சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : லிபியா

Rome meeting to consider further military action against Libya

லிபியாவிற்கு எதிரான இராணுவ நடவடிக்கை குறித்து ரோம் கூட்டம் விவாதிக்கவுள்ளது

By Susan Garthe
4 May 2011
Use this version to print | Send feedback

அமெரிக்காவின் அரச செயலர் ஹிலாரி கிளின்டன் புதன்கிழமையன்று லிபியத் தொடர்புக் குழுவின் இரு நாள் கூட்டத்திற்காக ரோமிற்கு வருகிறார்.

நேட்டோத் தலைமையிலான இராணுவ நடவடிக்கையின் அடுத்த கட்டத்தை கிளின்டன் நிர்ணயிக்க முற்படுவார். மார்ச் 19 அன்று ஆரம்பித்த குண்டுத் தாக்குதல் பெருகிய முறையில் காட்டுமிராண்டித்தனமாகிவிட்டது. ஆனால் லிபியத் தலைவர் முயம்மர் கடாபியை அகற்றுவதில் தோல்வியைத்தான் கண்டுள்ளது. இப்பொழுது குருதி படர்ந்துள்ள, பெருகிய முறையில் முரண்டுபிடிக்கும் கூட்டணியிலுள்ள பிரச்சினைகளைத் தீர்த்து இன்னும் ஆக்கிரோஷமான நடவடிக்கைகளுக்கு அவற்றைத் தூண்டும் பணியைத் தொடர்வது அமெரிக்க செயலரின் பணியாக இருக்கும்.

கடாபியை படுகொலை செய்யும் முயற்சி தோல்வி அடைந்து, கொல்லப்பட்டுவிட்ட அவருடைய கடைசி மகன் சைப் அல்-அரப் மற்றும் மூன்று கடாபியின் பேரக்குழந்தைகள் ஆகியோர் நல்லடக்கம் செய்யப்பட்ட அதே வாரத்தில் ரோம் கூட்டம் நடைபெறுகிறது. இரு துல்லியமாக இயக்கப்பட்ட குண்டுகள் திரிப்போலியில் பாப் அல்-அஜிசியா வளாகத்தைத் தாக்கி அதன் ஒரு பகுதியை தரைமட்டமாக்கியது. கடாபி அங்கு இருப்பதாகக் கூறப்பட்டது, ஆனால் தாக்குதலிலிருந்து தப்பி விட்டார்.

மூன்று வயதிற்கு உட்பட்ட அனைத்துக் குழந்தைகளும் பிரெஞ்சு அறுவை மருத்துவர் Gerrard Le Clouereca ஆல் ஆய்விற்குட்படுத்தப்பட்டது என்று பிரான்ஸ் 24 தொலைக்காட்சி தகவல் கொடுத்துள்ளது. கடாபி ஆட்சிக்காக அவர் பணி புரியவில்லை, ஆனால் எல்லாக் குழந்தைகளும் குண்டுவெடிப்புக் காயத்தில் இறந்துவிட்டன என்று உறுதிபடுத்தினார். தனித்தனியே அவரால் குழந்தைகளின் அடையாளத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏனெனில் அவர்களுடைய முகங்கள் மிக மோசமாகச் சிதைந்து போய்விட்டன.

அன்று அதற்கு முன்பு அரசத் தொலைக்காட்சி நிலையம் கடாபி ஒரு நேரடி உரையை நிகழ்த்தியபோது இலக்கு வைக்கப்பட்டது. அவருடைய தோற்றக்காட்சி ஒவ்வொரு தாக்குதலின்போதும் பெரிதும் அசைந்து காணப்பட்டது. புகைப்படக் கருவிகள் படம் பிடித்துக் கொண்டிருக்கையிலேயே ஒலி பெருக்கியை அகற்றிவிட்டு நிலையத்தை விட்டு கடாபி நீங்கினார்.

ஒசாமா பின் லேடனை அமெரிக்கர்கள் படுகொலை செய்ததை லிபிய எதிர்ப்புச் செய்தித் தொடர்பாளர் வரவேற்றார். அதாவது நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம், அடுத்த நடவடிக்கைக்குக் காத்திருக்கிறோம்என்று கேணல் அஹ்மத் பானி கூறினார். “அமெரிக்கர்கள் கடாபிக்கும் அதையே செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.”

