சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : துனிசியா

International finance presses for counter-revolution in Tunisia

நிதிக் குழுக்கள் துனிசியாவில் எதிர்ப் புரட்சிக்கு அழுத்தம் கொடுக்கின்றன

By Olivier Laurent 
5 May 2011
Use this version to print | Send feedback

இடைக்கால துனிசிய ஆட்சி மேற்கொண்டுள்ள அரசியல் சீர்திருத்தங்கள், மக்கள் பார்வையில் ஜனவரி மாதம் வெகுஜன வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்களையொட்டி பதவியிலிருந்து விலகும் கட்டாயத்திற்கு உட்பட்ட சர்வாதிகாரி பென் அலியுடன் மிக நெருக்கமான தொடர்புடையவர்கள் என்று கருதப்படுபவர்களை பதவியிலிருந்து அகற்றுவது என்று உள்ளது. ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களின் நோக்கம் துனிசிய மக்கள் ஆரம்பத்தில் எழுச்சி செய்திருந்த சமூக நிலையைத் தக்க வைப்பதற்கு அரசியல் மறைப்பு கொடுப்பது என்று உள்ளது. இது தேசிய மற்றும் சர்வதேச முதலாளித்துவ நலன்கள், குறிப்பாக இதன் முன்னாள் காலனித்துவ சக்தியான பிரான்சின் நலன்களையும் பாதுகாப்பதாக உள்ளது.

துனிசிய ஆட்சி இப்பொழுது ஜூலை 24 தேர்தல்களிலிருந்து கடந்த 10 ஆண்டுகளில் ஏதேனும் ஒரு காலத்தில் முன்னாள் ஜனாதிபதி ஜைன் எல் அபிடைன் பென் அலியின் கட்சியான ஜனநாயக அரசியலமைப்பு இயக்க கட்சியில் (RDC) முக்கிய பதவி வகித்தவர்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறது. RDC இப்பொழுது கலைக்கப்பட்டுவிட்டது. இதில் அரசாங்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள், ஆலோசகர்கள், ஊழியர்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் உள்ளது.

துனிசியத் தொழிலாளர் வர்க்கம் தொடர்ந்து அணிதிரண்டு நிற்பதற்கு இத்திட்டங்கள் விடையிறுப்பாக வந்துள்ளன. தன்னை பென் அலியிடமிருந்து ஒதுக்கி வைத்துக் கொள்வதற்கு ஆட்சி காட்டும் காலம் தாழ்த்திய அடையாள முயற்சி ஆகும். ஜனநாயக தேசபக்தியாளர்கள் இயக்க கட்சியின் (MPD) சோக்ரி பிலெய்ட் மற்றும் என்னஹ்டா எனப்படும் இஸ்லாமியக் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினருமான Abdellatif el-Mekki இருவரும் இந்தக் குறைந்தபட்ச முடிவுடன் தங்களைத் தொடர்புபடுத்திக் கொள்ள மறுத்து, அது மக்களைத் திருப்திப்படுத்துவதில் சிறிதும் போதுமானதாக இருக்காது என்று அரசாங்கத்திற்கு எச்சரித்து இன்னும்புதிய எதிர்ப்பலைகள்வரக்கூடும் என்று தாங்கள் அஞ்சுவதாகவும் கூறினார்.

இடைக்காலப் பிரதம மந்திரி பெஜி கைட் எசெப்சி, ஒரு முன்னாள் RDC உறுப்பினர் தன்னை திட்டத்திலிருந்து ஒதுக்கி வைத்துக் கொண்டார். அவர் முன்னாள் RDC உறுப்பினர்கள்நீதிமன்றங்களில் தண்டனைக்கு உட்படவில்லை என்றால் தேர்தல்களில் பங்கு பெறுவதிலிருந்து தடைக்கு உட்படுத்தப்படக்கூடாதுஎன்று கூறியுள்ளார். மேலும் இத்தேர்தல்களுக்குபோதுமான சமூக மற்றும் பொருளாதாரச் சூழல்உத்தரவாதம் செய்யப்பட வேண்டிய தேவையையும் அவர் வலியுறுத்தினார்.

