சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

European Union prepares for Greek state bankruptcy

ஐரோப்பிய ஒன்றியம் கிரேக்க அரச திவாலுக்கு தயாரிக்கிறது

By Peter Schwarz
8 October 2011

use this version to print | Send feedback

கிரேக்கத்தைப் பொறுத்தவரை ஐரோப்பிய நிறுவனங்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொண்டுவிட்டன என்பது தெளிவாகியுள்ளது. “நாட்டைமீட்பதற்குப் பதிலாக, அவை இப்பொழுது கிரேக்கத்தின் திவால்தன்மை பற்றியும், அது மற்ற நாடுகளுக்கும் தொற்றிவிடுதல் என்னும் ஆபத்தைக் குறைப்பது பற்றியும் விவாதிக்கின்றன. கிரேக்கத்தின் கடனை தீர்ப்பதற்கு உத்தரவாதம் கொடுக்கும் என அமைக்கப்பட்ட யூரோ மீட்பு நிதி இப்பொழுது அரசாங்க திவாலின் விளைவாக ஏற்படும் விளைவுகளில் கடன் கொடுத்துள்ள வங்கிகள் பாதுகாப்பை உறுதிசெய்யப் பயன்படுத்தப்படுகிறது.

இத்தகைய போக்கு மாற்றம் படிப்படியாக நடந்துவிட்டது; இது பங்குச் சந்தைகள் மற்றும் நிதியச் சந்தைகளில் தீவிர ஏற்ற இறக்கங்களின் அழுத்தம், வங்கித் தோல்விகள் குறித்த அச்சம் மற்றும் கிரேக்க அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு பெருகிய எதிர்ப்பு வந்துள்ளது ஆகியவற்றினால் ஏற்பட்டுள்ளது

கட்டுப்பாட்டை மீறிய சங்கிலித்தொடர் போன்ற பின்விளைவு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம்தான் முன்னதாக ஐரோப்பிய ஒன்றியம் கிரேக்கச் சரிவு என்னும் இடரைத் தடுப்பதற்கு முற்பட்ட காரணம் ஆகும். அவர்கள் மிகப் பெரிய கடன்கொடுத்த வங்கிகளின் திவால் பற்றியும் அச்சம் கொண்டன. இதனால் அமெரிக்காவில் எப்படி செப்டம்பர் 2008 ல் லெஹ்மன் பிரதர்ஸ் சரிவிற்குப் பின் திவால் ஏற்பட்டதுபோல் இன்னும் அதிக வங்கிகள் பெரும் பாதாளத்தில் விழுந்திருக்கும். போர்த்துக்கல், அயர்லாந்து, ஸ்பெயின் மற்றும் இத்தாலி போன்ற மிக அதிக கடன்பட்டுள்ள நாடுகளும் இப்பொழுது யூரோப்பகுதியில் அங்கத்துவநாடாக இருக்கும் கிரேக்கத்திற்கு கடன் கிடைக்காமல் போய் திவாலானால், அவற்றிற்கும் கடன் கிடைக்காது என்ற அச்சத்தில் உள்ளன.

இச்சூழ்நிலையில், கிரேக்கத்தில் பில்லியன் யூரோ மீட்புப் பொதிகள் நேரத்தைக் கடத்துவதற்குத்தான் உதவுகின்றன. இவை கிரேக்க அரசுக்கு ஆதாயம்  கொடுத்து விடவில்லை; நிச்சயமாக கிரேக்க மக்களுக்கு எந்த நலன்களையும் கொடுத்துவிடவில்லை; மாறாக கடன்கொடுத்த வங்கிகளின் பணப்பெட்டிகளுக்குள் நேரடியாகச் சென்றன. அவை தங்கள் கடன்களை முழு வட்டியுடன் திரும்பப் பெற்றுக் கொண்டன. ஐரோப்பிய மத்திய வங்கியும் கிரேக்க அரசாங்கப் பத்திரங்களை சந்தையில் இருந்து ஏராளமாக வாங்கியிருந்தது. இதனால் வங்கிகள் தங்கள் மேலதிக பங்குப்பத்திரங்கள்மூலம் எதிர்கொண்ட இடர்கள் நீக்கப்பட்டன.

