சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா

Mediterranean Anti-Capitalist Conference aids counter-revolution in North Africa

மத்திய தரைக்கடல் பகுதியின் முதலாளித்துவ எதிர்ப்பு மாநாடு வட ஆபிரிக்காவில் எதிர்ப் புரட்சிக்கு உதவுகிறது

By Alex Lantier
6 May 2011
Use this version to print | Send feedback

இந்த வார இறுதியில் பிரான்சின் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியால் மார்சைய்யில் நடத்தப்படும் மத்தியதரைக்கடல் பகுதிக்கான முதலாளித்துவ எதிர்ப்பு மாநாடு ஒரு அரசியல் மோசடியாகும். இது வட ஆபிரிக்காவில் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களுக்கு தலைமை கொடுக்கும் நோக்கத்திலானது அல்ல, மாறாக அவற்றைக் கழுத்தை நெரிக்கும் நோக்கிலானதாகும்.

போலி-ஜனநாயக மற்றும் மனிதாபிமான சுலோகங்கள் மற்றும் அரசாங்க-ஆதரவு தொழிற்சங்கங்களுக்கான ஆதரவு இவற்றின் அடிப்படையிலான முன்னோக்கை கொண்ட NPA மற்றும் அதன் சகோதரக் கட்சிகள் முதலாளித்துவத்தை எதிர்ப்பதில்லை. தொழிற்சங்க நிர்வாகிகளின் ஒரு அடுக்கு, மனித உரிமை அமைப்புகள் மற்றும் அரசாங்கத்தின் கட்சிகளுக்கு சளைக்காமல் போர் மற்றும் சமூகப் பிற்போக்குத்தனத்திற்கான முதலாளித்துவ மூலோபாயத்தின் ஒருங்கிணைந்த பகுதிகளாகச் செயல்படும் நடுத்தர வர்க்கக் குழுக்கள் ஆகியோரின் அரசியலை இவை ஊக்குவிக்கின்றன.

இந்தக் கூட்டம் குறித்து அறிவித்த மார்ச் 19 அன்றான செய்திக்குறிப்பில் NPA கூறியது: ஜூலை 2008ல் தான் மார்சைய்யில் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியின் முதல் திட்டமிடும் குழுவின் கூட்டத்தில் முதலாளித்துவ எதிர்ப்பு அமைப்புகளின் ஒரு மத்தியத் தரைக்கடல் கூட்டத்திற்கான யோசனை உருவானது. மத்திய தரைக்கடல் சங்கம் (UM) என்கின்ற சார்க்கோசியின் நவ காலனித்துவ திட்ட அறிவிப்பினால் இது தூண்டப்பட்டது.

பிரெஞ்சு நவ காலனித்துவவாதத்திற்கான ஒரு எதிரியாக தோற்றமளிக்க NPA எடுக்கும் முயற்சி சிடுமூஞ்சித்தனமானதும் மோசடியானதும் ஆகும். உண்மையில் மார்சைய் மாநாடு லிபியாவில் ஒரு ஏகாதிபத்தியப் போர் நடந்து கொண்டிருப்பதற்கு இடையே தான் நடைபெறுகிறது. இப்போரை ஆரம்பிப்பதில் பிரான்ஸ் ஒரு முக்கிய பாத்திரத்தை ஆற்றியிருந்தது. முதலில் மேற்கத்திய ஆதரவுடனான கிளர்ச்சியாளர்களுக்கு இராணுவ உதவி அளிக்க அது அழுத்தம் கொடுத்தது. மார்ச்சில் போர் தொடங்கிய போது இதனை NPAவும் உரக்க ஆதரித்தது.

அந்த சமயத்தில் அந்த சர்வாதிகாரியை தூக்கியெறிய மேற்கத்திய ஆதரவுடனான சக்திகளுக்கு ஆயுதங்களை வழங்க NPA செய்தித் தொடர்பாளரான ஒலிவியே பெசன்ஸெனோ அழைப்பு விடுத்தார். (காணவும்: ஏகாதிபத்தியத்தின் ஒரு கருவி: பிரான்சின் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி லிபியாவில் போரை ஆதரிக்கிறது)

கீழைத்தேச மற்றும் ஆபிரிக்க கல்விப் பள்ளி மற்றும் NPAவுடன் இணைந்த ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான சர்வதேச நிறுவனத்தை சேர்ந்த ஜில்பேர்ட் அஷ்கார் லிபியாவில் மேற்கத்திய தலையீடு இல்லையென்றால் அங்கு ஒரு பெரும் மக்கள் படுகொலை நிகழும் எனக் கூறினார். ஏகாதிபத்தியத் தலையீட்டை ஆதரித்து வாதிட்ட அவர், இங்கே ஒரு மக்கள் திரள் உண்மையான அபாயத்தில் நிற்கிறது. அதனைப் பாதுகாக்க எந்த மாற்றுவழியும் இல்லாத நிலை இருக்கிறது. இப்போது ஏகாதிபத்திய-எதிர்ப்புக் கோட்பாடுகள் என்கின்ற பேரில் மக்களைப் படுகொலை செய்வதைத் தடுக்கும் ஒரு நடவடிக்கையை நீங்கள் எதிர்க்க முடியாது.

