சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

The American left and the Strauss-Kahn affair

அமெரிக்க "இடதும்", ஸ்ட்ராஸ்-கான் விவகாரமும்

By David Walsh
23 May 2011

Use this version to print | Send feedback

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனரும், ஒரு முன்னனி பிரெஞ்சு மற்றும் உலகளாவிய அரசியல் பிரமுகருமான டொமினிக் ஸ்ட்ராஸ்-கான், பாலியல் குற்றச்சாட்டுக்களுக்காக மே 14இல் நியூயோர்க்கில் கைது செய்துபட்டது, ஒரு குறிப்பிடத்தக்க தொடர்ச்சியான சம்பவங்களை தூண்டிவிட்டுள்ளது. ஸ்ட்ராஸ்-கானுக்கு முதலில் பிணையளிக்க மறுக்கப்பட்டது. மே 18இல் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா செய்ய அவருக்கு அழுத்தம் அளிக்கப்பட்டமை, 2012 பிரான்ஸ் தேர்தலில் அவர் ஜனாதிபதியாக ஆவதற்குரிய எல்லா நம்பிக்கையும் நம்பத்தகுந்த விதத்தில் மறைந்து போய்விட்டது.

ஒரு வாரத்திற்கு முன்னர் சனியன்று சோபிடெல் ஓட்டலில் என்ன நடந்ததென்பது யாருக்கும் தெரியவில்லை. ஸ்ட்ராஸ்-கானுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் பாரதூரமானவையாகும். மேலும் அவர் குற்றவாளியென்று நிரூபிக்கப்பட்டால், அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்படவும் வாய்ப்புள்ளது.

எவ்வாறிருந்த போதினும், இதுபோன்ற எல்லா விவகாரங்களிலும் நிகழ்வதைப் போலவே, பிரமுகர்களின் குணநலன்களையும், பிரச்சினைகளையும் விளக்கிக் கூறுவதன் மூலமாகவோ அல்லது மேலெழும் உண்மைகளை பொதுவாக ஊக்குவிப்பதன் மூலமாகவோ, வழக்கின் உண்மைகளை புறநிலையாக கொண்டு வருவதற்கும் மற்றும் ஊடகங்களின் கூக்குரலுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

அமெரிக்க ஊடகங்கள் ஸ்ட்ராஸ்-கானுக்கு எதிரான சூழலை நச்சுத்தன்மையாக்கிவிட்டுள்ளன. அந்த பிரெஞ்சு அரசியல்வாதியின் குற்றத்தை ஓர் முற்றிலும்முடிந்த விடயமாக கையாண்டு, தாராளவாத இதழான நியூ யோர்க் டைம்ஸ், இந்த அடுக்கின் முன்னிலையில் உள்ளது.

இதுபோன்ற விவகாரங்களில் உடனடியாக பொதுமக்களின் கருத்துக்கள் வடிவமைக்கப்படுகின்றன. டைம்ஸ் இதழின் நிர்வாக ஆசிரியர் பில் கெல்லருக்கு, அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது நன்றாகவே தெரியும். அவர் ஸ்ட்ராஸ்-கானின் பஞ்சாயத்து இறுதியில் எதிலிருந்து எடுக்கப்படுமோ அந்த குளத்தை அசுத்தப்படுத்த உதவி வருகிறார். டைம்ஸின் அண்மைய பங்களிப்பு ஒன்று மே மாதம் 20 திகதி பின்வருமாறு எழுதுகின்றது ''சர்வதேச நாணய நிதியத்தில், இரைதேடுவதில் ஆண்களும், காவலில் பெண்களும்''. அதில் இந்த அமைப்பானது ஆதித ஆண் பொருளியலாளர்களின் ஆதிக்கம் செலுத்துமிடம் என குறிப்பிடுகின்றது

