சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French parliament approves austerity measures

பிரெஞ்சு நாடாளுமன்றம் சிக்கன முறைகளை அங்கீகரிக்கிறது

By Kumaran Ira
21 November 2011

use this version to print | Send feedback

நவம்பர் 16இல், ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் வலதுசாரி அரசாங்கத்தால் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஒரு புதிய சுற்று சிக்கன முறைகளை உள்ளடக்கியிருந்த, 2012 வரவு-செலவுத் திட்டத்தை பிரான்சின் கீழ் சபை அங்கீகரித்தது. கடன் மதிப்பு பட்டியலில் பிரான்சின் AAA மதிப்பை தக்கவைக்க, 2013வாக்கில் வரவு-செலவு திட்டத்தின் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதமாக குறைப்பதே அதன் நோக்கமாகும்.

வரவு-செலவுத் திட்டம் 315க்கு 198 என்ற வாக்குகளோடு கீழ்சபையில் அங்கீகரிக்கப்பட்டது. முதலாளித்துவ "இடது" எதிர்ப்பான சோசலிஸ்ட் கட்சியின் (PS) கட்டுப்பாட்டிலிருக்கும் செனட்டால் தற்போது அது ஆய்விற்குட்படுத்தப்பட்டு வருகிறது.

2012இல் ஜனாதிபதி தேர்தல் வரவிருப்பதால் இந்த வரவு-செலவு திட்டமே இறுதியாக இருக்கக்கூடும். வரவிருக்கும் தேர்தலில் சார்க்கோசி PS கட்சி வேட்பாளர் பிரான்சுவா ஹோலான்டை எதிர்கொள்ளவிருக்கிறார். ஹோலான்டும் ஏற்கனவே பாரிய சமூக வெட்டுக்கள் மூலமாக 2013வாக்கில் பற்றாக்குறையை 3 சதவீதத்திற்கு குறைக்க வலியுறுத்தியுள்ளார்.

2012 வளர்ச்சி 1.7இல் இருந்து 1 சதவீதமாக இருக்குமென அரசாங்கம் அதன் முன்கணிப்பைத் திருத்திய பின்னர், ஆகஸ்டில் அறிவிக்கப்பட்ட வெட்டுக்களுக்குக் கூடுதலாக, 2016வாக்கில் €65 பில்லியன் சேமிப்பது உட்பட, நவம்பர் 7இல் ஒரு புதிய சுற்று சிக்கன முறைமைகளை அது அறிவித்தது. 2012இல் மொத்தம் சுமார் 18 பில்லியன் யூரோ செலவு-வெட்டு திட்டமிடப்பட்டது.

வரலாற்றில் இல்லாதளவு சமூக வெட்டுக்களுக்காக 2012 வரவு-செலவுத் திட்டத்தைப் பாராட்டிய வரவு-செலவுத் திட்டத்துறை மந்திரி Valérie Pécresse, Europe 1க்கு தெரிவிக்கையில்: “நாங்கள் இதுவரையில் ஒருபோதும் கேட்டிராத தொடர் உழைப்புக்களைப் பிரெஞ்சு மக்களிடம் கேட்போம். வரவு-செலவுத் திட்டமென்பது ஒரு தொடர் உழைப்பு. நாம் கடனிலிருந்து வெளியே வர விரும்புகிறோம்.”

2012இன் தொடக்கத்தில் நடைமுறைக்கு வரவிருக்கின்ற இந்த புதிய முறைமைகளால் தொழிலாளர்களே மிகவும் மோசமாக பாதிக்கப்படுவர். குடிநீர், உணவு மற்றும் புத்தகங்கள் உட்பட பல சேவைகள் மற்றும் பொருட்களின்மீது 5.5 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக விற்பனை வரி உயர்த்தப்படும்; ஓய்வுபெறுவதற்கான குறைந்தபட்ச வயது 62 என்பது 2018க்கு மாறாக 2017இல் இருந்தே நடைமுறைக்கு வரும்; சுகாதாரத்துறை வெட்டுக்கள்; குடும்பம் மற்றும் வீட்டுவசதித்துறை நலன்களில் வெட்டுக்கள் (இவை பணவீக்கத்தின் அடிப்படையில் அல்லாமல் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் குறியீடு செய்யப்படவுள்ளன) ஆகியவற்றையும் இந்த முறைமைகள் உட்கொண்டுள்ளன.

