சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Beijing considers response to US diplomatic offensive

அமெரிக்க இராஜதந்திரமுறைத் தாக்குதலுக்கு பெய்ஜிங் விடையிறுப்பை ஆலோசிக்கிறது

By John Chan
25 November 2011
use this version to print | Send feedback

கடந்த வாரம் அவர் பயணித்தின்போது வெளிப்படுத்தப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஆசியாவில் நடத்திய தூதரக முறைத் தாக்குதல், சீன ஆளும் உயரடுக்கை அதன் ஆசியாவிலுள்ள பொருளாதார, மூலோபாய நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யும் கட்டாயத்திற்கு உட்படுத்தியுள்ளது. பாலியின் கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டில் நடந்தது குறிப்பாக சீனாவின் கடந்த ஒரு தசாப்த இராஜதந்திர முயற்சிகளுக்கு முக்கிய அடியை பிரதிபலித்தது. இக்காலக்கட்டத்தில் அது மிகப் பெரிய நிதியை கடன்கள், உதவிகள் என்று ஆசிய, ஆபிரிக்க மற்றும் பிற பிராந்தியத்தில் உள்ளநாடுகளுக்குக் கொடுத்துள்ளது.

ஹோனலூலுவில் நடைபெற்ற APEC  உச்சமாநாட்டில், ஒபாமா TPP என்படும் அட்லான்டிக் கடந்த பங்காளித்துவத்தை நிறுவுவதற்குப் பரந்த ஆதரவைப் பெற்றது; இது ஒரு தடையற்ற வணிகப் பகுதியை நிறுவி, சீனாவை அமெரிக்க வணிக விதிகளை ஏற்கக் கட்டாயப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கான்பெர்ராவில் அவர் வடக்கு ஆஸ்திரேலியாவில் அமெரிக்கத் துருப்புக்களை நிலைநிறுத்துவதற்கான உடன்படிக்கைகளை பெற்றார். பாலி உச்சிமாநாட்டில், சீனப் பிரதமர் வென் ஜியாபோ தனிமைப்படுத்தப்பட்டார், ஒபாமவின் வலியுறுத்தலினால் பூசலுக்கு உட்பட்ட தென் சீனக் கடல் நீர்நிலைகள் பற்றி விவாதத்தைத் தடுக்க முடியவில்லை.

ASEAN என்னும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் சீனாவின் வணிகம் 2010ல் $292 பில்லியனை அடைந்தது என்றாலும்கூட, இது அமெரிக்க-ஆசியான் வணிகமான $178 பில்லியனை  விட அதிகம் என்றாலும்கூட, பெய்ஜிங்கிற்கு இது ஒரு மூக்குடைப்பு ஆகும். வென் கணக்கீட்டின்படி, சீன-ஆசியான் வணிகம் இந்த ஆண்டு $400 பில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாலி நிகழ்வுகள் பெய்ஜிங்கின் முன்கருத்தான அதன் அரசியல் செல்வாக்கு அதன் வளர்ச்சியுறும் பொருளாதார உறவுகளினால் விரிவடையும் என்பதை வினாவிற்கு உட்படுத்தியுள்ளது.

இதில் மிகவும் குறிப்பிட்டத்தக்க விவகாரம் பிலிப்பைன்ஸ் பற்றியது ஆகும் ஆகஸ்ட் மாதம் ஜனாதிபதி மூன்றாம் பெனிக்நோ அக்வினோ சீனாவிற்கு வருகை புரிந்து பில்லியன் கணக்கான டாலர்கள் முதலீட்டிற்கான ஒப்பந்தங்களைப் பெற்றார்; அவற்றில் தொழில்துறை ஆலைகளும் இருந்தன. ஆனால் இதே அக்வினோ இப்பொழுது அமெரிக்காவுடன் நெருக்கமான இராணுவ உறவுகளை வலுப்படுத்திக் கொண்டு, தென் சீனக் கடலில் சீனாவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு வழிநடத்துகிறார். மேலை நிறுவனங்கள் பூசலுக்கு உட்பட்ட கடற்பகுதிகளில் எரிசக்தி வளங்களை ஆராய்வதற்காக அழைத்துள்ளார்.

