சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Washington's official story unravels, confirming extra-legal execution of Bin Laden

வாஷிங்டனின் உத்தியோகபூர்வ விளக்கம் அம்பலப்படுகின்றது, பின் லேடனின் சட்டவிரோத மரண தண்டனை நிறைவேற்றத்தை உறுதிப்படுத்துகிறது

By Barry Grey
5 May 2011
Use this version to print | Send feedback

வாஷிங்டனின் உத்தியோகபூர்வ அறிவிப்பான ஒசாமா பின் லேடனைக் கொன்ற அதிரடிப்படை தாக்குதலில் இருந்து முழுத்தன்மை அம்பலப்படுவதற்கு இரண்டு நாட்களே ஆயின. ஆரம்ப பொய்களின் கூழங்களின் மத்தியில் இது அங்கு ஒரு இரத்தம்தோய்ந்த சட்டவிரோத மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதைத்தான் வெளிப்படுத்தியுள்ளது.

அரசாங்கத்திற்கு விருப்பத்துடனும் ஆர்வத்துடனும் பிரச்சாரக் கருவியாக இருக்கத் தயார் என்னும் நிலைப்பாட்டிற்கு ஏற்ற வகையில் அமெரிக்கச் செய்தி ஊடகம் முந்தைய கூற்றுக்களில் இருந்து திரும்பப் பெற்ற தகவல்களால் ஏற்படக்கூடிய விளைவுகளின் சேதங்களைக் குறைக்க இயன்றளவு செயல்பட்டு பின்லேடன் இன்னும் ஒரு பெண் உட்பட நான்கு பேரின் கொலையை பொதுமக்கள் கருத்தை அச்சுறுத்தவும், இழிவுபடுத்தவும், மூர்க்கத்தனமாக்கவும் முற்பட்டுள்ளது.

திங்களன்று ஒபாமாவின் பயங்கரவாத எதிர்ப்பு உயர்ஆலோசகர் ஜோன் பிரென்னன் ஒரு செய்தியாளர் கூட்டத்தில்  கடற்படை துருப்புகளால் ஒரு துப்பாக்கிச் சண்டைக்குப்பின்னர் கையில் ஆயுதத்துடன் பின்லேடன் கொல்லப்பட்டார் என்று கூறினார். “அவர் ஏதேனும் சுட்டாரா இல்லையா, எனக்கு உறுதியாக தெரியாதுஎன்று பிரென்னன் கூறியிருந்தார்.

ஆனால் 24 மணி நேரத்திற்குள் வெள்ளை மாளிகையின் செய்தி ஊடகப் பிரிவுச் செயலர் ஜே கார்னே, பின்லேடனின் தலையில் சுடப்பட்டபோது அவரிடம் ஆயுதம் ஏதும் இல்லை என்று ஒப்புக் கொண்டார்.

முந்தைய நாள் பிரென்னன் முன்வைத்த மற்றொரு பொய்யையும் திருத்தும் கட்டாயத்திற்கு கார்னே உள்ளானார். பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரி, பின் லேடனால் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள மனிதக் கேடயமாகப் பயன்படுத்தப்பட்டதை அடுத்து பின்லேடனின் மனைவி பயங்கரவாதத் தலைவர் கொல்லப்பட்ட பின்னர் கொலையுண்டார் என்று கூறியிருந்தார். புதன் அன்று, கார்னே பென்டனகன் தயாரித்திருந்த சுருக்க அறிக்கையில் இருந்து வாசிக்கும்போது, பின் லேடனுடைய மனைவி காலில் காயம் அடைந்துள்ளார், கொல்லப்படவில்லை, மனிதக் கேடயமாகப் பயன்படுத்தப்படவில்லை என்று கூறினார்.

