சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : லிபியா

Libyan opposition lays siege to pro-Gaddafi strongholds

கடாபி-கோட்டைகளை எதிர்த்தரப்பினர் முற்றுகை இடுகின்றனர்

By Peter Symonds
6 September 2011
 

use this version to print | Send feedback

முன்னாள் லிபிய ஆட்சியாளர் முயம்மர் கடாபியின் எஞ்சியுள்ள வலுவான இடங்களை அதிக ஆயுதம் ஏந்திய எழுச்சியாளர்கள் ஆயிரக்கணக்கில் முற்றுகை இடுகின்றனர்; இவை வானில் இருந்து நேட்டோ போர்விமானங்களால் தாக்கப்படுவதுடன், நீர், உணவு, மருந்துகள் பற்றாக்குறைகளையும் கொண்டுள்ளன. நேட்டோ ஆதரவுடைய தேசிய மாற்றுக்கால குழு (NTC), அடுத்த சனிக்கிழமையை இவை சரண்டைவதற்குக் காலக் கெடுவாக நிர்ணயித்துள்ளது; ஆனால் இதன் போராளிகள் முன்னதாகவே தாக்குதல்களை நடத்தக்கூடும்.

கடாபி ஆதரவுச் சக்திகள் கடாபியின் தாயகச் சிறுநகரான சிர்ட்டே, பனி வலிட் மற்றும் ஜுப்ரா, சேபா ஆகிய இடங்களில் கட்டுப்பாட்டைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. திரிப்போலிக்கு தென்மேற்கே 150 கிலோமீட்டர் தொலைவிலுள்ள 60,000 மக்கட்தொகையைக் கொண்ட பாலைவன நகரான பனி வலிட்டின் மீது தற்பொழுது கவனம் குவிந்துள்ளது. சரணடைதல் குறித்த பேச்சுக்கள் தோல்வி அடைந்துவிட்டன; எதிர்த்தரப்பு போராளிகள் நகரத்தை தனிமைப்படுத்தியுள்ளனர்.

வார இறுதியில் நேட்டோ லிபியா மீது 200க்கும் மேற்பட்ட பறப்புக்களை கொண்டு,100 இலக்குகளைத் தாக்கியது; இவற்றில் பனி வலிட்டிற்கு அருகே, சிர்ட்டே, ஹுன், புவைரட், சேபா மற்றும் வட்டன் ஆகிய இடங்கள் அடங்கும். நேட்டோ வான்வழி ஆதரவு இருந்தும், கடாபி ஆதரவுப் படையினர் 100க்கு குறைவாகத்தான் உள்ளனர் என மதிப்பீடு செய்யப்பட்டிருந்தபோதிலும்கூட, NTC யினர் சரணடைவது குறித்த பேச்சுக்களை பழங்குடித் தலைவர்களுடன் நடத்த முற்றுகையை பயன்படுத்துகிறனர்.

இக்குழுவின் தலைவர் முஸ்தபா அப்தெல் ஜலில் சிறுநகரங்கள் குருதி கொட்டுவதை தவிர்ப்பதற்காக இன்னும் அவகாசம் கொடுக்கப்படுகின்றன என்று அறிவித்தார்; ஆனால் பிற கருத்துக்களையும் அவர் சுட்டிக்காட்டினார். பனி வலிட் என்பது லிபிய மக்களில் ஆறில் ஒரு பகுதியினரைக் கொண்ட வர்பெல்லா பழங்குடியினரின் வலுவான கோட்டை ஆகும். வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல்  தகவல் கொடுத்துள்ளதுபோல், ஜலில் புதிய ஆட்சிஇராணுவ மோதல் பழங்குடியினருடன் போரைத் தூண்டக்கூடும் என்பதை நன்கு அறிந்துள்ளது.” என்றார்.

