சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தோனேசியா

Corruption scandal rattles Indonesian government

ஊழல் மோசடி இந்தோனேஷிய அரசாங்கத்தில் சலசலப்பை ஏற்படுத்துகிறது 

By John Roberts
31 August 2011

use this version to print | Send feedback

ஒரு பெரிய இந்தோனேஷிய ஊழல் மோசடி, ஜனாதிபதி சூசிலோ பாம்பேங் யுதோயோனோவின் அரசாங்கத்திற்கு கணிசமான அழுத்தத்தை அளித்துள்ளது. மே மாதம் வரையில் யுதோயோனோவின் ஜனநாயக கட்சியின் கருவூலராக இருந்த, பிரதிநிதிகள் சபையான நாடாளுமன்ற கீழ்சபையின் உறுப்பினரான 32-வயது முஹம்மது நஜூருதீன், இந்த விவகாரத்தின் மையத்தில் உள்ளார்.    

நஜூரூதீன் தற்போது மேற்கு ஜாவாவிலுள்ள டெபோட்டில், தேசிய ரோந்து பொலிஸ் பிரிவின் சிறைச்சாலையில் உட்கார்ந்து மௌனம் காத்து கொண்டிருக்கிறார். இந்த ஆண்டு தென்கிழக்கு ஆசிய விளையாட்டு போட்டிகளுக்காக விளையாட்டு கிராமம் கட்டுவதோடு தொடர்புபட்ட இலஞ்சங்களுக்காக, நாட்டின் ஊழல் ஒழிப்பு ஆணையத்தால் (KPK) அவர் விசாரிக்கப்பட்டு வருகிறார். அந்த விவகாரத்தில் அவர் 3 மில்லியன் அமெரிக்க டாலர் அல்லது ஒப்பந்த நிதியில் 20 சதவீதத்தைஅரசியல் கட்டணமாகவும்”, ஏனைய 30க்கும் மேலான அரசு திட்டங்களிலிருந்து 706 மில்லியன் டாலரையும் சுரண்டி இருக்கலாம் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

நாட்டைவிட்டு அவர் வெளியேறக் கூடாது என ஊழல் ஒழிப்பு ஆணையம், ஓர் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், மே மாதம் நஜூரூதீன் இந்தோனேஷியாவிலிருந்து பறந்துவிட்டிருந்தார். ஆனால் தவிர்க்கவியலாமல் அவர் கொலாம்பியாவில் கண்டறியப்பட்டு, அங்கே கைது செய்யப்பட்டார். பின்னர் ஆகஸ்ட் 13இல் ஜகார்தாவிற்கு மீண்டும் அழைத்து வரப்பட்டார்.

அவர் நாட்டைவிட்டு ஓடிய சமயத்தில், நஜூரூதீன் கொஞ்சநஞ்ச பொய்களைப் பேசவில்லை. செல்பேசிகளையும் மற்றும் ஸ்கைப்பையும் கொண்டு ஊடகங்களோடு உரையாடிய அவர், ஊழலுக்காக மூத்த அரசியல்வாதிகளையும், அரசு அதிகாரிகளையும், ஊழல் ஒழிப்பு ஆணைய உறுப்பினர்களையும் குற்றஞ்சாட்டினார். அவர்கள் அனைவரும் குற்றச்சாட்டுகளை மறுத்ததோடு, நஜூரூதீன் அவரின் சொந்த ஊழல் நடவடிக்கைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப முயல்கிறார் என்றும் குற்றஞ்சாட்டினார்கள்.

நஜூரூதீனால் பெயரிடப்பட்டவர்களில், ஜனநாயக கட்சி தலைவர் அனாஸ் உர்பனின்ங்ரும், பிரதிநிதிகள் சபையின் அவைத்தலைவர் மர்ஜூகி அலீய், மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி அண்டி மல்லாரன்கெங் ஆகியோரும் உள்ளடங்குவர். நஜூரூதீனைப் போலவே, இவர்களும் ஜனநாயக கட்சியில் யுதோயோனோவோடு மிகவும் நெருக்கமாக உள்ள இளம் பிரமுகர்களாவர். 2014 தேர்தலில் ஓய்வு பெற வேண்டிய யுதோயோனோவைப் பிரதியீடு செய்ய, அனாஸ் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படலாமென்று பரவலாக கருதப்பட்டது.

