சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The way forward in Greece

கிரேக்கத்திற்கு ஒரு முன்னேற்றப் பாதை

Christoph Dreier
25 October 2011

use this version to print | Send feedback

கடந்த வாரம் கிரேக்கத்தை முடக்கிய மிகப் பெரிய பொது வேலைநிறுத்தம் தொழிலாள வர்க்கத்தின் சக்திவாய்ந்த சர்வதேச முக்கியத்துவம் கொண்ட வெளிப்பாடாகும். இந்த எதிர்ப்புக்களில் நூறாயிரக்கணக்கான தொழிலாளர்கள் அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். 1974ம் ஆண்டு இராணுவச் சர்வாதிகாரம் கவிழ்ந்ததற்குப் பின் இது மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் ஆகும்.

முன்னதாக இந்த ஆண்டுக் கோடையில் நடைபெற்ற எதிர்ப்புக்கள் குட்டிமுதலாளித்துவச் சக்திகளின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்தவை; ஆனால் கடந்த புதன், வியாழன் ஆர்ப்பாட்டங்கள், எல்லாவற்றிற்கும் மேலாகத் தொழிலாளர்கள் ஏதென்ஸில் சின்டக்மா சதுக்கத்தில் குழுமியதும் பிற கிரேக்க நகரங்களில் அணிவகுத்துச் சென்றதும் ஆகும். சீற்றம் அடைந்தவர்கள்” (Outraged) இயக்கம் என்று அரசாங்கத்திடம் ஜனநாயகக் கோரிக்கைகளை முன்வைத்ததுடன் நிறுத்திக் கொண்டிருந்த  முந்தைய தன்மை இவற்றில் காணப்படவில்லை.

பங்கு பெற்றவர்களின் விரோத உணர்வு அரசாங்கமும் பாராளுமன்றத்தில் பிரதிநிதிகளாக உள்ள அனைத்துக் கட்சிகளுக்கு எதிராக மட்டும் இயக்கப்படவில்லை; அது இரு முக்கியத் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்களான GSEE, ADEDY ஆகியவற்றின் மீதும் இயக்கப்பட்டது. “தொழிற்சங்கங்களினால் ஒன்றும் தொழிலாளர்கள் தெருக்களில் திரண்டு நிற்கவில்லை; அவற்றை மீறித்தான் நிற்கின்றனர் என்று இருக்கும் உணர்வை அழகாகச் சுருக்கிக் கூறும் வகையில் ஒரு தொழிலாளர் கூறினார்.

பங்கு பெற்றவர்களுக்கு சிரிசா (தீவிர இடதுக் கூட்டணி), அன்டர்ஸ்யா (ஆட்சியை அகற்றுவதற்கான முதலாளித்துவ-எதிர்ப்பு இடது ஒத்துழைப்பு அமைப்பு) போன்ற போலி இடதுக் கட்சிகள் மீதும் சில போலித் தோற்றங்கள் தான் இருந்தன. மாறாக கூட்டணி அரசாங்கத்தின் தன்மையை மாற்றும் முயற்சி, அரசாங்கத்தின் முன் வைக்கும் கோரிக்கைகளைப் போலவே பயனற்றிருக்கும் என்ற பரந்த இசைவுபட்டக் கருத்துத்தான் நிலவியது. தொழிலாளர்களுக்கு உந்துதுல் கொடுத்தது முழு அரசியல் ஸ்தாபனத்திற்கும் பொதுமக்களில் பெரும்பாலானவர்களுக்கும் இடையேயுள்ள சமரசத்திற்கு இடமில்லாத மோதல்தான்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூவின் சமூக ஜனநாயக PASOK அரசாங்கமானது சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஆகியவை கோரிய முன்னோடியில்லாத சமூகநலச் செலவு வெட்டுக்களைச் செயல்படுத்தியுள்ளது. பொதுத்துறை ஊழியர்களின் ஊதியங்கள் கிட்டத்தட்ட 50 சதவிகிதம் குறைக்கப்பட்டுவிட்டன. சாதாரண மக்கள் மீது கூட வரிவிதிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதையொட்டி ஏற்பட்ட மந்த நிலை தனியார் துறையிலும் பெரும் வேலைநீக்கங்களுக்கு வகை செய்துள்ளது.

