சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

No answers from European summit meeting

ஐரோப்பிய உச்சிமாநாட்டில் விடைகள் எதுவும் இல்லை

By Nick Beams 
24 October 2011

use this version to print | Send feedback

ஞாயிறன்று பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற ஐரோப்பிய தலைவர்களின் உச்சிமாநாட்டில் இருந்து ஒரு சாத்தியமான யூரோப் பகுதிக்கான மீட்புத் திட்டம் பற்றி சில உருப்படியான விபரங்கள் தான் வெளிவந்தன. அடிப்படைப் பிரச்சினைகள் எவையும் தீர்க்கப்படவில்லை என்பது தெளிவாகிறது; இது புதன்கிழமை நடக்க இருக்கும் இன்னும் ஒரு உச்சிமாநாட்டில்இறுதித்திட்டம் ஒன்று வெளிவரும் என்பதை சந்தேகத்திற்கு உட்படுத்தியுள்ளது.

யூரோப் பகுதி தலைவர்களை எதிர்கொண்டிருக்கும் மூன்று முக்கிய பிரச்சினைகளாவன: கிரேக்கத்தின் பிணை எடுப்பு மற்றும் கடனை அது கொடுக்க இயலாமற்போனால் ஐரோப்பிய, உலக நிதிய அமைப்புமுறைக்கு அது கொடுக்கக் கூடிய அச்சுறுத்தல்; கிரேக்கம் மற்றும் பிற ஐரோப்பிய அரச கடன்கள் வைத்திருப்பதால் ஏற்படக்கூடிய இழப்புக்களைச் சந்திக்கும் வகையில் மறுமூலதனம் ஐரோப்பிய வங்கிகளுக்கு அளித்தல்; ஐரோப்பிய நிதிய உறுதிப்பாட்டு அமைப்பின் (EFSF) திறனை உயர்த்தும் நடவடிக்கைகள்அதாவது இன்னும் அதிக நெருக்கடிகள் ஸ்பெயின், இத்தாலியில் ஏற்பட்டால் அவற்றைச் சமாளிப்பதற்கு என.

இந்த மூன்று பிரச்சினைகளிலும் முக்கிய சக்திகளிடையே, எல்லாவற்றிற்கும் மேலாக பிரான்ஸுக்கும் ஜேர்மனிக்கும் இடையே வேறுபாடுகளை தூண்டியுள்ளன. இது உச்சிமாநாட்டில் மீண்டும் நன்கு வெளிப்பட்டது. பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி அறிவித்தார்: “இப்பொழுதிலிருந்து புதன்கிழமைக்குள் நாம் தீர்வு ஒன்றைக் காணவேண்டும்; அது கட்டமைப்பில் தீர்வு என இருக்க வேண்டும், ஒரு விழைவுடைய உறுதியான தீர்வாக இருக்க வேண்டும். வேறு வழி ஏதும் இல்லை.”

ஜேர்மனியச் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெலின் கருத்துக்கள் சற்று அடங்கியே இருந்தன: “புதனன்று, நாம் எடுக்கும் கடைசி நடவடிக்கையாக அது இருக்காது…. இன்னும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.”

இரு தலைவர்களும் ஒரு பிரச்சினை பற்றி உடன்பட்டனர்: தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான சிக்கன நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட வேண்டும் என்பதே அது. உடனடி இலக்கு இத்தாலியாக உள்ளது; மேர்க்கெலும் சார்க்கோசியும் பிரதம மந்திரி பெர்லுஸ்கோனி வரவு-செலவுத் திட்டக் குறைப்புக்கள் மற்றும் இத்தாலிய பொருளாதாரத்தில்கட்டுமானச் சீர்திருத்தங்கள் பற்றிய முந்தைய உடன்பாடுகளைச் செயல்படுத்த வேண்டும் என்று கோரியுள்ளனர். கடந்த வாரம் ஐரோப்பிய ஆணையம் இந்த நடவடிக்கைகள்மிக அவசரம் எனக் கவனிக்கப்பட வேண்டியவை என்று அறிவித்துள்ளது.