சுஹார்டோ-காலத்திய ஒரு முன்னாள் தளபதியான யுதோயோனோ, அப்போதைய ஜனாதிபதி மேகாவதி சுகர்னோபுத்ரி மற்றும் அவரது ஜனநாயக போராட்ட கட்சியில் (PDI-P) இருந்து பிரிந்துவந்து 2001இல் ஜனநாயக கட்சியை ஸ்தாபித்தார். 2004இல் நேரடியாக ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற அவர், 2009இல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஊழல் ஒழிக்கப்படும் என்ற அவரது வாக்குறுதிகளே அவருடைய தேர்தல் பிரச்சாரங்களின் மையப்பொருளாக இருந்தன

யுதோயோனோ அவரது முதல் பதவி காலத்தில், ஊழல் ஒழிப்பு ஆணையத்தை ஸ்தாபித்தார். சாதனையளவிற்கு ஊழல் குற்றங்களை வெளிக்கொணர்ந்த அதன் வெற்றியானது, பெரும்பாலும் கீழ்மட்ட அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் வியாபாரிகளை இலக்கில் வைத்திருந்தது. 2009இல் அதன் கவனத்தை அது பொலிஸ் பக்கம் திருப்பிய போது, ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் உயரதிகாரிகளே பொலிஸ் விசாரணைகளுக்கும், பெரும் குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளாக வேண்டியிருந்தது. ஊழல் ஒழிப்பு ஆணையத்திற்குள் இருந்த நயவஞ்சகங்களைக் காட்டும் விதத்தில், உயர்மட்ட பொலிஸ் மற்றும் தலைமை-நீதித்துறை அதிகாரிகளின் உரையாடல்கள் சம்பந்தப்பட்ட ஒலிநாடாக்களை பாதுகாப்புத்துறை நீதியரசர்கள் வெளியிட்ட போது, அவர்களின் முனைவு அவர்களையே பதம் பார்த்தது

சென்சூரி வங்கியின் 2008 பிணையெடுப்போடு சம்பந்தப்பட்ட ஓர் ஊழலில், அரசாங்கத்தின்தூய்மையான பிம்பம் கடந்த ஆண்டு பந்தாடப்பட்டது. உயர்மட்ட நிர்வாகிகள் மற்றும் அரசியல்ரீதியாக தொடர்புடைய முதலாளிகள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு சாதகமாக வங்கியைச் செழிப்பாக்க, அரசாங்கத்தின் நிதித்தொகை முறையற்ற விதத்தில் பாய்ச்சப்பட்டிருந்ததில், துணை ஜனாதிபதி போடீனோ, நிதிமந்திரி ஸ்ரீ முல்யானி இந்திராவதி, மற்றும் ஜனாதிபதியே கூட சம்பந்தப்பட்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டனர். கடந்த ஆண்டு மே மாதம், அதிகரித்துவந்த எதிர்ப்பிற்கு இடையில், நிதிமந்திரி பதவியிலிருந்து இராஜினாமா செய்த முல்யானி, உலக வங்கியின் ஒரு பொதுமேலாளர் ஆகிறார்.

நஜூருதீன் சம்பந்தப்பட்ட சமீபத்திய ஊழலால், குறிப்பாக அவருடைய ஊழல் எதிர்ப்பு முனைவைக் கொண்டு செல்ல உதவிய இளம் ஜனநாயக கட்சியினரும் இதில் சம்பந்தப்பட்டுள்ளதால், யுதோயோனோவின் நிலைப்பாடு இன்னும் சேதமடைந்துள்ளது. ஜனவரியில் 56 சதவீதமாக இருந்த யுதோயோனோவின் செல்வாக்கு, ஊழல் கட்டவிழத் தொடங்கியதும் ஜூனில் 47 சதவீதமாக வீழ்ந்துவிட்டதாக இந்தோனேஷிய ஆய்வுத்துறையின் ஒரு கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.  

