சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

A socialist answer to the euro crisis

யூரோ நெருக்கடிக்கு ஒரு சோசலிச பதில்

Peter Schwarz
14 September 2011
use this version to print | Send feedback

நாளையதினம் வோல் ஸ்ட்ரீட் பெருநிறுவனமான லெஹ்மன் பிரதர்ஸ் திவால் பதிவு கொடுத்த நாளின் மூன்றாம் ஆண்டு நிறைவை குறிக்கும். அதையொட்டிய சர்வதேச நிதியச் சந்தைகளில் ஏற்பட்ட நெருக்கடி இப்பொழுது எங்கு நோக்கினும் முழு அளவிலான சரிவு என்ற முறையில் காளான்போல் வளர்ந்துள்ளது. வங்கிகள் மட்டும் இல்லாமல், முழு நாடுகளும் நிதியப் பெரும் சரிவின் விளிம்பில் நிற்கின்றன. டாலருக்கு அடுத்து உலகின் இரண்டாம் மிக முக்கியமான நாணயமான யூரோ தொடர்ந்து இருப்பது இப்பொழுது சந்தேகத்திற்கு உரியதாகிவிட்டது.

ஐரோப்பியத் தலைவர்கள் வெளிப்படையாக கிரேக்கத்தின் திவால்பற்றிச் சிந்திக்கின்றனர். ஜேர்மனியப் பொருளாதார மந்திரியும் தாராளவாத ஜனநாயக  கட்சியின் (FDP) தலைவருமான பிலிப் ரோஸ்லர் அந்நாட்டின் முறையான திவால் தன்மைக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதே நேரத்தில் பவேரிய பிரதம மந்திரியும் பழைமைவாத கிறிஸ்துவ சமூக ஒன்றியத்தின் (CSU) தலைவருமான ஹொர்ஸ்ட் ஸீஹோவர் கிரேக்கம் யூரோப்பகுதியில் இருந்து ஒதுக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். டச்சின் நிதி மந்திரி ஜான்-கீஸ் டி ஜேகர் கிரேக்கம் யூரோப்பகுதியில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்னும் கருத்திற்கு ஒப்புதல் கொடுத்துள்ளார்.

சுவிஸ் வங்கியான UBS அத்தகைய நடவடிக்கையின் செலவுகளை மதிப்பிட்டுள்ளது. யூரோவில் இருந்து விலகுதலின் விளைவுகள்அரசாங்க மற்றும் பெருநிறுவனத் திவால்கள் உட்பட, வங்கிமுறைச் சரிவு மற்றும் சர்வதேச வணிகச் சரிவு என்பதுகிரேக்கத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் முதல் ஆண்டு சராசரியாக 9,500 யூரோ முதல் 11,500 வரையிலும் ஆகும். அல்லது கிரேக்கத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 முதல் 50% என ஆகும். இச்செலவு மற்றும் 3,000 முதல் 4,000 யூரோ வரை ஒவ்வொரு நபருக்கும் அதற்குப் பின் ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும்.

ஜப்பானிய முதலீட்டு வங்கியான Nomura நாணய ஒன்றியத்தில் இருந்து கிரேக்கம் விலகுவது மகத்தான மூலதன வெளியேற்றத்திற்கு வழிவகுக்கும், கிரேக்க நிறுவனங்களுக்குக் கடன் கொடுத்தல் நின்றுபோகும், வணிகத் தடை, வேலையின்மையில் தீவிர ஏற்றம், பணவீக்கத்தில் அதிகரிப்பு மற்றும் எரிசக்தி, உணவுத் தட்டுப்பாடுகள் ஆகியவற்றை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கிறது.

கிரேக்க அரசின் திவால் என்பது அந்நாட்டுடன் நின்றுவிடாது. சர்வதேச வல்லுனர்கள் வங்கித் தோல்விகள், இன்னும் கூடுதலான நாடுகளின் திவால்கள் மற்றும் யூரோவின் முடிவு ஆகியவை ஏற்படும் என்று அஞ்சுகின்றனர்.

ஐரோப்பாவிலுள்ள ஜனநாயகமுறை நிறுவனங்கள் அத்தகைய பொருளாதாரப் பேரழிவைத் தொடர்ந்து தப்பிப் பிழைக்க முடியாது. UBS ல் உள்ள வல்லுனர்கள் இவ்வகையில் எந்த நப்பாசைகளையும் கொண்டிருக்கவில்லை. “தற்கால நாணய நிதிய ஒன்றியங்களின் உரிமை எதுவுமே சர்வாதிகார அரசாங்கம், இராணுவ அரசாங்கம் அல்லது உள்நாட்டுப் போர் என்பதைக் கொடுக்காமல் முறிந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.” என அவர்கள் எழுதியுள்ளனர்.