ஏகாதிபத்திய சக்திகள் உள்நாட்டுப் போரைத் தூண்டி விட்டு, லிபியாவின் இராணுவத் தளங்கள் மற்றும் நகரங்களின் மீது குண்டு வீசி, கடாபியின் மகன் சாயிஃப் அல்-அராபைப் படுகொலை செய்திருக்கும் இந்தத் தலையீட்டை தான் ஆதரிப்பது ஏன் என்பதற்கான ஒரு தெளிவான ஒரு விளக்கத்தை NPA இதுவரை அளித்திருக்கவில்லை.

லிபியாப் போர் பெருமளவில் இரத்த ஆறு பாயச் செய்வதாகவும் அவப்பெயர் பெறுவதாகவும் மாறியிருப்பதால் ஆரம்பத்தில் அளித்த உற்சாகமான ஆதரவில் இருந்து NPA பின்வாங்கியிருக்கிறது. சிடுமூஞ்சித்தனமான நழுவல் நிலைப்பாட்டை எடுத்திருக்கும் அது ஏப்ரல் 1 அன்று லிபியப் போருக்கு ஆதரவாகவும் எதிராகவும் NPA உறுப்பினர்களுக்கு இடையில் நடந்த கடிதப் பரிவர்த்தனைகளை வெளியிட்டிருக்கிறது. போருக்கு அது ஆரம்பத்தில் அளித்த ஆதரவைப் போலவே, ஒரு நவ காலனித்துவ தலையீட்டை ஆதரிப்பதா கூடாதா என்பதில் கட்சி முடிவெடுக்க முடியாத நிலையிலிருக்கும் இந்த நிலையும் இதனை ஏகாதிபத்தியத்திற்கு கோட்பாடற்ற ஆதரவளிக்கும் மார்க்சிச விரோத அமைப்பாகவே முத்திரையிடுகிறது.

இந்தக் கேவலமான சாதனையே மார்சைய் மாநாட்டின் நேர்மையற்ற தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இதில் தான் ஏராளமான முன்னாள் காலனித்துவ நாடுகள் மற்றும் பிற ஐரோப்பிய சக்திகளில் இருந்தான பிரதிநிதிக் குழுக்களை ஒரு சர்வதேசரீதியாக ஒற்றுமைப்படுத்தும் நோக்கத்தில் வரவேற்கப் போவதாக NPA கூறிக் கொள்கிறது.

மொராக்கோ, அல்ஜீரியா, துனிசியா, எகிப்து, பாலஸ்தீனம், லெபனான், ஈராக், துருக்கி, வட சைப்ரஸ், கிரீஸ், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் கட்டலோனியா, போர்த்துகல், கோர்சிகா மற்றும் சார்டினா நாட்டின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவிருப்பதாக NPA கூறுகிறது. பல்வேறு அமைப்புகளும் ஒன்றையொன்று நன்கு அறிந்து கொள்வதற்கும், அவற்றிடையேயான உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதற்கும், அத்துடன் பொதுவான சர்வதேச பிரச்சாரங்கள் குறித்து பரிசீலனை செய்வதற்கும் இந்தக் கூட்டம் உதவிகரமாய் அமையும் என NPA தெரிவிக்கிறது.

ஆனால், மத்திய தரைக்கடலைச் சுற்றியுள்ள தனது உறவுகளை ஆழப்படுத்தும் NPA சார்க்கோசியின் மத்தியத் தரைக்கடல் சங்க திட்டங்களுக்கான எதிரியாக செயல்படவில்லை, மாறாக வட ஆபிரிக்காவில் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்திற்கான ஒரு இரண்டாம்தர முகவர்களாகவே செயல்படுகிறது.

இப்படியாக, மார்ச் 3 அன்று, லிபியாவில் போருக்கு அழுத்தமளிக்கும் சர்வதேச ஊடகப் பிரச்சாரங்களுக்கு இடையே ஒற்றுமைக்காக மத்தியத் தரைக்கடலில் தலையீடு செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு செய்யப்படும் விண்ணப்பம் என்பதில் ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் பகுதி மனித உரிமைகள் வலைப்பின்னல் (EMHRN) அமைப்பின் கையெழுத்தின் பக்கத்தில் NPAவின் கையெழுத்தும் காட்சி தந்தது. ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் கூட்டு (EMP) என்கின்ற எந்த ஐரோப்பிய முகமையை அடிப்படையாகக் கொண்டு சார்க்கோசி தனது மத்தியத் தரைக்கடல் சங்க திட்டங்களை அமைத்தாரோ அந்த முகமையால் நடத்தப்படும் அமைப்பே இந்த EMHRN.

