சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

NATO-backed Libyan regime persecutes black Africans

நேட்டோ ஆதரவிலான லிபிய ஆட்சி கறுப்பின ஆபிரிக்கர்களை துன்புறுத்துகிறது

Peter Symonds
9 September 2011


use this version to print | Send feedback

லிபிய ஆட்சியாளர் கேர்னல் மௌம்மர் கடாபிக்கு எதிரான துருப்புகளால் புலம்பெயர்ந்த ஆபிரிக்க தொழிலாளர்கள் மற்றும் கறுப்பின லிபியர்கள் மீதான பரந்த இனவாத அட்டூழியமானது, லிபியாவின் தேசிய இடைக்கால சபையின் (NTC) மற்றும் அதன் மேற்கத்திய ஆதரவாளர்களின் ஓர் அதிர்ச்சியூட்டும் குற்றப்பத்திரிகையாக உள்ளது.

அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகள், பொதுமக்களைப் பாதுகாக்கும் போலிக்காரணத்தோடு கடாபி ஆட்சிக்கு எதிராக அவர்களின் நவ-காலனிய யுத்தத்தைத் தொடங்கியதோடு, அவர்கள் தரப்பின் புதிய ஆட்சியை லிபியாவில் ஏற்பட்டிருக்கும் புதிய ஜனநாயகத்திற்கான தொடக்கமென்று ஆர்ப்பரித்தனர். தேசிய இடைக்கால சபையின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் நடந்துவரும் பாரிய இனவாத ஒடுக்குமுறைகள் அத்தகைய கந்தலாகிப்போன பொய்களின் மற்றுமொரு பேரழிவுமிக்க வெளிப்பாடாக உள்ளன. அத்தோடு அதன் தேசிய இடைக்கால சபை கைப்பாவைகளால் நடத்தப்படும் ஏதேச்சதிகார கைது நடவடிக்கைகள், உடல்ரீதியாக துன்புறுத்தல்கள் அல்லது ஆயிரக்கணக்கான கறுப்பின ஆபிரிக்கர்களை சட்டத்திற்கு புறம்பாக கொலை செய்தல் ஆகியவற்றிற்கும், தனது இரக்கமற்ற குண்டுவீச்சுக்களால் பொதுமக்களைக் கொன்றுவரும் மற்றும் காயப்படுத்திவரும் நேட்டோவே பொறுப்பாகும்.

கடாபியின் கூலிப்படைகளாக இருந்து சண்டையிடுவதாக குற்றஞ்சாட்டப்படும் கறுப்பின ஆபிரிக்கர்களை, திட்டமிட்டு கைது செய்வதை முடிவுக்குக் கொண்டு வருமாறு அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமைகள் கண்காணிப்புக்குழு (HRW) கேட்டுக் கொண்டுள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்புக்குழுவின் பிராந்திய இயக்குனர் சராஹ் லெஹ் வெட்சன் கறுப்புநிற-தோலோடு திரிப்போலியில் இருப்பது ஆபத்தாக உள்ளது. குற்ற நடவடிக்கைகளுக்கான ஆணித்தரமான ஆதாரங்கள் இருந்தாலொழிய புலம்பெயர்ந்த ஆபிரிக்கர்களையும், கறுப்பின லிபியர்களையும் கைது செய்வதை தேசிய இடைக்கால சபை நிறுத்திக்கொள்ள வேண்டும். வன்முறை மற்றும் துஷ்பிரயோகங்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்கவும் அது பலமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். என கூறியுள்ளார்.

யுத்தம் தொடங்குவதற்கு முன்னர், லிபியாவில் 1 மில்லியனுக்கும் இரண்டு மில்லியனுக்கும் இடைப்பட்ட அளவில், அங்கே புலம்பெயர்ந்த ஆபிரிக்கர்கள் இருந்தனர். அதில் அதிக பெரும்பான்மையினர் கூலிப்படையினர் அல்லர், மாறாக அடிமட்ட வேலைகளைச் செய்து வந்தவர்களாவர்.

