சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

ISO ignores every question of principle in Strauss-Kahn affair

ஸ்ட்ராஸ்கான் விவகாரத்தில் ஒவ்வொரு கொள்கைப் பிரச்சினையையும் ISO புறக்கணிக்கிறது

By David Walsh
2 September 2011

 

use this version to print | Send feedback
 

இன்டர்நேஷனல் சோசலிஸ்ட் அமைப்பின் வெளியீடான Socialist Worker பிரெஞ்சு அரசியல்வாதி டொமினிக் ஸ்ட்ராஸ் கானுக்கு எதிரான பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டுக்கள் ஆகஸ்ட் 23ம் திகதி தள்ளுபடி செய்யப்பட்டதைக் கண்டித்துள்ளது. நியூ யோர்க் நகர நீதிபதியின் முடிவுசெல்வம் படைத்த உயரடுக்கைக் காப்பாற்றும் நீதித்துறையின் ஒரு மாதிரிஎன்று அதை விவரித்துள்ளது. இக்கட்டுரையில் உலக சோசலிச வலைத் தளமும் இந்த விவகாரத்தில் அதன் இழிந்த நிலைப்பாட்டிற்காக தாக்கப்பட்டுள்ளது.

செல்வந்தர்களுக்கும் சக்தி வாய்ந்தவர்களுக்கும் மற்றொரு சட்டம்என்ற ஆகஸ்ட் 29ம் திகதிக் கட்டுரை இந்த கேவலமான நிகழ்வுடன் தொடர்புள்ள ஒவ்வொரு முக்கியமான அரசியல் வினாவையும் ஒதுக்கிவிடுகிறது.

இதை எழுதிய Lichi D’Amelio மற்றும் Natalia Tylim ஆகியோர் பாதிப்பிற்குட்டப்பட்டதாகக் கூறப்படும் 32 வயது வெளிநாட்டிலிருந்து குடியேறியுள்ள தொழிலாளி நபிசாட்டோ டயல்லோசெய்தி ஊடகத்தின் சேறு இறைக்கும் பிரச்சாரத்திற்குஇலக்கானார் என்றும் இது ஸ்ட்ராஸ் கான் மற்றும் அவருடைய வக்கீல்கள்டயல்லோவை இழிவுபடுத்துவதற்கு நடத்தப்பட்ட பெரும் நிதிபெற்ற பிரச்சாரம்”, “இத்திட்டம் வெற்றிபெற்றுவிட்டது போல் தோன்றுகிறதுஎன வாதிட்டுள்ளனர்.

அரசாங்க வக்கீல்கள் ஒரு கட்டாயப்படுத்தப்பட்ட பாலியல் தொடர்பிற்கு ஆதரவு கொடுக்கவில்லை என்று (உதாரணமாக புகார் கூறியவரின் நகக்கணுக்களில் ஸ்ட்ராஸ்-கானின் DNA இல்லை) பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டவரின் மருத்துவ ஆய்வைக் குறிப்பிட்டபின், D’Amelio மற்றும் Tylim உம் எழுதுகின்றனர்: “இந்த உண்மைகள் இருந்தபோதிலும்கூட, செய்தி ஊடகம் உடலியல் சான்று இருந்ததா என்பது பற்றிய வினாவின்மீது கூட சந்தேகப்படுகின்றனர்.” இதன்பின், “டயல்லோவை இரக்கமின்றி நடத்தியதும், அவருடைய கூற்றுக்களுக்குக் காட்டிய விரோதப் போக்கும், பாலியல் தாக்குதல் பற்றிய குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் பல இளம் மகளிரும் பெண்களும் எதிர்கொள்வதில் ஒரு மாதிரியைப் போன்றதுதான்எனக் கூறுகின்றனர்.

வேறு எந்த முடிவும் சாத்தியமில்லை என்பது போல் உண்மைகளையும் வாதங்களையும் கொண்டு குறிப்பிட்ட முடிவை அடைவது என்று தீர்மானித்துவிட்டால், அத்தகைய முடிவிற்கு வருவது எளிதுதான்.

சோசலிஸ்ட் வேர்க்கர் கட்டுரையில் வழக்கு கொடுக்கப்பட்டுள்ளவிதம் உண்மையுடன் அப்பட்டமான எதிர்த்தன்மையைக் கொண்டுள்ளது. ஒரு உறுதியான அரசியல் செயற்பட்டியலுக்கு ஏற்ப இது வடிவமைக்கப்பட்டுள்ளது; சில அரசியல் தளங்களைத்தான் இது திருப்தி செய்யும்.

ஸ்ட்ராஸ்-கான் விடுவிக்கப்பட்டு அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் உயர்மட்டத்தில் இருக்கும் சில நண்பர்களின் உடந்தையால் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன என்று கூறுவது அல்லது உட்குறிப்பாக தெரிவிப்பது, அமெரிக்க நீதித்துறை முறை முன்னாள் IMF நிர்வாக இயக்குனரை விடுவிக்கத் துடித்தது எனக்கூறுவது, அமெரிக்கச் செய்தி ஊடகம் பாதிப்பிற்கு உட்பட்டவருக்கு எதிராக, உறுதியாக அவர் பக்கம்தான் நின்றது என்று கூறுவது பெரும் தவறாகும். இது உண்மையைத் தலைகீழாக நிறுத்துவது போல் ஆகும்.

ஸ்ட்ராஸ்-கான் மற்றும் டயல்லோ தொடர்புடைய நிகழ்வு சோபிடெல் ஹோட்டலில் நடந்ததற்கு பின் கட்டுரை ஆசிரியர்கள் ஒருவேளை செய்தித்தாள்களை படிக்கவில்லை அல்லது தொலைக்காட்சிகளை பார்க்கவில்லை போலும். என்ன உண்மையில் நடந்தது என்பது பற்றி நாம் அவர்களுக்குக் கூறுவோம்.

