சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The destruction of Sirte

சிர்ட்டே அழிப்பு

Patrick O’Connor
19 October 2011

use this version to print | Send feedback

இடைக்கால தேசிய சபையின் (TNC) "எதிர்ப்பு" கிளர்ச்சியார்களாலும், நேட்டோ யுத்த விமானங்களாலும் லிபிய நகரமான சிர்ட்டே திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகிறது. யுத்த குற்றத்திற்கான ஒரு நினைவுச்சின்னமாக இருக்கும் இந்த நடவடிக்கைக்கான முக்கிய பொறுப்பு, லிபியாவில் இராணுவ தலையீடு செய்ததன் பின்னால் நிற்கும் முக்கிய சக்திகளான அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் கேமரூன், பிரெஞ்ச் ஜனாதிபதி நிகோலஸ் சார்கோசி ஆகியோரையே சாரும்.

சிர்ட்டே பல வாரங்களாக முற்றுகையிடப்பட்டுள்ளது. உணவு, மருந்துப்பொருட்கள், மற்றும் ஏனைய அத்தியாவசிய தேவைகள் உட்பட அனைத்து வினியோகங்களையும் அந்நகரினுள் நுழையாதபடிக்கு இடைக்கால தேசிய சபை தடுத்துள்ளது. இடைக்கால தேசிய சபையின் மோட்டர்கள், பீரங்கி குண்டுகள், ராக்கெட்டுகளால் நடத்தப்பட்ட ஒரு பலமான மற்றும் கண்மூடித்தனமான தாக்குதலோடு சேர்ந்து, நேட்டோவும் மழை போல் குண்டுகளைப் பொழிந்துள்ளது. அந்நகரில் ஒரு மனிதாபிமான  நெருக்கடியைத் தூண்டிவிடும் மற்றும் அங்கே வசிப்போரைச் சரணடையச் செய்ய அச்சுறுத்தும் திட்டமிட்ட முயற்சியின் பாகமாக, தண்ணீர், மின்சாரம், கழிவுநீர் வடிகால் உட்பட, அடிப்படை உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளன.

அடுக்குமாடியகங்கள், வீடுகள், மருத்துவமனைகள், பாடசாலைகள், மற்றும் மக்களின் ஏனைய கட்டமைப்புகள் உட்பட சிர்ட்டேயில் உள்ள ஒவ்வொரு கட்டிடங்களும், அந்நகரை இறுதியாக கைப்பற்றும் முயற்சியிலுள்ள "எதிர்ப்பு" போராளிகளால், ஒன்று தரைமட்டமாக்கப்பட்டு உள்ளன அல்லது படுமோசமாக நாசமாக்கப்பட்டுள்ளன. கிளர்ச்சியார்கள் அங்கே உள்ள வீடுகளையும், கார்களையும் மற்றும் கடைகளையும் கொள்ளையடித்து வருகின்றனர். அங்கே குடியிருப்போரிடமிருந்து திருடப்பட்ட உடமைகளோடு தற்போது ஒவ்வொரு நாளும் சிர்ட்டேவிலிருந்து சுமையேற்றிய பாரவூர்திகள் வெளியேறிக்கொண்டிருக்கின்றன.

கிளர்ச்சியார்களின்- ஒரு குழு அங்கே ஒரு மின்னணு பொருட்கள் விற்பனை கடையைப் பொருட்களுக்குச் சேதாரம் இல்லாமல் இயந்திர துப்பாக்கிகளால் 15 நிமிடங்கள் சுட்டுதள்ளி திறந்து, அதிலிருந்து என்ன எடுத்துச் செல்லலாம் என்று பார்த்து கொண்டிருந்ததைக் கண்டதாக ராய்டரின் ஒரு செய்தியாளர் குறிப்பிட்டார். பல வீடுகள் கொள்ளையடிக்கப்பட்ட பின்னர், எரித்து தரைமட்டமாக்கப்பட்டு வருகின்றன.

கொடூரமான நடவடிக்கைகளைப் பதிவுசெய்துவரும் பத்திரிகையாளர்கள் தாங்கள் காணும் காட்சிகளால் அதிர்ந்து போயுள்ளனர். BBCஇன் வெய்ர் டேவிஸ் குறிப்பிடுகையில்: “ஏறத்தாழ இது அனைத்தையும் அழித்துவிடும் ஓர்  கொள்கையாகும். இந்த நகரை பாதுகாத்து வரும் கடாபி-ஆதரவு போராளிகள் சரணடைய போவதில்லை, ஆகவே சிர்ட்டே துண்டுதுண்டாக திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகிறது. மோதல் தீவிரமாக உள்ளது. நம்பமுடியாதபடிக்கு பேரழிவுமிக்கதாகவும், ஏறத்தாழ மனம்-மரத்துப்போகுமளவிற்கு உள்ளது,” என்றார். பிரிட்டனின் Telegraph இதழைச் சேர்ந்த செய்தியாளர்கள் விவரிக்கையில், "சிதைந்தழிந்து" நிற்கும் சிர்ட்டே, ரஷ்யாவின் இரத்தக்களரியான செச்சேனியா  யுத்தத்தின் முடிவில், குரோஜ்னியில் (செசென்யாவின் தலைநகரம்) காணப்பட்ட கொடூரமான காட்சிகளின் பழைய நினைவுகளைத் திரும்பக்கொண்டு வருகின்றன,” என்றனர்.