அமெரிக்க ஊடகங்களின் கண்ணோட்டத்தைப் பொறுத்த வரையில், இந்த விவகாரம் உள்நாட்டில் நிகழ்ந்துவரும் சமூக இடர்களிலிருந்தும், வெளிநாடுகளில் நடக்கும் நவ-காலனித்துவ யுத்தங்களில் இருந்தும் கவனத்தைத் திசைதிருப்ப கிடைத்திருக்கும் சமீபத்திய சந்தர்ப்பமாக ஆகியுள்ளது. அவர்களின் பிரெஞ்சு-எதிர்ப்பு மற்றும் யூத-எதிர்ப்பு பாவனைகளோடு சேர்த்து, சர்வதேச நாணய நிதியத்தின் "ஜாம்பவானை" ஒரு காட்டுமிராண்டியாக, தீவிர "கற்பழிப்பு வெறியனாக" குணாம்சப்படுத்துவதானது, பொதுமக்களின் அடித்தளத்திலிருக்கும் உணர்வுகளை அழிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

நியூ யோர்க் ஊடக பிரச்சாரம், ஊகித்துக் கூறுவதானால், ஒரு வெட்கக்கேடான ஆதாரத்திடமிருந்து ஆதரவைப் பெற்று வருகிறது. அமெரிக்க தாராளவாத இடது (the Nation) மற்றும் "தீவிர இடது" (the International Socialist Organization) ஆகியவை இந்த பிற்போக்குத்தனமான பிரச்சாரத்திற்கு அவற்றின் குரல்களையும் சேர்த்துள்ளன.

நாம் கூறுவதைப் போல, பொலிஸ் மற்றும் அதிகாரிகளால் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தவிர்த்து, மேற்கொண்டு மிகச் சிறியளவில் தான் தெரிய வந்துள்ளது. அதை அந்த வழக்கில் ஒரு தீர்க்கமான கருத்தை யாராலும் உருவாக்கிவிட முடியாது.

ஆனால் என்ன வெளிவந்திருக்கிறதோ அது ஸ்ட்ராஸ்-கான் கைது நடவடிக்கையின் சூழலை எடுத்துக்காட்டுகிறது. அது இந்த வழக்கில் ஒரு சிறப்பு முக்கியத்துவத்தை எடுக்கிறது என்பதுடன் அதுவொரு வழக்கமான பிரபலங்களைக் குறித்த அவதூறு கிடையாது என்பதற்கு உத்தரவாதம் அளிக்கிறது. இவை நிகழ்ந்துவரும் பொருளாதார நெருக்கடியின் மூலகாரணமான காலகட்டமாக உள்ளன. சர்வதேச நாணய நிதிய இயக்குனரின் நிலைமை, வெவ்வேறு நாடுகளுக்கு இடையிலும், ஆளும் மேற்தட்டின் வெவ்வேறு பிரிவுகளுக்கும் இடையிலும் நிலவும் கசப்பான முரண்பாடுகளின் மையப்புள்ளியாக உள்ளது.

இந்த விஷயத்தில் நீதி-தவறுதல் என்ற ஒரேயொரு சாத்தியக்கூறு மட்டுமல்ல, மாறாக பெரும்பாலும் அடிக்கடி நிகழ்வதைப் போல, நீண்டகால தாக்கங்களுடன் கூடிய மாற்றங்கள் பொதுமக்களின் முதுகில் ஏற்றுவதற்கான வாய்ப்பும் உள்ளது. ஸ்ட்ராஸ்-கான் குற்றவாளியா இல்லையா என்பதில், பல்வேறு சக்திகள் வெளிப்படையாக கூறாத முடிவுகளை எட்ட, புதிரான சம்பவங்களால் உருவாக்கப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள அவற்றை நிலைநிறுத்திக் கொள்ளும்.

இதில் "இடது" என்றழைக்கப்படுபவையும் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன. நடுத்தர வர்க்கத்தின் உட்கூறுகள், ஒட்டுமொத்த பேரங்களும் எதனால் மூடப்பட்டுள்ளதோ அந்த நிகழ்முறையின் பாகமாக ஆகி, மக்களை தவறான திசைக்கு இட்டுச் செல்கின்றன. முக்கியமான பிரச்சினைகளை மூடிமறைக்கும் ஒரு சூழலை உருவாக்குவதில் பங்குவகிக்க "இடதை" சார்ந்திருக்கலாம்.

