சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

Greek refuse workers threatened with army intervention on eve of general strike

கிரேக்க துப்பரவுத் தொழிலாளர்கள் பொது வேலைநிறுத்தத்திற்கு முன் இராணுவத் தலையீடு ஏற்படக்கூடும் என்ற அச்சறுத்தலுக்கு உட்படுகின்றனர்

By Robert Stevens
19 October 2011

use this version to print | Send feedback

கிரேக்கத்தின் சமூக ஜனநாயக PASOK அரசாங்கம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள துப்பரவு தொழிலாளர்களுக்கு எதிராக இராணுவத்தை பயன்படுத்தத் தயாரிப்புக்கள் நடத்துவதுடன், ஏராளமான கைதுகளை செய்ய உள்ளதாகவும் அச்சுறுத்தியுள்ளது. இன்றையை 48 மணி நேரப் பொது வேலைநிறுத்தத்திற்கு முன்பாக துப்பரவுத் தொழிலாளர்களுக்கு எதிரான இத்தாக்குதல் கிரேக்கத் தொழிலாள வர்க்கம் முழுவதற்கும் எதிரான முன்னோட்ட நடவடிக்கை ஆகும்.

வெள்ளியன்று மிகப் பிற்பகுதியில் பிரதம மந்திரி ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூவின் அரசாங்கம் துப்பரவுத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை முறிக்கும் முயற்சிகள் முடுக்கிவிடும் வகையில் தலைநகரில் குவிந்துள்ள ஆயிரக்கணக்கான டன்கள் குப்பைகளைச் சேமித்து அகற்றுவதற்கு தனியார் வாகனங்களைப் பயன்படுத்தியது. இத்தகையை வேலைநிறுத்த முறிப்பில் ஈடுபடும் வாகனங்களைத் தடுக்க முற்படும் தொழிலாளர்கள் மூன்று மாதச் சிறைத்தண்டனை மற்றும் அபராதங்கள் ஆகியவற்றின் அச்சுறுத்தலுக்கு உட்படுகின்றனர்.

ஞாயிறு மாலை பூசல்கள் தொடங்கியதில் இருந்து நகரத்தின் வடமேற்கு நிலநிரப்புப் பகுதியை ஆக்கிரமித்துள்ள தொழிலாளர்களுடன் பொலிஸ் கலகப் பிரிவினர் கடும் மோதலில் ஈடுபட்டனர். அப்பகுதியை வன்முறையாகக் கைப்பற்றியபின், பொலிஸ் கலகப் பிரிவினர் திங்களன்று அப்பகுதியைக் காவல் காத்தனர்.

கிரேக்க நாளேடான Kathimerini  கொடுத்துள்ள தகவல் ஒன்றின்படி, சீற்றம் அடைந்த தொழிலாளர்களால் தனியார் வாகனங்கள் சில தாக்கப்பட்டன. “இராணுவம் துப்பரவு மோதலை முறிக்குமா?” என்ற தலைப்பில் வந்துள்ள அக்கட்டுரையிலேயேபிற்பகல் துவங்கிய நிலையில் செய்தி ஊடகத் தகவல்கள் பாதுகாப்பு அமைச்சரகம் மோதலில் தலையிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆதாரங்களின்படி 170 இராணுவத்தினர்கள் நகரசபை குப்பை வாகனங்களை ஓட்டுமாறு உத்தரவிடப்படுவர் என்று Kathimerini  எழுதியுள்ளது.

நேற்று அரசாங்கம் தன் அதிகாரப் போக்கை உயர்த்தி, வேலைநிறுத்தத் தொழிலாளர்கள் மீண்டும் பணிக்குத் திரும்புமாறும், முழு ஏதென்ஸிலும் குடிமக்கள் திரட்டுப் பத்திரம் ஒன்றில் கையெழுத்திடுமாறும் உத்தரவிட்டது. இதில் கையெழுத்து இடாவிட்டால், கைது செய்து விசாரணை நடத்தப்படும் என்றும் உள்துறை அமைச்சரகம் கூறியுள்ளது.

சமீபத்திய வாரங்களில் வேலைநிறுத்தங்கள் தொழிலாளர் வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவுடனும் பெருகியுள்ளது; இதில் அரசாங்க ஊழியர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள், துறைமுகத் தொழிலாளர்கள், ஆசிரியர்கள், சுகாதாரப் பாதுகாப்பு ஊழியர்கள், செய்தியாளர்கள், வங்கி ஊழியர்கள், வக்கீல்கள், நீதிமன்ற அதிகாரிகள், சுங்க அதிகாரிகள் அனைவரும் அடங்குவர்.