EMHRN வலைத் தளம் கூறுவதன் படி, அது ஐரோப்பிய ஆணையத்தாலும் பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் பெல்ஜியம் போன்ற நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சகங்களாலும் நிதியாதாரம் அளிக்கப்படுகிறது.

துனிசிய ஜனநாயக மகளிர் கழகத்தின் முன்னாள் தலைவரும் NPA வலைத் தளத்தில் துனிசியா செய்திகளுக்கான பிரதானப் பங்களிப்பாளருமான அஹ்லம் பெலாட்ஜ், EMHRNன் துனிசிய உறுப்பு அமைப்பான துனிசிய மனித உரிமைகள் கழகத்துடன் (LTDH) நெருக்கமாக வேலை செய்து வருகிறார்.

இந்த ஸ்தாபகமயகப்படுத்தப்பட்ட உறவுகள் ஏகாதிபத்தியக் கொள்கையுடன் NPA கொண்டிருக்கும் அடிப்படைச் சார்ந்திருப்பதை பிரதிபலிக்கின்றன. பாரிய வெகுஜனப் போராட்டங்களின் எழுச்சிக்கு முகம் கொடுக்கும் நிலையில், நடப்பு தொழிற்சங்கங்கள் மற்றும் வலது சாரி இஸ்லாமியக் குழுக்கள் உள்ளிட்ட நடுத்தர வர்க்க எதிர்க் கட்சிகள் ஆகியவற்றை ஒன்றாகக் கொண்டு வந்து முதலாளித்துவ அரசுக்கு ஜனநாயக முகத்திரையிட இது முனைகின்றது.

இவ்வாறு செய்வதன் மூலம், வட ஆபிரிக்காவிலும் மத்திய கிழக்கிலும் பாரிய எழுச்சிக்கு முகம் கொடுக்கும் நிலையில், இது பிரெஞ்சு ஏகாதிபத்தியம் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட அதன் கூட்டாளிகளின் அடிப்படை நலன்களைப் பாதுகாக்கிறது.

மூலோபாய ஆய்வுகளுக்கான சர்வதேச நிறுவனத்தின் Survival (சர்வைவல்) இதழில் எழுதுகையில் ஜோர்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான மார்க் லிஞ்ச் எகிப்தின் வெகுஜன ஆர்ப்பாட்டங்களுக்கு ஒபாமா நிர்வாகத்தின் பதிலிறுப்பை பின்வருமாறு விளக்கினார்: ஒபாமா தன்னுடைய வழிகாட்டலுக்கு அவசியமும் இல்லாத விருப்பமும் இல்லாத ஒரு எதிர்ப்பு இயக்கத்துக்கு தலைமை கொடுக்க முயற்சிக்கவில்லை. மாறாக, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக எகிப்திய இராணுவம் வன்முறையைப் பயன்படுத்தாமல் தடுப்பது, உலகளாவிய உரிமைகளுக்கு மரியாதை கோருவது, எகிப்தியர்கள் தான் எகிப்தின் தலைவர்களைத் தேர்வு செய்ய முடியும் என வலியுறுத்துவது மற்றும் ஒரு அர்த்தமுள்ள, நீண்ட கால சீர்திருத்தத்திற்கு முயற்சிப்பது இவற்றின் மீதான அமெரிக்க முயற்சிகளின் மீது அவர் கவனத்தைச் செலுத்தினார்.

அதாவது, எகிப்திய இராணுவம் உத்தரவு பெற்று தொழிலாளர்கள் மீது அது ஒரு இரத்த ஆற்றை ஓடச் செய்வதான ஆபத்தான விளையாட்டை விட, புரட்சியை நோக்குநிலை விலகச் செய்து பழைய ஆட்சியை அதிகாரத்தில் பராமரிக்க எதிர்க் கட்சிகளை தாங்கள் நம்பலாம் என்று, அமெரிக்காவும் அதன் ஐரோப்பியக் கூட்டாளிகளும் கணக்கிட்டனர். முதலாளித்துவ எதிர்க் கட்சி சக்திகள் ஏகாதிபத்தியத்திற்கு ஏற்புடைய கொள்கைகளைப் பின்பற்றும், அத்துடன் அவை ஆளும் வர்க்கம் படைவீரர்களின் கட்டுப்பாட்டை இழந்து விடும் அபாயத்தைக் கொண்டதான ஒரு முற்றுமுழுதான மோதலுக்கான தேவையைத் தவிர்த்து விடும். இந்தத் திட்டத்தில் ஆர்வமுடன் உதவி செய்வதற்காக NPA மற்றும் அதன் சக சிந்தனையாளர்கள் காத்திருப்பதை ஏகாதிபத்திய மூலோபாயவாதிகள் கண்டனர்.

