்கள் வட ஆபிரிக்காவில் வளர்ந்து வெடித்ததால் ஏற்பட்டுள்ள வர்க்க அழுத்தங்கள் வெடித்துள்ள நிலையில், இந்த அமைப்புக்களின் தேசியவாத, தொழிலாளர்-எதிர்ப்புத் தன்மையானது அவற்றின் உறுப்பினர்கள் சிலரை அவர்களுடைய சமூக செயற்பாடுகளுக்கு ஏற்ப அரசியல் வண்ணத்தையும் ஏற்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது. ஏங்கல்மன் போன்ற செயற்பாட்டாளர்கள் LO மற்றும் NPA போன்றவற்றின்கம்யூனிசம்அல்லதுமுதலாளித்துவ-எதிர்ப்புபோன்றவற்றிற்குக் காட்டும் போலித்தன, பாசங்குத்தன பரிவுகளைக் கைவிடுகின்றனர். நேரடியாக தொழிலாளர்-எதிர்ப்புத் தொல்சீர் சிந்தனைப் போக்கான பாசிசத்தை வெளிப்படுத்துகின்றனர்.

இந்த நிகழ்வுகள் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு முன்வைத்த முன்னாள்இடதுஅமைப்புக்களைப் பற்றிய ட்ரொட்ஸ்கிச திறனாய்வின் சக்திவாய்ந்த உறுதிப்பாடு ஆகும். இத்தகைய சக்திகள்தீவிர இடதுஎன்பதைக் கடப்பவை என்னும் உண்மை எல்லாவற்றிற்கும் மேலாக இக்கட்சிகளின் வலதுசாரித் தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டி, அதிகாரத்துவங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையேயுள்ள பெரும் பிளவையும், இடதில் இருக்கும் அரசியல் வெற்றிடத்தையும் காட்டுகின்றன. ஏங்கல்மன் உடைய வளர்ச்சியின் பரந்த சூழ்நிலைகள் ஒரு தேசிய வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்கும் முன்னோக்குகளின் வரலாற்றுத் தன்மை படைத்த திவால் தன்மையைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

தொழிற்சங்கங்கள் மற்றும்தீவிர இடதுஅமைப்பு ஆகியவை முதலாளித்துவஇடதுஎன அரசாங்கங்களில் இருப்பவற்றுடன் ஒத்துழைப்பதின் விளைவுகள் தொழிலாளர்களுக்குப் பேரழிவு தருகின்றன. குறிப்பாக ஏங்கல்மன் வசிக்கும் லோரைன் போன்ற பகுதிகளில். 1981ல் தேர்ந்தெடுக்கப்பட்டபின், சோசலிஸ்ட் கட்சி ஜனாதிபதி மித்திரோன் லோரைனுக்குச் சென்றிருந்தபோது அறிவித்தார்: “மற்றொரு துறையில் முன்னரே ஒரு வேலை தோற்றுவிப்பதற்கு முன்பு, ஒரு பொழுதும் எஃகுத் தொழிலில் ஒரு வேலை குறைக்கப்பட மாட்டாது.”

1982ல் பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய (PCF, இக்கொள்கையைப் பல ஆண்டுகளாகத் தேவை எனக் கூறியிருந்தது) ஆதரவுடன் முழு எஃகுத் துறையையும் மித்திரோன் தேசியமயமாக்கினார். முதலாளித்துவ உரிமையாளர்களுக்கு மிக அதிக இழப்பீட்டுத் தொகை கொடுத்தார். இது அவர்களை தொழிலைக் கைவிட்டு வசதியான சூழலில் நிதியத் துறைக்குச் செல்ல வைத்தது. 1982 ஜூன் மாதம் அரசாங்கம் 12,000 வேலைக் குறைப்புக்களை அறிவித்தது. இதைத்தொடர்ந்து இன்னும் பல குறைப்புக்களும் இழப்பீட்டுத் தொகைகள் இல்லாமலேயே நிறைவேறின.

என்னுடைய அரசியல் ஆர்வத்தை மிக இளவயதிலேயே தொடங்கி விட்டேன், சமூக சமத்துவமின்மைகள் பற்றி முழுதும் அறியத் தொடங்கினேன், ஊழியர்கள், தொழிலாளர்கள் பொருட்டல்ல என்ற முறையில் பதவிகள் இழந்ததைக் கண்டேன், ஆனால் அவர்கள்தான் பொருளாதாரத்தை செயல்படுத்துபவர்கள்என்று எங்கல்மனே கூறியுள்ளார்.

