சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Indian prime minister visits Bangladesh

இந்திய பிரதம மந்திரியின் பங்களதேஷ் விஜயம்

By Sarath Kumara and Wimal Perera
10 September 2011

use this version to print | Send feedback

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய பிரதம மந்திரி மன்மோகன் சிங்கின் பங்களதேஷ் "வரலாற்று" விஜயம், இந்தோ-பங்களதேஷ் உறவுகளில் எந்தவொரு ஆழமான முன்னேற்றத்தையும் கொண்டு வரவில்லை. கடைசிநேர முயற்சிகள், அந்த விஜயம் முற்றிலுமாக ஒரு இராஜாங்க தோல்வியாக அமைவதிலிருந்து தடுத்தன.

நான்கு இந்திய மாநிலங்களின் முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் ஒரு பெரிய பரிவாரமே அதில் பங்கெடுத்திருந்தது. இதுவே, இந்தியாவின் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசாங்கம் அப்பயணத்திற்குக் கொடுத்திருந்த முக்கியத்துவத்தை அடிக்கோடிடுகிறது. சீனாவுடன் இலங்கை மற்றும் பாகிஸ்தான் நெருங்கிய உறவுகளை வளர்த்துக் கொண்டுள்ளதைப் போல, அதன் கிழக்கிலுள்ள அண்டை நாட்டிலும் அதிகரித்துவரும் சீனாவின் செல்வாக்கிற்கு எதிர்வினையாற்ற இந்தியா முயன்று வருகிறது.

புவியியல்ரீதியாக சிக்கியுள்ள இந்தியாவின் ஏழு வடகிழக்கு மாநிலங்களை பங்களதேஷ் வழியாக அணுகுவதற்கான அனுமதி வழங்கும் முக்கிய விட்டுகொடுப்பைப் பெற முடியுமென இந்தியா நம்பியது. இது எண்ணெய், எரிவாயு, நிலக்கரி உட்பட கனிமவளங்களைப் எடுப்பதற்கு அப்பகுதிகளைத் திறந்துவிட உதவும் என்பதோடு, தென்கிழக்கு ஆசியாவிற்கு அதுவொரு நுழைவாயிலாக அப்பிராந்தியத்தைப் பயன்படுத்தும் புதுடெல்லியின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்குமான ஒரு முக்கிய படியாக விளங்கும்.

ஆனால் தீஸ்டா ஆற்றுநீரைப் பங்கிடும் ஓர் உடன்படிக்கையில் இந்தியா கையொப்பமிட மறுத்ததும், தங்கள் நாட்டின் வழியாக அணுகுவதற்கான அனுமதி வழங்குவதை பங்களதேஷ் தள்ளிப்போட்டது. தீஸ்டா ஆறு, பங்களதேஷிற்குள் நுழைவதற்கு முன்னால் இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்திலிருந்து பாய்ந்தோடி வருகிறது.

பல மாத பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் நீர்-பகிர்மான உடன்படிக்கை எட்டப்பட்ட போதினும், முதலில் உள்நாட்டு சம்மதமில்லாமல் அதுபோன்றவொரு உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திட முடியாது என சிங் டாக்கா புறப்படும் சமயத்தில் அறிவித்திருந்தார்.

முன்மொழியப்பட்ட நீர்-பகிர்வு உடன்படிக்கைக்கு மேற்குவங்காள முதலமைச்சர் பானர்ஜி அவருடைய மறுப்பைத் தெரிவிக்கும் வகையில், சிங்கோடு அவரின் பங்களதேஷ் விஜயத்தில் உடன்செல்லப் போவதில்லையென்ற முடிவுக்கு விடையிறுப்பாக சிங்கின் அந்த அறிவிப்பு வெளியாகி இருந்தது.

இருநாடுகளுக்கும் இடையில் 50:50 சதவீத நீர்-பகிர்மானம் என்பது மேற்கு வங்காள விவசாயிகளின் நலன்களைப் பாதிக்கும் என்று குறிப்பிட்ட பானர்ஜி, நிலுவையிலிருக்கும் உடன்படிக்கை குறித்து தமக்கு முறையான தகவல் தெரிவிக்கப்படவில்லையென்றும் குறிப்பிட்டார்.