அதே நேரத்தில் கிரேக்கத்தின் பெரும் செல்வக்கொழிப்புடைய தனிநபர்களின் சொத்துக்கள் மீது எந்த பாதிப்பும் ஏற்படுத்தவில்லை. ஜேர்மனியச் செய்தி ஏடான Der Spiegel  கடந்த வாரம் கிரேக்க மில்லியனர்கள் சுவிட்சர்லாந்தில் மட்டும் 600 பில்லியன் யூரோக்களைச் சேமிப்பாக வைத்துள்ளனர் என்ற தகவலைக் கொடுத்துள்ளது. இந்த நிதி கிரேக்க அரசாங்கத்தின் மொத்தக் கடனைவிட இருமடங்கு அதிகம் ஆகும்இதுதான் சமீபத்திய ஆண்டுகளின் மிகப் பெரிய வெட்டுக்களை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வியாழனன்று கிரேக்கப் பாராளுமன்றம் இன்னும் கூடுதலான சிக்கன நடவடிக்கைகளை எடுக்க முடிவெடுத்தது. இவற்றுள் கூடுதல் ஊதிய, ஓய்வூதியக் குறைப்புக்கள், பொதுத்துறையில் இன்னும் அதிக வேலை வெட்டுக்கள் மற்றும் தேசிய ஒப்பந்தச் சட்டத்தின்மீது கட்டுப்பாடு அகற்றப்படுதல் ஆகியவை அடங்கியுள்ளன. இவற்றைத்தவிர மூன்று நாட்களுக்குப் பிறகு ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் இதுவரை செய்யப்பட்டுள்ள வெட்டுக்கள் போதுமானவை அல்ல, அரசாங்கம் அடுத்த இரு ஆண்டுகளில் சிக்கன நடவடிக்கைகளைத் தீவிரமாக்க வேண்டும் என்று அறிவித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டங்களில் பல தொழிலாளர்கள் கிரேக்க நிகழ்வுகளின் சர்வதேச முக்கியத்துவத்தின் இரு தன்மைகளைப் பற்றி அறிந்திருந்தனர். தங்கள் உரிமைகளைக் பாதுகாக்கும் போராட்டத்தில் அவர்கள் முக்கிய ஐரோப்பிய அமைப்புக்களின் ஒருங்கிணைந்த வலிமையை எதிர்கொள்ளுகிறோம் மற்றும் கிரேக்கம் இதேபோன்ற வெட்டுக்களை எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் செயல்படுத்த கிரேக்கம் சோதனைக் களமாகப் பயனபடுத்தப்படுகிறது என்பவைதான் அவைகள்.

ஐரோப்பிய ஒன்றியம் நடத்திய பல பில்லியன் டாலர் பிணைஎடுப்புக்களை ஒரு சமூகநலச் செயலர் ஐரோப்பா முழுவதும் கிரேக்க நிலைமைகளைச் சுமத்தும் முயற்சி என்று விவரித்தார். “இப்பணம் ஐரோப்பியத் தொழிலாளர்களிடம் இருந்து திருடப்பட்டு, கிரேக்க அரசாங்கத்திற்குக் கொடுக்கப்படுகிறது, அதுவோ நேரடியாக அதை பெரிய வங்கிகளுக்குக் கொடுக்கிறது.”

இவருடைய கருத்து ஏதென்ஸில் உள்ளவர்கள் பெரும்பாலானவர்களின் உணர்வைச் சுருக்கிக் கூறுகிறது: ஐரோப்பியத் தொழிலாளர் வர்க்கத்தின் நலன்களுக்கும் ஆளும் வர்க்கம், அதன் நிறுவனங்கள் மறுபுறம் என்று இவற்றிற்கு இடையே சமரசத்திற்கு இடமில்லாத எதிர்ப்பு என்பதுதான் அது.

