|
WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா :
கனடா
கனேடியத் தேர்தல்கள் ஆழ்ந்த வர்க்க மோதல்களுக்கு அரங்கு அமைக்கின்றன
By Keith Jones
4 May 2011
கனடாவில் மே
2ம் திகதி நடைபெற்ற
கூட்டாட்சித் தேர்தல் வர்க்க மோதலை விரைவில் ஆழப்படுத்தும் அதிர்ச்சிதரும் அரசியல்
சக்திகளின் மறுஒருங்கிணைப்பை தோற்றுவித்துள்ளது.
ஸ்டீபன்
ஹார்ப்பரின் கீழ்
2006ல் இருந்த
சிறுபான்மை அரசாங்கத்தை அமைத்துள்ள கன்சர்வேடிவ்கள் ஒரு பாராளுமன்ற பெரும்பான்மையை
சிறிதளவே பெற்றுள்ளனர்.
கியூபெக் மற்றும்
பிரிட்டிஷ் கொலம்பியாவில் அவர்கள் தொகுதிகளை இழந்துள்ளனர்.
ஆனால் இந்த
இழப்புக்களுக்கும் மேலாக ஓன்டாரியோவில் குறிப்பாக டோரோன்டோ புறநகர்த் தொகுதிகளில்
வெற்றி பெற்று ஈடு செய்து கொண்டனர்.
மொத்த மக்கள்
வாக்குகளில் அவர்களுடைய கூடுதல் இரு சதவிகிதப் புள்ளிகளுக்கும் குறைவு என்ற
முறையில்,
கன்சர்வேடிவ்கள் நிகர
வெற்றியாக 23
தொகுதிகளைப்
பெற்றனர்.
இது
308
பேர் அடங்கிய மக்கள்
மன்றத்தில் அவர்களுடைய பங்கை
54 சதவிகிதத்திற்கு
சற்று மேலாக உயர்த்தியுள்ளது.
ஆனால் இந்த
ஆதாயங்கள்,
தொழிற்சங்கத்தை
தளமாகக் கொண்ட புதிய ஜனநாயகக் கட்சி
(NDP)
கனடாவின் பாராளுமன்றத்தில்
உத்தியோகபூர்வ எதிர்க்கட்சி என்று உயர்த்தப்பட்டதில் மங்கிப் போகின்றன.
NDP கூடுதலாக
65 இடங்களைக்
கைப்பற்றி மொத்தம்
102 இடங்களைக்
கொண்டு மொத்த மக்களின் வாக்காளிப்பில் தன் பங்கை
12.4 சதவிகிதப்
புள்ளி என 30.6
சதவிகிதத்திற்கு
உயர்த்திக் கொண்டுள்ளது.
NDP முன்னதாக
43 இடங்களுக்கு மேல்,
மக்களின் மொத்த
வாக்குகளில் 20
சதவிகிதத்திற்கு
மேல் பெற்றதில்லை.
உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியான லிபரல்கள் அவமானகரமான தோல்வியை சந்தித்துள்ளனர்.
கட்சியின் தொடர்ந்த
நிலைப்பாடு தேசிய அரசியலில் இருக்குமா என்பது கூட ஒரு கேள்விக்குறியாகியுள்ளது.
லிபரல்கள் மொத்த
வாக்குகளில் 19
சதவிகிதம் தான்
பெற்றனர்.
இது
7 சதவிகிதப்
புள்ளிகள் கூடுதலாக அக்டோபர்
2008 தேர்தலில்
இருந்ததை விட உள்ளது.
அப்பொழுது லிபரல்கள்
1867க்கும் பின்
மிகவும் குறைவான மக்கள் வாக்குகளின் பங்கைத்தான் பெற்றனர்.
77 எம்.பி.க்கள்
என்பதிலிருந்து லிபரல்கள் இப்பொழுது
34 என்று
குறைந்துவிட்டனர்.
ஒரு
பிராந்தியவாத மற்றும் கியூபெக் சார்பு சுதந்திரக் கட்சியான
Bloc
Quebecois
இன்னும் அதிக
தேர்தல் சங்கடத்தை கொண்டது.
1991ல் நிறுவப்பட்ட
இக்கட்சி,
முன்பு
6
கூட்டாட்சித் தேர்தல்களில்
போட்டியிட்டும் கியூபெக்கின்
75 பாராளுமன்ற
இடங்களில் 38க்கு
மேல் வெற்றி பெற்றதில்லை.
