சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

JVP dissidents in Sri Lanka: a new political trap

இலங்கையில் ஜே.வி.பீ. மாற்றுக் குழு: ஒரு புதிய அரசியல் பொறி

By K. Ratnayake
19 November 2011

use this version to print | Send feedback

இலங்கையில் அண்மைய மாதங்களில் மக்கள் விடுதலை முன்னணிக்குள் (ஜே.வி.பீ.) கருத்து வேறுபாடு கொண்டு ஒரு மாற்றுக் குழு தோன்றியிருப்பதானது, அந்தக் கட்சியின் அரசியல் நெருக்கடியின் இன்னுமொரு அறிகுறியாகும். இந்தக் கட்சி 2008ல் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கத்தில் இணைந்துகொள்வதா இல்லையா என்ற பிரச்சினையில் பிளவடைந்ததோடு இப்போது அதன் இளைஞர் குழுவில் அதிகமானவர்களை உள்ளடக்கிய இன்னுமொரு பலவீனப்படுத்தும் பிளவை எதிர்கொள்கின்றது.

ஜே.வி.பீ. மாற்றுக் குழுவின் சாமர கொஸ்வத்த அண்மையில் ஆற்றிய விரிவுரை, இந்த எதிர்ப்புக் குழுவுக்கும் தற்போதைய தலைமைத்துவத்துக்கும் இடையில் அடிப்படை முரண்பாடுகள் எதுவும் கிடையாது என்பதை அம்பலப்படுத்தியுள்ளது. மாற்றுக் குழுவினர், கட்சியின் புரட்சிகர மற்றும் மார்க்சிய பாரம்பரியங்கள் என சொல்லப்படுவதற்கு புத்துயிரூட்டுவதற்காக ஏக்கத்துடன் முயற்சிப்பதோடு, அவ்வாறு செய்வதன் மூலம், ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கைத் தரத்தின் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்களை எதிர்த்துப் போராட வழி தேடும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஒரு புதிய அரசியல் பொறியை உருவாக்குகின்றது.

நாம் காக்கும் மரபுகள் என்ற தலைப்பிலான அந்த விரிவுரை, ஒரு குறிக்கோளற்ற, கட்சியின் ஸ்தாபகர் ரோஹன விஜேவீரவை புகழுவதோடு, சொன்னதையே திருப்பிச் சொல்லுகிறது. 1989ல் விஜேவீரவின் மரணத்தின் பின்னர், கட்சியின் தலைமைத்துவம், கட்சி ஆதரவிழந்தமைக்கு வழிவகுத்த ஒரு சந்தர்ப்பவாத தவறு மற்றும் பிழைகளுக்கு பொறுப்பாகும் என கொஸ்வத்த தெரிவித்தார். இவற்றில், 2004ல் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான கூட்டணி அரசாங்கத்துக்குள் நுழைந்துகொள்ள ஜே.வி.பீ. எடுத்த முடிவு, 2005 ஜனாதிபதி தேர்தலில் இராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க அது எடுத்த முடிவு மற்றும் 2010 ஜனாதிபதி தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவை அது ஆதரித்ததும் அடங்கும்.

உண்மையில், 2004ல் ஜே.வி.பீ. முதலாளித்துவ அரசாங்கத்துக்குள் நுழைந்து கொண்டதும் இராஜபக்ஷ, பொன்சேகா போன்ற முதலாளித்துவ புள்ளிகளுடன் அது கூட்டணி வைத்துக்கொண்டதும் பிழைகளின் விளைவுகள் அல்ல. அவை ஆரம்பத்தில் இருந்தே கட்சியில் செல்வாக்கு செலுத்திய குட்டி முதலாளித்துவ, தேசியவாத அரசியலில் இருந்து இயல்பாகவே ஊற்றெடுக்கின்றது. ஜே.வி.பீ. மார்க்சியத்தை அடித்தளமாகக் கொண்ட கட்சியல்ல. மாறாக அது மாவோவாதம், காஸ்றோவாதம், சிங்கள வெகுஜனவாதம் போன்ற பலதரப்பட்டதையும் கலவையாகக் கொண்டதாகும். அது தொழிலாளர்களின் வர்க்கப் போராட்டத்தை அன்றி, விவசாயிகளின் ஆயுதப் போராட்டத்தையே இலக்காகக் கொண்டிருந்தது.

