சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : ஆப்கானிஸ்தான்

US embassy and NATO headquarters in Kabul under fire

காபூலில் அமெரிக்கத் தூதரகம் மற்றும் நேட்டோ தலைமையகம் தாக்குதலுக்கு உட்படுகின்றது

By Peter Symonds
14 September 2011

use this version to print | Send feedback

நேற்று தாலிபன் போராளிகள் ஒருங்கிணைந்து நடத்திய தொடர்ச்சியான தாக்குதல்கள் மீண்டும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத்-தலைமையிலான இராணுவ ஆக்கிரமிப்பின் நலிந்த தன்மையை உயர்த்திக் காட்டவதுடன், வாஷிங்டன் 2014க்கும் அதன் ஆப்கானிய வாடிக்கை ஆட்சிக்குப் பாதுகாப்புப் பொறுப்பை ஒப்படைக்கும் திட்டங்களின் நலிந்த தன்மையையும் உயர்த்திக் காட்டுகின்றன.

ஒரு சிறு எண்ணிக்கையிலான எழுச்சியாளர்கள், இயந்திரத் துப்பாக்கிகள், ராக்கெட்டுகள் மற்றும் வெடிப்பொருட்களைக் கொண்டு இரவு 1.30 அளவிற்கு மிக அதிகப் பாதுகாப்பு உடைய அமெரிக்கத் தூதரகம், நேட்டோ தலைமையகம் மற்றும் NDS எனப்படும் தேசியப் பாதுகாப்பு இயக்ககம் ஆகியவற்றையும் தலைநகரில் பிற இடங்களையும் தாக்கினர்.

ஆறு தாலிபன் போராளிகள் ஒரு பொலிஸைக் கொன்று, தலைநகரின் தூதரகப் பகுதிக்குள் முற்றுப்பெறாத உயரக் கட்டிடத்தின் உயர்மாடிகளில் ஏறியதுதான் மிக நீடித்த மோதலாக இருந்தது. இப்பகுதி முழுவதுமே ஏராளமான சோதனைச் சாவடிகளைக் கொண்டு பெரும் பாதுகாப்பிற்கு உட்பட்டது; “எஃகு வட்டம் என அழைக்கப்படும் வகையில் இது வெளிநாட்டுத் தூதரகங்கள் அரசாங்கக் கட்டிடங்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பதாகும்.

தங்கள் ஆதரவு இடத்தில் இருந்து எழுச்சியாளர்கள் அமெரிக்கத் தூதரகம், நேட்டோத் தலைமையகம் மற்றும் NDS அலுவலகங்களை ரைபிள்கள், ராக்கெட்டினால் ஏவப்படும் எறிகுண்டுகள் மற்றும் தோளில் வைக்கப்படும் ராக்கெட்டுக்கள் ஆகியவற்றின் மூலம் தாக்கினர். தலைநகரக்கு மேற்கே, இரு தற்கொலைப் படையினர் தங்கள் வெடிமருந்துகளை ஒரு பொலிஸ் நிலையத்திற்கு வெளியே வெடித்தனர்; மூன்றாம் தற்கொலைப்படைக்காரர் விமான நிலையத்தில் நுழைய முற்பட்டபோது கொல்லப்பட்டார்.

தூதரகக் கட்டிட முற்றுகை குறைந்த பட்சம் ஏழு மணி நேரம் நீடித்தது; பின்னர்தான் ஆப்கானிய பொலிசார் கட்டிடத்தின் மீதான கட்டுப்பாட்டை மீட்க முடிந்து, தாக்கியவர்களில் கடைசி நபரைக் கொல்ல முடிந்தது. நகர் முழுவதும் நான்கு பொலிசாரும் இரு குடிமக்களும் கொல்லப்பட்டனர்; மற்றும் 18 குடிமக்கள் காயமுற்றனர். ஒரு அமெரிக்கத் தூதரக செய்தித்தொடர்பாளர் நான்கு ஆப்கானியக் குடிமக்கள் தாக்குதலின்போது காயமுற்றனர் என்று தெரிவித்தார்.