சர்வதேச அளவில் பேசப்பட்டபோது ஆர்பரித்துக் கொண்டிருந்த நஜூருதீன், இதுவரையில் அவருடைய குற்றச்சாட்டுக்கள் குறித்து ஊழல் ஒழிப்பு ஆணையத்திடம் வாய்திறக்க மறுக்கிறார். அவர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் இருந்ததாக அவரால் கூறப்படும் ஒரு USB டிரைவ், கண்டறியப்படவில்லை. எதிர்கால சட்ட சிக்கல்களின் போது பேரம்பேசுவதற்கான ஒரு துணுக்காக அவருடைய மௌனத்தை நஜூருதீன் வைத்திருக்கக்கூடும். ஒருவேளை அவருக்கு உயிர் பயமும் கூட இருக்கலாம்.

சுஹார்டோ சர்வாதிகாரத்தின்கீழ் நடந்த நாட்டின் ஊழல் தொற்றுநோய், 1998இல் அவர் வெளியேறிய பின்னரும் கூட தொடர்ந்திருந்தது. எவ்வாறிருந்தபோதினும், ஊழல் மோசடிகளானது பெரும்பாலும் ஆளும் வர்க்கங்கள் அவற்றின் அரசியல் கருத்துவேறுபாடுகளையும், கோஷ்டி பூசல்களையும் தீர்த்துக் கொள்வதற்கான கருவிகளாக ஆகின்றன.

ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் உயர்மட்ட அதிகாரிகள், அப்போதைய நிதிமந்திரி முல்யானி, மற்றும் இப்போது வளர்ந்துவரும் இளம் ஜனநாயக கட்சி சீர்திருத்தவாதிகளின் ஒரு குழு என அனைவரும் வெளிச்சத்திற்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது. அவர்கள் என்ன செய்தார்கள் அல்லது செய்யாமல் விட்டார்கள் என்பதற்கு அப்பாற்பட்டு, சர்வதேச நிதியியல் மூலதனத்தால் கோரப்பட்ட சந்தைசார் வேலைதிட்டதோடு, ஒருமட்டத்திற்கு அவர்கள் அனைவரையும் அடையாளம் காண முடிகிறது

ஜகார்தாவிலுள்ள அரசியல் மற்றும் பெருநிறுவன அமைப்புகளின் சக்திவாய்ந்த பிரிவுகள் இந்தோனேஷிய பொருளாதாரத்தை அன்னிய முதலீட்டாளர்களுக்குத் திறந்துவிடவும், மற்றும் அரசாங்கத்திற்கும், வியாபாரங்களுக்கும் இடையில் நிலவும் நீண்டகால உறவுகளை உடைத்துக் கொள்வதற்கும் விரோதமாக உள்ளன. யுதோயோனோவின் ஆளும் கூட்டணி, சுஹார்டோ ஆட்சியின் அரசியல் கருவியான கோல்கரையும் (Golkar) உள்ளடக்கி உள்ளது. நீண்டநெடிய காலமாகவே அது குடும்ப அரசியல் (குரோனிசம்) மற்றும் நெபோடிசத்தோடு தொடர்புபட்டுள்ளது. அத்தோடு அரசு இயந்திரங்களிலும் நெருக்கமான உறவைக் கொண்டுள்ளது.

அதேசமயம், யுதோயோனா சந்தைசார் மறுசீரமைப்பைக் கொண்டுவர வேண்டிய அழுத்தத்திற்கும் உள்ளாகி உள்ளார். இந்தோனேஷிய பொருளாதாரம் அதன் ஏற்றுமதி பண்டங்களுக்கு கிடைத்த உயர்விலைகளால் இரண்டாம் காலாண்டில் 6.5 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது. ஐரோப்பிய கடன் நெருக்கடி மற்றும் அமெரிக்க மந்தநிலைமைகளுக்கு இடையிலும், அந்நாடு இலாபகரமான வாய்ப்புகளை அளிப்பதாக சில முதலீட்டாளர்களால் பார்க்கப்படுகிறது. Moody’s, Standard & Poor’s மற்றும் Fitch Ratings ஆகியவை இந்தோனேஷியாவின் அரசு கடன்விகிதத்தை BB+ அல்லது அதற்கு இணையாக மேலேற்றி உள்ளன. முதலீட்டு-மதிப்பில் அது இன்னும் கூடுதலாக மேலேற்றப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

