சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

Economic summits marked by great power divisions and concerns over class conflict

பொருளாதார மாநாடுகளில் முக்கிய சக்திகளின் பிளவுகளும்,   வர்க்க மோதல்கள் பற்றிய கவலைகளும் 

By Nick Beams
18 April 2011

use this version to print | Send feedback

கடந்த நான்கு நாட்களாக நடைபெற்ற சர்வதேச பொருளாதார மாநாடு கூட்டங்கள், பிரதான முதலாளித்துவ சக்திகளின் மத்தியில் ஆழமடைந்திருக்கும் பிளவுகளின் மீது மீண்டும் கவனத்தை ஈர்க்க செய்துள்ளது.

பொதுவாக, இந்த ஆண்டின் இந்த காலக்கட்டத்தில், எல்லோருடைய பார்வையும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் அரையாண்டு கூட்டங்களுக்காக வாஷிங்டனின் மீது குவிந்திருக்கும். ஆனால் இந்த ஆண்டு, உலகின் மற்றொரு பக்கத்தில் சீனாவின் ஹைனனில் உள்ள தெற்கு மாகாண தீவு சான்யாவின் பக்கம் திரும்பியுள்ளது. அங்கே மற்றொரு குறிப்பிடத்தக்க கூட்டம் நடந்தது. அங்கே பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா இவற்றோடு ஒரு புதிய உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ள தெற்கு ஆபிரிக்காவையும் சேர்த்து கொண்டிருந்த BRICs அணி நாடுகளின் ஒரு கூட்டம் நடைபெற்றது.

அதேவேளையில், வெள்ளியன்று, சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியால் கூட்டம் கூட்டப்படுவதற்கு முன்னதாக, G20 நாடுகள் சந்தித்தன.  

இந்த நிகழ்வுகளில் வெளியிடப்பட்ட அறிக்கைகள் குறித்து, அல்லது இதில் பிரதானமாக பங்கெடுத்தவர்களின் பங்களிப்புகள் குறித்து, எந்த தனியொரு நாட்டிலிருந்தும் வெளிப்படையான விமர்சனங்கள் இல்லை என்ற போதினும், குறிப்பிடத்தக்க கருத்து வேறுபாடுகள் நிலவுவதையும், அவை விரிவடைந்து வருவதையும் எடுத்துக்காட்ட ஒருவர் அதை ஆழமாக கிளறிப்பார்க்க வேண்டியதில்லை.  

உலகளாவிய பெரும் சமநிலையின்மையைக் கட்டுக்குள் கொண்டு வர, பிரதான நாடுகளின் பொருளாதார கொள்கைகளைக் கண்காணிக்கும் ஒரு நிகழ்முறையைக் கொண்டு வருவது தான் வெள்ளியன்று நடந்த G20 கூட்டத்தின் முக்கிய வியாபாரமாக இருந்தது. ஊதிப்பெரிதாக்கும் ஊடக அறிக்கைகள் இதை, மற்றொரு உலக நிதியியல் நெருக்கடியைத் தவிர்ப்பதற்கான கருவியாக எடுத்துக்காட்டி வரவேற்றன. உடன்பாட்டின்படி, எந்த தேசிய கொள்கைகளாவது உலகளாவிய பொருளாதாரத்தை அபாயத்தில் கொண்டு வருகிறதா என்பதை தீர்மானிக்க தேசிய கடன் அளவுகள், வரவு-செலவு திட்டங்களிலிருக்கும் பற்றாக்குறை மற்றும் வர்த்தக சமமின்மை ஆகியவற்றை சர்வதேச நாணய நிதியம் ஆராயும்.   

குறைந்தபட்சம் அங்கே உத்தியோகபூர்வ காரணமாவது இருந்தது. நிஜத்தில், இந்த புதிய அமைப்புமுறையானது, சீனா அதன் யுவானை (yuan) மறுமதிப்பீடு செய்யும்படிக்கு அதை சர்வதேச அழுத்தத்திற்குள் கொண்டு வர அமெரிக்காவால் செய்யப்பட்ட முயற்சிகளின் விளைவாக உள்ளது. சீனா உலக சந்தைகளில் போட்டியில் அதன் இடத்திலிருந்து முன்னேற, அது அமெரிக்க நிதியியல் சொத்துக்களை விலைக்கு வாங்குவதன் மூலமாக அதன் செலாவணியின் மதிப்பைச் செயற்கையாக குறைத்து வருவதாக அமெரிக்கா கூறி வருகிறது.