பின் லேடனின் மகன்களில் எவர் கொல்லப்பட்டார் என்பதைத் தவறாகத் தான் அடையாளம் கண்டுள்ளது என்பதையும் கொல்லப்பட்டது கலீட் அல்ல, ஹம்சா என்று வெள்ளை மாளிகை ஒப்புக் கொண்டது. தாக்குதலின் போது கொல்லப்பட்ட பெண் பின் லேடனின் தகவல் எடுத்துச் செல்லுபவரின் மனைவி என்றும் கூறப்படுகிறது. பாக்கிஸ்தானில் வளமுடைய அப்போத்தாபாத் பகுதியில் மூன்று மாடிக் கட்டிட வளாகம் ஒன்றில் முதல் மாடியில் படையினருக்கும் பின் லேடனின் பாதுகாவலர்களுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையின் நடுவே அவர் அகப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.

உத்தியோகபூர்வ அமெரிக்க தகவல்கள்படி, பின் லேடன் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் திங்கள் அதிகாலையில் (பாக்கிஸ்தான் நேரம்) தாக்குதல் நடந்தபோது மூன்றாம் மாடியில் இருந்தனர்.

முதலில் பிரென்னன் கொடுத்த தகவல் பில் லேடனுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவது என்பதுதான் பணியின் நோக்கம் என்ற கருத்தை பூசிமெழுகும் விதத்தில், சட்டப்பூர்வ காரணங்களுக்காக எதிர்ப்புக் காட்டப்படவில்லை என்றால் தங்கள் இலக்கைக் கைது செய்யுமாறு அதிரடிப்படையினர் உத்தரவு பெற்றிருந்தனர் என்ற கூற்றிற்கு ஆதரவு கொடுப்பதாகும்.

 “பின் லேடனை உயிரோடு கைப்பற்றும் வாய்ப்பு இருந்தால், அவரால் அச்சுறுத்தல் இல்லை என்றால், தனிநபர்கள், திறமை உடையவர்கள், அதைச் செய்வதற்குத் தயாராக இருந்தனர் என்று பிரென்னன் கூறினார்

செவ்வாயன்று செய்தியாளர் கூட்டத்தில் எதிர்ப்புக் காட்டவில்லை என்றால் பின் லேடனை உயிரோடு கைப்பற்றுவதற்கு அதிரப்படையினர் தயாராக இருந்தனர் என்று கார்னே தொடர்ந்து கூறினார். எப்படி ஒரு துப்பாக்கி இல்லாமல் அவர் எதிர்க்க முடியும் என்று ஒரு நிருபர் கேட்டதற்கு, கார்னே தெளிவற்ற முறையில் ஆயுதங்கள் இல்லாமலும்வேறு வழிகள்உண்டு என்று கூறினார்.

திங்களன்று தன் மனைவியை மனிதக் கேடயமாக பின் லேடன் பயன்படுத்தினார் என்பது பற்றி பிரென்னன் அதிகம் கூறினார். அமெரிக்க இராணுவவாத ஆக்கிரமிப்பிற்கு போலிக்காரணங்களுக்காகவும் மற்றும் பூதங்காட்டும் மனிதர்களை அரக்கத்தனமாக, மனிதத்தன்மை அற்றவர்களாகக் காட்டும் கொள்கையின் அடிப்படையில், பிரென்னன் கூறினார்: “இத்தாக்குதல்களுக்கு அழைப்புவிட்ட பின் லேடன், தனக்கு முன்னே கேடயம் போல் நிறுத்தப்பட்டிருந்த மகளிரின் பின்னே மறைந்த நிலையில் முன்னணியில் இருந்து அதிக தூரம் இல்லாத ஒரு பகுதியில் இங்கு மில்லியனுக்கும் மேலான மதிப்புடைய வளாகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். பல ஆண்டுகளாக அவர் கூறிவருவதெல்லாம் எத்தனை தவறு என்பதை இது உண்மையிலேயே காட்டுகிறது.”

