சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

The growth of the extreme right in Europe

ஐரோப்பாவில் தீவிர வலதின் வளர்ச்சி

By Peter Schwarz
9 May 2011

Use this version to print | Send feedback

திலோ சாராசின் என்கின்ற அப்பட்டமான இனவாதியை கட்சியில் இருந்து வெளியேற்றும் நடைமுறைகளை நிறுத்தி வைப்பது மற்றும் அவரை சமூக ஜனநாயகக் கட்சியின் (SPD) பொறுப்புகளில் நீடிக்கச் செய்வது ஆகியவற்றின் மூலம் ஜேர்மனிய சமூக ஜனநாயகக் கட்சி கூர்மையாய் வலதுநோக்கி நகர்வு கண்டிருக்கிறது.

முன்னாளில் பேர்லின் மாநகர அரசாங்கத்தில் நிதித்துறை செனட்டராகவும் மத்திய வங்கியின் நிர்வாக உறுப்பினராகவும் இருந்த சாராசின் இனவாத மற்றும் சமூக-டார்வினிச தத்துவங்களையும்-கருத்துக்களையும் ஆதரவளிக்கிறார். இந்த தத்துவங்கள் கருத்துகள் எல்லாம் ஜேர்மனியில் ஹிட்லர் தோல்வியடைந்த காலத்திற்குப் பின்னர் தீவிரமான நவ நாஜிக்களின் சிறு குழுக்களால் மட்டுமே பின்பற்றப்பட்டு வந்தவை ஆகும்.ஜேர்மனி தன்னைதானை அழித்துக்கொள்கின்றது (Germany abolishes itself) என்கிற பரவலாய் விற்பனையான அவரது புத்தகத்தில், நெருங்கிய உறவுகளுக்குள் திருமணம் செய்து கொள்வது மற்றும் மரபணுரீதியாக புத்திக் கூர்மைப் பற்றாக்குறையை வெளிப்படுத்துவது ஆகிய குணாம்சங்களைக் கொண்ட ஒரு நெடிய வம்சாவளியில் இருந்து முஸ்லீம்கள் வருவதாய் அவர் குற்றம் சாட்டுகிறார். ஜேர்மனி பரம்பரைவிருத்தியினால் கைப்பற்றப்பட்டு விடக்கூடாது என எச்சரிக்கும் அவர் குடியேற்றத்தை கடுமையாக வரம்புபடுத்த அழைப்பு விடுக்கிறார்.

இன்னொரு இடத்தில், நூரெம்பேர்க் இனவாத சட்டங்களின் உணர்வுடன், அனைத்து யூதர்களும் ஒரு குறிப்பிட்ட மரபணுவைப் பகிர்ந்து கொள்வதாய் அவர் கூறிக் கொள்கிறார். சாராசினுடன் நல்லிணக்கத்தைப் பேணிக் கொள்ள முனையும் சமூக ஜனநாயகக் கட்சி தேர்தல் தேவைகளுக்காவும் மற்றும் மாறுபட்ட கருத்துகளுக்கு மதிப்பளிப்பதையும் கூறி இதனை நியாயப்படுத்துகிறது. உண்மையில் அது அடிப்படையான பொருளாதார மற்றும் சமூக மாற்றங்களுக்குப் பதிலிறுப்பு செய்து கொண்டிருக்கிறது. சமூக ஜனநாயகக் கட்சியின் வலதுசாரித் திருப்பமானது ஐரோப்பா முழுவதும் காணத்தக்கதாய் இருக்கிற ஒரு அபிவிருத்தியின் பாகமாய் உள்ளது.

முதலாளித்துவ அரசியல் பிரிவின் வலதிலும் இடதிலும் இருக்கக் கூடிய ஸ்தாபகமான கட்சிகள் பெருகிய முறையில் தமது அரசியல் வேலைத்திட்டங்களில் சோவினிசத்தையும், இஸ்லாமிய விரோதத்தையும் மற்றும் இனவாதத்தின் பிற வடிவங்களையும் கையிலெடுப்பதோடு, தங்களை தீவிர-வலது கட்சிகளுடன் சமரசப்படுத்திக் கொள்கின்றன. ஊடகங்கள் சாராசின் மற்றும் பிரெஞ்சு தேசிய முன்னணியின் (FN) தலைவரான மேரி லு பென் போன்ற வெறுப்புணர்வை வளர்க்கும் வலதுசாரிப் பிரச்சாரகர்களை ஊக்குவிப்பதன் மூலம் இந்த வலதுசாரி அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்கின்றன.