வெளிநடப்புக்கள் இப்பொழுது மிகப் பரந்த நிலையில் நடைபெற்று அரசாங்கம் அன்றாட வேலையைச் செயல்படுத்தும் திறனை அச்சுறுத்தியுள்ளன. அரசாங்க அமைச்சரகங்கள் ஏதென்ஸில் ஆக்கிரமிப்பிற்கு உட்பட்டுள்ளன; இதே போல் நாடெங்கிலும் பல நகரசபை அலுவலகங்களும் ஆக்கிரமிப்பிற்கு உட்பட்டுள்ளன. இந்த வாரம் வரிவசூல் செய்யும் அதிகாரிகள் உட்பட, மிருகத்தன ஊதியக் குறைப்புக்களையும் பணிநீக்கங்களையும் எதிர்கொள்ளும் நிதி அமைச்சரக ஊழியர்கள் ஓர் ஐந்து நாள் வேலைநிறுத்தம் செய்வதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

இரண்டு நாட்கள் பொது வேலைநிறுத்தம் பாராளுமன்றத்தில் வியாழனன்று PASOK கிரேக்கத்திற்கான மீட்பு நிதியைக் கண்காணிக்கும்முக்கூட்டுடன்”—சர்வதேச நாணய நிதியம் (IMF), ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) -- கொண்டுள்ள உடன்பாட்டின்படி சமீபத்திய சிக்கன நடவடிக்கைகளுக்கான வாக்கைப் பதிவு செய்யும் நேரத்திலேயே நடக்க உள்ளது. இந்த நடவடிக்கைகளில் ஆயிரக்கணக்கான பொதுத்துறைத் தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழக்கின்றனர்; இன்னும் 30,000 பேர் தங்கள் ஊதியங்கள் 40 சதவிகிதம் வெட்டப்படும் நிலையைக் கொண்டுள்ளனர். ஓய்வூதியங்கள் இன்னும் அதிகமாகக் குறைக்கப்படுகின்றன; தொழில்துறையில் கூட்டுப் பேச்சுவார்த்தைகளுக்கான உரிமைகள் தகர்க்கப்படுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. சமீபத்தில் இயற்றப்பட்ட சொத்து மீதான வரியைத் தவிர வரி செலுத்துவோர் மீது இன்னும் சுமை வரும் வகையில் ஒரு வரி விதிக்கப்பட உள்ளது. அந்த வரி கிரேக்கத்தின் வீடுகள் வைத்துள்ளவர்களுக்கு (80% சொந்த வீடுகளைக் கொண்டுள்ளவர்களுக்கு) ஆண்டு ஒன்றிற்கு 500 முதல் 1,500 யூரோக்கள் வரை என்று வசூலிக்கப்படும்.

இந்த வெட்டுக்கள் மே 2010ல் ஒப்புக்கொள்ளப்பட்ட பிணைஎடுப்புக் கடன்களில் சமீபத்திய கடன் தவணையான 8 பில்லியன் யூரோக்கள் என்ற முன்னிபந்தனையை முக்கூட்டு விதித்துள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஒரு முழு மக்கள்தொகையின் சமூக நிலைமகளின் மீதும் இத்தகைய தாக்குதல் என்பது ஒரு முன்னோடி இல்லாத செயல் ஆகும். செவ்வாயன்று பைனான்சியல் டைம்ஸ் வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரை ஒன்று, “திட்டமிடப்பட்டுள்ள வரி அதிகரிப்புக்கள் மற்றும் 2011க்கான செலவுக் குறைப்புக்கள் ஒரு சராசரி கிரேக்கரின் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் ஊதியத்தில் 14% ஆகும்அதாவது கிட்டத்தட்ட 5,600 யூரோக்கள் ($7,707) ஒவ்வொரு வீட்டிற்கும் என உள்ளது என்று கூறுகிறது.

செய்தித்தாள் தெரிவிக்கிறது: “கிரேக்க மக்களை எதிர்கொள்ளும் நிதிய வழி வேதனையின் அளவு அயர்லாந்து மற்றும் போர்த்துக்கல் மக்கள் முகங்கொடுக்கும் வேதனையைப் போல் இரு மடங்கு கடுமையானது ஆகும்; இது கடன் கொடுப்போர் சுமத்தும் கடுமையான சிக்கனத் திட்டம் யூரோப் பகுதியில் மிக நலிந்த பொருளாதாரத்தின் வளர்ச்சியை இன்னும் திணற அடிக்கும் என்ற கவலைகளைக் கொடுக்கிறது.”

