சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா

US, France and Britain launch war of aggression against Libya

லிபியாவிற்கு எதிரான ஆக்கிரோஷப் போரை அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆரம்பித்தன

By Patrick Martin
21 March 2011
Use this version to print | Send feedback

லிபிய இலக்குகள் மீது சனிக்கிழமையன்று அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் வான் தாக்குதல்கள், ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி, வட ஆபிரிக்கா மற்றும் முழு மத்திய கிழக்கை உறுதிகுலைக்கும் ஆக்கிரோசப் போர் அச்சுறுத்தலைத் தொடங்கியுள்ளன. இரு நாட்களாக நடைபெறும் குண்டுவீச்சுக்கள், ஏற்கனவே ஏகாதிபத்தியச் சக்திகள் போலித்தனமாக காப்பாற்றுவதாகக்கூறும் லிபிய மக்கள் மத்தியில் பல உயிர்களைப் பறித்துள்ளன.

துனிசியா மற்றும் எகிப்தில் அமெரிக்க கைக்கூலி அரசாங்கங்களை அகற்றிய மக்கள் இயக்கத்திற்கு எதிரான வகையில் வாஷிங்டனும் அதன் பங்காளிகளும் கூட்டுக் குற்றத்தில் நடத்தும் ஒரு பிரச்சாரத்தின் முதல் படிதான் இந்தப் போர் ஆகும். அந்த மக்கள் எதிர்ப்புக்கள் அமெரிக்க ஆதரவுடைய முடியரசுகள் மற்றும் சர்வாதிகாரங்கள் என்று பஹ்ரைன், ஓமன், யேமன் மற்றும் சௌதி அரேபியாவிலுள்ள ஆட்சிகளையும் அச்சுறுத்துகின்றன.

கிழக்கு லிபியாவில் எதிர்ப்புப் படைகளின் தலைமையகமாக இருக்கும் பெங்காசியிலிருந்து வரும் செய்தி ஊடகத் தகவல்கள் நூற்றுக்கணக்கான மக்கள் ஏற்கனவே வான், ஏவுகணைத் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர் என்று தெரிவிக்கின்றன. நகரத்திற்கு வெளியே 7 முதல் 10 வரை புகை மண்டலத்தை எழுப்பியுள்ள டாங்குகள் இருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன. க்ரூஸ் ஏவுகணைகள், தீவிரமான சிறப்புக் குண்டுகள் உட்பட உயர் தொழில்நுட்ப ஆயுதங்களுக்கு எதிரான தாக்குதல்களில் லிபிய இராணுவத் துருப்புக்கள் அதிக எதிர்ப்புத் திறனற்றவை.

முதலாவது தாக்குதலை நடத்தியவை பிரெஞ்சு விமானங்கள் என அறிவிக்கப்படுகிறது. இதில் 20 Mirage மற்றும் Rafale ஜெட்டுக்கள் லிபிய இராணுவப் படைகளை பெங்காசிக்கு வெளியே தாக்கின. ரோயல் ஏயர் போர்ஸ் Tornado GR4 வேக ஜெட்டுக்களைப் பயன்படுத்தியது. இவை பிரிட்டனிலிருந்து லிபியாவிற்கு 3,000 மைல்கள் பறந்து சென்று திரும்பிவந்தன. 1982 பாக்லாந்துப் போருக்குப் பின்னர் இவைதான் பிரிட்டனின் மிகத் தொலைதூர விமானப் படைத் தாக்குதல் ஆகும்.

வழிகாட்டியால் வழிநடத்தப்படும் இரு ஏவுகணை அழிப்புக் கப்பல்களிலிருந்தும் மற்றும் மூன்று நீர்மூழ்கிக் கப்பல்களிலிருந்தும் ஏவிய க்ரூஸ் ஏவுகணைகள் அமெரிக்கத் தாக்குதல்களாக இருந்தன. இதைத்தவிர B2 ஸ்டெல்த் விமானங்கள் மிசோரியில் இருக்கும் வையிட்மன் விமானத் தளத்திலிருந்து பறந்து லிபிய விமானத்தளங்களில் 36 மணி நேரம் சுற்றி வந்து தாக்குதலில் குண்டுகளைப் போட்டதும் அடங்கும்.

