சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

CHAPTER TWO

அத்தியாயம் 2

Economic Development and the Zigzags of the Leadership

War Communism, The New Economic Policy
(NEP) and the Course toward the Kulak

பொருளாதார அபிவிருத்தியும் தலைமையின் ஊசலாட்டங்களும்

Use this version to print | Send feedback

"போர்க்கால கம்யூனிசம்", "புதிய பொருளாதாரக் கொள்கை" (NEP) மற்றும் குலாக்கை நோக்கிய பாதை

சோவியத் பொருளாதாரத்தின் அபிவிருத்திப் பாதை இடையூறில்லாமல் சீராக உயர்ந்து செல்லும் வளைகோடாக இருப்பதில் இருந்து வெகு தூரத்தில் இருந்தது. புதிய ஆட்சியின் முதல் 18 ஆண்டுகளில் கூர்மையான நெருக்கடிகளால் குறிக்கப்படும் பல்வேறு கட்டங்களையும் நீங்கள் தெளிவாக அடையாளம் காண முடியும். அரசாங்கத்தின் கொள்கையுடன் தொடர்புபடுத்தி கண்டுணரப்படுகின்ற சோவியத் ஒன்றிய பொருளாதார வரலாற்றின் ஒரு சிறு சுருக்கம் பிரச்சினையை அறிவதற்கும் மற்றும் அதன் தீர்வு  இரண்டுக்குமே முழுமையாய் அவசியமானதாகும்.

புரட்சிக்குப் பிந்தைய முதல் மூன்று வருடங்கள் பகிரங்கமான மற்றும் கொடூரமான உள்நாட்டு யுத்தத்தின் காலகட்டமாக இருந்தது. பொருளாதார வாழ்க்கை என்பது போர்முனையின் தேவைகளுக்கு முழுவதும் கீழ்ப்படிந்த ஒன்றாக இருந்தது. கலாச்சார வேலை என்பது, சடப்பொருள் வளங்களின் தீவிரமானதொரு பற்றாக்குறைக் காலத்தில், குறிப்பாக லெனினின் சொந்த சிந்தனையில்  இது படைப்பாக்க சிந்தனையின் ஒரு துணிவான அலையால் குணநலப்படுத்தப்பட்டதாக இருந்ததுடன், பின்தங்கிய இடத்தில் அடைக்கலம் புகுந்திருந்தது. இது தான், முதலாளித்துவ நாடுகளில் "போர்க்கால சோசலிசம்" என்று சொல்லப்பட்டதற்கு துணிகர சமாந்தரமான "போர்க்கால கம்யூனிசம்" (1918-1921) என்று அழைக்கப்படுகின்ற ஒரு காலகட்டமாகும். இந்த வருடங்களில் எல்லாம், சோவியத் அரசாங்கத்தின் பொருளாதாரப் பணிகள் முக்கியமாக, இராணுவ உற்பத்தியை பராமரிப்பது மற்றும் கடந்த காலத்திலிருந்து எஞ்சியிருந்த குறைந்த ஆதாரவளங்களை இராணுவ நோக்கங்களுக்கும் மற்றும் நகர மக்களை அழிவில் இருந்து காப்பதற்கும் மட்டும் பயன்படுத்துவது ஆகியவற்றுடன் மட்டுப்படுத்தப்பட்டன. போர்க்கால கம்யூனிசம், அதன் சொந்த இயல்பிலேயே, முற்றுகையிடப்பட்ட ஒரு கோட்டைக்குள் நுகர்வினை ஒழுங்குபடுத்துகின்ற ஒரு அமைப்பாகும்.

இருப்பினும், அதன் மூலக் கருத்தாக்கத்தில் அது பரந்த நோக்கங்களைப் பின்பற்றியது என்பதை ஒப்புக்கொள்வது அவசியம். விநியோகம் உற்பத்தி ஆகிய இரண்டு தளங்களிலும் படையணி ஒழுங்கின் வழிமுறைகளை ஒரு திட்டமிட்ட பொருளாதார அமைப்புமுறையாக உடனடியாக அபிவிருத்தி செய்து விட சோவியத் அரசாங்கம் நம்பிக்கை கொண்டு பாடுபட்டது. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், "போர்க்கால கம்யூனிசத்தில்" இருந்து படிப்படியாக, ஆனால் அந்த அமைப்புமுறையை சிதைத்து விடாமல், உண்மையான கம்யூனிசத்திற்கு வந்து சேருவதற்கு அது நம்பிக்கை கொண்டிருந்தது. 1919 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் போல்ஷிவிக் கட்சி ஏற்றுக்கொண்ட ஒரு வேலைத்திட்டம் பின்வருமாறு கூறியது: "வர்த்தகத்தை பொருட்களின் விநியோகத்தை கொண்டு இடம்பெயர்ப்பதை திட்டமிட்ட ஒழுங்கமைந்த வகையில் முழுநாட்டளவில் தளர்ச்சியின்றி தொடர்வதான விநியோகத்துறையில் சோவியத் அரசாங்கத்தின் தற்போதைய பணியாக உள்ளது.

எவ்வாறிருப்பினும், யதார்த்த நிலையானது "போர்க்கால கம்யூனிச" வேலைத்திட்டத்துடன் அதிகமான மோதலுக்கு வரும் நிலை நேர்ந்தது. உற்பத்தி தொடர்ந்து வீழ்ச்சி கண்டது, இதற்குக் காரணம் யுத்தத்தின் அழிவுகரமான நடவடிக்கை மட்டுமல்ல, உற்பத்தியாளர்களிடையே தனிப்பட்ட ஊக்கம் தணிந்து போனதும் தான். நகரம் கிராமங்களில் இருந்து தானியத்தையும் கச்சாப் பொருட்களையும் எதிர்பார்த்தது, பதிலுக்கு பணம் என்று பழைய நினைவுகள் கூறுகின்ற ஒரு பல வண்ணக் காகிதத் துண்டுகளை தவிர வேறெதனையும் பரிவர்த்தனையில் அதனால் வழங்க முடியவில்லை. ரஷ்ய விவசாயி தன் கையிருப்பை பூமியில் புதைத்து வைத்தார். அரசாங்கம் தானியத்தைப் பெற்று வர ஆயுதமேந்திய தொழிலாளர்களது படைப்பிரிவை அனுப்பி வைத்தது. விவசாயி தன் விதைப்பையே குறைத்து விட்டார். உள்நாட்டு யுத்தம் முடிந்த உடனேயான 1921 ஆம் ஆண்டில் தொழிற்துறை உற்பத்தி அதிகப்பட்சமாக போருக்கு முந்தைய அளவில் ஐந்தில் ஒரு பங்காக இருந்தது. உருக்கு உற்பத்தி 4.2 மில்லியன் டன்களில் இருந்து 183,000 டன்களுக்கு வீழ்ச்சி கண்டது - அதாவது அதன் முந்தைய அளவில் 1/23 மடங்குக்கு சரிந்து விட்டிருந்தது. மொத்தத் தானிய அறுவடை 801 மில்லியன் சென்ட்னர்களில் இருந்து 1922 ஆம் ஆண்டில் 503 மில்லியன் சென்ட்னர்களுக்கு சரிந்தது. அது கடுமையான பஞ்சபட்டினிக் காலமாக ஆனது! அதே சமயத்தில் வெளிநாட்டு வர்த்தகம் 2.9 பில்லியன் ரூபிள்களில் இருந்து 30 மில்லியன் ரூபிள்களாக சரிந்தது. உற்பத்தி சக்திகளின் வீழ்ச்சி வரலாறு கண்டிராத மட்டத்திற்குச் சென்றிருந்தது. நாடும், அதனுடன் சேர்ந்து அரசாங்கமும், தங்களை ஒரு பாதாளத்தின் வெகு விளிம்பில் உணர்ந்தார்கள்.

அதனையடுத்து போர்க்கால கம்யூனிச சகாப்தத்தின் கற்பனாவாத நம்பிக்கைகள் கடுமையானதும் மற்றும் பல அம்சங்களில் நியாயமானதுமான ஒரு விமர்சனத்திற்கு உட்பட நேர்ந்தது. எவ்வாறிருந்தபோதிலும், அந்த நேரத்தில் அனைத்து மனக்கணக்குகளுமே மேற்கில் புரட்சி விரைவில் வெற்றி பெற்று விடும் என்ற எதிர்பார்ப்பினையே அடித்தளமாகக் கொண்டிருந்தன என்கின்ற உண்மையைத் தவற விட்டால் மட்டுமே, ஆளும் கட்சியின் தத்துவார்த்தப் பிழை உங்களுக்கு விளங்க முடியாததாகத் தொடரும். வெற்றிபெறும் ஜேர்மன் பாட்டாளி வர்க்கம் சோவியத் ரஷ்யாவுக்கு, தன் வருங்கால உணவு மற்றும் கச்சாப் பொருட்களுக்கு நிகரான கடனாக, எந்திரங்களையும் உற்பத்திப் பொருட்களையும் மட்டுமன்றி, ஆயிரக்கணக்கான உயர்திறன் தொழிலாளர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள் மற்றும் ஒழுங்கமைப்பாளர்களையும் வழங்கும் என்பது இயல்பான நிகழ்வாகவே கருதப்பட்டது. அத்துடன், ஜேர்மனியில் மட்டும் பாட்டாளி வர்க்கப் புரட்சி வெற்றி பெற்றிருக்குமானால் (அதன் வெற்றியைத் தடுத்ததற்கான தனி முழுக் காரணகர்த்தாக்கள் சமூக ஜனநாயகவாதிகள் மட்டுமே) ஐரோப்பாவின் தலைவிதியும் மற்றும் உலகத்தின் தலைவிதியும் இன்று ஒப்பிடமுடியாத அளவுக்கு மிகச் சிறந்ததாய் அமைந்திருக்கக் கூடிய அளவுக்கு சோவியத் ஒன்றியம் ஜேர்மனி இரண்டின் பொருளாதார அபிவிருத்தியுமே பாரியளவில் முன்னேறியிருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அப்படி ஒரு மகிழ்ச்சிகரமான நிகழ்வு சமயத்திலும் கூட, வர்த்தக சுழற்சி வழிமுறைகளுக்கு ஆதரவாக, உற்பத்திப் பொருட்களை நேரடியாக அரசு விநியோகம் செய்வதை கைவிடவேண்டியது அவசியமாயிருந்திருக்கும் என்பதை சந்தேகத்திற்கிடமில்லாமல் கூற முடியும்.

வெளியுலகுடனான தங்களது பொருளாதார உறவுகளை வர்த்தகத்தை தாண்டி வரையறுத்துக்கொள்ள பழக்கமில்லாத மில்லியன் கணக்கான தனித்தனி விவசாய ஸ்தாபனங்கள் நாட்டில் இருப்பதால் சந்தையை மீட்சி  செய்ய வேண்டிய அவசியம் உள்ளதாக லெனின் கூறினார். வர்த்தகச் சுழற்சியானது விவசாயிக்கும் தேசியமயமாக்கப்பட்ட தொழிற்துறைக்கும் இடையில் கூட்டணி என்கின்ற ஒன்றினை ஸ்தாபிக்கும். இந்தக் "கூட்டணி"க்கான தத்துவார்த்த சூத்திரம் வெகு எளிமையானது: அரசு விவசாய உழைப்பின் உற்பத்தியை பலவந்தமாய்ப் பெற்று சேகரிப்பதைக் கைவிடுவதற்கு வழிவகை செய்யத்தக்க விலைகளில் தொழிற்துறையானது அவசியமான பொருட்களை கிராமங்களுக்கு  வழங்க வேண்டும்.

கிராமப்புற பிரதேசங்களுடனான பொருளாதார உறவுகளைச் சீர்படுத்துவது தான் சந்தேகத்திற்கிடமில்லாமல் புதிய பொருளாதாரக் கொள்கையின் (NEP) அவசர அவசியப் பணியாக இருந்தது. எவ்வாறாயினும், தொழிற்துறைக்கே கூட, அதன் சமூகமயப்படுத்தப்பட்ட தன்மை இருந்த போதிலும், முதலாளித்துவத்தால் கொண்டு வரப்பட்ட பணப் பரிமாற்ற வழிமுறைகளின் அவசியம் இருந்தது என்பதை அனுபவம் விரைவில் காண்பித்தது. ஒரு திட்டமிட்ட பொருளாதாரம் வெறும் புத்திஜீவித் தரவுகளில் மட்டும் தங்கியிருக்க முடியாது. விநியோகம் மற்றும் தேவையின் இடைத்தொடர்புதான் நீண்ட காலத்திற்கு அத்தியாவசியமானதொரு பொருளாதாய அடிப்படையாகவும் தவிர்க்கமுடியாத திருத்த நடவடிக்கையாகவும் தொடர்ந்து இருக்கிறது.

