சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா :சீனா

Obama seeks to build anti-China coalition at Bali summit

பாலி உச்சிமாநாட்டில் சீன - கூட்டணியை கட்டமைக்க ஒபாமா முற்படுகிறார்

By Alex Lantier
19 November 2011
use this version to print | Send feedback

பாலித் தீவில் வியாழனன்று தொடங்கிய மூன்று நாள் ASIAN உச்சிமாநாடு அமெரிக்க ஜனாதிபதி வருகை, மற்றும் கூடியுள்ள ஆசியான் நாடுகளை அவர் ஒரு சீன-எதிப்புக் கூட்டணியாக மாற்றும் முயற்சி என்னும் மேலாதிக்கத்திற்கு உட்பட்டிருந்தது. இந்திய மற்றும் பிலிப்பினோத் தலைவர்களை ஒபாமா சந்தித்தார்; தென்சீனக் கடலில் கூடுதலான அமெரிக்க செல்வாக்கிற்கு அழுத்தம் கொடுத்தார்; பின்னர் இப்பிராந்தியத்தில் நீண்ட காலமாக சீனாவின் நட்பு நாடாக இருக்கும் மியன்மாருடன் நெருக்கமான அமெரிக்க உறவுகளையும் அதிகரித்தார்.

ஹவாய் மற்றும் ஆஸ்திரேலியாவில் நிறுத்தங்களுடன் ஒபாமா மேற்கொண்ட பத்து நாள் ஆசிய-பசிபிக் பயணத்தின் கடைசிக் கட்டமாகும் இது. ஹவாயில் அமெரிக்காவை மையமாகக் கொண்ட தடையற்ற வர்த்தக வலையமான, பசிபிக் கடந்த பங்காளித்துவத்திற்கு (TPP) ஊக்கம் கொடுக்கும் திட்டங்களை ஒபாமா அறிவித்தார்; அது இப்பொழுது கனடா, மெக்சிக்கோ, ஒருவேளை ஜப்பானையும் உள்ளடங்கியதாக விரிவாக்கப்படுகிறது. சீனாவிற்கு இதில் சேர்வதற்கு அழைப்பு கொடுக்கப்படவில்லை. ஆஸ்திரேலியாவில் அவர் இன்னும் கூடுதலான வகையில் ஆஸ்திரேலிய இராணுவத் தளங்களை அமெரிக்கா பயன்படுத்துவதற்கும், டார்வினை ஒரு முக்கிய அமெரிக்க நிலைகொள்ளல் தளமாக வளர்ப்பதற்குமான திட்டங்களை அறிவித்தார் இந்த வடக்கு ஆஸ்திரேலிய நகரம் இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களின் ஒரு முக்கிய வணிகப் பாதைகளில் உள்ளது.

சைனா டெய்லி என்னும் நாளேடு இந்தோனேசிய ஜனாதிபதி சுசிலோ பாம்பாங் யுத்யோனோ உச்சிமாநாட்டின் குவிப்பை இராணுவப் பிரச்சினைகளில் காட்டும் முயற்சிகளை, தென் சீனக் கடல் உட்பட, எதிர்த்தார் என்று மேற்கோளிட்டுள்ளது: “தென்கிழக்கு ஆசிய நாடுகளின் அமைப்பு என்னும் ASEAN உச்சிமாநாட்டில் விரிவான அரசியல், பாதுகாப்புப் பிரச்சினைகளை விவாதிப்பதற்கு ஆதரவாக இல்லை.” ஆசியான் சார்பாக இந்தோனேசியா இந்த மூன்று நாட்கள் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது; இன்று கிழக்கு ஆசிய உச்சிமாநாடு கூட்டப்படுவதுடன் இக்கூட்டங்கள் உச்சக்கட்டத்தை அடைகின்றன.