கிரேக்க மக்களின் சமூக நிலைகளின் மீது இவற்றின் பாதிப்புஸ்பெயினைவிடக் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாக இருக்கும் என்று பைனான்சியில் டைம்ஸ் கூறியுள்ளது.

கிரேக்க அரசாங்கம் மற்றும் முக்கூட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக அன்றாட மந்திரமாக வாழ்க்கைத் தரங்களின் மீதான மாபெரும் வெட்டுக்கள் சுமத்தப்படுவதுதான் கிரேக்க அரசாங்கக் கடன் நெருக்கடியைத் தீர்க்கும் ஒரே வழி என்று கூறிவந்துள்ள போதிலும், கடன் அளவு மோசமாகிவிட்டது. கிரேக்கம் விரைவில் அது கொடுக்க வேண்டிய கடன்களான 330 பில்லியன் யூரோக்களைக் கொடுக்க இயலாது என்பது இப்பொழுது ஏற்கப்பட்டுள்ளது.

கிரேக்கப் பொருளாதாரம் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக மந்த நிலையில் உள்ளது; குறைந்தபட்சம் 2008 இறுதியில் இருந்து தொடர்ச்சியான எதிர்மறை வளர்ச்சியைத்தான் கண்டுள்ளது. சமீபத்தில் Kathimerini  குறிப்பிட்டது: “இரண்டாவது அரைப் பகுதியிலும் இதே கதைதான் இருக்கும். இதன் பொருள் கிரேக்கம் குறைந்தப்பட்சம் 11 காலாண்டுகளாக தொடர்ச்சியான எதிர்மறை வளர்ச்சியைத்தான் கொண்டுள்ளது என்பதாகும். சரியான முன்னோக்கில் இதைக் காண வேண்டும் என்றால், பெருமந்த நிலை 12 தொடர்ச்சியான காலாண்டுகளைக் கொடுத்தது. எவருக்கேனும் நினைவு இல்லை என்றால் அது 1929ல் இருந்து 1932 வரை நடைபெற்றது.”

PASOK யின் செயற்பட்டியலின் விளைவாக, இரண்டு ஆண்டுகளுக்குள் 200,000 பொதுத்துறை ஊழியர்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளதுடன், வேலையின்மை மிக உயரத்திற்குச் சென்றுள்ளது. இந்த வாரம் மனித வள வேலைபற்றிய அமைப்பு வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரங்கள் வேலையின்மை கடந்த ஆண்டு செப்டம்பரில் இருந்து 18%க்கும் அதிகமாக 665,059ல் இருந்து 774,059க்கு உயர்ந்துவிட்டதைக் காட்டுகின்றன. 12 மாதங்களுக்கும் மேலாக வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டு முதல் 38% பெருகிவிட்டது. வேலையற்றோரில் 60 சதவிகிம்மானோர்கள் 30 – 54 வயது நிலையில் உள்ளனர், 30 வயதிற்கும் கீழே இருப்பவர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 28 சதவிகிதம் என உள்ளது.

பொருளாதாரம் இந்த ஆண்டு 5.5% சுருங்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது; மேலும் 2012ல் அது இன்னும் 2.5% சுருங்கும்; இது 2008ல் இருந்து மொத்தச் சுருக்கம் 14% என ஆக்கிவிடும்.

ஜூன் மாதத்தில் கிரேக்கப் பாராளுமன்றம் 2012 முதல் 2015 வரை 28 பில்லியன் யூரோக்கள் சிக்கனத் திட்டத்தைச் சுமத்த இருப்பதாக அறிவித்துள்ளது. அதற்குப் பின் அது இன்னும் 10.3 பில்லியன் வெட்டுக்களை அறிவித்துள்ளது. இதற்கும் மேலாக அரசாங்கம் மற்றும் ஒரு 50 பில்லியன் யூரோக்களை தனியார்மயம் ஆக்குவது மூலம் திரட்டுவதாக ஒப்புக் கொண்டுள்ளது; இதையொட்டி வேலைகள், ஊதியங்கள் மற்றும் தொழிலாளர் வர்க்கத்தின் வேலைநிலைமைகளில் இன்னும் கடுமையான பாதிப்புக்கள் இருக்கும்.