கனடாவில் ஒரே
பிரெஞ்சு மொழி பேசும் மாநிலத்தின்
38 சதவிகிதத்திற்கு
குறைந்த மக்கள் வாக்குகளையும் பெற்றதில்லை.
திங்களன்று இது
47 இடங்களில்
இருந்து 4
இடங்கள் மட்டுமே வெற்றி
பெற்றது.
அதனுடைய கியூபெக்கின்
மக்கள் வாக்கு
23.4 சதவிகிதம்
என்று குறைந்துவிட்டது.
இதன் விளைவாக
BQ பாராளுமன்றத்தில்
உத்தியோகபூர்வக் கட்சி என்ற அந்தஸ்தைப் பெறாது.
கனேடிய
முதலாளித்துவத்தின் மிகச் சக்தி வாய்ந்த பிரிவுகள் கன்சர்வேடிவ்கள் ஒரு
பெரும்பான்மை அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்ற உந்துதலுக்கு வலுவாக ஆதரவு
கொடுக்கின்றன.
இதை அவர்கள்
கூட்டாட்சி வரவு-செலவுத்
திட்டத்தில் சமூக நலச் செலவுகளில் கடுமையான வெட்டுக்களை சுமத்துவதற்கு சிறந்த கருவி
எனக் கருதுகின்றனர்.
அதடைய
போட்டியாளர்களைப் போலவே கனேடிய பெருவணிகமும் பெருமந்த நிலைக்குப் பின் உலக
முதலாளித்துவத்தின் மிகப் பெரிய நெருக்கடி வெடித்துள்ளதை எதிர்கொள்ளும் வகையில்
கடந்த நூற்றாண்டு முழுவதும் சமூகப் போராட்டங்கள் மூலம் தொழிலாள வர்க்கம் அடைந்துள்ள
சமூக நலன்களில் எஞ்சியிருப்பவற்றை தகர்க்கும் முயற்சியைத் தொடக்கியுள்ளது.
பெரு
வணிகத்தின் இலக்குகளில் முக்கியமானது அனைவருக்கும் பொதுச் சுகாதார பாதுகாப்பு முறை,
அதாவது மருத்துவப்
பாதுகாப்பு ஆகும்.
இப்பொழுதுள்ள பொது
மருத்துவ சுகாதாரப் பாதுகாப்பு முறை நிதிவகையில்
“நீடிக்க முடியாது”
என்று கூறி,
பெரு வணிகமும் அதன்
சிந்தனைப் போக்குப் பிரதிநிதிகளும் மருத்துவப் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்படும்
நிதிக்கான பொறுப்பு அரசாங்கத்திடமிருந்து தனிநபர்கள் மற்றும் அவர்களுடைய
குடும்பங்களுக்கு மாற்றப்பட வேண்டும் என்று கோருகின்றனர்.
மேலும்
“திறமை”
என்னும் பெயரில்,
அவர்கள் தனியாருடைய,
இலாப நோக்குடைய
நிறுவனங்கள் இன்னும் கூடுதலான பங்கை மருத்துவ வசதிகள் அளிப்பதில் பெற வேண்டும்
என்று அழுத்தம் கொடுக்கின்றனர்.
ஆளும்
வர்க்கமும் கன்சர்வேடிவ் அரசாங்கம் இன்னும் நெருக்கமான மூலோபாய உறவுகளை அமெரிக்க
ஏகாதிபத்தியத்துடன் வட அமெரிக்கப் பாதுகாப்பு நெறிகள் பேச்சுக்கள் மூலம் நிறுவ
வேண்டும்,
இராணுவவாதம்
புதுப்பிக்கப்பட அழுத்தம் வேண்டும் என்று விரும்புகின்றது.
நான்கு கட்சிகளுமே
கனடாவின் பங்கு ஆப்கானிய,
லிபியப் போர்களில்
வேண்டும் என்று ஆதரவு கொடுக்கையில்,
கன்சர்வேடிவ்கள்தான்
புதிய ஆக்கிரோஷ கனேடிய தேசியவாதத்திற்கு முரசு கொட்டுகிறது.
ஹார்ப்பரின் கீழ்
இராணுவச் செலவுகள் ஆண்டிற்கு
23 பில்லியன்
டொலர்கள் அதிகமாகிவிட்டன.
