சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India: Stalinist-led Left Front suffers debacle in state elections

இந்தியா ஸ்ராலினிஸ்ட்டுக்கள் தலைமையிலான இடது முன்னணி மாநில தேர்தல்களில் பின்னடைவு

By Keith Jones 
14 May 2011
Use this version to print | Send feedback

ஏப்ரல் மற்றும் மே தொடக்கத்தில் நடைபெற்று, நேற்று தொகுத்துக் கூறப்பட்ட தொடர்ச்சியான மாநிலத் தேர்தல்கள் முடிவுகளில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் அதன் இடது முன்னணி அதிர்ச்சிக்கு உட்பட்ட தோல்வியைச் சந்தித்துள்ளது.

கடந்த 34 ஆண்டுகளாக அது ஆட்சி நடத்தி வந்த மேற்கு வங்கத்தில், ஸ்ராலினிஸ்டுக்கள் தலைமையிலான இடது முன்னணி பெரும் தோல்வியைச் சந்தித்து, சட்டமன்ற இடங்களில் ஐந்தில் ஒரு பகுதியைக் கூடக் கைப்பற்ற முடியவில்லை. மேற்கு வங்க முதல் மந்திரியும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்ஸிஸ்ட்) பொலிட்பீரோ உறுப்பினருமான புத்ததேப் பட்டாச்சார்ஜி, நிதி மந்திரி அசிம் தாஸ்குப்தா மற்றும் 34 உறுப்பினர்கள் கொண்ட இடது முன்னணி அமைச்சரவையில் 24 பேர் தேர்லில் மறுபடியும் வெற்றிபெற முடியவில்லை. மிக அதிகமாக 85 சதவிகித வாக்காளர்கள் வாக்களித்த நிலையில், மக்கள் வாக்குகளில் இடதின் பங்கு 9 சதவிகிதப் புள்ளிகள் 2008 மாநிலத் தேர்தல்களிலிருந்து குறைந்துவிட்டன.

மற்றொரு முக்கிய CPM தேர்தல் கோட்டையான கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி (உள்ளூரில் இடது முன்னணி என்று அழைப்க்கப்படும்)  ஆக ஐந்து ஆண்டு வரைகாலம் பதவியில் இருந்தபின் தோற்கடிக்கப்பட்டது.

இந்தப் பின்னடைவுகள் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது CPM என்பதையும் அதன் இடது நட்புக் கட்சிகளையும் இந்திய ஒன்றியத்தில் மிகச் சிறிய மாநிலமான திரிபுராவில் மட்டுமே ஆட்சியை நடத்தும் நிலைக்கு தள்ளிவிட்டன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இடது முன்னணி இதே போன்ற சங்கடத்தை தேசியத் தேர்தல்களில் அடைந்தது. இந்தியாவில் இரு மன்றப் பாராளுமன்றத்தின் கீழ் மற்றும் முக்கிய பிரிவான லோக் சபாவில் அதன் உறுப்பினர் எண்ணிக்கை முன்பைவிட பாதிக்கும் கீழாகக் குறைந்தது.

ஸ்ராலினிஸ்ட்டுக்களின் தோல்வியை இந்தியப் பெருவணிகம் பாராட்டியுள்ளது. இந்தியாவின் முக்கிய பங்குச் சந்தைக் குறியீடுகள் காங்கிரஸ் கட்சி தலைமையிலான தேசிய அரசாங்கம் சந்தைச் சீர்திருத்தங்களை விரைவுபடுத்தும் என்ற எதிர்பார்ப்பில் தீவிரமாக உயர்ந்தன. இச்சீர்திருத்தங்களுள் தனியார்மயமாக்குதல், தொழிலாளர் நலச் சட்டங்கள் தூர எறியப்படுதல் ஆகியவை அடங்கும். இதைத்தவிர மேற்கு வங்கத்தில் புதிய திருணாமூல் (அடிமட்ட) காங்கிரஸ் முதலாளித்துவ மறுகட்டமைப்பிற்கு ஒரு உந்துதலாக இருக்கும், மாநில வரவு-செலவுப் பற்றாக்குறைகளைத் தீவிரமாகக் குறைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கும் என்ற உந்துதலும் இதில் உள்ளது.

