சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

PSA Peugeot Citroën to slash 6,000 jobs in Europe

PSA பேஜோ சித்ரோன் ஐரோப்பாவில் 6,000 வேலைகளை அகற்றவிருக்கிறது

By Antoine Lerougetel
21 November 2011

use this version to print | Send feedback

பிரெஞ்சுக் கார் உற்பத்தியாளர் PSA பேஜோ சித்ரோன் கடந்த மாதம் அறிவித்த அதன் 800 மில்லியன் யூரோ செலவு குறைப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்த, அது எடுக்கவிருக்கும் முறைமைகளை விவரித்தது. ஐரோப்பாவில் 6,000 வேலைகள் வெட்டப்படுவதில், பிரான்சில் 5,000 வேலைகள் இல்லாமல்போகும்.

கருத்துக்கணிப்பு மதிப்பீட்டில் 30 சதவீத அளவில் இருக்கும் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசிக்கு இந்த பிரச்சினை இன்னும் ஆழமான பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. ஏற்கனவே அவர் இந்த பிரச்சினையை பிரத்தியேகமாக அவரே கையாண்டு வருகிறார். கடந்த வாரம் அவர் அறிவித்ததாவது: “இன்று காலை நான் பிலிப் வாரெனுடன் [PSAஇன் தலைமை செயலதிகாரி] பேசினேன். பிரான்சின் PSAஇல் இங்கே சமூக வெட்டுத் திட்டம் எதுவும் இருக்காது என்று என்னால் கூற முடியும்.”

பிரான்சின் முன்னனி வர்த்தக தினயிதழான Les Echos வியாழனன்று எழுதியது, “ஐந்து மாதங்களில் ஜனாதிபதி தேர்தல்கள் வரவிருக்கின்ற நிலையில், இந்த விஷயம் குறிப்பாக அரசாங்கத்திற்கு மிகவும் சிக்கலானது.” இந்த தேர்தல்களில் சார்க்கோசி அவருடைய பதவியைத் தக்கவைக்க விரும்புகிறார். சார்க்கோசியின் பயம் ஆளும் வர்க்கத்தின் அச்சத்தைப் பிரதிபலிக்கிறது. கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட சிக்கன முறைமைகளுக்கு மேலாக, அதிகரித்துவரும் வேலைவாய்ப்பின்மை விகிதங்கள், கார்த்துறை தொழிலாளர்கள் அல்லது பரந்த தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் நிலவும் எதிர்ப்பு ஒரு சமூக மற்றும் அரசியல் வெடிப்பிற்கு இட்டுச் செல்லக்கூடும்.

இந்த திட்டத்தால் நேரடியாக பாதிக்கப்படும் நிறுவன தொழிலாளர்கள், நிறுவனத்திற்குள்ளேயோ அல்லது வெளியிலேயோ, குறிப்பாக அதன் துணை-ஒப்பந்ததாரர்களிடம் மீண்டும் நியமிக்கப்படுவார்கள் வேலைகள் ஒரு சரிபடுத்தும் மாறுதலைப் பயன்படுத்தப்படக்கூடாது.”

சார்க்கோசியின் தலையீடு PSAஇன் வேலை-வெட்டு திட்டங்களில் எவ்வித மாற்றங்களையும் உருவாக்குமா என்பது இன்னும் தெளிவாக இல்லை.

வர்த்தக இதழான L'Expansion, பிரான்சின் PSAஇல் 5,000 வேலைகள் வெட்டப்படவிருக்கின்றன, மேலும் "3,000 ஏனைய ஒப்பந்ததாரர்களின் மற்றும் முகமைகளின் வேலைகள் என்னவாகுமென்று" எதுவும் கூறப்படவில்லை என்று குறிப்பிட்டுக்காட்டி, சார்க்கோசி உளறுகிறார்" என்று தலைப்பிட்ட ஒரு கட்டுரை பிரசுரித்தது. அது தொடர்ந்து எழுதியது, “PSAஇன் மூலோபாய முடிவுகளை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்ள சார்க்கோசிக்கு கடினமாக இருக்கிறது. 2008 போலில்லாமல், வேலை வெட்டுக்களைத் தடுக்கும் ஒரு வாகனத்துறை உடன்படிக்கையால் இப்போது அந்த கார் உற்பத்தியாளர் கட்டுப்பாடில்லை, மேலும் அனைத்திற்கும் மேலாக அரசு ரெனோல்டோடு இருப்பதைப் போல, PSAஇல் ஒரு பங்குதாரராகவும் இல்லை.”

