சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

European workers rally against cuts in social welfare, war and racism

சமூக நல வெட்டுக்கள், போர் மற்றும் இனவெறிக்கு எதிராக ஐரோப்பிய தொழிலாளர்கள் அணிதிரள்கின்றனர்

By the Socialist Equality Party Germany (PSG)
13 September 2011

use this version to print | Send feedback

ஜேர்மனியின் சோசலிச சமத்துவக் கட்சி (The Partei für Soziale Gleichheit) தனது பேர்லின் தேர்தல் பிரச்சாரத்தை செப்டம்பர் 17 சனிக்கிழமையன்று நடக்கவிருக்கும் ஐரோப்பியத் தொழிலாளர்கள் கூட்டத்துடன் நிறைவுசெய்கிறது. இந்தக் கூட்டம் டெம்போட்ரோமில் (Möckernstraße 10, 10963 Berlin) மாலை 3:30 மணிக்கு ஆரம்பமாகும்.

 மலிவு ஊதியங்கள், நல உதவி வெட்டுக்கள், வேலைவாய்ப்பின்மை, வெளிநாட்டினர் மீதான வெறுப்பு மற்றும் போர் அபாயம் ஆகியவற்றுக்கு எதிராகப் போராட விரும்புகின்ற, அத்துடன் நிதிப் பிரபுத்துவம் சமூகத்தின் மீது உத்தரவுகளைக் கட்டளையிடுவதை இனியும் ஏற்றுக் கொள்ள விரும்பாத அனைவரையும் இதில் பங்கேற்க ஊக்குவிக்கின்றோம்.

முதலாளித்துவ நெருக்கடிக்கான ஒரு சோசலிச பதிலை கூட்டம் விவாதிக்கும். சோசலிச சமத்துவக் கட்சியினது  வேட்பாளர்களுடன் சேர்த்து, வேறு நாடுகளில் இருந்தும் நான்காம் அகிலத்தின் பிரதிநிதிகளும் பேசுவார்கள்.

சோசலிச சமத்துவக் கட்சி சில்லறை இலாபங்களுக்காகவும், சீர்திருத்தங்களுக்காகவும் கெஞ்சிக் கொண்டிருக்கவில்லை. உழைக்கும் மக்கள் அரசியல் விடயங்களில் தலையீடு செய்ய வழிவகை செய்யத் தக்க ஒரு புதிய கட்சியைக் கட்டுவதையே அது நோக்கமாய் கொண்டிருக்கிறது. முதலாளித்துவம் எண்பது ஆண்டுகளாக ஆழமான நெருக்கடியில் இருக்கிறது. பில்லியன்கணக்கான மக்களின் தலைவிதியை பாதிக்கின்ற முடிவுகளை வங்கிகளில் உயர்மட்ட நிர்வாகிகளிடமும் மற்றும் அவர்களுக்கு அரசியல் வக்காலத்துவாங்கும் கோமாளிகளிடமும் விட்டு விட்டால் மனிதகுலத்தை ஒரு பேரழிவு அச்சுறுத்திக் கொண்டு நிற்கும்.  

1930களில், பொருளாதார நெருக்கடியானது நாஜி சர்வாதிகாரத்துக்கும் இரண்டாம் உலகப் போருக்கும் இட்டுச் சென்றது. இந்தக் கடுமையான அனுபவங்கள் மறுபடி நிகழும் அச்சுறுத்தல்களைக் கொண்டுள்ளன. உலகப் பொருளாதாரத்தின் வீழ்ச்சியுடன் கைகோர்த்து ஜனநாயக உரிமைகள் அகற்றப்படுவதும், வெளிநாட்டினர் மீதான வெறுப்பு அதிகரிப்பதும், தேசிய பதட்டங்கள் பெருகுவதும், ஐரோப்பிய ஒன்றியம் நிலைகுலைவதும் மற்றும் ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் லிபியாவில் அதிகரித்துச் செல்லும் கொடூரத்தனத்துடனான ஏகாதிபத்தியப் போர்களும் வருகின்றன.

தற்போதைய நெருக்கடியானது எண்பது வருடங்களுக்கு முந்தையதை விடவும் இன்னும் மிக அடிப்படையானதாக இருக்கிறது. அந்த சமயத்தில், ஐரோப்பா பாதாளத்தை நோக்கிப் பாய்ந்து கொண்டிருந்த அதே நேரத்தில், அமெரிக்காபுதிய ஒப்பந்தத்தின் உதவியால் அந்த நெருக்கடியில் ஒரு பிடியைக் கொண்டிருக்க முடிந்ததோடு இரண்டாம் உலகப் போரில் இருந்து ஒரு மேலாதிக்கமான பொருளாதார சக்தியாக அதனால் எழுந்து வர முடிந்தது. இன்று, அமெரிக்காவே நெருக்கடியின் மையப்புள்ளியாக இருக்கிறது, அத்தோடு முதலாளித்துவ உலகப் பொருளாதாரத்தின் நங்கூரமாக அதன் பாத்திரத்தை வேறெந்த நாடோ அல்லது கூட்டணியோ எடுக்கும் நிலையில் இல்லை.

ஒரு சோசலிசப் புரட்சி மட்டுமே இன்னொரு பேரழிவைத் தடுக்க முடியும். பில்லியன் கணக்கான சொத்துகள் மீதான கட்டுப்பாடு தனியாரின் கரங்களில் இருக்கும் வரை, பங்குச் சந்தைகளின் ஊக வணிகர்கள் ஒட்டுமொத்த தேசியப் பொருளாதாரங்களைத் தீர்மானிக்கும் நிலை இருக்கும் வரை, சமூகப் பிரச்சினையில் ஒன்றைக் கூடத் தீர்க்க முடியாது. ஆகவே நிதி நிறுவனங்களும் பெரிய பெருநிறுவனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு அவை ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். பொருளாதார வாழ்க்கையானது சந்தைகளின் அராஜக நிலையின் கையிலும் முதலாளிகளின் இலாப நலன்களின் கைகளிலும் விடப்பட முடியாது.

நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளும் மற்றும் தொழிற்சங்கங்களும் இத்தகையதொரு முன்னோக்கை ஆலோசிக்க ஒருபோதும் விரும்பப் போவதில்லை; ஆளும் உயரடுக்குடன் அவை ஆயிரக்கணக்கிலான இழைகளால் பிணைக்கப்பட்டுள்ளன.

தற்போது இருக்கின்ற அரசு அமைப்புகளின் மீது நெருக்குதல் கொடுப்பதன் மூலமாக ஒரு சோசலிச வேலைத்திட்டம் நிறைவேற்றப்பட முடியாது. உலகெங்கும் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் சுயாதீனமாக அணிதிரள்வதும், தொழிலாளர் அரசாங்கங்கள் ஸ்தாபிக்கப்படுவதும் மற்றும் ஐரோப்பிய சோசலிச அரசுகளின் ஒன்றியம் ஸ்தாபிக்கப்படுவதும் இதற்கு அவசியமாக உள்ளது.

பொருளாதார நெருக்கடியும் அதன் காரணங்களும்

முதலாளித்துவப் பொருளாதாரம் கட்டுப்பாட்டுக்குள் இல்லை. நிகழ்வுகளால் தான் அரசாங்கங்களே செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அடுத்தடுத்த அவசரகால உச்சிமாநாடுகள் கூடிக் கொண்டே தான் இருக்கின்றன, ஆனாலும் அரசாங்க பத்திர வட்டி விகிதங்கள் மேலே ஏறிக் கொண்டே தான் செல்கின்றன. பங்குச் சந்தைகளிலான பீதி ஒரு ஆழமான மந்தநிலைக்குக் கட்டியம் கூறுகிறது. பெருநிறுவனங்கள் வேலைநீக்கங்களின் புதிய அலைகளால் பதிலளிக்கவிருக்கின்றன, அரசாங்கங்கள் கூடுதலான வரவு-செலவுத் திட்ட வெட்டுக்களின் மூலம் பதிலளிக்கும்.

பொதுக் கடன் உயர்ந்த அளவுக்குச் சென்று விட்டதைக் கூறி ஒன்றின் பின் ஒன்றாக சிக்கன நடவடிக்கைகள் வருகின்றன. எவரொருவரும் தனது வாழ்க்கைத் தகுதிக்கு மீறி வாழ முடியாது என்று அதன் நியாயமாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்தக் கடன்கள் வானத்தில் இருந்து விழவில்லை. பெரும்பணக்காரர்களுக்கு நிரந்தரமாய் வரி வெட்டுகள் கொடுத்தது மற்றும் வங்கிகளுக்கு பில்லியன் டாலர்கள் கணக்கில் மீட்புத் தொகுப்புகளைக் கொடுத்ததன் பின்விளைவே அவை. இப்போது வங்கிகள் விடயத்தை திருப்பிப் போடுகின்றன. மூன்று வருடங்களுக்கு முன்னால் பொதுப் பணத்தைக் கொண்டு அவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியதாய் இருந்தது; இப்போதோ அதனால் விளைந்த வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறைகளை மிருகத்தனமான சிக்கன நடவடிக்கைகளைக் கொண்டு தீர்த்துக்கொள்ள அவை கோருகின்றன. 

பணம் ஒன்றும் பற்றாக்குறையாக இல்லை, மாறாக அது பெரும்பணக்காரர்களின் பைகளில் தான் காணக்கூடியதாய் இருக்கிறது. ஐரோப்பாவில், மூன்று மில்லியனுக்கும் அதிகமான மில்லியனர்கள் 7.5 டிரில்லியன் யூரோக்கள் சொத்துக்களைக் கொண்டுள்ளனர். இந்தச் சொத்துக்களில் 4.7 சதவீதத்தை ஒருதடவை சிறப்புக் கட்டணமாக விதித்தாலே ஒட்டுமொத்த கிரேக்க தேசியக் கடனையும் ஒரே தவணையில் திருப்பிச் செலுத்தி விடலாம்.

ஜேர்மனியில், தனியார் சொத்துக்களின் மொத்தம், கடந்த 15 மாதங்களில் நிதி நெருக்கடிக் காலமாய் இருந்தபோதிலும், 350 பில்லியன் யூரோக்கள் அதிகரித்திருக்கிறது. இதுவும் கிரீஸ் தனது கடன்கள் அனைத்தையும் தீர்ப்பதற்கு அவசியப்படக் கூடிய தொகையின் அதே அளவு தான்.

சமூகத்தில் வர்க்கப் பிளவுகள் இன்று ஆழமாக இருப்பதுபோல் முன்னெப்போதும் இருந்ததில்லை. வருட சம்பளங்களும் மேலதிக கொடுப்பனவுகளும் பத்து மில்லியன்கணக்கான டாலர்களில் கிடைப்பது என்பது உச்சத்தில் இருப்பவர்களுக்கு சர்வசாதாரணமான விடயம். ஒரு பெருநிறுவனத் தலைமை அதிகாரி ஒரு தொழிலாளி பெறுவதைப் போல் 300-500 மடங்கு ஊதியம் பெறுகிறார், நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக இது 20 முதல் 40 மடங்கு அளவுக்குத் தான் இருந்தது. மக்கள்தொகையில் பெரும்செல்வம் படைத்த 10 சதவீதம் பேரிடம் தான் தனியார் சொத்துக்களில் 60 சதவீதம் இருந்து வருகிறது.