மேற்கு வங்கத்தின் புதிய நிதி மந்திரியாக வெற்றிபெற்ற திருணாமூல் காங்கிரஸ் வேட்பாளர் அமித் மிஸ்ரா வருவார் என்று பரந்த முறையில் எதிர்பார்க்கப்படுகிறது. இவர் நீண்ட நாட்களாக நாட்டின் முக்கிய வணிகச் செல்வாக்கு நாடும் குழுக்களில் ஒன்றான இந்திய வணிக, தொழில்துறைக் குழுவின் பொதுச் செயலாளர் ஆவார்.

ஆனால் வலதுசாரிக் கொள்கைகளுக்கு பெரும் மக்கள் ஆதரவு எனக் கூறுவதற்குப் அப்பால், ஸ்ராலினிஸ்டுக்கள் ஏற்றுள்ள தொடர்ச்சியான தேர்தல் தோல்விகள் அவர்களுடையமுதலீட்டாளர்-சார்புகொள்கைகள் மற்றும் இந்தியாவை ஒரு குறைவூதியத் தொழிலாளர் தொகுப்பாக உலக முதலாளித்துவத்தின் உற்பத்திக்கு மாற்றுதல் என்று இந்திய முதலாளித்துவம் கொண்டுள்ள திட்டங்களை மக்கள் நிராகரித்ததால் ஏற்பட்டதாகும்.

2004 தேசியத் தேர்தல்களில் இடது முன்னணி முன்பு எப்பொழுதும் இருந்ததைவிட அதிக தொகுதிகளில் வென்றது. பின்னர் தன்னுடைய செல்வாக்கை மரபார்ந்த இந்திய முதலாளித்துவத்தின் கட்சி காங்கிரஸை ஒரு கூட்டணி அரசாங்கம் அமைக்க உதவியது. மே 2004 ல் இருந்து ஜூன் 2008 வரை நான்கு ஆண்டுகளுக்கு UPA எனப்பட்ட காங்கிரஸ் தலைமையிலான சிறுபான்மை ஐக்கிய முற்போக்கு கூட்டிற்கு இடது பாராளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு உதவியது. அதே நேரத்தில் UPA அதற்கு முன்பு பதவியிலிருந்த பாரதீய ஜனதாக் கட்சியின் (BJP) கொள்கைகளிலிருந்து அதிக மாறுதல் இல்லாத கொள்கைகளைத்தான் செயல்படுத்துகிறது என்றும் கூறிவந்தது.

இதற்கிடையில் மேற்கு வங்கத்தில் இடது முன்னணி தானே முதலீட்டாளர் சார்பு என்று விபரித்திருந்த கொள்கைகளைத்தான் தொடர்ந்தது. இவற்றுள் தகவல் தொடர்பு, அத்துடன் பிணைந்த தொழில்துறைகளில் வேலைநிறுத்தங்களை சட்டவிரோதமாக்கியது, “நலிந்தபொதுத்துறைப் பிரிவுகளை மூடல் அல்லது விற்றல், பெருவணிகத்திற்கு வரிச் சலுகைகள் என்ற பெயரில் நலன்களைச் செய்தல், பொலிஸ் மற்றும் குண்டர் வன்முறையை சிறப்புப் பொருளாதாரப் பகுதி மற்ற பெரு வணிகத் திட்டங்களுக்காக நிலத்தை அபகரிக்கையில் அந்த விவசாயிகள் எதிர்ப்பை அடக்குதல் ஆகியவை அடங்கியிருந்தன.

இவ்வகையில் வலதிற்குப் பாய்ந்தது, காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து வந்த ஒரு வலதுசாரி வங்காள பிராந்தியக் கட்சியான திருணாமூல் காங்கிரஸிற்கு விவசாயிகள் அதிருப்தி, வேலையின்மை மற்றும் அரசாங்க ஊழல்களால் ஏற்பட்டிருந்த பரந்த சீற்றம் இவற்றிற்கு வெகுஜன முறையீடு செய்ய வழிவகுத்தது.