லங்கா சமசமாஜக் கட்சி 1964ல் குமாரதுங்கவின் தாயார் ஸ்ரீமா பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ அரசாங்கத்துக்குள் நுழைந்து காட்டிக் கொடுத்ததன் பின்னரே ஜே.வி.பீ. ஸ்தாபிக்கப்பட்டது. தனது விரிவுரையில் பழைய இடதுசாரிகளை தாக்கிய கொஸ்வத்த, லங்கா சமசமாஜக் கட்சி தலைவர்கள் மத்தியதர வர்க்க குடும்பங்களில் இருந்து வந்தவர்கள்; இங்கிலாந்தில் படித்தவர்கள்; அங்கு ஆசியர்களுக்கு எதிரான பாகுபாடுகளின் காரணமாக இடதுபக்கம் ஈர்க்கப்பட்டவர்கள்; அவர்கள் வர்க்க ஒத்துழைப்பு கோட்பாடுகளை மட்டுமே கற்றார்கள், என தெரிவித்தார்

இந்த விளக்கும் முற்றிலும் பொய்யானதாகும். லங்கா சமசமாஜக் கட்சி தலைவர்கள், இரண்டாம் உலக யுத்தத்தின் போது, இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியின் (பி.எல்.பீ..) உறுப்பினர்கள் என்ற வகையில், தாம் உத்வேகத்துடன் முன்னெடுத்த புரட்சிகர மார்க்சிச, அதாவது ட்ரொட்ஸ்கிச கொள்கைகளுக்கான போராட்டத்தை கைவிட்டதன் விளைவே லங்கா சமசமாஜக் கட்சியின் காட்டிக்கொடுப்பாகும். லங்கா சமசமாஜக் கட்சியினுள் ஏற்பட்ட யுத்தத்துக்குப் பிந்திய சீரழிவு, நான்காம் அகிலத்துக்குள் மைக்கல் பப்லோ, ஏர்னஸ்ட் மன்டேல் ஆகியோரால் கொண்டுவரப்பட்ட ஒரு சந்தர்ப்பவாத போக்குடன் பிணைந்துள்ளது. இவர்கள் பண்டாரநாயக்கவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (ஸ்ரீ..சு..) சிங்கள வெகுஜனவாதத்துக்கு லங்கா சமசமாஜக் கட்சி அடிபணிய ஊக்குவித்தனர்.

சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ...) முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (பு..) மட்டுமே, லங்கா சமசமாஜக் கட்சியின் காட்டிக் கொடுப்பில் இருந்து அரசியல் படிப்பினைகளை வெளிக்கொணர்ந்ததோடு பாட்டாளிவர்க்க அனைத்துலகவாத கொள்கைகளை மீள் உறுதி செய்தது. பு... பப்லோவாத சந்தர்ப்பவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் 1968ல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியாக ஸ்தாபிக்கப்பட்டது.

முரணான முறையில் ஜே.வி.பீ. எப்போதும் தேசியவாதத்திலேயே மூழ்கிப் போயிருந்தது. அது லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டை கசப்புடன் எதிர்த்தது. சோசலிச கொள்கைகளின் அடிப்படையில் தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்துக்கான போராட்டத்தில் கிராமப்புற வெகுஜனங்களை அணிதிரட்டுவதற்கான ஒரே வழிமுறையாக, முதலாளித்துவத்தின் சகல பகுதிகளில் இருந்தும் தொழிலாள வர்க்கத்தை அரசியல் சுயாதீனமடையச் செய்வதற்கான போராட்டத்திற்கு புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை திசையமைவுபடுத்தியது இந்த நிரந்தரப் புரட்சிக் கோட்பாடே ஆகும்.

