சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : லிபியா

NATO and anti-Gaddafi forces in Libya step up bombardment of Sirte

லிபியாவில் சிர்ட்டேமீதான குண்டுத்தாக்குதலை நேட்டோவும் கடாபி-எதிர்ப்புச் சக்திகளும் முடுக்கி விடுகின்றன

By Patrick O’Connor 
10 October 2011

use this version to print | Send feedback

தேசிய இடைக்கால சபை (NTC) உடன் இணைந்து கடாபி-எதிர்ப்புப் போராளிகள் திரிப்போலிக்கும் பெங்காசிக்கும் இடையே உள்ள கடலோர லிபிய நகரான சிர்ட்டாவின் பெரும்பகுதி மீது கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளன; இது நேட்டோ சக்திகளுடன் கடந்த வெள்ளியன்று அவர்கள் இணைந்து நடத்திய தாக்குதலுக்குப் பின் வந்துள்ளது.

சிர்ட்டேயின் பல்கலைக்கழகம், முக்கிய மருத்துவமனை, Ouagadougou மாநாட்டு மையம் மற்றும் முக்கிய இடங்களின்மீது NTC போராளிகள் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 30% நகரத்தின் முக்கியமான பகுதிகள், பல நூற்றுக்கணக்கான கடாபி ஆதரவுப் போராளிகள் வசம் இருப்பதாக அல்-ஜசீரா தெரிவிக்கிறது. NTC போராளிகளின் தளபதிகள் குடிமக்கள் வசிக்கும் பகுதிகளில் இன்னும் சில நாட்களாவது குறைந்தப்பட்சம் போர் நடத்தியபின்தான் கட்டுப்பாட்டை முழு நகரத்தின்மீதும் கொள்ளமுடியும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளனர்; அப்பகுதிகளில் கிட்டத்தட்ட 75,000 முதல் 100,000 மக்கள் வரை வசித்துவந்தனர்.

நேட்டோ மற்றும் அதன் சார்பிலுள்ள படைகளால் ஏற்கனவே பல போர்க்குற்றங்களும், கொடூரங்களும் இழைக்கப்பட்டுள்ளன. ஒரு நீடித்த முற்றுகைக்கு மக்கள் உட்படுத்தப்பட்டுள்ளனர்; இம்முற்றுகை ஒரு மனிதாபிமான நெருக்கடியைத் தோற்றுவிக்கும் வடிவமைப்பைக் கொண்டிருந்தது. NTC போராளிகள் மின்சாரம் மற்றும் குடிநீர் வினியோகமுறைகளைத் துண்டித்து நகரத்திற்குள் உணவு மற்றும் மருந்துகள் செல்வதைத் தடுத்துள்ளனர். நேட்டோ விமானங்களும் ஹெலிகாப்டர்களும் இப்பகுதியைத் தொடர்ந்த தாக்குதலுக்கு உட்படுத்தின. வீடுகளில் இருந்து தப்பியோடி வசிப்பவர்களிடம் இருந்தும் உள்கட்டுமானங்கள் அழிப்பு பற்றியும் பல தகவல்கள் வந்துள்ளன. கடாபி-எதிர்ப்புப் போராளிகள் வாடிக்கையாக பொறுப்பற்ற முறையில் சிர்ட்டேக்குள் ராக்கெட்டுக்கள், கையெறி குண்டுகள் ஆகியவற்றை வீசினர்.

சிர்ட்டே நெருக்கடி நேட்டோ சக்திகள் மற்றும் அவற்றின் அரசியல் ஊக்கம் கொடுப்போரின் கூற்றுக்களான லிபியா மீதான போர்மனிதாபிமானத்திற்காக என்பதில் உள்ள கொடூரத்தன்மையைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஆரம்பத்தில் இருந்தே ஒபாமா நிர்வாகமும் லண்டன், பாரிஸில் உள்ள அதன் நட்பு அரசாங்கங்களும் ஒரு காலனித்துவ வகை, ஆட்சி மாற்றப் பிரச்சாரத்தை லிபியாவில் கொண்டுவருவதற்கும், லிபியாவிலும் வட ஆபிரிக்கா முழுவதும் தங்கள் பொருளாதார, புவி-அரசியில் நலன்களை அதிகப்படுத்துவதற்கும் ஒருங்கிணைந்து செயல்பட்டதில் அடிப்படை சர்வதேசச் சட்டத்தின் விதிகளை மீறிய வகையில்தான் நடந்து வந்துள்ளன.