குற்றமிழைக்க அவர்கள் கொண்டுள்ள ஆர்வம் கடாபிக்குப் பதிலாகப் பதவிக்கு வரவிருக்கும்எழுச்சியாளர்களின்தன்மை பற்றி நிறையக் கூறுகிறது. இவர்கள் பதவிக்கு வந்தால், சர்வதேச மரபுகளை மீறிய நடவடிக்கையினால் நன்மை பெறுபவர்கள், மேலைத்தேச சக்திகளின் கைப்பாவைகள் என்ற விதத்தில்தான் இருக்கும்.

 

படுகொலைக்கான திருப்பம் செய்தி ஊடகத்தின் சில பிரிவுகளாலும் பாராட்டப்படுகிறது. கடாபியைக் கொல்லும் முயற்சி தோற்கடிக்கப்பட்டதை அடுத்து ரூபர்ட் மர்டோக்கிற்கு சொந்தமான News Corporation உடைய லண்டனிலுள்ள டைம்ஸ் ஆனது, “கட்டுப்பாட்டு மற்றும் கட்டளை நிலையங்கள்குண்டுவீச்சிற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று அழைப்புவிடுத்துள்ளனஇது இன்னும் படுகொலை முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதற்கு மறைமுகமான குறிப்பு ஆகும். பாப் அல்-அஜிசியா வளாகம், இது இல்லப் பகுதிகளின் ஒரு பகுதியானாலும், “கட்டுப்பாட்டு மற்றும் கட்டளை நிலையமாகத்தான்கருதப்படுகிறது.

 

இது ஒரு போர். நீடித்துக் கொண்டே போக அனுமதிக்கக் கூடாதுஎன்று டைம்ஸ்  எழுதியுள்ளது.

கட்டுப்பாட்டு மற்றும் கட்டளை நிலையங்களுக்குஎதிரான வான் தாக்குதல்களானது லிபியாவில்முற்றிலும் முறையானவையேஎன்று நேற்று வெளியுறவு மந்திரி வில்லியம் ஹேக் அறிவித்தார். அதிகாரத்திலிருந்து கீழிறங்கினால்தான் மோதலுக்கு அரசியல் தீர்விற்கு கடாபிவழிவகுக்க முடியும்என்று பாராளுமன்றத்தில் ஹேக் கூறினார்.

கடாபியை இலக்கு வைப்பது என்பது மிக அதிகம் புலப்படும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஒன்றாகும். வார இறுதியில், Libyan Down’s Syndrome Society என்பது நேட்டோ தாக்குதல் ஒன்றில் குண்டுவீச்சிற்கு உட்பட்டது. பெற்றோர்கள் நிதியளித்து நடத்தும் பள்ளி ஒன்று இங்கு உள்ளது. படிக்கும் குழந்தைகள் Down Syndrome னால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். குழந்தைகள் ஏதும் வளாகத்தில் இல்லை. ஆனால் 6 வயது வரையிலான குழந்தைகள் முக்கிய கல்வியில் இணைந்து கொள்ள தங்களுக்கு உதவுவதற்காக இப்பள்ளியில் சேர்கின்றனர். தன்னுடைய சொந்த மகள் டௌன் இந்த நிலையில் பிறந்ததையடுத்து, 17 ஆண்டுகளுக்கு முன்பு இப்பள்ளியை இஸ்மெயில் செட்டிக் நிறுவினார்.

நான் மிகவும் வேதனைப்படுகிறேன்என்று அவர் கட்டிட இடிபாடுகளைப் பார்த்தவுடன் கூறினார். “இக்குழந்தைகளுக்கு எப்படி நாம் உதவ முடியும் என்று நினைத்துக் கொண்டு உள்ளேன்என்றார் அவர்.

நேட்டோவின் குண்டுத் தாக்குதல் நடவடிக்கை இப்பொழுது வெளிப்படையாக ஆட்சி மாற்றத்தை நோக்கமாகக் கொண்டுள்ளது. குடிமக்களைப் பாதுகாக்க முற்படல் என்னும் கூற்றுக்கள் அனைத்தும் அபத்தமாக்கப்பட்டுவிட்டன.