பு... ஸ்தாபக பொதுச் செயலாளர் கீர்த்தி பாலசூரிய, 1970ல் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியலும் வர்க்கப் பண்பும் என்ற நூலில் பல்பூரண (comprehensive ) ஆய்வை மேற்கொண்டுள்ளார். இந்த நூல், ஜே.வி.பி. சோசலிச தோரணைகளைக் காட்டினாலும் அதற்கும் மார்க்சிசத்துக்கான போராட்டத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்பதை தீர்க்கமாக ஸ்தாபிக்கின்றது.

பாலசூரிய எழுதியதாவது: மக்கள் விடுதலை முன்னணியானது உலகம் பூராவும் உள்ள ஏனைய நாடுகளில் அமைக்கப்பட்டுள்ள மத்தியதர வர்க்க இயக்கங்களுக்கு சமாந்தரமான இலங்கை சிங்கள குட்டி முதலாளித்துவத்தால் ஸ்தாபிக்கப்பட்ட இயக்கமாகும். இதன் இலக்கு சிங்கள தொழிலாளர்கள், சிங்கள விவசாயிகள், சிங்கள ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் சிங்கள மாணவர்கள் மட்டுமன்றி, நாட்டின் முதலாளித்துவ வர்க்கத் தட்டினரையும்தேசப்பற்றுவாதத்தின் அடிப்படையில் அணிதிரட்டுவதற்காகதேசப்பற்று அரச இயந்திரத்தை கட்டியெழுப்புவதே அன்றி, தொழிலாள வர்க்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதல்ல.

தனது விரிவுரையில், விஜேவீர மார்க்சிய-லெனினிஸ கோட்பாட்டை பூமிக்கு கொண்டுவந்த, பின்தங்கிய கிராமப்புறத்தில் அரசியல் கலந்துரையாடல் நடத்திய ஒரு நடைமுறை மனிதன் என கொஸ்வத்த புகழ்ந்தார். ஆயினும், விஜேவீரவின் கலந்துரையாடல்கள் தொழிலாள வர்க்கம் புரட்சிகர வர்க்கம் என்பதை நிராகரித்ததோடு பாட்டாளிகள் என்ற பதத்தை கிராமப்புற வறியவர்களுக்கும் ஏனைய ஒடுக்கப்பட்ட சமூகத் தட்டினருக்கும் மீள்வரைவிலக்கனம் செய்தார். விஜேவீர தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை வெறும் கஞ்சிக் கோப்பைக்கான போராட்டம் என வெளிப்படையாக அலட்சியம் செய்தார்.

விஜேவீரவும் ஜே.வி.பீ.யும் நிராகரிப்பது எதுவெனில், இலங்கையிலும் அனைத்துலகிலும் சோசலிசத்துக்கான போராட்டத்தின் ஒரே அடித்தளமாக, தொழிலாள வர்க்கத்தையும் அதற்குப் பின்னால் கிராமப்புற வெகுஜனங்களையும் சுயாதீனமாக அரசியல் ரீதியில் அணிதிரட்டுவதற்கான நீண்ட மற்றும் கடினமான போராட்டத்தையே ஆகும். பாலசூரிய விளக்கியது போல், ஏனைய குட்டி முதலாளித்துவத்தை தளமாகக் கொண்ட சகல அரசியல் இயக்கங்களைப் போலவே ஜே.வி.பீ.யும், முரட்டுத்துணிச்சலுக்கும் முதலாளித்துவ தட்டுக்களின் ஆதரவை தக்கவைப்பதற்கும் இடையில் பரந்தளவில் ஊசலாடிக்கொண்டிருக்கின்றது. இதன் விளைவு, ஜே.வி.பீ.க்குள் ஈர்க்கப்பட்டுள்ள கிராமப்புற சிங்கள இளைஞர்களுக்கு அடுத்து அடுத்து அழிவுகளே ஆகும்.