மே 14 மற்றும் அதைத்தொடர்ந்த நாட்களில் மன்ஹட்டன் மாவட்ட அரசாங்க வக்கீல் அலுவலகம் தீர்ப்பை கொடுக்க வேகமாகியது. ஸ்ட்ராஸ்-கான் ஒரு விமானத்திலிருந்து கீழிறக்கப்பட்டு வேண்டுமென்றே அவமானப்படுத்தும் வகையில்குற்றம் செய்பவரைக் கண்டிக்கும் அடையாளத் தொகுப்பில் நிறுத்தப்பட்டு, ரிகெர் தீவு சிறையில் அடைக்கப்பட்டு, பிணைஎடுப்பும் மறுக்கப்பட்டார்; இவை அனைத்தும் அரசாங்க வக்கீல் சைரஸ் வான்ஸ் ஜூனியர் அலுவலகம் கடுமையாக வலியுறுத்தியதன் விளைவுதான்.

வான்ஸும் அவருடைய சக ஊழியர்களும் மிகப் பகிரங்கமாகவும் விரைவாகவும் ஸ்ட்ராஸ்-கான் மீது முதல்தர குற்றங்கள் இரண்டை, குற்றவியல் பாலியல் செயல் தொடர்பாக சாட்டினர்; ஒன்று முதல்தர அளவில் கற்பழிக்கும் முயற்சி, மற்றொன்று முதல்தர அளவில் பாலியல் தவறு என்பது; ஒன்று இரண்டாம் தர அளவில் சட்டவிரோதமாக சிறைவைத்தல், கட்டாயமாகத் தொடுதல் என்ற வழக்கு ஒன்று, மற்றொன்று மூன்றாம் தரத்தில் பாலியல் தவறு செய்தது என. மிகத்தீவிரமான குற்றச்சாட்டு, முதல்தர குற்றவியில் பாலியல் சம்பவம், ஒரு B வகுப்பு வன்முறை இழிசெயல், சிறைத்தண்டனை 25 ஆண்டுகளுக்கு அதிகப்பட்சமாக கொடுக்கக்கூடியது. அரசாங்க வக்கீல்கள் தொடுத்துள்ள வழக்குமிகவும் வலுவானதுமிகவும் வலுவானதுஎன்றும், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுபவரின் நம்பகத்தன்மை உறுதியானது என்றும் வான்ஸ் கூறினார்.

ISO தெரிவிப்பது போல், ஸ்ட்ராஸ்-கான் பக்கம் ஆதரவு கொடுத்தல் என்பதற்கு முற்றிலும் மாறாக, நியூ யோர்க் மற்றும் அமெரிக்கச் செய்தி ஊடகம் அவருடைய இழப்பில் களித்து, மக்களுடைய மனத்தில் அவரை இழிவுபடுத்துவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டன. செய்தி ஊடகத்திலேயே அவர் விசாரிக்கப்பட்டு, தண்டனையும் வழங்கப்பட்டார். அவர் பிரெஞ்சுக்காரர் என்பதும் ஒருசோசலிஸ்ட்என்பதும் பிரச்சாரத்தில் உட்தலைப்பாகவோ வேறுவகையிலோ குறைந்த பங்கு ஒன்றையும் கொண்டுவிடவில்லை.

இன்னும் சில உதாரணங்கள் D’Amelio மற்றும் Tylim க்கு தேவையா? நியூ யோர்க் போஸ்ட்டின் மே மாதம் வந்த இத்தலைப்புக்களைப் பாருங்கள்: “IMF தலைவர் அமெரிக்காவில் அவருடைய நடத்தையைக் கவனித்துக்கொள்ளுமாறு எச்சரிக்கப்பட்டார்”, “சமீபத்திய செய்தி; பாலியல் வெறியர் [ஸ்ட்ராஸ்-கான்] என்னுடன் உறங்குக என்று கெஞ்சினார்”, “புலம்பும் IMF தலைவர் இறுதியில் மருத்துவச் சோதனைக்கு உடன்படுகிறார்: குற்றச்சாட்டுக்கள் இன்று முன்வைக்கப்படும்”, “ஸ்ட்ராஸ்-கான் பற்றிய வெட்ககரமான செயல் பாலியலுக்கும் அப்பால் செல்லுகிறது.”, “இழிந்த சோசலிஸ்ட்டுக்களிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்?” (ஒரு கடிதத்தின் பகுதி போஸ்ட்டில்).

அல்லது மே மாதம், ஜுன் தொடக்கத்தில் CNN ல்: “சுயசரிதையாளர்: ஸ்ட்ராஸ்-கான், “பெரும் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவர்”, “சலுகை உடையவர்களுக்கு பாலியல் குற்றச்சாட்டு ஒரு எச்சரிக்கை”, “ஆடம்பர நியூ யோர்க் ஹோட்டல் அறைத் தாதிப் பெண்களுக்கு பீதி பட்டன்களைக் கொடுக்க உள்ளது”, “IMF பாலியல் வழக்கில், முன்னேற்ற அடையாளம் [அதாவது, ஸ்ட்ராஸ்-கான் கைது செய்யப்பட்டார்], “ பிரான்ஸில், பாலியல், செய்தி ஊடகம் மற்றும் அரசியல்”, “ரிக்கெர் தீவில் வசித்தல்”.

