சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Syria becomes centre of struggle for regional influence

பிராந்தியச் செல்வாக்கிற்கான போராட்டத்திற்கு சிரியா மையமாகிறது

By Jean Shaoul 
28 May 2011

Use this version to print | Send feedback

ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் பாத்திஸ்ட் ஆட்சிக்கு எதிராக அரசாங்க எதிர்ப்பு இயக்கம் கணிசமான முன்னேற்றம் காண்பதில் தோல்வி ஏற்பட்டுள்ள நிலையில், இப்பொழுது பலதரப்பட்ட, முரண்டு பிடிக்கும் எதிர்த்தரப்பு சக்திகளை பலப்படுத்துவதற்கு பிராந்திய முயற்சிகள் வந்துள்ளன.

அசாத்தின் ஆட்சி குறைந்த பட்சம் தற்போதைக்கேனும், வறுமை நிறைந்த விவசாயப் பகுதிகளுக்குள் உள்ள சமூக அமைதியின்மையை அடக்கி, அது அதிக மக்கள் நிறைந்திருக்கும் டமாஸ்கஸ், அலேப்போ ஆகிய இடங்களுக்கு பரவாமல் தடுத்துவிட்டதைப் போல் தோன்றுகிறது. கடந்த வாரம் பேஸ்புக் தளம் Syria Revolution 2011 விடுத்திருந்த ஒரு பொது வேலைநிறுத்த அழைப்பிற்கு அதிக ஆதரவு இல்லை. வெள்ளிக்கிழமை தொழுகைகளுக்குப் பின் ஆர்ப்பாட்டங்களில் குறைந்த எண்ணிக்கையினர்தான் பங்கு பெற்றிருந்தனர்

கடந்த வார இறுதியில் அரசாங்கம் அனைத்து எதிர்ப்புக்கள் மீதும் கடுமையான நசுக்குதலை மேற்கொண்டது. வெள்ளித் தொழுகைகளுக்கு பின்னர் 30 பேர் கொல்லப்பட்டனர் என்ற தகவல்கள் வந்தன. எந்தப் பொதுக்கூட்டத்திற்கும் அனுமதி தேவை என்று உள்ள நாட்டில் இவை எதிர்ப்புக்களுக்கான மையக்குவிப்பாயிற்று. மேலும் வார இறுதியில் 20 பேர் கொல்லப்பட்டனர். நேற்று குறைந்த பட்சம் இன்னும் ஒரு எட்டுப் பேர் கொலையுண்டனர்.

அசாத் வன்முறைச் செயல்களில் டாங்குகள், துருப்புக்கள், பாதுகாப்புப் பிரிவினர், பொலிஸ் மற்றும் ஆயுதமேந்திய குண்டர்களை பயன்படுத்தியமை எதிர்ப்பாளர்களை தடுப்பதில் முக்கிய பங்கை கொண்டிருந்தது. ஆனால் மற்றும் ஒரு முக்கிய காரணிஎதிர்ப்புசக்திகள், மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்துபவர்களுடைய தலைமையின் தன்மை, முன்னோக்கு ஆகியவை அமெரிக்க, பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சுச் செய்தி ஊடகத்தால் ஆதரிக்கப்படுகிறது என்பதாகும்.

எதிர்ப்புச் செய்தி தொடர்பாளர்களில் பலரும் வாஷிங்டன், லண்டன் மற்றும் பாரிஸுடன் தொடர்புடையவர்கள். இவை சிரியாவை ஈரானுடன் கூட்டு என்பதிலிருந்து விலகி ஒரு வெளிப்படையான மேற்கத்தைய சார்பு பெறச் செய்வதற்கு முற்படுகின்றன. இதில் பலரும் ஆட்சியிலிருந்து அகன்றவர்கள் மற்றும் CIA முகவர்கள் ஆவார்கள். பலரும் வாஷிங்டனிலிருந்து நிதி உதவி அல்லது பிற ஆதரவைக் கொண்டுள்ளனர். இதில் முஸ்லிம் பிரதர்ஹுட் உட்பட Damascus Declaration Group என்னும் சிரியாவின் பிளவுற்றிருக்கும் எதிர்த்தரப்புக் கட்சிகளும் அடங்கியுள்ளன. தலைவர்களில் வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்பட்டிருந்த மருத்துவர் அல்-லப்வானி, மைக்கேல் கிலோ மற்றும் ஒரு செல்வம்படைத்த வணிகரும் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான ரியத் செய்ப் ஆகியோரும் அடங்குவர்.