குடிமக்கள்மீது கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது பற்றி தகவல்கள் வெளிப்பட்டு வருகின்றன. வார இறுதியில் நடைபெற்ற பூசல்களின் பெரும்பகுதி மேற்கு சிர்ட்டேயின் “700” புறநகர் வீடுகள் வளாகத்தில் நடந்தன. இப்பகுதி இப்பொழுதுஒரு பேய்நகரம் போல் உள்ளது, தெருக்களில் வெற்றுக் குண்டுத் தடங்கள், நொருக்கப்பட்டுவிட்ட கார்கள் ஆகியவைதான் காணப்படுகின்றன….காலிசெய்யப்பட்ட அழகிய வீடுகள் பெரும் மோதல்களின் அடையாளங்களைக் காட்டுகின்றன, குண்டுகள், ராக்கெட்டுக்காளல் வீசப்பட்ட குண்டுகள் ஆகியவை விளைவித்த பெரும் பள்ளங்கள் எங்கும் காணப்படுகின்றன என்று அப்சர்வர் கூறியுள்ளது கடாபியின் ஆதரவு ஸ்னைப்பர்கள் பயன்படுத்திய கட்டிடங்கள்கிட்டத்தட்ட நேட்டோ குண்டுகள் மற்றும் கனர ஆயுதத் தாக்குதல்களினால் முற்றிலும் சேதப்படுத்தப்பட்டுவிட்டன; சில நேட்டோ குண்டுகளால் அநேகமாக தரைமட்டமாக்கப்பட்டு விட்டன என்று நியூ யோர்க் டைம்ஸ் தகவல் கொடுத்துள்ளது.

கார்டியனில் வந்துள்ள மற்றொரு தகவல் ஐந்து ஹெக்டேர் பரப்பு உள்ள Ouagadougou மாநாட்டு வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளின் நிலைமை பற்றி விளக்குகிறது; இது கடாபியால் பல தூதரக உச்சிமாநாடுகள் மற்றும் கூட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட இடம் ஆகும். “வளாகத்திற்குச் செல்லும் பாதை முற்றுகையின் மிருகத்தனத்தன்மைக்குச் சான்றாக உள்ளது. பல வரிசைகளும் இடிந்து. நொறுங்கிய நிலையில் உள்ள வீடுகளைக் கொண்டுள்ளன; வசித்தவர்கள் காலி செய்துவிட்டு ஓடிவிட்டனர்; டாங்குகள், ராக்கெட்டுகள் மற்றும் பீரங்கிப்படையால் இவை நாசப்படுத்தப்பட்டுவிட்டன.”

கணக்கிலடங்கா குடிமக்கள் பொறுப்பற்ற குண்டுத்தாக்குதலின் கொடூரப் பாதிப்பைப் பற்றிக் கூறியுள்ளனர். ஹசம் மசூத் என்று அங்கு வசிப்பவர் சிர்ட்டேயை விட்டுத் தன் குடும்பத்துடன் சனிக்கிழமை அன்று அவருடைய அண்டை வீட்டுக்காரரின் வீடு அழிக்கப்பட்டதை அடுத்து தப்பி ஓடி விட்டார். “அது ஒரு ஒற்றை மாடியுடைய கட்டிடம். அவர்கள் மீதே சரிந்து விழுந்தது. ஒரு ஆணும் பெண்ணும் கொலையுண்டனர்.”

சிர்ட்டையைவிட்டு நாசம் ஹமித் தன்னுடைய மனைவி, மூன்று குழந்தைகள், அண்ணன் பெண் ஆகியோருடன் ஞாயிறு காலை தப்பி ஓட முடிந்தது. “எங்கள் அடுக்குவீடு இயந்திரத் துப்பாக்கித் தாக்குதலால் அழிக்கப்பட்டுவிட்டது. படிதாங்கு அமைவிற்குள் தங்கியிருந்தோம். தங்கள் விளையாட்டுப் பொருட்கள் அழிந்துவிட்டது குறித்து குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.” என்று அவர் ராய்ட்டர்ஸிடம் கூறினார்.

மோதல்களின் மிருகத்தனத்தன்மை சிர்ட்டேயில் உள்ள சில வெளிநாட்டுச் செய்தியாளர்களை அதிர்ச்சிக்கு உட்படுத்தின என்பது தெளிவு. பிரிட்டனின் டெலிகிராப் கூறியது: “இத்தகைய இடைவிடாத் தாக்குதல்கள், குடிமக்கள் இறப்பு மிகக் குறைவாகத்தான் இருக்கும் என்னும் NTC யின் உறுதிமொழியுடன் இணைந்திருக்கவில்லை.”