இது ஒரு புதிய கற்பனையில் இருந்து உருவானது என்பது விரைவில் வெளிப்பட்டது. புதிய உத்தியோகபூர்வ அறிவிப்பும் மொத்தத்தில் பொய்களின் தொகுப்புத்தான். புதன்கிழமை அன்று மூத்த பாக்கிஸ்தானிய அதிகாரிகள் தாக்குதலில் தப்பி பாக்கிஸ்தான் பாதுகாப்பில் இருக்கும் பின் லேடனின் 12 வயது மகள், அவர்களிடம் அமெரிக்கத் துருப்புக்கள் அவர் தந்தையை உயிரோடு பிடித்து குடும்ப உறுப்பினர்கள் கண்முன்னே சுட்டுக் கொன்றனர் என்று கூறியதாகத் தெரிவித்தார் என்று அல் அரேபியா தெரிவிக்கிறது.

பின் லேடன் நடவடிக்கையின் முதல் சில நிமிடங்களிலேயே வளாகத்தின் முதல் மாடியில் கொல்லப்பட்டுவிட்டார் என்று பாக்கிஸ்தானிய அதிகாரிகள் சேர்த்துக் கொண்டனர்.

அமெரிக்க அரசாங்கத்தின் தகவலின்படி அதிரடிப்படையினர் முதலில் சுட்டுக் கொண்டு முதல் மாடிக்குச் சென்று அங்கிருந்து மூன்றாம் மாடிக்குச்சென்றனர், பின் அவரை பாதுகாக்கும் உதவியாளர்களுடன் நடந்த போருக்கு நடுவே பின் லேடனை எதிர்கொண்டனர் என்பதை இது முற்றிலும் முரணாக்குகிறது. வளாகத்தில் வசித்தவர்களிடம் இருந்து எவ்விதத் துப்பாக்கித் தாக்குதலும் வரவில்லை, தாக்குதலுக்குப் பின்னர் இடத்தில் விசாரணை நடத்திய பாக்கிஸ்தானிய அதிகாரிகள் எந்த ஆயுதங்களையும் காணவில்லை என்று அல் அரேபியா கூறியுள்ளது.

செய்தித்தாள் எழுதியது: “காவலில் உள்ள நபர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்படி, ஒசாமாவிடம் ஆயுதமும் இல்லை, வளாகத்தில் இருந்தவர்கள் அமெரிக்க வானூர்திகள் மீது அல்லது அதிரடிப்படையினர் மீது துப்பாக்கித் தாக்குதலையும் நடத்தவில்லை.”

வளாகத்தில் இருந்து ஒரு தோட்டாகூட அமெரிக்கப் படைகள்மீதும் வானூர்திமீதும் செலுத்தப்படவில்லை. வானூர்தி தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வீழ்ந்தது, அந்த இடத்திலேயே அதன் சிதைவுகள் விட்டுச்செல்லப்பட்டதுஎன்று நன்கு அறிந்த அதிகாரி ஒருவர் விளக்கினார்.

திங்கள் மற்றும் செவ்வாயன்று வளாகத்தில் விரிவாக ஆராய்ந்தபோது பாதுகாப்பு அதிகாரிகள் எந்த ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் கைப்பற்றவில்லை

இந்த அறிக்கை அமெரிக்கச் செய்தி ஊடகத்தால் மொத்தமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. புதன் கிழமை அன்று வெள்ளை மாளிகைச் செய்தியாளர் கூட்டத்தில் கார்னே வெள்ளை மாளிகை தாக்குதல் பற்றி இனி அறிக்கைகள் ஏதும் கொடுக்காது என்றும், பயங்கரவாத எதிர்ப்பு ஆதாரங்களையும் மற்றும் நடவடிக்கை முறைகளையும் பாதுகாக்க இதுதான் முறை என்றும் சாக்குப் போக்குக் கூறினார்.