குரல் ஒலித்தொடர்பாடல் முறை இல்லாத காரணத்தினால் அம்புலன்ஸ் பணிகள் அனைத்தும் தீவிரப் பாதிப்பிற்கு உட்பட்டுள்ளன. விவசாயிகள் வயல்களைக் கைவிடும் நிலையில் உள்ளனர். இதையொட்டி உள்ளூர்ச் சந்தைகளில் தீவிர உணவுத் தட்டுப்பாடு உள்ளது. திரிப்போலியில் அல்-ஹீராப் பகுதி பல முறை அலையென வான் தாக்குதல்களால் இலக்கு கொள்ளப்பட்டது. .நா. வின் உலக உணவுத் திட்டம் இதையொட்டி உணவு நெருக்கடி ஏற்பட்டுவருவதாக எச்சரித்துள்ளது.

நேட்டோவானது அமெரிக்காவிடமிருந்து வழிகாட்டுதலைப் பெற்று லிபியா மீது இதுவரை 2,000க்கும் மேற்பட்ட குண்டுவீச்சுக்கள் நடத்தியுள்ளன. ஆனால் எதிர்ப்பாளர்களுடன் ஏராளமான மேலைத்தேச இராணுவ ஆலோசகர்கள் நிறைந்திருந்தும்கூட திறமையான இராணுவ நடவடிக்கையை எடுக்க இயலாத நிலையில்தான் உள்ளது.

சமீபத்தில் பெங்காசியைத் தளமாகக் கொண்ட பெயரிட விரும்பாத மேற்கத்தைய நோக்கர் ஒருவர் அதனிடம் அப்பட்டமாக எழுச்சியாளர்கள் வெற்றி அடைவதற்கான சாத்திக் கூறுகள் இல்லை என்று கூறியதை வாஷிங்டன் போஸ்ட் மேற்கோளிட்டுள்ளது. அவர்களுக்குப் பயிற்சி கொடுக்கப் போதுமான அவகாசம் இல்லை என்றார் அவர். மற்றொரு விருப்புரிமை நேட்டோ வலிமை மற்றும் பொருளாதாரத் தடைகள் ஆகும். இவை கடாபியின் உள்வட்டத்தில் ஒரு பிளவை ஏற்படுத்தக்கூடும். “இதிலிருந்து வரவேண்டிய முடிவுரை: அவர்கள் தங்கள் இராணுவத்தைக் கொண்டு இப்போரில் வெற்றி அடையப்போவது இல்லை.”

கடாபியைத் தனிமைப்படுத்தும் முயற்சி, அவருடைய ஆட்சியில் பிளவை ஏற்படுத்துதல் என்பதும் இராஜதந்திர முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. துருக்கி திரிப்போலியிலுள்ள அதனது தூதரகத்தை மூடிவிட்டது. இது மேலைத்தேசச் சக்திகள் எடுத்த இதேபோன்ற நடவடிக்கைகளுக்கு ஒப்பாகும். கடாபியின் மகன் மற்றும் பேரர்கள் கொலையையடுத்து வெடித்தெழுந்த எதிர்ப்புக்களையொட்டி இது நிகழ்ந்துள்ளது.

நேற்று, துருக்கியப் பிரதம மந்திரி Recep Tayyip Erdogan செய்தியாளர்களிடம் ஒரு தொலைக்காட்சி செய்தியாளர் கூட்டத்தில் கடாபி லிபியாவை விட்டு செல்லுவார் என்று தான் நம்புவதாகவும், “உடனடியாக அவருடைய நலன், நாட்டின் வருங்காலம் இவற்றைக் கருதி அதிகாரத்தை விட்டு விலகுவார், இன்னும் தேவையற்ற குருதிகொட்டல்கள், கண்ணீர்கள், அழிப்புக்கள் இவற்றைத் தவிர்ப்பதற்காக….அனைவரும் ஏற்கும் ஒருவர் லிபியாவில் ஆட்சி நடத்தி நாட்டிற்கு அமைதி, உறுதிப்பாடு ஆகியவற்றை மீட்க வேண்டும்என்றும் கூறினார்.