Nation இதழில், மே 19இல் வெளியான ஒரு செய்தியில் (DSK Déjà Vu), ஸ்ட்ராஸ்-கானை ஏறத்தாழ குற்றவாளியாகவே கத்தா போலிட் கையாள்கிறார். எந்த விதத்திலும், அவர் குற்றவாளியா அல்லது நிரபராதியா என்பது போலிட்டிற்கு பெரும் ஆர்வமூட்டும் ஒன்றாக தெரியவில்லை; இந்த வழக்கு அவருடைய குறுகிய அரசியல் திட்டத்தோடு மிக எளிமையாகவும் மிக மிக பொருத்தமாகவும் பொருந்துகிறது.

அந்த பெண்மணி தர்க்கத்தின் முக்கிய ஓட்டைகளுக்குப் பொறுப்பாகிறார். ஒரு மேலோட்டமான வாசகர்வட்டம் அதை கவனிக்காது என்றவர் வெளிப்படையாக நம்புகிறார். போலிட் எழுதுகிறார்: உண்மையில், ஒரு குற்றத்திற்காக குற்றஞ்சாட்டப்பட்ட ஒவ்வொருவரையும் போலவே, நிரூபிக்கப்படாத வரையில் ஸ்ட்ராஸ்-கானும் நிரபராதியே. ஆனால் பிரெஞ்சு அரசியல் மற்றும் இதழியல் மேற்தட்டால் அவர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அந்த குற்றத்தை இரண்டு நிமிடங்கள் கவனமாக கவனிக்க முடியவில்லையா? கைவிலங்கிடப்படுதல் மற்றும் ஊடகங்களின் முன்னால் அழைத்துச்செல்லப்படுதல் குறித்து நீங்கள் என்ன விரும்புகிறீர்கன் என்பதைக் கூறுங்கள். அவர்கள் உண்மையில் ஒரு பாலியல் வன்முறை தாக்குதலோடு ஒப்பிட்டு பார்க்கவில்லை.

ஆமாம், ஆனால் ஒரு நிமிடம் நிறுத்துங்கள். உண்மையென்று நிரூபிக்கப்படாத வரையில் எந்த குற்றமும், ஒரு குற்றச்சாட்டாக மட்டுமே இருக்கிறது. மற்றொருபுறம், ஸ்ட்ராஸ்-கானிற்கு கையில் விலங்கிடப்பட்டது, அவமானப்படுத்தப்பட்டது மற்றும் அரசியலில் இருந்து அழிக்கப்பட்டதென்பது முழுவதும் பொதுமக்களின் பார்வைக்கு முன்னால் நடந்தேறியது. ஒருவேளை போலிட் அதை உணரவில்லை போலும், ஆனால் "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்" மற்றும் அதற்கும் அப்பால், அதாவது பொலிஸ் அதிகாரங்களை அதிகரிப்பதால் அது அங்கேயும் இங்கேயும் துஷ்பிரயோகங்களுக்கு இட்டு செல்லக்கூடும் என்றாலும் கூட பொலிஸ் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் மற்றும் பாரிய புதிய அரசு அதிகாரங்கள் கொடுக்கப்படாமல் போனால் பெரும் பேரழிவுகள் ஏற்படக்கூடும் என்ற அமெரிக்க அரசியல் நிர்வாகமைப்போடு அவருடைய குருட்டாம்போக்கான காரணங்களும் ஒத்திருக்கின்றன.

ஸ்ட்ராஸ்-கானுக்கு எதிரான வழக்கு "ஓர் அரசியல் சதியின் பகுதியாக" இருக்க வாய்ப்புள்ளது என்ற கருத்தை போலிட் பரிகாசம் செய்கிறார். எந்த அடிப்படையில்? CIA, FBI, MI6, Mossad, ஏனைய பாதுகாப்பு முகமைகளால் செய்யப்பட்ட பெரும் சேதத்தினால் எச்சரிக்கையுற்ற, அரசியல்ரீதியாக சுதாரிப்புடன் இருக்கும் ஒரு தனிநபர் இதைவிட எந்தளவிற்கு விட்டுத்தள்ள முடியும்? ஸ்ட்ராஸ்-கான் பொறியில் சிக்க வைக்கப்பட்டார் என்பதற்கோ அல்லது குறைந்தபட்சம் அந்த விவகாரம் அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதையோ விட்டுவிடும் அளவிற்கு இருக்கும் யாருடைய அசட்டைத்தனமும் ஒன்று அவர் தம்மைதாமே முட்டாளாக்கி கொள்கிறார் அல்லது அவருடைய வாசகர்களை முட்டாள் ஆக்குகிறார்.