கிரேக்க மீட்புப் பொதிகள், கடுமையான செலவு குறைக்கும் நடவடிக்கைகளுடன் இணைந்துள்ளன. இவைதான் ஆரம்பத்தில் இருந்தே கிரேக்கம் ஒரு பொருளாதார மீட்சியடைவதை தடுத்து வந்தன. சாதாரண மனிதனுக்குக் கூட சிக்கன நடவடிக்கைகளினால் ஏற்படும் மந்தநிலை, எத்தகைய வரவு-செலவுத் திட்ட சேமிப்புக்களை இல்லாதொழித்துவிடும் என்பது நன்கு தெரியும்.

சிக்கன நடவடிக்கைகளின் நோக்கம் வரவு-செலவுத் திட்டத்தை மறுகட்டமைப்பது என்பதுடன் நின்றுவிடவில்லை; இது தொழிலாள வர்க்கத்தை அழித்துவிடும் தன்மையையும் உடையது. முக்கூட்டு என அழைக்கப்படும் ஐரோப்பிய மத்திய வங்கி, ஐரோப்பிய ஆணையம் மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றின் ஆணைகளின்படி கிரேக்க அரசாங்கம் ஓய்வூதியங்கள், வருமானங்கள் ஆகியவற்றை வெட்டி, அரசதுறை வேலைகளில் பல்லாயிரக்கணக்கானவற்றை அகற்றி, சுய வேலை பார்ப்போரையும் வரிகளை உயர்த்தியதின் மூலம் திவாலுக்குத் தள்ளியது. அதே நேரத்தில் செல்வந்தர் உயரடுக்கு வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் தங்கள் செல்வத்தை சேமித்துக் குவித்துள்ளனர்.

இதற்கிடையில், இந்நடவடிக்கைகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் கிரேக்க அரசாங்கத்தை பெருகிய முறையில் அச்சுறுத்தியுள்ளன. இம்மாதம் மட்டும் பல பொது வேலைநிறுத்தங்களும் எதிர்ப்பு நடவடிக்கைகளும் நடத்தப்பட்டுள்ளன. அரசாங்கத்துடன் மிகவும் நெருக்கமாக உழைத்துவரும் தொழிற்சங்கங்கள் பெருகிய முறையில் எதிர்ப்பைக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருவதில் இடரைக் கொண்டுள்ளன.

முக்கூட்டின் பிரதிநிதிகள் இவற்றில் இருந்து கிரேக்கத்தை கைவிடும் நேரம் வந்துவிட்டது என்ற முடிவிற்கு வந்தனர். அரச திவால் என்பதின் பொருள் அரசாங்கத்திடம் ஊதியங்கள், ஓய்வூதியங்கள் மற்றும் பிற பொதுச் செலவுகளைச் செய்ய நிதிகள் இருக்காது என்பதாகும். அமெரிக்கக் கார்த்தயாரிப்பு நிறுவனங்கள் திவால் பதிவு விதிகளைப் பயன்படுத்தி தங்கள் தொழிலாளர் பிரிவிற்கு கொடுக்க வேண்டிய நிதிய கடன்பாடுகளை ஒரே கணத்தில் அழித்துவிட்டனவோ, அதேபோல் கிரேக்க அரசாங்கமும் திறமையுடன் அதன் தற்பொழுதுள்ள ஒப்பந்தங்கள், சட்டபூர்வ ஏற்பாடுகள் அனைத்தையும் தகர்த்துவிடமுடியும். அதன் பின் பிரச்சினை எத்தனை வேலைகள் அகற்றப்படும், எந்த அளவிற்கு ஊதியங்கள் குறைக்கப்படும் என்று இல்லாமல், எவருக்கு வேலை இருக்கும் என்பதாகத்தான் இருக்கும்.

கிரேக்க அரசாங்கத் திவால் என்பது மற்ற ஐரோப்பிய நாடுகளில் உள்ள தொழிலாளர்களை அச்சுறுத்தவும் பயன்படுத்தப்படும். இது ஒரு சந்தேகத்திற்கு இடமில்லாத அச்சுறுத்தலைத்தான் பிரதிபலிக்கும். தங்கள் சொந்த அரசாங்கங்கள் சுமத்தும் கடமையான சிக்கன நடவடிக்கைகளை அவை ஏற்கவில்லை என்றால் என்ன நேரிடும் என்பதைத்தான் அவர்களுக்குக் காட்டும்.