நெருக்கடியின் ஆரம்பத்திலிருந்து பிரிட்டன் அதனுடைய கடாபியுடைய ஆட்சியாளர்களுடன் கொண்டுள்ள தொடர்பாளர்களைப் பயன்படுத்தி லிபியாவில் ஆட்சி மாற்றத்திற்காகப் பயன்படுத்த முற்பட்டுள்ளது. தொடர்புக் குழுக் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் இத்தாலியானது கடாபி ஆட்சியுடன் இன்னும் கூடுதலான தொடர்புகளைக் கொண்டது ஆகும்.

பிரதம மந்திரி சில்வியோ பெர்லுஸ்கோனி தன்னுடைய சொந்த அரசாங்கத்திடமிருந்து இத்தாலிய ஜெட் விமானங்கள் லிபியக் குண்டுத் தாக்குதலில் பங்கு பெற அனுமதித்ததிலிருந்து ஆழ்ந்த அழுத்தங்களைப் பெற்று வருகிறார். மிகத்தீவிர வலது வெளிநாட்டவர் வெறி மிகுந்த Northern League, அரசாங்கத்தை வீழ்த்திவிடுவதாக அச்சுறுத்தியுள்ளது. குண்டுவீச்சுக்கள் லிபியாவிலிருந்து இத்தாலிக்கு ஏராளமாக அகதிகள் ஓடிவரக்கூடும் என்ற காரணத்தை அது காட்டி, அதையொட்டி அதை எதிர்க்கிறது. ஆரம்பத்தில் இத்தாலியானது நேட்டோ தன் விமானத் தளங்களை நேட்டோ பறக்கக்கூடாத பகுதியைக் கண்காணிக்கப் பயன்படுத்த அனுமதித்ததுடன், ஆயுதங்கள் எதையும் பிரயோகிக்க மறுத்துவிட்டது. அமெரிக்க கோரிக்கைகளை பெர்லுஸ்கோனி ஏற்று இத்தாலிய ஜெட்டுக்களும் தரை இலக்குகள் மீது குண்டுகள் செலுத்தலாம் என்று உத்தரவிட்டார்.

ஜனாபதி பாரக் ஒபாமா பெர்லுஸ்கோனிக்குத் தொலைபேசி மூலம் தன்னுடைய பாராட்டுக்களை வெளிப்படுத்தினார். இருவரும் இத்தாலி பங்கு பெறுவதுகுடிமக்கள் பாதுகாப்புப் பணியை வலுப்படுத்த முக்கியமாகும்என்று அபத்தமாகக் கூறியுள்ளனர்.

ஹிலாரி கிளின்டன் இருதரப்புக் கூட்டங்கள் பெர்லுஸ்கோனி, ஜனாதிபதி ஜியோர்ஜியோ நாபோலிடனோ மற்றும் வெளியுறவு மந்திரி பிராங்கோ பிரட்டனி ஆகியோருடன் ரோமில் இருக்கையில் நடத்த உள்ளார். அதிக வலுவற்ற இத்தாலிய அரசாங்கத்தை வலுப்படுத்துவதற்கு வாஷிங்டன் தீவிர உறுதி பூண்டுள்ளது. இதையொட்டி அதன் லிபிய ஆட்சியுடனான தொடர்புகளை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள அது விரும்புகிறது.

ரோம் கூட்ட விவாதங்களில்தேசத்தைக் கட்டமைத்தல்என்று விவரிக்கப்படுவதும் அடங்கியுள்ளது. இது எதிர்ப்பு மாற்றுத் தேசிய சபை மற்றும் பழைய ஆட்சியிலுள்ள கூறுபாடுகளை இணைத்து ஒரு புதிய ஆட்சியைத் தோற்றுவித்தல் என்பதை மறைமுகமாகக் கூறும் திட்டமாகும்.

எப்படிப்பார்த்தாலும், TNC எனப்படும் மாற்றுத் தேசிய சபை லிபிய சமூகத்தின் ஒரு பகுதியைத்தான் பிரதிநிதித்துவப்படுத்துகிறதுஎன்று ரோமைத் தளமாகக் கொண்ட International Affairs Institute ஐ சேர்ந்த அட்லான்டிக் கடந்த உறவுகள் பற்றிய வல்லுனரான Riccardo Alcaro செய்தியாளர்களிடம் கூறினார், “இன்று கடாபிக்கு நெருக்கமாக உள்ளவர்கள் நாளைய லிபியாவில் அவர்களுக்கும் இடம் உண்டு என்பதை உணர வேண்டும்.”