ஜப்பான் உட்பட, TPP க்கு பாலியில் கொடுக்கப்பட்ட ஆதரவு, ஆசியன்+ தளத்தை --அதாவது சீனா ஜப்பான் மற்றும் தென்கொரியாவுடன் இணைந்து-- கொண்ட ஒரு வணிக முகாமை ஏற்படுத்தும் பெய்ஜிங்கின் திட்டங்களுக்கு ஒரு பின்னடைவு ஆகும். திங்கள் அன்று People's Daily ல் வெளிவந்த கட்டுரை பெய்ஜிங்கின் கோபத்தை வெளிப்படுத்திக் காட்டியது: "ஆசிய நாடுகள் இன்னும் நெருக்கமாக ஒத்துழைக்காவிட்டால், மேலைப் பொருளாதாரத்தில் அவை கொண்டுள்ள அதிக நம்பகத்தன்மையைக் குறைக்காவிட்டால், எப்பொழுதாவது ஒரு நிதியப் புயல் வரும்போது ஆசியா "வெள்ளப் பெருக்கு ஓடும் பகுதியாகிவிடும்" என்றது.

பாலியில் பெய்ஜிங் அடைந்த சங்கடம், தவிர்க்க முடியாமல் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை (CPP) அதன் சீனாவின் "சமாதானமான எழுச்சி" (peaceful rise) கோட்பாட்டை மறு பரிசீலனை செய்யக் கட்டாயப்படுத்தும்; இக்கோட்பாடு ஜனாதிபதி ஹு ஜின்டாவோவை 2002-03 ல் பதவியில் இருத்தியதுடன் தொடர்புடையது. சீனா கடந்த தசாப்தத்தில் "அமைதியான முறையில் எழுச்சி" பெற்றது, முன்னாள் புஷ் நிர்வாகத்தின் செயல்களால்தான் முடிந்தது; அது தொடக்கத்தில் சீனா மீது கடினப் போக்கைக் கொண்டது, ஆப்கானிஸ்தானத்திலும் ஈராக்கிலும் "பயங்கரவாதப் போருக்கு" மாறியது. அதே நேரத்தில் வாஷிங்டன் இரு போர்களிலும் ஆழ்ந்ததால், சீனா ஆசியா இன்னும் சர்வதேச அளவில் தன்னுடைய பொருளாதார உறவுகளையும் இராஜதந்திர செல்வாக்கையும் விரிவாக்கிக் கொள்ள முடிந்தது.

ஆனால் இந்த "அமைதியான எழுச்சிக்" கோட்பாடு கூட பெய்ஜிங்கில் பெருகிய குறைகூறலை எதிர்கொண்டது; ஏனெனில் ஒவ்வொரு பிர்ச்சினையிலும் மத்திய கிழக்கு தொடங்கி "முக்கியமானவற்றில்" ஒபாமா சீனாவை எதிர்கொள்ள முற்பட்டார். சீன நாணயம் குறைமதிப்பில் இருப்பதாகக் கூறப்படுவதில் இருந்து, தென் சீனக் கடலில் "தடையற்ற கப்பல் போக்குவரத்து" தடுப்பிற்கு உட்படுகிறது என்பது வரை.

இந்த ஆண்டு லிபியாவின்மீது நேட்டோக் குண்டுத்தாக்குதலின்போது விவாதம் தொடங்கியது, அது பல பில்லியன் டாலர்கள் சீன முதலீட்டை இடருக்கு உட்படுத்திவிட்டது. வட ஆபிரிக்காவில் தன் செயல்களை நடத்தும்போதே, ஒபாமா நிர்வாகம் லிபியப் போரை சீனாவிற்கு ஒரு படிப்பினை கொடுக்கப் பயன்படுத்தினார்--அதாவது அமெரிக்க இராணுவ வலிமை, சீனப் பொருளாதார சக்தியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்த ஆபிரிக்காவிலும் உலகின் பிற இடங்களிலும் விரைவில் பயன்படுத்தப்படலாம் என்பதை. சீன ஆளும் உயரடுக்கின் பிரிவுகள், அமெரிக்காவை எதிர்கொள்ள சீன இராணுவ வலிமை விரிவாக்கப்படுவதற்கு அழுத்தம் கொடுக்கின்றன.

பெய்ஜிங்கில் "போர்" அல்லது "சமாதானம்" குறித்த பிளவுகள் மீண்டும் தென் சீனக் கடல் குறித்து வெளிப்பட்டுள்ளன. இப்பகுதி, சீனாவில் குறிப்பிடத்தக்க பொருளாதார, மூலோபாய முக்கியத்துவ பகுதிகளை ஒட்டியுள்ளது.

