சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக் 

Sydney Film Festival: Filmmaker Ivan Sen speaks to WSWS

சிட்னி திரைப்பட விழா: இயக்குனர் இவான் சென் உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசுகிறார்

By Richard Phillips
26 July 2011

use this version to print | Send feedback

எழுத்தாளரும்/இயக்குனருமான இவான் சென், சிட்னி திரைப்பட விழாவின் போது, அவருடைய சமீபத்திய திரைப்படமான தூமிலாஹ் (Toomelah) குறித்து உலக சோசலிச வலைத் தளத்துடன் உரையாடினார்.

ரிச்சார்ட் பிலிப்ஸ்: ஏன் தூமிலாஹ் படம் எடுக்க முடிவெடுத்தீர்கள்? எவ்வாறு அந்த முடிவுக்கு வந்தீர்கள்?

 

இவான்
சென்

இவான் சென்: இது என் அம்மாவின் சமூகம், அவருடைய அம்மாவும் அங்கே தான் வாழ்ந்தார். நான் தூமிலாஹில் வளரவில்லை. ஆனால் அவ்வப்போது அங்கே சென்று வருவேன். உயர்நிலை பள்ளிப்படிப்பை முடித்து, புகைப்படக்கலை படித்துக் கொண்டிருந்த போது, நானே அந்த இடத்திற்கு மீண்டும் சென்றேன். நிறைய புகைப்படங்கள் எடுத்தேன். திரைப்படங்கள் உருவாக்க தொடங்கிய போது, அங்கே ஏதாவது செய்ய வேண்டுமென்று என்னுடைய உள்ளுணர்வில் எப்போதும் இருந்து கொண்டே இருந்தது. ஆனால் சமீபத்திய காலம் வரையில் எவ்வாறு செய்வதென்று தீர்க்கமாக உணராமல் இருந்தேன்.

ஒரு பரிசோதனையாக நான் ட்ரீம்லேண்ட் (Dreamland) என்றவொரு படத்தை எடுத்தேன். அதில் நானும், இன்னும் இரண்டொரு நடிகர்களும் மட்டும், இன்னமும் கூட வேலை செய்து கொண்டிருக்கிறோம். அது எனக்கொரு வழிமுறையையும், மேலும் நான் விரும்பிய ஒருவித உண்மையான வெளிப்பாடுகளை பதிவுசெய்ய அது எனக்கு நம்பிக்கையை கொடுத்தது. தூமிலாவிற்கு நான் ஒரு பெரிய குழுவைக் கூட்டிச் செல்ல வேண்டி இருக்கவில்லை. அப்படியிருந்திருந்தால், அந்த சமூகம் திரைப்படத்திற்கு எவ்வாறு பிரதிபலிப்பை காட்டியதென்பதை அந்த குழு நன்கறிந்திருக்கும்.

ரிச்சார்ட்: அந்த கதையை நீங்கள் எவ்வாறு வளர்த்தெடுத்தீர்கள்?

இவான் சென்: அந்த இடத்தையும், டேனியல் போன்ற குழந்தைகளையும் பார்ப்பதில் நான் ஏறத்தாழ ஒரு மாதம் செலவிட்டிருந்தேன். அதிலிருந்து தான் அது வடிவெடுத்தது. எல்லா வசனங்களும், எல்லா உறுதிமொழிகளும், நான் அங்கே என்ன கேட்டேனோ அவற்றிலிருந்து வருகின்றன. அதேபோல, அந்த சூழ்நிலைகள் அங்கே நேரடியாக நான் கவனித்த அல்லது அங்கே வசிப்போரிடமிருந்து என்னை வந்தடைந்தவைகளில் இருந்து எடுக்கப்பட்டது.

படத்திற்கு ஏற்றவிதத்தில் திரைக்கதை மாற்றப்பட்டது, வேறுவார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், பல காட்சிகளில் என்ன செய்ய வேண்டும், செய்ய வேண்டியதில்லை என்பது மட்டும் மாற்றப்பட்டது. சில காட்சிகள் அந்த இடத்திலேயே உருவாக்கப்பட்டன. படத்தில் வரும் டேனியலின் தந்தை (நிஜத்திலும் இவர் தான் தந்தை) ஒரு சிறந்த நடிகர். ஆகவே அந்த திறமையைப் பயன்படுத்த நான் சில மேலதிக காட்சிகளையும் உருவாக்கினேன்.

ரிச்சார்ட்: முக்கியமாக இத்தகைய நிலைமைகளில் வாழும் பழங்குடி மக்களின் வாழ்க்கை எதார்த்தத்தைப் பற்றிய படமென்பதால், இது மிகவும் கடிமான ஒரு படம் தான்.