கடாபி வீழ்ந்துவிடுவார் என்பது விதிஎன நம்பும் அல்கரோ இந்த ஆட்சி மாற்றம் குண்டுத்தாக்குதல் நடவடிக்கை மூலம் மட்டுமே அடையப்பட முடியுமா என்றும் சந்தேகப்படுகிறார். “நட்பு நாடுகள் எளிதில் கடாபியை அகற்றலாம், .நா. தீர்மான இலக்கம் 1973 அதற்கு உதவும் என்று நினைத்தனர், ஆனால் அவை தவறான கணிப்பாகிவிட்டன.”

மிலானைத் தளமாகக் கொண்ட ISPI சர்வதேச அரசியல் கூடத்தில் ஆராய்ச்சியாளராகவுள்ள ஆர்ட்டுரோ வர்வெல்லி கொடுக்கும் மாற்றுக் காட்சியில் லிபியாஇறுதியில் இரு பகுதிகளாகப் பிரிந்துவிடும்என்று கூறப்படுகிறது.

நட்பு நாடுகள் கரடி சுடப்படு முன்னரே அதன் தோலை உரித்தனர்இத்தாலிய அரசாங்கம் தாமதித்துத் தலையிட்டது. இதையொட்டி பிரான்ஸ் முக்கிய இடத்தை அடைந்தது. லிபிய மோதலுக்கான மேலாண்மையின் தலைமையை அடைவதில் ஒரு வாய்ப்பை நாம் இழந்துவிட்டோம்என்றார் அவர்.

வல்லுனர்களுக்கு இடையேயுள்ள கருத்து வேறுபாடு உலகச் சக்திகளுக்கு இடையேயுள்ள மோதல்களைத்தான் பிரதிபலிக்கிறது.

லண்டனிலுள்ள Chatham இல்லத்தின் Royal United Services Institute ஐச் சேர்ந்த சசாங் ஜோஷி  கடாபியின் மகனின் மரணம்ஒரு பெரும் துயரமான மூலோபாயத் தவறு ஆகும்இராணுவ அளவில் அதிக முக்கியத்துவம் இதற்கு இல்லை, ஆனால் ராஜதந்திர முறையில் பேரழிவைத் தரும்என்றார்.

தாக்குதல் கேணல் கடாபியையே கொன்றிருந்தால், அது குறைந்தபட்சம் ஒரு இராணுவ வெற்றி என்று ஆகியிருக்காதா?....ஈராக் போரில் முன்கருத்தாக கொள்ளப்பட்ட மிகப் பெரிய தவறுகளில் ஒன்று சதாம் ஹுசைன் அகன்றவுடன் அரச கருவி புதிய உரிமையாளர்களுக்கு மாற்றப்படலாம் என்று நினைக்கப்பட்டதுதான்என்று அவர் தொடர்ந்து எழுதினார்.

நட்பு நாடுகள் பயன்படுத்தும் உத்திகள்போருக்கு இராஜதந்திர எதிர்ப்பை வலுப்படுத்தும், ரஷ்யா மற்றும் சீனா இன்னும் பிற நாடுகளுடனும் இது இருக்கும், இன்னும் விளைவு கொடுக்கக்கூடிய வகையில், இது நட்பு கவலை கொள்ளும் உறுப்பு நாடுகளான ஜேர்மனி, துருக்கி போன்றவற்றில் மேலும் சீற்றத்தை ஏற்படுத்துவதோடு, அரபு மற்றும் ஆபிரிக்க மக்கள் கருத்துக்களுக்கு எரியூட்டும்.”

ரோமில் மற்றும் ஒரு விவாதத்திற்குட்படும் ஆரம்ப முயற்சி பெங்காசியிலுள்ள எதிர்ப்பாளர்களுக்கு ஆயுதங்களையும் நிதியையும் அளிப்பது பற்றி இருக்கும். தற்போதைய சட்டபூர்வ இடர்கள், .நா. தீர்மான இலக்கம் 1973ன்படி, அத்தகைய திட்டங்களுக்கு வகை செய்யவில்லை. ஆனால் இலக்கு வைக்கப்படும் கொலைகளைப் போல், இதுவும் நடைமுறைக் கொள்கையாகிவிடும்.