எதிர்ப்புக்களை அரசாங்கம் மிக மிருகத்தனமான முறையில் அடக்குவதற்கு இதுதான் காரணம். சின்டக்மா சதுக்கத்தில் கூடியிருந்த அராஜகவாதிகள் மற்றும் ஸ்ராலினிச தொழிற்சங்க PAME உறுப்பினர்களை அகற்றுவதற்கு பெரும் கண்ணீர்ப்புகைக் குண்டுக்கள், தடியடி, கையெறி குண்டுகள் ஆகியவற்றைச் சில மோதல்களில் அரசாங்கம் பயன்படுத்தியது. எதிர்ப்பாளர்களை சில நூறு மீட்டர்கள் தெருக்களில் போலிசார் ஓட ஓட விரட்டியடித்தனர்; நகர மையம் முழுவதும் கண்ணீர்ப்புகைக் குண்டினால் ஈரப்பதத்தைக் கொண்டது. சில நாட்களுக்கு முன்னதாக, வேலைநிறுத்தம் செய்திருந்த தெருத் துப்புறவுத் தொழிலாளர்கள் மீண்டும் அவர்களை வேலையில் ஈடுபடுத்தப்படுவதற்காக இராணுவச் சட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டனர்.

ஏதென்ஸில் நடக்கும் மிருக்கத்தனம் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையே பெருகி வரும் மோதலின் தொடக்கம்தான். சமரசத்திற்கு இடமில்லாத நலன்களில் மோதல் இருக்கையில், ஒரே மாற்றீடு பெருகிய முறையில் தென்படுகிறது: ஒன்று தொழிலாளர்கள் அரசாங்கத்தை அகற்றி, வங்கிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்து ஒரு தொழிலாளர் அரசாங்கத்தை நிறுவ வேண்டும், அல்லது அரசாங்கம் மிருகத்தனமாகத் தொழிலாளர் வர்க்கத்தின் எதிர்ப்பை நசுக்கி, அதடைய மோசமான சிக்கன நடவடிக்கைகளைத் தொடரும்.

இந்த நிலைமையில் தொழிற்சங்கங்கள் தங்களால் இயன்றவற்றை அரசாங்கத்திற்கு எதிரான தொழிலாளர் இயக்கத்தை நாசப்படுத்துவதற்குச் செய்கின்றன. சமீபத்திய வாரங்களில் அவர்கள் கணக்கிலடங்கா தனிமைப்படுத்தப்பட்ட, திறமையற்ற வேலைநிறுத்தங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளன; அவை தொழிலாளர்களைத் தளர்ச்சியடையச் செய்யும் நோக்கத்தைத்தான் கொண்டவை. எண்ணெய்ச் சுத்திகரிப்புத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் போன்றவை வீரியம் உடையனவாக இருந்தால், அவை விரைவில் எந்த விளைவும் கிடைக்காமல் நிறுத்தப்பட்டு விடுகின்றன. கடந்த வாரம் துப்புரவுத் தொழிலாளர்கள் தெருக்களுக்கு வந்து ஆர்ப்பரித்த போது, தொழிற்சங்கங்கள் எந்த உதவியையும் செய்யாத நிலையில், அவர்கள் மீண்டும் வேலைக்குச் செல்லும் கட்டாயத்திற்கு உட்பட்டனர்.