அமெரிக்க, நேட்டோ மற்றும் ஆப்கானிய அரசாங்கம் ஆகியவை உடனே தாக்குதல்களை உதறித்தள்ளினர். பென்டகன் செய்தித்தொடர்பாளர் ஜோர்ஜ் லிட்டில் நிருபர்களிடம் கூறினார்: “இது வியத்தகு தாக்குதல் என்பதில் இருந்து முற்றிலும் அப்பால் இருந்தது.” பிரஸ்ஸல்ஸில் நேட்டோவின் தலைமைச் செயலர் ஜெனரல் ஆண்டர்ஸ் போக் ரஸ்முசன் தாலிபன் ஆப்கானிய பொறுப்பிற்குப் பாதுகாப்பைமாற்றுவது குறித்துச் சோதித்தனர் என்றார், “ஆனால் அவர்கள் அதை நிறுத்த முடியாது என்றார். ஆப்கானிய ஜனாதிபதி ஹமித் கர்சாய் உள்ளூர் பாதுகாப்பு படையினரைப் பாராட்டி அவர்களுடையஉரிய நேரத்தில் எடுக்கப்பட்ட தக்க நடவடிக்கை அவர்களுடைய திறன் முன்னேறியுள்ளதை நிரூபிக்கிறது என்றார்.

ஆனால்கார்டியனுடைய நிருபர் ஆப்கானிய பொலிசார் உயர்ந்த கட்டிடத்தில்ஒழுங்கற்று குண்டு வீசுகின்றனர், அதைத்தொடர்ந்து நேட்டோ மற்றும் ஆப்கானிய ஹெலிகாப்டர்கள் தாக்குதல் நடத்தியவர்கள் மீது குண்டு போட்டன  என்று விவரித்தார். இறுதியில் ஆப்கானிய பொலிஸ் தங்கள் சிறப்புப் படையினரால் பயிற்சியளிக்கப்பட்ட நெருக்கிடைய எதிர்கொள்ளும் பிரிவைக் கொண்டு வந்து கட்டிடத்தை மறுபடியும் ஆக்கிரமித்தது.

நேரில் பார்த்த சாட்சியான ஹிமான்சு ஷர்மா BBC யிடம் கூறினார்: “காபூலில் பாதுகாப்பு என்பதே இல்லை. இது [தூதரகப் பகுதி] மிகப் பாதுகாப்பான இடம்; இங்குகூட நாங்கள் பாதுகாப்பாக இல்லை என்றால், ஆப்கானிஸ்தானில் எங்கும் பாதுகாப்பாக இல்லை என்றுதான் பொருள்.”

கிறிஸ்துவ சயன்ஸ் மானிடருக்கு கொடுத்துள்ள கட்டுரையில் Centre for Strategic and International Studies உடைய பகுப்பாய்வாளர் ஆண்ட்ரூ கோர்ட்ஸ்மன் தாக்குதலின் நோக்கம்பௌதிக சேதம் கொடுப்பதை விட உளரீதியான சேதத்தை ஏற்படுத்துதல் என்பதாகும் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் விளக்கியது: “நீங்கள் தீவிரமாக இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை இடைவிடாது நீங்கள் தோற்றுவித்தால், நேட்டோ பாதுகாப்பாக இருக்கிறது எனக்கூறும் பகுதிகளில் பெரிய அளவுத் தாக்குதல்களை நடத்தும் திறன் இருந்தால், நீங்க வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை தொடர்கிறீர்கள்போர் முடிக்கப்படுவதற்கு.”