துனிசியத் தொழிலாளர்கள் இன்னும் கூடுதலான தீவிரத்துடன் விரைவில் சுரண்டப்பட வேண்டும் என்று கோரும் சர்வதேச நிதியக் குழுக்களின் பெருகிய அழுத்தத்திற்கு அவர் பதில் கூறிக்கொண்டிருந்தார். இப்பின்னணியில் துனிசிய அரசாங்கம் தன் மக்களுக்கு எதிராகப் பொருளாதார அச்சுறுத்தலைச் செய்து கொண்டு, ‘இடதாயினும்இஸ்லாமியவாத அடிப்படையாயினும் அனைத்துக் கட்சிகளும் மக்களிடையே மிகக் குறைந்த செல்வாக்கத்தைத்தான் கொண்டிருப்பர் என்று தான் நம்பும் கட்சிகளின் ஆதரவை நாடி நிற்கிறது. இவ்விதத்தில் உள்ளிருப்புப் போராட்டங்கள், எதிர்ப்புக்கள், வேலைநிறுத்தங்கள் என்று நாட்டில் இன்னும் தொடர்ந்து நடப்பது பற்றிய அவருடைய கவலையை எசெப்சி வெளியிட்டார்: அவை வணிக முதலீடுகளைக் குறைத்துவிடும் என்று தெளிவாகக் கூறுகிறார். எதிர்ப்பாளர்களால் கடந்த சில மாதங்களில் 110 முக்கிய நெடுஞ்சாலை மற்றும் இரயில் போக்குவரத்துத் தடைகள் ஏற்பட்டுள்ளன.

எசெப்சி கவலைக்கு மேற்கோளிடப்படும் முக்கிய காரணங்கள் கிட்டத்தட்ட நாட்டின் எரிவாயு நுகர்விற்குப் பாதிக்கும் மேலாக அளிக்கும் British Gas இல் வேலைநிறுத்தங்கள் பெருகியுள்ளது. ஆலை முற்றுகையும் உள்ளூர்வாசிகளால் வேலைகள் கோரி நடத்தப்படுதலும் Sfax துறைமுகத்தில் கப்பல் பிரிவினர் நடத்தும் முற்றுகைகளும் ஆகும். ஒரு இரகசிய குடியேறுவோர் இணையத்தின் அமைப்பாளர்கள் கைதுசெய்யப்பட்டபின் ஜர்ஜிஸ் பகுதியில் நடந்த கலகங்கள் ஆகியவை.

சர்வதேச நிதிய நிறுவனங்கள் தங்கள் பொறுமையின்மையை வெளியிடத் தலைப்பட்டுவிட்டன. பிரான்சில் அடுத்து நடக்க இருக்கும் G8 பொருளாதார உச்சிமாநாட்டில் பங்கு பெற துனிசியாவிற்கு அழைப்பு வந்துள்ளது (இதுதான் துனிசியாவின் முன்னாள் காலனித்துவ சக்தி, அண்மை நாடான லிபியா உட்பட முக்கிய பங்கை ஏகாதிபத்தியத் தலையீட்டில் கொண்டுள்ளது.) எசெப்சியைப் பொறுத்தவரை இந்த அழைப்புஅனைத்துத் துனிசியர்களும் பெருமிதம் கொள்ள ஏற்றதுஎன்பதாகும்.

வரவிருக்கும் உச்சிமாநாட்டில் நிதியப் பிரபுத்துவத்தின் கோரிக்கைகளுடைய உலகளாவிய தன்மை சர்வதேச நாணய நிதியத்தின் வசந்தகாலக் கூட்டங்களில் உரை நிகழ்த்தியவர்களால் முன்னிழல் காட்டப்பட்டுள்ளது. IMF துனிசியாவை பென் அலியின் கீழ்நல்ல மாணவனாக செயல்பட்டது என்றும் துனிசியாவிற்கு 500 மில்லியன் டொலர் வரவு-செலவுத் திட்ட உதவியாக அறிவித்தது. இது கூடுதலாக “700 மில்லியன் டொலராக புதிய தீவிர வளர்ச்சி அணுகுமுறையில் தோற்றுவிக்கும்”, “இது பொருளாதாரச் செயற்பாட்டில் தேவையற்ற வழிவகைகளை அகற்றும்என்றும் கூறியுள்ளதுஅதாவது, இன்னும் கூடுதலான தடையற்ற சந்தைப் பொருளாதாரக் கொள்கைகளுக்கு.

இந்த ஆண்டு துனிசியா 1.3 சதவிகிதப் பொருளாதார வளர்ச்சியைத்தான் கொள்ளும் என்று உலகப் பொருளாதார முன்னோக்கு பற்றிய IMF மற்றும் உலக வங்கி அறிக்கை கூறுகிறது. இது கடந்த 10 ஆண்டுகளில் நிலவிய சராசரி 5 சதவிகிதம் என்பதுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்பட வேண்டும். பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து ஐரோப்பாவிற்கான ஏற்றுமதிகளில் சரிவு ஏற்கனவே வளர்ச்சியை 2008ல் 4.6 எனக் குறைத்துவிட்டது. 2009-10ல் 3 முதல் 4 சதவிகிதம் என்று குறைந்துவிட்டது என்று CIA World Factbook பற்றிய நூல் கூறுகிறது.