பிரான்சில் இருக்கும் வட ஆப்பிரிக்க தொழிலாளர் கழக (ATMF) உறுப்பினர் ஒருவர் NPAவுக்கு அளித்த நேர்காணலில் துனிசியாவில் இந்த அமைப்பின் வேலைத்திட்டத்தை பின்வருமாறு விவரித்தார்: துனிசியாவில் இருக்கும் தீவிர இடதுகள் - துனிசிய கம்யூனிசத் தொழிலாளர்கள் கட்சி (PCOT), துனிசியத் தொழிலாளர்களுக்கான பொதுச் சங்கத்தின் (UGTT) தீவிரப் பிரிவு, மற்றும் RAID-Attac/CADTM-Tunisia போன்ற பூகோளமயமாக்கல் எதிர்ப்பு இயக்கங்கள் இவற்றைச் சுற்றித் தான் அடிப்படையாக இருப்பார்கள் என்று ஒருவர் கூற முடியும் - RCD (முன்னாள் ஆளும் கட்சி) இல்லாத ஒரு இடைக்கால அரசாங்கத்தையும், சுதந்திரமான ஜனநாயகரீதியிலான தேர்தலையும், ஒரு உண்மையான ஜனநாயகக் குடியரசின் அடிப்படையை உருவாக்கக் கூடிய ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் சபை ஆகியவற்றை கோருகின்றனர்.

இந்த முன்னோக்கில் மார்க்சிசத்திற்கே போகவேண்டாம், முதலாளித்துவ எதிர்ப்பு அல்லது சோசலிசம் பற்றிய எதுவும் கூட இல்லை. எகிப்திலும் துனிசியாவிலும் புரட்சிகரப் போராட்டங்களில் பாரிய தொழிலாள வர்க்கப் போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களின் பாத்திரம் குறித்து நன்கு அறியப்பட்டிருந்தும், மேலே கூறப்பட்டிருக்கும் நோக்குநிலை அரசியல் அதிகாரத்தைக் கையிலெடுப்பதற்கும் துனிசியாவிலும் சர்வதேசரீதியாகவும் முதலாளித்துவத்தை தூக்கியெறிவதற்குமான தொழிலாள வர்க்கத்தின் ஒரு போராட்டத்தை நிராகரிக்கிறது.

பயிற்றுவிக்கப்பட்ட தொழிலாளர்கள் மாதத்திற்கு வெறும் 100 யூரோக்களை மட்டுமே ஊதியமாகப் பெறுகின்றதான, பெரும் சர்வதேச வங்கிகள் பில்லியன் கணக்கில் சுருட்டும், ஆளும் வர்க்கங்கள் பலவீனமாகவும் மதிப்பிழந்தும் அந்நிய ஏகாதிபத்தியத்துடனும் தாயகத்தில் பிரபுத்துவ பிற்போக்குத்தனத்துடனும் கட்டப்பட்ட நிலையில் இருக்கும், மற்றும் தொழிலாள வர்க்கத்தின் பயம் மற்றும் வன்மத்தால் ஆதிக்கம் செலுத்தப்படுவதாய் இருக்கிற ஒரு மலிவு-உழைப்பு முதலாளித்துவ பொருளாதாரத்தின் அடிப்படையில் முன்னாள் காலனித்துவ நாடுகளில் ஒருவர் ஜனநாயகத்தைக் கொண்டுவர முடியும் என்பதான கற்பனையை இது ஊக்குவிக்கிறது.

எவ்வாறிருந்தபோதிலும் NPAஇன் வட ஆபிரிக்க சேர்க்கைகள் தங்களை தாராளவாத, முதலாளித்துவ ஆதரவுக் கட்சிகளுக்கான ஆதரவுடன் வரம்புபடுத்திக் கொள்கின்றன. உத்தியோகபூர்வ இடது மற்றும் இஸ்லாமிய வலது என அத்தனை அரசியல் வண்ணங்களும் கொண்ட எதிர்க் கட்சிகளுடனும் அவை உறவுகளை ஏற்படுத்திக் கொண்டன.

2005ல் துனிசியாவில் மாவோயிச PCOT கட்சி மற்றும் முன்னாள் ஸ்ராலினிச எட்டாஜ்டிட் கட்சி ஆகியவை அக்டோபர் 18 கூட்டணியை உருவாக்கின. இதில் துனிசியாவின் முக்கிய தாராளவாத எதிர்க்கட்சியான முற்போக்கு ஜனநாயகக் கட்சி (PDP) மற்றும் இஸ்லாமிக் எனதா கட்சி உட்பட்ட மற்ற முதலாளித்துவ உருவாக்கங்களுடன் இவை இணைந்து வேலை செய்தன.