பல வராங்கள் சிர்ட்டே முற்றுகையிடப்பட்டத்தின் பாதிப்பு இன்று AFP நகரத்தின் முக்கிய மருத்துவமனையில் இருந்து நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் சித்தரிக்கப்பட்டுள்ளது. தப்பி ஓடும் டாக்டர்களும் மருத்துவமனை ஊழியர்களும் முன்னதாக அடிப்படை மருந்துகள், நீர், பிராணவாயு ஆகியவை இல்லாததின் காரணமாக இறப்பு எண்ணிக்கை உயர்வதைப் பற்றித் தெரிவித்திருந்தனர். அக்டோபர் 1ம் தேதி NTC போராளிகள் ஒரு குற்றம் சார்ந்த தாக்குதலில் மருத்துவமனைமீது ராக்கெட்டுக்களை ஏவினர், துப்பாக்கி மூலம் குண்டுகளையும் செலுத்தினர். இது செஞ்சிலுவை அதிகாரிகள் மருத்துவ அளிப்புக்கள், சடலங்களை வைப்பதற்கான பைகளை அங்கு அளிக்கும் முய்சியை தடுக்கும் நோக்கத்தைத்தான் வெளிப்படையாகக் கொண்டிருந்தது.

இப்பொழுது மருத்துவமனை கைப்பற்றப்பட்டுவிட்ட நிலையில், AFP கூறுகிறது: “வெற்றி பெற்ற போராளிகள், கலாஷிநிகோவை ஏந்திஅல்லாஹு அக்பர் என முழக்கமிட்டு அங்கு அணிவகுத்துச் சென்றனர்; சிர்ட்டேயின் முக்கிய மருத்துவனமனையில் அதிர்ச்சிக்கு உட்பட்டிருந்த பெரும் அச்சத்தில் இருந்த நோயாளிகள் அப்பொழுது தரையில், தாழ்வாரத்தில் நெருக்கமாகக் கூடியிருந்தனர்.”

மருத்துவமனையின் மேல்மாடியில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவவில் இரண்டு நோயாளிகள் மட்டும்தான் எஞ்சியிருந்தனர். இது NTC தாக்குதல்களை ஒட்டி கைவிடப்பட வேண்டியதாயிற்று. AFP கூறுகிறது: “அவர் [டாக்டம் நபில் லாமைன்] சிதைந்து தரையில் நிறைந்திருந்த கண்ணாடிகளைக் கடந்து வலதுபுறம் தீவிர சிகிச்சைப் பிரிவிற்குச் சென்றார்; அங்கு இரு அரைகுறை ஆடையில் இருந்த நபர்கள் துர்நாற்றம் நிரம்பிய சூழ்நிலையில் ஓர் அறையில் குப்பை கூளங்களுடன், உடைந்த மருத்துவக் கருவிகளுக்கு இடையே படுத்திருந்தனர்.” ஒருவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்; மற்றவருக்கு ஒரு கால் அகற்றப்பட வேண்டும். NTC போராளிகள் கடாபி விசுவாசிகளை நகர மையத்திற்குள் தள்ளும் முயற்சியில், பீரங்கிக் குண்டுகள் கட்டிடத்தை அதிர்ச்சிக்கு உட்படுத்துகையில், தாழ்வாரத்தில் இருந்த நோயாளிகளில் பெரும்பாலானோர் பெரும் அச்சத்தில் மூழ்கிய தோற்றத்தைக் கொண்டிருந்த இளைஞர்களாக இருந்தனர்; சிலருடைய முகங்களில் கொடூரமான தீக்காயங்கள் இருந்தன. “லிப்யா ஹுரா [சுதந்திர லிபியா] எனக் கூவு என்று ஒரு இளம் போராளி நோயாளி ஒருவருக்கு உத்திரவிட்டார். நோயாளியும் தாழ்ந்து கீழ்ப்படிந்து கூவினார்.”

NTC போராளிகள் சிர்ட்டே மக்கள்மீது இரக்கமற்ற கூட்டுத் தண்டனையைச் செயல்படுத்த உறுதி கொண்டிருந்தனர். இந்நகரம் கடாபியினால் திரிப்போலிக்கு மாற்றுத் தலைநகராக வளர்க்கப்பட்டிருந்தது; அவருடைய ஆட்சியுடன் எப்பொழுதும் நெருக்கமாக அடையாளம் காணப்பட்டிருந்தது. ஏனெனில் இது கடாபியின் பிறந்த நகரமும் அவருடைய பழங்குடியான கடாபிபாஸ்களுடைய மையமும் ஆகும்.