இந்த இழிந்த தந்திர உத்திக்கு பல வார்த்தைஜால சோசலிச அமைப்புக்களின் உதவி கிடைத்தது. அதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்டுக்கள்) என காடுகளிலும் உயர் நிலப் பகுதிகளிலும் மேற்கு வங்கம் உட்பட, கிழக்கு இந்தியாவிலுள்ள பழங்குடி மக்களின் எழுச்சிக்குத் தலைமை தாங்கிய அமைப்பு இருந்தது. CPM ன்சமூக பாசிசத்தை எதிர்த்தல் என்ற பெயரில் இந்த அமைப்புக்கள் TMC ஐ இடது முன்னணி அரசாங்கத்தின் நந்திகிராம், சிங்கூர் போன்ற இடங்களில் நில அபகரிப்புக்களுக்கு எதிரான விவசாயிகளின் அணிதிரள்வைமுற்போக்கு நட்பு அமைப்பு என்று ஏற்றன. மேலும் அவை TMC  காங்கிரஸ் தலைமையிலான UPA ல் சேர்ந்த பிறகும் கூட TMC வளர்ச்சிக்கும் ஆதரவு கொடுத்தன. CPI (மாவோயிஸ்ட்டுக்கள்) TMC யின் தலைவர் மமதா பானர்ஜி மேற்கு வங்கத்தின் முதல் மந்திரியாக வருவதற்கு ஆதரவு கொடுக்கப்படும் என்று கூறுமளவிற்கு அந்த ஆதரவு இருந்தது.

இப்பொழுது முடிந்துள்ள தேர்தல் பிரச்சாரத்தின்போது TMC வறியவர்களின் நட்புக் கட்சி என்று தன்னைத் தொடர்ந்து காட்டிக் கொண்டது. அதே நேரத்தில் பெருவணிகத்திற்கு செலவுகள் குறைக்கப்படும், அரசாங்கத்தை அமைத்தால் அது சந்தைச் சார்பு கொள்கைகளைச் செயல்படுத்தும் போன்றவற்றிற்கும் அடையாளத்தைக் காட்டியது.

இப்பொழுது மேற்கு வங்கத்தில் 294 சட்டமன்ற  இடங்களில் 184 இடங்களைப் பெற்றுள்ளது. ஆனால் பானர்ஜி தன்னுடைய உண்மையான செயற்பட்டியல் வெளியிடப்படும்போது மக்களிடமிருந்து விரோத விடையிறுப்பை எதிர்பார்க்கிறார் என்றாலும், TMC தலைவர் அதன் தேர்தல் நட்புக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் இந்திய சோசலிச ஐக்கிய மையம் ஆகியவையும் அரசாங்கத்தில் சேர வேண்டும் என்று விரும்புவதாகக் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியும் மாநிலச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை தன் கொள்கைகளின் வெற்றியாக தம்பட்டம் அடிக்கிறது. வெள்ளியன்று பேசிய UPA வின் நிதி மந்திரியும் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியை வழிநடத்துபவருமான பிரணாப் முக்கர்ஜி இடதையும் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியான BJP ஐயும் எள்ளி நகையாடி, அவை UPA  அரசாங்கத்தைஉறுதிகுலைக்கும்முயற்சிகளை நிறுத்த வேண்டும் என்று கோரினார். இது கடந்த ஆண்டு உயர்ந்த எரிபொருள் கட்டணங்களையொட்டி கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை பற்றிய குறிப்பு ஆகும். மேலும் சமீபத்தில் எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் பெரும் ஊழல்களை அம்பலப்படுத்தியதையொட்டி நிகழ்த்திய தாக்குதல்கள் பற்றிய குறிப்பும் ஆகும்.

கிழக்கு இந்திய மாநிலங்களான மேற்கு வங்கம், அஸ்ஸாம், தெற்கே இரு மாநிலங்கள் (கேரளா, தமிழ்நாடு) மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் (பாண்டிச்சேரி) ஆகியவற்றில் 800 சட்டமன்ற இடங்கள் போட்டிக்கு உட்பட்ட நிலையில், BJP பத்துக்கும் குறைவான இடங்களில்தான் வெற்றிபெற்றது என்று முகர்ஜி குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் வடக்கு ஹிந்தி பேசும் பகுதிகளில் மட்டும் வேர்களைக் கொண்ட கட்சியான BJP இந்தியாவின் தென்பகுதியில் கர்நாடக மாநிலத்தைத் தவிர வேறு எங்கும் கணிசமான சக்தியாக இல்லை. அஸ்ஸாமிலும், நாட்டின் நான்காவது மிக அதிக மக்கட்தொகையைக் கொண்டுள்ள மேற்கு வங்கத்திலும் கூட ஓடிய கட்சி என்ற நிலைப்பாட்டைத்தான் கொண்டுள்ளது.