இந்த சட்டபூர்வமான சந்தை, ஸ்திரப்படுத்தப்பட்ட பண அமைப்புமுறையும் உதவ, தன் விளைவுகளை காட்டத் தொடங்கியது. வெகு சீக்கிரத்தில் 1923 ஆம் ஆண்டிலேயே, கிராமப்புற பிரதேசங்களில் இருந்து கிடைத்த ஒரு ஆரம்ப ஊக்கத்தின் காரணமாக, தொழிற்துறை புத்துயிர் பெறத் தொடங்கியது. மேலும் அது உடனடியாக உயர்ந்த உத்வேகத்தையும் பெற முடிந்தது. 1922 மற்றும் 1923 ஆம் ஆண்டுகளில் உற்பத்தி இரட்டிப்பானது, 1926 க்குள்ளாக இது ஏற்கனவே போருக்கு முன்பிருந்த நிலையை எட்டியிருந்தது, அதாவது 1921 ன் அளவைக் காட்டிலும் ஐந்து மடங்குக்கும் அதிகமாக வளர்ந்திருந்தது என்பதைக் கூறுவதே இதற்குப் போதுமானதாக இருக்கும். அதே சமயத்தில், அதனை விட சற்று சாதாரணமான வேகத்தில் தான் என்றாலும், அறுவடை அளவுகளும் அதிகரித்துக் கொண்டிருந்தன.

அதிமுக்கிய ஆண்டான 1923 தொடங்கி, தொழிற்துறைக்கும் விவசாயத்திற்கும் இடையிலான உறவு தொடர்பாக ஆளும் கட்சிக்குள் முன்னதாக அரும்பியிருந்த கருத்து வேறுபாடுகள் கூர்மைப்படத் தொடங்கின. தன் சேகரங்களையும் கையிருப்புகளையும் முழுமையாகச் செலவு செய்து விட்ட ஒரு நாட்டில், விவசாயிகளிடம் இருந்து தானியங்களையும் கச்சாப் பொருட்களையும் கடனாய் பெறாமல் தொழிற்துறை அபிவிருத்தியுற முடியாது. இருப்பினும் உற்பத்திப் பொருட்கள் மீது வெகுகனமான "கட்டாயக் கடன்களும்" உழைப்புக்கான ஊக்கத்தை அழித்து விடும். பின்னாளில் வளமை வரும் என்பதன் மீது நம்பிக்கை கொண்டிராத விவசாயி, நகரத்தில் இருந்து வருகின்ற தானியத் தேடலுக்கு விதைப்பு நிறுத்தத்தின் மூலம் பதிலளித்தார். வெகு குறைவான தானிய சேகரிப்போ மறுபக்கத்தில் தேக்கநிலையைக் கொண்டுவரும் அச்சுறுத்தலை தோற்றுவித்தது: தொழிற்சாலை உற்பத்திப் பொருட்கள் கிடைக்கப் பெறாத நிலையில், விவசாயிகள் தங்களது சொந்த தேவைகளை பூர்த்தி செய்ய தங்களது வீடுகளுக்குள்ளேயே வழிதேட திரும்பி குடிசைத் தொழிலாய் செய்யக் கூடிய பழைய கைவினைத் தொழில்களுக்கு புத்துயிர் அளிக்க விழைந்தனர். கிராமங்களுக்கும் தொழிற்துறைக்கும் இடையிலான பரிவர்த்தனையில் இரண்டுக்கும் இடையிலான இயக்கவியல் சமநிலைக்கான காலகட்டத்தைத் துரிதப்படுத்த வேண்டுமென்றால், கிராமங்களில் இருந்து தொழிற்துறைக்காக எவ்வளவை எடுக்க வேண்டும் என்கின்ற கேள்வியின் மீது கட்சிக்குள் கருத்துவேறுபாடுகள் தோன்றத் தொடங்கின. இந்தப் பிரச்சினை கிராமத்தின் சமூகக் கட்டமைப்பே முதலில் எப்படி இருக்க வேண்டும் என்கின்ற கேள்வி மூலம் உடனடியாக சிக்கலாக்கப்பட்டது.

1923 வசந்த கால சமயத்தில் நடந்த கட்சியின் காங்கிரஸ் ஒன்றில் "இடது எதிர்ப்பாளர்களின்'' (அப்போது அந்தப் பேரால் அறியப்பட்டிருக்கவில்லை எனினும்) ஒரு பிரதிநிதி தொழிற்துறை மற்றும் விவசாய விலைகள் பிரிவுறும் தன்மையை ஒரு திகிலூட்டும் வரைபடத்தின் வடிவில் விளங்கப்படுத்திக் காட்டினார். இந்த நிகழ்வானது அப்போது முதலில் "கத்தரிக்கோல்" என்பதாக அழைக்கப்பட்டது, அத்துடன் அன்று முதல் அந்த வார்த்தைப் பிரயோகம் ஏறக்குறைய சர்வதேசமயமாகி விட்டது. பேசியவர் தெரிவித்தார்: ''தொழிற்துறையின் பின்தங்கும் நிலை மேலும் தொடர்ந்து கத்திரிக்கோல் விரிந்து கொண்டே செல்லுமானால், அப்போது நகர்ப்புறத்திற்கும் கிராமத்திற்கும் இடையில் ஒரு முறிவு ஏற்படுவதைத் தவிர்க்கவியலாது''.

போல்ஷிவிக் கட்சி நடத்தி முடித்திருந்த ஜனநாயக மற்றும் விவசாயப் புரட்சிக்கும் மற்றும் சோசலிச அடித்தளங்களை அமைப்பதை நோக்கிய அதன் கொள்கைக்கும் இடையில் ஒரு கூர்மையான வேறுபாட்டினை விவசாயிகள் எடுத்துக்காட்டினர். நிலப்பிரபுக்களிடம் இருந்து பறிமுதல் செய்த நிலங்களும் மற்றும் அரசு நிலங்களும் விவசாயிகளின் பொருளாதார நிலையை ஆண்டுக்கு அரை பில்லியன் தங்க ரூபிள்கள் மேலே உயர்த்தியது. ஆனால் அரச உற்பத்திப் பொருட்களின் விலைகளில் அதை விடக் கூடுதலான தொகையை விவசாயிகள் செலுத்திக் கொண்டிருந்தனர். அக்டோபர் புரட்சியால் உறுதியாக முடிச்சுப் போடப்பட்டிருந்த ஜனநாயகப் புரட்சி மற்றும் சோசலிசப் புரட்சி ஆகிய இரண்டு புரட்சிகளின் நிகரவிளைவு என்பது விவசாயிகளை பொறுத்தவரை நூற்றுக்கணக்கான மில்லியன்கள் தொகை இழப்பு தான் என்கின்ற நிலை இருக்கும் வரை இரண்டு வர்க்கங்களின் ஐக்கியம் என்பது சந்தேகத்திற்குரியதாகவே தொடர்ந்து இருந்தது.

விவசாயப் பொருளாதாரம் கடந்த காலத்தில் இருந்து பாரம்பரியமாய் பெற்றிருந்த அதன் சிதறியிருந்த தன்மையானது அக்டோபர் புரட்சியின் முடிவுகளால் மேலும் மோசமானது. அதனைத் தொடர்ந்த தசாப்தத்தில் சுதந்திரமான விவசாயப் பண்ணைகளின் எண்ணிக்கை 16 மில்லியனில் இருந்து 25 மில்லியனாக உயர்ந்தது, இது பெரும்பான்மையான விவசாய ஸ்தாபனங்களின் பாவனைத்தன்மையை இயல்பாக வலுப்படுத்தியது. விவசாயப் பொருட்களின் பற்றாக்குறைக்கான காரணங்களில் இதுவும் ஒன்று.

ஒரு சிறு பண்டப் பொருளாதாரம் தவிர்க்கவியலாமல் சுரண்டுவோரை உருவாக்கி விடுகின்றது. கிராமங்கள் மீட்சியுறும் விகிதத்திற்கேற்ப பரந்த விவசாய மக்களிடையே வித்தியாசம் வளரத் தொடங்கியது. இந்த அபிவிருத்தி பழைய ஓடித் தேய்ந்த பாதைகளுக்குள்ளேயே விழுந்தது. குலாக்குகளின் வளர்ச்சி விவசாயத்தின் பொதுவான வளர்ச்சியை வெகுவாய் விஞ்சிச் சென்று கொண்டிருந்தது. "கிராமத்துக்கு முகம் கொடுப்போம்" என்கின்ற முழக்கத்தின் கீழான அரசாங்கத்தின் கொள்கை உண்மையில் அதன் முகத்தினை குலாக்குகளின் பக்கம் திருப்புவது என்றானது. விவசாய வரிகள் பணக்காரர்களை விடவும் ஏழைகளின் மீதே மிகவும் கனமாய் விழுந்தது, அத்துடன் பணக்காரர்கள் அரசாங்கக் கடன்களையும் வழித்தெடுத்துக் கொண்டார்கள். முதன்மையாக கிராமத்து உயர் அடுக்கின் வசம் இருந்த உபரித் தானியம் ஏழைகளை அடிமைப்படுத்தவும் நகரங்களில் உள்ள முதலாளித்துவக் கூறுகளுக்கு ஊக வணிகம் செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில் ஆளும் கன்னையின் தத்துவாசிரியராக இருந்த புக்காரின் விவசாயிகளுக்கு "பணக்காரராகுங்கள்" என்கிற தனது பிரபலமான சுலோகத்தை முன்வைத்தார். தத்துவத்தின் மொழியில் இதன் அர்த்தம் குலாக்குகளை கொஞ்சம் கொஞ்சமாய் சோசலிசத்திற்கு வளர்ச்சியுறச் செய்வது என்பதாகத் தான் இருந்திருக்க வேண்டும். நடைமுறையிலோ இது அறுதிப் பெரும்பான்மையினருக்குக் கேடிழைத்து சிறுபான்மை எண்ணிக்கையிலானோரை செல்வந்தர்களாக்குவது என்றானது.

தன் சொந்தக் கொள்கையிடமே சிக்கி, அரசாங்கம் கொஞ்சம் கொஞ்சமாய் கிராமப்புற குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் கோரிக்கைகளுக்கு முன்னால் படிப்படியாய் பின்வாங்க நிர்ப்பந்திக்கப்பட்டது. 1925 ஆம் ஆண்டில் உழைப்பு சக்தியை வாடகைக்கு அமர்த்துவதும், நிலத்தை வாடகைக்கு விடுவதும் விவசாயத்திற்கு சட்டபூர்வமாக்கப்பட்டது. ஒருபக்கத்தில் சிறு முதலாளியாய் இருப்பதற்கும் மறுபக்கத்தில் வாடகைக்கு அமர்த்தப்படுபவர்களாக இருப்பதற்கும் இடையில் விவசாயிகள்  துருவப்படத் தொடங்கியது. அதேநேரத்தில் தொழிற்துறைப் பண்டங்கள் இல்லாமல் அரசு கிராமச் சந்தையில் இருந்து நெருக்கி வெளித்தள்ளப்பட்டது. குலாக்குக்கும் சிறுகைவினைஞருக்கும் இடையே, ஏதோ பூமிக்கு அடியில் இருந்து முளைத்ததைப் போல இடைத்தரகர் தோன்றினர். அரசாங்க நிறுவனங்களே கூட, கச்சாப் பொருள் தேடி, தனியார் வர்த்தகர்களுடன் பரிவர்த்தனை செய்வதற்கு மேலும் மேலும் நிர்ப்பந்தமுற்றன. முதலாளித்துவத்தின் அலை எழுந்ததை எல்லா இடங்களிலும் காண முடிந்தது. சொத்துடைமையின் வடிவங்களில் நடந்த ஒரு புரட்சி சோசலிசத்தின் பிரச்சினையைத் தீர்ப்பதில்லை, மாறாக அதனை இப்பொழுதே முன்வைத்துள்ளதாக சிந்திக்கக்கூடிய பிரிவினர் தெளிவாகக்  கண்டுகொண்டனர்.  

