சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

International Monetary Fund chief indicted on sexual assault charges

சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டுக்களுக்கு உட்பட்டுள்ளார்

By Alex Lantier 
16 May 2011
Use this version to print | Send feedback

சர்வதேச நாணய நிதியின் (IMF) தலைவர் டொமினிக் ஸ்ட்ராஸ் கான் நியூ யோர்க் நகர் சோஃபிடெல் ஹோட்டலில் பணிப்பெண்ணுடன் ஞாயிறு காலை குற்றஞ்சார்ந்த பாலியல் நடவடிக்கைகள், பாலியல் வல்லுறவு முயற்சி, சட்டவிரோதமாக அடைத்து வைத்திருத்தல் ஆகிய குற்றங்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார்.

ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெலுடன் கிரேக்கப் பிணையெடுப்பு மற்றும் ஐரோப்பிய நிதிய நெருக்கடிகள் பற்றி விவாதிப்பதற்கு பேர்லினுக்கு ஸ்ட்ராஸ் கான் பயணிக்க இருந்தார். பிரான்சின் முக்கிய முதலாளித்துவஇடது கட்சியான”  சோசலிஸ்ட் கட்சியின் (PS)  உயர்மட்ட அதிகாரிகளுடனும் அவர் பேசுவதற்குத் திட்டமிட்டிருந்தார். இக்கட்சியில் இவர் ஒரு உயர்மட்ட உறுப்பினர் ஆவார். நேற்று வரை 2012 ஆண்டு பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தல்களில் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசிக்கு சவால் விடக்கூடிய PS ன் வேட்பாளர் என்று கருதப்பட்டிருந்தார்.

ஆனால் 32 வயதான சோஃபிடெல் ஊழியர் கூற்றுப்படி, அவரை சனி பிற்பகல் 1 மணிக்கு ஸ்ட்ராஸ் கான் நாள் ஒன்றிற்கு 3,000 டொலர் வாடைகை கொடுத்து தங்கி இருந்த அறையில், அவர் இன்னமும் அங்கு இருக்கிறார் என்று தெரியாத நிலையில், அதைச் சுத்தப்படுத்துவதற்காகச் சென்றிருக்கையில் ஸ்ட்ராஸ் கானால் தாக்கப்பட்டார். குளியல் அறையில் இருந்து அவர் நிர்வாணமாக வெளிப்பட்டதாகவும், ஊழியரை நடு அறை வரை துரத்திக் கொண்டு சென்றதாகவும், பின்னர் ஒரு படுக்கை அறைக்கு இழுத்துச் சென்று பாலியல் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. ஊழியர் பின்னர் விடுவித்துக் கொள்ள முடிந்தது என்றும் தெரியவருகிறது.

இப்பெண்மணி தப்பிய பின்னர் அவர் மற்றய ஹோட்டல் ஊழியர்களிடம் தகவலைத் தெரிவித்தார். அவர்கள் நியூ யோர்க் பொலிஸ் துறையை (NYPD) அழைத்தனர். அமெரிக்க அதிகாரிகள் கூற்றுப்படி ஸ்ட்ராஸ் கான் பின் அவருடைய ஹோட்டல் அறையை விட்டுத் தன் கைபேசியையும் விட்டுவிட்டு ஓடியிருந்தார். ஆனால் நியூ யோர்க் துறைமுக அதிகாரம் மற்றும் நியூ ஜேர்சி பொலிஸ் அதிகாரிகளால் ஏயர் பிரான்ஸ் விமானம் 23ல் 4.40 பிற்பகல் முதல் வகுப்பு அறையில் பாரிஸுக்கு விமானம் புறப்படவிருந்த 10 நிமிடங்களுக்கு முன் தடுத்து நிறுத்தப்பட்டார்.

சோஃபிடெல் ஊழியர், மன்ஹட்டனின் ரூஸ்வெல்ட் மருத்துவமனைக்கு சிறு காயங்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டார். சோஃபிடெல்லின் உரிமை நிறுவனமான Accor சங்கிலித்தொடர் நிறுவனத்தில் மேலாளராகவுள்ள Jorge Tito, “நியூ யோர்க்கிலுள்ள சோபிடெலில் எங்கள் ஊழியர், மூன்று ஆண்டுகளாக வேலை புரிகிறார், அவருடைய பணி, நடத்தை ஆகியவை முற்றிலும் திருப்திகரமானவை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்என்று அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

ஞாயிறு அதிகாலை 2.15 க்குக் கைது செய்யப்பட்டு ஸ்ட்ராஸ் கான் NYPD யின் சிறப்புப் பாதிக்கப்பட்டோர்கள் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஸ்ட்ராஸ் கானின் வக்கீல் Benjamin Brafman தன்னுடைய கட்சிக்காரர் அனைத்துக் குற்றங்களையும் மறுப்பதாகவும் குற்றமற்றவர் என வாதிட உள்ளார் என்றும் கூறினார்.

