சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : லிபியா

Washington funnels confiscated Libyan assets to “rebel” leadership

பறிமுதல் செய்யப்பட்ட லிபியச் சொத்துக்களை “ கிளர்ச்சித்” தலைமைக்கு வாஷிங்டன் திருப்புகிறது

By Patrick O’Connor
6 May 2011

Use this version to print | Send feedback

பறிமுதல் செய்துள்ள லிபிய நிதியான $30 பில்லியனில் இருந்துஒரு பகுதியை விரைவில் இராணுவத் தலையீட்டிற்கு உதவ இருப்பதாக அமெரிக்க வெளிவிவகார செயலாளர் ஹில்லாரி கிளின்டன் அறிவித்ததைத் தொடர்ந்து நேற்றையலிபியா பற்றிய தொடர்புக்குழுவின்கூட்டம் முடிவிற்கு வந்தது. ஒபாமா நிர்வாகம் இவ்வகையில் திமிர்த்தனமாக லிபிய தேசியச் சொத்தை மீண்டும் கிளர்ச்சியாளர் தலைமையை தக்க வைத்துக் கொள்வதற்காக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் அமெரிக்க நேட்டோ போரில் முயம்மர் கடாபியை அகற்றும் காலனித்துவ தன்மையைத்தான் நிரூபிக்கிறது.

தொடர்புக் குழுவின் இரண்டாம் கூட்டம் இத்தாலிய ரோமில் நடைபெற்றதே ஒரு இழிந்த காட்சியாகும். மாபியா தலைவர்கள் வளமாக வாய்ப்பை ஒருங்கிணைக்கக் ஒன்றுகூடியதைப்போல் தான் இது பிரதிபலித்தது. பெரும்பாலும் ஐரோப்பிய அரபு நாடுகளில் இருந்து வந்த 22 வெளியுறவு மந்திரிகள் ஐக்கிய நாடுகள் சபை, அரபு லீக், நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியம், வளைகுடா ஒத்துழைப்புக் குழு மற்றும் உலக வங்கிகளின் அதிகாரிகளையும் இணைத்துக் கூட்டம் நடத்தப்பட்டது.

ஒரு நீண்ட கூட்டு அறிக்கையில், இக்குழு இடைக்கால தேசியக் குழு (INC) என்று கிழக்கு லிபிய நகரமான பெங்காசியில் உள்ள ஆட்சிலிபிய மக்களுக்காக நியாயமாக உரிமைகோருவோர்அமைப்பு என்று அறிவித்தது. இந்த அந்தஸ்துஅந்த அமைப்பிற்கு பல வெளிநாடுகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ள கணக்குகளில் இருக்கும் லிபியச் சொத்துக்கள் மீதான முடக்கம் நீக்கப்பட வேண்டும் என்று கோருவதற்கான வாய்ப்பை அளிக்கிறது.” இதையொட்டிஒரு தற்காலிக நிதிய அமைப்புமுறைநூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை கடாபி எதிர்ப்பு தலைமைக்கு கொடுப்பதற்காக நிறுவப்பட்டுள்ளது; இந்த அமைப்பு முறையில் பல முன்னாள் ஆட்சியின் முக்கியஸ்தர்கள், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மற்றும் அமெரிக்க உளவுத்துறையின் பிரதிநிதிகள் ஆகியவை அடங்கியுள்ளனர். குவைத் ஏற்கனவே $180 மில்லியனையும் கட்டார் $400 மில்லியனையும் தருவதற்கு உறுதிமொழி கொடுத்துள்ளன.

பெப்ருவரி மாதம் கைப்பற்றப்பட்ட லிபிய சொத்துக்களில் $150 மில்லியனை செலவழிப்பதற்கான சட்டத்தை தான் இயற்ற முயற்சிக்கும் என்று ஒபாமா நிர்வாகம் கூறியுள்ளது. வாஷிங்டன் போஸ்ட்எவர் பணத்தைப் பெறுவர் என்பதை முடிவு செய்ய காங்கிரஸுடன் இணைந்து நிர்வாகம் செயல்படும்என்று கூறியுள்ளது. இது செயற்பாட்டின் ஒருதலைப்பட்ச, சட்டவிரோதத் தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. முதலில் கொடுக்கப்படும் பணம்முடக்கப்பட்டுள்ளலிபியச் சொத்துக்களான $30 பில்லியனில் ஒரு சிறு பகுதிதான் என்று போஸ்ட் விளக்கியுள்ளது; இதற்குக் காரணம்அப்பணத்தில் சில பகுதிகள் வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க வங்கிகளில் உள்ளன, எனவே அவற்றைப் பயன்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளன.”