மற்றொரு எதிர்த்தரப்பாளர் முன்னாள் சிரிய துணை ஜனாதிபதியும் செல்வம்மிக்க வணிகருமான அப்துல் ஹலிம் கடம் ஆவார். இவர் கொலை செய்யப்பட்ட முன்னாள் லெபனியப் பிரதம மந்திரி ரபிக் ஹரிரி மற்றும் அவர்ருடையை மகன் சாத் ஹரிரி ஆகியோருடனும், சௌதி ஆட்சியுடனும் நெருக்கமான பிணைப்புக்களைக் கொண்டவர். இப்பொழுது இவர் பாரிஸில் புகலிடம் பெற்று வசித்து வருகிறார்.

கடமின் ஆயுதமேந்திய ஆதரவாளர்கள் மற்றும் இஸ்லாமியவாதிகள்  கடலோர நகரான பனியாஸில் எதிர்ப்பாளர்களுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தனர். அத்திட்டம் கசியவிடப்பட்ட அமெரிக்க தகவல் தந்திகளில் முன்னதாகவே கசிந்திருந்தது. சிரியப் புரட்சி 2011 என்னும் சமூக வலைத் தளம், எதிர்ப்புக்களுக்கு அழைப்புவிடுவதிலும் அமைதியின்மை பற்றிய செய்திகளை வெளியிடுவதிலும் முக்கிய பங்கைக் கொண்டிருப்பது, ஸ்வீடனிலிருந்து செயல்படுகிறது. முஸ்லிம் பிரதர்ஹுட் மற்றும் பிற இஸ்லாமியவாதக் குழுக்களுடன் நெருங்கிய பிணைப்புக்களை அது கொண்டுள்ளது.

அமெரிக்காவும் மற்ற முக்கிய சக்திகளும் சிரியா முக்கிய இடத்தைக் கொண்டுள்ள இப்பிராந்தியத்தில் உறுதி குலைந்துவிடும் என்ற அச்சத்தில் வெளிப்படையாக அசாத் விலக வேண்டும் என்ற அழைப்பிற்கு தீவிர தயக்கங்களைக் கொண்டுள்ளன. உண்மையான இலக்காக தெஹ்ரானை கொண்டுள்ள வெள்ளை மாளிகை சிரிய ஆட்சி உறுப்பினர்கள் மீது பொருளாதாரத் தடைகளைச் சுமத்தியுள்ளது. அசாத்தே கூட இதில் அடங்குவார். ஏப்ரல் மாதம் மற்றொரு சுற்றுத் தடைகளை அறிவிக்கையில், ஜனாதிபதி பராக் ஒபாமா முன்னாள் ஈரானிய புரட்சிகரக் குழுவையும் சேர்த்துள்ளார். இந்த அமைப்பு எதிர்த்தரப்பினரை நசுக்குவதில் அசாத்திற்கு உதவுகிறது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியமும் கனடாவும் இதைப் பின்பற்றி, அசாத் மீதான தடைகளை விரிவாக்கியுள்ளன.

கடந்த வாரம் ஒபாமா மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க கொள்கை பற்றிய தன்னுடைய உரையில் சிரிய அரசாங்கம்ஒரு ஜனநாயக மாற்றத்தை முன்வைக்க தீவிரமான பேச்சுக்கள் தேவைஎன்று கோரினார். அசாத் அகல வேண்டும் என்று கூறவில்லையே ஒழிய, “அவர் தன் நாட்டை ஒரு ஜனநாயக மாற்றத்திற்கு வகை செய்யும் வகையில் தலைமை தாங்க வேண்டும், இல்லாவிடில் அப்பாதைக்கு குறுக்கே நிற்கக் கூடாதுஎன்றார்.

இது வாஷிங்டனின் பரந்த கொள்கை மாற்றத்தின் ஒரு பகுதி எனத் தோன்றுகிறது. கார்டியனில் சௌமயா கன்னூஷி குறிப்பிடத்தக்க வகையில், “எகிப்திய ஜனநாயக மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர் எசரா அப்தெல் பட்டா உட்பட பல அரபு ஆர்வலர்கள் கடந்த மாதம் நடைபெற்ற மத்திய கிழக்கு ஜனநாயகத் திட்டம் பற்றிய நிகழ்விற்கு அழைப்பு கொடுக்கப்பட்டதுபல சமீபத்திய மாநாடுகள், கருத்தரங்குகளில் இதுவும் ஒன்று. உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையே நடந்த பேச்சுக்கள்மன்றப் பெரும்பான்மைத் தலைவர் ஸ்டெனி ஹோயர் போன்றோருக்கும் முஸ்லிம் பிரதர்ஹுட்டிற்கும் இடையே கடந்த மாதம் கெய்ரோவில் நடந்தன. துனிசிய இஸ்லாமியவாத என்னஹ்டா கட்சியின் துணைத் தலைவர் சமீபத்தில்ஜனநாயக மாற்றம் பற்றி விவாதிக்கஅமெரிக்கா சென்றுவிட்டுத் திரும்பினார்என எழுதியுள்ளது.