இந்தச் சமன்பாட்டின் இன்னொரு பக்கத்தில் பார்த்தால் வருங்காலத்திற்கான எந்த வாய்ப்புகளும் இல்லாத ஒரு தலைமுறை நிற்கிறது. ஸ்பெயினில் 15 முதல் 24 வயதுக்குள்ளான இளைஞர்களில் இரண்டில் ஒருவர் வேலைவாய்ப்பின்றி இருக்கிறார், ஐரோப்பாவில் இது ஐந்து பேருக்கு ஒருவர் என்பதாக இருக்கிறது. ஜேர்மனியில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் எண்ணிக்கை குறைவு, ஆனால் அநேகம் பேர் ஸ்திரமற்ற, மலிவு ஊதிய வேலைகளில் இருக்கின்றனர் என்கிற காரணத்தால் தான் அந்நிலையும் கூட. 

இந்த நெருக்கடியையும் விரிந்து செல்லும் மந்தநிலையையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டுமானால் பில்லியன் கணக்கான யூரோக்களை செலவிடும் அரசு பணி வேலைத்திட்டங்களை மிகப்பாரியளவில் தொடங்குவது அவசியமாக உள்ளது. ஊக வணிக இலாபங்கள், உயர்ந்த வருவாய்கள் மற்றும் சொத்து ஆகியவற்றுக்கு அதற்கேற்ற வகையில் அதிகமாய் வரி விதிக்கப்பட வேண்டும் இல்லையேல் பறிமுதல் செய்யப்பட வேண்டும். ஆனால் இத்தகைய நடவடிக்கைகள் எல்லாம், அவை மேற்கொள்ளப்படுவதென்பது ஒருபக்கம் இருக்கட்டும், அவற்றைப் பற்றி விவாதிக்கப்படுவதும் கூட இல்லை. 

பொருளாதாரத்திலும் சரி ஊடகங்களாயினும் சரி அரசியலாயினும் சரி நிதிப் பிரபுத்துவம் சொல்வது தான் எடுபடுகிறது. அது, 1789 புரட்சியின் சமயத்தில் எப்படி பிரெஞ்சு பிரபுத்துவம் எப்படி இருந்ததோ அதைப் போலவே தனது சொத்துக்கள் மற்றும் தனியந்தஸ்துகளை தானாக முன்வந்து விட்டுக் கொடுப்பதற்கு அது கொஞ்சமும் தயாரில்லாமல் உள்ளது. 

இங்கிலாந்தின் சமீபத்திய நிகழ்வுகளை விட இதனை வேறு எதுவும் சிறப்பாக விளங்கப்படுத்த முடியாது. கதியற்ற இளைஞர்களின் சமூகக் கலகத்திற்குப் பதிலடியாக பிரிட்டிஷ் அரசாங்கம் இரும்புக் கரம் கொண்டு அதனை ஒடுக்கியது. ஒரு பதினோரு வயதுப் பையன் உட்பட சுமார் 3,000 பேர் குறிப்பாக சின்னச் சின்னத் தவறுகளுக்காக கைது செய்யப்பட்டிருக்கின்றனர். சிலருக்கு ஏற்கனவே நீண்ட சிறைத் தண்டனை அளிக்கப்பட்டாகி விட்டது. சமூக வலைப் பின்னல்களும் மொபைல் பேசிகளும் இரகசிய போலிசாரால் கண்காணிக்கப்படுகின்றன. போலிசின் தேடப்படுவோர் பட்டியலில் மொத்தமாய் 30,000 பெயர்கள் இருக்கின்றன.  

ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பு

சமூக சமத்துவமின்மையும் ஜனநாயகமும் ஒன்றோடொன்று ஒத்துப்போக முடியாது என்பதையே இங்கிலாந்தின் நிகழ்வுகள் நிரூபணம் செய்கின்றன. ஐரோப்பாவெங்கிலும் ஜனநாயக உரிமைகள் தாக்குதலுக்குட்பட்டுள்ளன. மக்களைக் கண்காணிப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் அரசின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டுக் கொண்டே செல்கின்றன. வேலைநிறுத்தங்கள் தடை செய்யப்படுகின்றன, சின்னச் சின்ன விதிமீறல்களுக்காக தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்படுகின்றனர், நீதித்துறை, ஆர்ப்பாட்டங்களை அச்சுறுத்துவதற்கும் ஒடுக்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. நாடாளுமன்றத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், பில்லியன்கணக்கான தொகையை வங்கிகளுக்குக் கையளிக்கும் முடிவுகளை வெறுமனே தலையாட்டி ஏற்றுக் கொள்கின்றனர்.

அதே சமயத்தில் சமூகக் கோபத்தை பிற்போக்குத்தன பாதைகளில் திருப்பி விடுவதற்கும் மற்றும் அவநம்பிக்கைகொண்ட பிரிவுகளை தொழிலாள வர்க்கத்துக்கு எதிராகத் தூண்டி விடுவதற்குமாய் இனவாத, முஸ்லீம்-விரோத மற்றும் பிற வலதுசாரித் தீவிரவாதக் குழுக்கள் எல்லாம் மும்முரத்துடன் ஊக்குவிக்கப்படுகின்றன.