ஆனால் இந்த முற்றிலும் நெறியான உணர்வு தொழிலாள வர்க்கம் மற்றும் சோசலிசம் ஆகியவற்றுடன் ஒரு பரந்த அரசியல் சார்பாக இணைக்கப்படவில்லை. மாறாக பல தனித்தனிப் பிரச்சினைகள் மற்றும் வலதுசாரிக் கருத்துக்களுடன்தான்குறிப்பாகத் தீவிர தேசியவெறியுடன்தான்இணைக்கப்பட்டது. குடியேறுபவர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு, குறிப்பாக பிரெஞ்சு வட ஆபிரிக்கக் குடியேற்றங்களிலிருந்து வருபவர்களுக்கு எதிராகஏங்கல்மனுக்கு எளிதில் வருகிறது, இவருடைய பெற்றோரின் பெற்றோர்கள் அல்ஜீரியாவிலிருந்து வந்து குடியேறியவர்கள். ஆனால் இன்னும் பரந்த முறையில் இத்தகைய வெறுப்புணர்வு உத்தியோகப்பூர்வ இடது கட்சிகளால் உரமூட்டப்படுகின்றன.

ஒரு சமீபத்திய பேட்டியில் ஏங்கல்மன் PS மற்றும் PCF தலைவர்களின் வரலாற்றுத் தன்மை பிடித்த குடியேற்ற எதிர்ப்பு உணர்வுகளைப் பற்றி ஒப்புதலுடன் மேற்கோளிடுகிறார். “உலகின் வறியவர்கள் அனைவரையும் ஏற்கும் வாய்ப்பு அல்லது அறநெறிக் கட்டாயம் நமக்கு இல்லை. இதைத்தான் சோசலிஸ்ட் [முன்னாள் பிரதம மந்திரி] மிஷேல் ரோக்கார், கம்யூனிஸ்ட் (கட்சியின்) ஜோர்ஜ் மார்ஷே போன்றோர் கூறி 1980 களில் குடியேற்றம் நிறுத்தப்பட வேண்டும் என்று கோரினர்.”

“LOவின் தலைவரான Arlette Laguiller உடைய நேரடிப் பேச்சு, நேர்மை ஆகியவற்றைப் பெரிதும் பாராட்டியதால்” 2001ல் LO வில் ஏங்கல்மன் சேர்ந்தார். இவர் ஜூன் 2008 வரை LO இல் இருந்தார். பல தேர்தல்களில் இவரை வேட்பாளராக நிறுத்திவைக்கும் அளவிற்கு LO வும் இவரை அரசியலில் போதுமான நெருக்கம் உடையவராகக் கண்டது. 2007 சட்டமன்றத் தேர்தலில் Longwy தொகுதியில் (Meurthe-et-Mosselle பிராந்தியத்தில்) வேட்பாளராக, பின் 2008ல் கிழக்கு பிரான்ஸில் Thionville யில் நிறுத்தியது. அங்கு அவர் மொத்த வாக்குகளில் 6.4 சதவிகிதத்தைப் பெற்றார்.

Laguiller உடைய ஆளுமையைத் தவிர, LO வில் இவர் நுழைந்தது மார்க்ஸிஸத்துடன் எத்தொடர்பும் கொண்டிராத கருத்துக்களைத் தளமாகக் கொண்டது. ஆனால் இவை வலதில்தான் தெளிவாக இருந்தன. ஏங்கல்மனே விளக்கியுள்ளபடி, “மிருகப் பாதுகாப்பு அமைப்புக்களில் மிக இள வயதிலேயே உறுப்பினராக இருந்ததில் தொடங்கி, நான் அரசியல் செயற்பாட்டாளராக இருந்துள்ளேன். ஏனெனில் உயிருக்கு மதிப்பு என்பதற்கு நாம் பெரும் முக்கியத்துவத்தைக் கொடுக்கிறேன். Brigitte Bardot விற்கு என் பாராட்டு உண்டு என்பதை நான் ஒப்புக் கொள்ளுகிறேன்.”

1960 களில் ஒரு திரை நட்சத்திரமாக இருந்த Bardot, மிருகங்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் ஒருவராவார். ஒரு வெளிப்படையான வலதுசாரி, FN உடைய நிறுவனரான Jean-Marie Le Pen உடைய நெருக்கமான நண்பரைத் திருமணம் செய்து கொண்டவர். முஸ்லிம் திருவிழாவான Aid el-Kebir அன்று முஸ்லிம்கள் ஆடுகளை வெட்டுவதைப் பற்றி அவர் விடும் அறிக்கையையொட்டி இனப் பாகுபாட்டுக் குற்றங்களுக்காகப் பல முறை இவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகள் பதிவாயின.