ஸ்ராலினிச PAME தொழிற்சங்கம் நடந்து கொண்ட முறையும் குறிப்பிடத்தக்கது ஆகும். PAME தன்னை GSEE, ADEDY ஆகியவற்றைவிடக் கூடுதலான இடது சார்பு உடையது எனக் காட்டிக் கொள்ள முற்பட்டுள்ளது; ஆனால் சமீபத்திய வாரங்களில் ஒரு வேலைநிறுத்தத்தைக்கூட அது ஏற்பாடு செய்யவில்லை. வியாழனன்று PAME ஆதரவாளர்கள், கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சிக்கு (KKE) நெருக்கமானவர்கள், ஆர்ப்பாட்டக்காரர்களிடம் இருந்து பாராளுமன்றத்தைப் பாதுகாப்பதற்குத் தங்கள் பாதுகாப்புப் படையே பொறுப்புக் கொள்ளும் என்ற உத்தரவாதத்தை அளித்தது. ஹெல்மெட்டுக்களை அணிந்து, பேஸ்பால் மட்டைகளை ஆயுதமாகக் கொண்டு PAME ஆதரவாளர்கள் நேரடியாக ஏதென்ஸில் பொலிசின் பொறுப்புடன் ஆர்ப்பாட்டக்காரர்களை அடித்து, மிரட்டினர்.

தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்துடன் பொதுவாக எதையும் கொண்டிராத ஒரு சமூகத் தட்டைத்தான் பிரதிபலிக்கின்றன. நாளேடு To Vima வின் ஆய்வுப்படி, கிரேக்கத்தில் ஒரு தொழிற்சங்கத் தலைவர் ஆண்டு ஒன்றிற்கு 250,000 யூரோக்களைப் பெறுகிறார். தொழிற்சங்கங்கள் கிரேக்க அரசாங்கத்துடன், குறிப்பாக ஆளும் PASOK உடன் மிக நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளன.

தங்கள் பங்கிற்கு தொழிற்சங்கங்கள் பல போலி இடது அமைப்புக்களின் ஆதரவைக் கொண்டுள்ளன. அவைகள் இரண்டு கூட்டுக்களில், சிரிசா, அந்தர்ஸ்யா என்பவற்றில் இணைந்துள்ளன. கிரேக்க சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சி (IS எனப்படும் சர்வதேச சோசலிசப் போக்கின் உறுப்பு அமைப்பு) சமீபத்தில் தொழிற்சங்கவாதிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் குழு என்பதை நிறுவி, அவற்றிடம் இருந்து தொழிலாளர்கள் பெரிதும் விலகியிருக்கும் நேரத்தில் சங்கங்களுக்கு ஆதரவைத் திரட்ட முற்பட்டுள்ளன. Xekinima குழு (CWI எனப்படும் சர்வதேச தொழிலாளர் குழுவின் உறுப்பு) கிரேக்கப் பாராளுமன்றத்திற்குப் பாதுகாப்பு நடவடிக்கை எடுத்த PAME யின் செயலுக்கு ஆதரவு கொடுக்கும் அளவிற்குச் சென்றது.

இந்த அமைப்புக்களின் பிற்போக்குத்தன்மை அவற்றின் முழுத் தேசிய நிலைநோக்கில் குறிப்பாக வெளிப்படுகிறது. GSEE தொழிற்சங்கத்தின் முக்கியப் பிரதிநிதியான Nikos Kioutsoukis அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள வெட்டுக்களுக்கு எதிராக வாதிடுகையில், இது கிரக்க உணர்வு, “கௌரவம், பெருமிதம் ஆகியவற்றிற்கு முரணானது என்று கூறியுள்ளார்.

சிரிசா மற்றும் ஆளும் PASOK கட்சிகள் ஆகியவற்றின் நிலைப்பாடுகளில் வேறுபாடு அதிகம் இல்லை என்றாலும் (இரண்டுமே கூடுதல் வெட்டுக்கள்தான் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இன்னும் நிதியத்தைப் பெறத் தேவை என ஆதரவு கொடுப்பவை), அந்தர்ஸ்யா மற்றும் Xkinima உடைய பிரதிநிதிகள் யூரோவை விட்டு நீங்குவதற்கு ஆதரவான கருத்துக்களைக் கூறுகின்றனர்; ட்ராஷ்மா மீண்டும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும், கடன்கள் திருப்பித்தர வேண்டியதில்லை என்றும் கூறுகின்றனர். கம்யூனிஸ்ட் கட்சியின்(KKE) பிரதிநிதி WSWS இடம் கிரேக்கத்தின் அனைத்துப் பிரச்சினைகளின் ஆதாரமும் மாஸ்ட்ரிச் ஐரோப்பிய உடன்பாட்டினால்தான் என்றார்; இது 22 ஆண்டுகளுக்கு முன் நடைமுறைக்கு வந்தது.