தாலிபன் மூன்று பெரிய தாக்குதல்களை காபூலில் ஜூன் மாதத்தில் இருந்து நடத்தியுள்ளனர். ஜூன் 29ம் திகதி, ஒன்பது எழுச்சியாளர்கள் Inter-Contnental Hotel ஐ புயலெனத்தாக்கி குறைந்தபட்சம்12 பேரைக் கொன்று, நேட்டோ, ஆப்கானியப்படைகளை 5 மணி நேரம் நெருங்கமுடியாமல் செய்தனர். ஜூலை 17ம் திகதி துப்பாக்கிவீரர்கள் ஜனாதிபதி கர்சாயிக்கு மிக நெருக்கமான ஆலோசகரான ஜன் மஹ்மத் கானைக் கொன்றனர். ஆகாஸ்ட் 19ம் திகதி எழுச்சியாளர்கள் பிரிட்டிஷ் கௌன்சில் கட்டிடத்தைக் கைப்பற்றி எட்டு மணி நேரப் பூசலில் எட்டு பேரைக் கொன்றனர்.

நேற்றைய தாக்குதலைப் பற்றிக் கூறுகையில், “மேலை இராணுவ மற்றும் உளவுத்துறைப் பிரிவினரின் இதயத்தானத்திற்கு வெகு அருகே நடந்த இத்தாக்குதல்கள் பற்றி அமெரிக்கத் தளமுடைய Stratfor சிந்தனைக்குழு சுட்டிக்காட்டுகிறது: “பல செயல்வீரர்களை வெடிமருந்துகளுடனும் கனரகத் துப்பாக்கிகளுடன் இப்பகுதியில் இயங்க வைப்பது தாலிபன் உயர்மட்டப் பாதுகாப்புப் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆப்கானிய பாதுகாப்புப் பிரிவினரிடம் இருந்து ஆதரவைப் பெறாமல் தாலிபனால் செய்யப்பட்டிருக்க முடியாது.”

அமெரிக்காவும் நேட்டோவும் ஐயத்திற்கு இடமின்றி நாட்டை ஒரு தசாப்த காலமாக ஆக்கிரித்துக் கொண்டிருக்கும் படைகள் மீது பெரிய விரோதப் போக்கு கொண்டிருக்கும் மக்களை மிரட்டுவதற்கு முயற்சிகளை இருமடங்காக்கும். ஆப்கானிய அதிகாரிகளுக்குப் பொறுப்பை ஒப்படைக்கத் தயாராகிக் கொண்டிருக்கும் நேரத்தில், ஒபாமா நிர்வாகம் ஒரு பரந்த பொலிஸ் அரசாங்கக் கருவியை மிகவும் வெறுக்கப்படும் கர்சாய் ஆட்சியை முட்டுக்கொடுத்து நிறுத்த உதவியுள்ளது.

அமெரிக்க தளமுடைய மனித உரிமைகள் கண்காணிப்பு (HRW) பல அரசாங்க ஆதரவு போராளிக் குழுக்களின் செயல்கள் பற்றிய உறையவைக்கும் பார்வையைத் தரும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது; அவை பெரிதும் ஊக்குவிக்கப்படுகின்றன; ஆப்கானிய உள்ளூர்ப் பொலிசைப் போலவே (ALP) அமெரிக்க இராணுவத்திடம் இருந்து பயிற்சியையும் நிதி உதவியையும் பெறுகிறது; இது முறையான இராணுவம் மற்றும் பொலிசிற்கு கொடுக்கப்படுவதை விடத் தனியான முறையாகும்.

போராளிகள் மீண்டும் இயக்கப்படுவதுஆப்கானிஸ்தானத்தின் மிருகத்தனச் செயல்களில் இது நீண்டகால வரலாற்றைக் கொண்டதுகுறைந்தப் பட்சம் சில மாகாணங்களிலேனும் தேசியப் பாதுகாப்பு இயக்கத்தின் உகந்த கொள்கையாக இருக்கிறது; இது கடந்த சில ஆண்டுகளாக தாலிபன் செல்வாக்கு பரவுதலை எதிர்ப்பதற்கு எனக் கூறப்படுகிறது. வடக்கு குண்டுஸ் மாகாணத்தில், NDS துப்பாக்கிகளையும் பணத்தையும் அளித்து, மக்கள்மீது போராளிகளை ஏவிவிடும் வகையில் உள்ளது.