நியூ நோர்க் டைம்ஸ், அமெரிக்க நடைமுறையின் முக்கிய குரல்களில் ஒன்றினால், இத்தகைய இழிந்த முயற்சி வழிநடத்தப்பட்டது. மே 17ம் தேதி, அப்பொழுது WSWS குறிப்பிட்டபடி, டைம்ஸ்  “மௌரீன் டௌட், ஸ்டீபன் கிளார்க் மற்றும் ஜிம் டையர் எழுதிய மூன்று கட்டுரைகளையேனும் வெளியிட்டதுஇவை ஸ்ட்ராஸ்-கான் அவமானப்பட்டதில் களிப்பைக் காட்டுகின்றன, கற்பழிப்பு பற்றிய குற்றச்சாட்டை ஏதோ அதன் உண்மையில் சந்தேகம் இல்லை என்பது போல் நடத்துகின்றன, மற்றும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக வாசகர்களைத் தூண்டும் வகையில் எழுதியுள்ளன. இக்கட்டுரைகள் ஒவ்வொன்றும் முறையான சட்ட வகை பற்றிய வாசகர்களின் அறியாமைக்கு முறையீடு செய்கின்றன, இழிவான உணர்வுகளைத் தூண்டுகின்றன. இக்கட்டுரைகளின் இழிந்த தரம் திரு கிளார்க் தன் கட்டுரைக்குத் தேர்ந்தெடுத்துள்ள தலைப்பில் குறிப்பாகத் தெரிகிறது: ‘’கிழட்டு மனிதர்களின் அசிங்க உரிமை’’ (“Droit du Dirty Old Men”).

சக்திவாய்ந்த, வளர்ச்சியடையாத உணர்வினர்டௌவிடின் இழிவான கட்டுரை தொடங்குகிறது: “. அப்பெண்மணி அதை விரும்பினார். எப்படியும் தேவை என விரும்பினார். தன்னுடைய இளவயதுப் பெண்ணைக் காப்பாற்ற, குடியேற்ற அந்தஸ்த்தைக் காப்பாற்றிக் கொள்ள, அமெரிக்கா விரும்பும் வாய்ப்புக்களை பயன்படுத்தத்தான் ஒவ்வொரு கடினமாக உழைக்கும், கடவுளுக்குப் பயப்படும் இளம் விதவையும், டைம்ஸ் சதுக்கத்தில் பணி செய்கையில் விரும்புகிறார்ஒரு வெறியர், அழுகி, சுருக்கம் விழுந்த முகமுடைய தீய நபர், குளியல் அறையில் இருந்து நிர்வாணமாகப் பாய்ந்து பெண்மணி மீது விழுந்து அவரை தன் அறைக்கு, குகை வாழ் மனிதன் போல் இழுத்துச் செல்வதை.”

இத்தகைய தகவலின் பார்வையில்—ISO கட்டுரையாளர்கள் இன்னும் படிக்க விரும்பினால், பல டஜன் கணக்கான இத்தகைய கட்டுரைகள் கொடுக்கப்படலாம்—“நிகழ்ச்சியே ஒன்பது நிமிடங்களுக்குத்தான் நீடித்தது என்று டயல்லோ கூறுகையில், இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர் மீது செய்தி ஊடகமும் நீதித்துறையின் ஒவ்வொரு கிளையும் பல மாதங்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தியதுதான் தொடர்ந்தது. ‘எதிர்பார்த்தபடி, எல்லா பொது ஆய்வும் நபிசடௌ டயல்லோவிற்கு எதிராக இயக்கப்பட்டது, தன்னுடைய கற்பழிப்பு குறித்து இவர் மீதே உண்மை விசாரணை நடைபெற்றது?. வெளிப்படையாகக் கூறினால் இது ஒரு கற்பனாவாதம், வாசகர்களை ஏமாற்றும் முயற்சிஎன்று கூறும் சோசலிஸ்ட் வேர்க்கரை பற்றி நாம் என்ன கூறுவது?

கடைசிக் கருத்து குறிப்பிடத்தக்க வகையில் கேலிக்கூத்தாகும்; அதுவும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுபவரின் அடையாளம் பகிரங்கமாவதற்கு முன்னரே, உலகச் செய்தி ஊடகம் ஸ்ட்ராஸ்-கானின் கடந்த கால நெறியற்ற செயல்கள் பற்றி பல இழிந்த தகவல்களை கொடுத்தன; இவற்றைத்தான்  D’Amelio மற்றும் Tylim மீண்டும் வாசகர்களுக்குக் கொடுக்க ஆர்வம் கொண்டிருந்தனர். “அனைத்துப் பொதுக் கண்காணிப்பும் டயல்லோவிற்கு எதிராக இயக்கப்பட்டிருந்தால், நம்முடைய கட்டுரையாளர்கள் எப்படி இந்தப் பொருளைப் பற்றி தகவல் அறிந்தனர், அவர்கள் கட்டுரையில் கிட்டத்தட்ட 20 சதவிகிதத்தைப்பற்றித்தான் உள்ளது.”

இவர்களுடைய வெளிப்படையான இரட்டை நிலைப்பாடு அவர்களுக்கு தெரியவில்லை போலும். எனவே, “டயல்லோவின் கடந்த காலம் எப்படி இருந்தாலும், அவருடைய கூற்று …. பாலியல் தாக்குதலில் தான் பாதிக்கப்பட்டவர் என்று அவர் கூறியது சரியாகத்தான் உள்ளது”. பின்னர், “ஸ்ட்ராஸ்-கானுக்கு எதிராக உள்ள நீண்ட குற்றப்பட்டியலை காணும்போது, டயல்லோவின் குற்றச்சாட்டு, வலுவான உடலியல் சான்றுடன் இணைந்து, விசாரணைத் தகுதியையாவது பெறும் என நீங்கள் நினைக்கலாம்.”

வேறுவிதமாகக் கூறினால், டயல்லோவின் கடந்த காலம், அவர் பொய்கூறும் வடிவமைப்பு, மன்ஹட்டன் மாவட்ட அரசாங்க வக்கீலால் விவரமாகக் கூறப்பட்டுள்ளது (“False Account of a Rape,” “False Statements Under Oath,” “Additional Falsehoods”), இந்த வழக்கில் தொடர்பு கொண்டிருக்கவில்லை, ஆனால் ஆதாரமற்ற ஸ்ட்ராஸ் கான் பற்றிய வதந்திகள், “குற்றச்சாட்டுக்கள் அல்ல”, எந்தக் குற்றத்திற்கும் அவர் தண்டிக்கப்படவில்லை; அதையொட்டி அவர் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்! D’Amelio மற்றும் Natalia Tylim உம் வாதிட்டுள்ளது போல், “ஸ்ட்ராஸ் கானுடைய கடந்த காலம் டயல்லோவினுடையதை விட இன்னும் பொருத்தமானது போல் உள்ளதுஎன்று ஒருவரைக் கேட்கத் தூண்டுகிறது.