கிரேக்கத்தின் கடன் என்னும் மிக முக்கிய பிரச்சினை குறித்து, உச்சிமாநாட்டில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று மூன்று மாதங்களுக்கு முன்புதான் உடன்பாடு காணப்பட்ட முந்தைய பிணைஎடுப்புத் திட்டம் ஒரு முழுத் தோல்வி எனக் காட்டுகிறது. ஜூலை 21ம் திகதி பொதியின்படி, தனியார் முதலீட்டாளர்கள் 21 சதவிகித வெட்டை (ஒரு மொட்டை அடிப்பு) தங்கள் பத்திர இருப்புக்களில் இழப்புக்கள் என எடுத்துக் கொள்ள வேண்டும், அதே நேரத்தில் ஐரோப்பிய அரசுகளும் சர்வதேச நாணய நிதியமும் (IMF) இன்னும் கூடுதலாக 109 பில்லியன் பிணை எடுப்புக் கடன்களாக கொடுக்க வேண்டும் என்று இருந்தது.

ஆனால் கிரேக்கப் பொருளாதாரத்தின் மீது சிக்கன நடவடிக்கைகளின் பெரும் தாக்கத்தின் தன்மை --இத்திட்டம் ஒரு தீர்வு என வரவேற்கப்பட்டிருந்தது அது ஒரு செயலற்ற செயல்பாடு என்று போயிற்று. 21 சதவிகித ஒரு வெட்டை மட்டுமே வங்கிகள் செய்ய வேண்டும் என்ற உறுதிப்பாடு தக்க வைக்கப்பட்டிருந்தால், அதற்கு இப்பொழுது 252 பில்லியன் யூரோக்கள் கூடுதலாக உட்செலுத்தப்பட வேண்டும். மாற்றீடாக, முதல் கடன் திட்டம் தக்க வைக்கப்பட்டால், வங்கிகள் வெட்டை 60 சதவிகிதம் வரை செய்ய வேண்டும்.

உச்சிமாநாட்டின்போது, இத்தாலிய கருவூலத் தலைவர் விட்டோரியோ கிரில்லி சர்வதேச நிதியியல் கூடம் (IIF), உலக வங்கிகளின் கூட்டுமையம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் அவர்கள் ஏற்கத்தயாராக இருக்கும் வெட்டுக்களின் அளவு குறித்துப் பேச்சுக்களை நடத்தினார். IIF ன் நிர்வாக இயக்குனர் சார்ல்ஸ் டல்லாரா, வெட்டின் அளவை அதிகரிக்கும் முடிவுகளை முன்பு கண்டித்தவர், இரு திறத்தாரும்உடன்பாட்டிற்கு அருகிலேயே இல்லை என்று கூறினார். உடன்பாடு அடையப்பட முடியாவிட்டால், வெட்டுக்கள் சுமத்தப்படவில்லை என்றால், நிதிய நெருக்கடி தீவிரமாகும்; ஏனெனில் கிரேக்கக் கடனுடனான CDS (credit default swaps) என்பது 80 பில்லியன் யூரோக்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது செயலுக்கு வந்து விடும் எனக் கருதப்படுகிறது.

ஐரோப்பிய வங்கிகள் தங்கள் இருப்புநிலைக் குறிப்பை வலுப்படுத்த வேண்டும், அதையொட்டித்தான் நிதிய உறுதிப்பாடு முன்பு நினைக்கப்பட்ட 2019 என்பதற்குப் பதிலாக 2012 ஐ ஒட்டி 9 சதவிகிதம் என்ற முக்கியமான கட்டத்திற்கு வரும் என்ற உடன்பாடு ஒன்றுதான் உறுதியாக வந்துள்ளது போல் தோன்றுகிறது. இதற்கு வங்கிகளுக்கு குறைந்தப் பட்சம் 100 பில்லியன் யூரோக்களாவது  மறுமூலதனம் உட்செலுத்தப்பட வேண்டும், அது பெரும்பாலும் அரசாங்க நிதியங்களில் இருந்து எடுக்க வேண்டும்.