முன்னதாக ரோமன் போலன்ஸ்கி மற்றும் ஜூலியன் அசான்ஜிற்கு எதிரான போலிக்குற்றச்சாட்டுகளில் பங்கெடுத்திருந்த போலிட், ஸ்ட்ராஸ்-கான் மீது மேலும் குற்றங்களைச் சுமத்துவதற்காக, குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முந்தைய பாலியல் தவறுகள் குறித்தும் வதந்திகளையும், மறைமுக அவதூறுகளையும் அள்ளி வீசுகிறார். சுருக்கமாக கூறுவதானால், மேர்டோக் பாணியிலான ஒரு சிற்றிதழ் இதழாளர் செயல்படும் விதத்தில் செயல்படுகிறார்.

மேலும் தொடர்ந்து அவர் எழுதுகையில்: பாலியல், ஒருவேளை நடந்திருந்தால், அது மனமுவந்து நடந்திருக்கும் என்று இப்போது ஸ்ட்ராஸ்-கானின் வழக்கறிஞர் கூறுகிறார். அதாவது குளியலறையிலிருந்து நிர்வாணமாக ஓடிவரும் 62 வயது நிரம்பிய ஓட்டல் விருந்தாளி ஒருவரை தகாத உறவுக்கு இழுக்க ஒரு பணிப்பெண், அதுவும் ஒரு பர்தா அணிந்த ஒரு முஸ்லீம் விதவைப்பெண், வாய்ப்பைத் தேடி சென்றிருக்க மாட்டார்  என்பதைவிட இதற்கு வேறெந்த சாத்தியப்பாடும் இருந்திருக்க முடியாது.

குற்றஞ்சாட்டியவரின் குற்றச்சாட்டுகளையோ அல்லது நியூயோர்க் பொலிஸ் துறையின் குற்றச்சாட்டுக்களையோ மேற்கோளிட்டு காட்டுவதில் போலிட் மிகவும் திருப்தி அடைவதாக தெரிகிறது. குற்றஞ்சாட்டியவர் விசாரிக்கப்பட்டுவிடக்கூடாது அல்லது எந்த சவாலையும் எதிர்கொள்ளக்கூடாது என்ற கண்ணோட்டத்தை அந்த பெண்மணி [போலிட்] வெளிப்படையாகவே கொண்டிருக்கிறார்.

அந்த ஓட்டல் அறையில் என்ன நடந்தது என்பது போலிட்டிற்கு எவ்வாறு தெரிந்தது? அவரைப் பொறுத்த வரையில், ஒரு வழக்கு என்பது குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிராக அதிகாரிகளின் தரப்பில் வழக்கை உறுதியாக்குவதாக உள்ளது. Nation இதழின் இந்த கட்டுரையாளர் பிரெஞ்சு அரசியல்வாதியின் குற்றச்சாட்டை அவரின் தொடக்கப்புள்ளியாக கையில் எடுத்து, பின்நோக்கி வேலை செய்கிறார்.

நிரூபணமென்பது அரசிடம் இருப்பதால், தீர்ப்பு வழங்கப்படும் வரையில் நிரபராதி என்பது ஒரு சிறிய பிரச்சினையல்ல. போலிட்டைப் போல, அதை வெறுமனே வாய் வார்த்தைக்காக கூறிவிட்டு பின்னர் கைவிட்டுவிட முடியாது. அது எந்த ஜனநாயக சட்ட அமைப்புமுறையிலும் இருக்கும் அஸ்திவாரங்களில் ஒன்றாக உள்ளது. அது பெரும் புரட்சியின் ஒரு கனியாக விளங்கும் 1789 ஆகஸ்ட்டில் பிரெஞ்சு தேசிய சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மனித உரிமை பிரகடனம் உட்பட, பல்வேறு சட்ட நெறிமுறைகளிலும், அரசியலமைப்புகளிலும் அமைக்கப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கும் வரையில் நிரபராதி என்பது அமெரிக்க அரசியலமைப்பில் மட்டும் குறிக்கப்பட்டிருக்கவில்லை, மாறாக ஐந்தாவது, ஆறாவது மற்றும் பதினான்காவது சட்டவரைவுகள் குற்றஞ்சாட்டப்பட்டவரை குற்றவாளியாக குற்றஞ்சாட்ட முடியாதபடிக்கு அவருக்கு உரிமை வழங்குகிறது. வழக்கு சட்டத்தின் நிகழ்முறையில் நிலுவையில் இருப்பதாலும், ஒரு பாரபட்சமற்ற விசாரணைக்காகவும், குற்றஞ்சாட்டியவரை குற்றஞ்சாட்டப்பட்டவர் எதிர்கொள்வதற்காகவும் அது தெளிவாக அந்த திசையில் இட்டு செல்கிறது என்று சட்ட வல்லுனர்கள் வாதிடுகின்றனர். ஆனால் குற்றம் நிரூபிக்கும் வரையில் குற்றஞ்சாட்டப்பட்டவர் நிரபராதியே என்பதை போலிட் ஒரு அசௌகரியமாக கருதுகிறார்.