ஜூலை மாதம் வழக்கு அடிப்படையில் தளமற்றுப் போனதால், செய்தி ஊடகத்தின் ஒலிக்குறிப்பு மாறியது; இது மன்ஹட்டன் மாவட்ட அரசாங்க வக்கீல் மற்றும் அரசியல் செய்தி ஊடகம் தன் முகத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியுடன் இணங்கியிருந்தது. எப்படியும், ஸ்ட்ராஸ்-கானின் மதிப்பும் அரசியல் விழைவுகளும் நசுங்கிவிட்டன, ஏற்கனவே பெரும் சேதம் விளைவிக்கப்பட்டுவிட்டது.

ஜனநாயக உரிமைகள் பிரச்சினை குறித்துச் சிறிதுகூட ISO அக்கறை காட்டவில்லை. அச்சொற்றடரே கட்டுரையில் வரவில்லை; அதேபோல்நிரபராதி எனக் கருதப்பட வேண்டும்”, “அரசியலமைப்பு முறை”, “இழிவான முறையில் அடையாளம் காட்டுவதற்காக நடக்க வைத்தபோன்றவையும் இல்லை. குற்றம் சாட்டப்பட்டவரின் அடையாளத்தை ஒதுக்கி விட்டு ஒரு பொதுநிலை நபர் பார்த்தால் இது பெரும் பிரச்சினைக்குரிய விவகாரம் என உணர்வர். ஆனால் சோசலிஸ்ட் வேர்க்கருக்கு அவ்வாறு இல்லை.

ஸ்ட்ராஸ் கானுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களின் முக்கிய நடைமுறை விளைவு பற்றிய உண்மையும் நம் கட்டுரையாளர்களுக்கு அக்கறை எதையும் கொடுக்கவில்லைஅதாவது அவரிடம் இருந்து கட்டாயப்படுத்தி இராஜிநாமா பெறப்பட்டது; எல்லாவற்றிற்கும் மேலாக ஒபாமா நிர்வாகத்தின் அழுத்தத்தை ஒட்டி; IMF இயக்குனர் பதவியிலிருந்து அவர் விலகியது, 2012 பிரெஞ்சு ஜனாதிபதிப் போட்டியில் இருந்து அகற்றப்பட்டது ஆகியவை ஒன்றும் தொலைவிளைவுகள் அற்றவை அல்ல.

இங்கு ஏதேனும் கருத்திற்கொள்ளப்பட வேண்டாமா? ஸ்ட்ராஸ்-கான் ஒரு முதலாளித்துவ அரசியல் நபர்இளம் வயதில் ஒருசுற்றுஇடதில் இருந்து கடந்தபின், அவர் முதலாளித்துவ முறையின் ஆர்வம் மிகுந்த, செல்வம் படைந்த பாதுகாவலர் ஆனார். இதுதான் கதையின் முடிவா? ஆளும் உயரடுக்குகளிற்குள் பிளவுகள் ஏதும் இல்லையா? இலாபமுறையை குடியரசுக் கட்சியினரும் ஜனநாயகக் கட்சியினரும் நிலைநிறுத்துகையில், அவர்களுக்கு இடையேயுள்ள வேறுபாடுகள் உண்மையாகவும் கடினமாகவும் உள்ளன என்பதை நாம் அறிவோம். உலக ஆளும் உயரடுக்கிற்குள்ளும் இத்தகைய பிளவுகள் அதிகமாகத்தான் உள்ளன.

D’Amelio மற்றும் Tylim உம் ஸ்ட்ராஸ்-கான்உலகின் சக்தி வாய்ந்த மனிதர்களுள் ஒருவர்என்று குறிப்பிடுகின்றனர்; ஆனால் வோல் ஸ்ட்ரீட்டிலும் வாஷிங்டனிலும் பாரிஸிலும் அவருக்கு அதேபோல்சக்தி வாய்ந்தஅரசியல் விரோதிகள் இருக்கக்கூடும் என்று அவர்களுக்குத் தோன்றவில்லை போலும். இத்தகைய வட்டங்கள் மீது அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையான உளப்பாங்கு வியப்பைத் தருகிறது. அரசாங்க வக்கீலின் அலுவலகத்தில் இருந்தவர்கள் தங்களுக்குள் விவாதிக்கவில்லை, இன்னும் முறையாக அமெரிக்க அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் இருப்பவர்களிடம் எவருடன் தாங்கள் மோதுகிறோம் என்பது பற்றி விவாதிக்கவில்லை என்றா கட்டுரையாளர்கள் உண்மையில் நினைக்கின்றனர்?

அல்லது டயல்லோ உலகின் மிகச் சக்தி வாய்ந்த நபர்களில் ஒருவரிடம் இருந்து பணம் கறப்பதற்கு முன்கூட்டித் திட்டம் தீட்டினார் என்பதை நாம் நம்ப வேண்டுமா?” என்று கட்டுரையாளர்கள் கேட்கின்றனர். இதுவோ அல்லது பிற கருத்துக்களைப் பற்றி நினைப்பதேமிகத் தொலைவான விவகாரம், விபரிக்க முடியாது என்பதுபோல்தான் அவர்கள் எழுதியுள்ளனர்.