தென் சீனக் கடலில் போட்டி உரிமைகொண்டாடல்கள் பற்றிய பிரச்சினைகள் இருதலைப்பட்சமாகத் தீர்க்கப்பட வேண்டும் என்று சீனா வலியுறுத்துவதுடன், பிராந்தியப் பிரச்சினைகளில் அமெரிக்கா குறுக்கீடு செய்வதையும் வலுவாக எதிர்த்துள்ளது. சீனாவிற்கும் அதன் தென்கிழக்கு அண்டை ஆசிய நாடுகளுக்கு இடையே ஒரு பிளைவை ஏற்படுத்தும் வழிவகையாக தென் சீனக்கடல் பிரச்சினையை ஒபாமா நிர்வாகம் எழுப்ப முற்படுகிறது.

இந்தியப் பிரதம மந்திரி மன்மோகன் சிங்கையும் ஒபாமா சந்தித்து இந்தியாவின் அணுச்சக்தித் தொழில்துறையில் அதிக அமெரிக்க முதலீட்டிற்கு அழுத்தம் கொடுக்க முற்பட்டுள்ளார். 2005ம் ஆண்டு அமெரிக்கா இந்தியாவுடன் ஒரு விவாதத்திற்குரிய அணுச் சக்தி உடன்பாட்டில் கையெழுத்திட்டு, இந்தியாவின் அணுச்சத்தி திட்டத்திற்கு உதவுவதாகவும், சீனாவிற்கு எதிர்ப் பலம் என்னும் முறையில் இப்பிராந்தியத்தில் இந்தியாவைக் கட்டமைக்கவும் முற்படுகிறது; இந்தியாவோ சீனாவுடன் 1962ல் ஒரு எல்லைப் போரை நடத்தியிருந்தது.

அமெரிக்க அணுச்சக்தி நிறுவனங்கள் இந்திய அணுச்சக்தித் தொழில் துறையில் முதலீடு செய்ய மறுத்துள்ளன; இதற்கு முக்கிய காரணம் அவைகள் அந்த நிலையங்களில் ஏற்படும் விபத்துக்களுக்குப் பொறுப்பு ஏற்க மறுப்பதுதான். GE Hitachi Nuclear Energy மற்றும் வாஷிங்டன் எலெக்ட்ரிக் இரண்டும் இந்திய சட்டத்தில் அவைகள் அணுச் சக்தி விபத்தினால் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று இருக்கும் விதிகளை எதிர்க்கின்றன. சமீபத்தில் புது டெல்லி வெளிநாட்டு விநியோகிப்பாளர்களின் பொறுப்பை 300 மில்லியன் டாலர்கள் என்று வரம்பு கட்டியுள்ளது; மேலும் இழப்பீட்டுக் கோரிக்கைகளுக்கு கால வரம்புகளையும் நிர்ணயித்துள்ளது; அமெரிக்க அதிகாரிகள் இப்புதிய சட்டங்களை ஆராய உள்ளதாகக் கூறியுள்ளனர்.

இந்திய-அமெரிக்க அணுச்சக்தி உடன்பாடு, அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆப்கானிஸ்தானில் நடத்தும் போரில் முக்கிய உதவியை அளிக்கும் நாடான பாக்கிஸ்தானை சீற்றத்திற்கு உட்படுத்தியுள்ளது; மேலும் பாக்கிஸ்தான் இந்தியாவுடன் நீடித்த, கடுமையான விரோதப் போக்கைக் கொண்டுள்ள சீனாவுடன் கூட்டுக் கொண்டுள்ளது.