ஹங்கேரி, இத்தாலி மற்றும் நெதர்லாந்தில், வலது-சாரித் தீவிரவாதக் குழுக்கள் அரசாங்கத்தில் இணைந்து உள்ளன. பிரான்சில், தேசிய முன்னணி என்பது முறைமையாக கட்டியெழுப்பப்பட்டு வருகிறது. ஜேர்மனியில் பல வாரங்களுக்கு, திலோ சாராசின் தனது இனவாதக் கண்ணோட்டங்களைப் பரப்புவதற்கான ஒரு பொது அரங்கம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. தீவிர வலது கட்சியான ஜேர்மன் தேசியக் கட்சி (NPD) தனது தேர்தல் பிரச்சாரத்திற்கு பல மில்லியன்கள் மதிப்பிலான அரசு உதவியைப் பெறுகிறது; அதனை ஒருஅரசாங்க விடயம்என்று உயர் நீதிமன்றம் வருணிக்கும் அளவுக்கு இரகசியக் காவல் துறை அதில் மிக ஆழமாக ஊடுருவியுள்ளது.

சமூக ஜனநாயகக் கட்சி (SPD), இடது கட்சி மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியவை தான் வலதுசாரிகளின் இந்த வளர்ச்சிக்குப் பொறுப்பானவையாகும். இவை தான்இடது அரசியல்என்கிற பேரில் சமூகரீதியாகப் பலவீனமானவர்களைத் தாக்குகின்றன, அகதிகளை மிருகத்தனமான கடுமையுடன் நடத்துகின்றன, தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு இரகசியமாய் குழிபறிக்கின்றன அத்துடன் சமூகப் பிரச்சினைகளை தீவிர வலதின் பக்கமாய் கைவிடுகின்றன. 

சோசலிச சமத்துவக் கட்சி அனைத்து அடிப்படை ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்கிறது. குறிப்பாக புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகளின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை நாங்கள் பாதுகாக்கிறோம். ஒவ்வொரு தொழிலாளருக்கும் தான் விரும்பும் நாட்டில் எந்தக் கட்டுப்பாட்டுக் கெடுபிடியும் இல்லாமல் வாழ்வதற்கும் வேலைசெய்வதற்குமான உரிமை இருக்க வேண்டும்.

ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பும் தீவிர வலதிற்கான எதிர்ப்பும் வங்கிகளின் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்துடன் பிரிக்கவியலாது பிணைக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் அரசியல் நிகழ்வுகளில் பாரிய எண்ணிக்கையில் தலையிடத் தொடங்கும்போது அதுவே வலதுசாரிகளைக் கீழறுக்கும். 

இராணுவவாதத்துக்கும் மற்றும் போருக்கும் எதிரான போராட்டம்

இரண்டாம் உலகப் போர் முடிந்து அறுபத்தி ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், ஐரோப்பா மீண்டுமொருமுறை போட்டி தேசிய-அரசுகளால் பிளவுபடுத்தப்படுகிறது. நிதிச் சந்தைகளின் அகோரப் பசியைச் சிறந்த வகையில் திருப்திப்படுத்த வேண்டுமென்றால் கூட்டு ஐரோப்பியப் பத்திரங்களை விநியோகிக்கலாமா அல்லது யூரோவைக் கைவிட்டு விட்டு ஐரோப்பிய ஒன்றியத்தை அதன் தலைவிதிக்கு விட்டுவிடலாமா என எது சரியாக இருக்கும் என்று ஆளும் வர்க்கம் விவாதித்து வருகிறது.

சோசலிச சமத்துவக் கட்சி இரண்டையுமே நிராகரிக்கிறது. முதலாவது, மிக வலிமையான நிதி நிறுவனங்களின் உத்தரவுகளுக்கு சகலதையும் அடிபணியச் செய்து, கொலைவெறி பிடித்த சிக்கன நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தக் கோருகிறது. அந்தச் சிக்கன நடவடிக்கைகளுக்கு கிரீஸ், அயர்லாந்து மற்றும் போர்ச்சுகல் ஆகியவை முதலில் கீழ்ப்படிந்தாக வேண்டும், பின் இது ஐரோப்பாவின் எஞ்சிய பகுதிகளுக்கு விரிவு செய்யப்படுவதாய் இருக்கும். இரண்டாவதோ ஐரோப்பாவையே வெடித்துச் சிதறச் செய்து அந்த மொத்தக் கண்டத்தையும் தேசியவாதப் போட்டிகளுக்குள், மோதல்களுக்குள் மற்றும் போர்களுக்குள் அமிழ்த்தி விடும்.

ஐரோப்பாவில் பிரிக்கும் கோடு இருப்பது தேசங்களுக்குள் அல்ல மாறாக வர்க்கங்களுக்குள் தான். அனைத்து ஐரோப்பியத் தொழிலாளர்களுக்குமான ஒரு ஐக்கியப்பட்ட போராட்டமே ஒரு வலிமையான ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வக்காலத்து வாங்குபவர்கள் மற்றும் அதேபோல் அவர்களது தேசியவாதரீதியான எதிரிகள் ஆகிய இருதரப்பாலும் பாதுகாக்கப்படும் நிதிப் பிரபுத்துவத்தின் மேலாதிக்கத்தை நொறுக்கி, ஐரோப்பாவை ஒரு முற்போக்கான அடிப்படையில் ஒன்றுபடுத்த முடியும்.

ஐரோப்பிய ஒன்றியம் விரிசலடைந்து செல்கின்ற அதே சமயத்தில் ஐரோப்பிய பெரும் சக்திகள் தமது பழைய காலனித்துவ நோக்கங்களுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றன. லிபியாவுக்கு எதிரான போர் ஒரு அப்பட்டமான ஆக்கிரமிப்புப் போராகும். அப்பாவி மக்களைப் பாதுகாப்பதாய் ஒரு வெறுப்பு வேடம் பூண்டு கொண்டு, மேற்கத்திய சக்திகள் இந்நாட்டில் ஆறு மாதங்களாய் குண்டுவீசி ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவித்து, தங்களின் நலன்களுக்கு கடாபியின் சர்வாதிகாரத்தை விடவும் கூடுதலாய் அடிபணிந்து சேவைசெய்கின்ற ஒரு ஆட்சியை உருவாக்க உதவி வருகின்றன. இப்போது அவை லிபிய எண்ணெயின் மீதான கட்டுப்பாட்டிற்கும் மேற்கத்திய வங்கிகளின் கணக்குகளில் முடக்கப்பட்டிருக்கும் பில்லியன் கணக்கான தொகைகளையும் ஆவலாக தேடிவருகின்றன. 