ஆண்டுக்கு 250 மில்லியன் யூரோவிற்கு மேல் வருவாய் ஈட்டும் நிறுவனங்களுக்கு ஒரு தற்காலிக வரியுயர்வையும் அரசாங்கம் அறிவித்துள்ளது. இது ஒப்பீட்டளவில் தொழிலாள வர்க்கத்திற்கான சமூக செலவினங்கள் மீதான வெட்டுக்களை விட பலமடங்கு குறைவாகும்.

சிக்கன முறைமைகளின் பாகமாக, நாடாளுமன்றம் ஒரு புதிய சிக்கன-வெட்டு முறைமையையும் கொண்டு வந்தது: அதாவது, 500 மில்லியன் யூரோ சேமிப்பிற்காக, தனியார் மற்றும் பொதுத்துறை என இரண்டின் தொழிலாளர்களுக்கும் சம்பளமில்லா மருத்துவ விடுப்பு (unpaid sick leave) நாட்களை அதிகரித்தது. பொதுத்துறை தொழிலாளர்கள் மருத்துவ விடுப்பிற்கு வழங்கப்படும் முதல்நாள் சம்பள உதவியை இழக்க வேண்டியதிருக்கும், தனியார் துறை தொழிலாளர்களின் சம்பளமில்லா மருத்துவ விடுப்பின் எண்ணிக்கை 3 நாட்களிலிருந்து 4 நாட்களாக உயர்த்தப்படும்.

ஆழ்ந்த சமூக வெட்டுக்களுக்கு அழுத்தமளிக்க, நிதியியல் சந்தைகளும், பிரதான சக்திகளும் வெற்றிகரமாக கிரீஸில் பப்பண்ட்ரோ அரசாங்கத்தையும், இத்தாலியில் பெர்லொஸ்கோனி ஆட்சியையும் வெளியேற்றியிருக்கும் நிலையில், தீவிரமடைந்துவரும் யூரோ மண்டல கடன் நெருக்கடிக்கு இடையில் அரசாங்கம் வரவு-செலவு திட்டத்தை தாக்கல் செய்தது. அரச கடன்களுக்கு எதிரான ஊகங்கள் இத்தாலி, பிரான்ஸ் உட்பட ஐரோப்பாவின் மத்திய பொருளாதாரங்களுக்கும் பரவியுள்ளன. அரசுத்துறை பத்திரங்கள் மீதான அவற்றின் வாங்கும் செலவுகள் கூர்மையாக அதிகரித்துள்ளது. வங்கிகள் பிரான்சின் 10 ஆண்டுகால பத்திரங்களை 10 ஆண்டுகளில் இல்லாதளவிற்கு அதிகபட்ச அளவாக 3.4 சதவீதத்திற்கு இலாபத்தை (இது ஜேர்மனியை விட 1.5 சதவீதம் அதிகமாகும்) உயர்த்தியிருந்தன.

குறைந்த வட்டிவிகிதங்களில் கடன்வாங்க அனுமதிக்கும் விதத்தில் பிரான்சின் அரசுக்கடன் இன்னமும் AAA மதிப்பீட்டிலேயே உள்ளது. இருந்தபோதினும், அதன் பெரும் வரவு-செலவு திட்டப் பற்றாக்குறையின் மீதும் மற்றும் கிரீஸ், ஸ்பெயின் மற்றும் இத்தாலியின் அரசு கடன்களுக்கு பிரெஞ்சு வங்கிகளின் பாரியளவிலான திறந்தநிலையின் மீதும் அது நிதியியல் சந்தைகளிடமிருந்து அதிகரித்துவரும் அழுத்தத்தின்கீழ் உள்ளது. பிரான்ஸ் மொத்தம் 1.7 ட்ரில்லியன் யூரோ, அதாவது அதன் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 85.5 சதவீத கடன்களைக் கொண்டுள்ளது.

நவம்பர் 10இல், Standard & Poor நிறுவனம் பிரான்சின் AAA மதிப்பைக் கீழிறக்கி அறிவிப்பு வெளியிட்டு, பின்னர் அதை ஒரு பிழையென்று முறையிட்டு திரும்ப பெற்று கொண்டது. எவ்வாறிருந்தபோதினும், பிரான்சின் கடன் மதிப்பீடு கீழிறக்கப்பட்டால், அதன் கடன்வாங்கும் செலவுகள் கணிசமான அளவிற்கு உயரும், பின்னர் பிரான்ஸால் அதன் AAA மதிப்பையும் வைத்திருக்க முடியாதென பல விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். சமீபத்தில், பொருளியல் நிபுணரும், முன்னாள் ஜனாதிபதி ஆலோசகருமான ஜாக் அட்டலி பொருளாதார செய்தியிதழ் La Tribuneக்கு பின்வருமாறு தெரிவித்தார்: “நடிக்க வேண்டியதில்லை, நிதியியல் சந்தைகள் இனியும் பிரெஞ்சு கடனை AAA மதிப்பில் காண முடியாது.”