1925 ஆம் ஆண்டில் குலாக்குகளை நோக்கிய பயணம் முழு வீச்சில் இருந்த ஒரு சமயத்தில், ஸ்ராலின் நிலங்களை தனியார்மயமாக்க தயாரிப்பு செய்யத் தொடங்கினார். அவருடைய யோசனையின் பேரில் பத்திரிகையாளர் ஒருவர், "ஒவ்வொரு விவசாயிக்கும் அவர் உழுது வரும் நிலத்தை பத்து ஆண்டுகளுக்கு உரிமப் பத்திரம் அளிப்பது விவசாய நலனில் எடுக்க வேண்டிய சரியான நடவடிக்கையாக இருக்கும் அல்லவா?" என்று கேட்க, அதற்கு ஸ்ராலின் அளித்த பதில்: "ஆம், 40 ஆண்டுகளுக்கு கூட அளிக்கலாம்" என்பதாகும். ஜோர்ஜியாவின் விவசாயத்திற்கான மக்கள் ஆணையாளர், ஸ்ராலினின் சொந்த முன்முயற்சியைத் தொடர்ந்து, நிலத்தை தனியார் உடைமையாக்கும் சட்ட வரைவை அறிமுகப்படுத்தினார். இதன் நோக்கம் விவசாயிக்கு அவரது சொந்த எதிர்காலம் குறித்த நம்பிக்கையைத் தோற்றுவிப்பதாகும். இது நடந்து கொண்டிருந்ததான அதே சமயத்தில், 1926 ஆம் ஆண்டின் வசந்த காலத்தில், விற்பனைக்கு வர இருந்த சுமார் 60 சதவீத தானியம் 6சதவீத விவசாய முதலாளிகளின் கையில் இருந்தது! அரசிடம் அந்நிய வர்த்தகத்துக்கான தானியம் மட்டுமல்ல, உள்நாட்டுத் தேவைகளுக்கான தானியமும் கூட பற்றாக்குறையாக இருந்தது. ஏற்றுமதி குறிப்பிடத்தக்க அளவில் இல்லாமல் போனதால், தொழிற்சாலை உற்பத்திப் பொருட்களைக் கொண்டுவருவதைக் கைவிடுவதும், எந்திரங்கள் மற்றும் கச்சாப் பொருட்களின் இறக்குமதியை வரம்புக்குள் குறைப்பதும் அவசியமானது.

தொழிற்துறைமயமாக்கத்தை வளர்ச்சி குன்றச் செய்வது மற்றும் விவசாயிகளின் பெருந்திரளானோருக்கு அடி கொடுப்பது என வசதியான விவசாயிகளை நம்பிச் செலுத்தப்பட்ட இந்தக் கொள்கை 1924-1926 இரண்டு வருடங்களுக்குள்ளாகவே தனது அரசியல் பின்விளைவுகளை குழப்பத்திற்கிடமின்றி வெளிக்காட்டியது. நகரம் கிராமம் இரண்டிலும் குட்டி முதலாளித்துவ வர்க்கத்துக்குள் அசாதாரண அளவில் சுய-உணர்மை அதிகரித்தமை, பல சிறு சோவியத்துகளை அவர்கள் கைப்பற்றியமை, அதிகாரத்துவத்தின் அதிகாரம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரித்தமை, தொழிலாளர்கள் மீது அழுத்தம் பெருகியமை, மற்றும் கட்சி மற்றும் சோவியத் ஜனநாயகத்தின் மீதான முழுமையான அடக்குமுறை இவற்றையெல்லாம் இது கொண்டுவந்தது. குறிப்பிடத்தகுந்தவகையில் லெனின்கிராட் மற்றும் மாஸ்கோ என்கின்ற இரண்டு தலைமையான பாட்டாளி வர்க்க மையங்களில் சோவியத்துகளின் தலைவர்களாக இருந்த, ஆளும் குழுவின் இரண்டு புகழ்பெற்ற உறுப்பினர்களான சினோவியேவ் மற்றும் காமனேவ் ஆகியோருக்கு குலாக்குகளின் வளர்ச்சி எச்சரிக்கையை எழுப்பியது. ஆனால் மாகாணங்களும், இன்னும் பக்கபலமாய் அதிகாரத்துவமும், ஸ்ராலின் பக்கம் உறுதியாக நின்றன. வசதியான விவசாயியை நோக்கிய பாதையானது வெற்றி பெற்றது. 1926 ஆம் ஆண்டு சினோவியேவும் காமனேவும் தங்களது ஆதரவாளர்களுடன் 1923 ஆம் ஆண்டின் எதிர்ப்பாளர்கள் பக்கத்தில் ("ட்ரொட்ஸ்கியவாதிகள்") இணைந்தனர்.

ஆளும் குழு "கொள்கைரீதியாக" விவசாயக் கூட்டு உற்பத்தி முறையை அப்போதும் கைவிடவில்லை தான். தங்களுடய முன்னோக்கில் அதனை சில தசாப்தங்களுக்கு ஒத்திவைத்து விட்டனர், அவ்வளவு தான். வருங்காலத்தில் விவசாயத்திற்கான மக்கள் ஆணையாளராக நியமிக்கப்படவிருந்த யகோவிலேவ் 1927 ஆம் ஆண்டு எழுதினார்: கிராமத்தின் சோசலிச மறுகட்டுமானம் கூட்டுற்பத்தி முறையின் வழியாகத் தான் சாதிக்கப்பட முடியும் என்றாலும் இது "ஒன்று, இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் சாதிக்கப்பட்டு விட முடியாது, ஏன் ஒரு தசாப்தத்தில் கூட முடியாது போகலாம் என்பது வெளிப்படை". அவர் மேலும் சொல்கிறார்: "கூட்டுற்பத்திப் பண்ணைகளும் கம்யூன்களும் தற்போதைக்கு தனிநபர் விவசாயச் சொத்துக்களின் கடலில் இடையிலிருக்கும் சிறு தீவுகளாகத் தான் இருக்கின்றன, இன்னும் நீண்ட காலத்திற்கு சந்தேகத்திற்கிடமில்லாமல் இதேவகையில் தான் தொடர்ந்து இருக்கப் போகின்றன". உண்மையில் அந்தக் காலகட்டத்தில் விவசாயக் குடும்பங்களில் 0.8 சதவீதத்தினர் மட்டுமே கூட்டுற்பத்தி முறையை சேர்ந்தவர்களாய் இருந்தனர்.

1923ல் வெளியில் தலைகாட்ட ஆரம்பித்திருந்த "பொதுவான நிலைப்பாடு" என அழைக்கப்பட்டதானதின் மீது கட்சிக்குள் நடந்த போராட்டம்  1926 ஆம் ஆண்டில் குறிப்பாகத் தீவிரமான மற்றும்  உக்கிரமான போராட்டமானது. இடது எதிர்ப்பாளர்கள் தரப்பு, தொழிற்துறை மற்றும் பொருளாதாரத்தின் அனைத்துப் பிரச்சினைகளையும் எடுத்துக் கொண்ட தனது பரந்த தளத்தில், எழுதியது: "பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் தூண்களில் ஒன்றாகிய நிலங்களின் தேசியமயமாக்கத்தினை தடைசெய்வதை அல்லது இல்லாதொழிப்பதை நோக்கிய எந்தப் போக்குகளையும் கட்சி எதிர்க்கவும் நசுக்கவும் வேண்டும்". அந்தக் கேள்வியின் மீது எதிர்ப்பாளர்கள் அந்நாளில் வெற்றி பெற்றனர்; தேசியமயமாக்கத்திற்கு எதிரான நேரடியான முயற்சிகள் கைவிடப்பட்டன. ஆனால், உண்மையில் பிரச்சினை நிலத்திலான சொத்து வடிவங்களுக்கும் கூடுதலான விடயங்கள் சம்பந்தப்பட்டதாய் இருந்தது.

கிராமப்புறங்களில் தனிநபர் பண்ணை வளர்ச்சிக்கு எதிராக நாம் கூட்டுற்பத்தி பண்ணைகளின் துரிதமான வளர்ச்சியை முன்வைக்கவேண்டும். கூட்டுற்பத்தி முறையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள ஏழை விவசாயிகளுக்கு உதவ ஒவ்வொரு வருடமும் முறையாக ஒரு கணிசமான தொகை ஒதுக்கப்பட வேண்டியது அவசியம். கூட்டுறவு அமைப்புகளின் மொத்த வேலையும் சிறு உற்பத்தியை பரந்த கூட்டுற்பத்தியாக மாற்றும் நோக்கத்தால்   நிரப்பப்பட்டிருக்க வேண்டியது அவசியம்." ஆனால் கூட்டுற்பத்தி முறையின் இந்த விரிவான வேலைத்திட்டம் அடுத்துவரும் ஆண்டுகளில் கற்பனாவாதம் என்று பிடிவாதமாகக் குறிப்பிடப்பட்டது. இடது எதிர்ப்பாளர்களை வெளியேற்றும் பணியைக் கொண்டிருந்த 15வது கட்சி காங்கிரசுக்கான தயாரிப்புகளின் போது, மக்கள்  சோவியத்தின் ஆணையார்களின் வருங்காலத் தலைவராகவிருந்த மோலோடோவ் திரும்பத் திரும்பக் கூறினார்: "பரந்த விவசாய வெகுஜனங்களை கூட்டுற்பத்தி முறைக்குள் வருவது குறித்த ஏழை விவசாயிகளின் பிரமைகளுக்குள் நாம் விழுந்து விடக் கூடாது(!). நடப்பு சூழல்களில் அது இனியும் சாத்தியமில்லாதது." அப்போது நாட்காட்டி காட்டிய வருடம் 1927 ஆம் ஆண்டின் இறுதி. ஆளும் குழு விவசாயிகளை நோக்கிய தமது வருங்கால கொள்கையில் அந்த சமயத்தில் அவ்வளவு தொலைவில் இருந்தது!

அதே வருடங்கள் (1923-1928) "அதீத தொழிற்துறைமயமாக்கம்" மற்றும் திட்டமிட்ட தலைமையை ஆலோசனையளித்தவர்களுக்கு எதிராக ஸ்ராலின், மோலோடோவ், டோம்ஸ்கி, புக்காரின் (சினோவியேவ் மற்றும் காமனேவ் 1926 தொடக்கத்தில் எதிர்ப்பாளர்களின் பக்கம் சென்று விட்டனர்) ஆகியோர் கொண்ட ஒரு ஆளும் கூட்டணி நடத்திய போராட்டத்தில் கடந்து சென்றது. துணிச்சலான பொருளாதார முன்முயற்சியில் எத்தகையதொரு குரோதமான அவநம்பிக்கை மனோநிலை சோசலிச அரசின் அரசாங்கம் முழுவதும் நிரம்பியிருந்தது என்பதை அறியும்போது வருங்கால வரலாற்றாசிரியர்கள் மிகுந்த ஆச்சரியம் கொள்வர். தொழிற்மயமாக்கத்தின் உத்வேகத்திலான ஒரு முடுக்கம் அனுபவரீதியாக, வெளியிலிருந்தான தூண்டுதல்கள் எதுவுமில்லாமல், எல்லா கணக்கீடுகளையும் முரட்டுத்தனமாய் அடித்து நொருக்கி விடும் உற்பத்தியோடு தொடர்பற்ற செலவினங்களில் அசாதாரணமான அதிகரிப்புடனும், நடந்தேறியது. ஒரு ஐந்தாண்டு திட்டத்திற்கான கோரிக்கை 1923 ஆம் ஆண்டில் எதிர்ப்பாளர்களால் முன்னெடுக்கப்பட்டபோது, "தெரியாத இடத்திற்குள் பாய்வதற்கு" அஞ்சும் குட்டி முதலாளித்துவ மனோநிலையுடன் அது கேலியாகப் பார்க்கப்பட்டது. நமக்கு நெப்ரோஸ்ட்ராய் (Dneprostroi) நீர்மின் ஆலையைக் கட்டுவது என்பது ரஷ்யாவின் ஒரு ஏழை விவசாயி பசுமாட்டுக்குப் பதிலாக கிராமபோன் வாங்குவது போலத் தான் என்று ஏப்ரல் 1927 கால சமயத்திலேயே கூட, ஸ்ராலின் மத்திய குழுவின் மாபேரவைக் கூட்டத்தில் உறுதிபடத் தெரிவித்தார். இந்த இறக்கைமுளைத்த அனுபவமொழி ஒட்டுமொத்த வேலைத்திட்டத்தையும் சுருக்கமாய்க் கூறுகிறது. அந்த வருடங்களின் போதெல்லாம், ஒட்டுமொத்த உலகத்தின் முதலாளித்துவ சஞ்சிகைகளும், அதனைத் தொடர்ந்து சமூக-ஜனநாயக ஊடகங்களும், "இடது எதிர்ப்பாளர்கள்" மீது உத்தியோகபூர்வமாய் சுமத்தப்பட்ட தொழிற்துறைமயமாக்க கனவுவாதம் (Industrial romanticism) என்னும் குற்றச்சாட்டை அனுதாபத்துடன் திரும்பத் திரும்பக் கூறின.