சிர்ட்டேயின் அழிப்பதென்பது, 1930கள் மற்றும் 40களில் பாசிச சக்திகளால் குயர்னிகா, வார்ஷா கெட்டோ, மற்றும் ஏனைய நகர்புற மையங்கள் துடைத்தழிக்கப்பட்டதைப் போல இதற்கிணையான ஏனைய வரலாற்று சம்பவங்களை முன்கொண்டு வருகிறது.

ஒபாமா, கேமரூன், சார்கோசி தொடங்கி லிபிய யுத்தத்திற்குப் பொறுப்பான அனைவரும் யுத்த குற்றங்களுக்காக தண்டிக்கப்பட வேண்டும். இவர்கள் தான் ஒரு ஆத்திரமூட்டப்படாத ஆக்கிரமிப்பு யுத்தத்தைத் தொடங்கி வைத்தனர். நூரெம்பேர்க்கின் யுத்த குற்றங்களுக்கான நீதிமன்றத்தில், ஜேர்மனிய நாஜி தலைவர்களுக்கு எதிராக இதேபோன்றவொரு ஆத்திரமூட்டப்படாத ஆக்கிரமிப்பு யுத்தம் தான் பிரதான குற்றச்சாட்டாக தாக்கல் செய்யப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் 1973 தீர்மானத்தின் அடிப்படையில், போலி சட்டப்பூர்வமாக அடித்தளமாக காட்டி, லிபிய யுத்தத்திற்கு நேட்டோ அதன் உத்தியோகப்பூர்வ அனுமதியை கோரியிருந்தது. ஆனால் இந்த ஆவணத்திலிருந்த "விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்ட வலய" விதிமுறைகள் ஏற்கப்பட்டவுடனேயே அது ஏளனம்செய்யப்பட்டது.

தற்போது சிர்ட்டேவில் செய்யப்பட்டுவரும் அட்டூழியங்கள், நவ-காலனிய தலையீட்டின் இயல்பிலிருந்து நேரடியாக எழுகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியமும், அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும் லிபியாவின் பெரும் எண்ணெய் வளங்களைக் கைப்பற்றும் முக்கிய நோக்கத்தோடு கடந்த பெப்ரவரியில் வெடித்தெழுந்த கடாபிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களைப் பயன்படுத்திக் கொண்டன. அத்தோடு அப்பிராந்தியம் முழுவதிற்குமான வாஷிங்டனின் புவி-மூலோபாய நிலைப்பாட்டை அச்சுறுத்தும் விதத்தில் துனிசா மற்றும் எகிப்தில் வெடித்த புரட்சிகர போராட்டங்களை ஒட்டி, வட ஆபிரிக்காவிலிருந்த அவர்களின் மேலாதிக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ள முயன்றன.

"செல்வம் மற்றும் வளங்களால் லிபியா ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது" என்ற அறிவிப்போடு, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஹில்லாரி கிளிண்டன் நேற்று திரிப்போலி விஜயம் செய்திருந்தார். இடைக்கால தேசிய சபை தலைவர்களுடன் நடந்த விவாதங்களில், “அதை (லிபியாவை) எண்ணெய் வள பொருளாதாரமாக மாற்றியமைக்க உதவுவதாக" அவர் உறுதியளித்ததாக Bloomber குறிப்பிட்டது. அந்நாட்டில் தொடர்ந்துவந்த "இரத்தந்தோய்ந்த மோதல்" பற்றி குறிப்பிட்டதைத் தவிர, கிளிண்டன் சிர்ட்டே குண்டுவீச்சு குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.

சிர்ட்டே அழிப்பில் அங்கே தீர்க்கமான அரசியல் கணிப்பீடுகள் உள்ளன.