முன்னாள் தொலைக்காட்சி செய்தியாளரும், ஸ்ட்ராஸ் கானின் மூன்றாம் மனைவியுமான Anne Sinclair (கலைச் செல்வந்தர் Paul Rosenberg இன் பல மில்லியன் சொத்துக்களுக்கு வாரிசுதாரர்), ஒரு சுருக்கமான அறிக்கையை வெளியிட்டுஅவருடைய நிரபராதத் தன்மை நிருபீக்கப்படும்என்பதில் தனக்குச் சந்தேகம் இல்லை என்று கூறியுள்ளார். France-Soir ல் வந்துள்ள ஒரு தகவலின்படி இப்பெண்மணி சோஃபிடெல் ஊழியரை விசாரிக்கத் திட்டமிட்டுள்ளார்.

IMF செய்தித் தொடர்பாளர் ஒருவர் ஸ்ட்ராஸ் கான் கைதானதை ஒப்புக் கொண்டு, “IMF முற்றிலும் செயல்பட்டு வருகிறதுஎன்றும் தெரிவித்தார். முன்னாள் JP Morgan மற்றும் அமெரிக்க நிதி அமைச்சரகத்துறையின் நிர்வாகி John Lipsky, IMF ல் இரண்டாவது உயரிட அதிகாரியாக இருப்பவர், இடைக்கால நிர்வாக இயக்குனராகச் செயல்பட உள்ளார் என்றும் தெரிவித்தார்.

ஸ்ட்ராஸ் கான் சமீப ஆண்டுகளில் வலதுசாரி மற்றும் PS ஆதாரங்களிடமிருந்து பாலியல் முறையற்ற செயல்களில் பலமுறையும் ஈடுபட்டதான குற்றச்சாட்டுக்களை முகங்கொடுத்துள்ளார். 2007ம் ஆண்டு செய்தியாளர் Tristane Banon ஸ்ட்ராஸ் கானால் பாலியல் முறையில் பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் தாக்கப்பட்டதாகவும், அவருடைய வேலைக்கு முற்றுப்புள்ளி ஏற்படும் என்ற அச்சத்தில் குற்றச்சாட்டுக்களை வலியுறுத்தவில்லை என்றும் கூறினார். 2008ல் PS பாராளுமன்ற உறுப்பினர் Aurélie Filipetti, ஸ்ட்ராஸ் கானிடம் இருந்துமிக அப்பட்டமான, இடைவிடாதவற்புறுத்தலுக்குப் பின்ஒரு மூடிய பகுதியில் நான் அவருடன் தனியாக இல்லாமல் இருக்குமாறு பார்த்துக் கொண்டேன்என்றார்.

2008ல் IMF ஊழியரும் ஹங்கேரியப் பொருளாதார வல்லுனர் Piroska Nagu விவகாரம் அம்பலம் ஆனதற்குப் பின் IMF விசாரணை ஒன்று இந்த உறவுநெறிமுறைகளில் தீவிரப் பிழை என்பதைப் பிரதிபலிக்கிறதுஎன்ற முடிவிற்கு வந்தது.

பல சோசலிஸ்ட் கட்சி அரசாங்கங்களில் மந்திரியாக இருந்த ஸ்ட்ராஸ் கான் அந்த அமைப்பின் பிற்போக்குத்தன அரசியலின் உருவகமாக உள்ளார் இக்கட்சி நிதியப் பிரபுத்துவத்தின் சோசலிசத்திற்கான ஆழ்ந்த விரோதப் போக்கையும் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்கள் பற்றிய விரோதப் போக்கையும் கொண்டுள்ளது. ஆழ்ந்த நேர்மையற்ற தன்மை, மற்றும் பிரான்ஸில் பலஇடதுகுழுக்களின் பிற்போக்குத்தனப் பங்கு ஆகியவற்றை அடிக்கோடிட்டுக்காட்டுகிறது அதில் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA), தொழிலாளர் போராட்ட அமைப்பும் (LO) அடங்கும். இவை இன்னும் PS ஐ ஒரு சோசலிஸ்ட் அல்லதுஇடதுகட்சியாக காட்டுகின்றன.