பெண்ணியம்" என்ற பெயரில் அல்லது வேறு ஏதாவது பெயரில், அடிப்படை ஜனநாயக கோட்பாடுகளுக்கு விரோதமாகவோ அல்லது முரண்பாடாகவோ தனிநபர்கள் அல்லது ஒட்டுமொத்த சமூக அடுக்குகள் ஓர் அரசியல்ரீதியாக அசிங்கமான ஒரு பாத்திரம் வகிக்கின்றன. இது முதலாளித்துவ அரசு அதன் ஒடுக்குமுறை கருவிகளை உருவாக்கும் வகைக்கு அதன் எடுபிடிகளாக இருந்து உதவுகிறது.

socialistworker.org வலைத் தளத்தில் பதியப்பட்டுள்ள சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பின் ஷெரி வொல்ஃப்பின் வாதங்கள், போலிட்டின் வாதங்களைவிட எவ்விதத்திலும் மேம்பட்ட ஒன்றாக இல்லை. அவை வெறுமனே மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் உள்ளன.

சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பின் தத்துவார்த்த இதழான International Socialist Reviewஇன் இணை ஆசிரியரான வொல்ஃப், குற்றம் தீர்மானிக்கப்படாத வரையில் நிரபராதியே என்பதற்கு வார்த்தையளவிற்கு கூட குரல் கொடுக்கவில்லை. ஸ்ட்ராஸ்-கானின் ஓட்டல் அறையில் என்ன நடந்தது என்பது அவருக்குத் தெரியும்; அவருடைய மத்தியதட்டு வர்க்க அடையாள அரசியல் தான் அவரின் தவறான வழிகாட்டியாக உள்ளன.

வொல்ஃப் அவருடைய வாசகர்களுக்கு அறிவிக்கிறார், ஓர் ஓட்டல் பணிப்பெண்ணை கற்பழித்த ஸ்ட்ராஸ்-கான் ஒரு தீவிர பெண்ணின-விரோதியாவார். ஆனால் அந்தவொரு விவகாரத்திற்காக அவர் சிறையில் அடைக்கப்படவில்லை. அவரோடு ஒருபோதும் தொடர்பில் வராத ஒவ்வொரு பெண் பணியாளரும் பொய் கூறுபவர்கள் அல்லர் என்ற அடிப்படையில், ஸ்ட்ராஸ்-கான் பெரும் அதிகாரங்களைக் கொண்டிருக்கும் ஒரு கொடூரமான பன்றி. அவர் பெரும்பாலான அரசுகளிடமிருந்து 25 ஆண்டுகால தண்டனையை அளிக்கும் விதமான குற்றங்களில் இருந்து தப்பித்து உள்ளார்.

ஸ்ட்ராஸ்-கானின் பிணையெடுப்பு பெரும்பாலும் மறுக்கப்படலாம், ஏனென்றால் தற்போது பிரெஞ்சு அரசாங்கத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும் அவருடைய அரசியல் எதிர்ப்பாளர்கள், அவரை மேற்கொண்டு எடுத்துச்செல்வதற்கு அனுமதி அளித்துள்ளனர், பிரெஞ்ச்காரர்கள் கூறுவதைப் போல, என்னுடைய மொழிபெயர்ப்பு ஏனோதானோவென்று இருப்பதால் மிகவும் கொடூரமாக உள்ளது, என்று அவர் அறிவித்தார்.