ஹங்கேரியில் ஆளும் கட்சியான Fidesz (இக்கட்சி ஐரோப்பிய மக்கள் கட்சியின் ஒரு தலைமைப் பாகமாக இருக்கிறது, இதில் ஜேர்மனியின் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம்/கிறிஸ்தவ சமூக ஒன்றியம் (CDU/CSU) மற்றும் ஆளும் தரப்பாக இருக்கிற மக்கள் இயக்கத்துக்கான பிரெஞ்சு ஒன்றியம் (UMP) ஆகியவையும் உள்ளன) தொன்மையான தேசியவாதத்தை தனது கொள்கைகளுக்கான அடிப்படையாக ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது. Fidesz அரசாங்கம் ஊடக சுதந்திரத்துக்கு கட்டுப்பாடு விதித்துள்ளதோடு எதேச்சாதிகாரமான, யூத விரோத ஹோர்தி சர்வாதிகாரத்தின் மரபில் வந்த ஒரு புதிய அரசியல் சட்டத்திற்கும் ஒப்புக் கொண்டிருக்கிறது. வீதிகளில் பார்த்தால், ஜாபிக் கட்சியின் பாசிசத் துணை இராணுவ படையானது ரோமாக்களையும் பிற சிறுபான்மையினரையும் வேட்டையாடுவதற்கும் அத்துடன் மொத்த கிராமங்களையுமே நடுநடுங்கச் செய்வதற்கும் அனுமதிக்கப்படுகிறது.

இத்தாலியிலும், சுவிட்சர்லாந்திலும் அந்நிய வெறுப்புக் கட்சிகள் தான் ஆட்சியில் அமர்ந்திருக்கின்றன. அநேகமாய் பின்லாந்திலும் வெகுவிரைவில் இது நிகழலாம். நெதர்லாந்து மற்றும் டென்மார்க்கில், பழைமைவாத அரசாங்கங்கள் வலதுசாரித் தீவிரவாதிகளின் நாடாளுமன்ற ஆதரவின் மீது தான் தங்கியிருக்கின்றன.

பிரான்சு நாட்டின் கருத்துக்கணிப்புகளில் நவ-பாசிச பிரெஞ்சு தேசிய முன்னணி (FN) ஆளும் UMPஐ எப்போதும் முந்துகிறது. ஜனாதிபதித் தேர்தல் நாளை நடப்பதாய் இருந்தால், பிரெஞ்சு தேசிய முன்னணி வேட்பாளரான மரி லு பென் தான் வலிமை மிக்க வேட்பாளர்களில் இரண்டாவது இடத்தைப் பிடிப்பதோடு இரண்டாம் சுற்றுக்குள்ளும் நுழைவார். பிரெஞ்சு தேசிய முன்னணியின் மேலேற்றம் சார்க்கோசி அரசாங்கத்தின் இஸ்லாமிய விரோத பரப்புரைகளால் ஊக்குவிக்கப்படுகிறது. பள்ளிகளில் முக்காடு இடுவதைத் தடை செய்வது மற்றும் பர்தாவைத் தடை செய்வது போன்ற விடயங்களில் இந்தப் பரப்புரைகளுக்கு பிரான்சின் சோசலிசக் கட்சி மற்றும் அதன் இடது சாரி சுற்றுவட்டங்களில் இருந்தும் ஆதரவு கிட்டுகிறது. 

சர்வதேச நிதி நெருக்கடி மற்றும் ஐரோப்பாவில் தேசிய முரண்பாடுகள் உச்சம் பெறுவது ஆகியவற்றுக்கு ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கம் தீவிர வலதை நோக்கித் திரும்புவதன் மூலமாக பதிலிறுப்பு செய்து கொண்டிருக்கிறது. முப்பது வருடங்களுக்கு முன்னதாகவே, போருக்குப் பிந்தைய காலத்தில் ஆதிக்கம் செலுத்திய சமூக சீர்திருத்தம் மற்றும் சமரசக் கொள்கைகளுக்கு தமது முதுகைக்காட்டிக்கொண்டனர். அப்போது முதல் ஊதியங்கள் மற்றும் சமூக நலங்களை வெட்டுவதற்கும், தொழிலாள வர்க்கத்தை தடுத்து வைத்திருக்கவும் அவர்கள் சமூக ஜனநாயக மற்றும் ஸ்ராலினிசக் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் முன்னாள் தீவிர இடதுகளிடையே இருக்கிற ஆதரவாளர்கள் ஆகியோரையே நம்பியிருந்து வந்திருக்கின்றனர்.

