சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

Massive protests on first day of Greek general strike

கிரேக்கப் பொது வேலைநிறுத்தத்தின் முதல் நாளன்று மாபெரும் ஆர்ப்பாட்டங்கள்

By Robert Stevens and Christoph Dreier
20 October 2011

use this version to print | Send feedback


Parliament
பாராளுமன்றக் கட்டிடத்தை எதிர்ப்பாளர்களிடம் இருந்து பாதுகாக்கும் பொலிஸ் கலகப் பிரிவுப்படையினர்

48 மணி நேரப் பொது வேலைநிறுத்தத்தின் முதல் நாளான புதனன்று 1974ல் இராணுவ ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பின் கண்டிராத மிகப் பெரிய எதிர்ப்புக்கள் கிரேக்கத்தை தாக்கின. நூறாயிரக்கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும் நாடெங்கிலும் PASOK சமூக ஜனநாயக அரசாங்கம் சுமத்தும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக ஆர்ப்பராட்டங்களை நடத்தினர்.

GSEE என்னும் கிரேக்கப் பொதுத் தொழிலாளர்களின் கூட்டமைப்பு மற்றும் ADEDY என்னும் பொதுத்துறை அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு விடுத்திருந்த வேலைநிறுத்த அழைப்பிற்குக் கிடைத்த பெரும் மக்கள் ஆதரவை ஒட்டி கிரேக்கம் ஸ்தம்பித்து நின்றது. ஒரு வாரமாக அதிகரித்திருந்த தொழில்துறை நடவடிக்கைகளை அடுத்து இந்த இரு நாள் நடவடிக்கை வந்துள்ளது.

Demonstration
சின்டகமா சதுக்கத்தில் குழுமிய ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒரு பகுதி

ஒரு கிரேக்கச் செய்தித்தாள் இதைஅனைத்து வேலைநிறுத்தங்களின் தாய் என விவரித்தது. BBC செய்தியாளர் கவின் ஹெவிட், “தெருக்களில் இத்தகைய கூட்டங்கள் நான் ஒருபொழுதும் ஏதென்ஸில் பார்த்ததில்லை. எதிர்ப்புக்கள் துவங்கி நான்கு மணி நேரம் கழித்தும் மின்சக்தி நிறுவனத் தொழிலாளர்கள் பாராளுமன்றச் சதுக்கத்தை அடைய இன்னும் முயல்கின்றனர் என எழுதினார்.

நாடு முழுவதும் மத்திய மற்றும் உள்ளாராட்சி அரசாங்க அலுவலகங்கள மூடப்பட்டன; தவிர பள்ளிகளும் நீதிமன்றங்களும் மூடப்பட்டிருந்தன. மருத்துமனைகள் அவசரக்கால நோய்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்கு மட்டும் குறைந்த ஊழியர்களுடன் செயல்பட்டன. அரசு ஊழியர்கள் அனைத்து அரசாங்க அமைச்சரகங்களிலும், நிறுவனங்களிலும் உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடர்ந்தனர். மருந்தகக் காப்பாளர்களும் பல் மருத்துவர்களும் வெளிநடப்பில் பங்கு பெற்றனர்.

Electricians
சின்டகமாச் சதுக்கத்தை நோக்கி மின் சக்தி தொழிலாளர்கள் அணிவகுப்பு

தேசிய போக்குவரத்து முறை முடங்கியது; ஏதென்ஸின் மெட்ரோப் பணிகள் முக்கிய ஆர்ப்பாட்டத்திற்குத் தொழிலாளர்களை அழைத்துச் செல்வதற்கு மட்டுமே செயல்பட்டன. தேசிய இரயில் வசதிகள் செயலற்றுப் போயின, படகுத்துறை நடவடிக்கைகள் துறைமுக தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தினால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளின் 12 மணி நேர வேலைநிறுத்தத்தை அடுத்து கிட்டத்தட்ட 150 விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டன.