இக்கருத்து லிபியாவில் நேட்டோவின் புதிய கைப்பாவை அரசாங்கத்தின் நலிந்த தன்மையையும் அதிகாரத்தின்மீது அது கொண்டுள்ள தளர்ந்த பிடியையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தன்னுடைய கிழக்குக் கோட்டையான பெங்காசியில் இருந்து தலைநகரான திரிப்போலிக்குச் செல்லும் திட்டத்தை NTC தாமதப்படுத்தியுள்ளது. வார இறுதியில் நிருபர்களிடம் பேசுகையில் ஜலில் கடாபி விசுவாசிகளால் ஏற்படக்கூடிய தொடர்ந்த ஆபத்து பற்றிக் குறிப்பிட்டு, புதிய ஆட்சி நாட்டின் முழுப் பகுதி மீதும் கட்டுப்பாட்டைக் கொள்ளாத நிலையையும் பற்றிப் பேசினார்.

ஆனால் NTC யில், திடமற்ற முன்னாள் கடாபி மந்திரிகள், CIA சொத்துக்கள் மற்றும் இஸ்லாமியப் போராளிகள் இருக்கும் நிலை பெங்காசிக்கு அப்பால் அரசியல் செல்வாக்கைக் கொண்டுள்ளது என்பது வினாவிற்கு உரியது ஆகும். திரிப்போலியின் மீது கட்டுப்பாட்டை அது ஒருங்கிணைக்க முற்படும் வகையில், கடாபியின் அரச கருவியை மீட்கவும், பொலிசை மீண்டும் கடமைக்கு திரும்ப முறையீடு செய்தும், அதிகாரிகளுக்கு உயர்ந்த பதவிகளைக் கொடுப்பதையும் உறுதி செய்கின்றது. கிட்டத்தட்ட 3,000 போராளி வீரர்களை பொலிஸ் பிரிவில் ஒருங்கிணைப்பதற்கும் மற்றவர்களுக்கு ஆட்சிப் பணிகளைக் கொடுக்கவும் திட்டங்களை அது அறிவித்துள்ளது

நேற்று பைனான்ஸியல் டைம்ஸ்  கொடுத்த தகவல்: “இடைக்கால அரசாங்கம் அரச ஊழியர்கள், பொலிசார் தொடங்கி ஆசிரியர்கள் வரை, வேலைக்குத் திரும்புமாறு மன்றாடுகிறது; ஆட்சியின் கிழ் பணிபுரிந்தவர்கள், குருதிக் கறையை தங்கள் கைகளில் கொண்டிராதவர்கள், வரவேற்கப்படுகின்றனர் என்று கூறியுள்ளது.” இத்தகைய வரவேற்பு கீழ்மட்ட அலுவலர்களுக்கு மட்டும் என்று இல்லாமல், செய்தித்தாள் சுட்டிக்காட்டியுள்ளபடி, லிபிய முதலீட்டு அதிகாரத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி மற்றும் பொது மேலாளர் ஆகியோருக்கும் பொருந்தும். —இந்த அதிகாரம் $65 பில்லியன் அரசாங்கச் சொத்தை, கடாபியின் மகன்களில் ஒருவரான சைப் அல்- இஸ்லாம் நிறுவியதையும் கொண்டுள்ளது.

திரிப்போலியில் இருந்து வந்துள்ள செய்தி ஊடகத் தகவல்கள் அங்கு நிலவும் பெரும் குழப்ப நிலையைப் பற்றிச் சுட்டிக்காட்டுகின்றன. ஞாயிறன்று CNN கூறியது: “தலைநகரத் தெருக்களில் அரசாங்கத்தின் துப்பாக்கி முழக்கங்கள் கேட்கின்றன. நகரம் முழுவதும் சோதனைச் சாவடிகள், ஆயுதங்கள் நிரம்பிய நகரமாக திரிப்போலி மாறிவிட்டது; கடாபி ஆட்சியின் விசுவாசிகள் இன்னும் செல்வாக்குப் பெற்றுள்ள நிலையில், உண்மையான அதிகாரம் எதற்கும் இல்லை…. ஆயுதங்களை எடுத்துச் செல்ல விரும்புபவர்கள் இப்பொழுது அடையாள அட்டைகளைப் பெற வேண்டும்; ஆனால் இதைப்பற்றித் தெரிந்தெடுக்கும் வழிவகை இன்னும் மையமாக்கப்படவில்லைஅந்த முடிவு புறநகர்க் குழுக்களால் செலுத்தப்படுகிறது. திரிப்போலி புரட்சிக்குழு என்னும் குழு நகரத்தின்மீது செல்வாக்கைச் செலுத்த முற்படுகிறது; இது நிறுவப்பட்டுள்ள தேசிய மாற்றுக்கால குழுவுடன் இன்னமும் மோதல் என்ற திறனைத் தோற்றுவித்து, பொதுவாகக் கொந்தளிப்புத் தன்மை காணப்படுகிறது.”