கட்சி விவாதக் கூச்சல்களுக்கு இடையில் விவசாயிகள் தொழிற்துறை உற்பத்திப் பொருட்களின் பற்றாக்குறைக்கு முன்னெப்போதையும் விடப் பிடிவாதமான ஒரு வேலைநிறுத்தம் மூலம் பதிலளித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் சந்தைக்கு தங்கள் தானியங்களை எடுத்துச் செல்வதாகவோ, விதைப்பை அதிகப்படுத்துவதாகவோ இல்லை. அந்தக் காலகட்டத்தில் தொனியை நிர்ணயிப்பவர்களாக இருந்த வலதுசாரிப் பிரிவு (ரிகோவ், டோம்ஸ்கி, புக்காரின்), தொழிற்துறையின் உத்வேகம் குறைவதாயினும் பரவாயில்லை தானியத்தின் விலையை அதிகரிப்பதன் மூலமாக கிராமத்தில் முதலாளித்துவப் போக்குகளுக்கு வாய்ப்புகள் விரிவாக்கப்பட வேண்டும் என்று கோரினர். இத்தகையதொரு கொள்கையின் கீழான ஒரே சாத்தியமான வழி விவசாயத்துறையின் கச்சாப் பொருட்களை ஏற்றுமதி செய்து அதற்குப் பதிலாக உற்பத்தி செய்த தொழிற்துறைப் பொருட்களை இறக்குமதி செய்வதாகத் தான் இருந்திருக்க முடியும். ஆனால் இங்கு அது விவசாயப் பொருளாதாரத்திற்கும் சோசலிசத் தொழிற்துறைக்கும் இடையில் ஒரு "இணைப்பை" உருவாக்குவதாக இருக்காது, மாறாக குலாக்குக்கும் உலக முதலாளித்துவத்திற்கும் இடையில் தான் இணைப்பு உருவாக்குவதாக இருக்கும். அதற்கு அக்டோபர் புரட்சி நிகழ்த்தியிருக்க வேண்டிய அவசியமில்லை.

1926 கட்சி மாநாட்டில் எதிர்ப்பாளர்களின் பிரதிநிதிகள் தங்கள் பதிலை வழங்கினர்: "தொழிற்துறைமயமாக்கத்தை முடுக்கி விடுவது - குறிப்பாக குலாக்குகளின் மீது வரிவிதிப்பை அதிகப்படுத்துவதன் மூலமாக - உற்பத்திப் பொருட்களைப் பாரிய அளவில் உற்பத்தி செய்வதற்கும் சந்தை விலைகளைக் குறைப்பதற்கும் வழிவகுக்கும். இது தொழிலாளர்கள் மற்றும் பெரும்பான்மை விவசாயிகள் இருதரப்புக்கும் அனுகூலமானதாக இருக்கும்...கிராமத்தை நோக்கி முகத்தைத் திருப்புவது என்றால் தொழிற்துறைக்கு முதுகைக் காட்ட வேண்டும் என்று அர்த்தமல்ல; தொழிற்துறையை கிராமத்துக்குக் கொண்டுசெல்வது என்பதே அதன் அர்த்தமாகும். அரசின் 'முகத்தை'ப் பொறுத்த வரை, அதில் தொழிற்துறை இடம்பெற்றிரா விட்டால், அந்த முகத்தால் கிராமத்திற்கு எந்தப் பயனும் இல்லை."

எதிர்க்கட்சிகளின் இந்த "தி்றமையான திட்டங்களுக்கு" எதிராக இடிபோல் முழங்கிப் பதிலளித்தார் ஸ்ராலின். "விவசாயத்தில் இருந்து விடுவித்துக் கொண்டும் நம் நாட்டில் திரட்சியின் உத்வேகத்தைக் கைவிட்டும் தொழிற்துறை அவசரத்துடன் முன்னேறக் கூடாது." வசதிபடைத்த விவசாய மேல்தட்டினருக்கு எதிர்ப்பின்றி அனுசரித்துச் செல்லும் வகையான இந்த நீதிமொழிகளை கட்சியின் முடிவுகள் தொடர்ந்து கூறிக் கொண்டிருந்தன. "அதீத தொழிற்துறை மயமாக்கல்வாதிகளை" இறுதியாக நொருக்கும் நோக்கத்தோடு 1927 டிசம்பரில் கூடிய 15வது கட்சிக் காங்கிரஸ், "பெரும் கட்டுமானங்களில் அரசு மூலதனம் மிகப் பெருமளவில் ஈடுபடுத்தப்படுவதன் அபாயம்" குறித்து எச்சரிக்கை எழுப்பியது. அந்த நேரத்திலும் கூட ஆளும் கன்னை வேறு எந்த அபாயங்களையும் காண மறுத்ததாய் இருந்தது.

1927-28 பொருளாதார ஆண்டில், தொழிற்துறை பிரதானமாக புரட்சிக்கு-முந்தைய எந்திரங்களைக் கொண்டும் விவசாயம் பழைய கருவிகளைக் கொண்டும் இயங்கி வந்த மீட்சிக் காலகட்டம் என்று அழைக்கப்பட்டதானதொரு காலகட்டம் முடிவுக்கு வந்து கொண்டிருந்தது. அதற்கு மேல் எந்த முன்னேற்றத்துக்கும் பெரிய அளவிலான சுதந்திரமான தொழிற்துறைக் கட்டுமானம் அவசியமாய் இருந்தது. தட்டுத் தடவிக்கொண்டும் திட்டம் எதுவுமின்றியும் அதற்கு மேல் முன்னோக்கிசெல்வதென்பது சாத்தியமில்லாததாகிவிட்டது.

சோசலிச தொழிற்துறைமயமாக்கத்தின் அனுமானரீதியான சாத்தியக்கூறுகளை எதிர்ப்பாளர்கள் தரப்பு 1923-1925 சமயத்திலேயே பகுப்பாய்வு செய்து விட்டது. முதலாளித்துவ வர்க்கத்திடம் இருந்து பெற்றிருந்த பாரம்பரியமான சாதனங்கள் பயன் தீர்ந்த பின்னர், சோவியத் தொழிற்சாலைகள், சோசலிச திரட்சியினை அடிப்படையாகக் கொண்டு, முதலாளித்துவத்தின் கீழ் ஒட்டுமொத்தமாய் சாத்தியமற்ற ஒரு சீரான வளர்ச்சியைச் சாதிக்க முடியும் என்பதே அவர்களின் பொதுவான முடிவாக இருந்தது. சர்வகவனத்துடன் நாங்கள்  தயாரித்தளித்த தகவல்தொகுப்பான அண்ணளவான  பதினைந்து முதல் பதினெட்டு சதவீதத்தை  வருங்காலத்தின் கற்பனையான சங்கீதம் என்பதாக ஆளும் கன்னையைச் சேர்ந்த தலைவர்கள் வெளிப்படையாகக் கேலி செய்தனர். இதுதான் அந்த நேரத்தில் "ட்ரொட்ஸ்கிசத்திற்கு" எதிரான போராட்டத்தின் சாரமாக அமைந்திருந்தது.  

இறுதியில் ஒருவழியாய் 1927 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ஐந்தாண்டு திட்டத்தின் முதல் உத்தியோகபூர்வ வரைவு முழுமையாக அற்பமான ஒட்டுவேலை மனோநிலையால் நிரப்பப்பட்டிருந்தது. தொழிற்துறை உற்பத்தியின் வளர்ச்சி வேகம் ஒவ்வொரு வருடமும் கொஞ்சம் கொஞ்சமாய் கீழிறங்கி 9 இல் இருந்து 4 சதவீதமாக வீழ்ச்சியுறுவதாக வரைந்து காட்டப்பட்டிருந்தது. தனிநபர் நுகர்வு மொத்த ஐந்தாண்டு காலத்தில் 12 சதவீத உயர்வைக் காணவிருந்தது! ஐந்தாண்டு முடிவில் அரசாங்க வரவு-செலவுத்திட்டம் மொத்தமாக தேசிய வருவாயில் 16 சதவீதத்தை அடக்கியதாக இருந்தது, அதேசமயத்தில் சோசலிச சமுதாயம் ஒன்றை உருவாக்கும் எந்த நோக்கமும் கொண்டிராத ஜாரிச ரஷ்யாவில் இந்த வரவு செலவுத் திட்டம் 18 சதவீத தேசிய வருவாயை விழுங்கியிருந்தது என்கிற உண்மையில் இருந்தே இந்த முதல் திட்டத்தில் காணப்படுகின்ற நம்பவியலாத அளவிலான சிந்தனைக் கோழைத்தனம் தெளிவாக வெளிப்படுகிறது. இந்தத் திட்டத்தை வரைந்த பொறியாளர்களும் பொருளாதார நிபுணர்களும் சில வருடங்கள் கழித்து, அந்நிய சக்திகளின் வழிகாட்டலின் கீழ் திட்டமிட்டு சதி செய்தவர்களாக கடுமையாகத் தீர்ப்பளிக்கப்பட்டு சட்டத்தால் தண்டனை அளிக்கப் பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தகுந்தது. தங்களது திட்ட வேலை அந்த சமயத்தில் அரசியல்குழுவின் "பொதுவான நிலைப்பாடு"க்கு முழுமையாகப் பொருந்தி நிற்கும் வகையிலும், அதன் உத்தரவுகளின் கீழும் தான் மேற்கொள்ளப்பட்டது என்பதைக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒருவேளை துணிச்சல் பெற்றிருந்தால் பதிலளித்திருக்கக் கூடும்.

போக்குகளின் போராட்டமானது இப்போது எண்கணித மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. "இத்தகையதொரு அற்பமான முழுக்கவும் அவநம்பிக்கையான திட்டத்தை அக்டோபர் புரட்சியின் 10வது ஆண்டு நிறைவில் முன்வைப்பது என்பது நடைமுறையில் சோசலிசத்துக்கு எதிராக வேலை செய்வதற்குச் சமம்" என்று எதிப்பாளர்களின் தரப்பு கூறியது. ஒரு வருடம் கழித்து, உற்பத்தியில் சராசரி வருடாந்திர வளர்ச்சி சுமார் 9 சதவீதமாக இருக்கும் வகையிலான ஒரு புதிய ஐந்தாண்டுத் திட்டத்தை அரசியல்குழு ஏற்றுக் கொண்டது. இருப்பினும் உண்மையான அபிவிருத்திப் பாதை "அதீத தொழிற்துறைமயமாக்கல் வாதிகள்" வரைந்த  தகவல்தொகுப்பை நெருங்குவதை நோக்கிய ஒரு விடாப்பிடியான போக்கினையே வெளிப்படுத்தியது. இன்னுமொரு ஆண்டிற்குப் பின்னர், அரசாங்கக் கொள்கயானது தீவிரமாய் மாறி விட்டிருந்த ஒரு சமயத்தில், அரசாங்க திட்டக் குழு மூன்றாவதாய் ஒரு ஐந்தாண்டுத் திட்டத்தை வரைந்தது, இதன் வளர்ச்சி விகிதம் 1925 ஆம் ஆண்டில் எதிர்ப்பாளர்கள் கணித்துக் காட்டிய விகித அளவுக்கு யாரும் எதிர்பார்த்திருக்கக் கூடியதை விடவும் மிக நெருங்கி வந்திருந்தது. நாம் இங்கு காண்பதைப் போல, சோவியத் ஒன்றிய பொருளாதாரக் கொள்கையின் உண்மையான வரலாறு என்பது உத்தியோகபூர்வக் கதையில் இருந்து ரொம்பவும் மாறுபட்டது. துரதிர்ஷ்டவசமாக, வெப்ஸ் போன்ற தயாளகுணம் படைத்த ஆராய்ச்சியாளர்கள் இதற்குக் கொஞ்சமும் கவனம் கொடுப்பதில்லை.