ஜேர்மனி மட்டும் தான் தந்திரோபாயக் காரணங்களுக்காக இந்தப் போரில் கலந்து கொள்ளவில்லை, ஏனென்றால் ரஷ்யா மற்றும் சீனாவுடனான அதன் உறவுகளை அது ஆபத்துக்குள்ளாக்க விரும்பவில்லை. இப்போது அது கொள்ளையில் பங்கு கோரவும் எதிர்காலப் போர்களில் பங்குபெறவும் விரும்புகிறது. லிபியப் போர் என்பது, ஏற்கனவே சென்ற நூற்றாண்டில் ஏகாதிபத்திய சூழ்ச்சிகளின் மையப்புள்ளியாக இருந்த ஒட்டுமொத்த மத்திய கிழக்குப் பிராந்தியத்தின் மறுபிரிப்புக்கு ஒரு முகவுரையாகும். சிரியாவும் ஈரானும் தான் மேற்கத்திய சக்திகளின் அடுத்த இலக்குகளாகும்.

அமைதிவாத இயக்கம் என்று சொல்லப்படுவதெல்லாம் முற்றுமுழுதாய் உருக்குலைந்திருக்கிறது. அதன் முன்னாள் பிரதிநிதிகளில் பலரும் இப்போது லிபியப் போரை வெளிப்படையாக ஆதரிக்கின்றனர். பசுமைக் கட்சியினர் ஆரம்பத்தில் இருந்தே போரில் பங்குபெற விருப்பம் காட்டினர். அவர்கள் ஏகாதிபத்தியத்தின் பக்கம் மாறியதென்பதே கூட முதலாளித்துவத்தின் ஆழமான நெருக்கடியின் ஒரு விளைவு தான். கூர்மைப்பட்ட வர்க்க பேதங்கள் அரைகுறையான நடவடிக்கைகளால் தீர்க்கப்பட முடியாது.

போருக்கு எதிரான போராட்டம் என்பது முதலாளித்துவ அமைப்புமுறையில் இருக்கும் அதன் வேர்களுக்கு எதிரான போராட்டத்துடன் பிரிக்கவியலாமல் பிணைந்துள்ளது. தொழிலாள வர்க்கத்தின் சோசலிசரீதியான ஒரு தாக்குதல் மட்டுமே இராணுவவாதத்தைத் தடுத்து நிறுத்த முடியும்.

ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் லிபியப் போர்களை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், அங்கிருந்து அனைத்து அந்நியத் துருப்புகளும், குறிப்பாக ஜேர்மனியின் இராணுவம் திரும்பப் பெறப்படுவதற்கும் சோசலிச சமத்துவ கட்சி அழைப்பு விடுகிறது.

எகிப்திலும் துனிசியாவிலும், வெறுமனே பழைய ஆட்சியின் தலைவர்களை மட்டும் தூக்கியெறிகிறதாய் இல்லாமல் ஆட்சியையே தூக்கியெறிந்து தொழிலாள வர்க்கத்தை அதிகாரத்துக்குக் கொண்டுவருகின்ற ஒரு இரண்டாம் புரட்சிக்கு நாங்கள், அறிவுறுத்துகிறோம். பிராந்தியத்தில் இருக்கும் அரபு, யூத மற்றும் பிற தொழிலாளர்கள் முடியாட்சி மற்றும் முதலாளித்துவ ஆட்சியாளர்களைத் தூக்கியெறிவதற்கும் ஏகாதிபத்திய சக்திகளை வெளியேற்றுவதற்கும் ஒன்றுபட்டாக வேண்டும். மத்திய கிழக்கின் சோசலிச அரசுகளின் ஒன்றியம் மட்டுமே இப்பிராந்தியத்தில் ஜனநாயகத்தையும், அமைதியையும் முன்னேற்றத்தையும் கொண்டுவர முடியும்.

ஒரு புதிய தொழிலாளர் கட்சியைக் கட்டியெழுப்புவோம்

ஒருகாலத்தில் சமூக நீதிக்கு வக்காலத்து வாங்குவதாகவும் தொழிலாளர்களின் நலன்களைக் காப்பதாகவும் நாடகமாடிய கட்சிகள் எல்லாம் இன்று நிதிச் சந்தைகளின் காலடியில் அடிபணிந்து விழுந்து கிடக்கின்றன. இதனை சிறப்பாக விளக்குவதற்கு சமூக ஜனநாயகக் கட்சியும் (SPD) இடது கட்சியும் ஒன்றாய்ச் சேர்ந்து 10 வருடங்களாக ஆட்சி செய்து வரும் பேர்லினை பார்க்கவேண்டும். 