ஆனால் இப்பொழுது காங்கிராஸ் களிப்பில் கூவுகிறது என்றால், அதற்குக் காரணம் அதன் முக்கிய அனைத்து இந்தியக் கட்சிகளின் வலுவற்ற தன்மைதான்.

தேர்தல் முடிவுகள் ஒன்றும் காங்கிரஸ் கட்சிக்கும் UPA க்கும் சீரான முறையில் சாத்தியமாக இல்லை.

கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி இடதைச் சிறு வித்தியாசத்தில்தான் தோற்கடிக்க முடிந்தது. இது 72 தொகுதிகளில் வெற்றி பெற்றபோது, இடது ஜனநாயக முன்னணி 68 இடங்களைப் பெற்றது. மக்கள் மொத்த வாக்கில் இது 46 சதவிகிதத்தைப் பெற்ற நிலையில் இடது 45 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில், காங்கிரஸும் அதன் UPA பங்காளியுமான DMK யும் அவமானகரமான தோல்வியை DMK யின் தீரா விரோதியும் சக திராவிட (தமிழ்) மாநிலக் கட்சியுமான AIADMK இடம் அடைந்தன.

2006ல் இருந்து காங்கிரஸிற்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுத்துவரும் ஒரு சிறுபான்மை அரசாங்கத்தை அமைத்திருந்த DMK தன் சட்டமன்றப் பிரதிநிதித்துவம் முக்கால் பங்கு குறைக்கப்பட்டுவிட்டதைக் காண்கிறது. தன் பங்கிற்கு காங்கிரஸ் கட்சி 234 உறுப்பினர்கள் கொண்ட தமிழ்நாடு சட்ட மன்றத்தில் 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

DMK-காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரம் மாநிலத்தின் சமீபத்தியப் பொருளாதார வளர்ச்சி பற்றி அதிகம் கூறியது. இதில் உற்பத்தித் துறையில் கணிசமான விரிவாக்கம் இருந்தது என்றும் கூறப்பட்டது. ஆனால் இந்தியாவின் மற்ற இடங்களைப் போல் இங்கும், பொருளாதார வளர்ச்சி என்பது பெருகியப் பொருளாதாரப் பாதுகாப்பின்மை, சமூக சமத்துவமின்மை பரந்து விரிந்து நிற்கும் நிலை ஆகியவற்றுடன்தான் பிணைப்பைக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு DMK மாநில அரசாங்கம் பல வேலைநிறுத்த அலைகளை முறிக்க, பொலிஸ் அடக்குமுறை மற்றும் அதன் முதலாளி சார்பு தொழிலாளர் முன்னணியையும் பயன்படுத்தியது.

DMK - காங்கிரஸ் கூட்டு 2G அலைக்கற்றை ஊழலாலும் பெரும் பாதிப்பிற்கு உட்பட்டது. இதில் தொலைத் தொடர்புத்துறையில் அலைக்கற்றை விற்பனை மிகக் குறைந்த விலையில் செய்யப்பட்டது. மேலும் பல நிகழ்வுகளில் பல நிறுவனங்கள் அவற்றை வாங்கி மற்ற நிறுவனங்களுக்குப் பெரும் இலாபத்தில் விற்றன. இப்பொழுது பதவியிழந்துள்ள மத்திய தொலைத்தொடர்பு மந்திரி ஏ. ராஜா என்பவர் 2G விற்பனையை முழுமையாக நடத்தினார். இவர் ஒரு DMK தலைவர் ஆவார். இந்த 2G ஊழலில் தொடர்பு கொண்டு இப்பொழுது ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு முகம் கொடுப்பவர் கனிமொழி ஆவார். இவர் பாராளுமன்றத்தில் DMK  உறுப்பினர் என்பதோடு பதவியில் இருந்து வெளியேறும் முதல் மந்திரி மு.கருணாநிதியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னிந்தியாவில் முன்னாள் பிரெஞ்சுக் காலனித்துவ பகுதியாகவிருந்த புதுச்சேரி என்னும் யூனியன் ஆட்சிப் பகுதியில், உள்ளூர் காங்கிரஸ் அரசாங்கம் பிளவுற்ற காங்கிரஸ் தலைவரால் தொடங்கப்பட்டஎன்.ரங்கசாமி காங்கிரஸ்மற்றும் AIADMK உடன் கொண்ட தேர்தல் கூட்டணியினால் தோல்வியை அடைந்தது.