அரசியல் வியப்பு நிலத்தில் எழுதப்பட்ட கட்டுரையாகும் இது. “முன்கூட்டிய திட்டம் ஏதேனும் இருந்ததாஎன்பது பற்றி எவருக்கும் தெரியாது; அல்லது இந்த நிகழ்வு ஸ்ட்ராஸ் கானின் விரோதிகளுக்கு ஒரு வரவேற்புடைய வாய்ப்பா என்பது பற்றியும் தெரியாது. ஆனால் அவர் IMF ஐ விட்டு விலகும் கட்டாயத்திற்கு உள்ளானார், சார்க்கோசி அரசாங்கத்திடமிருந்து எந்த ஆதரவையும் பெறவில்லை, இவருக்குப் பதிலாக இன்னும் தீவிர வலதுசாரி நபர் கிறிஸ்டின் லகார்ட் பதவிக்கு வந்தார், அவர் அமெரிக்கப் பெரு வணிகத்துடன் நெருக்கமான வரலாற்றுத் தொடர்புகளைக் கொண்டிருந்தார் என்ற உண்மைகள் உள்ளன. IMF இல் கொள்கை மாற்றங்கள் என்பது மில்லியன் கணக்கானவர்களின் வாழ்க்கையைப் பாதிக்கும். மேலும் அவர் கைது செய்யப்பட்டபோது, சார்க்கோசிக்கும் நவ பாசிச மரின் லு பென்னிற்கும் எதிரான பிரெஞ்சு ஜனாதிபதி வேட்பாளருக்கான திறன் பற்றிய கருத்துக் கணிப்பில் முன்னிலையில் இருந்தார்.

32 வயதான பிரெஞ்சு எழுத்தாளர் Tristane Banon கொண்டுவந்த குற்றச்சாட்டுக்களை பற்றியும் சோசலிஸ்ட் வேர்க்கர் எழுதுகிறது; அவர் இப்பொழுது ஸ்ட்ராஸ்கான் அவரை 2003ல் கற்பழிக்க முயன்றார் எனக் கூறியுள்ளார். ஆனால் பானோனின் தாயார் Anne Mansouret தன்னுடைய மகளை இப்பிரச்சினையைத் தொடருமாறு வலியுறுத்தியவர்தன்னார்வத்திலேயே, ஒரு விழைவுடைய அரசியல்வாதி, பலமுறையும் ஸ்ட்ரான் கானின் பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியின் போட்டியாளர்களுடன் அடையாளம் காணப்படுபவர்என்று நியூஸ்வீக் சுட்டிக் காட்டியது பற்றி சோசலிஸ்ட் வேர்க்கர் ஏதும் குறிப்பிடவில்லை.

இதைப்பற்றி எந்தவித சலனத்தையும் D’Amelio யும் Tylim யும் காட்டவில்லை. நம் கருத்தில் உலகின் மிகச் சக்தி வாய்ந்த நபர்களில் ஒருவரின் வீழ்ச்சி அரசியலில் தொடர்பு கொண்டிருக்கவில்லை என்று கருத்திற்கொள்ளப்படுவது மிகத்தீவிரமான முறையில் பொறுப்பற்றது ஆகும். வெளிப்படையாகக் கூற வேண்டும் என்றால், தெருவிலுள்ள சாதாரண மனிதன்கூட நம் ISO கட்டுரையாளர்களைவிட இந்த முழு விவகாரம் பற்றி சந்தேகமும் அவநம்பிக்கைத் தன்மையையும்தான் கொண்டிருப்பார்.

இந்த விவகராத்தில் பணம் கறப்பது பற்றிய டயல்லோவின் அக்கறை பற்றி, அது ஏன்அதிகம் நம்புவதற்கில்லைஎன இருக்க வேண்டும்; அதுவும் இதைத்தான் துல்லியமாக அவர் இப்பொழுது செய்ய முற்படுகிறார், ஆகஸ்ட் மாதம் ஒரு உரிமையியல் வழக்கைப் பதிவு செய்துள்ளார் என்னும் நிலையில்?

வாதம் கடைசியில் இப்படித்தான் முடிகிறது: டயல்லோ ஒரு கறுப்பர், பெண்மணி; ஸ்ட்ராஸ் கான் வெள்ளையர், ஆண்; எனவே டயல்லோ நம்பப்பட வேண்டும், எத்தகைய முரண்பாடு உடைய சான்றுகள் இருந்தாலும்; ஸ்ட்ராஸ் கான் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும், அதிருஷ்டம் நமக்கு இருந்தால், அவர் சிறைக்குச் செல்லுவார்.

இத்தகைய மலட்டுத்தன வழிவகை, ISO விற்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் திருப்தி தரக்கூடியது, ஆனால் ஒரு சிக்கல் வாய்ந்த உலகைப் பற்றிய துல்லியமான சித்திரம் அல்லது தீவிர அரசியல் முன்னோக்கைப் பெறுவதைத் தடுக்கிறது; அழுகிய அரசியல் பகுதிக்குள் நுழைக்கிறது.

பல கற்பழிப்புக்கள் தகவலின்றிப் போகின்றன, தண்டனையின்றிப் போகின்றன, செல்வந்தர்களும் சக்தி படைத்தவர்களும் இவ்வுலகில் இக்கொடூரக் குற்றங்களைச் செய்தபிறகு தப்பித்துவிடுகின்றனர் என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் இந்த வாதம் மிகச் சக்திவாய்ந்த, செல்வம் படைத்த ஒரு நபரை அற்ப அல்லது இல்லாத நியாயங்களுக்காக அல்லது காரணங்களுக்காக தண்டனைக்கு உட்படுத்துவதற்கு சரியானது அல்ல. அத்தகைய முறை அரசாங்கத்தின் அடக்குமுறைக் கருவியைத்தான் வலுப்படுத்தும்; அடிப்படை ஜனநாயக உரிமைகளில் எஞ்சியிருப்பவற்றிற்கு இன்னும் அடி கொடுக்கும்.