PCOT தலைவர் ஹம்மா ஹமாமி NPAவுக்கு அளித்த ஒரு நேர்காணலில் அவரது கட்சி தொழிலாளர்களையும் வெகுஜன மக்களையும், குறிப்பாக தொழிற்சங்கங்களில் உள்ள மக்களை, பாதுகாக்க எப்போதும் தயாராய் இருக்கிறது என்றார். 2005 முதல், அக்டோபர் 18 கூட்டணியில் இக்கட்சி ஒரு முக்கியமான பாத்திரத்தை ஆற்றியிருக்கிறது. குறிப்பாக இஸ்லாமியவாதிகளுடனான - இவர்களது பிரிவினைவாதத் தன்மை சர்வாதிகாரத்திற்கு எதிராக ஒரு அரசியல் மற்றும் சமூக இயக்கத்தைக் கட்டும் முயற்சிகளுக்குக் குறுக்காய் நிற்கும்- சித்தாந்த கருத்துமோதலைத் தவிர்ப்பதற்கான போராட்டத்தில்

இதேபோல, எகிப்தில் முன்னதாக NPAவுக்கு குறைவான தொடர்புகளே இருந்து வந்தன என்ற போதிலும், அது தனது வலைத் தளத்தில் பதிவிட்ட ஆரம்ப ஆய்வு (நிதானமான மற்றும் உறுதியான பெருந்தீயாய் கிளர்ந்த எகிப்தியக் கிளர்ச்சி) எகிப்திய வலதுடன் அது உறவுகளைக் கட்டுவதற்கான சாத்தியத்தைத் தூண்டியது. அது விளக்கியது: எதிர்க் கட்சிகளைப் பொறுத்தவரை, மிகவும் உறுதியாய் வேரூன்றியுள்ளதும் செல்வாக்குள்ளதுமான கட்சி என்றால் அது முஸ்லீம் சகோதரத்துவம் அமைப்பு தான். இந்த அமைப்பு 1928 முதல் இருக்கிறது, இது தான் எகிப்தின் மிகப் பழைய கட்சி, இதற்கு ஒரு மில்லியன் உறுப்பினர்களும் அனுதாபிகளும் இருப்பதாய் கூறப்படுகிறது. இதன் அரசியல் என்பது இஸ்லாமியவாதத்தை விட சீர்திருத்தவாதத்திற்கே அதிகம் நெருக்கமானதாய் அமைந்திருக்கும்.

இது அபத்தமானதும் பிழையானதுமான கருத்தாகும். எகிப்தின் முஸ்லீம் சகோதரத்துவம் ஒரு இஸ்லாமியக் கட்சி என்பது மட்டுமல்ல, இது அரசியல் இஸ்லாமை சர்வதேசரீதியாக நிறுவியது. ஆனால் இந்த அறிக்கையின் இலக்கோ இந்த முஸ்லீம் சகோதரத்துவ அமைப்புக்கு இடது சாயம் பூசுவதற்கான ஏற்பாட்டை NPA இற்கு உருவாக்குவது தான்.

இந்த அறிக்கை தொடர்கிறது: இதன் நிலைப்பாடுகள் இருநிலைப்பட்டவையாக இருக்கும்; முஸ்லீம் சகோதரத்துவ கட்சி சில சமயங்களில் இயக்கங்களுக்கு முன்முயற்சியளிக்கும், அந்த இயக்கங்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பை சார்ந்தவையாக இருக்கும், அதே சமயத்தில் ஆட்சியை ரொம்ப நேரடியாகச் சவால் செய்ய முயற்சிப்பதாய் இருக்காது. மரியாதையுடன் நடந்து கொள்ள எண்ணும் தலைமை, மற்றும் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் போர்க்குணமிக்க உறுப்பினர்கள் இரண்டுக்கும் உள்ள இடைவெளியை புரிந்து கொண்டால் இந்த இருநிலைப்பட்ட தன்மை விளங்கும். இருவரது வர்க்க நலன்களும் பிளவுபடுகின்றன.

இது முஸ்லீம் சகோதரத்துவம் அமைப்பின் முதலாளித்துவ மற்றும் வலதுசாரித் தன்மையை மறைப்பதற்கான ஒரு முயற்சியே அன்றி வேறொன்றும் அல்ல.