குமாரதுங்க, இராஜபக்ஷ மற்றும் பொன்சேகாவுக்கான ஜே.வி.பீ.யின் ஆதரவு ஒரு புதிய நிகழ்வு என கொஸ்வத்த கூறிக்கொண்டார். ஆயினும், கட்சி ஆரம்பிக்கப்பட்டு மிகக் குறுகிய காலத்திலேயே, 1970ல் அமைக்கப்பட்ட லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கட்சியுடனான பண்டாரநாயக்கவின் இரண்டாவது கூட்டரசாங்கத்தை முன்னேற்றமானது என பாராட்டிய விஜேவீர, பிற்போக்குவாதிகளுக்கு எதிராக அதைப் பாதுகாப்பதாக வாக்குறுதியளித்தார். ஜே.வி.பீ.யின் பத்திரிகையான ஜனதா விமுக்தியில் வெளியான ஒரு கட்டுரை, இந்த ஐக்கிய முன்னணி அரசாங்கம் ஆயுதப் படைகளிடம் இருந்து ஆதரவை எதிர்பார்க்கக் கூடாது மாறாக உழைக்கும் வர்க்க வெகுஜனங்களிடமிருந்து ஆதரவு பெறவேண்டும், என ஆலோசனை கூறியது.

சில மாதங்களின் பின்னர், ஜே.வி.பீ. பிற்போக்கு பண்டாரநாயக்க அரசாங்கத்துக்கு எதிராக 1971 ஏப்பிரலில் ஒரு முரட்டுத்துணிச்சலான கிளர்ச்சியை முன்னெடுத்தது. இந்தக் கிளர்ச்சி பாதுகாப்பு படையினரால் கொடூரமாக நசுக்கப்பட்டதோடு, ஒரு மதிப்பட்டின்படி 15,000 இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இந்த அழிவு பற்றி எந்தவொரு ஆழமான மதிப்பீடும் செய்ய இலாயக்கற்ற கொஸ்வத்த, இன்னமும் அதை ஜே.வி.பீ.யின் புரட்சிகர நம்பகத்தன்மைக்கான சான்றாக தூக்கிப்பிடிக்கின்றார்.

கிளர்ச்சி தோல்விகண்ட பின்னர் சிறையிலடைக்கப்பட்டிருந்த விஜேவீர, தனது கட்சி மென்ஷிவிக் அரசியலில் மூழ்கிப்போயிருந்தது என்ற ஒரு வெற்று சுய விமர்சனத்தை செய்துகொண்டார். மென்ஷிவிக் என்ற பதத்தை அவர் பயன்படுத்தியமைக்கு அறிவியல்பூர்வமான எதுவும் கிடையாது. இது ஜே.வி.பீ.யின் அடுத்த திருப்பத்தைஇம்முறை வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியின் (யூ.என்.பீ.) பக்கம் திரும்புவதை- மூடிமறைப்பதற்கான தெளிவுபடுத்தபடாத ஒரு வசதியான சொல் ஆகும். ஜே.வி.பீ. 1977 தேர்தலில் யூ.என்.பீ.யை இரகசியமாக ஆதரித்ததோடு அதற்குப் பிரதியுபகாரமாக அதன் தலைவர்கள் சிறையிலிருந்து விடுதலையானார்கள்.