ஞாயிறன்று அமெரிக்க விமானப் படை F15 மற்றும் F16 கள் லிபியத் துருப்புக் குவிப்புக்களை எதிர்ப்புப் படைகளுடன் சமீபத்தில் போர்களில் குவிப்புக்காட்டிய கடலோரப் பகுதிகளில் தாக்குதல் நடத்தின என்று தகவல்கள் வந்துள்ளன. இவற்றுள் Ras Lanuf, Adjibiya, Brega, மற்றும் லிபியாவின் மூன்றாவது பெரிய நகரான மிசுரடாவைச் சுற்றியுள்ள பகுதிகளும் அடங்கும்.

கனடா, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் நோர்வேயில் இருந்தும் படைகள் செயல்படுவதாகக் கூறப்படுகிறது.

ஜனாதிபதி ஒபாமா, வெளிவிவகாரச் செயலர் கிளின்டன் இன்னும் பிற அமெரிக்க செய்தித் தொடர்பாளர்கள் இராணுவ தலையீடுவாரங்கள் என்பதற்குப் பதிலாக நாட்கள் என்று மட்டுமே இருக்கும்என்னும் கூற்றுக்களில் நம்பகத்தன்மை இல்லை. லிபியா மீதான தாக்குதல்களின் பரப்பு முதல் 48 மணி நேர இராணுவ நடவடிக்கையில் பெரும் முறையில் விரிவடைந்துள்ளது.

இராணுவ நடவடிக்கையில் ஒரு தர்க்கம் உள்ளது. ஆரம்ப குண்டுவீச்சுக்கள் தவிர்க்க முடியாமல் லிபிய எதிர்ப்புச் சக்திகளுக்குஆலோசகர்களைஅனுப்பும் நிலையை ஏற்படுத்தும், அதன் பின் ஏகாதிபத்தியத் துருப்புக்கள் முன்னாள் இத்தாலிய காலனியை ஆக்கிரமிக்கும்.

கூட்டுப்படைகளின் தலைவரும் ஒபாமாவின் உயர்மட்ட இராணுவ ஆலோசகருமான அட்மைரல் மைக்கேல் முல்லென், ஞாயிறு காலை ஐந்து வேறுபட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பிரசன்னமாகி ஆரம்ப குண்டுவீச்சு பற்றிய பென்டகனின் மதிப்பீட்டை அளித்தார்.

Fox News Sunday ல் வான், ஏவுகணைத் தாக்குதல்கள் முயம்மர் கடாபியின் ஆட்சியில் பறக்கக்கூடாத பகுதியைச் செயல்படுத்துவதற்குத் தேவையான தன்மையைவிட அதிகமாகவே சென்றது என்று அவர் உறுதிபடுத்தினார். “பல இலக்குகளை நாங்கள் தாக்கினோம், அவைகள் அவருடைய கட்டுப்பாட்டின் கீழ் உள்ளவை, அவருடைய விமானப் பாதுகாப்புக்கள் மீது குவிப்பு காட்டினோம், உண்மையில் பெங்காசிக்கு அருகே அவருடைய தரைப்படைகள் சிலவற்றையும் தாக்கினோம்என்றார் அவர்.

சில திட்டங்கள் பற்றி முல்லென் ஒபாமா நிர்வாகத்தின் இரட்டை நிலைப்பாடு பற்றி வினவப்பட்டார். கடாபிதன் சொந்த மக்களையே படுகொலை செய்வதைதடுக்க லிபியா மீது தாக்குதல் நடத்துவதாக இது கூறுகிறது. அதே நேரத்தில் பிற மத்திய கிழக்கு நாடுகளில், குறிப்பாக பஹ்ரைன் மற்றும் யேமனில் ஆட்சிகள் இதேபோல் குருதி கொட்ட வைக்கும் அடக்குமுறையில் ஈடுபடுகின்றன.

இந்த நாடுகள் ஒவ்வொன்றும் வேறு வேறு தன்மையைக் கொண்டவைஎன்று முல்லென் NBC யிடம் கூறினார். இது ஏகாதிபத்தியத்தின் மூலோபாய நலன்களை வலியுறுத்தியதே தவிர அமெரிக்க மக்கள் கருத்தை ஏமாற்றுவதற்கு பயன்படுத்தும் மனிதாபிமானம் என்ற பொருளற்ற சொல்லை வலியுறுத்தவில்லை. “பல, பல தசாப்தங்களாக நாம் பஹ்ரைனுடன் பெரும் நட்பு கொண்டுள்ளோம். நம்முடைய முக்கிய கடற்படைத் தளங்களில் ஒன்று அங்குள்ளதுஎன்றார் அவர்.