சோசலிசப் போராட்டத்திற்கான NPAஇன் குரோதமும் வலதுசாரி அல்லது பழைய-இடது கட்சிகளை அது ஊக்குவிப்பதும் வட ஆபிரிக்காவில் புரட்சிகரப் போராட்டங்கள் அபிவிருத்தியுற்ற உடனேயே தவிர்க்கவியலாமல் அதனை தொழிலாள வர்க்கத்தின் எதிரியாகக் கொண்டுவந்து நிறுத்தியது. உண்மையில் துனிசியாவில் ஜனாதிபதி ஜைன் எல் அபிதின் பென் அலி மற்றும் எகிப்தில் ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக் போன்ற பதவியகற்றப்பட்ட சர்வாதிகாரிகளின்  அரசியல் அமைப்புகள்  தொடர்ந்து பதவியில் நீடிப்பதற்கான தமது முயற்சிக்கு NPAஆல் முன்னெடுக்கப்படும் முன்னோக்கை பெருமளவில் தமக்கு எடுத்துக் கொண்டு விட்டன.

துனிசியாவில், முன்னாள் RCD அதிகாரியான ஜனாதிபதி ஃபவுத் மெபாசாவின் அரசாங்கம் ஒரு அரசியல் அவையை உருவாக்குவதற்கு ஜூலை 24 அன்று தேர்தலை நடத்துவதாக வாக்குறுதியளித்துத் தான் தனக்கு அடித்தளம் அமைத்துக் கொண்டிருக்கிறது.

புரட்சியின் நோக்கங்களை சாதிப்பதற்கான, அரசியல் சீர்திருத்தத்திற்கான மற்றும் ஜனநாயக உருமாற்றத்திற்கான உயர் ஆணைய த்திடமும் அதிகாரம் குவிக்கப்பட்டுள்ளது. UGTT, உத்தியோகபூர்வ எதிர்க் கட்சிகள் மற்றும் தொழில்முறை அமைப்புகளுடன் UTICA தொழிலதிபர்கள் கூட்டமைப்பை ஒன்றாய்க் கொண்டுவந்திருக்கும் இந்த அமைப்பு துனிசியப் பொருளாதார மற்றும் சமூகக் குழுவின் (CES) கட்டிடங்களில் தான் சந்திக்கிறது. இது பிரான்சில் இரண்டாம் உலகப் போருக்குப் பின் தொழிற்சங்க அதிகாரி Léon Jouhaux அமெரிக்க ஆதரவுடன் உருவாக்கிய பிரான்சின் பொருளாதார மற்றும் சமூகக் குழுவை மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். இதுவும் இதே இடத்தில் கூட்டங்கள் நடத்துகிறது. இதில் தொழிலதிபர்களும் தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகளும் கூடி பென் அலிக்குக் கீழான ஒப்பந்தங்கள் மற்றும் சமூகக் கொள்கையை விவாதிக்கின்றனர்.    

இந்த உயர் ஆணையமும் சரி CESம் சரி, சமீப மாதங்களில், பங்கேற்பின்றி இருக்கும் நிறுவனங்களாகப் பார்க்கப்படும் ஸ்தாபனங்களுக்கு எதிரான தொடர்ச்சியான மக்கள் எதிர்ப்புகளின் இலக்காக இருந்து வந்திருக்கின்றன. ஆனாலும் NPA தனது அரசியலுக்கு அடித்தளமாய்க் கொண்டிருக்கும் வசதி படைத்த சமூகத் தட்டுகள் உயர் ஆணையத்தை ஆதரிக்கின்றன.

பென் அலியின் ஆட்சியின் இறுதி நாட்களில் போலிஸ் வன்முறையை எதிர்த்துப் போராட உருவாக்கப்பட்ட மக்கள் தற்காப்புக் குழுக்களை நோக்கிய அணுகுமுறையில் UGTT மற்றும் எதிர்க்கட்சிகளின் அணுகுமுறையை(மனோபாவத்தை) உயர் ஆணையத்தின் அணுகுமுறையுடன் ஒப்பிடச் சொல்லி NPA கேட்ட போது அஹ்லென் பெல்ஹட்ஜ் கூறினார்: நாங்கள் நிறுவனமயமாக்கலின் வளர்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்...UGTT, வழக்கறிஞர்கள் [கூட்டமைப்புகள்], மற்றும் மனித உரிமைகளுக்கான கழகம் ஆகியவை உயர் ஆணையம் குறித்த விடயத்தில் உற்சாகத்துடன் இருந்தன.

துனிசிய ஆட்சிக்கான ஒரு நீண்ட கால முட்டுத் தூணாக இருந்து வந்திருக்கும் UGTT இன் பாத்திரத்தின் மீது தான் அளிக்கும் முக்கியத்துவத்தை NPA எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளது. UGTT தலைவரான அப்டெசலம் ஜெராட் வழமையாக தேர்தலில் பென் அலிக்கு ஆதரவளித்து வந்தார். ஜனவரி 5 அன்று பென் அலிக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டங்கள் வளர்ந்த சமயத்தில், NPA எழுதியது: ஒரு உண்மையான எதிர்க்கட்சி இல்லாத நிலையில் நாட்டை ஒழுங்கமைக்கும் ஒரே சக்தி இந்த UGTT தான்... ஆனால் UGTT உறுப்பினர்கள் சிலரால் தலைமை ஏற்கப்படும் ஆர்ப்பாட்டங்களுக்கும் அங்கு முழங்கப்பட்ட ஆட்சிக்கு எதிரான சுலோகங்களுக்கும் UGTT தலைமை உத்தியோகபூர்வமாய் ஆதரவளிக்க மறுப்பதற்கு நாம் வருத்தப்பட்டாக வேண்டும்.