பிரான்சில் பிரான்சுவா மித்திரோன் மற்றும் லியோனல் ஜோஸ்பன் ஆகியோரின் கீழான சோசலிசக் கட்சி அரசாங்கங்களும், பிரிட்டனில் டோனி பிளேர் தலைமையிலான தொழிற்கட்சி அரசாங்கமும், மற்றும் ஜேர்மனியில் ஹெகார்ட் ஷ்ரோடரின் கீழான சமூக ஜனநாய-பசுமைக்கட்சி கூட்டணியும் வசதி படைத்தவர்களின் நலனுக்கேற்ற வகையில் வருவாய் மற்றும் சொத்துக்களை பேரளவில் மறுவிநியோகம் செய்யத் தலைமையேற்றன. தொழிற்சங்கங்கள் வர்க்கப் போராட்டத்தை முழுமையாக ஒடுக்கின அல்லது அதனை பிரயோசனமற்ற  ஆர்ப்பாட்டங்களுடன் மட்டுப்படுத்தின. இது அந்த அமைப்புகளை பெருமளவில் மதிப்பிழக்கச் செய்திருக்கிறது. அவர்களின் உறுப்பினர் எண்ணிக்கையும் வாக்காளர் எண்ணிக்கையும் பெருமளவில் சரிந்திருக்கிறது, அவர்களுக்கு இளைஞர்களிடையே ஆதரவைப் பெறுவது கடினமாகி விட்டது.

2008 இன் நிதி நெருக்கடி ஐரோப்பிய மூலதனத்தை தொழிலாள வர்க்கத்துக்கு எதிரான ஒரு புதிய தாக்குதலில் களமிறங்க இட்டுச் சென்றிருக்கிறது. இத்தாக்குதல் அதன் முந்தைய முயற்சிகளையெல்லாம் மங்கச் செய்யுமளவுக்குப் பெரியதாய் இருக்கிறது. நிர்வகிப்பவர்களுக்கு இலாபங்களும் கொடுப்பனவுகளும் புதிய சாதனைகளை எட்டிக் கொண்டிருக்கின்றன, தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரமோ பல தலைமுறைகளுக்குப் பின்னால் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது. கிரீஸ், அயர்லாந்து, போர்த்துக்கல் மற்றும் பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் தொடங்கி வைக்கப்பட்ட வெட்டுகளின் வேலைத்திட்டங்கள் இன்று ஐரோப்பா முழுமைக்குமான பொதுநிர்ணயமாக ஆகிக் கொண்டிருக்கிறது.

இந்தத் தாக்குதல்களை மேற்கொள்ள, முன்னாள் சீர்திருத்தவாதக் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் அவர்களது முன்னாள்-தீவிரவாத அடியொற்றிகள் ஆகியோரின் ஆதரவின் மீதே முதலாளித்துவ வர்க்கம் தொடர்ந்து நம்பியிருந்து வருகிறது. ஆனால் இந்த அமைப்புகளின் பலவீனத்தினாலும் வர்க்கப் பதட்டங்கள் துரிதமாகப் பெருகி வருவதையும் கண்ட முதலாளித்துவ வர்க்கம் இப்போது பல்வேறு சாத்தியங்களையும் ஆலோசித்து வருவதோடு சமூக எதிர்ப்புகளை மூர்க்கமாக ஒடுக்குவதற்கு தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறது; இதனால் தான் அதீத வலதுக்கு அவர்கள் நல்கும் ஆதரவு. சமூகச் சூழலை நஞ்சாக்குவதற்கும், தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்தி ஒரு எதேச்சாதிகார அரசுக்கான ஆதரவை அணிதிரட்டுவதற்கும் இது அவர்களுக்கு அவசியமாய் உள்ளது.

இந்தக் கொள்கைக்கு சமூக ஜனநாயக் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களிடம் ஆதரவு கிடைக்கிறது என்பது இங்கு முக்கியமானதாகும். இந்த அமைப்புகள் எல்லாம் தொழிலாள வர்க்கத்துடனான எந்த உறவையும் தொலைத்து வெகுகாலமாகி விட்டது. அரசு எந்திரம் மற்றும் பெரு வணிகத்துடன் நெருக்கமாய்ப் பின்னிப் பிணைந்து அத்துடன் அவற்றின் நலன்களை முழுமையாகப் பாதுகாக்கிற ஒரு வசதி மற்றும் தனியந்தஸ்து படைத்த அதிகாரத்துவத்தையே அவை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.  வெளிநாட்டவரை வெறுப்பதற்கும், தேசியவாதத்துக்கும் உரம் போடுவதன் மூலமாகத் தான்  ஐரோப்பாவில் வளர்ந்து வரும் சமூக மற்றும் பொருளாதாரப் பதட்டங்களுக்கு இவை பதிலிறுப்பு செய்கின்றன என்பதையே சாராசினை அவை காப்பாற்றி வைத்துக் கொண்டிருப்பது தெளிவாக்குகிறது.