செய்தியாளர்களும் வெளிநடப்பு செய்ததால், தேசியச் செய்தித்தாள்கள் தயாரிப்பு நின்று போயிற்று. பல மாதங்களாகத் தங்கள் தொழில்துறை கட்டுப்பாட்டில் இருந்து அகற்றப்படுவதற்கு எதிராக எதிர்ப்புக்களில் ஈடுபட்டு வரும் டாக்சி சாரதிகளும் வேலைநிறுத்தம் செய்தனர்.

ரொட்டித் தயாரிப்பு நிலையங்கள், கடைகள் மற்றும் அலுவலகங்கள் எனத் தனியார் வணிகங்களிலுள்ள ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் இணைந்தனர். இது பல சிறு வணிகங்களை மூட வைத்தது. கடந்த இரு ஆண்டுகளில முந்தைய வேலைநிறுத்தங்கள் முக்கியமாகப் பொதுத்துறை ஊழியர்களின் ஈடுபாட்டைத்தான் கொண்டிருந்தன. ஆனால் இப்பொழுது நான்காம் ஆண்டில் உள்ள மந்தநிலையின் விளைவாக 250,000க்கும் அதிகமான ஊழியர்கள் தனியார் துறையிலும் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர். இது பொதுத்துறை ஊழியர்களுடைய எண்ணிக்கையையும்விட அதிகம் ஆகும்; அங்கு கடந்த இரு ஆண்டுகளில் பிரதம மந்திரி ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூவின் அரசாங்கம் 200.000க்கும் மேற்பட்ட வேலைகளை அகற்றிவிட்டது.

தலைநகரான ஏதென்ஸில் கிட்டத்தட்ட 200,000 மக்கள் Pedion tou Areo Square ல் இருந்து சின்டகமாச் சதுக்கத்தில் உள்ள பாராளுமன்றக் கட்டிடத்தை நோக்கி அணிவகுத்துச் சென்றனர். பாராளுமன்றத்திற்கு வெளியே கூடியதும், ஆயிரக்கணக்கானவர்கள் அரசாங்கத்தைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

இரண்டாவது பெரிய நகரான தெசலோனிகியில் மிகப் பெரிய எதிர்ப்பு அணிவகுப்புக்கள் நடைபெற்றன; அதேபோல் பட்ரா, வோலோஸ் மற்றும் கிரேட் தீவுகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

இந்த வாரம் அரசாங்கம் துப்பரவுத் தொழிலாளர்கள் நடத்தும் வேலைநிறுத்தத்தை முறிப்பதற்கு இராணுவத்தைப்  பயன்படுத்தத் தொடங்கியது. இரண்டு வார காலமாக நின்று விட்ட இப்பணி ஏதென்ஸ் மற்றும் முக்கிய நகர்ப்புற மையங்களின் தெருக்களில் ஆயிரக்கணக்கான டன்கள் குப்பைகள் குவிய வழிவகுத்தது.

ஏதென்ஸ் ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக அரசாங்கம் மிகப் பெரிய அரசாங்க அடக்குமுறைச் செயலைக் கையாண்டது. 7,000 பொலிஸ் கலகப் பிரிவுப்படையினரை அது திரட்டி பாராளுமன்றத்திற்கு முன் பொலிஸ் பஸ்கள் மற்றும் எஃகு அரணைச் சுற்றி நிறுத்திவைத்தது. பாராளுமன்றப் பகுதிக்கு அருகே உள்ள இரண்டு மெட்ரோ இரயில் நிலையங்கள் மூடப்பட்டன.

Teargas
எதிர்க்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸ் கண்ணீர்ப்புகை குண்டு வீசுதல்

முக்கிய ஆர்ப்பாட்டம் மற்றும் சின்டகமா சதுக்கம், அதற்கு அருகே உள்ள தெருக்களில் ஏராளமாக நிறைந்திருந்த எதிர்ப்பாளர்களைப் பொலிஸ் தாக்கியது. குறைந்தப்பட்சம் ஏழு பேராவது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்; கண்ணீர்ப்புகைக் குண்டுத் தாக்குதலால் பலரும் மூச்சுவிடத் திணறினர்.