மே 24ம் திகதி சிரியன் அமெரிக்க சபையினால் 400 அமெரிக்க சிரியன் எதிர்ப்பாளர்களுடைய கூட்டம் ஒன்றை வாஷிங்டனில் ஏற்பாடு செய்து, ஒபாமா நிர்வாகம் சிரிய அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுத்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சிரியாவில் அடக்குமுறையில் ஈடுபடுவது பற்றிய குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது.

முஸ்லிம் பிரதர்ஹுட், அரசாங்க எதிர்ப்புக்களுக்கு மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கூறி குறும் குழுவாதத்திற்கு தூண்டுதல் கொடுத்துள்ளது. இதன் நோக்கம் ஒரு சுன்னி இஸ்லாமிய அரசை நிறுவுதல் ஆகும். இதற்கு சௌதி அரேபியா, கட்டார் மற்றும் பிற வளைகுடா நாடுகளின் ஆதரவு உள்ளது. ஈரானிய மற்றும் ஷியாச் செல்வாக்கை அப்பிராந்தியத்தில் எதிர்த்துப் போரிடுவது இதன் நோக்கம் ஆகும். ஆனால் சிரியாவிற்குள் இதற்குப் பரந்த ஆதரவு இல்லை. அந்நாட்டில் பல மதங்களும் உட்பிரிவுகளும் உள்ளன. பெரும்பாலான சுன்னி மக்களும் அங்கு வாழ்கின்றனர்.

அல் ஜசீராவில் மதப் போதனையாளராகவுள்ள ஷேக் யூசுப் அல்-கரடவி அசாத் பதவியிலிருந்து விலக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். இது சிரிய ஜனாதிபதியை அனைத்து அரசியல், வணிக உறவுகளும் முறித்துக் கொள்ளப்படும் என்ற அச்சுறுத்தலைக் கொடுக்கச் செய்தது. கட்டாரின் பிரதம மந்திரி ஹமத்துடன் நடந்த பேச்சுக்களில் அவ்வாறு கூறப்பட்டது.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் கருத்துப்படி, பிளவுற்றிருப்பவர்கள் ஐரோப்பா முழுவதும் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர், ஆனால் ஒரு பொதுத்திட்டம் அல்லது மூலோபாயத்தை வரைய முடியவில்லை என்று உள்ளது. இந்த வேறுபாடுகளைக் களைவதற்கு அடுத்த வாரம் துருக்கி ஒரு முக்கிய நான்கு நாட்கள் எதிர்க்குழுக்கள், ஆர்வலர்கள் கூட்டத்தை Antalya வில் நடத்துவதாக உள்ளது. இதில் அமெரிக்க ஆதரவுடைய டமாஸ்கஸ் அறிவிப்பு அமைப்பும் (Damascus Declaration) முஸ்லிம் பிரதர்ஹுட்டும் அடங்கும்.

துருக்கியின் நோக்கம், அசாத் ஆட்சிக்கு மாற்றீடு வருவதற்கு செல்வாக்கை ஏற்படுத்திக் கொள்ளுதல், அல்லது குறைந்த பட்சம் பாத்திஸ்ட்டுகளுடன் அரசாங்கத்தில் பங்கு பெறக்கூடிய கட்சிகள் மீது செல்வாக்கைப் பெறுதல் என்று உள்ளதுஇது ஏகாதிபத்திய சக்திகள் அசாத் மீது சுமத்தும் சமரசத்தின் ஒரு பகுதி ஆகும். எல்லா எதிர்த்தரப்புக் குழுக்களும் பங்கு பெறலாம் என்றுள்ள இம்மாநாடு ஒரு தேசிய மாற்றுக்காலக் குழுவைத் தேர்ந்தெடுக்க உள்ளது.