நேட்டோ சக்திகளைப் பொறுத்தவரையில், இடைக்கால தேசிய சபையின் ஆதரவான நிர்வாகத்தைக் கொண்டு, தற்போது திரிப்போலியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள புதிய அமைப்புமுறைக்கு எதிராக லிபியாவிற்குள் எழும் எவ்வித எதிர்ப்பையும் தடுக்கும் ஒரு தடுப்பரணாக  உதவ செய்வதே அந்த வன்முறையின் நோக்கமாகும். சிரியா மற்றும் ஈரானும் அமெரிக்க-ஐரோப்பிய நிபந்தனைகளை மதிக்க மறுத்தால், அவையும் இதேபோன்ற ஒருவிதமான பழிவாங்கும் முறைமைகளை முகங்கொடுக்க வேண்டியதிருக்கும் என்ற அச்சுறுத்தலோடு, சிர்ட்டே நடவடிக்கை சிரியா மற்றும் ஈரான் அரசாங்கங்களை நோக்கியும் திருப்பிவிடப்பட்டுள்ளது. லிபியாவில் நேட்டோ தலையீடு தொடங்கிய போது, “ஒவ்வொரு ஆட்சியாளரும், குறிப்பாக ஒவ்வொரு அரேபிய ஆட்சியாளரும்" அதுபோன்றவொரு தாக்குதலை முகங்கொடுக்க வேண்டியதிருக்குமென சார்கோசி பகிரங்கமாகவே அச்சுறுத்தினார்.

ஒபாமா நிர்வாகம் சீன அரசாங்கத்திற்கு ஒரு சேதியை அனுப்ப சிர்ட்டே அழிப்பை பயன்படுத்த விரும்புகிறது. லிபியா உட்பட, ஆபிரிக்கா முழுவதும் அதன் செல்வாக்கை வேகமாக அதிகரித்துள்ள சீனா, அந்த கண்டத்தின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக மாறி வருவதோடு, அதன் எண்ணெய் மற்றும் கனிமவள ஏற்றுமதிக்கு ஆபிரிக்கா பிரதான மையமாக உள்ளது. அமெரிக்கா மற்றும் முன்னாள் ஐரோப்பிய காலனிய சக்திகளின் ஆதிக்கத்திற்குக் குழிபறிக்கும் வகையில், அப்பிராந்தியம் முழுவதும் பெய்ஜிங்கும் இராஜாங்க மற்றும் இராணுவ உறவுகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. தனது சக்திவாய்ந்த எதிராளிக்கு ஒரு பாடம் புகட்ட, அதாவது அமெரிக்காவை விலையாக கொடுத்து சீனா அதன் பொருளாதார மற்றும் மூலோபாய உறவுகளை நெருக்கமாக அபிவிருத்தி செய்யும் எந்தவொரு அரசாங்கத்தையும் அழிக்க, இராணுவ பலத்தை பயன்படுத்த முடியுமென்பதைக் காட்ட வாஷிங்டனுக்கு லிபியா ஒரு வாய்ப்பை கொடுத்துள்ளது.

இப்போது இடைக்கால தேசிய சபை போராளிகள் செய்து கொண்டிருப்பதைப் போல, லிபிய உள்நாட்டு யுத்தத்தின்போது எந்தவொரு சமயத்திலும் கடாபியின் படைகள் செய்திருந்தால், அது ஊடக செய்திகளை அலங்கரித்திருக்கும்; யுத்த குற்றங்கள் மற்றும் மனிதயினத்திற்கு எதிரான குற்றங்களுக்காக தண்டிக்க வேண்டுமென்ற கோரிக்கைகள் உட்பட வாஷிங்டன், இலண்டன் மற்றும் பாரீஸிலிருந்து சீற்றமான ஓலங்களும் வந்திருக்கும். ஆனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலுள்ள உத்தியோகப்பூர்வ அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களில் ஒரேயொரு எதிர்ப்பு வார்த்தை கூட இல்லாமல், சிர்ட்டே நெருக்கடி கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.

ஒரு மதிப்பார்ந்த மனிதாபிமான நடவடிக்கையாக லிபிய யுத்தத்தை உத்வேகத்தோடு ஊக்குவித்த, அமெரிக்க பேராசிரியர் ஜூவான் கோல் மற்றும் Nation இதழ் போன்ற பல்வேறு "இடது" மற்றும் தாராளவாத சக்திகள் சிர்ட்டேவில் நடந்துவரும் சம்பவங்கள் குறித்து கடுமையான மௌனத்தை கடைப்பிடிக்கின்றனர். ஒரு நகரின் (பென்காஜி) குடிமக்கள் கொல்லப்பட்டு வருவதைத் தடுப்பதற்காக தொடுக்கப்பட்டதாக கூறப்பட்ட நேட்டோவின் மனிதாபிமான யுத்தம், மற்றொரு நகரின் (சிர்ட்டேவில்) ஆயிரக்கணக்கான குடிமக்களைக் கொன்றும், காயப்படுத்தியும் அந்நகரின் அழிவிற்கு இப்போது இட்டுச் சென்றுள்ளது என்ற உண்மையை அவர்களில் யாரும் கணக்கில் எடுத்துப் பார்க்க விரும்பவில்லை.