பிரெஞ்சு பெருவணிகங்கள் அவற்றின் பொருளாதார போட்டியாளர்களுக்கு எதிராக போட்டித்தன்மையில் வீழ்ச்சியை முகங்கொடுத்துவரும் நிலையில், அவை கூலிகள் மற்றும் ஏனைய தொழிலாளர் செலவுகளைக் குறைக்க கட்டமைப்புரீதியிலான சீர்திருத்தங்களுக்கு அழைப்புவிடுத்து வருகின்றன. தனியார் நிறுவனங்களின் மெடெஃப் வியாபார கூட்டமைப்பும் (Medef business confederation) மற்றும் அபெஃப் கூட்டமைப்பும் (Afep association), குறிப்பாக ஜேர்மனிக்கு எதிராக பிரான்ஸ் ஏற்றுமதி சந்தை பங்களிப்பில், கையிருப்பில், தொழிலாளர் செலவுகள் மற்றும் உற்பத்தி செலவுகளில் அதன் போட்டித்தன்மையை இழந்துவிட்டிருப்பதாக சமீபத்தில் குற்றஞ்சாட்டின. Eurostat அறிக்கையின்படி, பிரான்சில், 2000இல் 24.40 யூரோவாக இருந்த ஒரு மணிநேர தொழிலாளர் செலவுகள் 2010இல் 33.40 யூரோவாக அதிகரித்தது; அதுவே ஜேர்மனியில் அதே காலக்கட்டத்தில் 26.30 யூரோவிலிருந்து 33.20 யூரோவாக அதிகரித்தது.

போட்டித்தன்மையை அதிகரிக்க, “சமூக மதிப்பு-கூட்டு வரியை உருவாக்கியும் மற்றும் வாரத்திற்கு 35 மணிநேர வேலைச் சட்டத்தை இல்லாமல்செய்தும், செலவினங்களை வெட்டி, கூலி செலவுகளைக் குறைத்து பொதுநிதியை சீர்படுத்த" அபெஃப் பரிந்துரை செய்துள்ளது.

அவர்களின் முறையீடுகளுக்கு சார்க்கோசி காட்டிய விடையிறுப்பில், இந்த ஆண்டின் முடிவில் அதுகுறித்த வேலையைத் தொடங்க வணிக கூட்டமைப்புகளையும், தொழிற்சங்கங்களையும் உள்ளடக்கிய ஓர் ஆலோசனை குழுவை தாம் நியமிக்கவிருப்பதாக அறிவித்தார். நவம்பர் 15இல் போர்தோவில் அவர் ஆற்றிய உரையில், அவர் குறிப்பிட்டது: “நம்முடைய நாட்டிலுள்ள மிகவும் உயர்ந்த தொழிலாளர் செலவு, எமது பொருளாதாரத்தை தண்டிப்பதோடு, சர்வதேச போட்டியில் பிரான்சையும் தண்டிக்கிறது.”

பற்றாக்குறையைக் குறைக்க முறைமைகள் போதியளவிற்கு இல்லை என்று கூறி, சோசலிஸ்ட் கட்சி (PS) சார்க்கோசியின் முறைமைகளை வலதிலிருந்து விமர்சித்தது. ஹோலான்டின் ஒரு பொருளாதார ஆலோசகரான கரீன் பெர்ஜெர் ராய்டருக்கு கூறுகையில், “அரச பற்றாக்குறையை 3 சதவீதத்திற்கு குறைக்க, 2012 மற்றும் 2013இன் துணை வரவு-செலவுத் திட்டத்தில் 50 பில்லியன் யூரோ குறைக்கும் ஒரு முயற்சியை பிரான்சுவா ஹோலான்ட் ஆலோசித்து வருகிறார்,” என்றார்.

சார்க்கோசியின் வெட்டுக்கள் போதியளவிற்கில்லை என்று தாக்கி, சோசலிஸ்ட் கட்சி நிதியியல் மூலதனத்தின் ஆதரவிற்கு முறையிடுகிறது. தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக தேவைப்படும் தாக்குதல்களை நடத்த அவர் மிகவும் பலவீனமாக இருப்பதாக அது நிரூபிக்கிறது.