மக்களுடைய எதிர்ப்பு மிகக் கடுமையாக உள்ள நிலையில், பைனான்சியல் டைம்ஸ்  ஓர் எச்சரிக்கை விடும் கட்டாயத்திற்கு உட்பட்டுள்ளது: “கிரேக்கம் அதன் 24.6 பில்லியன் சிக்கனப் பொதி நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதை நிர்வகிக்க இயலுமா என்பது பற்றிக் கணிசமான சந்தேகங்கள் உள்ளன; இதில் பிற இடங்களில் குறை இருந்தால் ஈடு செய்வதற்கான வரவு-செலவத் திட்டத்தில் முதல்முறை அறிவித்த பின் 10.3 பில்லியன் யூரோக்கள் குறைப்பிற்கான நடவடிக்கைகளும் உள்ளன.”

11மில்லியன் மக்கள் என்று குறைந்த மக்கள்தொகையைக் கொண்ட கிரேக்கத்தின் மீதான தாக்குதலின் அளவு பைனான்சியல் டைம்ஸின்  ஆய்வினால் வெளிப்பட்டுள்ளது; இதன்படி, “அரசாங்கம் இத்தகைய கூடுதலான நடவடிக்கைகளில் பாதியைச் செயல்படுத்த முடிந்தாலும்கூட, பொதுநலச் செலவுகள் மற்றும் வரிவிதிப்புக்களின் பாதிப்பு சராசரி வீட்டு வருமானங்களில் கிட்டத்தட்ட 11% என இருக்கும்சராசரி வருமானம் 4,500 யூரோக்கள்; இதில் 2,300 யூரோக்கள் புதிதாகச் சுமத்தப்படும் வரிகள் மற்றும் புது வசூலிப்புக்கள் என இருக்கும்.

அப்படியும் இது கிரேக்கத்தை அயர்லாந்து 2009ல் கொண்டதைவிட வேதனைதரும் பொதியில் இருத்தும்அந்நாட்டின் சிக்கன ஆட்சியில் அது மிக உயர்ந்தது ஆகும்; அது வீட்டிற்கு 4,800 யூரோக்கள் அல்லது வீட்டு வருமானத்தின் 9% என இருந்தது. இந்த ஆண்டு அயர்லாந்தின் சிக்கன நடவடிக்கை வீட்டு வருமானத்தில் 7%க்குச் சமமாக உள்ளது.”

மக்கள் மீதான இத்தகைய தாக்குதல்கூட ஆளும் உயரடுக்கு செயல்படுத்தத் தயாராக உள்ள நடவடிக்கைகளில் மேற்புறத்தைத்தான் தொடும். செய்தித்தாள் எச்சரிக்கிறது: “கிரேக்கம் கடனுக்கான வட்டியைத் திருப்பிக் கொடுத்தல் என்பது 2010 ல் இருந்து 2015க்குள் 77% உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது; பொதுநலச் செலவுகள் அப்படியே நிறுத்தப்படுவதற்கு அது இன்னமும் ஆழ்ந்த வெட்டுக்களைச் செய்யவேண்டும்; இதற்கு இன்னும் சிக்கன நடவடிக்கைகள் வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறை குறைக்கப்படுவதற்குத் தேவைப்படும்.”

சர்வதேச நிதிய மூலதனத்திற்கும், சுவிஸ் வங்கிக் கணக்குகளில் 600 பில்லியனுக்கும் மேலாகச் சேகரித்து வைத்துள்ள கிரேக்கத்தின் பெரும் செல்வந்தர்களுக்கு உதவும் வகையில் PASOK ஒரு சமூக எதிர்ப்புரட்சியைச் செயற்படுத்துவதற்கு அனைத்தையும் செய்ய உறுதி கொண்டுள்ளது. ஞாயிறன்று மூன்று உயர்மட்ட அரசாங்க அலுவலர்கள்கல்வி மந்திரி அன்னா டயமன்டோபௌலௌ, சுகாதார மந்திரி ஆண்ட்ரீஸ் லவர்டோஸ் மற்றும் போக்குவரத்து மந்திரி யியன்னிஸ் ராகௌசிஸ்மக்களைத் திவால் படுத்தும் வழிவகை போதுமான வேகத்தில் இல்லை என்று ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர். “இப்பொழுதுதான் வேகத்தை அதிகப்படுத்த வேண்டிய நேரம் ஆகும், தடுப்புப் போடும் நேரம் அல்ல. நாம் பின்வாங்க முடியாது, பின்வாங்கும் உரிமையும் நமக்கு இல்லை என அவர்கள் கூறியுள்ளனர்.