LO ஆனது பிரெஞ்சு முதலாளித்துவம் இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரத்திற்குமதசார்பற்ற தன்மைஎன்ற மறைப்பில் கொடுக்கும் ஆதரவு—2004ல் பள்ளிகளில் பெண்கள் முகமறைப்பு அங்கியைப் பயன்படுத்துவதற்கு எதிராக வந்த சட்டம் ஒரு உதாரணம்சந்தேகத்திற்கு இடமின்றி ஏங்கல்மன் LO வில் சேர வசதியளித்தது. இவர் FN க்கு மாறுவதற்கும் அவை உதவின.

எங்கல்மன் NPA இல் சேர்ந்தார்: “LO வின் இறுக்கமான கூறுகளுடனான மற்ற இடது சக்திகளுடன் தொடர்புகள் கூடாது என்ற போக்கின் விளைவு இது.” 2010ல் Moselle ல் பிராந்தியத் தேர்தல்களில் NPA தேர்தல் பட்டியலில் இரண்டாவது இடத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முன்னாள் LCR (புரட்சிகர கம்யூனிஸ்ட் லீக்) தோற்றுவித்த அமைப்புத்தான் NPA.  PSக்குப் பின்னால் அல்லது பொதுவாக முதலாளித்துவ ஒழுங்கில் திசைதிருப்பப்படுவதற்கேற்ப இது எல்லாமுதலாளித்துவ எதிர்ப்புஎதிர்ப்பாளர்களையும் ஒன்றுசேர்க்க முயல்கிறது.

ஏங்கல்மனுடைய பயணப்பாதையானது, NPA குறித்து WSWS கூறியுள்ள பகுப்பாய்வின் சரியான தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 2009ல் NPA மாநாட்டையொட்டி WSWS கூறியிருந்தது. “LCR இன் முதலாளித்துவ எதிர்ப்பு என்பது ஒரு சிந்தனைப் போக்கிற்கு வழிகாட்டி எனத் தேர்ந்தெடுத்துள்ளது …. வலதிற்கு ஒரு பெரும் பின்னோக்கிய அடிவைப்பாகும், மிகக் குறைந்த பொது அளவில் நிற்பது. அரசியல் அளவில் குழப்பமானது, இச்சொற்றொடர் அனைத்து சமூக அதிருப்தியையும் சமூகத்தளம் அல்லது நோக்குநிலையை உள்ளடக்கியது….. இது Pierre Joseph Proudhon உடைய 19ம் நூற்றாண்டு நடுப்பகுதி அராஜகவாதத்திலிருந்து 20ம் நூற்றாண்டின் நடுப்பகுதி Pierre Poujade யின் ஜனரஞ்சக வலதுசாரி இயக்கம் வரை அனைத்தையும் அடக்கியது.” (See “What is the LCR’s New anti-Capitalist Party?“)

NPA உடன் பிராந்தியத் தேர்தல்களின்போது ஏங்கல்மன் முறித்துக் கொண்டது, கட்சியின் ஒரு பிரிவு ஒரு முகமறைப்பு அங்கி அணிந்த முஸ்லீம் வேட்பாளரை நிறுத்தியபோது ஏற்பட்டது.

இந்நிகழ்வினால் உளைச்சல் அடைந்த ஏங்கல்மன், தியோன்வில்லிலுள்ள கட்சிக் குழு உறுப்பினர்கள் முக்கால் வாசிப் பேருடன் NPA ஐ விட்டு விலகி, Riposte Laique (RL) எனப்படும் மதசாற்பற்ற இதழுடன் தங்களை சார்பாக்கிக் கொண்டார். இது PCF, LCR மற்றும் CGT ஆகியவற்றின் முன்னாள் உறுப்பினரான Pierre Cassen என்பவரால் நிறுவப்பட்டது. அவர் டச்சு தீவிர வலதுசாரி ஜனரஞ்சக Geert Widers ஐ ஒரு உதாரணமாக ஆர்வமுடன் மேற்கோளிடுகிறார்.

RL ஆனது பாசாங்குத்தனமாக எந்த அளவிற்கு இஸ்லாமை எதிர்க்கிறதோ அந்த அளவிற்கு கத்தோலிக்கப் பிரிவையும் எதிர்ப்பதாகக் கூறுகிறது. ஒரு நாட்டில் கத்தோலிக்கவாதம் எங்கு ஸ்தாபனமயப்பட்டிருக்கிறதோ இது தேசியவாதிகளுக்கு இஸ்லாமியப் பெரும்பான்மை கொண்ட நாடுகளிலிருந்து வரும் மக்களை இழிவுபடுத்த ஒரு போலிக்காரணத்தை அளிக்கிறது. நவம்பர் 2010ல் ஏங்கல்மன் RL க்கு கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். இது CGT யில் எந்தக் கவலைலையையும் எழுப்பவில்லை. அதேபோல் LO மற்றும் NPA ஆகியவற்றிலும் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை.