சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

Former billionaire hedge fund manager convicted of insider trading

முன்னாள் கோடீஸ்வர தனியார் முதலீட்டு நிதிய இயக்குனர் பங்குச்சந்தையில் உள்தொடர்பு வணிகத்தில் ஈடுபட்டதற்கு தண்டனை பெறுகிறார்

By Bill Van Auken
13 May 2011
Use this version to print | Send feedback

முன்னாள் தனியார் முதலீட்டு நிதிய (hedge fund) இயக்குனரும் கோடீஸ்வரருமான ராஜ் ராஜரட்ணம் புதன்கிழமையன்று உள்தொடர்பு வணிக ஈடுபாட்டுக் குற்றத்திற்காகத் தண்டனை பெற்றமை மத்திய ஆட்சி வக்கீல்களால் அமெரிக்க நிதித் துறைக்கு அரசாங்கம் வோல் ஸ்ட்ரீட்டில் சட்ட விரோத வழிவகைகளைப் பயன்படுத்தி பெரும் செல்வத்தை தோற்றுவித்துக் கொள்வதை பொறுத்துக் கொள்ளாது என்ற சக்திவாய்ந்த எச்சரிக்கை என வலியுறுத்தி கூறப்படுகிறது.

ஆனால் நிதியச் செய்தி ஊடகத்திற்குள் இத்தண்டனை இது எப்படி தனியார் நிதியச் செயற்பாடுகளைப் பாதிக்கும் என்ற பரந்த, பெரும்பாலும் இழிந்த விமர்சகத்திற்கு ஒரு பொருளுரையாகிவிட்டது. உள்தொடர்பு தகவல்களை தளமாகக் கொண்ட வணிகங்களின் சட்டவிரோத தன்மையை மறைப்பதற்கு இன்னும் கூடுதலான வழிவகைகள் பயன்படுத்தப்படுத்தப்படுதல் பற்றிக் கருத்துக்கள்தான் வெளிவந்துள்ளன.

வியாழக்கிழமை வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் வெளியிட்ட தலையங்கம் ஒன்று வோல் ஸ்ட்ரீட் என்பதே அத்தகைய திருடர்களின் கூட்டம்தான், ஊழலில் நீங்கள் ஈடுபடவில்லை என்றால் ஊழலில் நீங்கள் தள்ளப்பட்டுவிடுவீர்கள்என்ற பொதுக் கருத்து இருப்பதை விளக்குகிறது. பங்குச் சந்தையை கசினோ சூதாட்டத்துடன் ஒப்பிட்டு, கட்டுரை தொடர்கிறது: போக்கர் விளையாட்டு மேசையைச் சுற்றிக் கவனியுங்கள். ஏமாற்றுபவர்களைக் காணவில்லை என்றால், நீங்கள்தான் ஏமாற்றுபவர் என்று வேகாஸில் கூறுவர்.

ஒன்று உறுதி, ராஜரட்ணம் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டது செப்டம்பர் 2008 சரிவிற்கு வழிவகுத்த பொதுவான ஏமாற்றுத்தனம், குற்றம் ஆகியவற்றின் விளிம்பைக்கூடத் தொடவில்லை. அச்சரிவோ பல மில்லியன் உழைக்கும் மக்களை அவர்கள் வேலைகளிலிருந்தும் வீடுகளிலிருந்தும் அகற்றிப் பெருமந்த நிலைக்குப் பின் காணாத அளவிற்கு ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியைத் தூண்டியிருந்தது.

53 வயதான ராஜரட்ணம் Galleon Group தனியார் நிதிய நிர்வாகத்தின் தலைவராக இருந்தவர், 2008 நிதியக் கரைப்பில் அழிக்கப்பட்டுவிட்ட பல டிரில்லியன் சொத்துக்களோடு ஒப்பிடும்போது அந்த வாளியில் ஒரு சொட்டு நீருக்குக் கூட ஒப்புமை கூற முடியாத 64 மில்லியன் டொலர் மொத்த இழப்பைத் தவிர்க்கும் வகையில் சட்டவிரோத இலாபங்களை அடைந்தார் என்ற குற்றத்தைச் செய்தவராக நிரூபிக்கப்பட்டார். நெருக்கடிக்குப் பொறுப்பான நிதிய நிறுவனங்களை அரசாங்கம் பிணை கொடுத்துத் தூக்கிவிட்டது இந்த இழப்புக்களை பொது இருப்புநிலைக் குறிப்புக்களில் தள்ளி, பற்றாக்குறையைக் குறைப்பதற்காக இடைவிடாத சமூகநலச் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கும் வழிவகுத்தது.

அக்டோபர் 2009ல் அவர் கைது செய்யப்படுமுன், ஸ்ரீலங்காவில் பிறந்த ராஜரட்ணம் அமெரிக்காவில் 400 பெரும் செல்வந்தர்களில் ஒருவராகப் பட்டியலில் இடம் பெற்றிருந்தார். Forbes  இதழ் கருத்துப்படி உலகின் பெரும் பணக்காரர்களில் 559வது இடத்தில் இருந்தார். இவருடைய தனிச்சொத்துக்கள் 1.8  பில்லியன் டொலராகும். இவருடைய Galleon தனியார் நிதியம் அதன் உச்சக்கட்டத்தில் 7 பில்லியன் டொலர் மதிப்புடைய சொத்துக்களை நிர்வகித்து வந்தது.

இப்பொழுது இவர் மோசடி, சதித்திட்டம் ஆகியவை அடங்கிய 14 குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டவுடன் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.

நிதிய வணிகத்தில் மிகப் பழைய, மிகப் பொதுவான மோசடிக் குற்றச்சாட்டுக்களில் உள்தொடர்பு வணிக ஈடுபாடும் ஒன்றாகும். இதற்கு எதிரான தடைகள் முந்தைய ஆங்கில, அமெரிக்கப் பொதுச் சட்டங்களில் மோசடிக்கு எதிரான சட்டங்களிலேயே இருந்தன. 1909ம் ஆண்டு இந்த வழக்கத்தைப் பற்றிய தன் முதல் தீர்ப்பை அமெரிக்கத் தலைமை நீதிமன்றம் வழங்கியிருந்தது. அது ஒரு பெருநிறுவன இயக்குனர் பங்கு விலைகள் ஏறக்கூடும் என்பதை உள்தொடர்பு ஈடுபாட்டின் மூலம் அறிந்து அவருடைய பொதுப் பங்குகள் இருந்த நிறுவனத்தின் பங்குகளை விலைக்கு வாங்கிய செயலைப் பற்றியதாகும்.

1934ம் ஆண்டு பத்திரங்கள், பரிமாற்றங்கள் சட்டம் உள்தொடர்பு வணிக ஈடுபாடுகள் மீது தடைகளை நெருக்கியது. மேலும் 1984ல் தலைமை நீதிமன்றம் உள்தொடர்பு பெற்ற எவரேனும் வணிகத்தில் ஈடுபட்டால், தங்களுக்குத் தகவல் கொடுக்கம் நபர் அத்தகைய தகவலைக் கொடுப்பதின் மூலம் தங்களுக்கு நிறுவனத்திலுள்ள நிதியப் பொறுப்பை மீறிய நிலையில் கொடுக்கிறார் என்று நம்புவதற்கும் காரணம் இருந்தால், அவர்களும் குற்றம் இழைத்தவர்கள்தான் என்று கூறியுள்ளது.

நிரூபிக்க மிகக்கடினமான குற்றச்சாட்டுக்களில் இதுவும் ஒன்றாகும். எனவே உள் தொடர்புத் தகவலை வாடிக்கையாக அமெரிக்காவின் நிதிய உயரடுக்கின் உறுப்பினர்கள் இன்னும் கூடுதலான சொத்துக்களைச் சேமிப்பதில் பெரும் பங்கைக் கொண்டிருந்தது.

கடந்த ஒன்றரை ஆண்டில் உட்தொடர்பை ஒட்டிய வணிகம் நடத்தப்பட்டது என்று கூறப்பட்டுத்  தொடர்ந்த குற்றவழக்குகளில் ராஜரட்ணம் வழக்கு ஒரு மிகப் பெரிய இலக்கு ஆகும். இதில் 47 பேர் குற்றச்சாட்டை எதிர்கொண்டனர். பலரும் Galleon நிறுவனத்தின் நிதிய நடவடிக்கைகளுடன் தொடர்பு கொண்டவர். இவர்களுள் 35 பேர் தண்டனை பெற்றுள்ளனர். அல்லது குற்றத்தை ஒப்புக் கொண்டவர்கள். பலர் கூட்டாட்சி வக்கீல்களுக்கு சாட்சியங்களை கொடுத்ததின் மூலம் அதற்கு ஈடாக தண்டனைக்காலக் குறைப்பை பெற முயன்றவர்கள்.

முன்னாள் கூட்டாட்சி வக்கீல் ரோபர்ட் மின்ட்ஸ், ராஜரட்ணம் மீதான வழக்கு ஒரு முக்கியமான வழக்குஎன்று விவரித்தார். வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலிடம் கூறுகையில் முதல் தடவையாக குற்றம்சாட்டும் வக்கீல்கள் உள்தொடர்பு வணிக வழக்கில் தொலைபேசிச் சான்றுகளைப் பயன்படுத்திய வழக்குஆகும் என்பது இதன் தனிச்சிறப்பு ஆகும் என்றார்.

உண்மையில், ராஜரட்ணத்திற்கு எதிரான அழுத்தம் திருத்தமான சாட்சியம் 2,400 இரகசியமாகப் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி அழைப்புக்கள் ஆகும். ஒரு உத்தியோகத்தர் பற்றிய குற்ற வழக்கில் கூட்டாட்சி அரசாங்கம் பயன்படுத்திய தொலைப்பேசி சான்றுகளிலேயே இது மிக அதிகமான அளவைக் கொண்டது ஆகும். நிதியக் குழு இயக்குனர்களில் ஒருவரான ரஜத் குப்தாவிடம் இருந்து கோல்ட்மன் சாஷ்ஸில் காலாண்டு நஷ்டங்கள் ஏற்படக்கூடிய நிலை பற்றிய இரகசியத் தகவலை இவர் பெற்றது ஒரு பதிவு நாடாவில் இருப்பது சான்றுகளில் ஒன்றாகும்.

2008 நிதிய நெருக்கடியின் உச்சக்கட்டத்தில் கோல்ட்மன் சாஷ்ஸின் சிறப்புப் பங்குகளை 5 பில்லியன் டொலருக்கு வாங்கும் வாரன் பபேற் இன் திட்டம் பற்றிய முன்கூட்டிய தகவலையும் குப்தா, ராஜரட்ணத்திற்கு அளித்திருந்தார் என்று அரசாங்க வக்கீல்கள் கூறியுள்ளனர். குப்தா மீது  பத்திரங்கள் மற்றும் பறிமாற்றக் குழு (SEC) சுமத்தும் பாதுகாப்புப் பத்திரங்கள் குறித்த குற்றச்சாட்டுக்களைத்தான் எதிர்கொள்கிறார்.

ராஜரட்ணத்திற்கு எதிரான முக்கிய சாட்சி அனில் குமார் என்பவர் ஆவார். இவர் McKinsey & Company என்னும் ஆலோசனை நிறுவனத்தின் நிர்வாகத்தில் முன்னாள் அதிகாரியாக இருந்தவர். இவர் பத்திரங்கள் மற்றும் பறிமாற்றக் குழு தொடுத்த சதி, பாதுகாப்புப் பத்திரங்கள் மோசடிக் குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுக்களுக்கு ஒப்புதல் வாக்குமூலம் அளித்து, சில ஆதாயங்களை எதிர்பார்த்து இந்த வழக்கில் சாட்சியம் அளிக்க ஒப்புக் கொண்டார்.

வார்ட்டன் வணிக உயர்கூடத்தில் ஒன்றாகப் பட்டம் பெற்ற காலத்தில் இருந்து ராஜரட்ணத்திற்கு நெருக்கமாக இருந்த குமார், ஆண்டு ஒன்றிற்கு தனியார் நிதிய மேலாளரால் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்புடைய இணைப்புக்கள், புதிய சேர்க்கைகள் குறித்த உள்தொடர்புத் தகவல்களுக்காக 50,000 டொலர் கொடுக்கப்பட்டு வந்ததாகச் சாட்சியம் அளித்தார். இந்த நிதி வெளிநாட்டிலுள்ள வங்கிக் கணக்கு ஒன்றில் அவருடைய வீட்டுப் பொறுப்பாளர் பெயரில் துவக்கப்பட்டிருந்ததில் செலுத்தப்பட்டது என்றும் அவர் கூறினார். பத்திரங்கள் மற்றும் பறிமாற்றக் குழு உடன்பாட்டின்படி, ராஜரட்ணத்திடமிருந்து பல ஆண்டுகளாக அவர் பெற்ற 2.8 மில்லியன் டொலரை நிறுவனத்திற்குத் திருப்பி அளித்தல் என்பதுதான் அவருக்குக் கொடுக்கப்பட்ட ஒரே தண்டனை ஆகும்.

தண்டிக்கப்பட்டதையடுத்து வெளியிடப்பட்ட அறிக்கையில் மான்ஹட்டனின் அமெரிக்க வக்கீல் பிரீத் பரரா கூறினார்: “மிக மதிநுட்பம், செயலாற்றல் உடையவர்களுள் ராஜரட்ணமும் ஒருவராவார்-மிகவும் படித்தவர், வெற்றிகரமானவர், நாட்டிலேயே சலுகை பெற்றிருந்த தொழில்நேர்த்தியாளர்களில் ஒருவர். ஆயினும் கூட சமீபத்தில் பலரைப் போலவே இவர் தன் வாழ்வைப் பேராசை மற்றும் ஊழலால் கெடுத்துக் கொண்டுவிட்டார்.”

அல்லது, வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் வியாழன் தலையங்கத்தில் கூறியுள்ளதுபோல்: “அமெரிக்காவோல் ஸ்ட்ரீட்டிற்கு வழக்கமான கண்டனத்தைத் தெரிவித்தது, (போன்ற கருத்துக்கள் மீண்டும் மீண்டும் கூறப்படல்.)

நிதியத் தன்னலக்குழுக்குள் இருக்கும் கருத்தைப் பிரதிபலிப்பது போல் ஜேர்னல் உள்தொடர்பு வணிக விதிகளை சற்றும் மறைக்காத இழிவுடன்தான் காண்கிறது. “உண்மையான உலகில் சில முதலீட்டாளர்கள் சிலவற்றை மற்றவர்களை விட விரைவில் கற்று, தாங்கள் கற்றதில் இருந்து சாமர்த்தியமான நிலைப்பாடுகளைக் கொள்ளுவர்என்று தலையங்கம் கூறுகிறது. ஆனால் சில முதலீட்டாளர்கள்பெரும் செல்வந்தர்கள், நல்ல தொடர்பு உடையவர்களாக இருப்பர். சிலர் சற்றே குறைந்த அதிருஷ்டம் உடையவர்களாக, தாங்கள் வாழ்க்கையின் சேமிப்புக்கள் அனைத்தையும் 401 (k) க்கள் மற்றும் ஓய்வூதியங்களை இழந்துவிடுவர் என்றும் அது கூறுகிறது.

ஜேர்னலின் உள்தொடர்பு வணிகம் பற்றிய பரிகாசமான அணுகுமுறை 2008 நிதியக் கரைப்பிற்கு வழிவகுத்த நிதியக் குற்றங்களில் தொடர்புடைய வோல் ஸ்ட்ரீட்டின் முக்கிய நபர்களில் எவரையும் குற்றச்சாட்டிற்கு உட்படுத்துவதில்லை என்னும் அரசாங்கத்தின் முடிவைத்தான் பிரதிபலிக்கிறது.

விசாரணையின் அப்பட்டமான ஏற்க முடியாத நிலைப்பாடுகளில் ஒன்று கோல்ட்மன் சாஷ்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியும், தலைவருமான ரொய்ட் பிளாங்கபெயினை சாட்சியாக  அரசாங்கம் குறிப்பிட்டது ஆகும். அவர் ராஜரட்ணத்திற்கு இரகசியத் தகவல்களைக் கசிய விட்டது கோல்ட்மனின் விதிகளை மீறியது என்று சாட்சியம் அளித்தார்.

எங்கள் நிறுவனத்திலிருந்து அதற்கு உரியகாலம் வரை தகவல்கள் வெளியே போவதை நாங்கள் விரும்பவில்லைஎன்றார் பிளாங்பீன்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் கோல்ட்மன் சாஷ்ஸ், நிதியக் கரைப்பிற்கு முன் உபயோகமற்றப் பாதுகாப்புப் பத்திரங்கள் 2 பில்லியன் டொலர் மதிப்புடையதை கோல்ட்மன் வெளியிட்டதில் இருந்து எழுந்த மோசடித்தன தவறான நடவடிக்கைபற்றிய பத்திரங்கள் மற்றும் பறிமாற்றக் குழுவின் உரிமையில் குற்றச்சாட்டுக்களைத் தீர்த்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டது. இந்த பத்திரங்கள் மற்றும் பறிமாற்றக் குழுவின் குற்றச்சாட்டு கோல்ட்மன் சாஷ்ஸுக்கும் தனியார் முதலீட்டு நிதிய இயக்குனர் ஜோன் பால்சலுக்கும் இடையே ஏமாறும் முதலீட்டாளர்கள் ஏமாந்து நில அடைமான உத்தரவாதத்தின்பேரில் கிடைக்கும் கடன் நிதியை (CDO)  வாங்க வைக்கும் வகையில் சதித்திட்டம் இருந்தது என்று கூறியுள்ளது. பால்சன் CDO வின் கீழிருந்த அடமானங்களின் இழப்புகளை பற்றி பந்தயம் கட்டி 1பில்லியன் டொலர் இலாபத்தை அடைந்ததுடன், கோல்மனின் முதலீட்டாளர்களின் இழப்புகளால் இலாபமடைந்தார்.

இந்த வழக்கில் ஒரு தனி சமரசத்தைக் கொள்வதற்கு கோல்ட்மன் சாஷ் அனுமதிக்கப்பட்டது. ஆனால் இன்றளவும் அமெரிக்கப் பொருளாதாரத்தைப் பீடித்துள்ள பேழிவு தரும் நெருக்கடியின் மையத்தானம்வரை சென்ற இவ்விடயம்  550 மில்லியன் டொலரில் முடித்துக் கொள்ள இடமளிக்கப்பட்டுள்ளதுஇது கிட்டத்தட்ட வங்கியின் ஆண்டு வருமானத்தில் இரு வார வருமானத்திற்கு ஒப்பானதுதான்.

ராஜரட்ணத்திற்கு எதிரான சாட்சியங்களாக அளிக்கப்பட்டுள்ள பதிவு நாடாக்கள் அவர் உள்தொடர்பு வணிகத்தில் ஈடுபடவில்லை என்று வாதிட இடம் அளிக்கவில்லை என்றாலும், முன்பு முறையான பெரும் குற்றம் அல்லது பயங்கரவாதச் சந்தேகத்திற்கு உரியவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்த ஆழ்ந்த கண்காணிப்பிற்கு இவர் ஏன் உட்படுத்தப்பட்டார் என்பது ஒரு பிரச்சினையாகத்தான் உள்ளது.