இந்த "சமாதான" பிரிவின் நிலைப்பாடு ஷாங்காய் சர்வதேசப் பிரச்சினைகள் ஆய்வு மையத்தின் தலைவரான வு ஜியாங்மின் ஜூன் மாதம் தெரிவித்த கருத்து ஒன்றினால் தெளிவாக்கப்படுகிறது. சீன அரசாங்கம் பூசலுக்குட்பட்ட நீர்நிலைகளின்மீது காட்டும் "நிதானப் போக்கு", "தன்னிம்பிக்கையின் வெளிப்பாடு" என்று அதில் கூறப்பட்டுள்ளது. நிலப் பூசல்களைத் தீர்க்க வலிமை பயன்படுத்த வேண்டும் என்னும் குரல்களை அவர் எதிர்த்தார்; சீனாவிற்கும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இடைய "அதிகப் பொது நலன்கள்"தான் பூசல்களைவிட விரைவாக வணிகப் பெருக்கம் உள்ள இப்பிராந்தியத்தில் உள்ளது என்று அவர் வாதிட்டுள்ளார். மேலும் சீனா இன்னும் 30 முதல் 50 ஆண்டுகளுக்கு அமைதியான சூழலைக் காக்க வேண்டும், அதன்பின்தான் அது முழு நவீன சக்தியாக வெளிப்பட முடியும் என்றார்.

சீன முதலாளித்துவ உயரடுக்கு மற்றும் ஆளும் அதிகாரத்துவம் ஆகியவற்றின் கருத்துக்களைத்தான் வு வெளிப்படுத்தினார்; குறிப்பாக இவற்றின் நலன்கள், சீனா முக்கிய உற்பத்தித்துறை நாடாக இப்பிராந்தியத்தில் இருப்பதைப் பொறுத்து உள்ளது என்ற கருத்தை உடையவர்களிடம் காணப்படுகிறது; ஏனெனில், ஆசியா முழுவதிலும் இருந்து அது மூலப்பொருட்களையும் மூலதனப் பொருட்களையும் வாங்கும் நிலையில் உள்ளது. இக்கூறுபாடுகள் அமெரிக்காவுடன் ஒரு வெளிப்படையான மோதல் என்பது சீனாவிற்கு கடுமையான பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும் என்று அஞ்சுகின்றன.

இதன் எதிர்முகாமில் சீன எரிசக்தி நிதிக்குழுவின் மூலோபாயப் பகுப்பாய்வாளரான லாக் டாவோ உள்ளார்; இவர் பிலிப்பைன்ஸுக்கு சீனா பாடம் புகட்ட வேண்டும், எப்படி 2008ல் அமெரிக்கா ஜோர்ஜியாவிற்கு ஆதரவு கொடுத்ததோ, அந்த உதாரணத்தைப் பின் பற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். "ரஷ்யா 2008ல் காஸ்பியக் கடல் பிரச்சினைகளில் எடுத்த உறுதியான நடவடிக்கை பெரிய நாடுகளின் நடவடிக்கைகள் அதிரச்சி அலைகளை சிறிது காலத்திற்கு ஏற்படுத்தினாலும், அப்பிராந்தியத்திற்கு நீண்ட கால அமைதியைக் கொடுக்கும் என்பதை நிரூபித்தது;" என்று அவர் எழுதியுள்ளார்.

சீனாவின் வணிக மற்றும் புவி மூலோபாய நலன்கள் ஆக்கிரோஷமாக காக்கப்பட வேண்டும் என்று வாதிடுபவர்கள், நாட்டின் முதலாளித்துவ உயரடுக்கு, அமெரிக்கா இரண்டாம் உலகப் போருக்குப் பின் கொண்ட எழுச்சிமிக்க மேலாதிக்கம், தற்பொழுதைய ஆசிய பசிபிக் ஒழுங்கில் சீனாவின் அந்தஸ்தற்ற நிலை உள்ளது என்பது குறித்துக் கொண்டுள்ள ஏமாற்றத்திகைப்பைத்தான் பிரதிபலிக்கின்றனர். தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் இராணுவ உறவுகளை வலிமைப்படுத்தும் அமெரிக்க நடவடிக்கைகள், சீனா தன்னுடைய எரிசக்தி மற்றும் மூலப் பொருட்களை மத்திய கிழக்கு, ஆபிரிக்காவில் இருந்து இறக்குமதிமூலம் பெறும் கடல் பாதைகளின் மீதான கட்டுப்பாட்டை அதிகரிக்கும் என்பதை அவர்கள் நன்கு அறிவர்.