 

சோசலிஸ்ட் வேர்க்கரின் கட்டுரையாளர்கள் நசுக்கப்பட்டவரின் கடந்த கால தவறுகளுக்கு பரிகாரம் வழங்கப்பட வேண்டும் என்னும் விருப்பத்தால் உந்துதல் பெற்றாலும் (உண்மையில் அவ்வாறு ஏதும் வெளிப்படையாக இல்லை), அத்தகைய மனப்பாங்கு வர்க்க முழு உணர்வு கூடிய சோசலிசப் பார்வையுடன் எந்தப் பொது நிலைப்பாட்டையும் கொண்டிருக்கவில்லை.

இருக்கும் ஒழுங்குகளை அகற்றுவதற்கான போராட்டம் பழிதீர்த்தலை நோக்கமாகக் கொண்டது அல்ல; சமூகத்தை ஒரு பகுத்தறிவார்ந்த, மனிதத்தன்மையுடைய, ஜனநாயக முறைப்படியான தளத்தைக் கொண்டதாக இருக்கும் போராட்டம்தான். நாம் ஒன்றும் பெரும் குற்றவாளி அல்லது கொள்ளையர்களை கொம்பு வைத்த விலங்குகள் எனக் காண்பதில்லை; மாறாக குறிப்பிட்ட சமூக நலன்களின் பிரதிநிதிகள், விளைவுகள் என்றுதான் காண்கிறோம். நாம் ஒன்றும் அவர்களைத் தண்டிக்க முயலவில்லை; முதலிலும் முக்கியமானதுமாக, அவர்களின் அதிகாரம் கொண்டிருக்கும் நிலையை அகற்றுவதற்குத்தான் முயல்கிறோம்.

D’Amelioக்கும் Tylim க்கும் இத்தகைய பாலியல் தூண்டுதல்கள் அவர்கள் ஒப்புதல் கொடுக்கும் நபர்களுக்கு எதிராகவும் அமைக்கப்படலாம் என்று தோன்றவில்லை எனத் தெரிகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியக் கொள்கையின் விரோதி ஜூலியன் அசாங்கேயைப் பற்றி அவர்கள் கேள்விப்பட்டுள்ளனரா? அவர் இப்பொழுது பாலியல் தாக்குதலில் ஈடுபட்டுள்ள தயாரிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் அவரை ஸ்வீடனுக்குக் கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட இருக்கும் முயற்சிகளில் சிக்கியுள்ளார்.

ஒரு இராணுவ அதிகாரியான Alfred Dreyfus பாதுகாக்க  வேண்டும் என்ற எண்ணம் ISO விற்குத் தோன்றியுள்ளதா? தற்கால பிரெஞ்சு வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் விவகாரமாக அவருடைய நிலைப்பாடு மாறியுள்ளது; ஒரு விமர்சகர்செல்வம் மிகுந்த, கன்சர்வேடிவ், மரபார்ந்த விவகாரம்என்று குறிப்பிட்டுள்ளார்.

இவர்களுடைய மலிவான, மோசடித்தன ஜனரஞ்சக முயற்சி அமெரிக்க வரலாற்றில் நீண்டகாலமாக, உவப்பற்ற நிலையில் உள்ளது. ஒரு யூத ஆலை நிர்வாகி, தவறாக 1915ல் தொழிலாளிப் பெண் ஒருவரை கற்பழிப்பு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டதுடன் மற்றும் கொலைக்குற்றத்தில் ஈடுபடுத்தப்பட்டுப் பின்னர் கூட்டத்தால் மிதிக்கப்பட்டு கொலையுண்டது பற்றி இவர்கள் தெரிந்திருக்கவில்லையா? பிற்போக்குத்தன சக்திகள் பிராங்கின்பெரும் செல்வந்தர்களுடனான தொடர்புகளைகண்டித்து அவர்மக்களின் மகள் ஒருவரை கொடூரமாகத் தவறாகப் பயன்படுத்தினார்என்றும், “நிரபராதியாக இருந்த ஆலைச் சிறுமியைதவறாக நடத்தினார் என்றும் கூறினர்.

இத்தகைய வாதங்களை முன்வைப்பவர்கள் ஒரு கொடிய விளையாட்டில்தான் ஈடுபடுகின்றனர். “அதிகப் பணம் வாங்கும் வக்கீல்கள்என்பது ஸ்ட்ராஸ்கான் குற்றச்சாட்டுக்களில் இருந்து  தன்னைப் பாதுகாத்துக்கொள்ள இயலாது, அவை பல தசாப்தங்கள் சிறையில் தள்ளும் அச்சறுத்தல்களைக் கொண்டவை எனத் தெரிவிக்கின்றன. அவருக்குப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை கூடக் கிடையாதா? டயல்லோ கூறுவது வினாவிற்கு உட்படுத்தக்கூடாதா?

நாம் கேட்கிறோம்: இத்தகைய குற்றச்சாட்டுக்கள் ISO வின் முக்கிய உறுப்பினர் ஒருவருக்கு எதிராகச் சுமத்தப்பட்டிருந்தால், அதன் உறுப்பினர்கள் குற்றம் சாட்டுபவரின் உரிய பால், இனம் இவற்றுடன் இணைந்து நின்றிருப்பாரா? இதுதான் தூண்டுதலுக்கு அழைப்பு விடுதல் என்பதாகும். இத்தகைய நபர்கள் எதையும் பாதுகாக்கும் திறன் அற்றவர்கள், இவர்கள் அரசியலளவில் ஆபத்தானவர்கள்.

 

டயல்லோ சார்பில் முன்வைத்துள்ள வாதப்படி, ISO ஆகஸ்ட் 23ம் தேதி Slate ல் வில்லியன் சலேடன் எழுதிய கட்டுரையை அதிகம் நம்புகின்றனர்; இதுடயல்லோவிற்கு எதிரான வழக்கை அம்பலப்படுத்துகிறது என்று D’Amelio உம் Tylim உம் கருதுகின்றனர். அது ஒன்றும் அப்படி இல்லை. ஸ்ட்ராஸ்கானுக்கு எதிராக அரசாங்க வக்கீல் மிகையாகச் செல்கிறார் என்று முன்னதாகக் குற்றம் சாட்டியிருந்த சலேடன் இப்பொழுது குற்றச்சாட்டுக்களைத் தள்ளுபடி செய்வதற்காக ஆகஸ்ட் 22ல் முன்வைக்கப்பட்ட அரசாங்க வக்கீலின் வாதம் டயல்லோவின் தவறுகளை மிகைப்படுத்தியுள்ளது என்று வாதிடுகிறார்.