ஜே.வி.பீ. கிளர்ச்சியின் பின்னர், பண்டாரநாயக்க அரசாங்கம் சிங்கள பேரினவாத அரசியலுக்கு பகிரங்கமாக திரும்பியதுஅது பௌத்த மதத்தை அரச மதமாகவும் சிங்கள மொழியை அரச மொழியாகவும் ஸ்தாபித்த 1972 இனவாத அரசியலமைப்பை அமுல்படுத்தியது. தமிழர்களுக்கு எதிராக உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பாகுபாடுகள், தமிழ் இளைஞர்களை தீவிரமயமாக்கியதோடு தனியான தமிழ் அரசை பரிந்துரைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளைப் போன்ற ஆயுதக் குழுக்கள் உருவாகவும் வழிவகுத்தது. ஆட்சிக்கு வந்த பின்னர், யூ.என்.பீ. தனது சொந்த சந்தை-சார்பு கொள்கைகள் உழைக்கும் மக்கள் மீது செலுத்தும் அழிவுகரமான தாக்கத்திலிருந்து கவனத்தை திசை திருப்புவதற்காக, தொடர்ச்சியான திட்டமிடப்பட்ட தமிழர்-விரோத ஆத்திரமூட்டல்கள் ஊடாக உள்நாட்டு யுத்தத்துக்கான உந்துதலை துரிதப்படுத்தியது.

பு... பொதுச் செயலாளர் பாலசூரிய தனது நூலில், ஜே.வி.பீ.யின் அரசியலின் இனவாத பண்பையும் அது தமிழ் தோட்டத் தொழிலாளர்களை இந்திய விஸ்தரிப்புவாதத்தின் உபகரணம் என முத்திரை குத்துவதையும் பற்றி எச்சரித்தார். பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மீதான இந்த இனவாத எதிர்ப்பு பாசிசமாக அபிவிருத்தியடைவதோடு இலங்கையில் ஜே.வி.பீ. எதிர்காலத்தில் ஒரு பாசிச இயக்கத்தால் பயன்படுத்திக்கொள்ளக் கூடியவாறான ஒரு தொழிலாள வர்க்க-விரோத சக்தியாக கட்டியெழுப்பப்படுகிறது என அவர் முன்றிவித்தார். அது 1983ல் உள்நாட்டு யுத்தம் வெடித்ததுடன் அந்த முன்கணிப்பு உறுதிப்படுத்தப்பட்டது.

ஜே.வி.பீ. துரிதமாக தீவின் தமிழ் சிறுபான்மையினரின் ஜனநாயக உரிமைகளை நசுக்குவதற்கு இந்த இனவாத மோதலை ஆரவாரத்துடன் ஊக்குவிக்கும் ஊக்குவிப்பாளனாகியது. 1987ல் இந்திய அமைதிப்படையின் ஆதரவுடன், வடக்கு மற்றும் கிழக்கில் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரப் பரவலாக்கத்தை ஏற்படுத்த ஜே.ஆர். ஜயவர்தன தலைமையிலான யூ.என்.பீ. அரசாங்கம் இந்தியாவுடன் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையை ஜே.வி.பீ. கசப்புடன் எதிர்த்தது. ஜே.வி.பீ. இந்த உடன்படிக்கையை, தொழிலாள வர்க்க நிலைப்பாட்டில் இருந்து எதிர்க்காமல், அதை தேசத்தைக் காட்டிக் கொடுக்கும் செயல் எனக் கூறியே எதிர்த்தது.