அடுத்த ஆண்டு ஏற்றம் 5.6 சதவிகிதமாக இருக்கும் என்று IMF எதிர்பார்க்கிறது. ஆனால் அத்துடன் அது திருப்தி அடைந்துவிடவில்லை. “இப்படிப்பட்ட மறு சரிபார்த்தல் நாம் விரும்பும் அளவிற்கு விரைவாக நடக்கவில்லை. இன்னும் கூடுதலான முயற்சிகள் ஏற்றுமதிகள், நுகர்வு, முதலீடு ஆகியவற்றை ஊக்குவிக்க நடத்தப்பட வேண்டும்என்று IMF ன் தலைமைப் பொருளாதார வல்லுனர் Olivier Blanchard கூறியுள்ளார்.

IMF ஊதியங்களை உயர்த்துவதற்கான வாய்ப்பை முற்றிலும் உதறித்தள்ளிவிட்டது. IMF ன் MENA பிரிவின் இயக்குனரான அஹ்மத் மசூத் ஊதியங்கள் உயர்வு என்பது தீர்வின் ஒரு பகுதியாக இருக்க முடியாது: அதற்கு விரைவான உற்பத்தித் திறன் வளர்ச்சி தேவை, அதாவது ஆளும் உயரடுக்கிற்கு இலாபங்கள் ஏற்றம் தேவை என்றார்.

பிரெஞ்சு வெளியுறவு மந்திரி அலன் யூப்பே, ஏப்ரல் 16 அன்று Arab World Institute உடைய மாநாடு ஒன்றைப் பாரிஸில்அரபு வசந்த காலம்என்ற பெயரில் நடத்தியது. அதாவது துனிசியாவில் வெடித்து அரபு உலகை அதிர்விற்கு உட்படுத்தியுள்ள புரட்சிகரப் போராட்ட அலைகளைப் பற்றி. இது பிரெஞ்சுத் தூதர்கள், ஆராய்ச்சியாளர்கள், அரபு இஸ்லாமியவாதக் கட்சிகளின் பிரதிநிதிகள் உட்பட இப்புரட்சிகளில்பங்கு பெறுவோர்அனைவரையும் ஒரு அரங்கத்தில் கொண்டு வந்தது. இக்கட்சிகள் ஆரம்ப சமூக இயக்கங்களில் கிட்டத்தட்ட எந்தப் பங்கையும் கொண்டிருக்கவில்லை. ஆனால் ஏகாதிபத்தியச் சக்திகள் அவற்றை மக்கள் அதிருப்தியைத் திசைதிருப்ப ஏற்கும் வழிவகையாகக் கருதுகின்றனஅவர்கள் ஏகாதிபத்தியவாதிகளுக்கு நன்னடத்தையை உறுதி செய்தால்.

இவ்வகையில் மாநாட்டில் என்னஹடாக் கட்சியின் பிரதிநிதி மஹ்மத் பென் சலேம் தான்மேலாதிக்கத்தை நாடவில்லைஎன்று அறிவித்து தேர்தல்களில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் சமத்துவப் பிரதிநிதித்துவத்திற்கு ஆதரவு கொடுப்பதாகவும் கூறினார். இது அரசாங்கம் மற்றும் மனித உரிமைகள் குழுக்களின் விருப்பத்தை எதிரொலிப்பதாகும்.

ஆயினும்கூட, இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மற்றும் பெண்ணுரிமை ஆர்வலர்கள் பங்கு கொள்ளும், செயல்படுத்தக் கூடிய கொள்கை முற்றிலும் தொழிலாளர்களுக்கு விரோதப் போக்கைக் கொண்டிருக்கும். மாநாட்டின்போது இரு துனிசிய மனித உரிமைகள் குழுக்களின் ஆர்வலர்கள் Souhayr Belhassen, Radhia Nasraoui பகிரங்கமாக தங்கள் நாட்டில்எதிர்ப்புரட்சிநடத்தினால் ஏற்படக்கூடிய கவலைகளை வெளிப்படுத்தினர்.

