சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Social inequality proved to impact educational performance in UK

சமூக சமத்துவமின்மை பிரிட்டனில் கல்விச் செயற்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது நிரூபணமாகிறது

By Tania Kent 
31 August 2011

use this version to print | Send feedback
 

கல்வித்துறையில் சாதனை புரிவதற்கு மிகவும் குறிப்பிடத்தக்க தடையாக வறுமை உள்ளது என்பது சமீபத்தில் நடத்தப்பட்ட இரு புதிய ஆய்வுகள் மறுபடியும் உறுதி செய்துள்ளன.

 

சலுகைகள் அற்ற பெருகிய எண்ணிக்கையிலான சிறுவர்கள் ஆரம்ப பள்ளியை விட்டே அடிப்படையாகப் வாசித்தல், எழுதுதல், கணக்குப் போடுதல் இவற்றை திறம்படச் செய்ய முடியாமல் நீங்கிவிடுகின்றனர்.

 

கல்வி அறக்கட்டளை நிதியத்தின் (EEF) ஆய்வு குழந்தைகளில் 45 சதவிகிதத்தினர் ஏற்கனவே அரசாங்கம் நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச தரத்தை SAT தேர்வுகளில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அடைந்த நிலையில், தற்பொழுது இது 40 சதவிகிதம் சரிந்துள்ளதை காட்டுகிறது.

 

வறுமையில் வாடும் மற்றும் செழிப்பான குடும்பங்களின் குழந்தைகளுக்கு இடையே இருக்கும் இடைவெளி வியத்தகு அளவில் விரிவாகியுள்ளது. ஐந்து ஏழைக் குழந்தைகளில் மூன்றுகுறைந்த அளவு செயல்பாடு உடைய பள்ளிகளில் உள்ளனர்; இவர்கள் 11 வயதில் இடைநிலைப் பள்ளியைத் தொடங்கும்போது அடிப்படைகளில் தேர்ச்சி அடைவதில் இடர்படுகின்றனர்.

 

இந்த இடைவெளி இடைநிலைப்பள்ளியில் இன்னும் விரிவடைகிறது. அங்கு ஏழைக் குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கினர்தான் குறைந்தபட்ச தரத்தை தங்கள் ஒத்த வயதுடைய செல்வக் குடும்பக் குழந்தைகள் அடைவதில் அடைகின்றனர் (18 சதவிகிதம் 61 சதவிகிதத்துடன் ஒப்பிடும்போது). ஒப்புமையில் ஆரம்ப பள்ளிகளில் அவர்களுள் குறைந்தப்பட்ச தரத்தை பாதிப்பேர்தான் அடைய முடிகிறது (40 சதவிகிதம், 81 சதவிகிதம் உடன் ஒப்பிடும்போது).

 

இன்டிபென்டென்ட்டின் கல்விப் பிரிவு ஆசிரியர் இந்த ஆய்வின் கண்டுபிடிப்புக்கள்வசதியான குடும்பக் குழந்தைகளின் தரங்கள் உயரும்போது, தொகுப்பின் அடிமட்டத்தில் உள்ளவர்கள் பள்ளியை விட்டு நீங்கும் போது இழந்த தலைமுறையாக மாறும் ஆபத்து அதிகமாக உள்ளது என்ற முக்கிய கவலையைத்தான் காட்டுகிறது என்று கூறியுள்ளார்.

 

EEF ஐ நடத்தும் சட்டன் அறக்கட்டளை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள், நலன்கள் இல்லாத குழந்தைகள் பெருகிய முறையில் பள்ளியில் இருந்து ஒதுக்கப்படுகின்றனர் என்பதைக் காட்டுகின்றன. இப்புள்ளிவிவரங்கள் இங்கிலாந்தில் 2009/10 ல் பள்ளிகள் மற்றும் ஒதுக்கப்பட்ட முறையீடுகளில் (exclusion appeals) இருந்து தொகுக்கப்பட்டுள்ளன.

சமீபத்திய வெளியீட்டின் முக்கிய கருத்துக்களாவன:

 

ஆரம்ப, இடைநிலை மற்றும் அனைத்து சிறப்புப் பள்ளிகளில் இருந்து 2009/10ல் 5,740 நிரந்தர வெளியேறல்கள் மதிப்பிடப்பட்டுள்ளன.

2009/10ல் 279,260 குறிப்பிடப்பட்ட கால வெளியேறல்கள் அரச நிதி பெறும் இடைநிலைப் பள்ளிகளில் இருந்தன; 37,320 வெளியேறல்கள் ஆரம்ப பள்ளிகளிலும், 14,910 குறிப்பிடப்பட்ட கால வெளியேறல்கள் சிறப்புப் பள்ளிகளில் இருந்தும் வந்துள்ளன.