பெரும்பான்மையாக இளைஞர்கள், முதியவர்கள் என நூற்றுக்கணக்கான கறுப்பினத்தவர்களை கொண்டிருக்கும் திரிப்போலி முழுவதிலும் உள்ள இடநெரிசலான மோசமான நிலைமையிலுள்ள சிறைச்சாலைகளில் இரண்டை மனித உரிமைகள் கண்காணிப்புக்குழு அதிகாரிகள் பார்வையிடச் சென்றனர். சிறையிலிருந்த பெரும்பாலானவர்களின் விஷயங்களில், அவர்களின் தோல் நிறமே குற்றங்களுக்கான ஆதாரமாக இருந்தது. திரிபொலி முழுவதும் ஆயிரக்கணக்கானவர்கள் ஏதேச்சதிகாரரீதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.

திரிப்போலியில் மனித உரிமைகள் கண்காணிப்புக்குழு உடன் பேசிய தேசிய இடைக்கால சபையின் உறுப்பினர்கள், அபுத்ல்ஜக் எலராடியின் வார்த்தைகளில் கூறுவதானால், புரட்சியைப் பாதுகாக்கஅவை அவசியமானதாகுமென கைது நடவடிக்கைகளை நியாயப்படுத்தினர். சிறைச்சாலைகளின் நிலைமைகள் சர்வதேச தரத்தில் இருப்பதாகதேசிய இடைக்கால சபையால் சட்டத்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ள முஹம்மது அல்-அலாகி இந்த வாரம் ஊடகத்திடம் தெரிவித்தார்.

சிறையிலடைக்கப்பட்டுள்ளவர்களிடம் துஷ்பிரயோகம் செய்ய வேண்டாமென தேசிய இடைக்கால சபை அதன் துருப்புகளுக்கு போலி அழைப்பைவிட்டிருப்பது முற்றிலுமாக உலக நாடுகளுக்காகவாகும். புலம்பெயர்ந்த ஆபிரிக்க தொழிலாளர்கள் லிபியர்களின் வேலைகளை எடுத்துக் கொண்டனர் என்று முறையிட்டு, அவர்களுக்கு எதிராகவும் ஏனைய ஆபிரிக்க நாடுகளுக்கு கடாபி அளித்த உதவிகளுக்கு எதிராகவும், கடாபி-எதிர்ப்பு பிரச்சாரத்தின் பாகமாக, தேசிய இடைக்கால சபை இனவாதத்தைத் தூண்டிவிட்டுள்ளது.

புலம்பெயர்ந்த ஆபிரிக்கர்கள் மற்றும் கறுப்பின லிபியர்கள்மீது அவதூறு கிளப்புவதென்பது தேசிய இடைக்கால சபையின் மோசடியான மற்றும் குற்றத்தனமான குணாம்சத்திலிருந்து கவனத்தைத் திசைதிருப்புவதற்கும் உதவுகிறது. அவை கடாபியின் முன்னாள் அதிகாரிகள், CIA ஆதரவாளர்கள், மற்றும் இஸ்லாமியர்களால் இட்டுக்கட்டப்படுகின்றன. கட்சி மாறுவதற்கு முன்னர் கடாபி ஆட்சியில் சட்டத்துறை மந்திரியாகவும், தேசிய பொருளாதார அபிவிருத்தி ஆணைய தலைவராகவும் இருந்த, முறையே, தேசிய இடைக்கால சபையின் தலைவர் முஸ்தபா அப்தெல் ஜலீல் மற்றும் அதன் இடைக்கால பிரதம மந்திரி மஹ்முத் ஜிப்ரில் ஆகியோரும் இரத்தக்கறைபடிந்த கரங்களைக் கொண்டிருப்பவர்களில் உள்ளடங்குவர். தேசிய இடைக்கால சபையின் இராணுவ தளபதியான அப்தெல் பதாஹ், மர்மமான சூழல்நிலையில் ஜூலையில் படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர், கடாபியின் முன்னாள் உள்துறை மந்திரியாக இருந்தவராவார்.