லிபிய சொத்துக்களை திருடுவது ஒரு விவகாரம், ஆனால் அமெரிக்க வங்கிகளின் கருவூலங்களில் இருந்து அவற்றை அகற்றுவது மற்றொரு விவகாரம் என்பது வெளிப்படையாகிறது.

லிபியாவின் துணை வெளியுறவு மந்திரி கலீட் கைம் வாஷிங்டனின் தந்திர உபாயங்கள்பெருங்கடலில் நடக்கும் கடற்கொள்ளைக்கு ஒப்பானது ஆகும்என்று கண்டித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் சிலவற்றின் சட்ட ஆலோசகர்கள் முடக்கப்பட்டுள்ள ஆட்சியின் நிதியைப் பயன்படுத்துவதற்கு ஒரு புதிய ஐ.நா.தீர்மானம் தேவைப்படும், அதற்கான ஆதரவைப் பாதுகாப்புக் குழுவில் திரட்ட முடியுமா என்பது சந்தேகம்தான்என்று பைனான்சியல் டைம்ஸ் விளக்கியுள்ளது.

சமீபத்திய நிகழ்வுகள் அரசாங்கம் அமைக்கக் காத்திருக்கும் லிபிய கைப்பாவை அரசாங்கத்தின் விலை கொடுத்தல், வாங்குதல் என்ற குணாதிசயத்தைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. லிபியாவில் அமைதியின்மை  தொடங்கியதில் இருந்தே, பெங்காசித் தளத்தை கொண்ட அதிகாரம் வாஷிங்டன் மற்றும் அதன் நட்பு நாடுகளால் கடாபி ஆட்சியை அகற்றுதல், தங்கள் மூலோபாய வணிக நலன்களுக்கு வளைந்து கொடுக்கும் ஒரு கைப்பாவை அரசாங்கத்தை அங்கு நிறுவுதல், வட ஆபிரிக்கா முழுவதும் நடக்கும் புரட்சி இயக்கங்களுக்கு எதிரான செயற்பாட்டை லிபியாவில் கொள்ளுதல் ஆகியவற்றின் திட்டத்திற்கான கருவியாகத்தான் உருவாக்கப்பட்டுள்ளது.

தொடர்புக் குழு உறுப்பினர்கள் இடைக்கால தேசியக் குழுவிற்கு தாங்கள் கொடுக்கும் ரொக்கப் பணங்கள்மனிதாபிமானநோக்கங்களுக்குச் செலவிடப்படும் என்று அறிவித்துள்ளனர். இது ஒரு போலித்தனமான பேச்சாகும்; ஏனெனில்மனிதாபிமானம்என்பது போருக்கே ஒரு போலிக்காரணம் ஆகும். பெங்காசியில் குவிக்கப்படும்  பாரிய உதவிகள் உள்நாட்டுப்போரை இன்னும் தீவிரமாக்கி, போரின் இடையே தத்தளிக்கும் லிபிய மக்கள் நிலைமையை இன்னும் மோசமாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

நேற்று அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சக்திகள் லிபியாமீதான தாக்குதல்களை முடுக்கிவிடுவதற்கும் உறுதி கொண்டன. பிரிட்டிஷ் வெளியுறவு மந்திரி வில்லியம் ஹேக் கூட்டத்திற்குப் பின், “இராணுவ நடவடிக்கையின் வேகம் தொடர்ந்து அதிகரிக்கப்பட வேண்டும்; அவ்வாறுதான் இது சமீப காலத்தில் நடத்தப்பட்டுள்ளதுஎன்று அறிவித்தார். அதுவும் அதிகரித்துள்ள இராணுவவேகம்சமீப காலத்தில் சர்வாதிகாரியின் இளைய மகன் மற்றும் அவருடைய மூன்று பேரக்குழந்தைகள் கொலையுண்ட கடாபிக்கு எதிரான படுகொலை முயற்சியையும் கொண்டிருந்தது என்ற நிலையில் இது பெரும் ஆத்திரமூட்டும் அறிக்கை ஆகும்.

இராணுவத் தொடர்பு இல்லாத உள்கட்டுமானங்கள்மீது இனி வான்தாக்குதல்கள் இருக்காது என்று ஹேக், ஹில்லாரி கிளின்டன் இருவருமே குறிப்புக் காட்டியுள்ளனர். அதில் அரசாங்கத் தொலைக்காட்சி, வானொலி நிலையங்களும் அடங்கும். அமெரிக்க நிதித்துறையின் வெளிச் சொத்துக்கள் கட்டுப்பாட்டுக்குழு அலுவலகம் நேற்று லிபிய ஜமஹிரிய ஒளிபரப்பு நிலையம் என்னும் அரசாங்க ஒளிபரப்பு அமைப்பை, புதிதாகப் பொருளாதாரத் தடைகள் சுமத்தப்பட இருக்கும் லிபிய நிறுவனங்களுள் ஒன்றாகப் பெயரிட்டுள்ளது. ஏப்ரல் 25ம் தேதி தலைநகரான திரிப்போலியில் நேட்டோ படைகளால் ஒளிபரப்பு நிலையங்கள் முதலில் குண்டுவீச்சிற்கு உட்படுத்தப்பட்டன.

தொடர்புக் குழு உறுப்பினர்கள் திரிப்போலியின் எரிபொருள் பற்றாக்குறை, பொருளாதாரப் பிரச்சினைகளை மோசமாக்கும் எண்ணெய் தடைகள் வலுப்படுத்துப்படுவது பற்றியும் விவாதித்ததாகக் கூறப்படுகிறது.

கூட்டு அறிக்கையில் இக்குழு ICC எனப்படும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் நடத்திய கடாபி ஆட்சி உறுப்பினர்கள்மீது விசாரணை நடத்தும் நடவடிக்கைகளைவரவேற்று”, “கொத்து வெடிகுண்டுகள்(cluster munitions) பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படும் அறிக்கைகள் பற்றியும்'' பிரதாபிக்கின்றது.

இது முற்றிலும் பாசாங்குதனம் ஆகும்; ஏனெனில் வாஷிங்டன் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகாரத்தை அங்கீகரிப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் கொத்து வெடிகுண்டுகள் பயன்படுத்துவதை தடுக்கும் சர்வதேச முயற்சிகளை முறியடிக்கும் வகையில்தான் அது செயல்பட்டுள்ளது.

இத்தாலியின் வெளியுறவு மந்திரி பிராங்கோ பிரட்டனி நேட்டோ செயற்பாடுகளுக்குஇறுதித் தேதிநிர்ணயிக்கப்பட வேண்டும் என்று விடுத்த அழைப்பு முற்றிலும் நிராகரிக்கப்பட்டது. பிரெஞ்சு வெளியுறவு மந்திரி அலன் யூப்பே குண்டுத்தாக்குதல்சில மாதங்களுக்குநீடிக்கும் என்று தான் நம்புவதாக அறிவித்துள்ளார். நேட்டோ தலைவர் அன்டர்ஸ் போக் ராஸ்முஸன்தேதிகளைப் பற்றி ஊகிக்க விரும்பவில்லைஎன்று கூறிவிட்டார்.

இதன் பின் தான் நேட்டோ தாக்குதலில்முழுமையாக ஈடுபடவில்லைஎனக்கூறுப்படும் கருத்துக்களை இத்தாலிய அரசாங்கம் நிராகரித்தது. வெளியுறவு அமைச்சரக செய்தித் தொடர்பாளர் ஒருவர்இலக்குகள் அடையப்பட்டபின்இப்பணி முடிவுறும் என்று உறுதியளித்தார். ஆயினும் பிராங்கோ பிரட்டனியின் கருத்தானஇறுதித் தேதிஎன்பது தொடர்புக்குழு வெளியிட்டுள்ள ஒற்றுமை பற்றிய அறிக்கைகளை பரிதாபமான முறையில் மறைக்கும் முயற்சியாக காட்டுகிறது. இவை அமெரிக்க-நேட்டோ கூட்டணிக்குள் இருக்கும் உள் ஏகாதிபத்திய போட்டிகளின் கசப்பான நிலைப்பாட்டைத்தான் சுட்டிக்காட்டுகின்றன.