சமூக ஜனநாயகக் கட்சி-இடது கட்சி செனட் ஒரு அழிவுகரமான சமூக இலக்கை சாதித்துக் காட்டியுள்ளது. பேர்லினின் உத்தியோகபூர்வ வேலைவாய்ப்பின்மை விகிதம் 13.5 சதவீதம் ஆகும். இது தான் ஜேர்மனியின் கூட்டாட்சி மாநிலங்கள் அனைத்திலும் மிக அதிகமான எண்ணிக்கையாகும். சுமார் அரை மில்லியன் மக்கள் அரசு வழங்கும் மிக சொற்பத் தொகையான Hartz IV வேலைவாய்ப்பின்மை உதவித் தொகையை சார்ந்துள்ளனர். மலிவு ஊதிய வேலைகள் பாரிய அதிகரிப்பைக் கண்டுள்ளன. சமூக வசதிகள் எல்லாம் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன, அத்துடன் நூலகங்களும் பள்ளிகளும் அழிவதற்கோ அல்லது மூடுவதற்கோ விடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நீச்சல் குளங்கள் மற்றும் விளையாட்டு, கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு வசதிகள், அதே போல் பேர்லின் S-Bahn  (நகர்ப்புற டிராம் அமைப்பு) ஆகியவற்றுக்கும் இதே கதி தான். 

பேர்லினின் உயர்வசதி படைத்தவர்களின் நிதிச் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக கடனில் சிக்கித் தவித்த Berlin Banking Society உள் பில்லியன் கணக்கில் இறைத்தது பேர்லின் செனட்டில் உள்ள இந்த சமூக ஜனநாயகக் கட்சி-இடது கட்சிகள் தான். பணக்காரர்களுக்கு காட்டிய இந்தப் பெருந்தன்மையுடன் துணையளிப்பாக மக்கள் மீது இரக்கமற்ற தாக்குதல்களின் ஒரு நீண்ட பட்டியலையும் இது வழங்கியது. அரசு ஊழியர்களின் வருவாயை 12 சதவீதம் வெட்டியது, மூன்றில் ஒரு நகராட்சி வேலையை அழித்தது, பேர்லின் பல்கலைக்கழகங்களுக்கான மானிய உதவிகளைக் குறைத்தது, பள்ளிகளில் கட்டணமின்றிக் கற்கும் விடயங்களுக்கான உரிமையை முடிவுக்குக் கொண்டு வந்தது, குழந்தைகளின் அன்றாடப் பராமரிப்புக் கட்டணங்களை உயர்த்தியது, அத்துடன் ஆசிரியர்களின் வேலை நேரங்களை நீட்டித்தது. பேர்லின் போக்குவரத்து நிறுவனம் மற்றும் பல்கலைக்கழகங்களின் ஊழியர் செலவினத்தை இது வெட்டியது, அத்துடன் ஏறக்குறைய இரண்டில் ஒரு நகராட்சிக் குடியிருப்பை நிதி முதலைகளுக்கு விற்றது, இதன்மூலம் வாடகைகளில் ஒரு நாசகரமான அதிகரிப்பை ஏற்படுத்தியது. 

இந்தச் சிக்கன வெறியாட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் உதவி செய்தன. இவற்றின் நிர்வாகிகள் பெரும்பாலும் சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் இடது கட்சியின் அங்கத்தவர்களாக இருந்தனர்.

சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் இடது கட்சி ஆளும் உயரடுக்குடன் நெருக்கமாக தொடர்பு கொண்டுள்ளதோடு செல்வங்கள் மற்றும் தனியந்தஸ்துகளையும் அவர்களோடு சேர்ந்து பகிர்ந்து கொள்கின்றன. உலகெங்கும் இவற்றுடன் ஒப்பிடத்தக்க கட்சிகள் இதையொத்த அரசியலையே நடத்தி வருகின்றன. வீதி ஆர்ப்பாட்டங்களின் மூலமான நெருக்குதல் மூலம் அவர்களை மாற்றி விடலாம் அல்லது அவற்றை அரசியலின் இன்னொரு தரத்திற்கு தகவமைக்கச் செய்யத் தள்ளலாம் என்பதெல்லாம் சாத்தியமில்லாதது. சாத்தியம் என்று யாரேனும் கூறுவார்களேயானால் அவர்கள் பிரமைகளை மட்டுமே பரப்பிக் கொண்டிருக்கின்றனர். இந்த வகையில் தான் சோசலிச மாற்று (SAV)மற்றும் மார்க்ஸ்21 ஆகிய குழுக்களின் பாத்திரம் அமைந்துள்ளது. அவர்கள் இடது கட்சிக்குள்ளாக வேலை செய்து கொண்டு, அவர்களது வலதுசாரி அரசியலை இடதுசாரி சொற்றொடர்களைக் கொண்டு மூடிமறைத்து வருகின்றனர்.

இந்த அரசியல் சூது வேலையை சோசலிச சமத்துவக் கட்சி முற்றுமுழுதாய் கண்டனம் செய்கிறது. சமூக ஜனநாயகக் கட்சி, இடது கட்சி மற்றும் தொழிற்சங்க அமைப்பில் இருந்து முறித்துக் கொள்ளாமல், சோசலிசக் கொள்கைகளுக்கு போராடுவது ஒருபக்கம் இருக்கட்டும், தொழிலாள வர்க்கத்தின் சமூக சாதனை ஒன்றைக் கூட தக்கவைத்துக் கொள்வதென்பதும் கூட முடியாது.

புரட்சிகர மார்க்சிசத்தின் நீண்ட பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு புதிய கட்சியை நாங்கள் கட்டியெழுப்பி வருகிறோம். சோசலிச சமத்துவக் கட்சி ஸ்ராலினிசத்திற்கு எதிராக சோசலிச சர்வதேசியவாதத்தின் வேலைத்திட்டத்தை பாதுகாப்பதற்கு லியோன் ட்ரொட்ஸ்கியால் 1938ம் ஆண்டில் ஸ்தாபகம் செய்யப்பட்ட நான்காம் அகிலத்தின் ஜேர்மன் பிரிவாகும். இதன் வேர்கள் சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிச சீரழிவிற்கு எதிராக 1923ம் ஆண்டில் இருந்து போராடி வந்த இடது எதிர்ப்பாளர்கள் அணியில் அமைந்துள்ளது.  