இக்கூட்டத்தைத் தொடர்ந்து கடந்த மாதம் இஸ்தான்புல்லில் சிரியாவின் முஸ்லிம் பிரதர்ஹுட்டின் கூட்டம் நடந்ததுஇதுவோ அங்கு நீண்ட காலம் சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் செய்தியாளர் கூட்டம் கட்டாரை தளமாகக் கொண்ட செய்தி அமைப்பான அல்ஜசீராவில் நேரடி ஒளிபரப்பாயிற்று. Independent Industrialists and Businessmen’s Association ஆல் வழிநடத்தப்படும் இம்மாட்டிற்கு காசி மிசிரிடி நிதி மற்றும் அமைப்பு உதவியை அளித்துள்ளார். இவர் துருக்கிய குடியுரிமை பெற்ற ஒரு சிரியன் ஆவார். முஸ்லிம் பிரதர்ஹுட்டின் தலைவர்களுள் ஒருவர் ஆவார்.

துருக்கி இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது டமாஸ்கஸிற்கு சீற்றத்தை ஏற்படுத்தியது. அது 1970களின் கடைசியில் தற்போதைய ஜனாதிபதியின் தந்தை ஹபெஸ் அல்-அசாத்திற்கு எதிராக ஆயுதமேந்திய எழுச்சி நடத்தியதையொட்டி பிரதர்ஹுட்டைத் தடை செய்திருந்தது. இயக்கம் இரக்கமின்றி அடக்கப்பட்டது. அதன் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் 1982ல் ஹமாவில் படுகொலை செய்யப்பட்டனர். ஹுரியத் டெய்லி நியூஸில் கொடுத்த பேட்டி ஒன்றில் சிரியாவின் துருக்கியத் தூதர் நிடல் கபலன், “எங்களைப் பொறுத்தவரை, முஸ்லிம் பிரதர்ஹுட் துருக்கியில் PKK இருப்பதைப் போல்தான்என்றார். இது துருக்கியில் தடை செய்யப்பட்டுள்ள குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியை போன்றது. “முஸ்லிம் பிரதர்ஹுட் டாரா மற்றும் பனியாஸில் இராணுவத்தை தாக்குகிறதுஎன்றும் அவர் கூறினார்.

அங்காரா, சிரிய எதிர்த்தரப்பினருக்குக் கொடுக்கும் ஆதரவு டமாஸ்கஸுடனான அதன் உறவுகளில் ஒரு மாற்றத்தைக் குறிக்கிறது. இவை கடந்த 10 ஆண்டுகளில் பெருகிய முறையில் நெருக்கமாகியுள்ளன. வணிகமும் முதலீடும் விரிவாகியுள்ளன. விசா தடைகள் அகற்றப்பட்டுள்ளன. இரு நாடுகளும் கூட்டு காபினெட் கூட்டங்களை நடத்தியதுடன் இராணுவப் பயிற்சிகளையும் மேற்கொண்டன. ஆனால் கடந்த சில வாரங்களில் பிரதம மந்திரி ரெசப் தயிப் எர்டோகனும் வெளியுறவு மந்திரி அஹ்மத் டாவுடோக்லுவும் டமாஸ்கஸிற்கு சென்று அசாத் எதிர்ப்பாளர்களுடன்ஒரு தேசிய உரையாடலில்ஈடுபடவேண்டும் என்று கூறினர். அதேபோல் முஸ்லிம் பிரதர்ஹுட் உறுப்பினர்களை அமைச்சரவையில் சேர்க்க வேண்டும், ஊழலுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட வேண்டும், பல கட்சி முறையில் தேர்தல்கள் அனுமதிக்கப்பட வேண்டும் எதிர்ப்புக்கள் சட்டபூர்வமாக்கப்பட வேண்டும் என்றனர்.

அசாத் ஆட்சிக்கு எதிரான அணுகுமுறையை கடினமாக்கிக் கொண்டுள்ளதற்குப் பின்னணியில் நான்கு ஆண்டுகளாக வறட்சியால் பேரழிவிற்கு உட்பட்டுள்ள சிரியாவின் மேலாதிக்கம் நிறைந்த வடகிழக்கு குர்திஷ் சிறுநகரங்களில் அமைதியின்மை ஏற்பட்டால், அது துருக்கிக்கும் பரவக்கூடும் என்ற அச்சுறுத்தல் உள்ளது. குறிப்பாக அது உள்நாட்டுப்போராக மாறினால் ஆயிரக்கணக்கான சிரியர்கள் எல்லை கடந்து வருவர் என்ற அச்சம் உள்ளது.

துருக்கியின் நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் வகையில் எர்டோகன் கூறினார்: “சிரியாவில் நிலைமை துருக்கியிலுள்ள உள்நாட்டு அரசியலுக்கு ஒப்பாக உள்ளதுஅங்கு நடக்கும் நிகழ்வுகள் பற்றி துருக்கிபெரும் கவலையும் எரிச்சலையும் கொண்டுள்ளதுஎன்றார்.