உண்மையில், பிரெஞ்சு வாகனத்துறையின் இலாபத்தைப் பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்ட அதற்கான 6.5 பில்லியன் யூரோ பிணையெடுப்பின் பாகமாக செய்யப்பட்ட ஒரு வாகனத்துறை உடன்படிக்கை, வேலை வெட்டுக்களைத் தடுக்கவில்லை. கடந்த நான்காண்டுகளில், PSA பிரான்சில் சுமார் 23,000 வேலைகளை வெட்டியுள்ளது; 2010இல், வெளிநாடுகளில் 12,000 வேலைகள் உருவாக்கப்பட்டன.

ஏராளமான விருப்பு ஓய்வுகளாக (voluntary retirement) மறைமுக மாற்று திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. இதுபோன்ற திட்டங்களின் அடிப்படையில் 2008இல் 4,500 தொழிலாளர்கள் ஓய்வு பெற்றனர்.

சார்க்கோசியின் அறிவிப்புகள் மீதெழுந்த மக்களின் ஐயவாதம் மிகவும் திறமையாக நியாயப்படுத்தப்பட்டுள்ளது. ஜூனில் வெளியான PSA ஆவணங்கள் வடக்கு பாரீசில் ஒல்னே-சு-புவாவிலுள்ள மற்றும் கலேக்கு அருகிலுள்ள செவெல்னோர் மற்றும் மட்ரிட்டிலுள்ள PSA ஆலைகளை மூடும் விவரமான திட்டங்களை வெளியிட்டன. (பார்க்கவும்: “Carmaker Citroën-Peugeot to close plants in France and Spain”)

வேலைகள் மற்றும் ஆலைகளைக் காப்பாற்றுவதற்கான சார்க்கோசியின் சாதனையளவிற்கான நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை Le Monde ஒரு கட்டுரையில் விவரித்திருந்தது. Gandrange இல் ஆர்சிலெர்மிட்டல் கொதிகலன்கள் வெடித்த இடத்திற்கு ஏப்ரல் 2004இல் விஜயம் செய்து, அதற்கடுத்த ஆண்டு மூடவிருந்த அந்த ஆலையைச் செயல்பாட்டில் வைப்பதாக சார்க்கோசி வாக்குறுதி அளித்தார். இதேபோன்று சாண்டுவில் இல் உள்ள ரெனோல்ட் ஆலைக்கு 2008இல் அவர் செய்திருந்த விஜயமும், அதன் 4,500 பணியாளர்களை 2.500ஆக குறைப்பதிலிருந்து தடுத்துவிடவில்லை.

அரசாங்கம் அந்த வரலாறை வெற்று பொருளாதார தேசபக்தவாதத்திற்குப் பின்னால் மறைக்கிறது. வேலை அல்லது கூலியின் பாரிய வெட்டுக்கள் மற்றும் காண்டினென்டல், ரெனோல்ட், மற்றும் ஏனைய வாகனத்துறை நிறுவனங்களின் படிப்படியான ஆலைமூடல்களிலிருந்து வேலைகளைக் காப்பாற்ற தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் அதன் "இடது" ஆதரவாளர்களுடன் கூடி வேலைசெய்து வருவதாக முறையிடுகிறது.

