சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

escalates military onslaught against Libya
  லிபியாவிற்கு எதிரான இராணுவத் தாக்குதலை அமெரிக்கா விரிவாக்குகிறது

Patrick Martin 
23 March 2011


Use this version to print | Send feedback

லிபியாவைத் தாக்கும் அமெரிக்க, ஐரோப்பியப் படைகளின் நடவடிக்கைத் தளபதியான அட்மைரல் சாமுவேல் ஜே. லோக்லியர் செவ்வாய் பிற்பகல் முயம்மர் கடாபியின் ஆட்சிக்கு எதிரான போரை விரிவாக்குவதையொட்டியஅனைத்து விருப்புத் தேர்வுகளையும்பரிசீலித்து வருவதாகக் கூறினார்.

அமெரிக்காவும் பிரிட்டனும் மற்றும் இரு டஜன் தொமஹாக் க்ரூஸ் ஏவுணகணைகளை லிபியக் கடலோரப் பகுதி இலக்குகளுக்கு எதிராக ஏவின. தலைநகரமான திரிபோலிக்கு எதிராக சில ஏவிவிடப்பட்டன. பிரான்ஸ் அதன் Charles de Gaulle விமானத் தளத்தைக் கொண்ட போர்க் கப்பல் செவ்வாயன்று நடவடிக்கைகளில் சேரவிருப்பதாக அறிவித்துள்ளது. போர்ப் பகுதியில் இத்தகைய கப்பல் நிலைநிறுத்தப்படுதல் இது முதல் தடவையாகும். பெல்ஜிய, ஸ்பெயின் போர் விமானங்கள் லிபியா மீது வானில் ரோந்து வருகின்றன. அவை அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து விமானங்களுடன் இவ்வகையில் இணைகின்றன.

அனைத்து அமெரிக்கக் கடற்படைப் பிரிவுகளையும் ஐரோப்பா மற்றும் ஆபிரிக்காவில் இயக்கும் லோகிளியர் மார்ச் 18ம் திகதி ஜனாதிபதி ஒபாமா நிகழ்த்திய உரையை மேற்கோளிட்டுள்ளார். அதில்கடாபியின் படைகள் பெங்காசியை நோக்கி முன்னேறுவது நிற்க வேண்டும். அவை ஜவியா, அஜ்டபியா, மிசுரடா ஆகியவற்றில் இருந்து திரும்பப் பெறப்பட வேண்டும்என்று ஜனாதிபதி கூறியிருந்தார்.

அவர்கள் இன்னும் அதைச் செய்யவில்லை. அடிப்படையில் நாங்கள் அவரை பெங்காசியிலிருந்து வெளியே அனுப்பிவிட்டோம். மற்ற மூன்று இடங்களிலும் அவர்கள் இன்னும் எங்கள் ஜனாதிபதி கூறியதைக் கேட்கவில்லை. எனவே என்னுடைய பணி பற்றி ….. காணும்போது, எவ்விதத் தரமுடைய நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்துச் சிந்தித்துச் செயல்படுவேன்.”

மிசுரடாவில் கடாபியின் படைகள் உள்ளன என எங்கள் உளவுத்துறை கூறுகிறதுஎன்று லோக்ளியர் தொடர்ந்தார்.

அவர்கள் மிஸுரடாவில் குடிமக்களுக்கு எதிராகத் தாக்குதல்களை நடத்துகின்றனர், பாதுகாப்பு சபைத் தீர்மானத்தை மீறிய வகையில். வருங்கால நடவடிக்கைகள் பற்றி நான் பேசப்போவதில்லை. ஆனால் அவை பற்றி நன்கு தெரியும், நாங்கள் அனைத்து விருப்பத் தேர்வுகளையும் பரிசீலிக்கிறோம்.