குறிப்பிடப்பட்ட காலத்தின் சராசரி வெளியேறல்களின் அளவு, அரச நிதியம் பெறும் இடைநிலைப் பள்ளிகளில் 2.5 நாட்கள்; ஆரம்ப பள்ளிகளில் சராசரி குறிப்பிட்ட வெளியேறல் குறிப்பிடப்பட்ட காலத்திற்கு 21 நாட்கள் என்று இருந்தன.

சிறுவர்களின் நிரந்தரமான வெளியேறல் விகிதம் கிட்டத்தட்ட சிறுமிகளின் வெளியேறும் காலத்தைப் போல் நான்கு மடங்கு அதிகமாக உள்ளது. குறிப்பிட்டக் கால வெளியேறல் விகிதம் மாணவர்களுக்கு கிட்டத்தட்ட மாணவிகளை விட மூன்று மடங்கு அதிகமாக இருந்தது.

சிறப்பு கல்வித் தேவைகள் உடைய மாணவர்கள், சிறப்புக் கல்வித் தேவை இல்லாத நிரந்தரமாக வெளியேறல் மாணவர்களை விட 8 மடங்கு அதிகமாக, அறிக்கைகளைக் கொண்டு காணப்படுகின்றனர்.

இலவசப் பள்ளி உணவிற்குத் தகுதி பெறும் குழந்தைகள், இது வருமானத்தால் நிர்ணயிக்கப்படுவது, கிட்டத்தட்ட நான்கு மடங்கு நிரந்தர வெளியேறல்காரர்கள் பெறுவதை விட அதிகமாக உள்ளனர்; அதே நேரத்தில் இலவசப் பள்ளி உணவிற்கு தகுதி பெறாத குறிப்பிட்ட கால வெளியேறல்காரர்களைவிட மூன்று மடங்கு அதிகமாக இருப்பர்.

இலவசப் பள்ளி உணவுகள் பட்டியலிலுள்ள மாணவர்கள் கேம்ப்ரிட்ஜ் அல்லது ஆக்ஸ்போர்டிற்கு தனியார் பள்ளிகளில் இருந்து செல்லக்கூடியவர்களைவிட 55 மடங்கு குறைவாக இருப்பர் என்று சட்டன் அறக்கட்டளை கூறியுள்ளது. இந்த விகிதம் 0.8 சதவிகிதம் என்று ஆக்ஸ்போர்ட், கேம்ப்ரிட்ஜ் இரண்டிலும் இருந்தது; இது தனிப் பள்ளிகளில் இருந்து வரும் மாணவர்களை விட 40 சதவிகிதம் அதிகமாகும்.

உயரும் கல்விக் கட்டணங்கள் மற்றும் உதவி நிதித் திட்டங்களை வெட்டி இருக்கும் நிலையும், ஏழை மாணவர்கள் உயர்மட்ட பல்கலைக்கழகத்தில் சேருவதற்கு இன்னும் கடினமாக்கிவிடும் என்று அறக்கட்டளை கூறியுள்ளது பொதுவாக தனியார் பள்ளிகளில் இருந்து வரும் மாணவர்கள் உயர்மட்டப் பல்கலைக்கழகம் ஒன்றில் சேருவதற்கு இலவசப் பள்ளி உணவு பெறும் மாணவர்களைவிட 22 மடங்கு அதிகமாக இருக்கும் என்று அறக்கட்டளை தெரிவிக்கிறது.

 

இதே நேரத்தில் வெளியிடப்பட்டுள்ள மற்றொரு ஆய்வு, பிரிட்டிஷ் கல்வி ஆய்வு சங்கத்தால் நடத்தப்பட்டது, வசதியான, ஏழைப் பின்னணி மாணவர்களுக்கு இடையே உள்ள இடைவெளியை மூடுவதற்கு பள்ளிகளால் பொதுவாக இயலாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

 

1997ல் டோனி பிளேயரின் கீழ் தொழிற்கட்சி பதவிக்கு வந்தபோது, கல்விதான் அதன் முதல் முன்னுரிமையாக இருக்கும், 20 ஆண்டுகளுக்குள் குழந்தை வறுமையை அது அகற்றும் என்று உறுதியளித்திருந்தது. அதன் இலக்குகளை அடைவதற்கு மாறாக, குழந்தை வறுமை மற்றும் இரு அடுக்குக் கல்வி முறை முன்னைவிட உறுதியாக நிலைகொண்டுவிட்டன. பள்ளிகளில் சமூக இடைவெளியை அகற்றுவது என்னும் அரசாங்கத்தின்முயற்சிகள் திறமையற்று உள்ளன; வேலையின்மை, வீடின்மை, சுகாதாரத் தேவைகள் போன்ற பரந்த சமூகப் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்றால் தொடர்ந்து அவ்வாறுதான் இருக்கும் என்று ஆய்வு கூறியுள்ளது.