தன்னுடைய கூட்டாட்சியின் முக்கிய பங்காளிக் கட்சியான வடக்கு லீக்கில் இருந்து பெரும் அழுத்தத்தை சில்வியோ பெர்லுஸ்கோனி எதிர்கொண்டுள்ளார். அந்த லீக் ஒரு நீடித்த போர் தொடர்ந்தால் ஏராளாமான லிபிய அகதிகள் இத்தாலிக்கும் வருவர் என்ற அச்சங்களைத்தான் தூண்டி வருகிறது.

லிபியாவில் இத்தாலிய ஏகாதிபத்தியம் மாபெரும் முதலீடுகளை கொண்டுள்ளது; இது முன்பு அதன் எண்ணெய் வளமுடைய காலனித்துவ பகுதியாக இருந்தது. கடாபிக்குப் பின் ஏற்படக்கூடிய பங்கு போடல்களில் தனக்கு ஒதுக்கீடு குறைந்துவிடுமோ என்று இத்தாலி அஞ்சுகிறது. “லிபிய நெருக்கடி எங்களுக்கு ஒரு கவலை ஆகும்என்று இத்தாலிய எண்ணெய் நிறுவனமான ENI இன் தலைமை நிர்வாகி Paolo Scaroni நேற்று பங்குதாரர்கள் கூட்டத்தில் கூறினார். ஆனால் நம்பிக்கையுடன்எந்த அரசாங்கம் பதவிக்கு வந்தாலும், அது விரைவில் உற்பத்தியை தொடக்குவதில் ஆர்வம் காட்டும். அங்குள்ள எண்ணெய் கிணறுகள் பற்றி நாம் அறிந்துள்ளதுபோல் வேறு எவரும் அறிந்ததில்லை.” என்றார்.

லிபியாவில் இராணுவ தலையீட்டின் அடித்தளமாக இருக்கும் அப்பட்டமான காலனித்துவ கணப்பீடுகள் பற்றி சமீபத்தில் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள அமெரிக்க தூதரகத் தகவல்கள் ஒன்றில் முன்னிழலைக் காட்டியுள்ளன. இந்த இரகசிய ஆவணம், அமெரிக்க தூதர் சார்ல்ஸ் ரிவ்கின் பாரிஸில் இருந்து கடந்த பெப்ருவரி மாதம் அனுப்பியதுபிரான்ஸும் வட ஆபிரிக்காவும்: தற்போதைய செயற்பாட்டு நிலைஎன்ற தலைப்பைக் கொண்டிருந்தது.

பிரான்சின் வெளியுறவு அமைச்சரகத்திலுள்ள அதிகாரி Cyrille Rogeau உடன் நடத்திய இராஜதந்திர விவாதங்களைப் பற்றி எழுதிய ரிவ்கின், “பிரெஞ்சுக்காரர்கள் பெருகிய முறையில் நுழைவு அனுமதிகள், தொழில்நேர்த்தி பரிவர்த்தனைகள், பிரெஞ்சு மொழிக் கல்வி, வணிக உடன்பாடுகள் ஆகியவற்றில் லிபியா உறுதிமொழி காக்காதது பற்றிப் பெரும் திகைப்பும் ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.” என்று கூறியுள்ளார். “நாமும் (மற்றும் லிபியர்களும்) நிறைய விவாதிக்கிறோம், ஆனால் லிபியாவில் சொற்களை அடுத்துச் செயல்கள் வெளிப்படுவதில்லை என்பதைத்தான் காண்கிறோம். லிபியர்கள் நிறையப் பேசுகிறார்கள், ஆனால் நம்மிடம் இருந்து எதையும் வாங்குவதில்லை. இத்தாலியர்களுக்குத்தான் ஒப்பந்தங்கள் கிடைக்கின்றன.” என்று அவர் கூறியதாக தந்தித்தகவல் தெரிவிக்கிறது.