பாக்கிஸ்தானிய இறைமை மீறல், பின் லேடன் மற்றும் பிறரைச் சட்ட விரோதமாக மரணதண்டனைக்கு உட்படுத்திய தாக்குதலின் அப்பட்டமான சட்டவிரோதத் தன்மையை மூடிமறைக்கும் இழிந்த முயற்சிகளின் பரந்த பின்னணியில் உள்ள விடையிறுக்கப்படாத வினாக்கள் மற்றும் நம்பகத்தன்மை அற்ற கூற்றுக்களைத்தான் சுட்டிக்காட்டுகிறது. அமெரிக்க அரசியல்வாதிகளும் செய்தி ஊடகப் பிரிவுகளும் பாக்கிஸ்தானுக்கு எதிராக  பாக்கிஸ்தானில் அமெரிக்காவின் வெஸ்ட் பாயின்ட்டிற்கு ஒப்பான கூடத்தில் இருந்து ஒரு சில நூறு கஜங்களே உள்ள ஒரு அரண்மனையில் பில் லேடனுக்குப் பாதுகாப்பு கொடுத்தது பற்றி எழுதியுள்ளன; இச்சிறுநகரமோ ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் வசிக்கும் இடம், தலைநகரான இஸ்லாமாபாத்தில் இருந்து 35 மைல் தூரத்தில்தான் உள்ளது. ஆனால் வாஷிங்டன் எப்படி பின் லேடன் இருந்தது பற்றி அறிந்திருக்கவில்லை என்பதற்கு விளக்கம் ஏதும் கொடுக்கப்படவில்லை.

அமெரிக்க அதிகாரிகள் பரந்த அளவில் உறுதிப்படுத்துவது போல், பாக்கிஸ்தானியர்களுக்கு  பின் லேடன் கோட்டைபோல் பாதுகாப்பு உடைய வீட்டில் இருப்பது தெரியுமானால், “பயங்கரவாதத்தின் மீதான போரில் தன்னுடைய மிக நெருக்கமான நட்பு நாடுகளில் ஒன்று எனப் பாக்கிஸ்தானைக் கருதும் வாஷிங்டன், நாட்டின் உளவுத்துறை மற்றும் இராணுவ அமைப்புடன் நெருக்கமான உறவுகளைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் வாஷிங்டனுக்கு எப்படித் தெரியாமல் இருக்க முடியும்?

இவ்வினாவை புதன் அன்று பாக்கிஸ்தானியப் பிரதம மந்திரி யூசப் ராசா கிலானி உட்குறிப்பாக பாக்கிஸ்தான் உளவுத்துறைத் தகவலைஅமெரிக்கா உட்பட, உலகத்தில் உள்ள மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டதுஎன்று அறிவித்தபோது எழுப்பியுள்ளார்; எனவே அவர் பாக்கிஸ்தானில்சில தவறுகள் என்றால் அதன்பொருள்உலகம் முழுவதிலும் சில தவறுகள்என்றுதான் ஆகும்.

உலகில் பரந்த முறையில் உயர் தொழில்நுட்பக் கண்காணிப்புக் கருவிகள், வலைப்பின்னல்கள், உளவு செய்மதிகளையும் கொண்டிருக்கும் அமெரிக்கா பாக்கிஸ்தானைவிட பின் லேடனைத் தேடிக் கண்டுபிடிப்பதில் மேலான நிலையில் உள்ளது என்று கீலானி தொடர்ந்து வலியுறுத்தினார்.

ஜனாதிபதி ஒபாமா ஞாயிறு இரவு வழங்கிய உத்தியோகபூர்வ தகவலில் அமெரிக்கா கடந்த ஆகஸ்ட் மாதம்தான் பின் லேடன் அபோத்தாபாத் வளாகத்தில் இருக்கக்கூடும் என அறிந்தது என்பதை  ஓட்டையாக்கும் விதத்தில் மற்றொரு மூத்த பாக்கிஸ்தானிய அதிகாரி வெளியுறவு செயலர் சல்மான் பஷிர் BBC இடம் 2009ல் பாக்கிஸ்தானே அமெரிக்க உளவுத்துறைக்கு அக்கட்டிடம் பற்றிய சந்தேகங்களை ஈர்த்ததாகத் தெரிவித்தார்.