அமெரிக்காவின் உள்நோக்கங்களை நன்கு அறிந்திருக்கும் நிலையில் சீனா இந்த உடன்படிக்கையிலிருந்து விலக தயாராக இருந்தது. ஏனெனில் அதனிடத்தில் எந்த நெறிமுறை கட்டுப்பாட்டு முறையும் இல்லை என்பதோடு, சீனாவின் அன்னிய செலாவணி கையிருப்புகளின் அளவுகள் மீது தொடர்ச்சியாக எழும் பிரச்சினைகளில் சர்வதேச நாணய நிதியத்தின் எவ்வித கண்காணிப்பும் அதனிடத்தில் இல்லை. பெய்ஜிங் தற்போது $3 ட்ரில்லியன் கையிருப்புகள் (இதில் பெரும்பான்மை அமெரிக்க டாலர்களாக) வைத்திருப்பதாக சமீபத்தில் அது அறிவித்துள்ளது.   

சர்வதேச நாணய நிதிய கூட்டத்தில் அமெரிக்க கருவூலத்துறை செயலாளர் திமோதி கெய்த்னர் அவருடைய அறிக்கையில் அமெரிக்காவின் திட்டத்தை முன்மொழிந்தார். எங்களுடைய நிதிய மற்றும் கட்டுப்பாட்டு கொள்கைகளை" சர்வதேச நாணய நிதியம் தொடர்ந்து கண்காணிப்பதை அமெரிக்கா வரவேற்பதாக கூறிய அவர், பின்னர் அதனோடு பின்வரும் இதனையும் சேர்த்துக் கொண்டார்: ஆனால், ஏனையவர்கள், குறிப்பாக அடித்தளத்தில் பெரும் வளைந்துகொடுக்கவேண்டியதை கோருவோரும் இதில் பங்களிக்க வேண்டும், என்றார்.

சீனாவிற்கு வழங்கிய இன்னுமொரு தாக்குதலில், தற்போதைய செலாவணி பரிமாற்ற விகிதங்களின் முறை சமமின்மையை சமாளிப்பதில் சர்வதேச ஒத்துழைப்பிற்கு ஒரு தடையாக உள்ளது" என்று எச்சரித்த கெய்த்னர், செலாவணி விகிதங்கள், கையிருப்பு திரட்சி, மற்றும் மூலதன வருகைகள் போன்ற விஷயத்தில்" சர்வதேச நாணய நிதியம் அதன் கண்காணிப்பு பொறுப்புகளைப் பூர்த்தி செய்வதில் ஒரு திடமான பாத்திரத்தைக் கைக்கொள்ள வேண்டியிருக்கும் என்றார்.

பீபிள்ஸ் பேங்க் ஆஃப் சீனாவின் (People's Bank of China) துணை ஆளுநர் யெ காங் கூறுகையில், 2010இல் அவரது நாட்டின் வர்த்தக உபரி மொத்த உள்நாட்டு தயாரிப்பில் 3.2 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் சீனா 1 பில்லியன் டாலருக்கும் அதிகமாக வர்த்தக பற்றாக்குறையை பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டு அமெரிக்காவின் விமர்சனத்திற்கு விடையிறுப்பு காட்டினார்.

உலகளாவிய சமநிலையின்மைக்கு யுவானின் மதிப்பு முக்கிய காரணமல்ல, மாறாக அமெரிக்காவின் நிதிய பற்றாக்குறைகளும், மற்றும் உணவுப்பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களில் பணவீக்கத்தை உருவாக்குவதோடு, நிலங்கள் மற்றும் ஏனைய சொத்துக்கள் மீது நிதியியல் குமிழிகளையும் உருவாக்கி வரும் உலகளாவிய நிதியியல் அமைப்புமுறையில் பில்லியன் கணக்கான டாலர்களைப் பாய்ச்சி வரும் அமெரிக்க மத்திய வங்கிகளுக்கான கூட்டமைப்பின் பணத்தை புழக்கத்தில் விடும் திட்டமுமே முக்கிய காரணம் என்று சீன அதிகாரிகள் வலியுறுத்தினர்.  

சீனா மற்றும் ஏனைய வளரும் சந்தை பொருளாதாரங்களால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், மோசமான உலக நிதியியல் நெருக்கடியின் பின்னடைவிற்கு எதிராக உள்நாட்டு தேவையை அதிகரித்ததன் மூலமாக உலகளாவிய பொருளாதார மீட்சிக்கு உதவியுள்ளதாக துணை ஆளுநர் அறிவித்தார்.