இந்த உடன்படிக்கைக்கு எதிராக ஒரு பாசிச பிரச்சாரத்தை முன்னெடுத்த ஜே.வி.பீ.,  மூன்று பு... உறுப்பினர்கள் உட்பட, தனது தேசப்பற்று வேலை நிறுத்தங்கள் ஆர்ப்பாட்டங்களில் இணைந்துகொள்ள மறுத்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் அரசியல் எதிரிகளையும் கொன்றது. அதே சமயம், அந்த உடன்படிக்கையை எதிர்த்தமைக்காக ஜே.வி.பீ.யை முற்போக்கானது என பாராட்டிய புதிய யூ.என்.பீ. ஜனாதிபதி ஆர். பிரேமதாசவுடன் 1989ல் விஜேவீர இரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தினார். ஜே.வி.பீ. தலைமைத்துவத்தின் மீதான அச்சத்தினால் அன்றி, அதனது கிராமப்புற தளத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில், இறுதியில் பிரேமதாச ஜே.வி.பீ. மீது பாய்ந்தார். விஜேவீரவையும் அநேகமான ஜே.வி.பீ. தலைவர்களையும் கொடூரமாக கொலை செய்த பாதுகாப்பு படையினர், ஒரு மதிப்பீட்டின்படி 60,000 சிங்கள கிராமப்புற இளைஞர்களையும் கொன்று தள்ளினர்.

கொஸ்வத்த இன்னமும் இந்திய-இலங்கை உடன்படிக்கைக்கு எதிரான ஜே.வி.பீ.யின் பாசிச பிரச்சாரத்தை அதன் மரபுரிமைகளின் பாகமாகவே கருதுகிறார். கடந்த வாரக் கடைசியில் விஜேவீரவையும் ஏனைய ஜே.வி.பீ. தியாகிகளையும் நினைவுகூறும் கூட்டமொன்றில், நாம் சுதந்திரமான அழகான புதிய உலகுக்காக போராடுவோம். தேவையெனில் கடந்த காலத்தில் அவர்கள் செய்தது போல் நாமும் போராடுவோம், என அவர் பிரகடனம் செய்தார். ஜே.வி.பீ. மாற்றுக் குழுவினரிடம், ஏற்கனவே கால் நூற்றாண்டு உள்நாட்டு யுத்தத்துக்கு வழிவகுத்த இனவாத அரசியலின் பயங்கரங்களே அன்றி, தொழிலாளர்களுக்கு கொடுப்பதற்கு ஒன்றும் இல்லை என்பதை தெளிவுபடுத்தும் விஜேவீர பற்றிய கொஸ்வத்தையின் புகழ்பாடல் ஒரு தெளிவான எச்சரிக்கையாகும்.

ஜே.வி.பீ.யைப் பொறுத்தளவில் விஜேவீரவின் கொலை ஒரு திருப்புமுனையாக இருந்த போதிலும், அது பிரதானமாக கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிஸ அரசாங்கங்களினதும் சோவியத் ஒன்றியத்தினதும் வீழ்ச்சியின் மறுபக்கமாக இருந்தது. இந்தக் கட்சி, சோசலிசத்தின் தோல்வி பற்றி புலம்பிய பல்வேறு போலி-தீவிரவாத அமைப்புக்களின் சர்வதேச ரீதியிலான மறு ஐக்கிய அலையுடன் சேர்ந்துகொண்டது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (நா...கு.) மட்டுமே, அது சோசலிசத்தின் தோல்வியல்ல என்பதையும் அது ஸ்ராலினிஸத்தினதும் தனிநாட்டில் சோசலிசம் என்ற அதன் தேசியவாத நோக்கத்தினதும் வீழ்ச்சியாகும் என்பதை வலியுறுத்தியது. முதலாளித்துவ அரசியலில் ஒரு இடத்தைப் பெற்றுக்கொள்வதற்காக, ஆயுதப் போராட்டத்தை கைவிட்ட கொரில்லா இயங்கங்களின் வரிசையில் ஜே.வி.பீ.யும் இணைந்துகொண்டது.