சீனாவுடன் தென் சீனக் கடலில், சீனாவின் தெற்கு கடலோரப் பகுதியையொட்டி, எண்ணெய் தோண்டுதல் குறித்த பூசலில் இந்தியா ஆழ்ந்துள்ளது. மன்மோகன் சிங், சீனப் பிரதமர் வென் ஜியாகோவிடம் இந்தத் தோண்டுதல்முற்றிலும் ஒரு வணிகச் செயல் என்றும் பூசல்கள்சர்வதேச சட்டங்களின்படி தீர்க்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆனால் தென் சீனக் கடலையொட்டி சீனாவிற்கு கொடுக்கப்படும் அழுத்தங்களுக்கு அமெரிக்கா முன்னிலை கொண்டுள்ளது; இப்பகுதியில் எண்ணெய், மற்றும் எரிவாயு வளம் உள்ளது, மேலும் மத்திய கிழக்கையும் இந்தியப் பெருங்கடலையும் கிழக்கு ஆசியா, பசிபிக் ஆகியவற்றுடன் இணைக்கும் கடல் பாதைகளும் உள்ளன. சீனா பெரும்பாலான தென் சீனக் கடல் பகுதியைத் தன் நிலப்பகுதியுடன் கூடிய நீர்நிலை என்ற உரிமையை வலியுறுத்தி வருகிறது.

பிலிப்பினோ ஜனாதிபதி மூன்றாம் பெனிக்னோ அக்வினோவையும் ஓபாமா சந்தித்தார்; தென் சீனக்கடலில் ஸ்ப்ராட்லி தீவுகள் மீது பிலிப்பைன்ஸ் சீனாவுடன் கொண்டுள்ள போட்டி உரிமைகொண்டாடல்களுக்கும் பகிரங்கமாக ஆதரவு கொடுத்துள்ளார். பிலிப்பைன்ஸுடனான அமெரிக்க உறவுகளை, “நம்மிடைய 60 ஆண்டுகாலக் கூட்டு உள்ளது, அது பாதுகாப்பு என வரும்போது ஒருவரையொருவர் நாடுவோம் என உறுதியளித்துள்ளது என்று ஒபாமா பாராட்டியுள்ளார்.

வியாழனன்று அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஹில்லாரி கிளின்டன் வாஷிங்டனானது பிலிப்பைன்ஸிற்கு ஒரு இரண்டாம் கடலோரப் பாதுகாப்பை, அதன் கடற்படை வலிமையை அதிகப்படுத்தும் வகையில் கொடுக்கும் என்று அறிவித்தார்.

தென் சீனக் கடல் பகுதியில் சீனாவுடன் மோதலிலுள்ள மற்றொரு நாடான வியட்நாமுடனும் அமெரிக்கா இராணுவ மற்றும் அரசியல் பிணைப்புக்களைக் கட்டமைக்கிறது. அமெரிக்காவும் வியட்நாமும் ஜூலை மாதம் கூட்டு கடற்படைப் பயிற்சிகளை நடத்தின; அமெரிக்க கடற்படைக் கப்பல் வியட்நாமின் கார் ரன் பே கடற்படைத் தளத்திற்கு ஆகஸ்ட் மாதம் சென்றிந்தது; அந்நாட்டில் இருந்து அமெரிக்கப் படைகள் வியட்நாம் போருக்குப் பின் 1975ல் பின்வாங்கியதை அடுத்து இது முதல் தடவையாக நடந்துள்ளது.

தென்கிழக்கு ஆசிய முக்கிய பெருநிலப்பகுதியில் அமெரிக்க செல்வாக்கை அதிகப்படுத்தும் ஒரு பரந்த தாக்குதல்வகையில் ஒரு பகுதியாகும் இது. அதுவும் குறிப்பாக மியன்மாரிலுள்ள (பர்மா என்றும் அழைக்கப்படுவது) இராணுவ ஆட்சிக்குழுவிடம் ஈடுபாடு காட்ட முற்படும், அதைச் சீனாவின் செல்வாக்கில் இருந்து வெளியே கொண்டுவருதல் என்னும் அமெரிக்கப் பிரச்சாரத்தின் ஒரு பகுதி ஆகும்; இதுஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்தல் என்னும் பாசாங்குத்தன, போலி மறைப்பின் கீழ் நடைபெறுகிறது.