பொதுவாக அமெரிக்காவில் இந்த மாதிரியான கொச்சைத்தன்மையோடு போட்டிபோடும் அளவிற்கு இருக்கக்கூடிய "தனிநபர் மீதான கடுமையான" சட்ட ஒழுங்கு வாய்ஜாலம், தீவிர வலதுசாரியின் பகுதியில் உள்ளது. அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு இடதுசாரி பதிப்பகமும், இம்மாதிரியான விஷயத்தில், ஒரு கம்யூனிச-எதிர்ப்பு குணாம்சம் கொண்ட விரோத கடிதங்கள், முழுவதும் வன்மமும், பிற்போக்குத்தனமும், கொடுமையும் நிரம்பியவற்றோடு மிகவும் பரிச்சயப்பட்டிருக்கின்றன.

ஆனால் உண்மையில் எந்த அரசியல்ரீதியான அர்த்தமுள்ள முன்னோக்கிலிருந்து வொல்ஃப்பை ஒரு இடதுசாரி நபராக காண்பது? அவர் பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியின் ஒருசில "இடது" விமர்சனங்களிலும் எழுதுகிறார். ஆனால் அவருடைய தலையங்கத்தின் பெரும்பாலானவை பெரிதும் அகநிலையாகவும், அறிநெறி தொனியிலும் கையாளப்பட்ட படுகொலை குணாம்சத்திற்கே அர்பணிக்கப்பட்டுள்ளன. சான்றாக:

நியூ யோர்க் டெய்லி இதழின் தலைப்பு செய்தி எழுத்தாளர்கள் அதன் முதல்பக்கத்தில் 'Le Perv' என்பதாக உங்கள் கட்சியின் முக்கிய அரசியல் நம்பிக்கையைப் பழிவாங்க கடுமையான முஸ்லீம்களிடமிருந்து ஓர் உடைவை எடுக்க வேண்டியிருந்தால், அது மறுமதிப்பீடு செய்ய வேண்டிய காலக்கட்டமாகும். ஓர் இரவுக்கு அறைவாடகையாக $3000 டாலர் அளிக்கும் மன்ஹட்டன் ஓட்டலின் பணிப்பெண்ணை அவருடைய அறையில் ஸ்ட்ராஸ்-கான் கற்பழித்தால் (அதற்குரிய பொருத்தமான பெயரில் குறிப்பிடுவோம்) என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இவ்விதத்தில் அவர் ஒரு பெண்மணியை வேலையின் மத்தியில் காயப்படுத்தி, பிரெஞ்சு அரசியலையே அசைக்கக்கூடிய அளவிற்கு அவருடைய அரசியல் வாழ்க்கையை துடைத்தழித்துள்ளார்.

"சர்வதேச நிதி மற்றும் அரசியலில் பெரிய அதிகாரத்திலிருக்கும் பிரமுகர்களில் ஒருவர் ஓர் இதழாளரை அவர் ஒரு புத்தகத்திற்காக கேள்வி கேட்க முயன்றபோது தாக்கியுள்ளார் என்பதையும், ஒரு சர்வதேச நாணய நிதியத்தின் பொருளியல்வாதி அவருடைய பணியாற்றியவருடன் ஓர் மாநாட்டின் போது சேர்ந்து படுத்துள்ளார் என்பதையும், இப்போது அவர் அவருடைய அறையைச் சுத்தப்படுத்தும் பணிப்பெண்ணைக் கற்பழித்தார்" என்று வொல்ஃப் நிரூபிக்கப்பட்ட உண்மைகளை அளிக்கிறார்.