இவான்: உண்மை தான். ஆனால் ஓர் அரசியல் அறிக்கை உருவாக்குவதல்ல என் நோக்கம். அந்த குறிப்பிட்ட பையனின், அவனது சமூகத்தின் அனுபவங்களின் துல்லியமாக பிரதிபலிப்பைக் காட்டும் ஒருபடத்தை உருவாக்குவது தான் என்னுடைய நோக்கம். தூமிலாவில் உள்ள மக்கள் அந்த விஷயங்களை உள்ளபடியே ஓர் அரசியல் பிரச்சினைகளாக எடுத்துக் கொள்வதில்லை. இதுதான் அவர்களின் வாழ்க்கை. என்னுடைய சகோதரி உட்பட அந்த பழங்குடி மக்கள் தூமிலாஹ் படத்தைப் பார்க்கும் போது, வெறுமனே அவர்கள் படத்தைப் பார்த்து சிரிக்கிறார்கள்; அவர்களுக்கு இந்த நிலைமைகள் தெரியும். அது உங்களின் கருத்தோட்டத்தைப் பொறுத்திருக்கிறதென்று நான் நினைக்கிறேன்.

நீங்கள் வலுக்கட்டாயமாக உங்களின் பாரம்பரிய மண்ணிலிருந்து ஏதோவொரு அரசின் அதிகாரத்தால் வெளியேற்றப்படும் போது, உங்களின் இருப்பு சார்ந்த அனைத்துமே ஓர் அரசியல் பிரச்சினையாகி விடுகிறது. உங்கள் தந்தை ஒரு குடிகாரராக இருக்கும் போது, உங்களின் சகோதரர் சிறையில் அடைக்கப்பட்டும், உங்களின் மனதிற்குப் பிடித்த அத்தை அவருடைய இளம் வயதிலேயே அதிகாரிகளால் பிடித்துச் செல்லப்பட்டால், அந்நிலையில் உங்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொன்றும் ஒரு பிரச்சினை தான். உண்மையில், நீங்கள் மூச்சுமுட்டும் பிரச்சினையில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்றாகும்.

என்னுடைய படம், மக்கள் என்ன செய்ய வேண்டும் என்றோ அல்லது அவர்கள் எதை சிந்திக்க வேண்டுமென்றோ அறிவுறுத்துவதை நான் விரும்பவில்லை. ஆனால் சூழ்நிலைகளைப் புரிந்துகொள்ள அப்படங்கள் அவர்களை அனுமதிக்கும். ஒருவேளை இத்தகைய பிரச்சினைகள் ஏதாவதொரு வழியில் தீர்க்கப்படுமென்றால், பின்னர் உண்மையான அந்த சூழ்நிலை என்னவாக இருந்தாலும் வரவேற்கப்படும்; அது ஆழ்ந்து உள்ளிருந்து வர வேண்டும்.

ரிச்சார்ட்: இந்த ஆண்டின் கேனஸ் திரைப்பட விழாவில் தூமிலாஹ் திரையிடப்பட்டதே. அதற்கு என்ன மாதிரியான வரவேற்பு இருந்தது?

இவான்: நம்ப முடியாததாக இருந்தது. படம் முடிந்த போது, சுமார் பத்து நிமிடங்களுக்குக் கைத்தட்டல் இருந்தது. டேனியலும், ஏனைய நடிகர்களும் படத்தோடு ஒன்றிபோய், உடைந்து போயிருந்தனர். மற்ற பார்வையாளர்கள் அழத் தொடங்கிவிட்டார்கள். அது மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது. தூமிலாஹ் சமூகத்தின் எதிர்காலம், வாழ்க்கை நிலைமைகள் குறித்து அங்கே நிறைய கேள்விகள் எழுந்தன. அத்தோடு படமாக்கப்பட்ட செயல்முறை குறித்தும் அங்கே விவாதிக்கப்பட்டன.

ரிச்சார்ட்: வடக்கு மாகாணத்தில் மத்திய அரசு "தலையீடு" செய்த நான்காவது ஆண்டு இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அந்த தலையீடு, அங்கிருந்த பழங்குடி மக்களின் சமூகநலன்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளை முக்கியமாக அழித்துவிட்டது. தூமிலாஹ் எடுக்க வேண்டுமென்று நீங்கள் முடிவெடுத்ததில் அதன் தாக்கம் இருந்ததா?

இவான்: நிஜமாக இல்லை. நேர்மையோடு கூறுவதானால், அந்த தலையீடு குறித்து எனக்கு அவ்வளவாக தெரியாது. நிறைய மக்களுக்கும் கூட அதுகுறித்து தெரியாது என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். அதன் நோக்கமென்ன, அதன் வழிமுறைகள் என்ன? இது எதுவுமே எனக்கு புரியவில்லை, ஆகவே அதுகுறித்து என்னால் எந்த கருத்தும் கூற முடியாது.