இந்த ஆண்டு இராணுவ ஆட்சிக்குழு ஜனநாயகத்திற்கான தேசியக் குழுவின், உத்தியோகபூர்வ எதிர்க்கட்சித் தலைவர் சான் சுயு கீயை பாராளுமன்ற இடைத் தேர்தல்களில் நிற்பதற்கு அனுமதித்து, பல அரசியல் கைதிகளையும் விடுவித்துள்ளது. பெய்ஜிங்கிற்கு ஒரு அவமானகரமான அடி என்னும் வகையில் காணப்படும் உயர்நிலை சீன அணைக் கட்டும் திட்டத்தையும் அது இரத்து செய்துள்ளது.

சுயு கீ உடன் ஒபாமா தொலைபேசித் தொடர்பு கொண்டு, அமெரிக்க-மியன்மார் உறவுகளைப் பற்றி விவாதித்தார். மியன்மாரில்முற்போக்கு ஒளிக்குறிப்புக்கள் உள்ளன என்று கூறிய அவர், “சீர்திருத்தப் பாதையில் செல்வதற்கு பர்மா தோல்வியைக் கண்டால், அது தொடர்ந்து பொருளாதாரத் தடைகளையும், தனிமைப்படுத்தப்படுதலையும்தான் காணும்.. ஆனால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தினால், சமரசம் ஏற்பட வழியுண்டு என்றும் சேர்த்துக் கொண்டார்.

டிசம்பர் 1ம் திகதி கிளின்டன் மியன்மாருக்கு வருகை புரிவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளதுஇது 1962ல் மியன்மாரில் இராணுவ ஆட்சி மாற்றம் ஏற்பட்டதிற்குப் பின் ஒரு அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் வருவது முதல் தடவையாகும்.

சீனா, அமெரிக்கா இடையே நெருக்கமான பொருளாதார இடைத்தொடர்பு நம்பகத்தன்மை இருந்தபோதிலுதும், சீனாவுடனான அமெரிக்கப் போட்டியின் தீவிரம் இரு நாடுகளிலும் உலகப் பொருளாதார நெருக்கடியினால் மோசமாகும் நிலைமையின் பாதிப்பில் இருந்து வெளிப்படுகிறது. சீனாவின் ஏற்றுமதி உந்துதல் கொண்டுள்ள பொருளாதாரத்தில் அமெரிக்கா மிகப் பெரிய சந்தையாகும். பணப்பற்றாக்குறையுள்ள அமெரிக்க தொழிலாளர்களுக்கு, மலிவான பொருட்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கின்ற அடிப்படையில் சீனா தொழில்துறை பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது; மேலும் டிரில்லியன் கணக்கான டாலர்களை அமெரிக்காவிற்குக் கடனாகக் கொடுத்துள்ளது. ஆனால் அமெரிக்க பொருளாதாரத்தின் பரந்த சரிவைப் பிரதிபலிக்கும் 2008 ல் வெடித்துள்ள நிதிய நெருக்கடி இந்த உறவுகளில் அடிப்படை முறிவு வந்துள்ளதைத்தான் அடையாளம் காட்டுகிறது.

ஒபாமாவின் வருகை தெளிவாக்கியுள்ளதுபோல், வாஷிங்டனின் விடையிறுப்பு அதன் இராணுவ வலிமையை நம்பி சீனாவை வழிக்குக் கொண்டுவருவது ஆகும்; சீனாவின் தென் எல்லைகள் முழுவதிலும் இருக்கும் நாடுகளுடன் கூட்டு என்ற அச்சுறுத்தலைக் கொடுப்பது ஆகும்; இதில் தைவானும், கிழக்கே ஜப்பானும் அடங்கும். வியாழனன்று ஒபாமா அறிவித்தார்: “அமெரிக்காவும் ஒரு பசிபிக் சக்திதான், இங்கு நீடித்திருப்போம்….அமெரிக்க இராணுவச் செலவுக் குறைப்புகள் ஆசிய பசிபிக் இழப்பில் ஏற்படாது, மீண்டும் கூறுகிறேன், ஏற்படாது என்றார்.