கிரேக்கத்திலேயே அரச திவால் என்பது வன்முறையிலான சமூக அமைதியின்மையைத் தூண்டும். ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் தொழிற்சங்கங்களின் உதவியுடன் இதைத் தனிமைப் படுத்திவிட முடியும் என எதிர்பார்க்கிறது. இதுவரை அவை கிரேக்கத் தொழிலாளர்களுக்காக சர்வதேச தொழிலாளர்கள் ஒத்துழைப்பை ஏற்பாடு செய்ய மறுத்துள்ளன. கிரேக்க இராணுவம் மீண்டும் கருத்தை வெளியிட்டு PASOK அரசாங்கத்தை வீழ்த்தக் கூடும் என எச்சரித்துள்ளது. “தளபதிகளின்ஆட்சியின்கீழ் இராணுவம் கிரேக்கத் தொழிலாள வர்க்கத்தை 1967 முதல் 1974 வரை இரத்தக்களரி கொட்டிய சர்வாதிகாரத்தின் மூலம் அடக்கி வைத்திருந்தது.

தற்பொழுது ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய கவலை  ஒரு கிரேக்க அரசாங்கத் திவால் சர்வதேச வங்கிகள் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளையும் சரிய விடாமல் தடுப்பது என்பதுதான். கடந்த சில வாரங்கள், நாட்களாக நடக்கும் விவாதங்கள் முடிவுகள் அனைத்தும் இப்பிரச்சினையைச் சுற்றித்தான் உள்ளன.

யூரோப் பகுதி அரசாங்கங்கள் ஏற்கனவே ஜூன் மாதத்தில் EFSF எனப்படும் யூரோ மீட்பு நிதியை அதிகரித்து நிறுவனத்தின் அதிகாரங்களை பெருக்கவும் உடன்பட்டிருந்தன. பாதிக்கப்பட்டிருக்கும் யூரோப்பகுதி நாடுகளுக்கு கடன் பணத்தை உத்தரவாதம் செய்வது என்பதுடன் மட்டும் இல்லாமல், EFSF இப்பொழுது பாதிப்படையக்கூடிய நாடுகளின் அரசாங்கப் பத்திரங்களை வெளிச் சந்தைகளில் வாங்கலாம், அதையொட்டி வங்கிகள் முகங்கொடுக்கும் இடர்களை அகற்றலாம்.

EFSF அல்லது பிற பொது நிதிகளில் இருக்கும் வங்கிகளின் மூலதன இருப்புக்களை அதிகரித்தலும் இப்பொழுது விவாதத்திற்கு வந்துள்ளன. இதுதான் கடந்த வாரம் செவ்வாயன்று ஐரோப்பிய நிதி மந்திரிகளின் கூட்டத்துடைய மையக் கருத்தாக இருந்தது. EBA எனப்படும் ஐரோப்பிய வங்கிகள் அதிகாரக்குழு மந்திரிகளை அனுப்பிவைத்து கிரேக்கம் அது கொடுக்க வேண்டிய பணத்தைத் திருப்பித்தராவிட்டால் எந்த அளவிற்கு ஐரோப்பிய வங்கிகள் அதனை தாங்கிக்கொள்ள இயலும் என்பதைச் சரிபார்க்க முற்பட்டது.

புதன் கிழமை அன்று ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் இந்த வழிவகைக்கு உடன்பட்டார். ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் ஜோஸே மானுவல் பரோசோ மற்றும் முக்கிய சர்வதேச நிதிய நிறுவனங்களின் தலைவர்களுடன் பேச்சுக்கள் நடத்திய பின்னர், வங்கிகளுக்கு அவசரமாக நிதி தேவைப்பட்டால், ஐரோப்பிய நாடுகள் நிதி உதவியை தாமதப்படுத்தக்கூடாது, ஏனெனில் அதுபணம் நியாயமாக முதலீடு செய்யப்படுவதற்கு ஒப்பாகும்என்று அவர் கூறினார்.

வியாழன் அன்று ஐரோப்பிய மத்திய வங்கி, இதனால் ஆபத்திற்கு உட்பட்டுள்ள வங்கிகளுக்கு நிறைய பணம் கொடுத்து ஆதரிப்பதாக முடிவெடுத்தது.