உண்மை நிலையில்
(அதாவது
பணவீக்கத்துடன் சரிசெய்த பின்னர்)
இது இரண்டாவது உலகப்
போருக்குப் பின்னர் மிக உயர்ந்த நிலையில் உள்ளது.
ஆனால்
தேர்தல் முடிவுகள் உள்நாட்டில் வர்க்கப்போர் மற்றும் வெளியுலகில் ஏகாதிபத்தியப்
போர் என்பது வெகுஜன செல்வாக்கற்ற தன்மையில் உள்ளது என்பதைத்தான் அடிக்கோடிட்டுக்
காட்டியுள்ளது.
தற்பொழுது இந்த
வெகுஜன எதிர்ப்பு அவ்வப்பொழுதும் சிதைந்த வெளிப்பாட்டையும்தான் கொண்டுள்ளது.
இதற்குக் காரணம்
தொழிற்சங்க அதிகாரத்துவங்களும்
NDP யின் சமூக
ஜனநாயக அரசியல்வாதிகளும் முறையாக வர்க்கப் போராட்டத்தை நசுக்கியுள்ளதாகும்.
பெருநிறுவன
உயரடுக்கும் அதன் செய்தி ஊடகமும் ஹார்ப்பர் அரசாங்கத்தின் தாக்குதல்களை எதிர்ப்பவர்
மீது மிரட்டும் வகையில் கன்சர்வேடிவ்களின் பாராளுமன்ற பெரும்பான்மையை பயன்படுத்தும்.
உண்மையில்,
கன்சர்வேடிவ்கள்
39.6 சதவிகித மக்கள்
வாக்கைத்தான் பெற்றுள்ளனர்.
மேலும் இந்த
வாக்கையும் அவர்கள் பெற்றது அவர்கள் தயாரிப்பு நடத்தும் பெரும் வெட்டுக்களின்
விளைவுகள் மக்களிடமிருந்து மறைக்கப்பட்டுள்ளதாலாகும்.
லிபரல்களைவிட முதல்தடவையாக வாக்குப் பங்கை அதிகமாக அவர்கள் பெற்ற ஓன்டேரியோ உட்பட
நாட்டின் பல பகுதிகளிலும்
NDP கூடுதலாக
வாக்குகளையும் இடங்களையும் பெற்றது.
ஆனால் அவர்களுடைய
வெற்றியின் பெரும் பகுதி கியூபெக்கில் இருந்து வந்தது.
அது இதுவரை கனடாவின்
சமூக ஜனநாயகவாதிகளுக்கு தேர்தல்களைப் பொறுத்தவரை வறட்சியான நிலமாகத்தான் இருந்தது.
திங்களுக்கு
முன்னதாக
NDP
கியூபெக்கிலிருந்து ஒரு எம்.பி.
இடத்திற்கு மேல்
வெற்றி பெற்றதில்லை.
அதுவும் கூட
இருமுறைதான் நடந்துள்ளது.
திங்களன்று அது
கியூபெக்கில் 58
இடங்களைக்
கைப்பற்றியது.
கன்சர்வேடிவ்கள்,
லிபரல்கள் மற்றும்
BQ அனைத்தின்
இழப்பில் இது நடந்தது.
இதன் மொத்த வாக்கின்
பங்கு இருமடங்கிற்கும் அதிகமாகி
42.9 என்று
வந்துள்ளது.
இத்தகைய
ஆதரவு எழுச்சி முழு அரசியல் ஸ்தாபனத்தினாலும்,
NDP உட்பட,
எதிர்பார்க்கப்படவில்லை.
திங்களன்று இது
கைப்பற்றிய பெரும்பாலான தொகுதிகளில்
NDP தேர்தல்
அலுவலகங்களை கூடக் கொள்ளவில்லை என்பது எந்த அளவிற்கு அது இதை எதிர்பார்க்கவில்லை
என்பதைக் காட்டுகிறது.
அதன் பெரும்பாலான
வேட்பாளர்கள் அரசியலில் அறியப்படாதவர்கள்,
அல்லது புதிதாக
நுழைபவர்கள் ஆவர்.
அரசியல்
ஸ்தாபனம்,
கூட்டாட்சிவாதம்
மற்றும் “இறைமைவாதம்”
(கியூபெக்கிற்கான
சுதந்திரம்)
ஆகியவற்றிற்கு
எதிரான எதிர்ப்பு வாக்கின் கருவியாயிற்று.