தொழிலதிபர்கள் மற்றும் சர்வாதிகாரத்துடனான வர்க்க ஒத்துழைப்பின் முகவராக UGTT இன் பாத்திரம் துனிசியா முழுக்க நன்கு அறியப்பட்ட ஒன்றாகும். NPAவே கூட தனது மிக சமீபத்திய அறிக்கையில் (UGTT குறித்து: ஏப்ரல் 30) அதனை ஒப்புக் கொள்கிறது: 1987ல் பென் அலியின் இராணுவக் கவிழ்ப்பு முதல், புதிய உறவுகள் அரசுடன் அபிவிருத்தியாயின. தொழிற்சங்க ஆட்சிவாத இடதுகளில் இருந்து தொழிற்சங்க நிர்வாகிகளை விலைக்கு வாங்க கணிசமான தொகை ஒதுக்கப்பட்டது....இப்போது பழமைக்காலத்தையதாய் பார்க்கப்படும் ஒரு மோதல் போக்குக் கலாச்சாரத்தில் இருந்து - ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளுக்கு இட்டுச் செல்கின்ற சமூகக் பங்காளிகளுக்கு இடையிலான உறவுகளுக்கு மாறுவது தான் UGTT இன் புதிய உத்தியோகபூர்வ நோக்குநிலை.

UGTT இன் அடிப்படையான நோக்குநிலை, பிரான்சின் தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு (CGT) - இது பிரான்சில் சமூக வெட்டுகளை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் முன்னோக்குடன் வேலைநிறுத்தங்களைக் கட்டிப் போடுவதன் மூலம் அந்த வேலைநிறுத்தங்களை தொடர்ந்து காட்டிக் கொடுத்து வந்திருக்கிறது - உட்பட சர்வதேசரீதியாக தொழிற்சங்கங்களால் பகிர்ந்து கொள்ளப்படுகின்ற ஒன்று தான் என்பதையும் ஒருவர் சேர்த்துக் கொள்ளலாம். இருந்தபோதிலும், துனிசியாவில் UGTT விடயத்தில் போலவே NPA, CGT ஐயும் விமர்சனம் செய்வதில் இருந்து எப்போதும் ஜாக்கிரதையாக ஒதுங்கி வந்திருக்கிறது.

உண்மையில், தொழிற்சங்க அதிகாரத்துவம் தான் தொழிலாள வர்க்கத்தின் சட்டப்பூர்வமான ஒரே தலைமை என்கின்ற கருத்தை எல்லா இடங்களிலும் ஊக்குவிப்பதற்கே NPA முனைகிறது. UGTT குறித்த தனது ஏப்ரல் 30 அன்றான கட்டுரையில் NPA அறிவிக்கிறது: இப்போது UGTTயின் மனோபாவத்தில் தான் புரட்சியின் தலைவிதி பெருமளவு தங்கியிருக்கிறது.

ஒரு துளியேனும் அரசியல் நேர்மை இருக்கும் ஒருவரும் கேட்கத் தள்ளப்படும் கேள்வி இதுதான்: பென் அலிக்கு எதிரான போராட்டத்திற்கு குரோதமான, விலை கொடுத்து வாங்கப்பட்ட தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகளிடம் தான் புரட்சியின் தலைவிதி தங்கியிருப்பதாக, உண்மையான புரட்சியின் எதிரிகளன்றி, வேறு யார் வாதிடுவார்கள்?

வட ஆபிரிக்காவின் தொழிலாளர்கள் சர்வாதிகார ஆட்சிகளுடனான அரசியல் போராட்டத்தில் நுழைகின்ற சமயத்தில், இந்த நோக்குநிலையின் சமூக உள்ளடக்கம் முன்னெப்போதையும் விடத் தெளிவாய் அம்பலப்பட்டிருக்கிறது. இது முதலாளித்துவ வகையைச் சேர்ந்தது, அத்துடன் எதிர் புரட்சிகரமானது. இது ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் தலைமை தாங்கி தொழிலாள வர்க்கம் நடத்தும் ஒரு சுயாதீனமான புரட்சிகர இயக்கம் என்னும் அச்சுறுத்தலுக்கு எதிராக முதலாளிகள் மற்றும் ஏகாதிபத்தியத்தின் அடிப்படையான வர்க்க நலன்களைப் பாதுகாக்கிறது.  