இலங்கையில் ஜே.வி.பீ., சந்திரிகா குமாரதுங்கவுக்கு ஆதரவாக, 1994 ஜனாதிபதி தேர்தலில் தனது வேட்பாளரை விலக்கிக்கொள்வதற்காக ஸ்ரீ..சு.. உடன் உடன்படிக்கையொன்றை ஏற்படுத்திக்கொண்டது. குமாரதுங்க வென்ற பின்னர், அவர் ஜே.வி.பீ. மீதான தடையை அகற்றி, அது கொழும்பு அரசியல் ஸ்தாபனத்துக்குள் நுழைந்துகொள்வதற்கான வழியை மென்மையாக்கினார். அடுத்துவந்த தசாப்தத்தில் யூ.என்.பீ., ஸ்ரீ..சு.. ஆகிய இரு பிரதான கட்சிகள் மீது வளர்ச்சிகண்டு வந்த வெகுஜன அதிருப்தியை சுரண்டிக்கொண்டு ஜே.வி.பீ.யால் கணிசமானளவு பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக்கொள்ள முடிந்தது.

இப்போது கொஸ்வத்தையும் அவரது மாற்றுக் குழுவும், ஜே.வி.பீ. தலைவர்களின் முதலாளித்துவ கட்சிகளுடனான இழிவான சூழ்ச்சித் திட்டங்கள், அமெரிக்க தூதரக அதிகாரிகளுடனான ஜே.வி.பீ.யின் தனிப்பட்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் கூட்டுத்தாபன தட்டுக்களுடனான அதன் கொடுக்கல் வாங்கல்கள் பற்றி விமர்சிக்கின்றனர். ஆனால் அந்த சந்தர்ப்பங்களில் மாற்றுக்குழுவினரிடம் இருந்து எந்தவொரு எதிர்ப்பும் வந்ததற்கான அறிகுறிகள் கிடையாது. இப்போது அவர்கள் ஜே.வி.பீ.யின் தலைமைத்துவம் மற்றும் அதன் சந்தர்ப்பவாத தவறுகள் பற்றி விமர்சப்பதற்குக் காரணம், அவர்கள் 2004ல் குமாரதுங்க அரசாங்கத்துக்குள் ஜே.வி.பீ. நுழைந்துகொண்டமை அதன் தேர்தல் தோல்விகளின் ஆரம்பத்தைக் குறிப்பதாக தாமதமாகி காண்பதாலாகும்.

இதே போல், இந்த ஜே.வி.பீ. மாற்றுக் குழுவினர், இப்போது புலிகளுக்கு எதிரான யுத்தத்தை இராஜபக்ஷ முன்னெடுத்தமை சம்பந்தமாக அவ்வப்போது விமர்சிக்கின்றனர். ஆயினும், தற்போதைய எதிர்ப்பானது கடுமையாக மட்டுப்படுத்தப்பட்டதாக இருப்பதோடு, அது யுத்தத்தை, வடக்கு கிழக்கில் தொடரும் இராணுவ ஆக்கிரமிப்பை அல்லது அரசாங்கமும் இராணுவமும் மேற்கொண்ட பல யுத்தக் குற்றங்கள் மற்றும் அட்டூழியங்களை உள்ளடக்கியிருக்கவில்லை. கடந்த இரு தசாப்தங்களாக, ஜே.வி.பீ. தாங்களும் பங்களிப்பு செய்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எந்தவொரு முயற்சியையும் மிகக் கடுமையாக எதிர்த்துவந்துள்ளது.

ஜே.வி.பீ. தலைவர்களை முதலாளித்துவ கட்சிகளுடன் கூட்டு வைத்துக்கொண்டதற்காக திட்டும் அதே வேளை, இந்த மாற்றுக் குழு, தமது சொந்த சந்தர்ப்பவாத சூழ்ச்சிகளை நிராகரிக்கவில்லை. குழுவின் தலைவர்களின் ஒருவரான சேனாதீர குணதிலக, டெயிலி மிரர் பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியில், ஏனைய கட்சிகளுடனான கூட்டணியைப் பற்றி குறிப்பிடும் போது, அரசியலில் அத்தகைய விவகாரங்களுக்கான சந்தர்ப்பங்களை நான் நிராகரிக்கவில்லை, என தெரிவித்தார்.