யுதோயோனோ அரசாங்கத்தின் மீது ஒரு கேள்விக்குறியை அமைக்கும் விதத்தில், Asia Sentinel குறிப்பிட்டதாவது: “பெரும் இழிவார்ந்த நாஜூருதீன் விவகாரம் சர்வதேச முதலீட்டாளர்களை வரவேற்காது. அவர்கள், அந்நாட்டின் பொருளாதார பெருந்தன்மை ஒரு சமநிலைப்பட்ட பகுத்தறிவார்ந்த அரசியல் மற்றும் அரசு சூழலை அளிக்குமென்று நம்பியிருக்கக்கூடும்.” மீண்டும்பண அரசியலுக்கு திரும்பியிருப்பதற்கு எதிராக எச்சரித்த அவ்விதழ், யுதோயோனோ ஓர்சிறிய இடைக்காலத்தை அளித்திருந்தார். அதற்குள்ளாகவே அரசைத் தூய்மைப்படுத்த, முன்னாள் நிதிமந்திரி ஸ்ரீ முல்யானி இந்திராவதிக்கு வாய்ப்பை அளித்திருந்தார் என்று குறிப்பிட்டது.    

ஆகஸ்ட் 20இல் StraitsTimes Indonesia, முதலீட்டாளர்களுக்கு தொடர்ந்து இருக்கும் தடைகளை வெளிச்சமிட்டு காட்டியது. உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிலங்கள் வாங்குவதில் அரசாங்கம் தோல்வியுற்றதையும் மற்றும் உள்கட்டமைப்பிற்கான மொத்த செலவினம் எரிபொருள் மற்றும் மின்சார மானியங்களுக்கு அளிக்கப்படும்வெகுஜன மானியங்களை விட குறைவாக இருப்பதாகவும் அது குறிப்பிட்டது. அது அறிவித்தது: “இந்தோனேஷிய தலைவர்கள் வேகமில்லாமலும், அரசியல் விருப்பமில்லாமலும் காணப்படுகிறார்கள்.”

சுதந்திர மக்கள் கழகம் (Union of Independent People - SRI) எனும் ஒரு புதிய கட்சியின் ஸ்தாபகத்தால் யுதோயோனோவிற்கும், ஜனநாயக கட்சியினருக்கும் ஓர் அரசியல் சவால் ஏற்பட்டுள்ளது. அக்கட்சி ஏற்கனவே 2014 தேர்தலில் ஸ்ரீ முல்யானியை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தும் அதன் விருப்பத்தை வெளியிட்டுள்ளது. தற்போது அக்கட்சி வெறும் 390 உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருந்த போதினும், இந்தோனேஷிய தேர்தல் விதிகளின்படி பதிவுசெய்யப்பட்ட ஒரு கட்சி நாட்டின் 33 மாகாணங்களில் 30இல் அதன் அலுவலகங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்கிற நிலையில், SRI கணிசமான அளவிற்கு நிதியியல் பின்புலத்தைக் கொண்டிருக்க வேண்டியுள்ளது.

நஜூருதீன் விவகாரத்தில் நிறைய கேள்விகள் பதிலளிக்கப்படாமல் உள்ளன. எவ்வாறிருந்த போதினும், மோசமடைந்துவரும் உலக பொருளாதார நெருக்கடியின் விளைவாக, ஜகார்தாவில் உள்ள ஆளும் வர்க்கம் அதிகரித்துவரும் ஸ்திரமின்மை மற்றும் நம்பிக்கையின்மையை முகங்கொடுத்து வருகின்ற நிலையில், அதற்குள் நிலவும் கூர்மையான பதட்டங்களை இது ஏற்கனவே வெளிச்சமிட்டு காட்டியுள்ளது.