மனித உரிமைகள் கண்காணிப்பு அறிக்கை கூறுவதாவது: “குண்டுஸில் போராளிகள் பரவியிருப்பதும் அவர்களின் அதிகாரமும் தீய முறையில் உள்ளன. குண்டுஸில் கொலைகள், கற்பழிப்புக்கள், உதைகள், பணத்தைப் பறித்தல் ஆகிய மனித உரிமை மீறல் தவறுகளில் போராளிகள் ஈடுபடுவதாக ஏராளமான குற்றச்சாட்டுக்களை மனித உரிமைகள் கண்காணிப்பு பெற்றுள்ளது. பெரும்பாலானவற்றில் நடவடிக்கை ஏதும் குற்றவாளிகள் மீது எடுக்கப்படுவதில்லை.”

அமெரிக்க மற்றும் நேட்டோ சக்திகள் பலப் போராளிக்குழுக்களுடன் நெருக்கமாக ஒத்துழைக்கின்றன என்னும் நிலையில், அமெரிக்காதான் ALP பிரிவுகள் தோற்றுவிக்கப்ட்டதற்கு நேரடிப் பொறுப்பைக் கொண்டுள்ளது. அவை அமெரிக்கச் சிறப்புப் படைகளால் மூன்று வாரங்களுக்கு பயிற்சி கொடுக்கப்படுகின்றன; தானியங்கி ரைபிள்கள் கொடுக்கப்படுகின்றன; கிராமப்புறச் சமூகங்களுக்கு பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆகஸ்ட் வரை 7,500 நபர்கள் ALP யில் சேர்க்கப்பட்டுள்ளனர். முறையான பொலிஸ் பெறும் ஊதியத்தில் கிட்டத்தட்ட 60% பெறும் இவர்களுடைய ஊதியம் அமெரிக்காவால் கொடுக்கப்படுகிறது; இதன் எண்ணிக்கை 30,000 என உயர்த்தப்படலாம் என்று அமெரிக்கா ஒப்புதல் கொடுத்துள்ளது.

ALP ஊழியர்கள் முறையான இராணுவத்தினர், பொலிசை விடச் செலவு குறைவு என்பது மட்டும் இன்றி, எந்தக் கண்காணிப்பும் அவர்கள்மீது இல்லை; போராளிகளைப் போல் இவர்களும் இரக்கமற்றுச் செயல்படுகின்றனர். கொலை, திருட்டு, கற்பழிப்பு ஆகியவற்றில் தொடர்புடைய குற்றச்சாட்டுக்களை HRW மேற்கோளிட்டுள்ளது. சில பகுதிகளில் நன்கு அறியப்பட்ட குற்றவாளிகளும் தாலிபன் எழுச்சியாளர்களும்கூட தெரிந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. “உண்மையில், பல ஆப்கானியர்கள் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவிடம் இப்புதிய படை அர்பகாயிடம் இருந்து (போராளிகளிடம்) இருந்து அதிக வேறுபாடு கொண்டிருக்கவில்லை என்று கூறியுள்ளனர்.” என அறிக்கை கூறுகிறது.

போராளிகள் மற்றும் துணை இராணுவப் பொலிஸ் பிரிவுகளைப் புதுப்பித்தல் என்பது உள்ளூர் மக்களை அச்சம் ஏதுமின்றி மிரட்டிச் செயல்படும் குண்டர்கள் குழுக்களைத் தோற்றுவிக்கும் முழு உணர்வுடனான அமெரிக்க மூலோபாயம் ஆகும். அவற்றின் மிருகத்தனம் ஒன்றும் மனச்சிதைவு அல்ல; இக்கொள்கையின் நேரடி விளைவுதான்.