A Sharp Turn: Five-Year Plan in Four Years and
Complete Collectivization

ஒரு கூரிய திருப்பம்: "ஐந்தாண்டுத் திட்டம் நான்கே ஆண்டுகளில் " மற்றும் "முழுமையான கூட்டுற்பத்தி முறை"

தனியார் விவசாய நிறுவனங்களுக்கு முன்பாக திடமின்மை,  பெரும் திட்டங்களில் நம்பிக்கையின்மை, குறைந்த உத்வேகத்தை பாதுகாத்தமை, சர்வதேசப் பிரச்சினைகளின் மீதான அலட்சியம் - இவை எல்லாம் ஒன்றாய் சேர்ந்து தான், ஜேர்மன் பாட்டாளி வர்க்கத் தோல்விக்குப் பின்னதாக 1924 வசந்தத்தில் ஸ்ராலினால் முன்வைக்கப்பட்ட "தனியொரு நாட்டில் சோசலிசம்" என்கின்ற தத்துவத்தின் சாரத்தை உருவாக்கின. இதன் காரணம் தொழிற்துறைமயமாக்கத்தை துரிதப்படுத்துவதற்காகவோ, ரஷ்ய விவசாயியுடன் மோதலுக்குபோவதோ, உலகப் புரட்சியை கருத்தில் கொண்டோ அல்ல. இவை எல்லாவற்றுக்கும் மேலானதாக கட்சி அதிகாரத்துவத்தின் அதிகாரத்தை விமர்சனத்தில் இருந்து காப்பாற்றும் நோக்கத்துடன்! விவசாயிகளிடையே பேதம் பிரித்துப் பார்ப்பதென்பது எதிர்ப்பாளர்களின் கண்டுபிடிப்பாகக் கூறிக் கண்டனம் செய்யப்பட்டது. அதிகாரிகளுக்கு திருப்திகரமாய் தோன்றியதை விடவும் ஒரு உயர்ந்த இடத்தை குலாக்குகளுக்கு அளித்து விட்ட மத்திய புள்ளிவிவரக் கழகத்தை மேற்கூறிய யகோவிலேவ் பதவிநீக்கினார். பொருட்களின் பஞ்சம் தன் ஆயுட்காலத்தை முடித்து விட்டது என்றும், "பொருளாதார அபிவிருத்தியில் ஒரு அமைதிகரமான உத்வேகம் கையிலிருக்கிறது" என்றும், வருங்காலத்தில் தானிய வசூல் இன்னும் "ஒரேசீரான வகையில்" மேற்கொள்ளப்படும் என்றும், இவை போன்று இன்ன பலவற்றையும் தலைவர்கள் சத்தமின்றி உறுதியளித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில், வலிமையான குலாக்குகள் தங்களுடன் நடுத்தர விவசாயியையும் சேர்த்துக் கொண்டு நகரங்களை தானியத் தடைகளுக்கு உட்படுத்தினர். 1928 ஜனவரியில், தொழிலாள வர்க்கம் பஞ்சம் பரவும் ஒரு பயங்கரத்திற்கு முகம் கொடுத்து நின்றது. குரூரமான நகைச்சுவைகளை எப்படி நிகழ்த்துவது என்பதை வரலாறு அறிந்திருக்கிறது. குலாக்குகள் புரட்சியின் தொண்டையைப் பிடித்துக் கொண்டிருந்த சாட்சாத் அதே மாதத்தில் தான், இடது எதிர்ப்பாளர்களின் பிரதிநிதிகள் குலாக் பயங்கரம் குறித்து அவர்கள் ஏற்படுத்திய "பீதி"க்குத் தண்டனையாக சிறையில் அடைக்கப்பட்டனர் அல்லது சைபீரியாவின் வெவ்வேறு பகுதிகளுக்கு நாடுகடத்தப்பட்டனர்.

தானிய உற்பத்தி நிறுத்தம் என்பது சோசலிச அரசை நோக்கிய குலாக்குகளின் (அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்?) அப்பட்டமான குரோதத்தினால், அதாவது சாதாரண அரசியல் நோக்கங்களால், விளைந்தது என்பதாய் எடுத்துக்காட்ட அரசாங்கம் முயற்சி செய்தது. ஆனால் அந்த வகை "இலட்சியவாதத்தின்" மீதெல்லாம் குலாக்குக்கு அதிக விருப்பமிருக்கவில்லை. அவர் தம் தானியத்தைப் பதுக்கினர் என்றால், அதன் காரணம் அவருடன் நடத்தப்பட்ட பேரம் அவருக்கு இலாபகரமாக இல்லை என்பதனாலாகும். சாட்சாத் அதே காரணத்திற்காகத் தான் விவசாயிகளின் பரவலான பிரிவுகளை தனது செல்வாக்கின் கீழ் அவரால் கொண்டுவர முடிந்தது. குலாக் சதிக்கு எதிராக வெறும் அடக்குமுறைகள் மட்டுமே போதுமானதாக இல்லை என்பது வெளிப்படையானது. கொள்கையை மாற்ற வேண்டியது அவசியமாய் இருந்தது. இருந்தாலும் அப்போதும் கூட இந்த  ஊசலாட்டத்தில் அதிகளவு காலம் இழக்கப்பட்டது.

அப்போதும் அரசாங்கத்தின் தலைவராக இருந்த ரகோவ் 1928 ஜூலையில்  "தனியார் பண்ணைகளை அபிவிருத்தி செயவதே கட்சியின் தலைமைப் பணி" என அறிவித்தார். ஸ்ராலின் வழிமொழிந்து கூறினார்: "தனியார் பண்ணைகள் பயனளிக்கும் தன்மையை இழந்து விட்டன என்றும்....நாம் அவற்றை ஆதரிக்கக் கூடாது என்றும் சிலர் கருதுகிறார்கள்....இந்த நபர்கள் நம் கட்சியின் நிலைப்பாட்டுடன் பொதுவான தன்மை எதனையும் கொண்டிருக்கவில்லை." அதற்கும் பின்னர் ஒரு வருட காலத்திற்குள்ளாகவே, கட்சியின் நிலைப்பாடு இந்த வார்த்தைகளுடன் பொதுவான தன்மை எதனையும் கொண்டிருக்கவில்லை. "முழுமையான கூட்டுற்பத்தி முறை"யின் விடியல் தொடுவானத்திற்கு வந்திருந்தது.

புதிய நோக்குநிலையும் முந்தயதைப் போலவே அனுபவரீதியான வழியிலும், ஆளும் வட்டத்திற்குள்ளான ஒரு மறைமுகப் போராட்டத்தின் வழியாகவும் வந்து சேர்ந்திருந்தது. "வலதுசாரி மற்றும் மத்தியவாத குழுக்கள் எதிர்ப்பாளர்கள் மீதான ஒரு பொதுவான குரோதத்தினால் ஒற்றுமைப்பட்டு நிற்கின்றன என்றும், எதிர்ப்பாளர்களை வெட்டி விடுவது தவிர்க்கவியலாமல் இந்த இரண்டு குழுக்களுக்கும் இடையில் வரவிருக்கும் போராட்டத்தை முடுக்கி விடும்" என்றும் ஒரு வருடத்திற்கு முன்னதாக இடது தரப்பு எச்சரிக்கை செய்திருந்தது. அதேபோல் தான் நடந்தது. ஆனாலும், சிதறும் இந்தக் கூட்டத்தின் தலைவர்கள் மற்றவற்றைப் போலவே இதிலும் இடது பிரிவு கூறியது உண்மையாகி விட்டது என்று எந்தக் காரணத்திற்காகவும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். 1928 அக்டோபர் 19 அளவு தாமதித்துத் தான் ஸ்ராலின் பகிரங்கமாக அறிவித்தார்: "நமது மத்திய குழுவின் அரசியல்குழுவில் ஒரு வலதுசாரி விலக்கம் இருப்பது குறித்தும், அதனை நோக்கிய ஒரு சமரச மனோபாவம் இருப்பது குறித்தும் கிசுகிசுக்கப்படுவதை நிறுத்த வேண்டிய நேரம் வந்தாகி விட்டது." இரண்டு குழுக்களுமே அந்த நேரத்தில் கட்சி எந்திரத்தின் நாடி பிடித்துப் பார்த்துக் கொண்டிருந்தன. அடக்கி வைக்கப்பட்டிருந்த கட்சியானது இருட்டு வதந்திகள் மற்றும் ஊகங்களில் வாழ்ந்து கொண்டிருந்தது. ஆனால் ஒரு சில மாதங்களிலேயே உத்தியோகபூர்வ பத்திரிகையானது, தனது வழமையான சங்கடம் காணாத  சுதந்திரத்துடன், அரசாங்கத் தலைவரான ரகோவ் "சோவியத் அதிகாரத்தின் பொருளாதாரச் சிரமங்கள் மீது ஊகங்களை செய்திருந்தார்" என்றும், கம்யூனிச அகிலத்தின் தலைவரான புக்காரின் "முதலாளித்துவ-தாராளவாத செல்வாக்குகளுக்கு ஒரு இணைப்புக் கம்பியாக திகழ்ந்தார்" என்றும், அனைத்து ரஷ்ய தொழிற்சங்கங்களின் மத்திய குழுவின் தலைவரான டோம்ஸ்கி ஒரு பரிதாபகரமான தொழிற்சங்கவாதி என்பதற்கு மேல் வேறொன்றுமில்லை என்றும் அறிவித்தது. ரகோவ், புக்காரின் மற்றும் டோம்ஸ்கி இந்த மூவருமே அரசியற்குழு உறுப்பினர்கள். இடது எதிர்ப்பாளர்களுக்கு எதிரான முந்தைய மொத்தப் போராட்டத்திலும் தனது ஆயுதங்களை வலதுசாரிகளின் கிடங்கிலிருந்து தான் எடுத்திருந்தது என்பதால், வலதுகளுக்கு எதிரான தனது போராட்டத்தில் குற்றம்சாட்டப்பட்ட இடது பிரிவினரின் (Opposition platform) ஒரு பகுதியை பயன்படுத்துவதாக புகாரினால் உண்மைக்குப் பாதகமின்றி ஸ்ராலின் மீது குற்றம் சுமத்த முடிந்தது.

ஏதோ ஒரு வழியில் மாற்றம் செய்யப்பட்டாகி விட்டது. "பணக்காரர் ஆகுங்கள்" என்னும் முழக்கமும் அதனுடன் சேர்ந்து குலாக்குகள் வலியில்லாமல் சோசலிசத்துக்கு வளர்ச்சி காண்பதான தத்துவமும், தாமதமாக என்றாலும் அந்த அளவுக்குத் தீர்மானகரமான வகையில், கண்டனத்திற்கு ஆளானது. தொழிற்துறைமயமாக்கம் அன்றாட ஒழுங்காக ஆக்கப்பட்டது. சுய-திருப்தியுடன் அமைதி காக்கும் தன்மை போய் பீதி பிடித்த அவசரகதி வந்து சேர்ந்தது. பாதி மறந்து போய் விட்டிருந்த விரட்டிப் பிடிப்பது மற்றும் முந்திச் செல்வது என்கின்ற லெனினின் சுலோகம் சாத்தியமான மிகக் குறைந்த காலத்தில் என்கின்ற வார்த்தைகளை கொண்டு நிறைவு செய்யப்பட்டது. ஏற்கனவே கொள்கையளவில் கட்சியின் ஒரு காங்கிரசால் உறுதி செய்யப்பட்டிருந்த குறைந்தபட்ச எதிர்பார்ப்புடனான ஐந்தாண்டுத் திட்டம் ஒரு புதிய திட்டத்திற்கு வழிவிட நேர்ந்தது. இப்புதிய திட்டத்தின் அடிப்படைக் கூறுகள் முழுவதும் சிதறடிக்கப்பட்ட இடது எதிர்ப்பாளர்களின் களத்தில் இருந்து இரவல் வாங்கப்பட்டிருந்தது. நேற்றுத்தான் கிராமபோனுடன் ஒப்பிடப்பட்டிருந்த நெப்ரோஸ்ட்ரோய் நீர்த்தேக்கம், இன்று கவனத்தின் மையப் புள்ளியாக ஆகியிருந்தது.

முதல் புதிய வெற்றிகளுக்குப் பின், "ஐந்தாண்டுத் திட்டத்தை  நான்கு ஆண்டுகளில் சாதியுங்கள்" என்று சுலோகம் முன்னேறியது. திகைப்பிலிருந்த அனுபவவாதிகள் இப்போது எல்லாமே சாத்தியம் தான் என்று முடிவு கட்டினார்கள். சந்தர்ப்பவாதம், நாம் வரலாற்றில் அடிக்கடி காண்பதைப் போல, அதன் எதிர்முனையான, சாகசவாதமாகத் திரும்பியது. 1923 முதல் 1928 வரை புக்காரினது "ஆமை வேக"த் தத்துவத்தை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்த அரசியல்குழு  இப்போது வருடாந்திர வளர்ச்சியில் 20 சதவீதத்தில் இருந்து 30 சதவீதத்திற்கு எளிதாகத் தாவியது, ஒவ்வொரு பகுதிரீதியான மற்றும் தற்காலிகமான சாதனையையும் ஒரு நிர்ணய அளவாக மாற்ற முயற்சித்தது, தொழிற்துறையின் பல்வேறு பிரிவுகளுக்கும் இடையிலான இடையுறவுகளின் பக்குவம் குறித்துக் கவனியாது விட்டது. திட்டத்தில் இருந்த நிதி ஓட்டைகள் எல்லாம் அச்சடித்த காகிதத்தைக் கொண்டு அடைக்கப்பட்டன. முதலாவது திட்ட காலத்தில், புழக்கத்தில் இருந்த வங்கிக் கரன்சி நோட்டுகளின் எண்ணிக்கை 1.7 பில்லியன் ரூபிள்களில் இருந்து 5.5 பில்லியன் ரூபிள்களாக அதிகரித்தது. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தின் தொடக்கத்தில் இது 8.4 பில்லியன் ரூபிள்களை எட்டியிருந்தது. கட்டாய தொழிற்துறைமயமாக்கம் யார் மீது தாங்கவியலாத சுமையினை ஏற்படுத்திக் கொண்டிருந்ததோ அந்த வெகுஜன மக்களின் அரசியல் கட்டுப்பாட்டிலிருந்து மட்டுமல்லாமல், செர்வோனெட்டுகளால் [ரஷ்ய நாணய மதிப்பு - 1936ல் 5 அமெரிக்க டாலருக்குச் சமமாய் இருந்தது] செலுத்தப்பட்ட தன்னியல்பான கட்டுப்பாட்டில் இருந்தும் அதிகாரத்துவம் தன்னை விடுவித்துக் கொண்டது. புதிய பொருளாதாரக் கொள்கையின் தொடக்கத்தில் திடமாக முன்வைக்கப்பட்ட பண அமைப்புமுறை மீண்டுமொரு முறை அதன் வேர் வரை அசைத்துப் பார்க்கப்பட்டது.