ஏதென்ஸில் தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள், ஓய்வூதியம் பெறுவோர்கள் அணிவகுத்துச் சென்றனர். வெளிப்பட்ட உணர்வு போராளித்தனமாகவும், சீற்றம் கொண்டதாகவும் இருந்தது. தங்கள் சொந்த பதாகைகளை ஏந்தியிருந்த உத்தியோகப்பூர்வ தொழிற்சங்கப் பிரதிநிதிகளைத் தவிர பலர் கையினால் எழுதப்பட்ட கோஷ அட்டைகளைச் சுமந்து வந்தனர்.

அணிவகுப்பில் கலந்து கொண்டவர்கள் தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்தப்படும் பொறுக்க இயலா நிலைமகளுக்குத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து, எதிர்ப்பை முடுக்கிவிடப் போவதாகவும் கூறினர். 50 வயது பொதுத்துறை ஊழியர் அகிஸ் பாபடோபோலோஸ் அரசாங்கத்தின் திட்டம் குறித்து, “எவரை இவர்கள் முட்டாள்களாக்கப் பார்க்கின்றனர்? இவர்கள் நம்மைக் காக்கப்போவது இல்லை. இந்த நடவடிக்கைகளினால் ஏழைகள் இன்னும் ஏழைகளாகப் போய்விட்டனர், செல்வந்தர்கள் கூடுதல் செல்வத்தைத்தான் அடைந்துள்ளனர். நன்று, நான் கூறுவேன்; ‘வேண்டாம், நன்றி. உங்கள் மீட்புத்திட்டம் எங்களுக்குத் தேவையில்லை.’ ”

இந்த வேலைநிறுத்தம் பாராளுமன்றத்தில் ஒரு புதிய சிக்கனத் திட்டத்திற்கான சட்டவரைவு இயற்றப்படும் நேரத்தில் வந்துள்ளது; அச்சட்டத்தின்படி ஏற்கனவே மக்களைத் திவாலாக்கிவிட்ட தாக்குதல் இன்னும் தீவிரமாகும். நேற்று இரவு பாராளுமன்றம் கொள்கையளவில் சட்டவரைவை ஏற்க வாக்களித்தது; அனைத்து PASOK யின் 154 உறுப்பினர்களும் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். 141 வாக்குகள் பாதகமாகப் போடப்பட்டன, ஐந்து பேர் வாக்களிக்கவில்லை.

இன்று இரண்டாம் வாக்களிப்பிற்குப் பின் சட்டவரைவு சட்டமாகும்; சட்டத்தின் தனிவிதிகள் செயல்பாட்டிற்கு வரும். இவை 700,000 பொதுத்துறை ஊழியர்களின் ஊதியத்தில் இன்னும் கூடுதலான வெட்டுக்களுக்கு ஒப்புதல் கொடுக்கின்றன. மேலும் ஓய்வூதியங்களில் வெட்டு, வரிவிதிப்பு அதிகரிப்பு, பல துறைகளிலும் ஊதிய ஒப்பந்தங்கள் நிறுத்தி வைக்கப்படல் மற்றும் அரசாங்க ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படக்கூடாது என்னும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முற்றுப்புள்ளி ஆகியவையும் அடங்கும்.

கிட்டத்தட்ட 30,000 பொதுத்துறை ஊழியர்கள் வேலையில் இருந்து தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்படுவர்; அவர்களுடைய ஊதியம் 40 சதவிகிதம் குறைக்கப்படும். ஓராண்டிற்குப் பின் அவர்கள் இறுதில் பணிநீக்கம் பெறுவர். 1000 யூரோக்களுக்கு மேல் ஓய்வூதியம் பெறுவோர் 20 சதவிகித வெட்டுக்களைச் சந்திப்பர். அரசாங்க ஊழியர்கள் ஓய்வுபெறும் போது பெறும் மொத்தப் பணத்திலும் குறைப்பு இருக்கும்.