அவர் முடிவாக கூறுகிறார்: வரவிருக்கும் வாரங்களில் அவரைப் [ஸ்ட்ராஸ்-கான்] பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளும், அவரின் முன்னாள் சேவகர்களும் அவர்களின் பிட்டத்தை மூடிக்கொண்டு ஓடுவதைப் பார்ப்போம். ஆனால் இப்போதைய நிலைமையில், அத்தகைய ஒரு மனிதரின் அரசியல்ரீதியான, சமூகரீதியிலான மற்றும் தனிப்பட்ட பொறிவில் சிறிய உற்சாகத்தை நாம் பெறலாம். இத்தகை ஆண்டுகளாக அவரைப் பாதுகாத்து வந்த அமைப்புகளில் ஓர் ஒளியைப் பிரகாசிக்கச் செய்ய அவரின் இந்த வீழ்ச்சியை நாம் பயன்படுத்திக் கொள்வோம்.

FSP மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பார்ந்த பன்றியே! வெளியேறி போ! உன்னை நான் குற்றஞ்சாட்டுகிறேன்!

நிஜத்தில், வொல்ஃப் குற்றஞ்சாட்டியவரைக் குறித்து அல்லது அவரின் கதியைக் குறித்து அக்கறைப்படவில்லை. மே 14இல் என்ன நடந்தது என்பது குறித்து ஒன்றுமே தெரியாமல், ஸ்ட்ராஸ்-கானின் மதிப்பையும், வாழ்வையும் அழிக்க வோல்ஃப் தம்முடைய வரம்புக்குட்பட்ட அதிகாரத்தைக் கொண்டு அனைத்தையும் செய்ய தீர்மானித்துள்ளார். அவர் குற்றவாளியென்று தீர்மானிக்கப்பட்டால், தவறாக தீர்மானிக்கப்பட்டாலும் கூட, பல தசாப்தங்கள் சிறையில் அடைக்க தீர்ப்பு வழங்கப்பட்டால், அந்த பெண்மணி (வொல்ஃப்) மிகவும் திருப்தி அடையக்கூடும். இவர் ஒரு சோசலிஸ்ட் கிடையாது. மாறாக இவர் அடிப்படை மனிதாபிமானமே இல்லாத ஒரு நபராவார்.

வொல்ஃப் மொழியின் கொடூரம் ஏறத்தாழ மனோவியாதியைப் போல உள்ளது. ஸ்ட்ராஸ்-கான் விவகாரம் குறித்து அசௌகரியமான அல்லது தொல்லைக்கொடுக்கக்கூடிய கேள்விகளை எழுப்ப விழையும் அவரின் சொந்த அமைப்பின் உறுப்பினர்களின் ஒரு பகுதியினரையும் சேர்த்து, அவருடைய வாசகர்கள் அனைவரையும் ஓரளவிற்கு மிரட்ட, சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பின் தலைவர் முயல்கிறார்.

விதிவிலக்கின்றி, உண்மையான இடதுசாரி வாதங்கள் உண்மையில் தர்க்கம் மற்றும் காரணங்களை அடித்தளத்தைக் கொண்டுள்ளது. வொல்ஃபைப் பொறுத்த வரையில் ஸ்ட்ராஸ்-கான் குற்றவாளி ஆவார், ஆனால் ஏதோசில திடீர் திருப்புமுனை சம்பவங்களால், அவர் நிரபராதியென்று நிரூபிக்கப்பட்டால், அவரைப் பொறுத்தவரையில் உலகமே படுபயங்கரமாக பிளந்து போய்விடும் என்பதை ஒருவர் உணர்ந்து கொள்ளலாம்.

வொல்ஃபின் கருத்துக்களில் வெளிப்பட்ட பகுத்தறிவார்ந்த வாதங்களை அலட்சியப்படுத்தும் அகநிலைவாதமும், ஜனநாயக கோட்பாடுகள் குறித்த அக்கறையற்றதன்மையும் பிற்போக்குத்தனமான அரசியல் முனைகளோடு ஒன்றுகலந்து உதவுகிறது. வொல்ஃப் மற்றும் போலிட் போன்ற தனிநபர்கள் வலதுடன் முழக்கமிட்டு நகர்கின்றனர்.

உண்மையில், லிபியாவில் நடக்கும் ஏகாதிபத்திய யுத்தத்திற்காக வழக்காடுவதிலும், அது முன்மொழிந்த சமூகநல வெட்டு முறைகள் ஆகியவற்றோடு Nation இதழ் ஏற்கனவே ஒபாமா நிர்வாகத்தின் ஓர் ஆதரவாளராக இருக்கிறது. பிரான்சில் அதன் துணை-கூட்டாளிகளைக் கொண்டுள்ள சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பும் (ISO), புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சியும் (NPA) கூட லிபியாவின் மீது நடத்தப்படும் "மனிதாபிமான" குண்டுவீச்சை மிக நெருக்கமாக பின்னாலிருந்து ஆதரிக்கின்றன.