அதன்பின்னர், அமெரிக்காவிற்கு ஓர் அடியை கொடுக்கும் வகையில் யெ காங் கூறியது: நிதியியல் நெருக்கடி ஏற்பட்டதிலிருந்து சர்வதேச மூலதன வருகையில், பிரதான மத்தியவங்கி செலாவணியின் பரிமாற்ற விகிதத்தில், மற்றும் பொருட்களின் விலைகளில் நிலவும் பெரும் ஏற்றத்தாழ்வுகள் பல்வேறு நாடுகளிலும் ஸ்திரப்பாட்டிற்கான உள்நாட்டு நடவடிக்கைகளையும், அவற்றின் வளர்ச்சியை அவை மீட்டெடுப்பதிலும் தடையாக உள்ளது. இத்துடன் இவை கட்டமைப்பு சீர்திருத்தம் மற்றும் நிதிய திரட்சிகளிலும் சிக்கலைக் கூட்டியுள்ளது, என்றார்.     

துணை ஆளுநர் ஒரு தீர்க்கமான தொனியைக் கொண்டிருந்தார். ஆனால் ஏனையவர்கள் ஸ்ருதி இழந்திருந்தனர். BRICs உச்சமாநாட்டின் தொடக்க உரையில் சீன துணை-மந்திரி லீ யாங், வளர்ந்த நாடுகள் தற்போதைய நிதி சமநிலையின்மை குறித்து கவலை அடைகின்றன. ஆனால் சீனாவின் பரிமாற்ற விகிதத்தில் கட்டுப்பாடு என்பது "சீனாவின் வளர்ச்சியைத் தடுக்கும் மற்றொரு அரசியல் கருவியாகும், என்று எழுதியிருந்தார்.   

அமெரிக்க பொருளாதார ஆதிக்கம் மற்றும் டாலரின் உலகளாவிய பாத்திரம் ஆகியவற்றில் அதிகரித்துவரும் விரோதத்தை குறிப்பிட்டுக்காட்டிய BRICs மாநாட்டு கூட்டம், உலக பொருளாதாரத்தில் மாற்றங்களைக் கொண்டு வர சர்வதேச நிதியியல் ஆணையங்களின் சட்ட வடிவங்களில் மாற்றங்களைக் கொண்டு வரவேண்டுமென குறிப்பிட்டது. மேலும் வளர்ந்து வரும் பொருளாதாரங்களை ஸ்திரமின்மையில் சிக்க வைத்த வளர்ந்த நாடுகளிலிருந்து வரும் "பெரும்" மூலதன வருகைக்கு எதிராக அது எச்சரித்ததுடன், ஸ்திரத்தன்மையையும், நிச்சயத்தன்மையையும் கொடுக்கும் ஒரு பரந்துபட்ட சர்வதேச செலாவணி கையிருப்பு முறைக்கும்" அழைப்புவிடுத்தது. 

2008-2009 நிதியியல் நெருக்கடிக்குப் பின்னர் உலக பொருளாதாரம் மீண்டு வருகிறது என்பதே சர்வதேச நாணய நிதிய கூட்டத்தின் உத்தியோகபூர்வ போக்காக இருந்த போதினும், அந்த கண்ணோட்டம் குறித்து கணிசமான தடுமாற்றமும் அங்கே இருந்தது.

சர்வதேச நாணய நிதியத்தின் செய்திதொடர்பாளராக செயல்பட்ட சிங்கப்பூர் நிதிமந்திரி தார்மன் சண்முகரத்தினம், மாநாட்டு செய்திகளின் தொகுப்புரையில் ஓர் ஆண்டிற்கு முன்னர் இருந்ததை விடவும் சிறப்பான நிலையில் இருக்கிறோம் என்றாலும் கூட, குறிப்பிடத்தக்க அளவிற்கு காயங்களும் உள்ளன. இன்னமும் நாம் பலவீனமானவொரு நிலைமையில் தான் உள்ளோம். நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. நிதியியல் நெருக்கடியால் தோற்றுவிக்கப்பட்ட பிரச்சினைகளில், சர்வதேச நாணய கட்டுப்பாட்டு முறை "திருப்திகரமான வடிவத்தில்" இல்லை என்பது தலையாய இடத்தில் உள்ளது. மத்தியகிழக்கு அபிவிருத்திகள் மற்றும் ஜப்பான் பூகம்பம் உட்பட புதிய அபாயங்களும் உள்ளன, என்றார்.