பல ஆண்டுகளாக
முதலாளித்துவத்தின் இரு பிரிவுகளும் கியூபெக்கின் அரசியலமைப்பு அந்தஸ்து பற்றி
பூசலிட்டு வருகின்றன.
அதே நேரத்தில் ஒரு
மாதிரியான வலதுசாரி சமூகப் பொருளாதாரக் கொள்கைகளைத் தொடர்கின்றன—சமூகநலச்
செலவுக் குறைப்புக்கள்,
பொதுத்துறையைத்
தனியார்மயமாக்குதல்,
பெருவணிகத்திற்கு
வரிக் குறைப்புக்கள்,
செல்வந்தர்களுக்கு
வரிக் குறைப்புக்கள் என்று.
தொழிற்சங்கத்திற்கு எதிரான உட்குறிப்பான எதிர்ப்பையும் திங்கள் வாக்குகள்
வெளிப்படுத்துகின்றன.
பல தசாப்தங்களாக இவை
தொழிலாள வர்க்கத்தை
BQ விற்குத்
தாழ்த்தி வைத்துள்ளன.
மேலும் இதன் தோழமைக்
கட்சியும் கியூபெக்கின் மாற்றீட்டு அரசாங்கக் கட்சியுமான
Parti quebecois
க்கும் தாழ்த்தி
வைத்துள்ளன.
ஆனால்
NDP, ஹார்ப்பர்
மற்றும் அரசியல் ஸ்தாபனத்திற்கு எதிரான மக்கள் சீற்றத்தையொட்டி தகுதியில்லாத
நலன்களைப் பெற்றுள்ளது.
சமூக ஜனநாயகக்
கட்சிகள் உலகெங்கிலும் இருப்பதைப் போலவே,
இது சமூகநலத்
திட்டங்களை,
முன்பு
முதலாளித்துவத்தின் மனிதப் பண்பிற்கு நிரூபணம் என்று கூறியவற்றை,
பெரிதும்
குறைந்துவிட்டது.
தேர்தல் முடிந்தபின்
நடத்திய உரையில்
NDP தலைவர் ஜாக்
லேடன்,
ஹார்ப்பருடன் இணைந்து
செயல்பட இருப்பதாக வலியுறுத்தி,
லிபரல் மற்றும்
NDP கொள்கைகளுக்குத்
தான் அருகில் இருப்பதையும் கூறியுள்ளார்.
ஆனால் ஒரு
வரலாற்று நிலைப்பாட்டில் இருந்து பார்த்தால்,
லிபரல் கட்சியின்
தோல்வி,
தேர்தல் முடிவின் மிக
வியத்தகு தன்மையைக் கொண்டது.
இருபதாம்
நூற்றாண்டில் லிபரல்கள் கனேடிய முதலாளித்துவத்தின் அரசாங்கம் நடத்துவதற்கு
விரும்பப்பட்ட கட்சியாக இருந்தனர்—1935க்கும்
1985க்கும் இடையே
எட்டு ஆண்டுகளைத் தவிர மற்ற ஆண்டுகளில் தேசிய அரசாங்கத்தை அமைத்தது.
நேற்று
லிபரல் தலைமைப் பதவியை இராஜிநாமா செய்து அறிவிக்கையில்,
மைக்கேல் இக்னாடிப்
கனேடிய அரசியலில்
“மையத் தளம்”
சரிந்துள்ளது பற்றி
கவலை தெரிவித்தார்.
இச்சரிவு
முதலாளித்துவத்தினர் வர்க்க சமரசத்தை நிராகரித்ததிலும்,
பொதுநலக்
கூறுபாடுகளை அது அகற்றும் உந்துதலிலும் வேர்களைக் கொண்டுள்ளது—இந்த
வழிவகைக்காக லிபரல் கட்சிதான் நேரடிப் பொறுப்பைக் கொண்டுள்ளது.
Jean
Christien
மற்றும்
Paul Martin (1993-2005)
ஆகியோரின் லிபரல்
அரசாங்கங்கள் ஒரு சமூக எதிர் புரட்சியை செயல்படுத்தி,
கன்சர்வேடிவ்
பிரியன் மல்ரோனி முயற்சி எடுக்காத நிலைப்பாட்டிற்கு அப்பால் கொள்கைகளை
செயல்படுத்தினர்.