கூட்டணியின் திறன்கள் பெருகுகையில், நாம் இன்னும் அதிக ஆதரவைக் கொடுக்க முடியும். இன்னும் கூடுதல் பணிகள் செய்ய முடியும், நீங்கள் கூறும் தரைப் படைகள் மூலம் [மேலும்] உரிய நேரத்தில் உணர்வுபூர்வ இலக்குகளைக் கொள்ள முடியும். போர்த் தளத்தை அது மாற்றுகையில் நாங்கள் உன்னிப்பாகக் கவனிக்கிறோம். .நா. பாதுகாப்பு சபைத் தீர்மானத்தைச் செயல்படுத்தாத கடாபி படைகளின் போக்கைக் கவனிக்கிறோம். இன்னும் கூடுதலான விளைவுகளைக் கொடுப்போம் ….. வரவிருக்கும் மணித்தியாலங்கள், நாட்கள் அப்படித்தான் இருக்கும் என நினைக்கிறேன்.”

இக்கருத்துக்கள் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் இன்னும் மற்ற சக்திகளின் குண்டுவீச்சு நடவடிக்கைகளின் குவிப்பு வான் பாதுகாப்பு முறைகளில் இருந்து கட்டுப்பாட்டு பொறுப்பு நிலையங்களுக்கு மாறி பின்னர் கடாபி ஆட்சிக்கு விசுவாசமாக இருக்கும் ஏராளமான தரைத் துருப்புக்களை அழிப்பதில் குவிப்புக் காட்டும் என்பதை வலுவாக வெளிப்படுத்துகின்றன.

உரிய நேர உணர்வுப்பூர்வ இலக்குஎன்பது பற்றிய குறிப்பு, குறிப்பிடத்தக்க வகையில் முக்கியமானது. ஏனெனில் இதற்கு தரையில் இருக்கும் படைகளுடன் நெருக்கமான ஒத்துழைப்பு தேவைப்படும். எதிர்ப்புத் துருப்புக்களை எதிர்கொள்ளவோ, அல்லது அமெரிக்க மற்றும் கூட்டணி விமானப் படைகள் உத்திக்காகப் பயன்படுத்தப்படவோ அல்லது அமெரிக்க, பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு சிறப்பு நடவடிக்கைகளோ அல்லது உளவுத்துறை முகவர்கள் நாட்டில் கண்காணிப்பிற்கு அனுப்பப்படுவதற்கு என்ற முறையிலோ.

செவ்வாயன்று நியூ யோர்க் டைம்ஸில் வந்த அறிக்கை ஒன்று இந்தத் தந்திரோபாய ஒத்துழைப்பு ஏற்கனவே செயல்பட்டுவருவதாகக் கூறுகிறது. “அமெரிக்க இராணுவத் தளபதிகள் நாள் முழுவதும் அவர்கள் லிபிய எதிர்ப்பாளர்களுடன் தொடர்பு கொண்டு வருவதாகப் பல முறை கூறினர். அதே நேரத்தில் எதிர்ப்பு இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் கலீட் எல் சயே எதிர்ப்பு அதிகாரிகள் கூட்டணியினருக்கு அவர்களின் வான் தாக்குதலுக்குத் தேவையான இணைந்த தகவல்களை அளித்து வருவதாகக் கூறியுள்ளனர். நாங்கள் அவர்களுக்குத் தேவையான இணைத் தகவல்களைக் கொடுக்கிறோம், எந்த இடங்களில் குண்டுவீசப்பட வேண்டும் எனக்கூறுகிறோம்என்று டைம்ஸிடம் சயே கூறினார்.

இத்தந்திர மாற்றம் லிபிய படையினர்கள் மற்றும் குடிமக்களிடையே இறப்பு எண்ணிக்கையை பெரும் முறையில் அதிகப்படுத்தும் என்ற பொருளைத் தரும். குடிமக்களோ அனைத்து நகரங்களிலும் கடாபி ஆட்சி மற்றும் எதிர்ப்புப் படைகள் இரண்டிற்கும் இடையே நடக்கும் போட்டிகளில் நெருக்கமாக கலந்து இணைக்கப்பட்டுள்ளனர்.