 

இடைவெளியைக் குறுக்குவதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள்கணிசமான, நிலைத்த முன்னேற்றங்களை ஏற்படுத்தவில்லை. கல்விக்குக் கூடுதலாக நிதி ஒதுக்குவது சமூக வெளியேற்றத்தை சமாளிக்கும் என்று சங்கம் ஆதரவு கொடுத்தாலும், பள்ளிகள் வறிய பின்னணிக்கும் குறைந்த கல்வித்துறைச் சாதனைக்கும் இடையே இருக்கும் பிணைப்பை முறிக்கச் சிரம்மப்படுகின்றன என்ற முடிவுரையைக் கூறியுள்ளது.

 

பொது அல்லது இலக்கு வைக்கப்பட்டுள்ள குறுக்கிடுகள் எதுவும் இதுவரை கணிசமான, நிலைத்த முன்னேற்றங்கள் இன்னும் பரந்த முறையில் இருக்கும் பள்ளிகளில் பரவும் என்பதை நிரூபிக்கவில்லை என்றுசமூக சமத்துவமின்மை: பள்ளிகள் இடைவெளியை குறுக்க முடியுமா?” என்ற தலைப்பில் வந்துள்ள ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த ஆய்வின் இணை ஆசிரியரான மெல் வெஸ்ட், மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தில் கல்விக்கூடத் தலைவர், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பள்ளி மாணவர்களுக்கு இன்னும் சமமான விளைவுகளைச் சாதிக்கும் வகையில் இருக்க முடியாது என்று கூறுகிறார்.

 

ஒரு பங்கைப் பள்ளிகள் செய்யலாம், ஆனால் அதற்கு இணையான மூலோபாயங்கள் சுகாதாரம், வீடுகள், வேலை ஆகிய பிரிவுகளிலும் இருக்க வேண்டும் என்று பேராசிரியர் வெஸ்ட் கூறுகிறார். இல்லாவிடின், பள்ளிகளின் மிகச்சிறந்த முயற்சிகள்கூட மாணவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பங்கள் தங்கள் வீட்டுப் பின்ணியிலுள்ள மற்ற பிரச்சினைகளை எதிர்த்து நிற்பதற்குப் போதுமானதாக இராது.

வேலையின்மை, மோசமான வீடுகள், மட்டமான ஆரோக்கியம் ஆகியவற்றில் திணறும் குடும்பத்தில் இருந்து வரும் மாணவர்கள் உள்ளார்கள் என்றால், பள்ளிகள் இன்னும் வசதியுடைய குழந்தைகளுடனான இடைவெளியை மூடுவது என்பது குறைந்த அளவில்தான் சாதிக்கப்பட முடியும். பரந்த சமூகத் தீமைகளை சமாளிப்பதற்கு அரசியல்வாதிகளுக்குஅனைத்தையும் தீர்க்கும் மருந்தை பள்ளிகள் அளிக்க முடியாது என்று அவர் கூறினார்.

 

League Tables முறை பயன்பாடு உட்பட பள்ளிகளுக்கு இடையேயுள்ள போட்டி, வசதி படைத்த மற்றும் ஏழைகளின் கல்வி அனுபவங்களில் இருக்கும் இடைவெளியைக் குறைக்க உதவவில்லை. “பள்ளிகளிடையே 20 ஆண்டுகளாக நடக்கும் போட்டி, நலன்கள் குறைந்துள்ள மாணவர்களின் நிலைமை முன்னேற்றுவிக்க அதிகமாக எதையும் செய்துவிடவில்லை என்று வெஸ்ட் கூறுகிறார்.

 

இப்பொழுது சுமத்தப்படும் பில்லியன் கணக்கான பவுண்டுகள் சிக்கன வெட்டுக்கள் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்வில் அனைத்துக் கூறுபாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும்; சமூகப் பிளவை அதிகப்படுத்தத்தான் செய்யும். மோசமாகும் வறுமை நிலை மற்றும் பொது இழப்புக்கள் என்பது நல்ல, தரமான கல்வி என்பது செல்வந்தர்கள் மற்றும் மத்தியதர வகுப்பில் வசதியுடைய பிரிவினரின் பிரத்தியேகமான உரிமையாக இருக்கும் என்பதுதான் இதன் பொருள்.