நகர நிர்வாக சபையின் கீழ்சபைக்கு நாங்கள் போட்டியிடுவது பேர்லின்வாசிகளுக்கு சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் இடது கட்சியின் அரசியலுக்கான ஒரு மாற்றினை வழங்குகிறது. ஆயினும் இந்தப் பிரச்சாரத்தின் முக்கியத்துவமும் பொருத்தமும் ஜேர்மன் மூலதனத்தையும் கடந்து அப்பால் விரிந்து செல்லக் கூடியதாகும். எங்களது வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்களேயானால், அவர்கள் இரண்டாம் அவையிலான தங்களது இருப்பை ஜேர்மனியிலும் மற்றும் சர்வதேசியரீதியாகவும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்கு தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்குப் பயன்படுத்துவார்கள்.

சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத்திட்டம்

ஒரு சமூகத்தின் சோசலிச மாற்றத்திற்கான முன்நிபந்தனையாக ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் சமூகப் போராட்டங்கள் இருக்கின்றன. எங்களது வேலைத்திட்டம் உழைக்கும் மக்களின் தற்போதைய அவசியங்களின் அடிப்படையில் அமைந்திருக்கிறது, அத்துடன் ஆளும் வர்க்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக அவர்களது உரிமைகள் மற்றும் சாதனைகளைப் பாதுகாக்கிறது, இவ்வாறாக தொழிலாள வர்க்கத்தில் அரசியல் விழிப்புணர்வு அபிவிருத்தியுறுவதற்கு பங்களிப்பு செய்கிறது.

முதலாளித்துவம் சாத்தியம் சாத்தியமில்லை என்று கூறுவதைக் கொண்டு எங்களது கோரிக்கைகளை நாங்கள் வரம்புபடுத்திக் கொள்வதில்லை. நவீன வெகுஜன சமூகத்தின் உண்மையான தேவைகளை எட்டுவதே எங்களது தொடக்கப் புள்ளியாகும். குறுகிய மனத்துடனான சந்தர்ப்பவாதிகள்உடனடி நடைமுறைச் சாத்தியமானவையாககூறுவனவற்றுடன் எங்களது கோரிக்கைகளை மட்டுப்படுத்திக் கொள்ள நாங்கள் மறுக்கிறோம்.   தரப்பட்ட ஒரு சூழ்நிலையில் எது சாதிக்கச் சாத்தியம் என்பது அரசியல் போராட்டத்தின் மூலம் தான் தீர்மானிக்கப்படுகிறது. போராட விருப்பமில்லாதவர்களால் எதையும் சாதிக்க முடியாது.

பிரிக்க முடியாத அடிப்படை உரிமைகளின் ஒரு வேலைத்திட்டத்தை சோசலிச சமத்துவக் கட்சி முன்னெடுக்கிறது:

வேலைக்கான உரிமை

வேலைக்கான உரிமை மிகவும் அடிப்படையான உரிமை ஆகும். கண்ணியமான ஊதியத்துடனான ஒரு நிரந்தர வேலை இல்லையென்றால் மற்ற தேவைகளைப் பூர்த்தி செய்வதென்பது இயலாத காரியம். பில்லியன்கணக்கான யூரோக்களை வங்கிகளைப் பிணையெடுப்பதற்கு ஒதுக்குவதற்குப் பதிலாக, முழுமையான தொடர்ச்சியான ஊதியத்துடன் பொது வேலைகளின் திட்டங்களுக்கு நாங்கள் அழைப்பு விடுகிறோம். அவ்வகையில் செய்வதற்கு ஏராளமாய் உள்ளன. மருத்துவ, செவிலிய மற்றும் கல்வித் துறைகளில் நீண்டகாலமாகவே ஊழியர் பற்றாக்குறை இருந்து வருகிறது. நமது பள்ளிகளும் பெருநகரத்தின் உள்கட்டமைப்பும் பராமரிப்பற்ற ஆபத்தான நிலையில் இருந்துவருகின்றன. 

இருக்கும் வேலைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதும் நமது கோட்பாட்டு அம்சமாகும். அதனை, நிர்வாகத்துடன் நெருங்கிய இணைப்பு கொண்ட அத்துடன் எந்த தீவிரமான போராட்டத்திற்கும் இரகசியமாக குழிபறிக்கத் தயாராயிருக்கின்ற தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிற்சாலை தொழிலாளர் குழுக்ககளிடம் விட முடியாது. நடவடிக்கைக் குழுக்களை ஸ்தாபகம் செய்வதற்கு நாங்கள் ஆலோசனையளிக்கிறோம், அவை தொழிற்சங்கங்களிடம் திரும்பிப் போகாமல், மற்ற தொழிற்சாலைத் தொழிலாளர்களுடன் தொடர்பை உருவாக்கிக் கொள்ளும், மூடப்படும் அபாயத்தில் உள்ள தொழிற்சாலைகளை ஆக்கிரமிப்பு செய்யும், அத்துடன் உற்பத்தியின் மீது ஜனநாயகக் கட்டுப்பாட்டை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்

கண்ணியமான ஊதியத்திற்கும் மற்றும் போதுமான வருவாய்க்குமான உரிமை

பெருகிச் செல்லும் வறுமையானது இளம் தலைமுறைக்கும் சரி மூத்த குடிமக்களுக்கும் சரி பேரழிவான பின்விளைவுகளைக் கொண்டதாய் இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் அடிப்படை மாத வருவாயாக 1500 யூரோக்கள் வழங்க நாங்கள் கோருகிறோம், அதற்கான நிதியாதாரத்தை பணக்காரர்கள் மற்றும் பெரும்பணக்காரர்களுக்கு வரியை அதிகரிப்பதன் மூலம் திரட்டிக் கொள்ள முடியும், அத்துடன் அதிகப்பட்ச வருவாய்களுக்கு ஒரு வரம்பையும் நாங்கள் கோருகிறோம். ஒரு மாதத்திற்கு 20,000 யூரோக்கள் வருவாய் என்பது எவர் ஒருவருக்கும் போதுமானதாக இருக்கும்

வீட்டுவசதிக்கான உரிமை

போதுமான வீட்டுவசதிக்கான உரிமையை நாங்கள் கோருவதோடு மின்சாரம், எரிவாயு மற்றும் தண்ணீரும் பற்றாக்குறை இல்லாமல் வழங்கப்படக் கோருகிறோம்!