பத்து ஆயிரக்கணக்கான ஆபிரிக்க தொழிலாளர்கள் அவர்களின் வீடுகளைவிட்டு சென்று, பாதுகாப்பிற்காக தற்காலிய  முகாம்களுக்குள் முண்டியடித்துக் கொண்டிருக்கும் நிலையில், பலர் ஏற்கனவே நாட்டைவிட்டே வெளியேறி உள்ளனர். கடாபிக்கு எதிரான போராளிகள் வெளிநாட்டு கறுப்பினத்தவரை இலக்கில் வைத்திருப்பதாக கானாவை சேர்ந்த அமீனூ ஜிம்போ Voice of America விற்கு தெரிவித்தார்.

இப்போது தான் அவர்கள் வந்தார்கள். துப்பாக்கியால் சுட்டார்கள். நாங்கள் ஓடினோம். எங்களுடைய கடவுச்சீட்டுக்கள் அந்த அறைகளிலேயே உள்ளன. அங்கிருந்த பல கானா நாட்டினரை அவர்கள் கொன்றுவிட்டதால் நாங்கள் வெறுமனே தப்பியோடி விட்டோம். அவர்கள் கறுப்பினத்தவர்கள் அனைவரையும் கொல்கின்றனர். அதனால் தான் நாங்கள் தப்பியோடி வர முடிவெடுத்தோம், என்றவர் தெரிவித்தார்.

கடந்தவாரம் ராய்டர்ஸ் குறிப்பிட்டது: சனியன்று திரிப்போலி கடற்கரையில் வெளிப்படையாக ஆபிரிக்காவைச் சேர்ந்த 22 மக்களின் சடலங்களைச் செய்தியாளர்கள் பார்த்தனர். கூலிப்படையினர்  என்றழைக்கப்படும் அம்மக்கள் கடாபிக்கு எதிரான துருப்புகளால் கொல்லப்பட்டனர் என உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். கடாபிக்கு எதிரான லிபிய போராளிகள் ஆபிரிக்கர்களை கண்முன்னாலேயே மோசமாக கையாள்வதால், எழுச்சி ஏற்பட்டதிலிருந்து ஆபிரிக்காவைச் சேர்ந்தவர்களின் சடலங்கள் லிபியாவில் ஏனைய இடங்களில் பொதுவாக காணப்படுகின்றது.

குறிப்பாக நாட்டின் தெற்கிலுள்ள பழங்குடியினரில் இருந்து வந்த கறுப்பின லிபியர்கள், வேறெங்கும் தப்பிச்செல்வதற்கில்லை என்பதால் அவர்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ஒடுக்குமுறையையும், திரிப்போலியில் கைது செய்யப்பட்டு கடுமையாக அடிக்கப்பட்டு வரும் தவார்ஹாஸ் மக்கள் மீதான ஏதேச்சதிகார கைது நடவடிக்கைகளையும் உடனே நிறுத்துமாறு சர்வதேச மன்னிப்புசபை கேட்டுக் கொண்டுள்ளது. சோதனைச்சாவடிகளில் கைது செய்யப்பட்ட பின்னரும், ஆயுதந்தாங்கிய புரட்சியாளர்களால் (துவ்வார்) மருத்துவமனைகளில் இருந்து இழுத்துச் சென்ற பின்னரும், ஏனையவர்கள் காணாமல் போய்விட்டனர், என மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்தது.

லிபியாவில் ஏகாதிபத்திய யுத்தத்தை உற்சாகப்படுத்தி இருந்த அமெரிக்க மற்றும் சர்வதேச ஊடகங்களும், கறுப்பின ஆபிரிக்கர்கள் மீது நடக்கும் திட்டமிட்ட துஷ்பிரயோகத்தைப் பெரிதும் உதாசீனப்படுத்தியுள்ளன அல்லது லிபியாவில் ஒரு புதிய ஜனநாயகம் உதயமாகிறது என்ற புகழ்பாடலுக்கிடையே அதன் அளவையும், முக்கியத்துவத்தையும் குறைவாக எடுத்துக்காட்டியுள்ளன.