அரசாங்கத்தின் செயற்பட்டியலை தொழிலாள வர்க்கம் சக்தி வாய்ந்த முறையில் நிராகரித்துள்ளது கிரேக்க தொழிற்சங்கங்களின் திட்டத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டு உள்ளதாகும். கடந்த இரண்டு ஆண்டுகளாக GSEE, ADEDY இரண்டுமே ஒன்றன்பின் ஒன்றாக புதியச் சிக்கன நடவடிக்கைச் சட்டங்களை அனுமதிப்பதற்காக தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பைக் கட்டுப்படுத்தும் செயலில்தான் ஈடுபட்டு வந்தன.

PASOK  இடம் தொழிற்சங்கங்கள் மிக நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளன; அவற்றின் அதிகாரத்துவங்கள் ஆளும் கட்சியிலுள்ள அதே சலுகை பெற்ற சமூகத் தட்டுக்களில் இருந்து வருபவர்கள் ஆவார்கள். சிக்கன நடவடிக்கைகளில் பங்காளிகள் என உழைக்கும் வகையில், இவர்கள் ஒவ்வொரு சில மாதங்களிலும் 24 மணி நேர வேலைநிறுத்தங்களை நடத்துவர்; இவை தொழிலாளர்கள தங்கள் சீற்றத்தை வடிகாலாக வெளியிடத்தான் அனுமதித்தன. கடந்த வாரம் சுத்திகரிப்புத் தொழிலில் தொழிலாளர்கள் நடத்திய செயற்பாடு போல் எந்த நடவடிக்கையாவது கிரேக்கப் பொருளாதாரத்தைத் தீவிர ஆபத்திற்கு உட்படுத்தியது என்றால், தொழிற்சங்கங்கள் உடனேயே செயல்பட்டு அதை நெரித்தனர்.

சமீப வாரங்களில் அலையெனப் பெருகிய கடுமையான, வேலைநிறுத்தங்களை எதிர்கொண்ட நிலையில், தொழிலாள வர்க்கத்தின் அடக்கிவைக்கப்பட்டுள்ள சீற்றம், பெருந்திகைப்பு ஆகியவற்றை இவை கட்டுப்பாட்டை மீறி வெடிக்கச் செய்யும் என்ற அச்சத்தில், தொழிற்சங்க அதிகாரத்துவம் இந்த வார வேலைநிறுத்தத்தை 24 மணியில் இருந்து 48 மணி நேரம் என நீட்டிக்க முடிவு செய்தது. ADEDY ன் தலைமைச் செயலரான Ilias Iliopoulos, “மிகக் கடினமான நிலைமையை விடயங்கள் அடைந்துள்ளன; பொதுமக்களிடையே பெரும் சீற்ற உணர்வு உள்ளது என எச்சரித்தார்.

தொழிற்சங்கங்கள மீண்டும் PASOKயின் தேசியவாத முறையீடுகளுக்கு தொழிலாளர்களைக் கட்டுப்படுத்த முயல்கின்றன. GSSE உடைய Nikos Kioutsoukis பாராளுமன்றப் பிரதிநிதிகளைப் பற்றிக் கூறுகையில், “அவர்களிடம் ஏதேனும் மனிதாபிமானம் கௌரவம், பெருமித உணர்வு, கிரேக்க ஆன்மிக உணர்வு ஆகியவை இருந்தால், இச்சட்டவரைவை அவர்கள் நிராகரிக்க வேண்டும் என்றார்.

தொழிற்சங்களினால் ஒன்றும் மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வரவில்லை என்று உலக சோசலிச வலைத் தளத்திடம்  ஏதென்ஸில் பொருளாதார ஆசிரியராக இருக்கும் 50 வயது நிக் கூறினார். “தொழிற்சங்கங்களான GSEE, ADEDY இரண்டும் பெரும்பான்மையைப் பிரதிபலிக்கவில்லை. சமீபத்திய வாரங்களில் வெகு சிலரே அவற்றிற்கு ஆதரவு கொடுத்தனர்.”

இதை ஏற்கும் வகையில் 22 வயது மாணவர் Vangelis கூறினார்: “தொழிற்சங்கங்கள் தங்களுக்காகச் செயல்படுகின்றனவே ஒழிய, தொழிலாளர்களுக்காக இல்லை.”