நகரத்தில் இப்பொழுது நுழைந்துள்ள போராளிகள் மிஸ்ரடாவில் இருந்து வந்தவர்கள்; உள்நாட்டுப்போரின்போது அதிகமான போர்கள் அப்பகுதியில் நடைபெற்றன. முன்னதாக டவர்க்காவில் பழிவாங்கும் நடவடிக்கைகளை நடத்தியபின், அவர்கள் இப்பொழுது சிர்ட்டேயைக் குண்டுத்தாக்குதலுக்கு உட்படுத்துகின்றனர். அந்த நகரத்தில் 10,000 பேர் கொள்ளையடிக்கப்பட்டு, தாக்கப்பட்டனர்; மக்கள் தொகை முழுவதும் வெளியேற்றப்பட்டது; இனி திரும்பி வரக்கூடாது என்றும் கூறப்பட்டனர். இது தாக்குதலில் உள்ள இனக்கூறுபாடு என்பது தெளிவு; டவர்காவின் மக்களில் பலரும் கறுப்புத் தோல் கொண்ட லிபியர்கள், துணை சகாரா ஆபிரிக்கப் பகுதியில் இருந்து வந்தவர்கள். பலர் சிர்ட்டேக்கு தப்பி ஓடியவர்கள், இப்பொழுது மீண்டும்கூலிப்படையினர் என முத்திரையிடப்பட்டு, காவலில் வைக்கப்படுதல், சித்திரவதைக்கு உட்படுத்தப்படல் அல்லது NTC படைகளால் கொல்லப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

பல கடாபி எதிர்ப்புப் போராளிகள் சிர்ட்டேயை அழிக்கும் தங்கள் விருப்பம் பற்றி வெளிப்படையாகவே, டவார்காவை அவர்கள் அழித்ததுபோல், கூறிவருகின்றனர், ஞாயிறன்று ஒரு துப்பாக்கிதாரி ராய்ட்டர்ஸிடம் கூறினார்: “சிர்ட்டேயில் நாங்கள் நுழையும்போது, சிர்ட்டேயே அங்கு இருக்காது.”

NTCயின் அரசியல் தலைமை, பெங்காசியைத் தளமாக உடையது, எஞ்சியுள்ள கடாபி ஆதரவுப் போராளிகள் விரைவில் அகற்றப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது. தன்னைத்தானே நியமித்துக் கொண்டுள்ள இடைக்கால நிர்வாகம் லிபியாசுதந்திரம் பெற்றுவிட்டது என அறிவிப்பதற்கு சிர்ட்டே கைப்பற்றும் வரை காத்திருக்கப்போவதாகத் தெரிவித்துள்ளது. TNC கடலோர நகரத்தின்மீது கட்டுப்பாட்டைப் பெற முடியாத நிலை, திரிப்போலியில் கடாபி ஆதரவு சக்திகள் தோற்கடிக்கப்பட்டு ஏழு வாரங்களுக்குப் பின்னரும் என்பது, பெரிய சங்கடமாகியுள்ளது, ஒரு இறைமை பெற்ற தேசிய அரசாங்கம் என்று தன்னைக் காட்டிக் கொள்வதில் குறைமதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இராணுவ கணக்கீடுகளில் முக்கிய காரணி எண்ணெயாக உள்ளது. நேட்டோ குறுக்கீட்டின் ஆரம்பத்தில் இருந்தே அதுதான் முக்கிய காரணி ஆகும். “லிபியாவின் எண்ணெய் வளம் உடைய கிழக்குப் பகுதிக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் அமைதியாகத் திரும்புகின்றன என்ற தலைப்பு உடைய, சனிக்கிழமை வெளியிடப்பட்ட கட்டுரையில் ராய்ட்டர்ஸ் சர்வதேச நிறுவனங்கள் லிபியாவின் கிழக்கு எண்ணெய் வயல்களில் விரைவாக உற்பத்தியை தொடக்க எதிர்நோக்கியுள்ளன என விளக்கியுள்ளது.

ஜேர்மனியின் Wintershall, அமெரிக்காவின் Occidential Petfroleum Corp., கனடாவின் Suncor Energy ஆகிய நிறுவனங்கள் அனைத்தும் இப்பகுதியில் தங்கள் ஊழியர்களை நிலைநிறுத்தியுள்ளன. ஆனால் சிர்ட்டேயின் நிலைமை முயற்சிகளை பாதித்துள்ளன. கிழக்கு லிபியாவில், “தாக்குதல் பற்றிய அச்சங்கள் உள்ளன, பல லிபியர்களும் தங்கள் தாயகத்தை விட்டு நீங்கி சிர்ட்டேயின் தென்கிழக்கே வருவது குறித்து பாதுகாப்புக் கவலை கொண்டுள்ளனர்; ஏனெனில் அங்கு மோதல் தொடர்கிறது; வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அதிகமானவர்கள் திரும்பவில்லை என்று ராய்ட்டர்ஸ் விளக்குகிறது.

அரசாங்க நிறுவனமான National Oil Corp. ன் தலைவர் Nuri Berruien அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் நாடு போருக்கு முந்தையை உற்பத்தியான 1.6 மில்லியன் பீப்பாய்கள் நாள் ஒன்றிற்கு என்பதை ஒராண்டிற்குள் அடைய முடியும் என்று கூறியுள்ளார். “லிபியக் கச்சா எண்ணெய்க்கு சந்தை ஏங்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.