D’Amelio வும் Tylim இருவரும் சலேடனின் முந்தைய நிலைப்பாட்டைக் கவனிக்கத் தவறுகின்றனர்; அது இவர்களுடைய நிலைப்பாட்டையும் நேரடியாக முரண்பாட்டிற்கு உட்படுத்துகிறது. ஜூலையில் அவர் ஸ்ட்ராஸ் கானின் சரிவுபெண்களுக்கோ நிதித்துறைக்கோ தோல்வி என்ற பொருள் இல்லை. ஒன்றுபடுத்தப்படும் சக்திக்கு ஒரு வெற்றியாகும்என்று எழுதியிருந்தார். எப்படிப்பார்த்தாலும், இப்பொழுது சலேடன் அரசாங்க வக்கீலின் வாதம் பற்றி பல பிரிச்சினைகளை எழுப்பியுள்ளார்; இவை முறையாக இருக்கலாம் அல்லது இல்லாமற்போகலாம்; ஆனால் சில அடிப்படை நிகழ்வுகளை வினாவிற்கு உட்படுத்தவில்லை: அதாவது டயல்லோ மே 14 நிகழ்ச்சியைப் பற்றி வெவ்வேறு குறிப்புக்களைக் கொடுத்தார். கினியாவில் நடந்த கூட்டுக்கற்பழிப்பு பற்றிப் பொய்கள் கூறினார்; சோபிடெல் ஹோட்டலில் அறைப் பணிப்பெண் வேலைபார்த்துத்தான் வருமானம் கிடைக்கும் என்று கூறிய நிலையில் அவரிடம் ஆயிரக்கணக்கான டாலர்கள் இருந்தன (அது 60,000 டொலரா அல்லது 100,000 டொலராக இருந்ததா என்ற முக்கியமான உண்மை அரிதான மாற்றம்); அதைத்தவிர 5 கைபேசிகள் கணக்கும் அவரிடம் இருந்தன; தன்னுடைய வழக்கின் நிலை, ஸ்ட்ராஸ் கானின் செல்வம், முக்கியத்துவம் பற்றி சிறையில் போதைப்பொருள் குற்றத்திற்காக உள்ள தன் ஆண் நண்பரிடம்  கைபேசி மூலம் விவாதித்தார் என்பவையே அவைகள்.

எப்படியும், சலேடன் சோசலிஸ்ட் வேர்க்கருடன் சமூக, சட்டப் பின்ணியை கைவிட்டுவிடுகிறார். அரசாங்க வக்கீலின் அலுவலகம் தன்னிடம்ஒரு வலுவான வழக்கு இருந்ததுஎன்று கூறியது, பெரும் ஆடம்பரத்துடன் குற்றச்சாட்டுக்களைக் கொண்டுவந்தது, அமெரிக்கச் செய்தி ஊடகத்தின் ஆதரவுடன் முழுமையாக அதைத் தொடர்ந்தது; உட்குறிப்பாக ஒபாமா நிர்வாகமும் இதில் அடங்கும் (நிதி மந்திரி டிமோதி கீத்னர் ஸ்ட்ராஸ் கான் IMF பதவியில் இருந்து விலக வேண்டும் என்று பிந்தையவர் நியூ யோர்க்கில் கைது செய்யப்பட்ட சில நாட்களுக்குள் வலுவாகத் தெரிவித்தார்).

அவர்கள் உத்தியோகத்தில் உயர்வைக் கொடுத்திருக்கக் கூடிய வழக்கில் இருந்து, எந்தக் காரணத்தை ஒட்டி அரசாங்க வக்கீல்கள் வழக்கில் இருந்து ஒதுங்கினர்? பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்பட்டவரின்நம்பகத்தன்மை அடிப்படை மதிப்பீட்டைக் கூட எதிர்த்து நிற்க முடியாதுஎன்பதை அவர்கள் அறிந்து விட்டனர் என்ற உண்மையைத் தவிர. மேலும்அரசாங்க வக்கீல்களுடன் குறிப்பிடத்தக்க பேட்டி ஒவ்வொன்றிலும் உண்மையைக் கூறுமாறு வலியுறுத்தப்பட்டும்கூட அப்பெண்மணி உண்மையை சிறு, பெரிய விஷயங்களில் கூறவில்லை; பல உண்மைகள் அவருடைய பின்னணி பற்றியவை, சில சம்பவத்தைப் பற்றி இருந்தன. இது ஒரு வெட்ககரமான பின்வாங்குதல் ஆகும், அரசாங்க வக்கீல் வான்ஸிற்கு ஒரு பெரும் தோல்வி ஆகும். அவர்களுடைய பிரச்சினை, குற்றம் சாட்டப்பட்டதற்குப் பின் செய்த ஆய்வுகளை அவர்கள் குற்றம் சாட்டுவதற்கு முன்னரே செய்திருக்க வேண்டும் என்பதுதான்.