9/11க்குப் பிந்தையபயங்கரவாதத்தின் மீதான போர்தொடர்பான பயனுடைய குவிமையமாக பின் லேடனை உயிரோடு விட்டுவைத்திருக்க அமெரிக்கா விரும்பியிருக்கலாம் என்பது இன்னும் நம்பத்தகுந்த காரணமாகும்; ஏனெனில் இதுதான் ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் இப்பொழுது லிபியா என்று ஆக்கிரமிப்புப் போர்களை நியாயப்படுத்தப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய உள்நாட்டு, வெளிநாட்டு மூலோபாய கணிப்புக்கள்  வெளிப்படும் வரை அதுதான் பொருந்தும். அவருடைய உண்மையான செல்வாக்கு பொதுவாக குறைந்துவிட்டது என்ற நிலைக்கு வந்தபோது, அவரைக் கொன்றுவிட வேண்டிய கட்டம் வந்துவிட்டது என்று முடிவு எடுக்கப்பட்டது-அவருடைய குற்றங்களுக்காக விசாரணை நடத்துவதற்கு அவரைக் கைது செய்வதற்குப் பதிலாக அவரைக் கொல்லுவதற்கு வாஷிங்டனிடம் பல காரணங்கள் இருந்தன.

நீண்டகாலமாக அல் குவேடா மற்றும் அமெரிக்க உளவுத்துறைக்கும் இடையே ஆப்கானிஸ்தானத்தில் சோவியத் எதிர்ப்பு முஜஹிதீன் கெரில்லா இயக்க காலத்தில் CIA ஒப்பந்தக்காரராக பின் லேடன் இருந்த நாளில் இருந்து, பாக்கிஸ்தான், சவுதிஅரேபியா மற்றும் பிற அமெரிக்க நட்பு நாடுகள் பயங்கரவாதத்தின் மீதான போரில் அல் குவேடாவின் பிணைப்புக்கள் வரை நிகழ்வுகள் பகிரங்கமாக ஆக்கக்கூடாது என்பதைத்தான் அமெரிக்கா விரும்புகிறது.

மேலும் பின் லேடனுக்கு எதிராகத் திடீரென்று குருதி கொட்டும் தாக்குதல் அமெரிக்காவிற்கு விரோதமாக நடந்துகொள்ளலாம் என நம்பும் மற்ற நபர்களான ஈரானின் அஹ்மதிநெஜாட் மற்றும் லிபியாவின் கடாபி போன்றோருக்கு ஒரு பயனுடைய செய்தியை அனுப்பியுள்ளது என்ற கருத்திலும் சந்தேகம் இல்லை. கடாபி பின்லேடன் கொலை செய்யப்படுவதற்கு ஒருநாள் முன்புதான் இலக்கு வைக்கப்பட்ட படுகொலை முயற்சியில் இருந்து தப்பினார்.

சர்வதேச அளவில் பின்லேடன் கொலை பற்றிச் சில விமர்சனங்களும்

உள்ளன. முன்னாள் மேற்கு ஜேர்மனியின் சான்ஸ்லர் ஹெல்முட் ஷ்மித் ஜேர்மன் தொலைக் காட்சியில்இது சர்வதேசச் சட்டத்தை தெளிவாக மீறியது. அனைத்து அமைதியின்மையின் மத்தியில் அரபு உலகில் இச்செயலால் கணக்கிடமுடியாத விளைவுகள் ஏற்படலாம்.” என்றார்

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் உயர் ஆணையர் நவி பிள்ளை அமெரிக்கா ஐ.நாவிற்கு பின்லேடன் கொலை பற்றி முழு விவரங்களையும் தரக்கோர வேண்டும் என்றார். “அனைத்து பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளும் சர்வதேசச் சட்டத்தை மதிக்க வேண்டும் என்று ஐ.நா. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறதுஎன்றார் அவர்.