எவ்வாறாயினும், முக்கிய அபாயம் -திட்டம் நிறைவேறுவதற்கான அபாயம் மட்டுமல்ல ஆட்சிக்கேயான அபாயமும் கூட- விவசாயிகளின் பக்கத்தில் இருந்தே தோன்றியது.

கிராமங்கள் எவ்வகையிலும் அந்தத் தருணம் வரையில் அதிகாரிகள் சித்தரித்துக் காட்டிய வகையில் இருக்காது, மாறாக வெளியேற்றப்பட்ட இடது எதிர்ப்பாளர்கள் எடுத்துக்காட்டியிருந்த வகையில் தான் ஒத்திருப்பதாக பிப்ரவரி 15, 1928 இல் பிராவ்தா தலையங்கத்தில் இருந்து நாட்டு மக்கள் ஆச்சரியத்துடன் அறிந்து கொண்டது. நேற்று வரை குலாக்குகள் இருப்பதையே மறுத்து வந்த செய்தித்தாள்கள், இன்று, மேலிருந்து சமிக்கை காட்டப்பட்டதை அடுத்து, அவர்கள் கிராமங்களில் மட்டுமல்லாமல் கட்சிக்குள்ளும் கூட இருப்பதைக் கண்டறிந்திருந்தது. சிக்கலான எந்திரங்கள் கொண்டிருப்பது, கூலிக்குத் தொழிலாளர்களை அமர்த்துவது, அரசாங்கத்திடம் இருந்து நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான பூட் (1 பூட் = 16.38 கிலோகிராம்கள்) தானியங்களை மறைப்பது, அத்துடன் "ட்ரொட்ஸ்கிச"க் கொள்கையை சமரசமற்றுக் கண்டனம் செய்வது இத்தகைய செயல்களைச் செய்து வந்த வசதிபடைத்த விவசாயிகளால் கம்யூனிச சிறுஅமைப்புகள் பலசமயங்களில் ஆதிக்கம் செலுத்தப்படுவது வெளிக் கொணரப்பட்டது. உள்ளூர் செயலாளர்கள் பொறுப்பில் இருந்த குலாக்குகள் ஏழை விவசாயிகளுக்கும் கூலித் தொழிலாளர்களுக்கும் கட்சியில் இடம் மறுத்தது எப்படி என்பது குறித்த பரபரப்பான அம்பலப்படுத்தல்களை வெளியிட செய்தித்தாள்கள் ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டன. பழைய வரையறைகள் அனைத்தும் தலைகீழாய் மாற்றப்பட்டிருந்தன. சாதகமானவையும் பாதகமானவையும் இடம் மாறியிருந்தன.

நகரங்களுக்கு உணவளிக்க வேண்டுமென்றால், அன்றாட உணவை உடனடியாக குலாக்கிடம் இருந்து எடுத்தாக வேண்டியது அவசியமாக இருந்தது. இது பலாத்காரத்தால் மட்டுமே சாதிக்கப்பட முடியும். குலாக்கிடம் இருந்து மட்டுமின்றி நடுத்தர விவசாயியிடம் இருந்தும் தானியக் கையிருப்பை பறிமுதல் செய்வது உத்தியோகபூர்வ மொழியில், "அசாதாரண நடவடிக்கை" என்று வருணிக்கப்பட்டது. அதாவது எல்லாமே நாளைக்கு மீண்டும் பழைய பாதைக்கே திரும்பி விடும் என்று தான் இது அர்த்தமளிக்கிறது. ஆனால் விவசாயிகள் இந்த பொருள் பொதிந்த வார்த்தைகளை நம்பவில்லை, அவர்கள் எண்ணியது சரியே. கட்டாயத் தானியப் பறிப்பு வசதியான விவசாயிகள் விதைப்பை அதிகரிப்பதற்கான நோக்கத்தை நிறைவேறாமல் செய்தது. கூலித் தொழிலாளர்களும் ஏழை விவசாயிகளும் வேலை இல்லாமல் போனதை உணர்ந்தார்கள். விவசாயம் மீண்டும் ஒரு முட்டுச் சந்திற்கு வந்தடைந்திருந்தது, அதனுடன் சேர்த்து அரசும் தான். எந்த இழப்பு இருந்தாலும் "பொதுவான நிலைப்பாட்டை" சீர்திருத்துவது அவசியமானது.

ஸ்ராலினும் மோலோடோவும், தனிநபர் விவசாயத்திற்கு முக்கிய இடத்தை இன்னும் கொடுத்துக்கொண்டே, சோவியத் மற்றும் கூட்டுற்பத்தி பண்ணைகளின் துரித அபிவிருத்தியின் அவசியத்தை வலியுறுத்தத் தொடங்கினர். ஆனால் உணவுக்கான கடுமையான தேவை கிராமப்பகுதிக்குள்ளான இராணுவத் தேடல்களை நிறுத்தி விட அனுமதிக்கவில்லை என்பதால், தனிநபர் பண்ணைகளை ஊக்குவிக்கும் வேலைத்திட்டமானது அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. கூட்டுற்பத்தி முறையை நோக்கி "சரிவது" அவசியமாய் இருந்தது. தானியத்தை சேகரிப்பதற்கான தற்காலிகமான "அசாதாரண நடவடிக்கைகள் எதிர்பாராதவகையில் "குலாக்குகள் ஒரு வர்க்கமாய் இருப்பதில் இருந்து கலைக்கப்படுவதான" வேலைத்திட்டமாக அபிவிருத்தியுற்றது. விநியோக உணவை விடவும் அதிகமாய் வந்துவிழுந்து கொண்டிருந்த முரண்பாடான உத்தரவுகளின் மழையில் இருந்து தெளிவானது என்னவென்றால், விவசாயிகள் குறித்த பிரச்சினையில் அரசாங்கத்திடம் ஐந்தாண்டுத் திட்டம் அல்ல, ஐந்து மாதத் திட்டம் கூட இல்லை என்பது தான்.

உணவு நெருக்கடியால் உந்தப்பட்டு வரையப்பட்ட புதிய திட்டத்தின் படி, கூட்டுற்பத்தி பண்ணைகள் ஐந்து ஆண்டுகளின் நிறைவில் விவசாயச் சொத்துகளில் சுமார் 20 சதவீதத்தைக் கொண்டிருக்க வேண்டும். முந்தைய 10 வருடங்களில் கூட்டுற்பத்தி முறை நாட்டின் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகத் தான் எட்டியிருந்தது என்பதை எண்ணிப் பார்த்தால் இதன் பிரம்மாண்டம் தெளிவாகும். எப்படியிருப்பினும் இந்த வேலைத்திட்டம் ஐந்து ஆண்டுகளின் மத்தியில் மிகவும் பின்தங்கியிருக்கும்படி விடப்பட்டிருந்தது. 1929 நவம்பரில் ஸ்டாலின் தன் சொந்த ஊசலாட்டங்களைக் கைவிட்டு தனியார் பண்ணையின் முடிவை அறிவித்தார். "மொத்தக் கிராமங்களாக, பிராந்தியங்களாக, ஏன் மாகாணங்களாக"க் கூட விவசாயிகள் கூட்டுற்பத்திப் பண்ணைகளுக்கு  நுழைந்து வருவதாக அவர் அறிவித்தார். கூட்டுற்பத்திப் பண்ணைகள் பல வருடங்களுக்கு "தனியார் விவசாயச் சொத்துகளின் கடலிடையேயான தீவுகளாகத் தான் தொடரும்" என்று இரண்டு வருடங்களுக்கு முன்பு  வலியுறுத்தி வந்திருந்த யகோலோவ், இப்போது விவசாயத்திற்கான மக்கள் ஆணையராக "குலாக்குகளை ஒரு வர்க்கம் என்பதில் இருந்து கலைப்பதற்கும்" முழுமையான கூட்டுற்பத்தி நிலையை "சாத்தியமுள்ள குறைந்தபட்ச காலத்திற்குள்" ஸ்தாபிப்பதற்கும் ஒரு உத்தரவினைப் பெற்றிருந்தார். 1929 ஆம் ஆண்டில், கூட்டுற்பத்திப் பண்ணைகளின் விகிதாச்சாரம் 1.7 சதவீதத்தில் இருந்து 3.9 சதவீதமாக உயர்ந்தது. 1930 ஆம் ஆண்டில் இது 23.6 சதவீதமாகவும், 1931 ஆம் ஆண்டில் 52.7 சதவீதமாகவும், 1932 ஆம் ஆண்டில் 61.5 சதவீதமாகவும் அதிகரித்தது.

கூட்டுற்பத்தி என்பதே ஒட்டுமொத்தமாக அப்பட்டமான பலாத்காரப் பிரயோகத்தின் ஒரு விளைபொருள் தான் என்கிற மாதிரியான தாராளவாதிகளின் பிதற்றல்களை இன்றைய காலத்தில் திரும்பக் கூறும் அளவுக்கு எவரொருவரும் முட்டாளாய் இருக்க மாட்டார்கள். முந்தைய வரலாற்றுச் சகாப்தங்களில் விவசாயிகள் நிலத்திற்கான தங்களது போராட்டத்தில் சிலசமயங்களில் நிலப்பிரபுக்களுக்கு எதிராகக் கலகம் செய்திருக்கின்றனர், பிறிதொரு சமயம் தரிசாய்க் கிடக்கும் நிலங்களுக்கு காலனிஆதிக்கக் குழுவினரை அடுத்தடுத்து அனுப்பி வந்திருக்கின்றனர், இன்னும் சில சமயங்களில் இந்த விவசாயிகள் கூட்டமாக வசிப்பதற்கு பரந்த நிலப்பரப்பை அளிக்க வாக்குறுதியளிக்கும் அனைத்து வகைக் குழுக்களையும் நோக்கி ஓடியிருக்கின்றனர். இப்போது மிகப்பெரிய நிலப்பிரதேசங்களையும் பெரும் தொகுப்பு நிலங்களையும் பறிமுதல் செய்து விட்ட பிறகு, இந்தச் சிறிய நிலத்துண்டுகளை பெரிய நிலப்பரப்புகளாக மாற்றுவது விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் மற்றும் ஒட்டுமொத்தமாய் சமுதாயத்திற்கும் வாழ்வா சாவா என்கிற கேள்வியாய் ஆகியிருந்தது.

இருப்பினும் இந்தப் பிரச்சினை பொதுவான வரலாற்றுரீதியான பரிசீலனைகளின் மூலம் தீர்வுகாணப்படுவதில் இருந்து வெகுதொலைவில் இருக்கிறது. கூட்டுற்பத்திக்கான உண்மையான சாத்தியங்கள், கிராமங்களின் மேற்செல்லமுடியா நிலைமையின் ஆழத்தாலோ அரசாங்கத்தின் நிர்வாகத் திறனாலோ தீர்மானிக்கப்படுவதில்லை, மாறாக இருக்கும் உற்பத்தி மூலவளங்களின் மூலம் தான், அதாவது பெரிய அளவிலான விவசாயத்திற்கு வழிவகை செய்யும் வகையில் அவசியமான எந்திர உதவியை வழங்குவதற்கு தொழிற்சாலைகள் பெற்றிருக்கும் திறனால் தான் தீர்மானிக்கப்படுகின்றன. இந்த சடரீதியான நிலைமைகள் அங்கிருக்கவில்லை.  சிறியளவிலான விவசாயத்திற்கு மட்டுமே பொருத்தமான கருவிகளைக் கொண்டு கூட்டுற்பத்திப் பண்ணைகள் அமைக்கப்பட்டன. இந்தச் சூழ்நிலைகளில் மிகையான துரிதத்துடன் கூட்டுற்பத்தி முறைக்கு நகர்ந்தமை பொருளாதாரச் சாகச நடவடிக்கையின் தன்மையைப் பெற்றது.