உண்மையில் அவர்களுக்கு அரசாங்கத்தின் பொருளாதார அச்சுறுத்தல் கொள்கையுடன் எந்த வேறுபாடுகளும் கிடையாது. அவர்கள்ஜனநாயக வழிவகையின் தெளிவற்ற, உறுதியற்ற தன்மை பற்றி கவலை கொண்டுள்ளனர். அவை அரசாங்கமே மறைந்துவிடும் போக்கைக் கொண்டவை என்கின்றனர். பொருளாதாரச் சரிவு ஏற்பட்டு தொழில்துறை நடவடிக்கை மற்றும் சுற்றுலாத் தொழிற்துறை இப்பொழுது மிக மெதுவாகப் புதுப்பிக்கப்படுவது பற்றிக் கவலை கொண்டுள்ளனர். மேலும் பொதுவான ஏமாற்றத்தையும் காட்டியுள்ளனர். இதைத்தவிர, அரசியல் பொலிஸின் சில அமைப்புக்களும் செயற்பாடுகளும் மீண்டும் வருவது பற்றியும் கவலை கொண்டுள்ளனர்.”

அதாவது எதிர்ப் புரட்சியின் அடக்குமுறையைத் தவிர்ப்பதற்கு அவர்கள் மக்கள் இடைக்கால ஆட்சியின் தொழிலாளர்-விரோத பொருளாதார சமூகக் கொள்கைகளுக்கு தாழ்ந்து நடக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

பென் அலியை அகற்றிய புரட்சி ஏற்பட்ட சில மாதங்களுக்குப் பின்னர், பிரெஞ்சு ஏகாதிபத்திய முறையுடன் துனிசியக் குட்டி முதலாளித்துவப் போலிபுரட்சியாளர்களின்புதிய அடுக்கை இணைத்தலின் வழிவகை இப்பொழுது நடைபெறுகிறது. இப்பிணைப்பு யூப்பே ஏப்ரல் 20ம் திகதிமின்னல் வேகத்தில்துனிசியாவிற்கு 350 மில்லியன் கடன் அளிப்பதற்குச் சென்றிருந்ததில் வெளிப்படையாகத் தெரிந்தது.

புரட்சியில் முக்கிய பங்கு கொண்டிருந்த சில இணைய தள படைப்பாளர்களுடன்விருந்து ஒன்றில் கலந்து கொள்வதற்கு யூப்பேக்கு நேரம் இருந்தது. பின் மறுநாள் காலை புதிய ஆட்சியின் உயர்மட்டத்த தலைவர்களுடன் அடுத்தநாள் காலை விருந்தைப் பெற்றுக் கொண்டார். இதில் அரசியல் சீர்திருத்த உயர்குழுவின் தலைவரான யாட் பென் அசௌரும் இருந்தார். அவர் குடிமைச் சட்டம் மற்றும் இஸ்லாமிய அரசியல் கோட்பாடு ஆகியவற்றில் வல்லுனர் என அறியப்படுகிறார்என்று AFP  தெரிவித்துள்ளது.

நிதி, வணிகம், தொழில்துறை, போக்குவரத்துத் துறை துனிசிய மந்திரிகள் பின்னர் பாரிசிலுள்ள MEDEF –முக்கிய பெருவணிகச் சங்கத்தின்தலைமையகத்திற்கு ஏப்ரல் 26 அன்று சென்றனர். 300 பிரெஞ்சு நிறுவனங்களின் முதலீடுகள் தொடரப்படும் என்பதற்கான உத்தரவாதத்தை அளித்தனர். துனிசிய நிதி மந்திரி Jalloul Ayed, “துனிசியா நல்ல முறையில் மாறிவருகிறது, வருங்கால வாய்ப்புக்கள் இன்னும் இலாபகரமாகவும் ஈர்க்கும் தன்மை உடையதாகவும் இருக்கும் என்று கூற நாங்கள் வந்துள்ளோம்என்று அறிவித்தார்.

எசெபி நிலைமையச் சுருக்கிக் கூறினார்: “துனிசியப் புரட்சி, உள்நாட்டுப் யுத்தம் அல்லது ஜனநாயகத்திற்கு இட்டுச் செல்லக்கூடும்”. அதாவது தொழிலாள வர்க்கம் பழைய ஆட்சி சில பூச்சுக்களுடன் தொடர்வதற்கு அடிபணியாவிட்டால், பென் அலியின் கீழ் இருந்தது போல் குறைவூதியத் தொழிலாளர் தொகுப்பு என சுரண்டப்படுதவதற்கு மறுத்தால், ஆளும் வர்க்கம் வன்முறையைப் பயன்படுத்துவது பற்றிச் சிந்திக்கும்