அந்த பழங்குடி மக்களிடையே ஏதோவொரு விதத்தில் கடந்த இருநூறு ஆண்டுகளாக ஒரு தலையீடு செய்யப்பட்டு வருவதை நீங்கள் தான் சொல்ல வேண்டுமென்று நான் நினைக்கிறேன். தற்போதைய இந்த தலையீடு அரசாங்கங்கள் ஏவிய அம்புகளில் மற்றொரு அம்பாக இருக்கிறது. சமூக சேவைத்துறையால் [DOCS] பல குழந்தைகள் இன்றும் கூட அவர்களின் பெற்றோர்களிடமிருந்து பிரித்து எடுத்து செல்லப்படுகிறார்கள். இது இன்றும் கூட நடந்துவது அசாதாரணமாக உள்ளது.

ரிச்சார்ட்: அந்த படத்தின் உங்கள் நடிகர்களில் ஒரேயொருவர் மட்டுந்தான் தொழில்ரீதியிலான நடிகர் (டீன் டேலி ஜோன்ஸ்). டேனியலையும், மற்றவர்களையும் எவ்வாறு ஒவ்வொரு காட்சிக்கும் தயார் செய்தீர்கள்?

இவான்: என்னுடைய இயக்கம் சில சமயம் மிகவும் நுட்பமானதாக  இருக்கும். பல சந்தர்ப்பங்களில் அவ்வாறு இல்லாமலும் போகும். டேனியல் விசித்திரமானவன். படப்பிடிப்பு வளர வளர, அவன் மிகவும் திறமைசாலியாகிவிட்டான். நாங்கள் படப்பிடிப்புக்குத் திரும்ப வேண்டியதுதான். வேலையைச் செய்ய வேண்டியது தான். ஒவ்வொரு கணமும் ஒரு சிறந்த நடிப்பு வெளிப்பட்டது. அது மிகவும் அற்புதமாக இருந்தது. என்னை அது தடுமாற செய்துவிட்டது. குழந்தைகளைக் குறித்த படங்களில் நீங்கள் வேலை செய்யும் போது, அவர்களுடைய நடத்தையில் அவ்வாறான அறியாமையும், நனவற்றதன்மையும் நிறைய இருக்கும். அது கலப்படமில்லாமல், மிகவும் ஆற்றலோடு இருக்கும். அது இந்த பிரபஞ்சத்தைப் போல, மிகவும் அழகானது.

காட்சியைப் படமாக்குவது, இயக்குவது என இரண்டையும் ஒரேநேரத்தில் செய்வதை நான் விரும்புகிறேன். கேமிராவைப் பிடித்துக் கொண்டே, உங்களுடைய நடிகர்களுடன் சக கூட்டாளியாக இருப்பது உண்மையிலேயே ஒரு சாகசம் தான். உண்மையில், நடிப்பை ஒரு தனித்திரையில் பார்க்காமல், மாறாக அதை கேமிராவில் பார்த்து தீர்மானிப்பது எனக்கு சிறிது கடினமாகவே இருக்கும். ஆனால் அங்கே அருமையான உள்ளுணர்வு போன்ற ஏதோவொன்று இருக்கிறது. என்னால் அந்த விதத்தில் விஷயங்களை மிகவும் துல்லியமாக மதிப்பிட முடிகிறதென்று நினைக்கிறேன்.

ரிச்சார்ட்: நீங்கள் அந்த குடியேற்றத்தை பார்த்து வரும் இந்த ஆண்டுகளில், தூமிலாஹ் நிறைய மாறியிருக்கிறதா?

இவான்: அங்கே இருக்கும் தேவாலயம் ஓரளவிற்கு அந்த இடத்தைத் இணைத்து வைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் அந்த சூழ்நிலையில் வளர்ந்த வயதானவர்கள் இறந்துவிட்டனர். ஆகவே அது அடிப்படையிலேயே சிதைந்து போயுள்ளது. அங்கே நவீன ஆஸ்திரேலிய வாழ்க்கை முறையோ அல்லது ஒரு பாரம்பரிய வாழ்க்கை முறையோ எதுவும் கிடையாது. அங்கே அமெரிக்க ராப் கலாச்சாரத்தின் மற்றும் ஏனையவற்றின் தாக்கங்கள் இருக்கின்றன. அங்கே குடி மற்றும் போதை பழக்கங்கள், குடும்ப சம்பிரதாயங்கள் மற்றும் வேறு பிரச்சினைகளும் இருக்கின்றன. ஆனால் அதற்கருகில் உள்ள மோரே நகரில் இருப்பது போல நிறைய பகைமையான, பதட்டங்கள் போன்ற எதுவும் அங்கே இல்லை. அது ஒரு சிறிய யுத்த பூமியைப் போல உள்ளது. என்னுடைய அடுத்த படம் மோரேயில் படமாக்கப்படும். அது அந்த சூழ்நிலையில் உள்ள இன உறவுகளைக் குறித்து இருக்கும்.