இச்சூழலில், NTC மற்றும் NATO ஆகியவை முன்னாள் இஸ்லாமிய மற்றும் அல்குவேடா தொடர்புடைய லிபிய இஸ்லாமிய போராளிக் குழுவின் (LIFG) தலைவரான அப்தெல் ஹகிம் பெல்ஹாஜ் மீது அதிகம் நம்பிக்கையைக் கொண்டுள்ளது. அவர் சமீபத்தில் திரிப்போலி இராணுவக் குழுவின் தளபதியாக தேர்ந்நெடுக்கப்பட்டார்; தன்னுடைய செல்வாக்கை நகரத்தின் பலவகைப் போராளிகளைக் கட்டுப்படுத்தி அவர்களை ஆயுதம் களைய வைப்பதற்கு முயல்கிறார். அவருடைய இஸ்லாமியப் பின்னணியை உதறிய வகையில், ஒரு பிரிட்டிஷ் அதிகாரி பைனான்ஸியல் டைம்ஸிடம், “உடனடிக் கவலை பெல்ஹாஜ் போன்றவர் திடீரென மேலாதிக்கம் கொள்வர் என்பது அல்ல. கடாபி எதிர்ப்புக் கூட்டணி சிதையக்கூடும், சிறு பிரிவுகள் ஒவ்வொன்றும் வலிமையைப் பயன்படுத்தித் தன் நிலையை உயர்த்திக்கொள்ளும் என்பதுதான் என்றார்.

மிஸ்ரடா நகரத்தில் உள்ள எதிர்ப்புக் குழுக்கள், பெங்காசியில் உள்ள NTC இன் மேலாதிக்கத்தை பற்றிக் குறைகூறுகின்றனர்; அதன் கட்டுப்பாட்டில் இருந்து பெரிதும் விலகித்தான் அவை செயல்படுகின்றன. கடந்த வாரம் NTC பிரதம மந்திரி மஹ்முத் ஜிப்ரில் முன்னாள் இராணுவத் ளபதி அல்பரனி ஷ்கலை திரிப்போலிக்கு பொறுப்பு என நியமித்ததை அடுத்து எதிர்ப்புக்கள் வெடித்தன. எதிர்த்தரப்பிற்கு மே மாதம் வந்துவிட்ட ஷக்ல் 32வது இராணுவப் பிரிவிற்குத் தளபதியாக இருந்தவர்; அதுவோ கடாபி எதிர்ப்புச் செயற்பாடுகளை இரக்கமற்ற தந்திரோபாயங்களால் அடக்கியதில் இழிபெயரைக் கொண்டது. மேற்கு மலைகளில் இருந்து வரும் பிற கடாபி எதிர்ப்புப் போராளிகள் திரிப்போலியை கைப்பற்றுவதில் முக்கிய பங்கைக் கொண்டவையும் தங்கள் வட்டார விசுவாசங்களை கொண்டுள்ளனர்.

பெங்காசிக்குள்ளேயே, “எழுச்சியாளர்களுக்குள் இருக்கும் பிளவுகள் ஜூலை 28 அன்று அப்பொழுது NTC யின் முன்னாள் இராணுவத் தலைவராக இருந்த அப்தெல் பட்டா யூனிஸின் விளக்கப்படாத கொலை பற்றி தெளிவான முறையில் அம்பலமாகியுள்ளன. யூனிஸ் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சக்திவாய்ந்த ஒபிடி பழங்குடியினர் ஆகியோரிடம் இருந்து NTC அவரைக் கொலை செய்தவர்களை நீதிக்கு முன் நிறுத்துமாறு பெரும் அழுத்தத்தைக் கொண்டுள்ளது. கடாபியின் உள்துறை மந்திரியாக இருந்தபோது அவரால் சிறையில் அடைக்கப்பட்டு சிந்திரவதைக்குட்படுத்தப்பட்ட இஸ்லாமிய வாதிகளால் யூனிஸ் ஆழ்ந்த சந்தேகத்துடன் நோக்கப்பட்டார்.