ஆனால் ஒபாமா நிர்வாகம் இச்செயல் முற்றிலும் சட்டபூர்வமானது என்று வலுவாகக் கூறியுள்ளது; இதற்கு அரசியல், செய்தி ஊடகம் மற்றும் உயர்கல்விக்கூட பிரிவினரிடம் இருந்து எந்த எதிர்ப்பும் கிட்டத்தட்ட இல்லை. செவ்வாய் மற்றும் புதன் அன்று மன்ற, செனட் நீதித்துறைக்குழுக்களில் சாட்சியம் அளித்த தலைமை அரசாங்க வக்கீல் எரிக் ஹோல்டர் பின்லேடன் கொலைசெய்யப்பட்டது அமெரிக்க நீதிமுறைக்கு ஒரு பாராட்டு என்று கூறியுள்ளார்.

மன்றக்குழுவிடம் அவர் இச்செயற்பாடு, “சட்டப்பூர்வமானது, முறையானது, ஒவ்வொரு வகையிலும் உகந்தது என்றார். செனட்டில்அவர்கள் செய்தது பற்றி நான் பெருமிதப்படுகிறேன். அவர்கள் செய்தது முற்றிலும் சட்டபூர்வமானது, நம் மதிப்புக்களுடன் ஒத்திருப்பது என்பதை உண்மையில் வலியுறுத்த விரும்புகிறேன்என்றார்.

காங்கிரசில் உள்ள ஜனநாயகக் கட்சியினர் குடியரசுக் கட்சிப் பிரதிநிதிகளுடன் போட்டியிட்டு பின் லேடன் அகற்றப்பட்டதற்குத் தங்கள் புகழாரத்தைச் சூட்டினர். பிரதிநிதிகள் மன்றத்தில் இரண்டாம் உயரிடத்தில் உள்ள ஸ்ரெனி ஹொயர் இச்செயற்பாடுஒவ்வொரு அமெரிக்கருக்கும்  பெரும் பெருமித ஆதாரமாக இருக்கும்….நம் மக்கள் என்ன செய்யக்கூடும் என்பது பெரும் வியப்பு ஆகும்.” என்று அறிவித்தார்.

கொலையுண்டவரிடம் ஆயுதம் இல்லை என்றாலும் கொலைசெய்யப்பட்தற்கு ஆதரவில் சிறிதும் தயக்கம் காட்டாத பிரச்சார வகையில் நியூ யோர்க் டைம்ஸ் புதன் கிழமை அன்று ஒரு களிப்புத் தலையங்கத்தைதிரு.ஒபாமாவின் பலவீனம் பற்றிய கட்டுக்கதைஎன்ற தலைப்பில் வெளியிட்டது.

ஜனாதிபதி ஒபாமா, ஒசாமா பின் லேடன் கொலையை இயக்கியதில் காட்டிய தலைமை, ஜனாதிபதியின் விசுவாசங்கள், மனவலிமை பற்றிய பொருளற்ற விவாதங்களில் இருந்து அமெரிக்க அரசியல் விலகிப்போகலாம் என்பது பற்றி உணர்த்துகிறது

பாக்கிஸ்தானில் ஒரு வளாகத்தில் பின் லேடனைத் தாக்க வேண்டும் என்னும் திரு.ஒபாமாவின் இடர் நிறைந்த, மிகத் தைரியமான முடிவு கடுமையான முடிவுகளை அவரால் எடுக்க முடியாது அல்லது நாட்டினை பற்றி வெளிநாடுகளில் உள்ள கருத்துப் பற்றி முக்கியமாக கவலைப்படுகிறார் என்ற கருத்தை தகர்த்துவிட்டது.”

டைம்ஸின் கட்டுரையாளர் மௌரீன் டௌட், தலையங்க எதிர்ப்பக்கக் கட்டுரை, “பெரும் நிதானமான ஒபாமா என்ற தலைப்பில் ஒபாமாவின் செயலை The Godfather இல் மைக்கேல் கோர்லியோனின் செயலுடன் இசைவுடன் ஒப்பிட்டுள்ளார்.