வேறுவிதமாகக் கூறினால், திவாலை எதிர்நோக்கியிருக்கும் யூரோப்பகுதி நாடுகளை மீட்பதற்குப் பதிலாக, யூரோமீட்புப் பொதியின் நிதிகள் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கியின் நிதிகள் இப்பொழுது கடன்பட்டுள்ள நாடுகள் திவாலாகும்போது அவற்றிற்குக் கடன் கொடுத்த வங்கிகளை பிணை எடுக்கத்தான் பயன்படுத்தப்படும்.

ஒரு கிரேக்க அரச திவாலில் இருந்து தப்பிப் பிழைக்க ஐரோப்பிய வங்கிகளுக்குக் குறைந்தப்பட்சம் 200 முதல் 300 பில்லியன் யூரோக்கள் கூடுதல் முதலீடு தேவை என்று வல்லுனர்கள் நம்புகின்றனர். 2008 நிதிய நெருக்கடியின்போது வங்கிப் பிணை எடுப்பு நடந்தது போல், இந்த நிதிகள் மீண்டும் தொழிலாள வர்க்கத்தின் இழப்பில் கொண்டுவரப்படும் சிக்கன நடவடிக்கைகள் மூலம் ஈடுகட்டப்படும்.

பல அரசியல் வாதிகளும் செய்தி ஊடகப் பிரதிநிதிகளும் இப்பொழுது கிரேக்க அரசாங்கத் திவாலை உறுதியாக வர உள்ளது எனக் கருதுகின்றனர்.

கடந்த வார நிகழ்வுகள்பற்றி Spiegel Online கருத்துக் கூறுகையில், “இப்பொழுது நிதிய நிறுவனங்கள் வரிகொடுப்போர்-மக்களின்- நிதியின் ஆதரவைப் பெறும். அது நெருக்கடியில் நாடுகளை மீட்பதை விட மலிவாக இருக்கும்.” என்று எழுதியது.

ஐரோப்பாவின் முக்கிய நிதியச் செய்தித்தாளான பைனான்ஸியல் டைம்ஸ் வியாழன் அன்றுயூரோவைக் காப்பாற்றவும்கிரேக்கம் கடனை திரும்ப செலுத்தாது போகட்டும்என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டது.

இதன் கடன், வரவு செலவுத்திட்டம் மற்றும் நடப்புக் கணப்புப் பற்றாக்குறை மற்றும் மிக அதிக அளவில் போட்டித்தன்மை இல்லாத நிலையில், கிரேக்கம் கடன் பொறியில் இருந்து தப்பிக்க முடியாது. ஒன்றன்பின் ஒன்றாகச் சுமத்தப்படும் சிக்கன நடவடிக்கை மருந்துகள் நோயாளியைக் கொன்றுவிடும்.”

நாட்டின் திவால்தன்மையை நிர்வகிக்க, பைனான்ஸியல் டைம்ஸ்  “வங்கிகள் ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் மறுமூலதனம் பெறவேண்டும், ஐரோப்பிய நிதிய உறுதிப்பாட்டு நிறுவனத்தின் -EFSF- செயல்திறன் 2,0000 பில்லியன் யூரோக்கள் என நான்கு மடங்கு அதிகரிக்கப்பட வேண்டும்என்று அழைப்பு விடுத்துள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கான செலவு ஐரோப்பா முழுவதும் உள்ள தொழிலாளர்களால் ஏற்கப்பட வேண்டும். அவை இன்னும் வேலைக்குறைப்புக்கள், ஊதிய வெட்டுக்கள், சிக்கன நடவடிக்கைகள் என்ற வடிவமைப்பில் இருக்கும்.

கிரேக்க அரசாங்க திவாலுக்கான தயாரப்புக்கள் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக ஆளும் நிதிய உயரடுக்கின் தாக்குதலில் ஒரு புதிய கட்டத்தை குறிக்கின்றன. இத்தாக்குதல் ஐரோப்பிய தொழிலாளர்கள் அனைவரும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை ஏற்றுக்கொண்ட பொதுப் போராட்டத்தின் மூலம்தான் விடையிறுக்கப்பட வேண்டும். அத்தகைய வேலைத்திட்டம் வங்கிகளையும் பெருநிறுவனங்களையும் பறிமுதல் செய்து தேசியமயமாக்கி, ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளை நிறுவுவதில் கவனத்தை செலுத்தும்.