எச்சரிக்கையுணர்வு, விவேகம் ஆகியவை தேவை என்று பல குரல்கள் ஒலிக்கின்றன. ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் (CDU) மறைமுகமாக அவருடைய சுதந்திர ஜனநாயகக் கட்சி மற்றும் கிறிஸ்துவ சமூக ஒன்றியக் கூட்டணிப் பங்காளிகளை நிதானத்தைக் காட்டுமாறு மறைமுகமாகக் கோரியுள்ளார்.”கிரேக்கத்திற்கு நாம் ஆதரவு தரவேண்டும்; திவாலாவது பற்றி ஒன்றும் அவர்களிடம் பேசவேண்டாம்.” என்று அவருடைய ஆலோசகர் பீட்டர் அல்ட்மையர்  அறிவித்தார். “அது எவருக்கும் உதவியளிக்காது.”

Süddeutsche Zeitung பத்திரிகை ரோஸ்ர் மற்றும் ஸீஹோவர் பொருளாதார அறியாமை உடையவர்கள் என்று குற்றம்சாட்டி தங்கள் பதவிக்கு அவர்கள் வலுக்கூட்ட முற்படுகிறார்கள் என்று கூறி, எச்சரித்தது: [யூரோப் பகுதியில் இருந்து] வெளியேற்றப்படல் என்பது கிரேகத்திற்கு மட்டும் பேரழிவு அல்ல; ஜேர்மனிக்கும் ஐரோப்பாவின் மற்ற நாடுகளுக்கும்தான்.” எனக்குறிப்பிட்டது.

ஆனால், இந்த நெருக்கடி காரணகாரிய விதிகளை ஒட்டி வரவில்லை; மாறாக வர்க்க நலன்களின் தர்க்கத்தை ஒட்டி வந்துள்ளது. இது வெளிப்படையாகப் பேரழிவிற்குத்தான் வழிவகுக்கும் என்றாலும், ஐரோப்பாவில் தேசியவாதம் எழுச்சிகண்டு வருகின்றது. ரோஸ்லரும் ஸீஹோவரும் இவ்வகையில் விதிவிலக்கல்ல.

சமீபத்திய பைனான்சியல் டைம்ஸின் பதிப்பில், கட்டுரையாளர் கிடியோன் ராஹ்மன் குறிப்பிடுகிறார்: “சர்வதேச ஒந்துழைப்பிற்கான ஆர்வம் பெரிதும் குறைந்துவிட்டது. முக்கிய அரசியல் தலைவர்கள் உள்நாட்டைத்தான் கவனிக்கின்றனர்…. சர்வதேச அரசியல் நகர்ந்து செல்லுகையில், இப்பொழுது உலகம் காலம் கடந்து பாதுகாப்புமுறைக்குள் சென்றுவிடும் தெளிவான ஆபத்து உள்ளது.”

அதன்பின், அவர் 1930 களின் நெருக்கடியுடன் ஒப்புமைகளைக் கூறுகிறார்; அப்பொழுதுவோல்ஸ்ட்ரீட்டில் ஏற்பட்ட ஒரு நிதிய நெருக்கடி பெருமந்த நிலையாக மாறியது; அதன் பின் காப்புவரிக் கொள்கை அதிகரித்து, பின்னர் ஐரோப்பாவில் வங்கி முறை நெருக்கடி ஏற்பட்டது.”

ஆளும் வர்க்கத்தின் சில பிரிவுகள் இந்த ஆபத்தை எதிர்கொள்ள விரும்புகின்றனர், ஒருவேளை கிரேக்கம் திவாலாகிவிடும் சாத்தியத்துடன் யூரோ மீட்புப் பொதி விரிவாக்கப்பட வேண்டும், யூரோப் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும், ஒரு ஐரோப்பிய பொருளாதார அரசாங்கம் தேவை என்று கூறுகின்றனர். ஆனால் நெருக்கடிக்கு இது விடையாகாது; இது விளைவுகளை வேறு ஒரு வடிவத்தில் மக்களின் பெரும்பாலோர் மீது சுமத்துவதுதான்.

இப்போக்கை முன்வைப்பவர்கள் மிக அதிக கடன்பட்டுள்ள நாடுகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அனைத்துக் கடன்களும் ஐரோப்பிய ஒன்றியம் நிர்ணயிக்கும் விதிகளை ஒட்டிக் கடுமையான சிக்கன நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதுடன் பிணைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். “கடனில் சரியும் எந்த நாடும் தன் நாட்டின் அரசியல் பற்றித் தனியே இனி முடிவெடுக்க முடியாது, புரூஸ்ஸல்ஸில் இருந்து வரும் முடிவுகளைத்தான் செயல்படுத்த வேண்டும்என்று Süddeutsche Zeitung எழுதியுள்ளது.