உண்மையில், ஆபிரிக்க தொழிலாளர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் காட்டுமிராண்டித்தனமான அணுகுமுறைகள் நேரடியாக லிபிய யுத்தத்தின் குணாம்சத்திலிருந்தும், தேசிய இடைக்கால சபையின் குணாம்சத்திலிருந்தே கூட எழுகிறது. முந்தைய தசாப்தத்தில் கடாபிக்கு மிகவும் நெருக்கமாக ஒத்துழைத்து வந்த அமெரிக்காவும், ஐரோப்பிய சக்திகளும் முக்கிய எண்ணெய் வளங்களைக் கைப்பற்றவும் மற்றும் தேசிய இடைக்கால சபையை ஒரு கைப்பாவை ஆட்சியாக ஸ்தாபிக்கவும் அவர்களின் முந்தைய கூட்டாளிக்கு எதிராக திரும்பின. இத்தகைய ஒரு கைப்பாவை ஆட்சி எகிப்திலும், மத்தியகிழக்கின் ஏனைய நாடுகளிலும் அமெரிக்க ஆதரவிலான சர்வாதிகாரத்திற்கு எதிராக எழுந்த புரட்சிகர எழுச்சிகளுக்கு எதிராக ஒரு பாதுகாப்பு அரணாக உதவிவருகிறது.

தற்போது, லிபியாவின் எண்ணெய் வளங்களை பிரதான மேற்கத்திய எரிசக்தித்துறை பெருவியாபாரங்களுக்கு ஒப்படைக்கும் உடன்படிக்கைகளில் கையெழுத்திடுவதில் தீவிரமாக இருக்கும் தேசிய இடைக்கால சபையும் மற்றும் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களும் எவ்வித மக்கள் எதிர்ப்புக்கு எதிராகவும் மிகவும் காட்டுமிராண்டித்தனமான முறைமைகளைப் பயன்படுத்த நோக்கம் கொண்டுள்ளனர். அவர்களின் நடவடிக்கைகள் பற்றிய அனைத்து விமர்சனங்களிலிருந்தும் அவர்கள் தப்பிக்க முடியுமென அவர்கள் நம்புகின்றனர். இதற்காக அவர்களின் அரசியல் உருவத்தை மூடிமறைக்கும் சர்வதேச ஊடகங்களுக்குத் தான் நன்றி கூற வேண்டும்.

லிபியாவில் நேட்டோவின் மனிதாபிமான தலையீட்டிற்கு ஆதரவளித்த பல்வேறு இடது-தாராளவாதிகளும், போலி-தீவிர அமைப்புகளுமே இந்த பிற்போக்குத்தனமான அமைப்புகளில் முன்னனியில் நிற்கின்றன. அவர்களில் ஒருவராக, அந்த யுத்தத்திற்கு ஓர் அரசியல் அனுதாபியாகவும், லிபியாவில் நேட்டோவின் தேசிய இடைக்கால சபையை கைப்பாவைகளுக்காகவும் தொடர்ச்சியாக மிச்சிகன் பல்கலைக்கழக பேராசிரியல் ஜூவான் கோல் செயல்பட்டுள்ளார்.

திட்டமிட்ட இனவாத துஷ்பிரயோகத்தின் முன்னிருக்கும் ஆதாரங்களைப் புறக்கணித்துவிட்டு, பாரிய ஒடுக்குமுறை நடவடிக்கைகளை மறுக்கும் தேசிய இடைக்கால சபையின் உத்தியோகப்பூர்வ கருத்துக்களை எதிரொலிக்கும் விதத்தில், சில கூலிப்படை ஆபிரிக்கர்கள் ஒடுக்குமுறை நடவடிக்கையின் போது படுகொலைகளுக்குப் பலியாகி இருக்கக்கூடுமென்று, கோல் கடந்த வாரம் அவருடைய அறிக்கையில்மேலோட்டமாக குறிப்பிட்டிருந்தார்.

புலம்பெயர்ந்த கறுப்பின மக்களையும், லிபியர்களையும் படுகொலை செய்வது, தண்டிப்பதென்பது, ஏகாதிபத்திய யுத்தம் லிபியாவிற்கு ஜனநாயகத்தைக் கொண்டு வரும் என்று கூறிய அனைவருக்கும் ஒரு நிர்மூலமான மறுப்புரையாக உள்ளது. யுத்தத்திற்கான விலையாக அழிக்கப்பட்ட அல்லது நாசமாக்கப்பட்ட வாழ்க்கைக்கு அவர்கள் தான் அரசியல்ரீதியாக முழு பொறுப்பேற்கவேண்டும்.