தாம் கண்டனம் செய்யும் தலைவர்களைப் போலவே, ஜே.வி.பீ. மாற்றுக் குழுவினரும், தற்போது குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் சரிந்துவரும் ஆதரவை தூக்கிநிறுத்த வழிதேடுவதில் ஆவல்கொண்டுள்ளனர். இந்த சகல கோஷ்டிகளும், சோ... மற்றும் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள் அமைப்புக்கும் மற்றும் சோசலிச அனைத்துலகவாத கொள்கைகளுக்கும் செவிமடுப்பவர்கள் அதிகரித்துக்கொண்டிருப்பதை இரகசியமாக கண்காணிக்கின்றனர். சோ...க்கான ஆதரவானது, பிரதான கட்சிகளதும் போலி-தீவிரவாத கருவிகளதும் சந்தர்ப்பவாத சூழ்ச்சிகள் மற்றும் அவர்கள் அனைவரும் காலூண்றிக்கொண்டுள்ள இனவாத அரசியல் சம்பந்தமாக பரந்தளவில் அதிகரிக்கும் அதிருப்தியையே பிரதிபலிக்கின்றது.

அண்மையில் நடத்திய விரிவுரையொன்றில், ஜே.வி.பீ. செயலாளர் டில்வின் சில்வா, சோ... வெறுமனே ஒரு வலைத்தளத்தை பிரசுரிக்கின்ற ஒரு முக்கியத்துவமற்ற சக்தியாகும் என தெரிவித்தார். இதே போன்ற அலட்சியக் குறிப்பையே மாற்றுக் குழுவும் தெரிவித்துள்ளது. இந்தக் கூற்றுகள், சோ... மற்றும் அது போராடும் கொள்கைகள் முக்கியத்துவமற்றவை எனில், அதைப்பற்றி அவர்கள் கருத்துக்கூற முயற்சிப்பது ஏன் என்ற கேள்வியை கொண்டுள்ளன. 2008ல் ஜே.வி.பீ.யில் இருந்து பிரிந்து சென்ற வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச, ஜே.வி.பீ. நெருக்கடி சம்பந்தமான தனது உரையில், இதில் சோ... மார்க்சிச அடிப்படைவாதிகளே நன்மையடைவர் என மிகவும் கபடத்தனமாகத் தெரிவித்தார்.

ஜே.வி.பீ.யின் சகல பிரிவுகளையும் அவர்களது தேசியவாத அரசியலையும் நிராகரிக்குமாறு சோ... தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கின்றது. சோசலிசத்துக்கான உண்மையான போராட்டத்தின் உரைகல் எப்பொழுதும் அனைத்துலகவாதமே. அது தமது பொது ஒடுக்குமுறையாளனுக்கு, அதாவது இலாப முறைமைக்கு எதிராக தேசிய, இன, மொழி, பால் அல்லது மத பேதங்களுக்கு அப்பால் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கான போராட்டமாகும். அத்தகைய ஒரு போராட்டம், முதலாளித்துவ வர்க்கத் தட்டுக்களின் சொந்த அரசியல் நலன்களைக் குறுக்கே வெட்டுவதால் சந்தர்ப்பவாத மற்றும் குட்டிமுதலாளித்துவ தீவிரவாதிகள் இயல்பிலேயே அதற்கு எதிரானவர்கள்.

சோ... மற்றும் நா...குழுவும் மட்டுமே, சமகால மார்க்சிசத்தின், அதாவது ட்ரொட்ஸ்கிசத்தின் அடிப்படைகளுக்காகப் போராடுகின்றது. நாம் சோ... மற்றும் நா...கு.வின் வேலைத்திட்டம் மற்றும் வரலாற்றை கவனமாக கற்குமாறும், எதிர்வரும் புரட்சிகர போரட்டங்களில் தொழிலாள வர்க்கத்திற்கு அவசியமான தலைமைத்துவமாக சோ...யை கட்டியெழுப்ப இணையுமாறும் தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.