சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

Greek prime minister forced out in euro crisis deal

கிரேக்கப் பிரதம மந்திரி யூரோ நெருக்கடி உடன்பாட்டையடுத்து பதவியில் இருந்து விலகும் கட்டாயத்திற்கு உட்படுகிறார்

By Patrick Martin
7 November 2011
use this version to print | Send feedback

கிரேக்கப் பிரதம மந்திரி ஜோர்ஜ் பாப்பாண்ட்ரு ஞாயிறன்று தான் இராஜிநாமா செய்வதற்கு ஒப்புக்கொண்டு, கிரேக்க உழைக்கும் மக்களின் மீது வங்கியாளர்கள் மற்றும் ஐரோப்பிய அரச தலைவர்கள் விரும்பும் இன்னும் கடுமையான சிக்கன நடவடிக்கைகளைச் சுமத்துவதற்கு அதிகாரம் பெறும் தேசிய ஐக்கியக் கூட்டணி அரசாங்கம் தனக்குப் பதிலாக வருவதற்கும் ஒப்புக் கொண்டுள்ளார்.

ஜனாதிபதி காரோலோஸ் பாபௌலியஸ் மற்றும் வலதுசாரி எதிர்க்கட்சியான புதிய ஜனநாயகக் கட்சித் தலைவர் அன்டோனிஸ் சமரஸுடன் ஒரு நீடித்த பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன், பாப்பாண்ட்ரு, அவருடைய செய்தித்தொடர்பாளர் கூறியபடி, தன்னுடைய கடைசி மந்திரிசபைக் கூட்டத்திற்கு, சமூக ஜனநாயக PASOK தலைவர் என்னும் முறையில் தலைமை தாங்கினார்.

இப்பேச்சுக்கள் திங்களன்று இரு காலக் கெடுக்களை எதிர்கொண்டிருந்தனகடந்த வாரம் கிரேக்க நெருக்கடியால் பெரும் பங்குகள் விற்பனைகளால் பாதிக்கப்பட்டுள்ள ஐரோப்பாவில் நிதியச் சந்தைகள் திறக்கப்படுதல் மற்றும் பிரஸ்ஸல்ஸில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் நிதி மந்திரிகளின் கூட்டங்கள் என்பவையே அவைகள். அக்கூட்டத்திற்குக் கிரேக்கப் பிரதிநிதியான நிதி மந்திரி எவாஞ்சலோஸ் வெனிசோலோஸ் கிரேக்கக் கடன் மறுசீரமைக்கப்படுவதற்கு அக்டோபர் 26ஆம் திகதியன்று மேற்கோள்ளப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய உடன்பாட்டின் விதிகள் வரவிருக்கும் புதிய அரசாங்கத்தால் நிறைவேற்றப்படும் என்பதை உறுதிசெய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏதென்ஸில் இருந்து வந்துள்ள செய்தி ஊடகத் தகவல்களானது கட்சி ஆதரவிற்கு விலையாக சமரஸ் கோரிய பாப்பாண்ட்ரூ அகற்றப்பட வேண்டும் என்பதைத் தவிர, புதிய அரசாங்கத்தின் கலவை அல்லது அதற்கு யார் தலைமை தாங்குவார் என்பதைப் பற்றி உடன்பாடு ஏதுமில்லை எனத் தெரிகிறது. மூத்த பாப்பௌலியஸ் தலைமையில் நடக்க இருக்கும் திங்கள் கூட்டத்தில் பேச்சுக்கள் தொடரும்.

பாராளுமன்றத்தில் ஒரு குறுகிய பெரும்பான்மையை PASOK இன்னமும் கொண்டுள்ளது என்பதை சனிக்கிழமை காலையில் பாப்பாண்ட்ரூ பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் தொகையான 153-145 என்ற எண்ணிக்கை நிரூபித்தது. எனவே அடுத்த பிரதம மந்திரி ஒரு PASOK தலைவராக இருக்கலாம், அநேகமாக வெனிசிலோஸ் அல்லதுகட்சி சார்பற்ற இடைக்காலப் பிரதமர் என்னும் முறையில் Loukas Papdemos ஆக இருக்கலாம்; இவர் கிரேக்கத்திற்கு மிக அதிக அளவு கடன் கொடுத்துள்ள ஐரோப்பிய மத்திய வங்கியின் முன்னாள் துணைத் தலைவர் ஆவார்.