அமெரிக்காஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு ஆசியாவில் குறுக்கிடுகிறது என்னும் பொய் சமீபத்திய குற்றம் சார்ந்த ஏகாதிபத்தியப் போர்கள் ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா ஆகியவற்றில் நடந்ததில் அம்பலப்படுகின்றன என்பது மட்டுமின்றி, ஒரு முக்கிய ஏகாதிபத்திய சக்தி என்னும் அதன் நீண்ட வரலாற்றிலும், ஆசியாவிலேயே சமூகப் பிற்போக்குத்தனத்தை காத்துள்ளது என்பதிலும் அம்பலமாகிறது.

இரண்டாம் உலகப் போருக்குப்பின், வாஷிங்டன் தென்கொரியச் சர்வாதிகார இராணுவ ஆட்சிக்கு ஆதரவு கொடுத்து, அமெரிக்க ஆதரவு பெற்ற சர்வாதிகாரி சியாங் கேய்-ஷேக்கிற்கு எதிரான 1949 சீனப் புரட்சியை நிறுத்துவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் செயல்பட்டது, கொரியப் போரை நடத்தியது. அது பிரான்சிற்கு ஆதரவு கொடுத்து, தொடக்கத்தில் இந்தோ-சீனா மற்றும் இந்தோனேசியாவில் நெதர்லாந்திற்கும் காலனித்துவ போர்களில் ஆதரவைக் கொடுத்தது. இதன்பின் அது தன்னுடைய சொந்த மிருகத்தனமான போரை வியட்நாமில் 1960, 1970களில் நடத்தியது; இந்தோனேசிய சர்வாதிகாரி சுகர்ட்டோ 1965ல் அரை மில்லியன் இந்தோனேசியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளர்களைப் படுகொலை செய்ததற்கு ஆதரவையும் கொடுத்தது.

குறைவூதிய ஆசியத் தொழிலாளார்களை சுரண்டுதலைத் தளமாகக் கொண்டு அதில் இருந்து வெளிப்பட்டுள்ள பெரும் வளஆதாரங்கள் மற்றும் ஆசியாவை உலக முதலாளித்துவப் பொருளாதாரத்துடன் ஒன்றிணைத்தல் என்பது இப்பொழுது அமெரிக்காவின் இலக்குகளாக உள்ளன; இவை ஜனநாயகத்திற்கான உந்துதல் அல்ல, அமெரிக்காவில் ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்காகத்தான். அமெரிக்க பசிபிக் இராணுவக் கட்டளைத் தலைவர் அட்மைரல் ரோபர்ட் வில்லர்ட் குறிப்பிட்டுள்ளபடி, 1.2 ட்ரில்லியன் டாலர்கள் மதிப்புள்ள அமெரிக்க வணிகம், தென் சீனக் கடல் வழியே கடப்பது, “வாஷிங்டனுக்கு இப்பிராந்தியத்தில் ஒரு முக்கிய நலனைக் கொடுக்கிறது, அமெரிக்காவிற்கு ஒரு தேசிய நலனைக் கொடுக்கிறது, அதுவும் பெரும் வணிக வாய்ப்புக்களை உடைய ஒரு பகுதியில்.”

சீனாவுடனான அமெரிக்க இராணுவ அழுத்தங்கள் அதிகரித்துள்ளது முற்றிலும் பொறுப்பற்ற தன்மை உடையவை, தூண்டுதல் தன்மை உடையவை. ஆசியா முழுவதும் பிராந்திய அழுத்தங்களை அதிகரிக்கிறது; இந்திய-பாக்கிஸ்தானிய மோதல், தென் கிழக்கு ஆசியாவிற்குள் ஏராளமான எல்லைப் பூசல்கள், மூலோபாய கடல்பாதைகளில் போட்டிகள் என. ஒவ்வொரு கட்டத்திலும் இது இந்த உள்ளூர்ப்பூசல்கள் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே பெரும் மோதலாகும் ஆபத்தைக் கொண்டுள்ளது; அது ஆசியா மற்றும் உலகம் முழுவதையும் காட்டுத்தீக்குள் ஆழ்த்திவிடும் அபாயத்தைக் கொண்டுள்ளது.