ஐரோப்பாவில் அரசியல் சூழ்நிலையானது அதிகமான அளவில் தேசிய மோதல்களின் மூலம் தான் உருப்பெறுவதாய் இருக்கிறது. ஜேர்மனி மற்றும் பிரான்சுக்கு இடையிலான பதட்டங்கள் பெருகிக் கொண்டிருக்கின்றன; ஐரோப்பாவின் வெளிப்புற எல்லைகள் மூடப்பட்டுக் கொண்டிருக்கின்றன; உள்முக எல்லைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன, அத்துடன் லிபியாவில் போல வெளியுறவுக் கொள்கை நலன்கள் இராணுவ வழிவகைகள் மற்றும் போரின் மூலமாகப் பின்பற்றப்படுகின்றன. யூரோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வருங்காலம் கேள்விக்குறியாகி நிற்கிறது.

இரண்டாம் உலகப் போர் வெடித்த சிறிதுகாலத்தில், உலகச் சூழ்நிலையை நான்காம் அகிலம் பின்வருமாறு குணாம்சப்படுத்தியது: அழுகி நாறும் முதலாளித்துவத்தின் உலகம் நிரம்பி வழிகிறது. ஒரு நூறு அகதிகளைக் கூடுதலாய் அனுமதிப்பதும் கூட ஒரு பெரும் பிரச்சினையாக ஆகிறது...வான்வசதிகள், தபால்தந்தி வசதி, வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றின் ஒரு சகாப்தத்தில் நாட்டிற்கும் நாட்டிற்கும் இடையிலான பயணம் கடவுச்சீட்டுகளாலும் நுழைவுஅனுமதிகளாலும் முடக்கப்படுகின்றன. வெளிநாட்டு வர்த்தகத்தின் இழப்பும் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தின் வீழ்ச்சி ஆகியவற்றின் அதே காலகட்டம் தான் சோவனிசம் மற்றும் குறிப்பாக யூத-விரோதம் ஆகியவற்றின் பிரம்மாண்டமான வளர்ச்சியின் காலகட்டமாகவும் உள்ளது.

இன்றைய சூழலை விவரிக்க ஒருவர் இதே வரிகளைப் பயன்படுத்துவதாக இருந்தால், அவர் யூத விரோதம் என்பதற்குப் பதிலாக இஸ்லாமிய விரோதம் என மாற்றினாலே போதுமானதாய் இருக்கும். தேசிய மோதல்களின் வளர்ச்சியும் தீவிர வலது இயக்கங்களும் முதலாளித்துவ சமூகத்தின் ஒரு ஆழமான நெருக்கடியின் வெளிப்பாடே ஆகும், தொழிலாள வர்க்கத்திடம் இருந்து எதிர்ப்பை எதிர்கொள்ளவில்லை என்றால் இது மீண்டும் ஒரு வரலாற்றுப் பேரழிவை நோக்கியே கொண்டு சென்று கொண்டிருக்கிறது.

முன்னாள் சீர்திருத்தவாதக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு நேரெதிரான வகையில், தொழிலாள வர்க்கம் வலது நோக்கி அல்ல இடது நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. முதலாளித்துவ செல்வக்கொழிப்பு, சமூகநல வெட்டுக்கள் மற்றும் பெருகும் அரசியல் ஒடுக்குமுறை ஆகியவற்றிற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு துனிசியாவிலும் எகிப்திலும் கண்டதைப் போல சக்திவாய்ந்த சமூக வெடிப்புகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அங்கு இல்லாதிருப்பதெல்லாம் ஒரு அரசியல் முன்னோக்கும் தலைமையுமே.

தொழிலாள வர்க்கம் பழைய திவாலான கட்சிகள் மற்றும் தொழிற் சங்கங்களில் இருந்து முறித்துக் கொள்வதோடு கீழிருந்து அழுத்தம் கொடுத்தால் அவை ஒரு வேறுபட்ட அரசியல் பாதையை எடுக்க நிர்ப்பந்திக்கப்பட முடியும் என்பதான பிரமைகளைக் கைவிட வேண்டும். ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஐரோப்பிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கம் ஐக்கியப்படுதல் மட்டுமே சமூகத்திற்கு இந்த முட்டுக்கட்டையில் இருந்து வெளியேறுவதற்கான ஒரு வழியை வழங்குகிறது. முதலாளித்துவ ஐரோப்பா, ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளால் இடம்பெயர்க்கப்பட வேண்டும். இதற்கு இக்கண்டம் முழுவதும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளைக் கட்டுவது அவசியமாக இருக்கிறது.