இவற்றுள் கனேடிய
வரலாற்றிலேயே மிக அதிகமாக செலவுக் குறைப்புக்கள் சுமத்தப்பட்டன.
இது மருத்துவப்
பாதுகாப்பு சமூக நலன்கள் ஆகியவற்றில் பேரழிவான விளைவுகளைக் கொடுத்தன.
வேலைக் காப்பீடு
பெரும் பெருநிறுவன,
மூலதன ஆதாயங்கள்,
தனிப்பட்ட வருமான
வரிக் குறைப்புக்கள் ஆகியவை இருந்தன.
Chrétien-Martin
லிபரல் அரசாங்கமும் கனேடிய
ஆயுதப்ப படைகள் மற்றும்
CAF படை தரையிறக்கலை
விரிவாக்கி,
கூடுதல்
ஆயுதங்களையும் அளித்தது.
இதில்
1999 நேட்டோப் போர்
யூகோஸ்லாவியா மீது,
பின்னர்
ஆப்கானிஸ்தானிய
2001 படையெடுப்பு
ஆகியவையும் அடங்கும்.
கனேடிய
முதலாளித்துவம் பிற்போக்குத்னத்தை தழுவியிருப்பது டிசம்பர்
2008ல் நிகழ்ந்த
அரசியல்-அரசியலமைப்பு
நெருக்கடியின் உதாரணத்தை பெறுகிறது.
அப்பொழுது
ஹார்ப்பரும் அவருடைய கன்சர்வேடிவ்கள் தேர்ந்தெடுக்கப்படாத கவர்னர் ஜெனரல் தன்னுடைய
பரந்த ஒருதலைப்பட்ச அதிகாரத்தை பாராளுமன்றத்தை மூடிவிடப் பயன்படுத்தும் வகையில்
ஊக்கம் கொடுத்தது.
இது எதிர்க்கட்சிகள்
தங்களை ஒரு நம்பிக்கையில்லா தீர்மான வாக்களிப்பில் தோல்வி அடைவதைத் தவிர்க்கவும்,
ஒரு லிபரல் தலைமைக்
கூட்டணி இருத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தையும் கொண்டது.
அச்சூழலில்
பாராளுமன்றக் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது கனேடிய பாராளுமன்ற ஜனநாயகத்தின் நெறிகளை
அப்பட்டமாக மீறியது ஆகும்.
ஆயினும்கூட ஆளும்
வர்க்கம் ‘சோசலிஸ்ட்டுக்கள்’
(NDP) மற்றும்
“பிரிவினைவாதிகளை”
(the BQ) நம்பி
அரசாங்கத்தை அமைத்தலைத் தடுக்க அனைத்தையும் பயன்படுத்துவதாக உறுதி அளித்திருந்த
ஹார்ப்பருக்கு ஆதரவளித்தது.
ஹார்ப்பர்
அரசியலமைப்பு ரீதியாக ஆட்சி மாற்றம் செய்ததற்கு விடையளிக்கும் வகையில் லிபரல்கள்
இன்னும் வலதிற்கு உடனடியாக மாறினர்.
அவர்கள் தங்கள்
புதிய தலைவராக மைக்கேல் இகன்டீபை இருத்தினர்.
அவர் புஷ்
நிர்வாகத்தின் கீழ் தன்னுடைய தாராளவாத அறிவார்ந்த தன்மை என்னும் இயல்பை
அளித்திருந்தார்.
ஈராக் போர் மற்றும்
சித்திரவதை ஆகியவற்றிற்கு ஆதரவாக ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியிருந்தார்.
இகன்டீபின்
கீழ் லிபரல்கள் கூட்டணி பற்றிய கருத்துக்களை நிராகரித்து இந்த ஆண்டு தொடங்கும் வரை
முக்கிய பாராளுமன்ற தூணாக சிறுபான்மை கன்சர்வேடிவ் அராசங்கத்திற்கு ஆதரவு
கொடுத்தனர்.
இதில்
ஆப்கானிஸ்தானில் கனேடிய நிலைநிறுத்தம்
2014 வரை நீடிக்கும்
என்று கூறுதல்,
ஆப்கானியக்
கைதிகளின் சித்திரவதையில் கனேடிய ஹார்ப்பரின் அரசாங்கம் உடந்தையாக இருந்ததை
நசுக்குதல் ஆகியவை அடங்கியிருந்தன.
|