ஜேர்மன்  மத்திய வங்கித்த தலைவர் அஹ்செல் வேபர், ஒட்டுமொத்தமாக ஜி20 நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும் அவற்றின் நிதியியல் அமைப்புமுறையை முழு ஸ்திரத்தன்மைக்கு கொண்டு வருவதிலிருந்து வெகு தூரத்தில் உள்ளன என்றார். அவர் தொடர்ந்து கூறியது, நாம் நெருக்கடியின் நான்காம் ஆண்டில் உள்ளோம். நாம் ஒன்றும்  நெருக்கடி ஏற்பட்ட ஓர் ஆண்டில் இருக்கவில்லை. 

மிக சக்திவாய்ந்த உலகளாவிய நிதியியல் அமைப்புகளின் கடந்தகால கூட்டங்களும் கூட ஆழமடைந்துவரும் பிரதான சக்திகளின் பதட்டங்கள் மற்றும் பிளவுகளால் பாத்திரப்பட்டிருந்தன. ஆனால் இந்த ஆண்டு விவாதங்களில், வெளிப்படையாகவும் இரகசியமாகவும், வர்க்க போராட்ட வெடிப்பு எனும் ஒரு புதிய காரணியும் இடம் பெற்றிருந்தது.

தம்முடைய முதல் பத்திரிகையாளர் கூட்டத்தில் உலக வங்கி தலைவர் ரோபர்ட் ஜியோலிக், உணவுப்பொருட்களின் பெரும் விலையுயர்விற்கு அப்பாற்பட்டு "புதிய அபாயங்களும், முறுக்கிப்பிழியும் சவால்களும்" இருப்பதாக குறிப்பிட்டார். அவர் கூறுகையில், அதிகாரிகளால் துன்புறுத்தப்பட்ட ஒரு பழவியாபாரி தன்னைத்தானே கொளுத்திக் கொண்டு இறந்ததால் தொடங்கிய துனிசிய புரட்சியை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும், என்றார்

ஜியோலிக் கூறுகையில், உணவுப்பொருட்களின் விலைகள் ஓர் ஆண்டிற்கு முன்னர் இருந்த அளவுகளைவிட 36 சதவீத புள்ளிகள் அதிகமாக உள்ளதாக குறிப்பிட்டுக்காட்டி, இந்த நிலைமையில் நாம் நிஜமாகவே ஒரு கொந்தளிப்பான நிலையில் இருக்கிறோம். கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து மேலும் கூடுதலாக 44 மில்லியன் மக்கள் வறுமையில் வீழ்ந்துள்ளனர், என்றார். நாம் ஒரு முழுநீள நெருக்கடியிலிருந்து ஒருபடி தள்ளி இருக்கிறோம், அவ்வளவு தான், என்று மூன்று நாட்கள் நடந்த விவாதங்களின் இறுதியில் நடைபெற்ற ஒரு பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.   

துனிசியா மற்றும் எகிப்தில் நிகழ்ந்த சம்பவங்களை ஒட்டி, வர்க்க போராட்டமானது சர்தவேச நாணய நிதிய மேலாண்மை இயக்குனர் டொமினிக் ஸ்ட்ராவுஸ்-கானின் மனதிலும் இருந்தது. சமீபத்திய ஆண்டுகளில், அவ்விரு நாடுகளும் "கட்டமைப்பு சீர்திருத்தங்களை" அறிமுகப்படுத்தி வளர்ச்சி விகிதங்களை அதிகரித்திருப்பதாக அந்நாடுகளின் அரசாங்கங்களுக்கு சர்வதேச நாணய நிதியம் பாராட்டுக்களை புகழ்ந்திருந்தது. ஆனால், அவ்விரு நாடுகளின் விஷயங்களுமே, புரட்சிகர வெடிப்பே விளைவாக இருந்தது.

"வளர்ச்சி போதாது, ஏனென்றால் இது பழைய வடிவத்தில் உள்ளது. இந்த வடிவத்தில் நீங்கள் வளர்ச்சியைக் கொண்டிருந்தால், இரண்டாவதாக நிகழ்ந்தது தான் நிகழும் (அதாவது புரட்சி). இது இனிமேலும் வேலைக்கு ஆகாது, என்று ஸ்ட்ராவுஸ்-கான்  தெரிவித்தார். வளர்ச்சியிலிருக்கும் பிரச்சினையை நாம் முற்றிலுமாக கணக்கில் எடுத்துப் பார்க்க வேண்டும் ஆனால் வளர்ச்சிக்கான வழியில் இருக்கும் சில யோசனைகள் கூட மாற்றத்தை அளிக்கக்கூடும் அல்லது வேலைகளை உருவாக்கக்கூடும். மத்தியகிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவை எடுத்துக்காட்டாக எடுத்துக்காட்டி, அதற்குப் பின்னால் அரசியல் பிரச்சினைகள் இல்லாமல் இருந்திருந்தால், ஒருவருக்கு நல்ல வளர்ச்சி கிடைத்திருக்கக்கூடுமென்று அவர் தெரிவித்தார்.   