ஐரோப்பா மற்றும் உலக கார்த்துறை சந்தை வேகம் குறைந்து வருவதென்பது, தற்காலிக உற்பத்தி நிறுத்தம் மற்றும் ஒட்டுமொத்த உற்பத்தி உற்பத்தி நிறுத்தத்தில் தங்கியிருக்கும் PSAஇன் விற்பனையாகாமல் இருக்கும் கார்களைக் குறைப்பதைக் குறிக்கிறது. PSAஇன் தலைமை செயலதிகாரி பிலிப் வாரென் அக்டோபர் 27இல் பத்திரிகைக்குத் தெரிவிக்கையில், ஐரோப்பிய சந்தையின் விலை ஒரு முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளதாக தெரிவித்தார். செப்டம்பரில் போட்டியாளர்கள் கார் விலைகளைக் குறைத்ததால், அந்நிறுவனமும் அதன் சந்தை இடத்தை இழக்காமல் இருக்க, குறிப்பாக சிறிய கார் விற்பனை துறையில் அதே போக்கைப் பின்பற்ற வேண்டியதாக இருந்தது.

ஐரோப்பாவில் "கடன் நெருக்கடி" தேவையின் வீழ்ச்சியை உண்டாக்கி இருப்பதாக குறிப்பிட்டுக் காட்டிய Le Figaro, கார் உற்பத்தி நிறுவனமான ரெனோல்டின் விற்பனைப்பிரிவு இயக்குனர் ஜிரோம் ஸ்டோல் கூறிய, “அக்டோபர்/நவம்பரில் ஐரோப்பிய சந்தை முழுவதிலும் கார் கொள்வனவுகள் (orders) 9 சதவீதத்திற்கு வீழ்ச்சியடையுமென்று நாங்கள் மதிப்பிடுகிறோம்,” என்ற கருத்தையும் மேற்கோளிட்டு காட்டியது. பிரான்சில், கடந்த ஆண்டுகளில் மிகக்குறைந்த அளவாக, கார் கொள்வனவுகள் செப்டம்பரில் சுமார் 15 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது.

இது கார் சந்தையில் ஏற்பட்டுள்ள உலகளாவிய வீழ்ச்சியின் பாகமாக உள்ளது. சீனாவில், விற்பனை அக்டோபரில் 1.1 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. நிபுணர்கள் 2011இல் 5 சதவீத உயர்விருக்குமென்று கணிக்கின்றனர், இது இந்த ஆண்டின் தொடக்கத்தில் 10 முதல் 15 சதவீதமிருக்கும் என்ற மதிப்பீட்டையும் விட மிகக் குறைவாகும். அதேகாலகட்டத்தில், இந்தியா அதன் சந்தையில் 24 சதவீத சரிவைக் கண்டது. இது 10 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய வீழ்ச்சியாகும். இந்தியா அதன் 2012 மார்ச் இறுதி வரவு-செலவு ஆண்டு கணக்கின் நெருக்கமாக, முன்னர் மதிப்பிடப்பட்ட 10இல் இருந்து 12 சதவீத உயர்விற்கு எதிராக, 2 முதல் 4 சதவீத உயர்வை மட்டுமே காட்டக்கூடும்.

PSA நிதியின்மையால் பிரான்சில் அதன் உற்பத்தியை வெட்டவில்லை, மாறாக பெரிய பொருளாதார வளர்ச்சியை அனுபவித்துவரும் மலிவுக்கூலி பிராந்தியங்களுக்கு உற்பத்தியை நகர்த்துவதன் மூலமாக பெரியளவில் இலாபங்களை ஈட்டுவதற்காகவே செய்கிறது. PSA கட்டமைத்துவரும் ஏழு புதிய ஆலைகளில், இந்தியாவில் ஒன்றும், ரஷ்யாவில் ஒன்றும், சீனாவில் ஒன்றும் உள்ளன.