ஐரோப்பிய அரசாங்கங்களிடைய உடன்பாடு இருப்பது போல் தோன்றினாலும், முக்கிய வங்கிகள், குறிப்பாக ஜேர்மனியுடையவை, இத்திட்டத்தை எதிர்த்துள்ளன; ஏனெனில் அவர்களுடைய பங்கு விலைகள் இதையொட்டிச் சரிந்துவிடும். தங்கள் சொத்துக்களை குறைப்பதின் மூலம் தேவைப்படும் விகிதங்களை கொடுப்பதாக அவர்கள் அச்சுறுத்தியுள்ளனர். அத்தகைய செயற்பாட்டின் விளைவு இன்னும் கடுமையான கடன் சுருக்கம் ஐரோப்பிய பகுதி நாடுகளுடையே சுமத்தப்படும் என்பதாகும்.

உச்சிமாநாட்டில் முக்கியமான பிரச்சினை EFSF ன் திறனை பிணை எடுப்பை ஒழுங்குபடுத்துவதற்கு விரிவாக்கம் செய்தல் ஆகும். முக்கியமாக உறுத்தும் கருத்தானது நிதியம் ஒரு வங்கி உரிமத்தைப் பெற வேண்டும், அதற்கு ஐரோப்பிய மத்திய வங்கியின் ஆதரவு இருக்க வேண்டும் என்னும் பிரான்சின் வலியுறுத்தல்தான். இது ஜேர்மனி மற்றும் ECB யினாலயே கடுமையாக எதிர்க்கப்படுகிறது.

இந்த இணைந்த எதிர்ப்பை ஒட்டி, பிரான்ஸ் பின்வாங்கியுள்ளதுபோல் தோன்றுகிறது. ஆனால் தன்னுடைய கவலைகளுக்கு சலுகை அளிக்கும் வகையில் EFSF அரசாங்க பத்திரங்களுக்குக் காப்பீட்டு முறையில் 20 முதல் 30 சதவிகிதம் உத்தரவாதம் அளித்தல் போதுமானது இல்லை என்னும் ஜேர்மனியின் கருத்துக்கள் பிரான்சின் நிலைப்பாட்டிற்கு சலுகை என உள்ளது.

புதன் கூட்டத்திற்கு முன்னதாக இன்னும் அதிகமாக விவாதிக்க இருக்கும் புதிய திட்டம் ஒன்றும் உச்சிமாநாட்டில் வெளிப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், யூரோப்பகுதி நாடுகள் ஒரு சிறப்பு நோக்கக் கருவியை (Special purpose vehicle- SPV) நிறுவும்; அது இத்தாலிய மற்றும் ஸ்பெயின் பத்திரங்களை வாங்கும். ஐரோப்பிய நாடுகளைத் தவிர, SPV, சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து பணத்தைப் பெறும், பிரேசில் மற்றும் சீனாவில் இருந்தும் பெறும். இப்பேச்சுக்களில் தொடர்பு கொண்டிருந்த ஒரு மூத்த அதிகாரி, பைனான்ஸியல் டைம்ஸிடம் SPV காப்பீட்டுத் திட்டத்திற்கு இணையாகச் செயல்படும் அதையொட்டி அதன் செயல்திறனும் வளைந்து கொடுக்கும் தன்மையும் பெருகும் என்றார். ஒன்றாக இவற்றைப் பார்த்தால், SPV மற்றும் காப்பீட்டு நடவடிக்கைகள் இன்னும் கூடுதலாக 1,000 பில்லியன் யூரோக்களை கடன் நெருக்கடியைச் சமாளிக்க அளிக்கும்.

இத்திட்டம் யூரோப்பகுதிக்கு வெளியே உள்ள நாடுகளின் எதிர்ப்பை சந்திக்கக்கூடும். அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இரண்டும் கூடுதல் IMF நிதிகள் அளிப்பதை எதிர்க்கின்றன; யூரோப்பகுதித் தலைவர்கள்தான் தேவையான இருப்புக்களை அளிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றன.