PASOK இன் சிக்கனக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு என்று காட்டிக் கொண்ட நிலைப்பாட்டை புதிய ஜனநாயகக் கட்சி கைவிட்டுள்ளது; அத்தகைய தோற்றம் முற்றிலும் பாப்பாண்ட்ரூ அரசாங்கத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தவும், இறுதியில்ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்றுதான் செய்யப்பட்டது. கன்சர்வேடிவ் கட்சியானது சக சிந்தனையாளர்களான ஜேர்மனியில் கிறிஸ்துவ ஜனநாயகவாதிகள், பிரான்ஸின் UMP உடைய நிக்கோலா சார்க்கோசி போன்றோருடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளது; இந்த இரு தலைவர்களும்தான் கிரேக்கத்தின் மீது காட்டுமிராண்டித்தன வரவு-செலவுத் திட்ட வெட்டுக்களை சுமத்துவதில் தீவிரமாக இருந்தனர்.

PASOK உடனான உடன்பாட்டின் ஒரு பகுதியாக புதிய ஜனநாயகக் கட்சி (New Democracy) இப்பொழுது ஐரோப்பிய ஒன்றியத்துடன் சிக்கன உடன்பாட்டின் விதிகளுக்கு இசைவுதர ஒப்புக் கொண்டுள்ளது; இவை சில நுட்பமான விவரங்கள் பற்றிய கருத்துவேறுபாடுகள் தீர்ந்தபின் நடக்கும்; இதற்கு டிசம்பர் 15ஆம் திகதி இறுதி நாள் என கெடு வைக்கப்பட்டுள்ளது; ஏனெனில் அத்தேதிக்குள் பணம் கிடைக்காவிட்டால் கிரேக்க அரசாங்கம் அரச ஊழியர்களின் ஊதியங்கள், ஓய்வுதியங்கள் மற்றும் அரசாங்கப் பத்திரங்கள் மீதான வட்டி ஆகியவற்றைக் கொடுக்க முடியாமல் போய்விடும்.

யூரோ நெருக்கடியினால் பதவி இழக்கும் மூன்றாவது அரசாங்கத் தலைவராக பாப்பாண்ட்ரூ உள்ளார்; ஆனால் இது ஒன்றும் கடைசி மாற்றம் எனக் கூற முடியாது.

பெப்ருவரி மாதம் அயர்லாந்தில் Fianna Fail-பசுமைக் கட்சிக்கூட்டணி பொதுத்தேர்தலில் துடைத்தொழிக்கப்பட்டு, வலதுசாரி Find Gael, தொழிற் கட்சியுடனான கூட்டணி அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டது.

ஜூன் மாதம் போர்த்துக்கல்லில் ஆளும் சோசலிஸ்ட் கட்சி பொதுத் தேர்தல்களில் வலதுசாரி சமூக ஜனநாயகக் கட்சியினால் பெரும் தோல்விக்கு உட்படுத்தப்பட்டது.

ஸ்பெயினில் ஆளும் சமூக ஜனநாயக PSOE கட்சி நவம்பர் 20 நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலில் பெரும் தோல்வியை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; அதையொட்டிப் பிரதம மந்திரி ஜோஸ் லூயி சபாத்தேரோ வாக்கெடுப்பிற்கு முன்னரே PSOE தலைமையில் இருந்து கீழிறங்கி, தான் மறுபடியும் தேர்தலில் நிற்பது இல்லை என அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தாலியில் பிரதம மந்திரி சில்வியோ பெர்லுஸ்கோனியின் அரசாங்கம் பாராளுமன்றத்தில் வரவு-செலவுத் திட்ட சட்டவரைவை ஒட்டி, மற்றொரு நம்பிக்கை வாக்கெடுப்பை செவ்வாயன்று எதிர்கொள்கிறது; இதில் அவர் தோல்வி அடைவார் என்றுதான் பரந்த முறையில் எதிர்பார்க்கப்படுகிறது.

பெர்லுஸ்கோனி அரசாங்கம் கவிழ்ந்தால், அது முன்கூட்டிய தேர்தல்களுக்கு வகை செய்யும்; இதையொட்டி PIIGS எனப்படும் போர்த்துக்கல், அயர்லாந்து, இத்தாலி, கிரேக்கம் மற்றும் ஸ்பெயின் ஆகிய ஐந்து நாடுகளின் அரசாங்கங்களும் கவிழ்ந்தன என்ற முழு நிலை ஏற்படும்; இந்த ஆண்டு தொடக்கத்தில் இவை அனைத்துமே நிதிய நெருக்கடி, திவால்தன்மை ஆகியவற்றிற்குக் காரணம் எனக் கருதப்பட்டன.