தனது சொந்தக் கொள்கை மாற்றத்தின் தீவிரமயத்திற்குள்ளேயே புரியாமல் சிக்கிக் கொண்ட நிலையில், அரசாங்கம் புதிய பாதைக்கான ஆரம்பநிலை அரசியல் தயாரிப்பைக் கூட செய்யவில்லை, செய்ய முடியவில்லை. பரந்த விவசாய மக்களுக்கு மட்டுமல்ல, உள்ளூர் அதிகார அமைப்புகளுக்கும் கூட, தங்களிடம் இருந்து கோரப்படுவது என்ன என்பதை அறிய முடியவில்லை. தங்களது கால்நடைகளும் சொத்தும் அரசால் பறிமுதல் செய்யப்பட இருக்கிறது என்கிறதான வதந்திகளால் விவசாயிகள் கோபக் கொந்தளிப்பில் இருந்தார்கள். இந்த வதந்தியும் கூட உண்மைக்கு வெகு அப்பால் இருந்ததாய்ச் சொல்ல முடியாது. உண்மையில் இடது எதிர்ப்பாளர்களை முன்னர் கேலி செய்த இடத்தில் தங்களைக் கண்ட அதிகாரத்துவம் "கிராமங்களைக் கொள்ளையடித்தது". கூட்டுற்பத்தி என்பது முதன்மையாக அவர்களது   உடைமைகள் அனைத்தையும் பறிப்பதான வடிவத்தில் தான் விவசாயிக்குக் காட்சியளித்தது.

குதிரைகள், பசுக்கள், ஆடுகள், பன்றிகள் மற்றும் புதிதாய் பிறந்த கோழிகளையும் கூட அவர்கள் கூட்டுற்பத்திக்கு உட்படுத்தி விட்டனர். ஒரு வெளிநாட்டுப் பார்வையாளர் எழுதியதைப் போல, சிறு குழந்தைகளின் பாதங்களில் இருந்து பாதணிகளை உருவிப் பறித்துச் செல்கின்ற அளவுக்கு இவர்கள் குலாக்-ஒழிப்பில் ஈடுபட்டனர். இதன் விளைவாக விவசாயிகளிடையே கால்நடைகளைக் குறைந்தவிலைக்கு விற்பதும், அல்லது கால்நடைகளை உணவுக்காக வெட்டுவதும் மற்றும் மறைப்பதும் தொற்றுநோய் போல் பரவி விட்டது.

1930 ஜனவரியில், மாஸ்கோ காங்கிரசு ஒன்றில், மத்திய குழு உறுப்பினர்களில் ஒருவரான ஆன்ட்ரெயெவ் கூட்டுற்பத்தி பற்றிய பின்வரும் சித்திரத்தை வரைந்து காட்டினார்: ஒரு பக்கத்தில் நாடு முழுவதும் திறம்பட அபிவிருத்தியுற்று வரும் கூட்டுற்பத்தி இயக்கமானது இப்போது "தன் பாதையில் குறுக்கே வரும் ஒவ்வொரு தடையையும் சிதறடிக்கும்" என்று உறுதிபடக் கூறிய அவர் மறுபக்கத்தில் விவசாயிகள் தங்களது சொந்தக் கருவிகளை, கையிருப்புகளை மற்றும் விதைகளையும் கூட கூட்டுற்பத்தி நிலையங்களுக்கு வரும் முன் கண்மண் தெரியாமல் விற்பது என்பது "அபாயமான அளவுகளில்" பெருகி வருகிறது என்றார். இந்த இரண்டு பொதுமைப்படுத்தல்களும் ஒன்றுக்கொன்று எவ்வளவு முரண்பட்டதாக இருந்தாலும் கூட, கூட்டுற்பத்தியாக்கத்தின் பரவும் தன்மை என்பது ஒரு கையறுநிலையான நடவடிக்கையாக இருப்பதை எதிர்த்திசையில் இருந்து இவை சரியாகக் காட்டுகின்றன. அதே வெளிநாட்டு விமர்சகர் எழுதினார்: "முழுமையான கூட்டுற்பத்திமயமாக்கல் தேசிய பொருளாதாரத்தை, முன்கண்டிராத அளவுக்கு, ஏதோ முன்று ஆண்டுகள் போர் நடந்து முடிந்திருந்ததைப் போல, ஒரு அழிந்த நிலைக்குள் அமிழ்த்தியிருந்தது.

நேற்று வரை விவசாயத்தின் மொத்த உந்து சக்திகளாய் இருந்துவந்த இருபத்தி ஐந்து மில்லியன் தனித்தனியான விவசாயத் தன்முனைப்புகள் பழைய விவசாயியின் நோஞ்சான் குதிரையைப் போல் பலவீனமாக இருந்தாலும், அவை சக்திகளாகவே இருந்தன. அதிகாரத்துவம், தொழில்நுட்ப சாதனங்களில்லாத கிராமப் பொருளாதார அறிவு இல்லாத ஏன் விவசாயிகளின் ஆதரவும் கூட பெற்றிராத இருநூறாயிரம் கூட்டுற்பத்திப் பண்ணை நிர்வாக அலுவலகங்களைக் கொண்டு ஒரே வீச்சில் மாற்றி விட முயற்சித்தது. இந்த சாகசவாதத்தின் சங்கடமான பின்விளைவுகள் விரைவில் பின்தொடர்ந்தன, அவை பல ஆண்டுகளுக்கு நீடிக்கவும் செய்தன. 1930 ஆம் ஆண்டில் 835 மில்லியன் சென்ட்னர்களுக்கு அதிகரித்திருந்த மொத்தத் தானிய அறுவடை அடுத்த இரண்டு ஆண்டுகளில் 700 மில்லியனுக்கும் கீழே வீழ்ச்சியுற்றது. இந்த வித்தியாசத்தை வெறுமனே பார்த்தால் துயரம்  தெரியாது, நகரங்களை பழக்கப்படுத்தப்பட்டிருந்த வழக்கமான பசி பட்டினி அளவுகளில் வைத்திருப்பதற்குக் கூட பற்றாக்குறையாகி விட்டிருக்கக் கூடிய தானியத்தின் இழப்பை அது குறித்து நின்றது. தொழிற்துறைப் பயிர்களில் விளைவுகள் இன்னும் மோசமாய் இருந்தன. கூட்டுற்பத்தி தொடங்கிய சமயத்தில் சர்க்கரை உற்பத்தி ஏறக்குறைய 109 மில்லியன் பூட்களாக இருந்தது, முழுமையான கூட்டுற்பத்தியின் உச்ச சமயத்தில் இது பீற்றூட் பற்றாக்குறையின் காரணமாக 48 மில்லியன் பூட்களாக, அதாவது முன்னிருந்த நிலையில் இருந்து பாதிக்கும் கீழாக சரிவுற்றிருந்தது. ஆனால் மிகவும் அழிவுகரமான புயல் வீசியதென்றால் அது விலங்கு சாம்ராஜ்யத்தில் தான். குதிரைகளின் எண்ணிக்கை 1929 இல் 34.6 மில்லியனாக இருந்ததில் இருந்து 1934 இல் 15.6 மில்லியனாக வீழ்ச்சியுற்று ஐம்பத்தி ஐந்து சதவீதம் வீழ்ச்சி கண்டிருந்தது. கொம்புள்ள கால்நடைகள் எண்ணிக்கையும் 30.7 மில்லியனில் இருந்து 19.5 மில்லியனாக, அதாவ நாற்பது சதவீதம் வீழ்ந்தது. பன்றிகள் எண்ணிக்கை ஐம்பத்தி ஐந்து சதவீதமும் ஆடுகள் எண்ணிக்கை அறுபத்தி ஆறு சதவீதமும் வீழ்ச்சியுற்றன. பசி, குளிர், தொற்றுநோய் மற்றும் அடக்குமுறை நடவடிக்கைகளால் ஏற்படுகின்ற மக்கள் அழிவு துரதிர்ஷ்டவசமாக கொல்லப்பட்ட கால்நடைகள் அளவுக்குத் துல்லியமாக கணக்கெடுக்கப்படவில்லை, ஆனாலும் இது மில்லியன்கணக்கான எண்ணிக்கையில் சேரும். இந்த உயிர்த்தியாகங்களுக்கான பழி கூட்டுற்பத்தி முறை மீது விழத்தக்கதல்ல, அது அமுலாக்கப்படப் பயன்பட்ட குருட்டுத்தனமான, முரட்டுத்தனமான, சூதுவாதான வழிமுறைகளின் மீதே தான் விழத்தக்கது. அதிகாரத்துவம் எதனையுமே முன்கணிக்கவில்லை. விவசாயிகளின் தனிநபர் நலன்களை பண்ணை நலனுடன் பிணைக்க முயன்றிருந்த கூட்டுற்பத்தி குறித்த அரசியல்சட்டங்களும் கூட, மகிழ்ச்சி தொலைந்த கிராமங்கள் இவ்வாறாக குரூரமாகத் தரிசாகிப் போகும் வரைக்கும், வெளியிடப்படாமல் இருந்தன.

1923-28 கொள்கையின் பின்விளைவுகளில் இருந்து கொஞ்சம் நிவாரணம் காண வேண்டியிருந்த அவசியத்தில் இருந்து தான் இந்த புதிய பாதைக்கான பலாத்காரமான தன்மை எழுந்தது. அப்படியும் கூட, கூட்டுற்பத்தி முறையானது இன்னும் பொருத்தமான வேகத்தையும் கூடுதல் திட்டமிட்ட வடிவங்களையும் கொண்டிருந்திருக்க முடியும், கொண்டிருந்திருக்க வேண்டும். அரசு அதிகாரம், தொழிற்துறை இரண்டையுமே தனது கைகளில் கொண்டிருந்த நிலையில், அதிகாரத்துவம், தேசத்தை ஒரு பேரழிவின் விளிம்புக்கு இட்டுச் செல்லாமலேயே இந்த நிகழ்முறையை ஒழுங்குபடுத்தியிருக்க முடியும். நாட்டின் சடரீதியான மற்றும் நெறிரீதியான வளங்களுக்குத் தக்க வேகங்களை அவர்கள் கைக்கொண்டிருக்க முடியும், கைக்கொண்டிருக்க வேண்டும். "இடது எதிர்ப்பாளர்களின்" புகலிடம் (émigré) வெளியீடு 1930 ஆம் ஆண்டு எழுதியது: "உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் சாதகமான சூழ்நிலைகளின் கீழ், விவசாயத்தின் சடப்பொருள்-தொழில்நுட்ப நிலைமைகள் சுமார் பத்து அல்லது பதினைந்து வருட காலத்தில் தீவிரமாக உருமாற்றப்படலாம், மற்றும் கூட்டுற்பத்தி முறைக்கான உற்பத்தி அடித்தளத்தையும் அது வழங்கலாம். இருப்பினும், இடைவரும் ஆண்டுகளில், சோவியத் அதிகாரத்தைத்  தூக்கியெறிவதற்கான காலம் பலதடவையும் தோன்றலாம்.

இந்த எச்சரிக்கை மிகைப்படுத்தப்பட்டதல்ல. முழுமையான கூட்டுற்பத்தி அமுலாக்கக் காலத்தைப் போல முன்னொருபோதும் அழிவின் மூச்சு அக்டோபர் புரட்சிப் பிரதேசத்தின் தலைக்கு நேர்மேலே அவ்வாறு தொங்கியதில்லை. அதிருப்திகள், அவநம்பிக்கைகள், வெறுப்புணர்வு ஆகியவை நாட்டை அரித்துக் கொண்டிருந்தன. நாணய மதிப்பின் ஸ்திரமற்ற ஆட்டம்; ஸ்திரமான "வழக்கமான" மற்றும் சுதந்திரச் சந்தை விலைகள் பெருகிக்கொண்டே போனமை; அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே நடந்து கொண்டிருந்த வர்த்தகப் பரிவர்த்தனை தானியம், இறைச்சி மற்றும் பால் ஆகியவற்றின் மீதான தீர்வை விதிப்பாக மாறியமை; கூட்டுற்பத்தி சொத்துகளை மொத்தமாக கொள்ளையடித்தது மற்றும் இந்த கொள்ளையடிப்புகளை மொத்தமாய் மறைத்தது ஆகியவற்றைக் கொண்ட வாழ்வா சாவா போராட்டம்; குலாக் சதிக்கு எதிரான (குலாக்குகளை ஒரு வர்க்கம் என்பதில் இருந்து "கலைத்து விட்டதன்" பின்னர்) போராட்டத்திற்கு கட்சியின் தனித்த இராணுவரீதியான அணிதிரட்டல்; இவற்றுடன் சேர்ந்து, உணவு அட்டைகள் மற்றும் பட்டினி உணவுப்பொருள் விநியோகம்; இறுதியாக கடவுச்சீட்டு முறையை மீண்டும் கொண்டுவந்தமை - இந்த நடவடிக்கைகள் எல்லாம் நாடு முழுவதும், வெகு காலத்திற்கு முன்பே முடிந்து விட்டதாகத் தோன்றிய உள்நாட்டு யுத்தத்தின் சூழலுக்கு புத்துயிர் அளிப்பதாக இருந்தது.