வான் தாக்குதலின் முதல் கட்டம் பெரிதும் முடிந்துவிட்டது என்று அமெரிக்க அட்மைரல் கூறினார். அதே நேரத்தில் லிபியாவில் விமானப் படை மற்றும் விமானத் தாக்குதல் எதிர்ப்பு முறைகள்பெரிதும் திறனற்றவை ஆகிவிட்டனஎன்று விளக்கினார். அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகியவை பறக்கக் கூடாத பகுதியை பெங்காசியிலிருந்து மேற்கே தலைநகர் வரை விரிவாக்கம் செய்ய உள்ளனர்.

லோக்ளியரின் மேலதிகாரி தளபதி கார்ட்டர் ஹாம், அமெரிக்காவின் ஆபிரிக்க கட்டுப்பாட்டின் தலைவர், லிபியாவிற்கு எதிரான மொத்த வான் தாக்குதல்கள் ஞாயிறு 60 என்பதிலிருந்து திங்களன்று 80 என உயர்ந்துவிட்டது. அவற்றுள்பாதிக்கும் மேலானவை அமெரிக்காவினுடையதல்லாத விமானங்களாக, குறிப்பாக பிரிட்டிஷ், பிரெஞ்சு விமானங்கள் ஆகும் என்றார்.

ஒரு அமெரிக்க F-15 போர் விமானம் திங்களன்று இரவு தரையில் விழுந்தது, சுட்டுவீழ்த்தப்படவில்லை, ஆனால் இயந்திரக் கோளாறால் கீழே விழுந்தது என்று லோக்ளியர் கூறினார். இரு விமானிகளும் மீட்கப்பட்டனர், ஒருவர் அமெரிக்கப் படைகளாலும், மற்றொருவர் லிபிய எதிர்ப்பாளர்களாலும். இது அமெரிக்க, ஐரோப்பியச் செயற்பாடுகள் கடாபி எதிர்ப்புச் சக்திகளுடன் நெருக்கமாக ஒத்துழைக்கின்றன என்பதற்கு அடையாளம் ஆகும்.

அதே நேரத்தில் ஒரு மரைன் ஓஸ்ப்ரே விமானம், மீட்பு முயற்சியில் ஈடுபட்டிருந்தது, கீழே விழுந்த விமானிகளை அணுகிய கிராமத்து மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 5 பேரைக் கொன்றது என்று வந்த பிரிட்டிஷ் செய்தி ஊடகத் தகவல் பற்றிக் கருத்துக் கூற அவர் மறுத்துவிட்டார்.

கடாபியின் கரங்களில் இருந்து மரணம் வரக்கூடாது என்று காப்பாற்றுவதற்கு வந்ததாகக் கூறப்படும் ஏகாதிபத்தியச் சக்திகள் லிபியக் குடிமக்களைப் படுகொலை செய்துள்ளது பற்றிய முதல் தகவல் இது ஆகும். இது ஒன்றும் கடைசியாகவும் இராது.

செவ்வாயன்று நாட்டின் மேற்குப் பகுதியில் இன்னமும் எதிர்ப்பின் வசம் இருக்கும் ஒரே முக்கிய நகரமான, லிபியாவின் மூன்றாவது பெரிய நகரமான மிசுரடாவில், திரிபோலிக்குக் கிழக்கே 200 கி.மீ. தொலைவில் இருப்பது (125 மைல்கள்), கடுமையான மோதல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. லிபிய இராணுவ டாங்குகள் நகரத்திற்குள் கடந்த வாரம் வந்துவிட்டன. ஆனால் இருதரப்புமே முழுமையாக நகரத்தின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டதாகத் தெரியவில்லை. குறைந்தபட்சம் 40 பேராவது திங்களன்று நகரத்தில் கொல்லப்பட்டனர் என்று செய்தி ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.