நவம்பர் 3-4 திகதிகளில் கான் என்னும் இடத்தில் நடந்த G-20  உச்சிமாநாட்டுத் தீவிர விவாதங்களில் இத்தாலிய பொருளாதாரம் மேற்பார்வையிடப்படுவதை ஏற்கும் கட்டாயத்திற்கு பெர்லுஸ்கோனி உட்பட்டார். இவ்வகையில் ஐரோப்பிய நிதியச் சந்தைகள் மீதான நம்பிக்கை உடனடிச் சரிவைக் காண்பதை ஒத்திவைக்கலாம் என்னும் முயற்சி, உண்மையில் அதை முன்கூட்டியே நிகழச் செய்யக்கூடும்; ஏனெனில் இத்தாலி நாட்டின் கணக்குகளைப் பற்றிய தீவிர வெளிப் பரிசீலனை தற்பொழுது ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதை விட மிக மோசம் என்பதைக் காட்டக் கூடும்.

கிரேக்கத்தில் அரசியல் நெருக்கடி EU மற்றும் அதன் பிரதிநிதிகள்  நடைமுறையில் அரசாங்கத்தை எடுத்துக் கொள்ளும் வடிவமைப்பத்தான் காட்டுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார, நிதியப் பிரிவு ஆணையர் ஒல்லி ரெஹ்ன் ராய்ட்டர்ஸிடம் ஐரோப்பிய சக்திகள் ஏதென்ஸில் அரசாங்கம் மாற்றப்படுவதற்கு ஆதரவுகொடுத்துள்ளன என்று கூறினார். “ஒரு தேசிய ஐக்கிய அரசாங்கம் தேவை என்று அழைப்பு விடுத்துள்ளோம், அதுதான் கிரேக்கம் தன் கடப்பாடுகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான நம்பகத்தன்மையை மீட்க இயலும் என்றும் நாங்கள் கருத்திற்கொண்டுள்ளோம்.”

கடந்த திங்களன்று பாப்பாண்ட்ரூ அறிவித்த கிரேக்கத்தில் மக்கள் பொது வாக்கெடுப்பு சிக்கன நடவடிக்கைகளுக்காக என்பது, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் IMF ஆணையின் கீழ் கொடுக்கப்பட்ட கடன்களுக்காக, “கிரேக்கம் நம்பகத்தன்மையில் ஏற்படுத்தியுள்ள ஒரு மீறல்”, “இது அதை யூரோப் பகுதிக்கு வெளியே நிறுத்திவிடக்கூடும் என்றும் அவர் கூறினார். “அதை நாங்கள் விரும்பவில்லை, ஆனால் எந்த நிலைக்கும் தயாராக இருக்க வேண்டும்; அதையும் சேர்த்துத்தான்; அப்பொழுதுதான் நிதிய உறுதிப்பாடு நிலைநிறுத்தப்படும், யூரோ காப்பாற்றப்படும்.”

ஒருபுறம் புது ஜனநாயகக் கட்சியின் வெற்றுப் பேச்சை அம்பலப்படுத்தவும் மறுபுறம் கிரேக்கத் தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றின் போலி இடது நட்பு அமைப்புக்களின் வெற்றுப் பேச்சை அம்பலப்படுத்துவும்தான் வாக்கெடுப்பு என்ற திட்டத்தைப் பாப்பாண்ட்ரூ முன்வைத்தார். இதையொட்டி அவைகள் சிக்கன நடவடிக்கைகளுக்குக் கூறும் கருத்தைக் கைவிடும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது; ஆனால் கிரேக்க மக்களில் பெரும்பாலானவர்கள் அவற்றைக் கடுமையாக எதிர்க்கின்றனர். சார்க்கோசி மற்றும் மேர்க்கெலினால் G20 உச்சிமாநாடு நடப்பதற்கு முன் பாரிசுக்கு அழைக்கப்பட்டு, யூரோப் பகுதியில் இருந்து அகற்றப்படுதல், கடன்கள் நிறுத்தப்படுதல் என்ற அச்சுறுத்தல் கொடுக்கப்பட்ட பின்னர், பாப்பாண்ட்ரூ பொது வாக்கெடுப்புத் திட்டத்தைக் கைவிட்டார்; ஆனால் அதற்குள் புதிய ஜனநாயகக் கட்சியானது ஐரோப்பிய ஒன்றிய-சர்வதேச நாணய நிதியின் திட்டத்திற்கு ஆதரவு கொடுப்பதாக ஒப்புக் கொண்டது.