செய்தி ஊடக வெறித்தனம் ஸ்ட்ராஸ் கானை இலக்கு கொண்டதற்கு எதிராக உலக சோசலிச வலைத் தளம் உறுதியாக நின்றது; அவருடைய கருத்துக்கள் அல்லது பதவி குறித்த பரிவுணர்வை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம் என்கிற ஒரு காரணமும் இருக்கவில்லை; மாறாக கொள்கையுடைய காரணத்திற்காகத்தான். இதற்காக நாங்கள் ISO இடம் இருந்து தாக்குதலைச் சந்திக்கிறோம். D’Amelio உம் Tylim உம் இடதில் இருப்பவர்கள் உலகின் மிகச் சக்தி வாய்ந்த மனிதர்களுள் ஒருவர், மிக அதிக கட்டணம் வாங்கும் வக்கீல்கள் குழுவின் உதவியுடன், பொது உறவுச் சிறப்பு வல்லுனர்களின் உதவியுடன், குற்றம் சாட்டியவர் கருத்துக்களைத் திரிக்கும் வகையில் அதிகாரத்தைப் பயன்படுத்த அனுமதிக்கப்படக்கூடாது என்பதை உணரவேண்டும்என்று எழுதியுள்ளனர்.

இழிந்த முறையில் சில இடதுகள் இத்துடன் உடன்படவில்லை. உதாரணமாக உலக சோசலிச வலைத் தளம், டயல்லோவிற்கு எதிரான அவதூற்றை முழுமையாக ஏற்கிறது. பல ஆன்லைன் கட்டுரைகளில் வலைத் தளம் முன்னாள் IMF ஐ ஆபிரிக்காவிலிருந்து குடியேறிய ஹோட்டல் பணியாளருக்கு எதிராக ஆதரிக்கிறது; குற்றச்சாட்டுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை சாதாரண மக்களுக்கு வெற்றி என்பது போல் குறிப்பிடுகிறது.”

முதல் சொற்றொடரின் பொருள்கூடத் தெளிவாக இல்லை; ஏனெனில் ஸ்ட்ராஸ்-கானோ அல்லது அவருடைய வக்கீல்களோ டயல்லோவின் சொற்களை திரிக்கும் அதிகாரம் எதையும் கொள்ளவில்லை. அவருடைய பொய்களைப் பற்றி கண்டறிவதில் அவர்களுக்கு அதிகப் பங்கு இல்லை; வழக்கு சரிந்ததிலும் அவர்களுக்கு அதிகப் பங்கு இல்லை. நாங்கள் ஒன்றும் டயல்லோவிற்கு எதிரான அவதூறுகளை ஏற்கவில்லை”; ISO  போல் இல்லாமல், உண்மைகளையும் வழக்கின் பின்னணியையும் பொது நிலையில் இருந்து கண்டோம். அவர்கள் கூறுவது போல் ஜனநாயக எதிர்ப்பு சகதி அள்ளித்தெளிக்கும் நோக்கத்துடனோ சூனிய வேட்டையாடும் மனப்பான்மையிலோ இதில் நாங்கள் ஈடுபடவில்லை. அமெரிக்க அரசின் முழுச் சக்தியும் பின்புலத்தில் இருந்த ஒரு விவகாரம் என்பதையும் நாங்கள் மறந்துவிடவில்லை.

தன்னுடைய போலி வர்க்கத் தோற்றம், அரசியல் சார்பு ஆகியவற்றால் ISO டயல்லோ-ஸ்ட்ராஸ்கான் விவகாரத்தை நேர்மையாகப் பார்ப்பது தடுக்கப்படுகிறது. அதன் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் வழக்கைத் திறனாயும் நோக்கத்துடன் காணவிரும்பினாலும், அவர்கள் இத்தகைய கருத்துடன்தான் வந்திருப்பர்; டயல்லோவைத் திறனற்ற, வினாவிற்கு உட்படுத்தாத முறையில் ஆதரவு கொடுப்பதில் தோல்வி என்பது பெண்ணியல்வாதிகள் அல்லது பிற மத்திய வர்க்க எதிர்ப்பு அரசியல் நடத்துபவர்களுடன் அவர்கள் உறவுகளைப் பாதித்திருக்கும்; அதேபோல் கறுப்பர்களின் குட்டி முதலாளித்துவக் கூறுபாடுகள், ஜனநாயகக் கட்சியைச் சுற்றி நிற்பவற்றுடனும் பாதிக்கப்பட்டிருக்கும். அவர்கள்தான் ஜூலை கடைசியில் முக்கிய ப்ரூக்லின் தேவாலயத்தில் டயல்லோவிற்குப் பின் ஆதரவாக நின்றனர்.

கிளின்டன்-லெவின்ஸ்கி விவகாரம், சமீபத்தில் எலியட் ஸ்பிட்சர் மற்றும் ஆன்டனி வீனர் ஆகியோரை முக்கிய அரசியல் பதவியில் இருந்து அகற்றியவை போன்றவற்றிற்குப் பிறகு, பாலியல் அவதூறுகள் அமெரிக்க அரசியலில் செல்வாக்கைக் கொள்வதற்குத் தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றன, அதை இன்னும் வலதிற்குத் தள்ள முயல்வதற்கு, என்பதற்கு இதை விட வேறு என்ன நிரூபணம் தேவை? ISO இன் அணுகுமுறை முற்றிலும், அகநிலையான நிலைப்பாடு ஆகும். அடையாள அரசியல் மற்றும் மத்திய வர்க்க வட்டங்களின் உறுதியற்ற தன்மைக்கு அவர்கள் கொண்டுள்ள சார்பு ஆகியவை அவர்களை பிற்போக்குத்தனச் சக்திகளின் திரித்தல் முறைக்கு எளிதில் தள்ளிவிடுகிறது. சோசலிஸ்ட் வேர்க்கர் இன்னும் அதே போன்ற பல வெளியீடுகள் கறைபடிந்த செயல்களுக்கு போலி இடது மறைப்புக் கொடுப்பதற்கு நம்பப் படலாம் என்பதை நன்கு உணர்ந்துள்ளது. கிட்டத்தட்ட எதைப் பற்றியும், எந்தத் திசையிலும் ISO பயன்படுத்தப்படலாம்.

இதன் ஆதரவுத் தளத்தினர் ISO விடம் அதன் D’Amelio-Tylim ஆகியோரின் கட்டுரைக்காக திருப்தி அடைவர்; ஆனால் உண்மையும் ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பும் இடருக்கு உட்படுகின்றன.