செனட் நிதியியல் குழுவின் பொது செய்தியாளர் நிகோல் பிரிக் (PS) கூறுகையில், “பிரான்ஸ் ஒருவித குழப்பமான காலக்கட்டத்தை முகங்கொடுத்துள்ளது. இக்காலகட்டத்தில் 'குறைந்தபட்ச' அறிவிப்புகளோடு அரசாங்கம் முன்னறிவிப்பின்றி முறைமைகளை எடுக்கிறது. … ஃபியோன் திட்டம் (Fillon plan) போதாது என்பதை ஐரோப்பிய ஆணையம் குறிப்பிட்டுள்ளது,” என்றார்.

தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான புதிய தாக்குதல்களுக்கு சார்க்கோசி நிர்வாகம் தயாரிப்பு செய்து வருகின்ற நிலையில், அதிகரித்துவரும் வேலைவாய்ப்பின்மை மற்றும் சிதைந்துவரும் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகளுக்கு இடையில் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை அது முகங்கொடுக்கும். வெட்டுக்களையும், அரசையும் ஆதரிக்கும் தொழிற்சங்க அதிகாரத்துவம் உடைந்தையாக இருப்பதன் காரணமாக, சார்க்கோசியால் அந்த வெட்டுக்களை தொடர முடியும். தொழிற்சங்கங்களும் மற்றும் புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி போன்ற அவற்றின் போலி-இடது கூட்டாளிகளும், ஒட்டுமொத்த அரசியலமைப்பிற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஓர் அரசியல் இயக்கத்தை தடுப்பதில் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கின்றன.

சமூக வெட்டுக்களை ஆதரித்து கொண்டே தொழிற்சங்கங்கள், மக்கள் அதிருப்தியை சிதறடிக்கும் ஒரு முயற்சியில், பயனற்ற ஒருநாள் போராட்டத்திற்கு அழைப்புவிடுக்க திட்டமிட்டு வருகின்றன. அதேநேரத்தில், அரசாங்கத்தால் கோரப்பட்ட வெட்டுக் கொள்கையோடு அவைகள் உடன்படுகின்றன. CFDTஇன் (பிரெஞ்சு தொழிலாளர் ஜனநாயக கூட்டமைப்பு) பிரான்சுவா செரெக் Le Progrèsக்கு தெரிவித்தது: “கடன் அதீதமாகி கொண்டே வருகிறது. அதைக் குறைப்பது தவிர்க்கமுடியாததாகும். கடனை எதிர்கால தலைமுறைக்கு மாற்றிவிட முடியாது.”

நவம்பர் 18இல், CGT (பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கில் இருக்கும் தொழிலாளர்களின் பொதுக் கூட்டமைப்பு) உட்பட பிரான்சின் பிரதான தொழிற்சங்கங்களும், CFDTஉம் டிசம்பர் 13இல் ஒரு நாள் போராட்டத்திற்கு அழைப்புவிடுக்க ஒன்றுகூடின. முறைகள் அறிவிக்கப்பட்டு ஏறத்தாழ ஒரு மாதங்கள் ஆன பின்னர், நாடாளுமன்றம் ஏற்கனவே அனைத்து வெட்டுக்களையும் நிறைவேற்றிய பின்னர், அவர்கள் இத்தகையவொரு பயனற்ற போராட்டத்திற்கு அழைப்புவிடுக்கின்றன.

முறைமைகள் அறிவிக்கப்பட்ட பின்னர் உடனடியாக, புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி பின்வரும் அறிவிப்போடு ஒரு விமர்சனத்தை வெளியிட்டது: “ஒட்டுமொத்த சமூக மற்றும் அரசியல் இடதும், தொழிற்சங்கங்களும் மற்றும் கட்சிகளும், வரும் நாட்களில் எதிர்ப்பை ஒழுங்குப்படுத்த ஒன்றுகூடும்.”

தொழிற்சங்கங்கள் மற்றும் ஏனைய போலி-இடது கூட்டாளிகளுடன் இத்தகையவொரு நடவடிக்கைக்கு அழைப்புவிடுப்பதன் நோக்கம், வெட்டுக்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கம் அணிதிரளாமல் இருப்பதை தடுப்பதும், 2012 ஜனாதிபதி தேர்தலில் PSஐ தேர்ந்தெடுக்கும் பிரச்சாரத்திற்குப் பின்னால் அதை திருப்பிவிடுவதுமே ஆகும். நிதியியல் சந்தைகள் மற்றும் வங்கிகளுக்கு சார்பாக சார்க்கோசியால் தொடங்கப்பட்ட சிக்கன கொள்கைகளைப் பின்தொடர சோசலிஸ்ட் கட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில், இது தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு முட்டுச்சந்தாக உள்ளது.