TMC க்கு இளைய பங்காளி போன்ற நிலையில் இருந்த மேற்கு வங்கத்தைத் தவிர, காங்கிரஸ் அஸ்ஸாம் ஒன்றில்தான் மக்கள் வாக்கில் தன் பங்கைக் கணிசமாக உயர்த்தியுள்ளது. அஸ்ஸாமில் காங்கிரஸ் மூன்றாவது முறையாக அரசாங்கம் அமைப்பதில் வெற்றி கொண்டது. இம்முறை பெரும்பாலான சட்டமன்றத் தொகுதிகளில் தேசிய, இனவழி, வகுப்புவாத, சாதியக் கட்சிகளின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த எதிர்த்தரப்பை வெற்றி கொண்டது.

தமிழ் நாட்டில் இரு ஸ்ராலினிசப் பாராளுமன்றக் கட்சிகளான CPM  மற்றும் CPI இரண்டும் கையளவு கூடுதல் இடங்களைப் பெற்றன. இதற்குக் காரணம் அவை முன்னாள் ஹிந்து மேலாதிக்க BJP பங்காளியான AIADMK யின் கூட்டணி உதவியை தயவுடன் நாடி நின்றதால்தான்.

முன்பு AIADMK பதவியில் இருந்தபோது, அது தொழிலாள வர்க்கத்தை வன்முறையில் தாக்கி, வேலைநிறுத்தங்களை கருகாலிகளைப் பயன்படுத்தியும் பெரும் துப்பாக்கிச் சூடுகளை நடத்தியும் மாநில அரசாங்க ஊழியர்கள் 200,000 பேர் நடத்திய வேலைநிறுத்தத்தை நசுக்கியது. ஆயினும்கூட ஸ்ராலினிஸ்ட்டுக்கள் இதை DMK ஐவிடமுற்போக்கான மாற்றீடு என்று கூறி அதைத் தழுவி நிற்பதுடன், அதன் தலைவரான சுடர்வீசும் முன்னாள் திரைப்பட நடிகையான ஜெயலலிதா மக்களிடையே மீண்டும் செல்வாக்கு ஏற்றத்தைப் பெற உதவின. சமீப மாதங்களில் CPM பிணைப்பு உடைய CITU பலமுறையும் தொழிலாளர்களை தேர்தல்களுக்குப் பின்னர் அதாவது மீண்டும் வலதுசாரி AIADMK பதவிக்கு வந்தபின் தொழிலாளர்களின் நிலை முன்னேறும் என்ற பொய்யை பரப்பி அவர்களுடைய போராளித்தன போக்கைக் கைவிடச் செய்தது.

மேற்கு வங்கத்தில் அடைந்த தோல்வியை எதிர்கொள்ளும் வகையில், CPM வரவிருக்கும் TMC தலைமையிலான அரசாங்கத்துடன் ஒத்துழைக்கத்தான் தயார் என்று அறிவித்துள்ளது. “அடக்கத்துடன் தேர்தல் முடிவுகளை நாங்கள் ஏற்கிறோம்என்று CPM ன் பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் அறிவித்தார். “மாநிலத்தில் பொறுப்பான எதிர்க்கட்சியாக நாங்கள் இருப்போம்என்றார் அவர்.

இவ்விதபொறுப்புபற்றிய உறுதிமொழிகளில் உறுதியான பொருள் உள்ளது. CPM தன்னால் இயன்ற செல்வாக்கைப் பயன்படுத்தி, அதன் பாராளுமன்ற இடங்கள் மற்றும் CITU கருவியின் மீதான கட்டுப்பாடு ஆகியவற்றை பயன்படுத்தி, மேற்கு வங்கத்தின் புதிய வலதுசாரி அரசாங்கத்திற்கு எதிராக வெடிக்கவுள்ள தொழிலாள வர்க்க எழுச்சியை நெரித்துவிடும்.