இடையூறுகளில் இருந்து விதிவிலக்கு பெற்ற பிரதான மனிதர்கள் நண்பர்கள், வாழ்க்கை துணைகள், அரசியல் கூட்டாளிகள், அவர்களுக்கு அடிபணிந்திருக்கும் பத்திரிகை மற்றும் பெண்களுக்கு ஆழமாக விரோதபட்ட ஒரு கலாச்சாரத்தின் உதவியைப் பெற்றுள்ளனர். பெண்ணிய வேலை எவ்வாறு முடிந்துவிட்டது என்று எனக்கு மீண்டும் கூறுங்கள், என்ற குற்றச்சாட்டோடு கதா போலிட் அவருடைய கட்டுரையை முடிக்கிறார்.

இந்த சூழலில் "பெண்ணியம்" என்பது வாக்குரிமை, ஆணுக்கு நிகரான சம்பளம், கருக்கலைப்பு உரிமைகள் உட்பட ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் அது மத்திய மேல்-தட்டு வர்க்க பெண்ணின் ஒரு பழியுணர்ச்சி விளையாட்டாக ஆகியுள்ளது. ஒருவேளை "சக்திவாய்ந்த மனிதர்களுக்கு" எதிரான பொறாமையாகவும் இருக்கலாம். உண்மையில், இது பெண்ணியத்தின் வரலாற்று சூழலில் அதன் ஒட்டுமொத்த தவறாக எடுத்துக்காட்டப்படுகிறது.

இதில் எதுவும் சோசலிச அல்லது முற்போக்கு பாரம்பரியத்தோடு சம்பந்தப்பட்டதில்லை. ரோசா லுக்சம்பேர்க் போன்ற ஒரு மார்க்சிஸ்ட், "பெண்ணுரிமைகள் இல்லாமல் இருப்பது, மக்களின் வாழ்க்கையைக் கட்டிப்போட்டிருக்கும் பிற்கோக்கான சங்கிலியில் ஒரேயொரு இணைப்பு மட்டும் தான், என்பதை புரிந்து கொண்டிருந்தார். சோசலிஸ்ட்கள் அத்தகைய உரிமைகளுக்கான போராட்டத்தை ஒட்டுமொத்த உழைக்கும் மக்களை ஐக்கியப்படுத்துவதற்கும், பலப்படுத்துவதற்கும் செய்யும் முயற்சிகளின், மற்றும் அதை அதன் வரலாற்று பணியின் மட்டத்திற்கு உயர்த்தவும், முதலாளித்துவத்துடன் கணக்கைத் தீர்ப்பதன் ஒரு பாகமாக பார்க்கின்றனர்.

போலிட்-வொல்ஃப்பின் பல்வேறு அடையாள அரசியல், அசான்ஜ் வழக்கில் நாம் எழுதியதைப் போல, அமெரிக்க மேற்தட்டு அதற்கு சாதகமாக பொதுமக்களின் கருத்துக்களைத் திரிக்கவும், அதன் எடுபிடிகளை நெறிப்படுத்துவதற்கும் அதற்குரிய ஒரு கருவியாக ஆகியுள்ளது. மேலும் "எல்லாவற்றிற்கும் மேலாக, பெரும் சமூக பிரச்சினையிலிருந்து வரும் வர்க்க ஒடுக்குமுறை மற்றும் சமூக சமத்துவமின்மையை திக்குமுக்காட செய்யவும், சுய-பச்சாபங்களுக்காகவும் அது அதையொரு கருவியாக பயன்படுத்துகிறது. (See, The Nationjoins the campaign against Julian Assange)

இவை, அவர்களையே மதிப்பிழக்கச் செய்யும் வாதங்களை அளிக்கும் வலதுசாரி, பழக்கவாத உட்கூறுகளாகும். அவர்களால் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பது மட்டும் தான் ஒரே கேள்வியாக இருக்கிறது?