NBC யின் Meet the Press நிகழ்ச்சியில், முல்லென் மிகப் பழையதும் மிக இழிவிற்குட்பட்ட பிரச்சார உத்திகள் ஒன்றை தோண்டி எடுத்துப் பயன்படுத்தி, அமெரிக்க மற்றும் நட்பு நாடுகளின் தாக்குதல்களால் ஏற்படும் இறப்புக்கள் லிபியத் தலைவரின் தவறினால்தான் என்று கூறினார். “கடாபி மனிதக் கேடயங்களை சில இடங்களில் கொண்டுள்ளார், மற்றும் …. நாம் சிவிலிய இறப்புக்களை தோற்றுவிப்பதாகவும் கூறுகிறார்.”

அமெரிக்க அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர்கள் இத்தகைய கூற்றை அநேகமாக அமெரிக்கக் குண்டுகள் ஏவுகணைகள் மூலம் கடந்த கால் நூற்றாண்டில் நடத்திய ஒவ்வொரு கொடூரத்திற்கும் பின்னர் முன்வைக்கின்றனர். இதில் புதியது என்னவென்றால் அமெரிக்க உயர்மட்ட இராணுவ அதிகாரியே முன்கூட்டியே அமெரிக்க நடவடிக்கை மூலம் நூற்றுக்கணக்கான மக்கள் இறப்பர் என்றும் அதற்கான குற்றச்சாட்டு பாதிக்கப்பட்டவர்கள் மீது போடப்பட வேண்டும் எனக்கூறுவதும்தான்.

அமெரிக்க வான் தாக்குதல்கள் வெளிப்படையாக இராணுவ இலக்குகளை மட்டும் கொண்டிராது, கடாபியின் வழங்கல் வழிகள் மற்றும் பொருட்கள் செல்லும் திறன்கள் மீதும் இருக்கும் என்றும் முல்லென் தெரிவித்தார். இதன் பொருள் லிபியாவின் அனைத்துப் பொருளாதார ஆதாரங்களும்ஏகாதிபத்தியச் சக்திகள் அப்படியே கைப்பற்ற விரும்பும் எண்ணெய்த் தொழில்துறை தவிரகுண்டுகள், ஏவுகணைகள் ஆகியவற்றில் இலக்குகளாக இருக்கும் என்பதுதான்.

கடாபி அல்லது அவருடைய குடும்பத்தைப் படுகொலை செய்யும் நோக்கத்தை தாக்குதல் கொண்டிருக்கவில்லை என்றும் முல்லென் கூறினார். ஆனால் அவருடைய தொலைக்காட்சிப் பேட்டி நடந்த சில மணி நேரத்திற்குள் திரிபோலியிலுள்ள செய்தியாளர்கள் லிபியத் தலைநகரில் கடாபி குடும்ப வீட்டு வளாகத்திற்கு அருகே பெரும் வெடிச் சத்தங்கள் பற்றித் தகவல் கொடுத்துள்ளனர். நகர் முழுவதும் விமானத் தாக்குதல் எதிர்ப்புத் தளங்கள் இயக்கப்பட்டன. ஒரு புதிய, பரந்த வான் தாக்குதலுக்கு இவை விடையளிக்கும் வகையில் இருந்தன.

ஒபாமா நிர்வாகம் லிபியா மீதான தாக்குதல்பரந்த கூட்டணியுடையகூட்டுச் செயற்பாடு என சிரமப்பட்டுத் தெரிவித்து அதை புஷ் நிர்வாகத்துடன் ஒருதலைப்பட்ச ஈராக்கின் மீது படையெடுக்கச் செல்வது என்ற முடிவிலிருந்து வேறுபடுத்திக் காட்ட முற்படும்போது, அமெரிக்க ஏகாதிபத்தியம் முக்கிய, முடிவெடுக்கும் பங்கைக் கொண்டிருக்கிறது என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

ஒரு அமெரிக்கத் தளபதி, ஜெனரல் Carter Ham, பென்டகனின் ஆபிரிக்க கட்டுப்பாட்டின் தளபதி (AFRICOM) லிபியாவிற்கு எதிரான கூட்டு நாடுகளின் செயற்பாடுகள் அனைத்திற்கும் பொறுப்பாக இருந்து, பிரெஞ்சு, பிரிட்டிஷ் போர் விமானங்கள், பிரிட்டிஷ் நீர்மூழ்கிகள் மற்றும் இத்தாலிய கடற்படைக் கப்பல்கள் ஆகியவற்றிற்கு உத்தரவு கொடுக்கிறார்.