மத்திய ஆட்சியின் கவனம் முன்னதாக தனியார் முதலீட்டு நிதிய இயக்குனர் மீது அவருடைய முதலீட்டு நடவடிக்கைகளுடன் தொடர்பற்ற பிரச்சனைகளில்தான் குவிப்பைக் காட்டியது. 2008ல் நியூ யோர்க் ப்ரூக்லின் கூட்டாட்சி நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட குற்றவியல் புகார் ஒன்றில், ஒரு ஸ்ரீலங்கா தமிழரான ராஜரட்ணம், வாஷிங்டன் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புஎன்று பட்டியலிட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு (LTTE) நிதிகளைத் திருப்பிவிடுவதற்காக அறக்கட்டளை ஒன்றிற்கு நன்கொடைகள் கொடுத்து அத்துடன் நெருக்கமாக ஒத்துழைத்தும் வந்தவர் என்று விவரிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்படாவிட்டாலும், ராஜரட்ணம் தமிழர் புனர்வாழ்வு அமைப்பிற்கு (Tamil Rehabilitation Organization)  இரு தடவைகள் 1 மில்லியன் டொலர் நன்கொடைகள் கொடுத்ததாகக் கூறப்பட்டது. அவை ஸ்ரீலங்காவில் சிறுபான்மை இன தமிழர்களின் அறக்கட்டளை என்பதற்காகும் என்று கூறப்பட்டது. மத்திய அரசாங்க வக்கீல்கள் கருத்துப்படி இந்த நன்கொடைகள் மற்றொரு அமைப்பான உலகத் தமிழ் ஒருங்கிணைப்புக் குழுவிற்கு இயக்கப்பட்டன. அரசாங்கம் அந்த அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்பு என்று கூறுகிறது.

இதன் பின்னர் ராஜரட்ணம் நியூஜெர்சியில் நெவார்க் கூட்டாட்சி நீதிமன்றத்தில் ஸ்ரீலங்காவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் குண்டுவீச்சுக்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு கொடுப்பதாகக் கூறும் வக்கீல்கள் தொடுத்த வழக்கை எதிர்கொண்டார். இவர் கொடுத்த நன்கொடைகளால் இவருக்கும் இழப்புக்கள் ஏற்படுத்தியதில் பொறுப்பு உண்டு என்று வக்கீல்கள் வாதிட்டனர்.

தனியார் முதலீட்டு நிதிய இயக்குனருக்கு எதிராகச் செய்யப்பட்ட தொலைபேசி ஒற்றுக்கேட்டல் தன்மையின் முன்னோடியில்லாத தன்மையைக் காண்கையில், இவர் முன்னதாக தமிழ் அறக்கட்டளை மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளுடன்  தொடர்புடைய வழக்கிலும் இரகசியக் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டிருந்தாரா என்ற வினா எழுகிறது. ஏனெனில் அவற்றில்தான் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளின் பேரில் தொலைபேசி ஒற்றுக்கேட்டல்களுக்கான ஆணைகள் பெறப்பட முடியும்.

மத்திய தேர்தல் குழுவிலுள்ள கோப்புக்களின்படி ராஜரட்ணம் ஜனநாயகக் கட்சிக்கும் முக்கிய நன்கொடை கொடுத்தவர் ஆவார். பராக் ஒபாமாவின் ஜனாதிபதித் தேர்தல், ஜனநாயகக் கட்சியின் தேசியக் குழு மற்றும் செனட்டர்கள் ஹில்லாரி கிளின்டன், நியூ யோர்க்கின் சார்ல்ஸ் ஷ்யூமர் மற்றும் நியூ ஜேர்சியில் ரோபர் மென்டெஸ் ஆகியோரின் தேர்தல் பிரச்சாரங்களுக்கும் 87.000 டொலருக்கும் மேல் நன்கொடை கொடுத்துள்ளதாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.