பிரான்சில் 6,000 வேலை வெட்டுக்கள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், “கண்காணிப்பு ஆணையத்தின் (conseil de surveillance) தலைவர் தெர்ரி பெகியோட் [பிரேசில்] ஜனாதிபதி தில்மா ரௌஸ்சிஃபைப் பாராட்டிக் கொண்டிருந்தார்,” என்று Boursier.com எழுதியது. அவர்கள் அதன் போர்ட்டோ ரியல் (Porto Real) ஆலையின் உற்பத்தி இரட்டிப்பானதைக் கொண்டாடினர். இந்த தென் அமெரிக்க நாட்டைப் போலவே, ஐரோப்பில் கிடைக்கும் சேமிப்பும் சீனாவிலும், இந்தியாவிலும் மற்றும் தென் அமெரிக்க சந்தைகளிலும் புதிய ஆலைகளை அமைப்பதற்கான நிதியை PSAக்கு வழங்குவதில் உதவும். … ஐரோப்பாவிற்கு வெளியில் விற்பனை 50 சதவீதத்திற்கு உயரும் என்பதால், பிலிப் வாரென் மொத்தம் 3.6 பில்லியன் யூரோ முதலீடு செய்யவிருப்பதை உறுதிப்படுத்தினார். முதல் காலாண்டில் அவை இன்னமும் 39 சதவீதமாகவே இருந்தன. 'ஒரு நல்ல ஆண்டில் கூட, ஐரோப்பா 2 சதவீதத்திற்கு மேல் அதன் வளர்ச்சியைக் காணாது. … சீனாவிலோ, பிரேசிலிலோ, வேறெங்காவது தான் வளர்ச்சியை எட்டிப்பிடிக்க வேண்டும்,' என்று வாகனத்துறையின் ஆலோசனை நிறுவனமான AlixPartners இன் ஒரு வல்லுனர் லோரென்ட் பெட்டிஜோன் வலியுறுத்தினார்.”

PSAஉம், சார்க்கோசியும் அவர்களின் கொள்கைக்கு தொழிற்சங்கங்கள் தீவிர எதிர்ப்பை ஒன்றுதிரட்டாதென்ற உண்மையைச் சார்ந்துள்ளனர். தொழிற்சங்கங்கள் 2009 பின்னடைவின் போது PSA மற்றும் ரெனால்டுக்கு தனித்தனியாக அளிக்கப்பட்ட 3 பில்லியன் யூரோ அரசு பிணையெடுப்பை முழுமையாக ஆதரித்தன. அத்தோடு "கார் கொள்வனவிற்கான நிதியுதவி" (cash for clunkers) திட்டத்தில் 1 பில்லியன் யூரோ மானியங்களையும் ஆதரித்தன. அந்த பணம் இலாபத்தை தக்கவைக்கவும், உற்பத்தியை வேறுயிடத்திற்கு நகர்த்தவும் மற்றும் குறைக்கவும் பயன்படுத்தப்பட்டது.

வெளிநாட்டு தொழிலாளர்களின் வேலைகளை விலையாக கொடுத்து பிரான்சில் வேலைகளைக் காப்பாற்றி ஆக வேண்டுமென வாதிட்டு, தொழிற்சங்கங்கள் வேலை வெட்டுக்கள் மீதான பொதுமக்கள் எதிர்ப்பை தேசியவாத போக்கில் திருப்ப முயன்று வருகின்றன. ஒல்னே ஆலையில் உள்ள CGT நிர்வாக ஜோன்-பியெர் மெர்சியேர், PSAஇன் கொள்கையை "பலவீனமானதும், அதிர்ச்சியூட்டுவதாகவும்" குறிப்பிட்டார். “PSAவினால் பிரான்சில் வேலைகளை வைத்திருக்க முடியும். அதன் நிர்வாகம் ஷாங்காயிலும், சோ பாவ்லோவிலும் மற்றும் ஒருவேளை இந்தியாவிலும் கூட ஆராய்ச்சி & மேம்பாட்டு மையங்களை அபிவிருத்தி செய்ய தீவிரப்படுத்தி வருகின்றது... நாம் தான் PSAஇன் செல்வசெழிப்பை உருவாக்கியவர்கள் என்கிற நிலையில், வேலைகளை வெட்டுவதன் மூலமாக அந்த குழுமம் சர்வதேச அபிவிருத்தியை செய்யக்கூடாது,” என்று அவர் விவரித்தார்.

புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சியுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டிருக்கும் மற்றும் தொழிலாளர்களின் போராட்டங்களை விற்பதில் CGT உடன் உடந்தையாய் இருந்ததற்கான ஒரு நீண்டகால வரலாறைக் கொண்டிருக்கும் SUD (Solidarity-Unity-Democracy) தொழிற்சங்கம், அறிவித்தது: “முறையான அணுகுமுறைகளோடு, குறிப்பாக ஒரு தேசிய வேலைநிறுத்த நடவடிக்கை மூலமாக PSA நிர்வாகத்தை திரும்ப கொண்டு வரமுடியுமென்று நாங்கள் நம்புகிறோம்.”

உண்மையில் தொழிலாளர்கள் வேலைநிறுத்த நடவடிக்கைக்கு முறையிட தயாராக இருக்கின்றன போதினும், SUD உட்பட தொழிற்சங்கங்கள், அத்தகையவொரு முறையீட்டை வெளியிடுவதற்கு தீவிர விரோதமாக உள்ளன. அதுவொரு அரசியல் வெடிப்பைத் தூண்டிவிட்டு, அவர்களின் கட்டுப்பாட்டிலிருந்து அது மீறிசென்று, சார்க்கோசியின் அரசாங்கத்தை வீழ்த்திவிடுமென்று அவை அஞ்சுகின்றன. ஒரு "தேசிய வேலைநிறுத்தத்திற்கு" SUDஇன் அழைப்பு ஒரு வெற்றுத்தனமான, சம்பிரதாயமான குணாம்சத்தைக் கொண்டுள்ளது.

இலாபகர கொள்கையின் அடித்தளத்தில் பிரான்சில் வேலைகளை தக்கவைப்பதற்கான தொழிற்சங்கங்களின் முன்னோக்கு, தொழிலாளர்களுக்கு எதிராக பாரிய கூலி வெட்டுக்களைத் திணிப்பதற்கு பாதை அமைத்தளிக்கின்றது. இவ்விதத்தில் தான் அமெரிக்காவிலுள்ள UAWஆல் இதற்கான பாத்திரப்பங்கு ஆற்றப்பட்டது. UAW, புதிதாய் சேர்க்கப்பட்ட தொழிலாளர்களுக்கு முந்தைய தொழிற்சங்கங்களின்படி ஒருமணி நேரத்திற்கு 28 டாலர் என்பதில் 50 சதவீத வெட்டுக்களைத் திணிக்க கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு உதவியது. பின்னர் மெக்சிக்கோ மற்றும் சீனா போன்ற மலிவுக்கூலி நாடுகளிலிருந்து உற்பத்தியைத் திரும்ப கொண்டுவந்துவிட்டதற்காக அதனை அதுவே பாராட்டிக் கொண்டது.

உலகம் முழுவதிலுமுள்ள தொழிலாளர்களை ஒன்றிற்கெதிராக ஒன்றை நிறுத்தும் அனைத்து தேச எல்லைகளும் இந்த உலகளாவிய போட்டி ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளை எதிர்த்து போராடுவதற்கான ஒரேவழி, தொழிலாளர்கள் தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றின் போலி-இடது அரசியல் கூட்டாளிகளிடமிருந்து முறித்துக் கொள்வதே ஆகும். அவர்கள் வாகனத்துறை மற்றும் ஏனைய தொழிற்துறையின் மற்றும் வங்கிகளின் சமூக உரிமையை தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வருவதற்கான ஓர் அரசியல் போராட்டத்தின் அடிப்படையில் சர்வதேசரீதியில் தொழிலாளர்களை இணைத்துக் கொண்டு, தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனப்பட்ட, நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்ப வேண்டும்.