வெளியுறவு மந்திரி அஹ்மத் டாவுடோக்லு ஒரு படி மேலே சென்று அசாத் உடனடியாக எதிர்ப்பாளர்களை சமாதானப்படுத்துவதற்காக சீர்திருத்தங்களை மேற்கோள்ள வேண்டும் என்று கோரினார். “மக்களுடைய உள்ளத்தில் இடம் பெற அவருக்கு அதிர்ச்சி வைத்தியம் தேவை, இது விரைவில் தேவைஎன்றார் அவர்.

அல்டல்யாவில் நடைபெற்ற கூட்டம் முதலில் எகிப்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், காலம் தாமதித்து கெய்ரோ ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அரபுத் தலைநகர் ஒன்றில் சிரிய எதிர்ப்பாளர்களின் முதல் பெரிய கூட்டம் என்று இருந்திருக்கக்கூடிய கூட்டத்திற்கு அனுமதி கொடுக்கவில்லை.

முபாரக் வீழ்ச்சிக்கு பின்னரே, எகிப்திய இராணுவ ஆட்சி தன் நிலைப்பாட்டை ஒரு பிராந்திய அதிகாரத்தில் இருந்தும் செல்வாக்கு உடையதாக மாற்றிக் கொண்டு உள்நாட்டு ஆதரவைப் பெறவும் முற்பட்டுள்ளது. இந்த நோக்கத்தையொட்டி அது இஸ்ரேலிடம் இருந்து ஒதுங்கிக் கொண்டுள்ளது. பாலஸ்தீனத்திடம் சமாதான அறிகுறிகளைக் காட்டியுள்ளதுஅதில் காசா எல்லையை திறந்துவிட்டுள்ளதும் அடங்கும். மேலும் முஸ்லிம் பிரதர்ஹுட் இன்னும் பிற இஸ்லாமியக் கட்சிகளை ஒரு புதிய அரசாங்கத்திற்குள் ஈர்க்கவும் முற்பட்டுள்ளது.

எகிப்தின் தஹ்ரிர் சதுக்கத்தில் பெரும் அணிவகுப்பிற்கு சமீபத்தில் Quradawi தான் தலைமை தாங்கினார் என்று லெபனான் செய்தி குறிப்பிட்டுள்ளது. “முஸ்லிம் பிரதர்ஹுட்டினரிடையே அவர் கொண்டுள்ள செல்வாக்கினால்மட்டும் இது முக்கியமானது அல்ல, “கட்டாரி-எகிப்திய சமாதானம் வெளிப்பட்டிருப்பதிலும்இது முக்கியத்துவம் கொண்டுள்ளது. எகிப்தில் 10 பில்லியனுக்கும் மேலான டொலர்கள் முதலீடு செய்ய விரும்பும் கட்டாரித் திட்டங்கள் இதன் உருவகம் ஆகும் என்று கூறியுள்ளது.

ஆனால் ஈரானுடன் சமாதானமும் இம்மாற்றத்தைத் தொடர்ந்து வந்துள்ளது. அதில் 30 ஆண்டு கால முறிவிற்குப் பின் இராஜதந்திர உறவுகளை மீட்பதற்கான தற்காலிகப் பேச்சுக்கள் நடக்கின்றன. இதுதான் இறுதியில் அணிவகுப்பு நடத்தப்படுவதற்கான அனுமதி இறுதியில் மறுக்கப்பட்டதை விளக்கும். அப்படி இருந்தும், கெய்ரோ ஈரானை ஒரு முக்கிய போட்டி நாடாகத்தான் இன்னும் காண்கிறது. தெஹ்ரானுடன் நல்ல உறவுகள் கொண்டால் அமெரிக்காவிடமிருந்து தீவிர எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிடும் என்பதை நன்கு அறியும்.

எகிப்திற்கு ஒரு மறைமுகமான எச்சரிக்கை, கொய்மேனி ஆட்சியுடன் மிகவும் நெருக்கமாக இருக்க வேண்டாம் என்ற முறையில் அமெரிக்க துணை வெளிவிவகாரச் செயலர் ஜேப்ரி பெல்ட்மன் இந்த வாரம் கூறியது இருந்தது. இப்பிராந்தியத்தில் ஈரான் ஏற்படுத்தும்பிரச்சினைகள் பற்றி எகிப்தியர்கள் நன்கு அறிவர்”, அவ்விதம் இருக்கும்போது அமெரிக்கா, தெஹ்ரானுடனான கெய்ரோ உறவுகள் பற்றிய முடிவுளைப் பற்றி அதிகம்அக்கறை கொள்ளவில்லை”.