கடாபி ஆதரவுச் சக்திகள் எதிர்ப்பிடமிருந்த, துனிசிய எல்லைக்கு அருகேயுள்ள சிறு நகரமான ஜின்டானைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

எதிர்ப்புச் சக்திகள் பெரும்பாலும் தற்காப்பில் உள்ளன. அஜ்டபியாவை மீட்கும் முயற்சியை அவை தொடங்கவில்லை. அந்நகரம் கடாபியின் துருப்புக்களால் கடந்த வாரத் தாக்குதலில் கைப்பற்றப்பட்டது. திங்களன்று வந்த செய்தி ஊடகத் தகவல்கள் எதிர்ப்பு போராளிகள் நகரத்திற்குள் திசை தெரியாமல் ஓடி வருகின்றனர், அதிக எதிர்ப்பு இருக்காது என்ற கருத்துடன், ஆனால் பெரும் டாங்குகளையும் ஏவுகணைத் தாக்குதல்களையும் எதிர்கொண்டனர் என்று கூறுகின்றன. பெரும் ஒழுங்கீனத்துடன் எதிர்ப்பாளர்கள் பின்வாங்கி நகரத்திற்கு வெளியே முகாமிட்டுள்ளனர். மூன்று இரவுகளாக வான் தாக்குதல்கள் நகரத்தின் மீது நடத்தப்பட்டது அரசாங்கச் சார்புடைய சக்திகளை அகற்றுவதில் தோல்வி அடைந்துள்ளன.

லிபியாவில் ஏகாதிபத்தியத் தலையீட்டின் அடுத்த கட்ட நடவடிக்கையாக இருக்கலாம் என்ற குறிப்பைக் காட்டும் வகையில் NBC News, எதிர்ப்புத் தலைநகரான பெங்காசியிலிருந்து குறிப்பிடத்தக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் நிருபர் ரிச்சர்ட் ஏங்கல் எதிர்ப்பாளர்கள் வெளி இராணுவ ஆலோசகர்களை அமைப்பில் இருக்கும் குறைகளை அகற்ற உதவுமாறும், அதிலுள்ள கட்டுப்பாடு, செயற்பாட்டு முறைகளையும் சீராக்க வேண்டும் என்றும், இவை கடந்த வாரம் கிட்டத்தட்ட சரியும் நிலைக்கு வந்துவிட்டன எனக்கூறியதாகத் தெரிவித்துள்ளார்.

மேற்கத்தைய கூலிப்படைகளை பெங்காசிக்கு தருவிக்கும் பொதுப்பணி அறிவிப்பு என்று கூறும் வகையில், எதிர்ப்பாளர்கள், லிபியாவின் கணிசமான எண்ணெய் இருப்புக்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டவர்கள், தனியார் இராணுவ வல்லுனர்களின் பணிகளுக்குவணிக விகிதம் போல் ஊதியங்களைதரத்தயாராக இருப்பதாகக் கூறியுள்ளனர் என்று ஏங்கல் தெரிவித்துள்ளார்.

ஏகாதிபத்திய தலையீட்டின் நோக்கங்கள்கடாபி ஆட்சியை அகற்றுவது, லிபியாவின் எண்ணெய் வளங்களைக் கைப்பற்றுவது எனஒரு நேரடி தரைப்படை இராணுவ நிலைப்பாட்டைக் கொள்ளாமல் சாதிக்கப்பட முடியாது. அமெரிக்க உளவுத்துறை நடைமுறையுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ள Stratfor ன் அரசியல் இடர் ஆலோசனையாளர் ஜோர்ஜ் ப்ரீட்மன் குறிப்பிட்டத்தக்க அப்பட்டமான பகுப்பாய்வில் எழுதியது: “நீண்ட கால இலக்கு, கூறப்படாதது, ஆனால் நன்கு அறியப்பட்டது, ஆட்சி மாற்றம் ஆகும்.”