சில ஐரோப்பியச் செய்தி ஊடகத் தகவல்களின்படி, வெனிசிலோஸிற்கு முக்கிய ஐரோப்பிய சக்திகளின் ஆதரவு உள்ளது; குறிப்பாக ஜேர்மனியிடம் இருந்து. இதற்குக் காரணம் அவர் பாப்பாண்ட்ரூ விடுத்த பொது வாக்கெடுப்பு அழைப்பை பயனற்றதாகச் செய்ததுதான். மேர்க்கெல் மற்றும் சார்க்கோசியுடனான சந்திப்பிற்குப்பின், வெனிசிலோஸ் வாக்கெடுப்பிற்கு எதிராக பகிரங்க நிலைப்பாட்டைக் கொண்டு, அதையொட்டி ஐரோப்பிய செய்தி ஊடகத்தால் பெரிதும் பாராட்டப்பட்டார்.

வெனிசிலோஸ் நீண்டகாலமாக பாப்பாண்ட்ரூவின் அரசியல் போட்டியாளர் ஆவார்; இது 2007ல் PASOK தலைமைக்கான போட்டியில் இருவரும் பங்கு பெற்ற நாளில் இருந்து உள்ளது. அப்பொழுதோ இக்கட்சி எதிர்க்கட்சியாக செயல்பட்டுவந்தது. இக்கோடையில் பாப்பாண்ட்ரூ இவரை நிதிமந்திரி என நியமிக்குமுன் அவர் பாதுகாப்பு மந்திரியாக இருந்தார். PASOK இன் அனைத்துப் பிரிவுகளின் ஆதரவை உறுதி செய்வதற்காக, ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு அனைத்தும் இசைவு கொடுப்பதற்காக, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இப்படி இராணுவத்துடனான தொடர்பு கடந்த வாரம் பாப்பாண்ட்ரூ அனைத்து உயர்மட்ட இராணுவ அதிகாரிகளையும் பதவியில் இருந்து அகற்றியதைத் தொடர்ந்து பல வினாக்களை எழுப்பியுள்ளது. அதே நேரத்தில்தான் அவர் பொது வாக்கெடுப்பு பற்றிய திட்டத்தையும் முன்வைத்தார். இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றின் தளபதிகள், மற்றும் கூட்டுப் படைகளின் தளபதிகளை பாப்பாண்ட்ரூ மாற்றினார்; அவர்கள் அனைவரும் முந்தைய புதிய ஜனநாயகக் கட்சியினால் நியமிக்கப்பட்டவர்கள், ஆனால் வெனிசிலோஸ் பாதுகாப்பு மந்திரியாக இருந்தபோது அவருடன் இணைந்து செயல்பட்டவர்கள்.

ஒரு முழு அரசாங்க நெருக்கடிக்கு நடுவே உயர்மட்டத் தளபதிகளை அகற்றியது எத்தகைய இராணுவ நடவடிக்கையையும் முன்கூட்டியே தடுக்கும் முயற்சி என்ற தோற்றத்தைத்தான் காட்டியது. ஐரோப்பிய செய்தி ஊடகத்திலும் இந்நிகழ்வு அவ்வாறே சித்தரிக்கப்பட்டது; ஆனால் அமெரிக்க செய்தி ஊடகம் அதைப்பற்றிக் கிட்டத்தட்ட மௌனமாக இருந்தது. இதுவே அமெரிக்க அரசாங்கம் ஒரு முக்கியமான, திரைக்குப்பின் பங்கை கிரேக்க நிகழ்வுகளில் கொண்டுள்ளது என்பதைக் குறிக்கிறது; அதையொட்டித்தான் அமெரிக்கப் பெருநிறுவனக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் செய்தி ஊடகம் அதை விசுவாசத்துடன் மூடி மறைத்திருக்க வேண்டும்.