இதே பிரச்சினை கேள்வி நேரத்தின் போது மீண்டும் எழுந்தது. ஓர் இந்திய பத்திரிகையாளர் அதை இவ்வாறு கேள்வியில் கொண்டு வந்தார்: ஒவ்வொரு ஆண்டும் உலகமெங்கும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் இந்த ஆண்டு ஒரு சிறந்த வாழ்க்கைக் கிடைத்துவிடும், அடுத்த ஆண்டு கிடைத்துவிடுமென்ற நம்பிக்கையோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வறுமையும், மக்கள்தொகையும் தான் அதிகமாகி கொண்டிருக்கிறது. உணவுப்பொருட்களின் உற்பத்தி குறைந்து கொண்டிருக்கிறது. நிழலுலக சந்தை, பணம் அல்லது ஊழல் குறித்து பல ஆர்ப்பாட்டங்கள் நடந்து கொண்டிருகின்றன. ஆகவே, நம்மை எதிர்பார்த்து கொண்டிருப்பவர்களுக்கு கூற இவற்றிற்கான பதில்கள் நம்மிடம் இருந்தாலே போதுமானது.      

ஸ்ட்ராவுஸ்-கானின் பதில், புரட்சிகர போராட்டங்களின் எழுச்சிக்குப் பின்னால் ஆழமடைந்துவரும் பிளவுகளை அடிகோடிட்டுக் காட்ட மட்டுமே உதவியுள்ளது: நெருக்கடி ஏற்படுவதற்கு முன்னாலிருந்தும், நெருக்கடி ஏற்பட்ட பின்னரும் கூட, நாம் ஒவ்வொரு ஆண்டும் கூடி பேசி வருகிறோம். உலகளவில் விஷயங்கள், ஏறத்தாழ, முன்னேறி உள்ளன பரந்துபட்ட பொருளாதார புள்ளிவிபரங்களைப் பொறுத்த வரையில் அது முன்னேறி வருகிறது மற்றொருபுறம், வீதிகளில் இறங்கியிருக்கும் பெரும்பாலான மக்கள் அவர்களின் சொந்த வாழ்க்கை முன்னேறி உள்ளது என்பதை நினைத்துப்பார்ப்பதில்லை, என்றார்.  

இதை எடுத்துக்காட்டும் பெரும் அபாயங்களை உணர்ந்திருக்கின்ற நிலையில், ஸ்ட்ராவுஸ்-கானால் எவ்வித தீர்வுகளையும் முன்வைக்க முடியவில்லை. அவரால் தீர்வுகளை முன்வைக்கவும் முடியாது. ஏனென்றால் உள்ளபடியே பொருளாதார வளர்ச்சி அல்ல, மாறாக இலாபம் தான் முதலாளித்துவ பொருளாதாரத்தின் உந்துசக்தியாக உள்ளது. இன்று, எல்லாவற்றிற்கும் மேலாக, இலாபம் தான் தொழிலாளர் வர்க்கத்தின் கூலிகளையும், சமூக நிலைமைகளையும் கீழே நோக்கி தள்ளிக்கொண்டிருக்கிறது.    

இதன் விளைவாக, பெருந்திரளான மக்களின் வாழ்க்கை மேம்படாமல் இருப்பதற்கு பொருளாதார வளர்ச்சி மட்டுமே சம்பந்தப்பட்டதல்ல. சம்பள விகிதத்திலிருந்து செல்வவளத்தை உறிஞ்சி, நேரடியாக விலைகொடுக்க செய்வதால் மட்டுமே இது அடையப்படுகின்றது. வரலாற்றிலேயே இன்று அதிகபட்சமாக இருக்கும் சமூக சமத்துவமின்மை என்பது மிகப்பெரிய உலக "சமநிலையின்மை" மட்டுமல்ல, மாறாக அது வர்க்க போராட்டத்தின் உந்துசக்தியாகவும் விளங்குகிறது. அதனோடு ஆழமடைந்துவரும் பிரதான சக்திகளின் போட்டிகளோடு சேர்ந்து, வாரயிறுதி பொருளாதார கலந்துரையாடல்களை அர்த்தமற்றதாக்கிவிட்டன.

ஆசிரியர் பரிந்துரைக்கும் இதர கட்டுரைகள்:

BRICS summit denounces use of force against Libya