ஓய்வுக்கான உரிமை

தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் நேரம் செலவிடவும் அத்துடன் ஓய்வு மற்றும் கலாச்சார செயல்பாடுகளுக்கும் போதுமான நேரத்துக்கான உரிமையை கொண்டுள்ளனர். விடுமுறைகளுக்கான உரிமை, அத்துடன் இலவச குழந்தைப் பராமரிப்பு மற்றும் இளைஞர்களுக்கு பொழுதுபோக்கு மற்றும் கல்வி வசதிகளுக்கான இலவச அணுகல் ஆகியவையும் இதில் அடங்கும்.

கல்விக்கான உரிமை

கல்வியை பெற்றுக்கொள்ளல் பெருமளவில் வருவாயைச் சார்ந்து தான் இருக்கக் கூடிய ஒரு சமூகத்தில் சந்தர்ப்பங்களை சமமாய் வழங்குவது குறித்த எந்தப் பேச்சும் பிதற்றலே. கல்வி என்பது சந்தையின் உடனடித் தேவைகளுக்காய் குறுக்கப்பட்டு விடக் கூடாது. சமூக வாழ்க்கையில் ஜனநாயக ரீதியாய் பங்கேற்பதற்கான ஒரு முக்கியமான அடித்தளமாகும் அது. எனவே சமூக சேவைகளில் வெட்டுக்கள் செய்வதற்கு ஒரு முடிவுகட்டவும், அதற்குப் பதிலாய் அன்றாடபராமரிப்பு மையங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் முதியோர் கல்வி மற்றும் அதேபோல் அருங்காட்சியகங்கள், நூலகங்கள் மற்றும் திரையரங்குகளுக்கென மிகப்பெரும் முதலீடுகள் செய்யப்படவும் சோசலிச சமத்துவக் கட்சி அழைப்புவிடுக்கிறது. மனிதகுலத்தின் திரட்டப்பட்ட அறிவு இணையத்தின் வழியாக எல்லா மக்களுக்கும் இலவசமாய்க் கிடைக்கும்படி செய்ய வேண்டும்

ஒரு சுகாதாரமான மற்றும் பாதுகாப்பான சுற்றுச்சூழலுக்கான உரிமை

ஆரோக்கியமும் உடல்நலமும் ஒரு சுகாதாரமான சுற்றுச்சூழலைச் சார்ந்துள்ளது. ஆயினும் எல்லா சமூக முடிவுகளும் இலாப நோக்கத்தால் உத்தரவிடப்படும் நிலையில் சுற்றுச்சூழல் அழிவதைத் தடுப்பது சாத்தியமில்லாதது.

ஃபுகுஷிமாவிலான அணு உலைப் பேரழிவு அணுசக்தியின் நாசகரமான பின்விளைவுகளைக் காட்டுகிறது. எரிசக்தி நிறுவனங்களைப் பறிமுதல் செய்வதன் மூலம் மட்டுமே அணு சக்தியை விட்டு விட்டு மாற்று எரிசக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வடிவங்களுக்கு மாறுவது சாத்தியமாகும்.

பாகுபாடு காட்டும் குடியேற்றச் சட்டங்களை தடைசெய்தல்!

இந்த உரிமைகள் எல்லா மக்களுக்கும், அவர்களின் மூலம் அல்லது மத நம்பிக்கை என்னவாக இருந்தாலும் சரி, பொருந்தும். அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்த மக்களின் கட்டுப்பாடுகளற்ற ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நாங்கள் போராடுகிறோம். ஒவ்வொரு தொழிலாளரும் தான் விரும்பும் நாட்டில் எந்தக் கெடுபிடிக் கட்டுப்பாடுகளும் இன்றி வாழ்வதற்கும் வேலைசெய்வதற்குமான உரிமையைக் கொண்டிருக்க வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தைக் கட்டியெழுப்புவோம்!

சோசலிச சமத்துவக் கட்சியை ஒரு வெகுஜனக் கட்சியாக கட்டியெழுப்புவது சமூகத்தின் ஒரு சோசலிச மாற்றத்திற்கான மிக முக்கியமான முன்நிபந்தனையாக  அமைந்துள்ளது.

எங்களது இலட்சியங்களுடன் உடன்படும் அனைவரும் செப்டம்பர் 18 அன்று சோசலிச சமத்துவக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும், ஐரோப்பிய தொழிலாளர்கூட்டத்திற்கு வருகை தர வேண்டும், உலக சோசலிச வலைத் தளத்தை தொடர்ந்து வாசித்து வர வேண்டும், “சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று அடித்தளங்களைபடித்து சோசலிச சமத்துவக் கட்சியில் இணைய வேண்டும்.

ஐரோப்பிய தொழிலாளர் கூட்டத்தின் இடம் மற்றும் நேரம்

சனிக்கிழமை, செப்டம்பர் 17, 2011 மாலை 3:30 மணி

Tempodrom (Möckernstraße 10, 10963 Berlin)