தொழிற்சாலைகளுக்கான உணவு மற்றும் கச்சாப்பொருள் விநியோகம் பருவத்திற்கு பருவம் மோசமடைந்து கொண்டே சென்றது. சகிக்க முடியாத வேலை நிலைமைகளால் உழைப்பு சக்தி இடம் பெயர்வது, உடல்நிலையை போலியாகக் காரணம் காட்டி வேலை செய்யத் தவறுவது, கவனமில்லாமல் வேலை செய்வது, எந்திரங்கள் பழுதடைவது, குப்பையான மற்றும் பொதுவாகத் தரம் குறைந்த பொருட்களின் சதவீதம் மிக அதிகமாவது ஆகியவை விளைந்தன. தொழிலாளர்களின் சராசரி உற்பத்தித் திறன் 1931 ஆம் ஆண்டில் 11.7 சதவீதம் வீழ்ச்சியுற்றது. மோலோடோவே எதேச்சையாக ஒப்புக் கொண்ட கூற்று ஒன்றின் படி - இது ஒட்டுமொத்த சோவியத் ஊடகங்களிலும் வெளியானது - 1932 ஆம் ஆண்டின் தொழிற்துறை உற்பத்தி அந்த ஆண்டுக்கென திட்டமிடப்பட்டிருந்த 36 சதவீதத்திற்குப் பதிலாக 8.5 சதவீதம் மட்டுமே அதிகரித்திருந்தது. நிச்சயமாக இதற்குப் பிந்தைய சற்று காலத்திலேயே ஐந்தாண்டுத் திட்டம் நான்கு ஆண்டுகள் மற்றும் மூன்று மாத காலத்திற்குள்ளேயே நிறைவேற்றப்பட்டு விட்டதாக உலகத்திற்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் புள்ளிவிவரங்களையும் மக்கள் கருத்தையும் கைப்புரட்டு செய்வதில் அதிகாரத்துவத்தின் சிடுமூஞ்சித்தனமான போக்கு வரம்பில்லாமல் இருந்தது என்பது தான் அதன் அர்த்தமாகும். எப்படி இருந்தாலும், பிரதான விடயம் அதுவல்ல. ஐந்தாண்டுத் திட்டத்தின் தலைவிதி அல்ல, மாறாக ஆட்சியின் தலைவிதியே பணயத்தில் இருந்தது.

ஆட்சி தப்பிப்பிழைத்தது. ஆனால், அதற்கான காரணம் அது வெகுஜனகளிடையே ஆழமாக வேர்களைப் பரப்பியிருந்த தகுதிதான் காரணம். சாதகமான வெளிப்புற சூழல்களும் அதே அளவுக்குக் காரணமாய் அமைந்தன. கிராமங்களில் பொருளாதாரக் குழறுபடிகளும் உள்நாட்டு யுத்தமுமாய் இருந்த அந்த வருடங்களில், சோவியத் ஒன்றியம் அடிப்படையாக தனது அந்நிய எதிரிகளுக்கு எதிராக முடங்கிய நிலையில் இருந்தது. விவசாயிகளின் அதிருப்தி இராணுவத்திலும் அலையெனப் பரவியிருந்தது. நம்பிக்கையின்மையும் ஊசலாட்டமும் அதிகாரத்துவ அமைப்பையும் மற்றும் உத்தரவிடும் காரியாளர்களையும் விரக்தியடையச் செய்திருந்தன. அந்தக் காலகட்டத்தில் கிழக்கில் இருந்தோ அல்லது மேற்கில் இருந்தோ ஏதேனும் தாக்குதல் நிகழ்ந்திருக்குமானால் அது பாரிய அழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும்.

அதிர்ஷ்டவசமாக, வர்த்தகம் மற்றும் தொழிற்துறையில் நெருக்கடியின் முதல் ஆண்டுகள் முதலாளித்துவ உலகம் முழுவதிலும் மிரட்சியுடனான கவனமான காத்திருப்பு மனோநிலையை ஏற்படுத்தியிருந்தன. எவரொருவரும் போருக்குத் தயாராய் இல்லை; யாரும் அதனை முயற்சிக்கத் துணிந்தவராய் இல்லை.  தவிரவும், இந்த விரோதி நாடுகள் எதுவொன்றிலும், "பொதுவான நிலைப்பாட்டை" பெருமைப்படுத்தும் உத்தியோகப்பூர்வ சங்கீதத்தின் உறுமலுக்குக் கீழாக சோவியத்துகளின் பரப்பை உலுக்கிக் கொண்டிருந்த இந்த சமூகக் கொந்தளிப்புகளின் கூர்மை போதியளவு  உணரப்பட்டிருக்கவில்லை.

     

ரத்தினச் சுருக்கமாய் இருந்தாலும், எமது வரலாற்று சுருக்கம், தொழிலாளர் அரசின் உண்மையான அபிவிருத்தி என்பது கொஞ்சம் கொஞ்சமாய் நிதானமாக வெற்றிகள் குவிக்கப்படுவதான நிர்மலமான சித்திரத்தில் இருந்து எந்த அளவுக்கு அப்பாற்பட்டு நிற்கிறது என்பதைக் காட்டுகிறது என்று நம்புகிறோம். கடந்த காலத்தின் நெருக்கடிகளில் இருந்து நாம் பின்னர் வருங்காலத்திற்கான முக்கிய சுட்டிக்காட்டல்களை பெற்றுக்கொள்வோம். ஆனால், இது தவிர, வெற்றியின் தோற்றுவாய்களை, அது உண்மையான வெற்றியானாலும் சரி அல்லது நாடகமாடும் வெற்றியானாலும் சரி, புரட்சியினால் உருவாக்கப்பட்ட சமூகமயமாக்கப்பட்ட உடைமையின் நிலைமைகளில் தேடாமல், மாறாகத் தலைமையின் அசாதாரணப் பண்புகளில் தேடுகிறதான செயற்கையாகக் கற்பிதம் செய்யப்பட்டிருக்கும் தனிநபர் போலிவழிபாட்டை அழிக்க வேண்டுமென்றால் அதற்கு சோவியத் அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை மற்றும் அதன் ஊசலாட்டங்கள் குறித்த ஒரு வரலாற்றுரீதியான  கண்ணோட்டம் முழுக்கவும் அவசியமென எங்களுக்குத் தோன்றியது.

புதிய சமூக ஆட்சியின் புறநிலையாக மேன்மைநிலை தலைவர்களின் வழிமுறைகளிலும் தன்னை வெளிப்படுத்தி காட்டுகின்றது என்பதும் உண்மையே. ஆனால் இந்த வழிமுறைகள் நாட்டின் பொருளாதாரரீதியாக மற்றும் கலாச்சாரரீதியாக பின்தங்கிய நிலைமையையும், ஆளும் காரியாளர்களை வடிவமைக்கின்ற குட்டி முதலாளித்துவ நாட்டுப்புற உறவுமுறைகளையும் கூட சமஅளவில் பிரதிபலிக்கின்றன.

இதனால் சோவியத் தலைவர்களின் கொள்கையெல்லாம் மூன்றாந்தர முக்கியத்துவத்தையே கொண்டவை எனப் புரிந்து கொண்டால் அது மிக மோசமானதொரு தவறாய் இருக்கும். உலகில் வேறு எந்த ஒரு அரசாங்கத்திலும் ஒட்டுமொத்த நாட்டின் தலைவிதியும் இத்தகையதொரு அளவில் குவிந்திருப்பது கிடையாது. ஒரு தனி முதலாளியின் வெற்றிகளும் தோல்விகளும், முழுவதாக இல்லை என்றாலும் மிகவும் கணிசமான சிலசமயம் தீர்மானகரமான அளவுக்கு, அவரது தனிநபர் பண்புகளைத் தான் சார்ந்திருக்கின்றன. அவசியமான சில திருத்தங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், தனியொரு நிறுவனத்தில் ஒரு முதலாளி ஆக்கிரமித்திருக்கும் இடத்தைத் தான் ஒட்டுமொத்தப் பொருளாதார அமைப்பு தொடர்பான விடயத்தில் சோவியத் அரசாங்கம் ஆக்கிரமித்திருக்கிறது. தேசிய பொருளாதாரத்தின் மத்தியமயப்படுத்தப்பட்ட தன்மை அரசின் சக்தியை மிகப் பிரம்மாண்டமான முக்கியத்துவம் கொண்ட ஒரு காரணியாக மாற்றுகிறது. ஆனால் சாட்சாத் அந்த காரணத்திற்காகவே அரசாங்கத்தின் கொள்கையானது, சுருக்கமான முடிவுகளைக் கொண்டோ, பட்டவர்த்தனமான புள்ளிவிவரத் தரவுகளை கொண்டோ தீர்மானிக்கப்படக் கூடாது. மாறாக இந்த முடிவுகளை சாதிப்பதில் நனவான தூரநோக்கு மற்றும் திட்டமிட்ட தலைமையும் ஆற்றியிருக்கக் கூடிய குறிப்பிட்ட பாத்திரத்தின் மூலமே தீர்மானிக்கப்பட வேண்டும்.

அரசாங்கப் பாதையின் ஊசலாட்டங்கள் சூழ்நிலையின் புறநிலை முரண்பாடுகளை மட்டும் பிரதிபலிக்கவில்லை, மாறாக இந்த முரண்பாடுகளை பருவத்தே புரிந்து கொண்டு அவற்றுக்கு எதிராக முன்கூட்டித் தடுக்கும் வகையில் செயலாற்றும் திறன் தலைவர்களுக்கு இல்லாமல் இருந்ததையும் தான். தலைமையின் தவறுகளை ஒரு பரிவர்த்தனைப் பதிவேட்டு ஊழியரின் அளவுகளில் வெளிப்படுத்துவது எளிதல்ல, ஆனால் இந்த ஊசலாட்டங்களின் வரலாற்றை விவரங்களுடன் நாம் அம்பலப்படுத்தியிருப்பது அவை சோவியத் பொருளாதாரத்தின் மீது ஒரு பிரம்மாண்டமான மேலதிகச் செலவினச் சுமையை சுமத்தியிருக்கின்றன என்கின்ற முடிவினை அனுமதிக்கிறது.

மற்ற எல்லாக் குழுக்களை விடவும் சிந்தனைகளில் செழுமை குறைந்ததும் தவறுகளால் அதீத சுமை நிரம்பியதுமான ஒரு கன்னையின் கை மேலோங்கியது மற்றும் வரம்பற்ற அதிகாரத்தை அது தன் கரங்களில் குவித்தது இதெல்லாம் எப்படி ஏன் என்பது குறைந்தபட்சம் வரலாற்றை பகுத்தறியும் அணுகுமுறையுடன் பார்க்க முயலும் பட்சத்திலேனும், புரிபடாமல் இருப்பது உண்மையே. நமது அடுத்துவரும் பகுப்பாய்வு இந்தக் கேள்விக்கான திறவுகோலையும் வழங்கும். அதே சமயத்தில், எதேச்சாதிகாரத் தலைமையின் அதிகாரத்துவ வழிமுறைகள் எவ்வாறு பொருளாதாரம் மற்றும் கலாச்சாரத்தின் தேவைகளோடு மேலும் மேலும் கூர்மையான மோதலுக்குள் வருகின்றன என்பதையும், என்ன தவிர்க்கவியலாத அவசியத்தின் பேரில் சோவியத் ஒன்றிய அபிவிருத்தியில் புதிய நெருக்கடிகளும், குழப்பங்களும் தோன்றுகின்றன என்பதையும் நாம் பார்க்க இருக்கிறோம்.

எப்படியிருப்பினும், "சோசலிச" அதிகாரத்துவத்தின் இரட்டைப் பாத்திரத்தை அணுகுவதற்கு முன்னதாக, நாம் இந்த கேள்விக்குப் பதில் சொல்லியாக வேண்டும்: முன்வந்த வெற்றிகளின் நிகர விளைவு என்ன? சோவியத் ஒன்றியத்தில் சோசலிசம் உண்மையாகவே அடையப்பட்டிருக்கின்றதா? அல்லது இன்னும் எச்சரிக்கையுடன் கூறுவதென்றால்: எப்படி முதலாளித்துவ சமுதாயம் தனது அபிவிருத்தியின் ஒரு கட்டத்தில் பண்ணையடிமை முறை  மற்றும் நிலப்பிரபுத்துவம் மீட்சி பெறுவதற்கு எதிராக தனது சொந்த வெற்றிகள் மூலம் காப்புறுதி செய்து கொண்டதோ அதைப் போல இப்போது முதலாளித்துவ மீட்சி எனும் அபாயத்திற்கு எதிரான ஒரு உத்தரவாதத்தை நடப்பு பொருளாதார மற்றும் கலாச்சார சாதனைகள் கொண்டிருக்கின்றனவா?

  Well-off peasant, employing labour.

  Fermerstvo.

  Fermerstvo.

Theoretical par = $5.00 (in 1936).
* 1 pood = approximately 36 lbs.