இத்தகைய யுத்த-ஆதரவு அடுக்குகள் மத்தியில், பிரெஞ்ச் எழுத்தாளர் பெர்னார்டு-ஹென்றி லெவி, நேட்டோ மற்றும் இடைக்கால தேசிய சபையால் சிர்ட்டேவில் நடத்தப்பட்டுவரும் குற்றங்களை நியாயப்படுத்தி பேசியுள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் அந்த யுத்தத்தைத் தூண்டிவிடுவதில் பிரான்சில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்திருந்த லெவி, அப்போது அந்த யுத்தத்தைமிஸ்ரதா, சிர்ட்டே மற்றும் பென்காஜியின் குடிமக்களைக் காப்பாற்றுவதற்காக" என்று வலியுறுத்தி இருந்தார். அவர் தனிப்பட்ட முறையில் சார்கோசிக்கும், இடைக்கால தேசிய சபை அங்கத்தவர்களுக்கும் இடையில் முதல் கூட்டத்தை ஏற்பாடு செய்தார். தற்போது, “சிர்ட்டேயை விடுதலை செய்தோருக்கான நியாயம்!” (“Justice for the Liberators of Sirte!”) என்ற தலைப்பில் Huffington Post வலைத்தளத்தில் வெளியான ஒரு கட்டுரையில், சிர்ட்டேவில் இடைக்கால தேசிய சபையின் துருப்புகள் செய்து கொண்டிருப்பதன்மீது எழும் எந்தவொரு விமர்சனத்திற்கு எதிராகவும் கோமாளித்தனமான வசைமொழிகளை லெவி வெளியிடுகிறார்.

அந்நகரம் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருவதை எடுத்துக்காட்டும் ஆதாரங்களை, "குடிமக்களுக்கு எதிராக வன்முறை நடவடிக்கைகள் நடப்பதாக கூறும் வெறும் வதந்திகள்" என்றும், “தவிர்க்கமுடியாத கவனக்குறைவு" என்றும் அந்த பிரபல மெய்யியலாளர் புறக்கணிக்கிறார். மக்களின் சொந்த அவலநிலைக்கு அவர்களையே குற்றஞ்சாட்டும் அவர், வெளியேற விரும்புபவர்கள் வெளியேறுவதற்கு போதிய அவகாசம் அளிப்பதற்காக, தாக்குதல் நடத்த உத்தரவு கிடைத்தும் இடைக்கால தேசிய சபை தாக்குதல் நடத்தாமல் பல வாரங்களாக தாக்குதலை நிறுத்தி வைத்திருப்பதாக" கூறுகிறார். மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான குடிமக்கள் சண்டையிலிருந்து தப்பித்து வர வழியில்லாமல் இருக்கும் உண்மையை லெவி கைவிடுகிறார்.

ஒட்டுமொத்த கட்டுரையும் மடத்தனமான பொய்களால் நிரம்பி வழிகிறது. ஓரிடத்தில் அந்த எழுத்தாளர், செஞ்சிலுவை சங்கத்தின் ஒரு குழுவால் மருத்துவ பொருட்கள் வினியோகிக்கப்படுவதைத் தடுக்க, சிர்ட்டேவின் முக்கிய மருத்துவமனையின்மீது இடைக்கால தேசிய சபையின் கிளர்ச்சியார்கள் திட்டமிட்டே குண்டுகளை வீசினர் என்ற உண்மையை மறுத்து எழுதுகிறார். அதற்கு அவர் கூறுவது இது, “அவர்களுடைய செல்களில் ஒன்று ஒரு மருத்துவமனையின் கூரையில் விழுந்த போது, அது மிகவும் பயங்கரமாக, கொடூரமாக, பரிதாபகரமாக இருந்ததுஆனால் அதுவும் தவறுதலாக நடந்த ஒன்று தான், அது எதிர்பாராமல் நிகழ்ந்துவிட்ட ஒரு சம்பவம்.” இறுதியாக லெவி பின்வருமாறு முடிக்கிறார்: “முதல் நாளிலிருந்தே, யுத்தம் செய்ய விரும்பாத போதினும் யுத்தம் நடத்தி கொண்டிருக்கும் அவர்களின் அந்த திட்டமிட்ட ஆனால் உண்மையில் தற்செயலான நிகழ்விற்காக அவர்கள் காட்டிய கண்ணியத்திற்கு நான் தலைவணங்குகிறேன்.”

சிர்ட்டே மீதான லெவியின் நிலைப்பாடானது, ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பிற்கு வக்காலத்துவாங்கும் மனிதாபிமான யுத்தத்திற்கு மத்தியதர வர்க்க மேல்தட்டு "தாராளவாத" ஆதரவாளர்களின் ஒட்டுமொத்த அடுக்கின் அரசியல் செயற்பாட்டினை எடுத்துக்காட்டுகிறது.