நேற்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ள கருத்துக்கள்படி, இஸ்லாமிய மதகுரு இஸ்மெயில் அல்-சலாபி நடைமுறையில் மந்திரிசபை போல் செயல்படும் NTC யின் நிர்வாகக் குழுவை இராஜிநாமா செய்யும்படி அப்பட்டமாகக் கோரினார். “நிர்வாகக் குழுவின் பங்கு இனி தேவைப்படவில்லை; ஏனெனில் அவர்கள் பழைய ஆட்சியின் எஞ்சி இருப்பவர்கள். அவர்கள் அனைவரும், பிரமிட்டின் உச்சத் தலைவரில் இருந்து கீழ்வரை இராஜிநாமா செய்ய வேண்டும் என்று அவர் அறிவித்தார்.

பெப்ருவரி 17 தியாகிகள் பிரிகேடுக்குத் தலைவரான சலாபி, இஸ்லாமிய வாதிகள் குழுவின் ஒரு பிரிவில் உள்ளார்: இதில் அவருடைய சகோதரர் ஷேக் அல் சலாபியும் உள்ளார்; அது டோஹாவில் தளத்தைக் கொண்டுள்ளது; பிற இமாம்களையும் லிபியாவில் உள்ள முஸ்லிம் பிரதர்ஹுட்டின் உறுப்பினர்களையும் கொண்டுள்ளது. ”அங்கே மதச்சார்பற்றவர்கள், தங்களுடைய சொந்த செயற்பட்டியலைக் கொண்டுள்ளனர், எங்களை தீவிரவாதிகள் எனச் சித்திரித்துக் காட்டி சர்வதேச சமூகத்திடம் இருந்து எங்களை விரோதப்படுத்த முயல்பவர்கள், பிளவை ஏற்படுத்துக்கூடும், அது கொடுங்கோலருக்குத்தான் உதவும் இவர்கள் எவருக்குப் பணிபுரிகின்றனர் என்று சில நேரம் நீங்கள் வியப்படைவீர்கள்.” என்றார் அவர்.

லிபியச் சொத்துக்கள் மிக விரைவில் முடக்கத்தில் இருந்து நீக்கப்பட்டு அவை புதிய ஆட்சிக்கு கொடுக்கப்படுவது குறித்து அமெரிக்க, ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கு சலாபி எச்சரிக்கை விடுத்தார். “அண்மையில், நிர்வாகக் குழு சொத்துக்கள் முடக்கம் நீக்கப்பட வேண்டும் எனப் பேசியதைத்தவிர வேறு எதையும் செய்யவில்லை. பழைய ஆட்சியின் தனிநபர்களின் பெயரில் இவை இருந்தன; எனவே இச்சொத்துக்களின் மீதான முடக்கத்தை நீக்க விரும்பினால், நீங்கள் அவர்கள் சார்பில்தான் செயல்பட வேண்டும். அவை லிபிய மக்களுக்குச் சொந்தமானவை கடந்த வாரம் முக்கிய சக்திகள் பாரிஸில் நடந்த மாநாட்டில் $15 பில்லியன் மதிப்புடைய சொத்துக்களை முடக்கத்தில் இருந்து நீக்க முன்வந்தது. லிபிய வெளிநாட்டுச் சொத்துக்கள் $170 பில்லியன் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகள் கடாபி ஆட்சி விழுந்தது லிபிய மக்களுக்கு புதிய ஜனநாயக சகாப்தத்தின் தொடக்கம் என்று சித்திரித்தாலும், புதிய ஆட்சி முன்பு இருந்த ஆட்சியைப் போலவேதான் அடக்குமுறையைக் கையாளும். இதன் படைகள் ஏற்கனவே கடாபி ஆதரவு உடைய விசுவாசிகளை நீதித்துறை நெறிக்கு அப்பால் கொலை செய்துள்ளன; அதேபோன்ற வழிவகைகளை திரிப்போலியில் நிறுவப்பட்டுவரும் நேட்டோ ஆதரவுடைய நிர்வாகத்திற்கு வரும் எதிர்ப்புக்களை நசுக்கவும் பயன்படுத்த தயங்க மாட்டா.