ஸ்ட்ராஸ் கான் 1970 களில் Union of Communist Students (UEC) என்னும் பிரெஞ்சு ஸ்ராலினிசக் கம்யூனிஸ்ட் கட்சியின் (PCF) இளைஞர் இயக்கத்தின் உறுப்பினராக புள்ளிவிபரம், பொருளாதாரம் மற்றும் சட்டம் பயின்ற காலத்திலேயே அவர் சேர்ந்துகொண்டார். 1976ல் அவர்  சோசலிஸ்ட் கட்சியில் (PS) சேர்ந்தார். அப்பொழுதுதான் அது பிரான்சுவா மித்திரோனுக்கு தேர்தல் பணி புரிய புதிதாக அமைக்கப்பட்டிருந்தது.

1968 மாணவர் எதிர்ப்புக்கள், பொது வேலைநிறுத்தங்களுக்குப் பின் அரசியலில் நுழைந்த முன்னாள் மாணவர் தீவிரமயப்பட்டவர்களின் பரந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக இது இருந்தது. இவர்கள் பின்னர் முதலாளித்துவத்தின் முக்கிய அரசியல் நபர்களாக 1980ல் மித்திரோன் ஜனாதிபதிக் காலத்தில் இருந்து இடம் பெறுகிறார்கள்.

போலிஇடதுஅமைப்புக்களில் இருந்து பலரும் அக்காலக்கட்டத்தில் PS ல் சேர்ந்து முக்கிய தலைமை இடங்களைக் கைப்பற்றினர். அவர்களுள் (புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகம் (LCR) , இப்பொழுது புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி) Pierre Moscovici, Julien Dray மற்றும் Henri Weber ஆகியோர், Internationalist Communist Organization (OCI) இன்றைய சுதந்திர தொழிலாளர் கட்சியில் (Independent Workers Party) இருந்து Jean-Christophe Cambadelis மற்றும் இன்னும் புகழ் பெற்ற வகையில் பிற்கால பிரதம மந்திரி லியோனல் ஜோஸ்பன் ஆகியோர் வந்தனர்.

PS இன் சட்டமன்ற உறுப்பினரும் 1980களில் மித்திரோனின் கீழ் கொள்கை இயற்றுவதில் வல்லுனருமான ஸ்ட்ராஸ் கான் ஒரு மந்திரியாகப் பணியாற்றினார். பின்னர் 1990 களில் பெருநிறுவனங்களுக்காகச் செல்வாக்குச் செலுத்தும் குழுக்களில் இருந்தார். 1997-2002 ல் ஜோஸ்பனின்பன்முக இடது அரசாங்கத்தில் நிதி மந்திரி என்னும் முறையில் அவர் பல பொது நிறுவனங்களை தனியார்மயம் ஆக்கினார் அதாவது France telecom, Credit Lyonnais Bank, பாதுகாப்புத்துறை நிறுவனம் Thomson-CSF ஆகியவை இதில் அடங்கும். 1999ல் ஒரு ஊழலில் சிக்கி மந்திரிப் பதவியை இராஜிநாமா செய்தபின் அவர் PS, பெருநிறுவன வட்டங்களுள் முக்கிய நபராக இருந்தார். 2007ல் சார்க்கோசியால் நியமிக்கப்பட்டபின் IMF பதவியை எடுத்துக் கொண்டார்.

IMF தலைவர் என்னும் முறையில் அவர் பல கடனாளி நாடுகளில் கிரேக்கம், அயர்லாந்து, லாட்வியா, ஹங்கேரி, ருமேனியா மற்றும் பாக்கிஸ்தான் போன்றவை தொழிலாள வர்க்கத்தை வறிய நிலையில் தள்ளிய ஆழ்ந்த சமூகநலச் செலவுக் குறைப்புக்களை மேற்பார்வையிட்டார். சமீபத்தில் எகிப்தில் இராணுவ சர்வாதிகாரத்துடன் நிதியப் பேச்சுவார்த்தைகளுக்கும் பொறுப்பைக் கொண்டிருந்தார். ஹொஸ்னி முபாரக் அகன்றுவிட்டதை அடுத்து அங்கு தொழிலாள வர்க்கம் எதிர்ப்புத் தன்மையை காட்ட போராட முற்பட்டுள்ளது.