ஆரம்ப நாட்கள் சிறப்பாகச் செல்லும், ஆனால் போர் வெற்றியா இல்லையா என்பது பற்றி குறிப்பிடமுடியாது. அச்சோதனை மனித இடர்களை நிறுத்த வடிவமைப்பு கொண்ட போர் மனித இடரைச் சுமத்தத் தொடங்கும்போதுதான் வரும்.”

வாஷிங்டன், லண்டன் மற்றும் பாரிஸ் ஆகியவை தங்கள் பிற்போக்குத்தன நோக்கங்களுக்காக எத்தனை ஆயிரம் குடிமக்களையும் கொல்லத் தயார் என்று முடிவெடுத்துள்ளதில் சந்தேகம் ஏதும் இல்லை.

லிபியா மீதான வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களின் அளவு ஒபாமா நிர்வாகம் மற்றும் அதன் நட்பு நாடுகளின் மந்திரமானகுடிமக்களுக்குப் பாதுகாப்பு அளித்தல்என்ற கூற்றைப் பொய் ஆக்குகிறது. செய்தித் தகவல்கள் திரிபோலி துறைமுகத்திலுள்ள கிடங்குகள் மீதான தாக்குதலையும் நகரத்தின் கிழக்கே ஒரு கடற்படை நிலையம் தாக்கப்பட்டது பற்றியும் மேற்கோளிட்டுள்ளன. இங்கு ராய்ட்டர்ஸ் நேரடிச் சாட்சி ஒருவர்பெரும் வெடிப்புபற்றி கொடுத்த தகவல்களை மேற்கோளிட்டுள்ளது.

அல் ஜசீரா நிருபர் கூறுகிறார்: “துறைமுகத்தின் ஒரு பகுதி தீப்பிடித்து, இரு பெரும் நெருப்புக்கள் கணிசமாகத் தீப்பிடித்து எரிவதைப் பார்க்க முடிந்தது. நாங்கள் தீயணைக்கும் படையினர் கடலோரச் சாலையில் விரைந்து சென்றதைக் கண்டோம். இன்று மாலை கடாபி இராணுவத்தின் கடலோர இராணுவச் சொத்துக்கள் இலக்கு வைக்கப்பட்டன போலும்….”

லிபிய கடற்படை இலக்கு வைக்கப்பட்டது குடிமக்களைக் காப்பாற்றுவதுடன் எத்தொடர்பையும் கொண்டிருக்கவில்லை மாறாக அது அமெரிக்க ஆதரவுடைய எதிர்ப்பு சக்திகளின் நலியும் இராணுவ நிலைப்பாடுகளுக்கு ஊக்கம் கொடுத்து புத்துயிர் அளிக்கும் முயற்சியாகும். கடாபியின் சிறிய கடற்படை கடந்த வாரம் கடலோரப் பகுதித் தாக்குதலில் முக்கிய தந்திரோபாயப் பங்கைக் கொண்டிருந்தது. அவருடைய படைகள் எதிர்ப்பாளர்கள் வலுவான நிலைகளைக் கடந்து சென்று பின் அவற்றைப் பின் புறமிருந்து தாக்க உதவின.

லிபியாவில் வன்முறை அதிகரிக்கையில், ஏகாதிபத்தியச் சக்திகள் பெருகிய முறையில் தங்களுக்குள் கடாபி எதிர்ப்பு முயற்சிகளைக் கட்டுப்படுத்துதல், இயக்குதல் பற்றி கடுமையான போட்டியைக் கொண்டுள்ளன. செவ்வாயன்று அமெரிக்காவும் பிரான்ஸும் போரின் கட்டுப்பாட்டு அதிகாரத் தொகுப்பு பற்றி உடன்பாடு கொண்டதாகத் தகவல்கள் வந்துள்ளன.

பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி நேட்டோ ஒன்றும் செயல்முறைக்கு பொது இயக்கம் கொடுக்கும் அமைப்பாக இருக்க வேண்டிய தேவையில்லை என்று வலியுறுத்தியதற்கு ஆதரவு கிடைத்துள்ளது போல் தோன்றுகிறது. மாறாக ஒரு தற்காலிகக் குழு நிறுவப்பட்டு இராணுவப் படைகள் அளிக்கும் நாடுகள் மட்டுமே அதில் இடம் பெறும்.

இதில் பல நேட்டோவில் இல்லாத அரபு நாடுகள், கட்டார், ஐக்கிய அரபு எமிரேட்டுக்கள் போன்றவையும் அவை உறுதியளித்திருந்த விமானங்களை அனுப்பினால் சேர்க்கப்படும். இதிலிருந்து ஜேர்மனி அகற்றப்படும். ஏனெனில் அது கடந்த வியாழனன்று ஐ.நா. பாதுகாப்பு சபைத் தீர்மானம் லிபியா மீது தாக்குதலுக்கு இசைவு கொடுத்ததில் வாக்களிக்காமல் இருந்துவிட்டது.

ஜேர்மனி, துருக்கி இரண்டுமே, பகிரங்கமாக போர் நடவடிக்கை பற்றிக்குறை கூறின. நேட்டோ கட்டுப்பாட்டுப் பிரிவில் இவை திறமையான நிலையில் உள்ளன. நேட்டோ முறைப்படி அமெரிக்கத் தலைமையிலான கூட்டணியில் உறுப்பினர்களுக்கு இடையே ஒருமித்த கருத்து தேவையாகும்.

பிரெஞ்சு வெளியுறவு மந்திரி அலன் யூப்பே நேட்டோ செயற்பாடாகப் போரை மாற்றுவதற்கு எதிராகக் கடுமையாக வாதிட்டார். இது அரபு லீக் மற்றும் பல ஆபிரிக்க நாடுகளின் ஆதரவை இழக்கும் அபாயத்தை ஏற்படுத்திவிடும் என்ற காரணத்தையும் கூறினார்.

இந்தப் பிரச்சினை ஜனாதிபதி ஒபாமா இலத்தீன் அமெரிக்கப் பயணத்தையும் விட மேலாதிக்கம் கொண்டு அதைக் கூட நிழலின் கீழ் கொண்டது. அப்பயணப்போக்கில் அவர் கட்டாரின் எமிருக்குத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவருடைய ஆதரவை நாடும் கட்டாயம் ஏற்பட்டது. அதே போல் துருக்கியப் பிரதம மந்திரி ரெசெப் டயிப் எர்டோகன் ஆதரவையும் நாட நேர்ந்தது.

லிபியா மீதான தாக்குதல்களின் அளவு பற்றி ஆசிய, ஆபிரிக்க நாடுகளிலிருந்து பெருகிய முறையில் குறைகூறல்கள் வந்துள்ளன. இந்தியாவின் வெளியுறவு மந்திரி எஸ்.எம். கிருஷ்ணா, பாராளுமன்றத்தில் ஒரு உரையில் லிபியாவில்வெளிசக்திகள் ஏதும்தலையிடக்கூடாது என்றார். “எவரும், ஓரிரு நாடுகள் கூட குறிப்பிட்ட பிராந்தியத்தில் அத்தகைய முடிவை எடுக்கக் கூடாதுஎன்றார் அவர்.

.நா. பாதுகாப்பு சபையானது லிபியா அமெரிக்கத் தலைமையிலான கூட்டணியின் இராணுவ ஆக்கிரோஷ நடவடிக்கை பற்றி அவசரக் கூட்டம் தேவை என்னும் வேண்டுகோளை நிராகரித்தது. வியாழனன்று இக்குழுவானது தலைமைச் செயலர் பான் கி-மூனிடம் இருந்து போர் பற்றிய தகவலைப் பெறுவதற்குக் கூட உள்ளது.