ஒரு பாரிய வேலைநிறுத்த அலைக்கு இடையே பிப்ரவரி 11 அன்று முபாரக் இராஜினாமா செய்து வெளியேறியதற்குப் பின்னர் இராணுவத்திடம் அரசு அதிகாரம் ஒப்படைக்கப் பெற்ற எகிப்து விடயத்திலும், நடப்பு ஆட்சி வேலைநிறுத்தங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் தடைசெய்து சட்டம் நிறைவேற்றியிருக்கிறது, பெருந்திரள் கைதுகளையும், அடிதடிகளையும், எதிரிகளைச் சித்திரவதை செய்வதையும் நடத்தியிருக்கிறது என்ற போதிலும் NPA இதேபோல் நடப்பு ஆட்சியை சீர்திருத்துவதற்கு வாதிடுகிறது. 

புரட்சியானது படைகளின் சிறந்த பிரிவுகளுக்கு அதாவது இராணுவச் சர்வாதிகாரத்திற்கு விண்ணப்பிப்பதாய் இருக்க வேண்டும் என்கிற எகிப்திய வலைப்பதிவரான ஹோஸாம் எல்-ஹமாலவேயின் ஆலோசனையை  NPA மேற்கோள் காட்டுகிறது. எல் ஹமாலவே எழுதுகிறார்: நூற்றுக்கணக்கான இராணுவ அதிகாரிகள் நடப்பு சூழ்நிலை மீது திருப்தி கொண்டிருக்கவில்லை என்பதை நாம் கணக்கிலெடுக்க வேண்டும். உண்மையில் நாம் இரண்டு இராணுவங்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இந்தப் பிரிவினை ஏற்படுத்தப்பட வேண்டும். ஒரு மேம்பட்ட சுத்தமான எகிப்தில் நம்பிக்கை கொண்டிருக்கும் இராணுவ அதிகாரிகளும் படைவீரர்களும் தங்கள் சொந்த அமைப்பை சுத்தம் செய்தாக வேண்டும்.

நேர்காணலின் இன்னொரு பத்தியில், எல் ஹமாலவே எகிப்தில் அமெரிக்காவின் நடப்பு மூலோபாயத்தின் மீதான ஒரு வெளிப்படையான சித்திரத்தை வரைந்து காட்டுகிறார்: அமெரிக்கா இராணுவரீதியாகத் தலையிட முடியாது, புரட்சியைத் தடுக்க அவர்கள் கெய்ரோவுக்குள் உள்வர முடியாது. ஆனால் அவர்கள் எதிர்ப் புரட்சியில் பங்கேற்க முடியும். உண்மையில், அவர்கள் தான் எகிப்திய இராணுவத்திற்கு நிதியுதவி அளித்துக் கொண்டிருக்கின்றனர். அத்துடன் குறிப்பிட்ட தட்டுகளில் இருந்து மக்களை வென்றெடுப்பதற்கும் சமாதானப்படுத்துவதற்கும் ஜனநாயகக் குடிமை அமைப்புகளின் மூலமாக பெரும் பணத்தை குடிமை சமூகத்திலும் அவர்கள் முதலீடு செய்து கொண்டிருக்கின்றனர்.

NPA மற்றும் அதன் தொடர்புபட்ட மனித உரிமை அமைப்புகள் அவை எப்படி நடந்து கொள்ளும் என்று ஏகாதிபத்தியவாதிகள் நம்பினார்களோ சாட்சாத் அதே வகையில் துல்லியத்துடன் நடந்து கொண்டு வருகின்றன என்கிற ஒரே ஒரு விடயத்தை மட்டும் தான் எல் ஹமாலவேயின் கருத்துகளுடன் சேர்த்துக் கொள்ள வேண்டியுள்ளது.   

NPAஇன் மார்சைய் மாநாட்டில் பங்கேற்பவர்கள் காணவிருப்பது ஒரு புரட்சிகர முன்னோக்கை அல்ல, மாறாக பாரிய சமூக எழுச்சிகளின் ஒரு காலத்தில் பிரெஞ்சு மற்றும் உலக ஏகாதிபத்தியத்தின் தேவைகளுக்கு ஏற்ப அளவெடுத்துத் தைக்கப்பட்ட ஒரு முன்னோக்கையே. அவர்களுக்கு வரவேற்பளிக்க இருக்கும் கட்சி, முதலாளித்துவத்திற்கு எதிரியாக இருப்பதில் இருந்து வெகு தொலைவில் இருக்கும் கட்சி என்பதோடு, முதலாளித்துவத்தையும் போரையும் பாதுகாத்து வசதி படைத்த அதிகாரத்துவங்களால் தொழிலாள வர்க்கம் அடக்கியாளப்படுவதை நியாயப்படுத்துவதில் நிபுணத்துவமும் அது பெற்றிருக்கிறது.