தரைப் பகுதியில் இராணுவப் பூட்ஸ்கள் பதியாதுஎன்று ஒபாமா கூற்றுக்கள் ஒருபுறம் இருக்க, அமெரிக்க, பிரிட்டிஷ் இன்னும் மற்ற நாடுகளின் சிறப்புப் படையினர்கள், உளவுத்துறை முகவர்கள் ஆகியோர் ஏற்கனவே லிபியாவிற்குள் செயல்படுகின்றனர், முக்கிய இலக்குகளில் நேரடித் தாக்குதல் நடத்த உதவுகின்றனர், குறிப்பாக லிபிய இராணுவத்தின் தளக் கட்டுப்பாட்டு அதிகாரிகள், லிபிய அரசியல் தலைமை ஆகியவற்றிற்கு எதிராக என்பதில் ஐயம் இல்லை

லிபியச் சர்வாதிகாரி முயம்மர் கடாபி எதிர்க்க உள்ளதாக உறுதி எடுத்துள்ளார். தேசியத் தொலைக்காட்சியில் ஞாயிறு காலை பிரசன்னமாகி அமெரிக்க-ஐரோப்பியத் தாக்குதல்காலனித்துவ நீண்ட ஆக்கிரமிப்பு, இது மிகப் பெரிய அளவில் மற்றொரு நீண்ட போரைத் தூண்டிவிடக்கூடும்என்றார். லிபிய குண்டுவீச்சினால் திரிபோலியில் ஒரு மருத்துவமனை தாக்கப்பட்டது என்றும் 48 பேர் இறந்துவிட்டனர், 100க்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றனர் என்றும் அரசத் தொலைக்காட்சி கூறியுள்ளது.

இதற்கிடையில் கடாபி ஏகாதிபத்திய சக்திகளிடம் அவர்களுடன் தான் பிணைந்த 2004 கூட்டை மீண்டும் புதுப்பிக்குமாறு வாதிட்டுள்ளார். அப்பொழுது அவர் அவருடைய அணுசக்தி ஆராய்ச்சி திட்டத்தை மூடியதுடன், அவருடைய அணுச் சொத்துக்களை அமெரிக்காவிடம் அளித்து, ஸ்கொட்லாந்தில் 1988 லாக்கர்பீ விமானத்தின் மீதான தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கொடுக்கவும் ஒப்புக் கொண்டிருந்தார்.

லிபிய எதிர்ப்பாளர்கள் முற்றிலும் அல் கெய்டா ஆதரவாளர்கள் ஆவர் என்ற தன் அறிக்கையை அவர் மீண்டும் வலியுறுத்தி அமெரிக்க ஜனாதிபதிக்குமகனேஎன்று விளித்த ஒரு கடிதத்தையும் அனுப்பிவைத்து பயங்கரவாதத்திற்கு எதிரான அமெரிக்கப் போராட்டத்திற்குத் தன் ஒத்துழைப்பையும் கொடுக்க முன்வந்துள்ளார்.

அதே நேரத்தில் லிபிய எண்ணெய்த் துறை மந்திரி ஷுக்ரி கனெம் நாட்டின் எண்ணெய் இருப்புக்கள் இன்னும் மேலைத்தையச் சுரண்டுதலுக்கு உரியவை என்றும் பெரிய எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் தொழில்நுட்பவல்லுனர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகளை நாட்டிற்கு மீண்டும் அனுப்புமாறும் கேட்டுக் கொண்டார். வெளிப்படையான போர் தொடங்கிவிட்டாலும், லிபியா வெளிநாட்டு நிறுவனங்களுடன் அது கொண்டுள்ள ஒப்பந்தங்கள் அனைத்தையும் மதிக்கும் என்றும் அதில் மிகச் சமீபத்திய 500 மில்லியன் டொலர் BP உடனான ஒப்பந்தமும் அடங்கும் என்றார்.