குப்பைத் தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நிரூபிப்பது போல், அரசாங்கம் தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரான இந்த போர் அறிவிப்பு வெகுஜன எதிர்ப்பைச் சந்திக்கும், அரசாங்க அடக்குமுறை அதைக் கட்டுப்படுத்தத் தேவை என்பதை நன்கு அறியும். PASOK கடந்த ஆண்டு டிரக் சாரதிகள் நடத்திய நாடுதழுவிய வேலைநிறுத்தத்தை முறிக்க இராணுவத்தைப் பயன்படுத்தியது ஏதென்ஸ் நியூஸ் ஏஜென்ஸி இம்மாதம் முன்னதாக பெப்ருவரி 4 அன்று ஹெலெனிக் இராணுவம் ஒரு சிக்கன எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுடன் போலி மோதலை மேற்கொண்டதாக அறிவித்துள்ளது.

PASOK யின் நடவடிக்கைகள் இராணுவம் நேரடித் தலையீடு ஒன்றிற்கு வகைசெய்வதற்குத் ஊக்கமும் தயாரிப்பையும் கொண்டுள்ளது. இந்த மாதம் முன்னதாக பல ஆயிரக்கணக்கான இராணுவ அதிகாரிகள் பாதுகாப்பு அமைச்சரக அலுவலகங்களின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்; அதே நேரத்தில் பல நூற்றுக்கணக்கானவர்கள் கட்டிடத்திற்குள் சூறாவளியென நுழைந்து, பல மணி நேரம் அங்கேயே இருந்தனர்.

இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படும் பெரும் சிக்கனத் திட்டங்கள் PASOK அரசாங்கத்திற்கான ஆதரவை அதன் மரபார்ந்த தொழிலாளர் வர்க்க வாக்காளர்களின் சரிவை ஏற்படுத்தியுள்ளன. சமீபத்தியக் கருத்துக் கணிப்புக்கள் இப்பொழுது அக்கட்சிக்கு மக்களிடையே 15 சதவிகிதம் ஆதரவுதான் இருப்பதாகக் காட்டுகின்றன. 1974ல் நிறுவப்பட்டதில் இருந்து இது அதற்கு மிக மோசமான ஆதரவுத் தரம் ஆகும்; அந்த ஆண்டுதான் பாசிச இராணுவ ஆட்சி அகற்றப்பட்டது.

இத்தகைய வெறுப்பிற்குட்பட்ட அரசாங்கம் அதிகாரத்தில் இருக்க முடிகிறது என்றால் அது முற்றிலும் கிரேக்கத் தொழிலாளர்களின் பொதுக் கூட்டமைப்பு (GSEE) மற்றும் பொதுத்துறை அரசாங்க ஊழியர்கள் கூட்டமைப்பு (ADEDY) ஆகியவற்றில் உள்ள தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் பிற்போக்குத்தன பங்கினால்தான். இந்த அமைப்புக்கள் PASOK யை தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஆதரவைக் கொடுத்தன; அதுதான் இழிவாகக் கருதப்பட்ட புதிய ஜனநாயக அரசாங்கத்தை விட ஒரு முற்போக்கான மாற்றீடு எனக் கூறின. இவை இப்பொழுது பல ஆண்டுகள் PASOK உடன் நெருக்கமான உறவுகளால் இலாபம் அடைந்தவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது; அதற்காக அவர்கள் சலுகைகள், தகுதிக்கு மீறிய பெரும் ஊதியங்கள் மற்றும் கொழுத்த ஊதியங்களைப் பெற்றனர்.

அக்டோபர் 2008ல் PASOK தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து, தொழிற்சங்கங்களின் முக்கிய அக்கறை தொழிலாளர் வர்க்க எதிர்ப்பின் ஒவ்வொரு வெளிப்பாட்டையும் நெரித்தல் என்று உள்ளது. கடந்த வாரம் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை முடித்தல் என்றாலும் சரி, அல்லது எப்பொழுதாவது ஒரு 24 மணி நேர வேலைநிறுத்தத்தைச் சீற்றத்தை வெளியிடுவதற்காக அழைப்பு கொடுத்தாலும் சரி, தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் பங்காளிகளாக தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கு எதிராகச் சிக்கன நடவடிக்கைகளைச் செயல்படுத்துகின்றன.