சமீப காலம் வரை ஸ்ட்ராஸ் கான் பிரான்ஸின் 2012 ஜனாதிபதித் தேர்தலில் கருத்துக்கணிப்புக்களில் முன்னணியில் இருந்தார். இதற்கு முக்கிய காரணம் சார்க்கோசியின் வலதுசாரிக் கொள்கைகள் மீது வெகுஜன விரோதப் போக்கு இருப்பது ஆகும். ஆனால் ஏற்கனவே அவர் பல முறை அவருடைய ஆடம்பர வாழ்க்கை முறை பற்றி பல குறைகூறல்களை எதிர்கொண்டுள்ளார். நியூ யோர்க்கில் 30,000 டொலர் பெறுமான சூட் ஆடை வாங்கியது பற்றிய தகவல்களும், அவருடைய உயர்மட்ட உதவியாளர்களுள் ஒருவரான Ramzi Khiroun க்குச் சொந்தமானது எனக்கூறப்படும் Porsche காரில் இருந்து வெளியே இறங்கும் புகைப்படங்களும் செய்தி ஊடகத்தில் தோன்றின.

பிரெஞ்சு அரசியல்வாதிகள் 2012 தேர்தல்களில் ஸ்ட்ராஸ் கானுக்கு எதிராக வந்துள்ள குற்றச்சாட்டுக்களின் உட்குறிப்புக்கள் பற்றி வியப்பும் கவலையையும் வெளியிட்டுள்ளனர். செல்வாக்கற்ற சார்க்கோசியின் நிலைப்பாடு ஸ்ட்ராஸ் கான் மற்றும் நவ பாசிச வேட்பாளரான மரின் லு பென்னிற்கும் கருத்துக் கணிப்புக்களில் ஆதரவை உயர்த்தியுள்ளன. PS இன் கட்சித் தலைமைப் பெண்மணி மர்ட்டின் ஆப்ரி ஸ்ட்ராஸ்கான் மீதான குற்றச்சாட்டுஇடிவிழுந்தது போல் உள்ளது என்றார்.

நீண்டகாலமாக PS அதிகாரியாகவுள்ள Jacques Attali ஸ்ட்ராஸ் கான் “ PS ன் ஜனாதிபதிக்கான ஆரம்பத் தேர்தல்களில் வேட்பாளராக நிற்க இயலாதுஎன்று எச்சரித்துள்ளார்.
 

PS தேர்தலில் நிறுத்திவைப்பதற்கு ஸ்ட்ராஸ் கானுடன் போட்டியுடன் திறன் உடையவர்கள் எச்சரிக்கை மிகுந்த அறிக்கைகளை விடுத்துள்ளனர். சேகோலீன் ரோயால்நீதிமன்றங்கள் முடிவெடுக்கும் வரை காத்திருக்க வேண்டும்என்று மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். “அவருடைய (ஸ்ட்ராஸ் கானின்) இடர்களில் இருந்து எவரும் ஆதாயம் அடைய மாட்டார்கள்என்றும் சேர்த்துக் கொண்டார். முன்னாள் PS தலைவர் பிரான்சுவா ஹோலண்ட், போட்டியில் தான் பங்கு பெறப்போவதாக அறிவித்துள்ளவர்எந்த முன்கூட்டிய முடிவுகளுக்கும் வந்துவிடுவதற்குஎதிராக எச்சரித்துள்ளார்.

பெயரிட விரும்பாத சார்க்கோசியின் ஆலோசகர் ஒருவர் Le Monde இடம் கூறினார்: “இது தேர்தலுக்கு 15 நாட்களுக்கு முன் நடந்திருந்தால், அது நாடக ஊழல் போல் இறுதி வரை அவரைத் தொடர்ந்து நீடித்திருக்கும். ஆனால் இப்பொழுது நாம் தொந்தரவு மிகுந்த காலத்தில் உள்ளோம். அனைத்தும் மாறிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு வாரமும் புதிய நிகழ்வுகளைக் கொண்டுவருகின்றன. சிறிய நிகழ்வுகள் என்று இல்லாமல் பேரதிர்ச்சு தருபவையாக.”