இக்குழுக்கள் முன்வைக்கும் நடவடிக்கைகள் கிரேக்கத் தொழிலாளர்களுக்கு மட்டும் இல்லாமல் முழு ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்திற்கு பேரழிவுதரும் விளைவுகளை ஏற்படுத்தும். இத்தகைய கருத்துக்கள் கிரேக்க நாட்டுத் தொழிலாளர்களை சங்கிலியால் பிணைக்கும் நோக்கத்தைக் கொண்டவை; தொழிலாளர்கள் ஆளும் உயரடுக்கின் நலன்களுக்குத் தாழ்ந்து நிற்க வைப்பவை. கிரேக்கம் திவால் ஆகி, ட்ராஷ்மாவிற்கு மீண்டும் செல்லுதல் என்பது நாட்டை உலகப் பொருளாதாரத்தில் இருந்து பிரித்துவிடும் என்பதுடன் இன்னும் ஆழ்ந்த மந்த நிலையையும் ஏற்படுத்திவிடும்; அத்துடன் மிகப் பெரிய பணவீக்கமும் ஏற்படும். ஊதியங்களின் வாங்கும் திறன் ஒரே நாளில் பெரிதும் சரிந்து விடும்.

கிரேக்கத்தின் சமீப ஆண்டு நிகழ்வுகள் தொழிலாளர்களுக்குத் தேசிய வகையில் தீர்வு இல்லை என்பதைத்தான் நிரூபிக்கின்றன. ஐரோப்பிய நிறுவன அமைப்புக்கள் என்ற பொது விரோதியைத்தான் கிரேக்கத் தொழிலாளர்கள் எதிர்கொள்கின்றனர் என்பது மட்டும் இல்லை, பிற ஐரோப்பிய தொழிலாளர்களும் அவ்வாறே எதிர்கொள்கின்றனர். வங்கிகளை பறிமுதல் செய்து அவற்றின் கட்டுப்பாடு பரந்த மக்களின் கீழ் வருதல் ஆகியவை ஒரு சர்வதேச அளவில்தான் முடியும்.

தங்கள் உரிமைகளைக் காப்பாற்றிக் கொள்வதற்குத் தொழிலாளர்கள் கிரேக்க PASOK அசாங்கத்தை எதிர்த்து நிற்பது மட்டுமின்றி, ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளை நிறுவுவதற்கு முறையான போராட்டத்தை நடத்த வேண்டும். அவர்கள் போராட்டத்தின் சர்வதேச முக்கியத்துவம், பல தொழிலாளர்கள் உள்ளுணர்வுகளால் ஏற்கனவே அறிந்துள்ளதுதான், அத்தகைய முழு நனவு கூடிய அரசியல் திட்டத்தின் தளமாக ஆக்கப்பட வேண்டும்.

இதற்கு இப்பொழுதுள்ள தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றின் போலி இடது ஆதரவாளர்களுடன் அரசியல் முறிவு தேவை; ஒவ்வொரு நாட்டிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகள் கட்டமைக்கப்படுதல் தேவை; அது ஒன்றுதான் மார்க்சிசத்தின் வரலாற்றுத்தன்மை வாய்ந்த மரபியத்தைத் தளமாகக் கொண்ட அரசியல் போக்காகும் அதேபோல் 20ம் நூற்றாண்டின் அனுபவங்களில் இருந்து மூலோபாயப் படிப்பினைகளையும் பற்றி எடுத்துக் கொண்டுள்ள போக்கும் ஆகும்.