லிபியா மீது ஆரம்பித்த வான் தாக்குதல்களின் கடுமை வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு முழுவதும் பரந்த அதிர்ச்சி மற்றும் சீற்றத்தைத் தோற்றுவித்துள்ளது. பிரெஞ்சு, பிரிட்டிஷ், அமெரிக்க அழுத்தத்திற்கு அடிபணிந்து லிபியாவில் பறக்கக்கூடாத பகுதியை நிறுவ வேண்டும் என அழைப்புவிடுத்த அரபு லீக்கின் அதிகாரிகள் ஞாயிறன்று தங்கள் ஆதரவைப் பரிசீலனை செய்ய இருப்பதாக அறிவித்தனர்.

மொரோக்கோ, ஈராக், ஜோர்டான், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுக்கள் என்னும் ஐந்து அரபு நாடுகள் சனிக்கிழமை பாரிஸில் இராணுவப் படையை பயன்படுத்துவதற்கு ஒப்புதல் கொடுக்கும் கூட்டத்திற்கு பிரதிநிதிகளை அனுப்பின. கட்டார் ஒன்றுதான் நேரடியாக பங்கு பெற ஒப்புக்கொண்டுள்ளது.

லிபியா, எகிப்து, துனிசியா உட்பட கண்டத்தில் இருக்கும் 53  நாடுகளின் குழுவான ஆபிரிக்க ஒன்றியம் மௌரிடானியாத் தலைநகரான Nouakchott ல் உள்ள அதன் லிபியா பற்றிய அமர்வில் போரைப் பற்றி பகிரங்கக் கண்டனத்தைத் தெரிவித்தது. வியாழனன்று தென்னாப்பிரிக்கா, நைஜீரியா மற்றும் கபோன் ஆகிய மூன்று ஆபிரிக்க ஒன்றிய நாடுகள் தாக்குதலுக்குப் அளித்த ஐ.நா. பாதுகாப்பு சபைத் தீர்மானத்தில் தாக்குதலுக்கு பச்சை விளக்கு காட்டின.

ஏகாதிபத்திய முகாமிற்குள்ளேயே தீவிர பிளவுகளும் உள்ளனஇது ஐ.நா. பாதுகாப்புச் சபையில் ரஷ்யா, சீனா, பிரேசில், இந்தியா ஆகியவற்றோடு ஜேர்மனி வாக்குப் போடுவதில் கலந்து கொள்ளவில்லை என்பதில் நிரூபணமாயிற்று.

பொதுவான இராணுவச் செயற்பாடு இருந்தாலும், அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகியவற்றிடையே கணிசமான அழுத்தங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் வட ஆபிரிக்கா முழுவதிலும் கடாபி இல்லாத லிபியாவிற்கு முக்கிய பங்கை உறுதிப்படுத்த முயல்கின்றன.

மார்ச் 15 செவ்வாய் பின்னிரவுக் கூட்டத்தில்தான் இராணுவ நடவடிக்கை பற்றி இறுதியாக ஒபாமா நிர்வாகம் முடிவெடுத்தது என்று பல செய்தி ஊடகத் தகவல்கள் கூறுகின்றன. வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் எழுதியது: “இந்த மாற்றத்திற்கு பல காரணிகள் இருந்தன என்று கூறப்படுகிறது. நிர்வாகமே அரபு உலகத்தில் நடக்கும் மாற்றங்கள் பற்றி விலகி இராமல் இருக்க வேண்டும், பிரிட்டனினால் தந்திரோபாய வகையில் ஏமாற்றப்படாமல் இருக்க வேண்டும், இன்னும் குறிப்பாக பிரான்ஸினால்…. என்ற கருத்து இருந்தது.”

லிபியாவிற்கு எதிரான போரின் பின்னணியில், “காட்டுமிராண்டித்தனத்திற்குஎதிராகநாரிகம்என்ற பொது முன்னணி, ஒபாமா நிர்வாகச் செய்தித் தொடர்பாளர் கூறுவதுபோல், இல்லை. ஆனால் போட்டியிடும் ஏகாதிபத்திய சக்திகள் உலகின் முக்கிய எண்ணெய் இருப்பின் மீது ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதற்கான போராட்டம்தான் உள்ளது. அதேபோல் வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு முழுவதும் வெடித்துவரும் வெகுஜன இயக்கங்களுக்கு எதிராக ஒரு முக்கிய மூலோபாய இடம் மற்றும் செயற்பாட்டுத் தளம் ஆகியவற்றின் மீது கட்டுப்பாட்டைக் கொள்ளுவதற்கான போராட்டமும் தான் நடைபெறுகிறது.”