.நா.உதவிப் பணி அறிக்கை ஒன்று, அண்மையில் வெளியிட இருப்பது, ஆப்கானிஸ்தானில் தோற்றுவிக்கப்பட்டுள்ள பொலிஸ்-அரசாங்கக் கருவியின் மற்றொரு கூறுபாட்டை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. வோல் ஸ்ட்ரீன் ஜேர்னல் கூற்றுப்படி, இந்த அறிக்கை தேசியப் பாதுகாப்பு இயக்ககம் மற்றும் ஆப்கானிய பொலிசார் நடத்தும் 9 சிறைகளில் உள்ள சித்திரவதைகள், தவறான செயல்களைப் பற்றிய விவரங்களை அறிக்கை அளிக்கிறது. அமெரிக்காவும் நேட்டோவும் தற்காலிகமாக காவலில் இருப்பவர்களை ஆப்கானிய அதிகாரிகளிடம் ஒப்படைப்பதை நிறுத்தியுள்ளன; ஆனால் சில வண்ணப்பூச்சுக்கள் செய்யப்பட்டவுடன் இப்பழக்கம் மீண்டும் தொடரும்.

ஒபாமா நிர்வாத்தின் ஆப்கானிய பாதுகாப்புப் பொறுப்பு 2014க்குள் மாற்றப்படும் என்பது நாட்டில் அமெரிக்க இராணுவ நிலைப்பாட்டை முடிவிற்குக் கொண்டுவராது. வாஷிங்டனுக்கும் காபூலுக்கும் இடையே ஒரு மாத காலத்திற்கும் மேலாக அமெரிக்க-ஆப்கானிய மூலோபாயப் பங்காளித்தனம் பற்றிப் பேச்சுக்கள் நடைபெற்று வருகின்றன; இதன்படி கிட்டத்தட்ட 20,000 அமெரிக்கத் துருப்புக்கள் பயிற்சி, கண்காணிப்பு, உளவு-எதிர்ச் செயல்கள் கொடுத்தல் என்ற பெயரில் ஆப்கானிஸ்தானத்தில் நீடித்திருப்பர்.

ஆப்கானிய படைகளுக்கு விமானப்படை ஆதரவைக் கொடுக்கும் ஐந்து முக்கிய தளங்களின் தொடர்ந்த உபயோகம் பற்றியும் அமெரிக்கா கோரிவருகிறது; பென்டகனுக்கு இன்னும் முக்கியமான வகையில், ஒரு நிரந்தர இராணுவ நிலைப்பாடும் கருத்தில் உள்ளது. ஜனாதிபதி கர்சாயியின் உயர்மட்டப் பாதுகாப்பு ஆலோசகர் ரன்ஜின் டாட்பர் ஸ்பான்டா டெலிகிராப்பிடம் கடந்த மாதம் கூறியது: “ஆப்கானிய திட்டத்தில் நாங்கள் 2014ல் இருந்து அடுத்த 10 ஆண்டுகள் குறித்து விவாதிக்கிறோம்.” பெயரளவிற்குத் தளங்கள் ஆப்கானியக் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும், அமெரிக்காவிருந்தினர் என்று தொடர்வர்.

உடன்பாட்டின் வடிவமைப்பு, அமெரிக்கத் தலைமையிலான ஆப்கானிய படையெடுப்பின் முக்கிய நோக்கத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அது ஒன்றும்பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடுவதோ, ஆப்கானிஸ்தானத்திற்கு ஜனநாயகத்தைக் கொண்டுவருவதோ அல்ல. மாறாக நாட்டைத் தளமாகக் கொண்டு அதைச் சுரண்டுவதுடன், தன் விழைவுகளான அருகில் உள்ள விசைச் செழிப்பு உடைய மத்திய ஆசியா, மத்திய கிழக்கு ஆகியவற்றின் மீது ஆதிக்கம் செலுத்துவதுதான். ஒரு விரோதப் போக்கு உடைய மக்களை மிரட்டவும், ஆயுதமேந்திய போராளிகளை நசுக்கவும் பயன்படுத்தப்படும் இரக்கமற்ற நடவடிக்கைகள் இந்த இலக்குகளில் இருந்துதான் நேரடியாக விளைந்துள்ளன.