புதன் கிழமைகடாபியை இலக்கு வைத்தல் என்ற தலைப்பில் எழுதிய தலையங்கம் ஒன்றில் வாஷிங்டன் போஸ்ட்  எழுதியது: “திரு.கடாபி மற்றும் அவருடைய மகன்களை இலக்கு வைத்தது-அதுதான் நடக்கிறது என்றால்-அது அல்குவெடாவைத் தாக்குவது போல் சட்டபூர்வமானதுதான் என்று நாம் நினைக்கிறோம்.

அமெரிக்க அரசியல் மற்றும் செய்தி ஊடக நடைமுறையில் சில பிரிவுகள் இந்தத் தாக்குதலின் வெற்றியை சிந்திரவதைப் பயன்பாட்டை நியாயப்படுத்தவும் புஷ்ஷின் கீழ் இருந்த காட்டுமிராண்டித்தன நடவடிக்கைகள் மீண்டும் கொண்டுவரப்படவும் நியாப்படுத்துகின்றன. “NBC Nightly News” ல் செவ்வாய் பேட்டியில் CIA இயக்குனர் லியோன் பனேட்டா கடற்படை படையினர் குழு பின் லேடனைக் கொலை செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது என்பதைத் தெளிவாக்கினார். “பின் லேடன் கொல்லப்பட வேண்டும் என்ற அதிகாரம் எங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்ததுஎன்றார் அவர்.

உளவுத் தகவல்கள்விரிவாக்க விசாரணை நுட்பங்களால்அதாவதுகுவாந்தநாமோ மற்றும் CIA சிறைகளில் காவலில் இருப்பவர்களுக்கு எதிரான சிந்திரவதை முறை பின்லேடனைத் தேடிக் கண்டுபிடிப்பதில் பங்கு கொண்டதுஎன்றார். இந்த முறைகளில் நீரில் முழ்கத் திணற (Waterboarding) அடித்தலும் இருந்தது என்று அவர் உறுதிபடுத்தினார்.

புதன்கிழமை அன்றுஇலக்கைத் தேடி அடைவதில் நீரில் மூழ்க வைத்துத் திணற அடித்தல் ஒரு கருவியாக மீண்டும் வருகிறதுஎன்ற தலைப்பில் பைனான்சியல் டைம்ஸ்  ஒரு கட்டுரையை வெளியிட்டது; இது நியூ யோர்க் குடியரசுக் கட்சி பிரதிநிதிகள் மன்ற உறுப்பினர் பீட்டர் கிங்பல ஆண்டுகளுக்கு முன் பின் லேடனின் செய்தி கொண்டு செல்லுபவர் பற்றிய முக்கியமான தகவலைப் பெற்றோம்-அதை நீரில் திணற அடித்தல் மூலம் பெற்றோம்.” இதன் பின் கட்டுரை தொடர்கிறது: “நீரில் மூழ்கடித்துத் திணற வைத்தல் உபயோகப்படாது என்று கூறுபவர்களுக்கு அனைத்து வினாக்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திரு.கிங் கூறினார்: இந்த முறைதான் அமெரிக்காவிற்கு பின் லேடனை நேடியாகப் பிடிக்கக்கூடிய தகவலைக் கொடுத்துள்ளது.”

இதே போன்ற முறையில் மன்ற ஜனநாயகக் கட்சித் தலைவர் நான்ஸி பெலோசி முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷிடம் தொலைத்தொடர்பு கொண்டு நன்றியைத் தெரிவித்தார். “நாங்கள் அனைவரும் எங்கள் பொதுக் கருத்தில் அவருடைய பங்கு இவ்வெற்றியில் முக்கியமானது என்று அங்கீகரித்துக் கூறியுள்ளோம்என்றார் அவர்.