இக்கொள்கை குறித்து சமூக ஜனநாயகவாதிகளும் பசுமைவாதிகளும் குறிப்பாக ஆர்வம் காட்டியுள்ளனர். கிரேக்கத்தின் ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூ மற்றும் ஸ்பெயினின் ஜோஸே சாப்பத்தேரோ போல்  பிரஸ்ஸல்ஸின் மிருகத்தன சிக்கன நடவடிக்கை ஆணைகளைச் செயல்படுத்த அவர்கள் வரிசையில் நின்கின்றனர். அவ்வாறு செய்கையில் அவர்கள் தொழிற்சங்கங்கள் மற்றும் ஜேர்மனிய இடது கட்சி, பிரெஞ்சு புதிய முதலாளித்துவ எதிர்ப்புக்கட்சி (NPA) போன்ற போலி இடது கட்சிகளை நம்பியிருக்கின்றன; இவை சமூக ஜனநாயகக் கட்சிகளுக்கு இன்னும் நெருக்கமாக வந்து, தங்களை தொழிலாளர்களிடம் இருந்து விலகிக்கொள்கின்றன.

இவ்வகையில் நெருக்கடி ஒரு சமூக எதிர்ப்புரட்சியின் கருவியாக உதவுகிறது. வங்கிகள் பொதுப்பணத்தில் இருந்து டிரில்லியன்கள் கொடுக்கப்பட்டு பிணை எடுக்கப்படுகையில், பெரும் செல்வந்தர்களின் சொத்துக்கள் சற்றும் குறைவின்றி அதிகரிக்கையில் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கத்தரங்கள் தொழிற்துறை முதலாளித்துவத்தின் ஆரம்பகாலங்களில் இருந்த தரத்திற்குத் கீழ்நோக்கித்தள்ளப்படுகின்றன.

கிரேக்கத் திவால்தன்மைக்கு ஆதரவு கொடுப்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்களுக்கு இடையே உள்ள வேறுபாடு ஆதரவு கொடுப்பவர்கள் இந்த இலக்கை ஒவ்வொருவருக்கும் எதிரான ஒரு தேசியப் போராட்டத்தினூடாக அடையப்பட வேண்டும் என்றும், எதிர்ப்பவர்கள் இதே இலக்கை ஐரோப்பிய இயக்கத்தில் கீழ் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட வழிவகையில் அடைய வேண்டும் என்று கூறுவதுதான். அவர்கள் முழு நாடுகளினதும் பெருங்குழப்பச் சரிவு என்பது பெரும் சமூக எழுச்சிக்களை தோற்றுவிக்கும் என அஞ்சுகின்றன.

இந்த அச்சம் UBS வல்லுனர்களாலும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. இவர்கள் ரஷ்ய புரட்சியாளர் லெனினை சான்றாக மேற்கோளிடுகின்றனர். பொருளாதாரவாதி ஜோர் மேனர்ட் கீன்ஸை மேற்கோளிட்டு அவர்கள், “லெனின் உறுதியாகச் சரியாகத்தான் கூறினார். சமூகத்தின் தற்போதுள்ள அடித்தளத்தை புரட்டுவதற்கு நாணயத்தைத் இல்லாதொழிப்பதைவிட உறுதியான வழிவகை, நுட்பமான வழிவகை கிடையாது.”

தொழிலாளர்கள் இந்த மாறுபட்ட கருத்துக்களை உடைய முதலாளித்துவ முகாம்கள் எதற்கும் தங்களைத் அடிபணியசெய்துகொள்ள வேண்டிய தேவையில்லை. அவர்கள் யூரோ நெருக்கடிக்கு விடையிறுக்கும் வகையில்கிரேக்கர்களைசூனிய வேட்டை ஆடும், தேசிய அழுத்தங்களைத் தூண்டிவிடும் அனைவரையும் கடுமையாக எதிர்க்க வேண்டும். அதே நேரத்தில் தொழிலாளர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் அமைப்புகளை வலுப்படுத்துவதில் தீவிரமாக உள்ளவர்களையும் நிராகரிக்க வேண்டும். அவர்கள்ஐரோப்பாவைக் காப்பாற்றஐரோப்பிய நிய மூலதனத்தின் சர்வாதிகாரத்தைத்தான் நிறுவ முற்படுகின்றனர்.

நெருக்கடிக்கான தீர்வு தேசியரீதியான அல்ல; இது ஒரு வர்க்க, சர்வதேசப் பிரச்சினை ஆகும். எந்த ஒரு சமூகப் பிரச்சினையும் நிதிய மூலதனத்தின் சக்தியை முறிக்காமல், வங்கிகள், பெரும் தொழில் நிறுவனங்களை எடுத்துக் கொள்ளாமல், அவற்றை ஜனநாயகக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவராமல், தீர்க்கப்படமுடியாது.

இதை அடைவதற்கு, தொழிலாளர்கள் ஐரோப்பா முழுவதும் ஐக்கியப்பட வேண்டும், நிபந்தனையற்ற முறையில் தங்கள் உரிமைகளையும் சமூக நலன்களையும் பாதுகாத்து, ஒரு ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகள் என்ற கட்டமைப்பினுள் தொழிலாளர்கள் அரசாங்கங்களை நிறுவப்போராட வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஒன்றுதான் இந்த முன்னோக்கிற்காக போராடும் ஒரே கட்சியாகும்.