SPV ஒரு புதிய உறுதியற்ற தன்மைக்கு ஆதாரமாகப் போய்விடலாம் என்ற கவலைகளும் உள்ளன. பைனான்ஸியல் டைம்ஸின் கட்டுரையாளர் வொல்ப்காங் முன்சௌ இடம் இருந்து இத்திட்டம் கடும் தாக்குதலைச் சந்தித்தது. இன்றுஐரோப்பா இப்பொழுது இன்னும் பெரிய பேரழிவிற்கு நெம்புகோல் கொடுக்கிறது என்னும் தலைப்பில் வெளிந்துள்ள கட்டுரையில் அவர் தற்போதைய வடிவமைப்பில் யூரோ தப்பிப் பிழைப்பதற்கான வாய்ப்பு இல்லை என்பதுதான் நடக்கலாம் என்று உள்ளது. யூரோத் தலைவர்கள் உடன்பாடு காண்பதில் தோல்வி என்பதால் இந்த நிலை வந்துள்ளது என்று இல்லை, மாறாக அவர்கள் மேற்கொள்ள முயலும் உடன்பாட்டின் விளைவுகளை ஒட்டி இது இவ்வாறு இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

EFSF க்கு நெம்புகோல்தன்மை கொடுப்பது என்பதுமுன்பு கடன் வாங்குபவர்களுக்கு முக்கிய துணைக் கடன்கள் (subprime mortgages) ஈர்ப்புத்தன்மை உடையவை என்று காட்டியது போன்ற காரணத்தை ஒட்டித்தான் ஈர்ப்புத்தன்மையில் இருக்கிறது என்று அவர் எழுதியுள்ளார். நெம்புகோல் தன்மை அளிப்பது பொருளாதாரச் செயற்பாடுகளைக் கொடுக்கலாம், ஆனால்இந்த விவகாரங்களைப் பொறுத்த வரை அவை பணம் இல்லை என்பதை மூடி மறைக்கும் செயல்தான்.”  EFSF ஐ குறிப்பிட்ட துறைக்கு காப்பீடு அளிக்கும் நிறுவனமாக மாற்றும் திட்டம் (அதாவது குறிப்பிட்ட சொத்திற்கு காப்பீடு அளித்தல் என்பது, இந்த விவகாரத்தில் அரசாங்கக் கடன் பத்திரத்திற்கு) 2007-08ல் வெடித்த நிதிய நெருக்கடிக்கு முன்பாக ஏற்படுத்தப்பட்ட ஒருவழிக் காப்பீட்டு முறைகளைத்தான் நினைவிற்குக் கொண்டுவருகிறது. அவையும் இப்படித்தான்மதிப்பற்ற கடன் வகைகளை காப்பீடு செய்தன, இறுதியில்நெருக்கடியை அதிகப்படுத்தியதாக மாறின.”

முஞ்சௌ கருத்துப்படி, அரசாங்க  பத்திரங்களுக்கு காப்பீடு குறிப்பிட்ட சதவிகிதம் என்பதுசிறந்த கருத்து போல் ஒலிக்கும்ஆனால் அதன் விபரங்கள் ஆராயப்படும்போது நிலைமை வேறுவிதமாக இருக்கும். காப்பீடு செய்யப்பட்ட பத்திரங்களின் மதிப்பு EFSF கொண்டிருக்கும் கடன் தரத்தை ஓரளவு பொறுத்து இருக்கும். அதுவோ அதற்கு உத்தரவாதம் அளிக்கும் யூரோப்பகுதி நாடுகளை நப்பியிருக்கும். பிரான்ஸ் அதன் மூன்று A தரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டால், பத்திரங்களின் மதிப்புக்கள் சரியும், அதையொட்டி காப்பீட்டின் மதிப்பு சரியும், அவற்றை ஒட்டி, “முழுக் கட்டமைப்பும் இறுதியில் சரிந்துவிடும்.”

பேரழிவு தரும் விபத்திற்கான வாய்ப்பு என்பது மிகவும் அற்பமானது என்பதை விட மிக அதிகம் ஆகும்”, “நெம்புகோல்தன்மையின் முக்கிய விளைவுகள் அத்தகைய வாய்ப்பு ஏற்படலாம் என்பதை அதிகப்படுத்துவதுதான் என்று முஞ்சௌ இறுதியாகக் கூறுகிறார்.