ஏதென்ஸில் அரசியல் தந்திரோபாயங்களின் விளைவு எப்படி இருந்தாலும், கிரேக்கத் தொழிலாள வர்க்கம் ஏற்கனவே பெரும் விலையைக் கொடுத்துவிட்டது. IPS எனப்படும் இடைச் செய்தி ஊடக அமைப்பின் கருத்துப்படி, ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ள நடவடிக்கைகள் ஏதென்ஸில்ஒரு புதிய ஏழைக் கூட்டத்தை ஏற்படுத்தியுள்ளது; மக்களின் பரந்த அடுக்குகள் இதில் உள்ளனர்; முன்பு இம்மக்களுக்கு முறையான வேலை, போதுமான வாழ்க்கைத் தரங்கள் என இருந்தன; இப்பொழுது அவை வறிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர்.

நவம்பர் 1ம் திகதி வெளியிடப்பட்ட இந்த அறிக்கை கிரேக்கத் தலைநகரில் மிகப் பெரிய அளவிற்கு வீடிழந்தவர்கள் வெளிப்பட்டுள்ளதைக் காட்டுகிறது; இதே போல் உதவியளிக்கும் நிறுவனங்கள், மூன்றாம் உலகப் போர்ப்பகுதிகளில் நன்கு அறியப்பட்டுள்ள உணவு வழங்கும் மையங்கள் ஆகியவையும் வந்துள்ளன; ஆனால் பல தசாப்தங்களாக இவை ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லாமல் இருந்தன.

இதில் வீடற்றவர்களுக்கு மருத்துவ வசதியும் அடங்கும்; இது உலக மருத்துவர்கள் என்ற அமைப்பால் நடத்தப்படுகிறது; இதைத்தவிர ஒரு தன்னார்வ மருத்துவமனை பெரமாவில் நடத்தப்படுகிறது; இப்பகுதி ஏதென்ஸில் ஒரு தொழிலாள வர்க்கப் பகுதியாகும்; ஒரு காலத்தில் கடலில் மீன்பிடிப்போர், கப்பல் கட்டும் தொழிலாளிகள் ஆகியோர் வசித்து வந்தனர்; இப்பொழுது அவர்களில் பலருக்கும் வேலைகள் இல்லை.

உலக மருத்துவர்கள் அமைப்பில் இருக்கும் Nikitas Kanakis, IPS இடம் கூறினார்; “இரண்டு வாரங்களுக்கு முன்பு எங்கள் குழந்தைகள் மருத்துவரின் பரிசோதனைக்கு வந்த 40 குழந்தைகளில் 23 குழந்தைகள் குறைந்த ஊட்டச் சத்தைத்தான் கொண்டிருந்தன. சில ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் உணவு இல்லாதது ஒரு முக்கியச் சமூகப் பிரச்சினை என்று இருந்த கட்டத்தை இந்நாடு கடந்துவிட்டது என்று நினைத்தோம். இப்பொழுது அளிப்புக்கள் தேவை என்று பொது முறையீடு செய்கிறோம்; அதையொட்டி தேவையானவர்களுக்கு சில உணவுப் பொருட்கள் மற்றும் உடைகளை மருந்துகளுடன் நாங்கள் கொடுக்க முடியும்.”

வீடற்றவர்களுக்கான ஏதென்ஸ் மையம் 2011 தொடக்கத்தில் இருந்து உணவு கோருவோர் எண்ணிக்கை 30 சதவிகிதம் உயர்ந்துவிட்டது என்று தகவல் கொடுத்துள்ளது. தேவாலயங்கள் மற்ற அமைப்புகளுடன் சேர்ந்து, அறக்கட்டளை அமைப்புக்கள் நாள் ஒன்றிற்கு ஏதென்ஸில் மட்டும் 12,000 பேருக்கு உணவு அளிக்கின்றன.

போதை மருந்துகள் பயன்படுத்தப்படுதல், பாலுறவு நோய்கள், வறுமை மற்றும் பெரும் வேலையின்மையின் நேரடி விளைவுகளில் தோன்றும் பிற சமூகப் பிரச்சினைகள் கணிசமாக அதிகரித்துள்ளன. தற்கொலைகள் கிட்டத்தட்ட 40 சதவிகிதம் அதிகமாகி விட்டன என்று கிரேக்க சுகாதார மந்திரி தெரிவித்துள்ளார்.