சீனாவின் World News Journal நவம்பர் 22 அன்று வந்த கட்டுரை ஒன்று குறிப்பிடுகிறது: "தென் சீனக் கடலில் அமெரிக்க இராணுவத்தின் குறுக்கீடு நடப்பதின் நோக்கம் தங்கப் பாதையை  அமெரிக்கா கட்டுப்படுத்துதலை உறுதி செய்வதற்குத்தான். சீனாவைப் பொறுத்தவரை, மலாக்கா ஜலசந்தி அதன் உயிர்கொடுக்கும் எண்ணெய்க் கப்பல் வருகைகளுக்கு முக்கியமாகும். டார்வின் மலாக்கா ஜலசந்தி மற்றும் இந்தியப் பெருங்கடலில் இருக்கும் சர்வதேச கப்பல் பாதைகள் இரண்டிற்கும் அருகே உள்ளது. இங்கு அமெரிக்கப் படைகள் நிலைநிறுத்தப்படுதல் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி சீனாவின் எரிசக்தி கப்பல் பாதைகளிலுள்ள நெரிக்கும் இடங்களின்மீது இடுக்கிப்பிடி கொள்வதற்குத்தான்."

ஆசியாவில் ஒபாமா அழுத்தம் கொடுப்பது பெய்ஜிங்கில் உள்ள "போர்" பிரிவிற்கு வலுக்கொடுக்கிறது. ஒரு முக்கிய தேசியவாதியும் மூலோபாயப் பகுப்பாய்வாளருமான சாங் ஜியாவோஜுன் ஆஸ்திரேலியா சீனாவுடன் என்பதற்குப் பதிலாக அமெரிக்காவுடன் சேர்ந்துள்ளது என்பதற்காக பெய்ஜிங் ஆஸ்திரேலியாவை மூலோபாய அணுசக்தி ஏவுகணைகளால் தாக்க வேண்டும் என்று அறிவித்துள்ளார். மற்றொரு முக்கிய இராணுவப் பகுப்பாய்வாளர், மாடிங்ஷெங், ஹாங்காங் தளமுடைய தொலைக்காட்சி நிலையம் பினிக்ஸில் ஆஸ்திரேலியா மற்றும் சீனாவிற்கும் இடையே ஏற்றம் கொண்ட வணிகம் உள்ள நிலையில், "ஆஸ்திரேலியாவுடன் போர் என்பதைப் புறத்தே ஒதுக்கி வைக்க வேண்டும்" என்று வாதிட்டுள்ளார். ஆனால் "ஆஸ்திரேலியா கடற்படைக்கான துறைமுகங்களை அமெரிக்காவிற்குத் தளமாகத் கொடுக்கும் பங்கைக் கொண்டிருக்கும்போது, அது இலக்கு வைக்க வேண்டிய கூடு ஆகிறது”.

பிலிப்பைன்ஸைப் பொறுத்தவரை, அரசாங்கத்தின் பருந்துப் பார்வை கொண்ட Global Time ல் வந்துள்ள தலையங்கம் அந்நாடு பொருளாதார முறையில் தண்டிக்கப்ட வேண்டும், "அப்பொழுதுதான் வேறு ஒரு நாடு பிலிப்பைன்ஸில் இருந்து ஒரு பாடத்தை எடுத்துக் கொள்ளுவது தவிர்க்கப்பட முடியும்" என்று கூறியுள்ளது. பிலிப்பைன்ஸுடன் சீன முதலீட்டு உடன்பாடுகள் ஒத்திவைக்கப்பட வேண்டும், அந்நாட்டில் இருந்து இறக்குமதிகள் குறைக்கப்பட வேண்டும், பயணப் புறக்கணிப்புக் கூட சுமத்தப்பட வேண்டும் என்று அது வாதிட்டுள்ளது. தேவையானால் பிலிப்பைன்ஸிற்கு எதிராக ஒரு போர் கூட நடத்தலாம், அது அண்டை நாடுகளை "அதிர்விற்கு உட்படுத்தும்" என்று செய்தித்தாள் அழைப்பு விடுத்துள்ளது.

சீன ஆளும் வட்டங்களில் நடைபெறும் இத்தகைய விவாதங்கள் ஒபாமா நிர்வாகம் ஆசியாவில் அமெரிக்க மேலாதிக்கத்தை மீண்டும் உறுதி செய்வதில் உள்ள பொறுப்பற்ற தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இது அப்பிராந்தியத்திலும் உலகம் முழுவதும் ஒரு ஆபத்தான போக்கை, மோதல், போர் ஆகியவற்றை நோக்கி செலுத்துகிறது.