பல தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களின் தேசியவாத வனப்புரையை நிராகரித்தனர். 27 வயதான தொழிலாளி Ioanna குறிப்பிட்டார்: “இப்போராட்டம் சர்வதேசமயமானது. ஐரோப்பிய உயரடுக்கு கிரேக்கத்தை ஒரு சோதனைக் களமாக வைத்து எந்த அளவிற்கு மக்கள் மீது தாக்குதலை நடத்த இயலும் என்று காண விரும்புகிறது.”

ஏதென்ஸில் ஒரு வரித்துறை அதிகாரியாக இருக்கும் Irene கூறினார்: “உலகம் முழுவதும் சொத்துக்கள் மறுபங்கீடு செய்யப்படுவதற்காக நாம் ஜேர்மனியத் தொழிலாளர்களுடன் இணைந்து போராட வேண்டும். ஜேர்மனியத் தொழிலாளர்கள் நல்ல ஊதியங்களுக்குப் போராடினால், நமக்கும் நல்ல ஊதியம் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.”

கிரேக்கத்தில் நடக்கும் வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் சர்வதேச அளவில் வர்க்கப் போராட்ட வளர்ச்சியின் சக்தி வாய்ந்த வெளிப்பாடு ஆகும். இவை சனிக்கிழமையன்று நடந்த முற்றுகைத் தினத்தைப் பின்பற்றுகின்றன; அதில் நூறாயிரக்கணக்கான மக்கள், ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில் சிக்க நடவடிக்கைகள் சுமத்தப்படுதல் மற்றும் நிதிய உயரடுக்கிற்கு பிணை கொடுத்தல் ஆகியவற்றை எதிர்த்து ஆர்ப்பரித்தனர்.”

ரோமிலும் மாட்ரிட்டிலும் நூறாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இந்த எதிர்ப்புக்கள் இந்த ஆண்டுத் தொடக்கத்தில் எகிப்து, துனிசியா ஆகியவற்றில் ஏற்பட்ட புரட்சிகளைத் தொடர்ந்து வந்துள்ளன; அதேபோல் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் நடத்திய “Indignados” இயக்கத்தின் சமீபத்திய எதிர்ப்புக்களையும் தொடர்ந்து வருகின்றன.

தங்கள் வாழ்க்கை ஆதாரங்கள் அழிவதை நிறுத்துவதற்கு, தொழிலாளர்களும் இளைஞர்களும் அவர்கள் முதலாளித்துவ முறைக்கு எதிரான ஒரு போராட்டத்தில் உள்ளனர் என்பதை உணர வேண்டும். உலகளவில் அந்த முறை முறிந்தது ஒவ்வொரு நாட்டிலும் ஆளும் வர்க்கத்தால் சமூக எதிர்ப்புரட்சி ஒன்ற நடத்தப் பயன்படுத்தப்படுகிறது; அதன் நோக்கம் தொழிலாள வர்க்கம் பெற்றுள்ள கடந்த கால தேட்டங்கள் அனைத்தும் அழிக்கப்பட வேண்டும் மற்றும் வெகுஜன வறிய நிலை சுமத்தப்பட வேண்டும் என்பதுதான்.

இதன் பொருள் கிரேக்கத்திலும் மற்றும் ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாளர்கள் முழு உணர்வுடன் ஆளும் வர்க்கம் அதனுடைய அனைத்துக் கட்சிகள், சமூக ஜனநாயக, “இடது மற்றும் கன்சர்வேடிவ் ஆகியவற்றிற்கு எதிராக அரசியல் போராட்டத்தை நடத்த வேண்டும், அது ஒரு தொழிலாளர்களின் அரசாங்கத்தை நிறுவும் நோக்கம் கொள்ள வேண்டும், பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகள் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்பதாகும். இதற்கு அனைத்து உத்தியோகபூர்வ தொழிற்சங்கங்களில் இருந்து ஒரு முறித்தலும், சோசலிசத்திற்கான ஒரு சர்வதேச போராட்டத்தில் அனைத்து நாடுகளிலுமுள்ள தொழிலாள வர்க்கம் ஐக்கியப்படுத்தப்படுவதும் தேவையாகும்.