பானர்ஜியின் எதிர்ப்பிற்கு மன்மோகன் சிங் அடிபணிந்தார். அது பங்களதேஷ் மீதான செல்வாக்கை ஒரு புதிய மட்டத்திற்கு உயர்த்த நீண்டகாலமாக செய்துவந்த முயற்சியை சேதப்படுத்தியதோடு, காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் பலவீனத்தையும் அது அடிக்கோடிடுகிறது. அரசியலமைப்புரீதியாக இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை முற்றிலுமாக மத்திய அரசாங்கத்தின் வரம்பின்கீழ் உள்ளது. ஆனால் நாடாளுமன்றத்தில் கொண்டுள்ள 19 இடங்களோடு பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாவது மிகப்பெரிய அரசியலமைப்புகூறாக உள்ளது. ஆகவே சிங் மற்றும் காங்கிரஸ் கட்சி தலைமை அதற்கு விரோதமாக முயற்சியெடுக்க முடியாமல் உள்ளது.

அந்த விஜயம் ஓர் ஒட்டுமொத்த தோல்வியாக முடியாமலிருப்பதைத் தடுக்க, ஓர் எல்லை உடன்படிக்கை, இருதரப்பு கூட்டுறவுடனான ஒரு கட்டமைப்பு உடன்படிக்கை, மற்றும் இந்திய சந்தையில் 46 பங்களதேஷ் ஜவுளித்துறை பண்டங்களுக்கு சுங்க வரிவிலக்கு அளிக்கும் உடன்படிக்கைகள் உட்பட, ஏனைய பல திட்டமிட்ட உடன்படிக்கைகளை சிங் செய்து முடித்தார்.

பங்களதேஷ் ஏற்றுமதியில் 80 சதவீதத்திற்கும் மேலாக பங்குவகிக்கும் அந்நாட்டின் ஜவுளித்துறை உற்பத்தியாளர்கள், உலக பொருளாதார நெருக்கடியின் காரணமாக, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா ஆகிய அவர்களின் இரண்டு பெரிய சந்தைகளால் நசுக்கப்பட்டுள்ளனர். ஆகவே டாக்கா அதன் ஜவுளித்துறை உற்பத்தியாளர்களுக்காக இந்திய சந்தையை அணுக தீவிரமாக உள்ளது. இருந்தபோதினும், பங்களதேஷூடனான ஆண்டுக்கு $4 பில்லியன் மொத்த வர்த்தகத்தில் $3 பில்லியன் வர்த்தக உபரியை தற்போது அனுபவித்து வரும் இந்தியா, கூடுதலாக அளிக்கப்படும் இந்த அனுமதியால் கணிசமான அளவிற்கு அதன் வர்த்தக உபரியில் குறையுமென கருதவில்லை. இந்தியாவிற்கான பங்களதேஷ் ஜவுளிகளின் ஏற்றுமதி தடைகளை நீக்கினாலும் கூட, 400 பங்களதேஷ் பண்டங்கள் இந்தியாவின் எதிர்மறை பட்டியலில் (negative list) அல்லது கட்டண பட்டியலில் (tariff list) தங்கியிருக்கும்.

இந்தியாவுடனான எவ்வித பரிவர்த்தனை உடன்படிக்கை ஆலோசனையும் நாட்டைக் காட்டிக்கொடுப்பதாகும் என பங்களதேஷின் முக்கிய எதிர்கட்சியான பங்களதேஷ் தேசிய கட்சி (BNP) நீண்டகாலமாகவே எதிர்த்து வந்துள்ளது.

இந்தியாவுடனான ஓர் நீர்-பகிர்மான உடன்படிக்கை பங்களதேஷ் விவசாயிகளுக்கு நலன் அளிக்குமென குறிப்பிட்டு பங்களதேஷ் பிரதம மந்திரி ஷேக் ஹசீனா இதுபோன்ற எதிர்ப்புகளைச் சரிகட்ட விரும்பி இருந்தார்.

பங்களதேஷ் திட்டங்களிலேயே மிகப் பெரியதாக கருதப்படும் தீஸ்டா பாசன திட்டம், வறண்ட காலமாகையால் அதன் நீர்பாசன அளவுகளைப் பூர்த்தி செய்யவியலாமல், தற்போது போதிய நீர்வரத்து இல்லாமல் உள்ளது. 1998இல் அத்திட்டம் தொடங்கப்பட்ட போது, அதன்மூலம் 111,406 ஹெக்டேர் நிலங்களுக்கு நீர்பாசனம் அளிக்க ஆரம்ப-இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது; ஆனால் தீஸ்டா ஆற்றின் நீர்வரத்து குறைந்துவிட்டதால், இந்த ஆண்டின் நெல் சாகுபடிகாலத்தில் அந்த இலக்கு 42,500 ஹெக்டேராக குறைக்கப்பட்டது. இது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை அதிகப்படுத்தியுள்ளது. “போதிய நீர்பாசனத்திற்கு குறைந்தபட்சம் 3500-4000 கனநொடி நீர்வரத்து தேவையென்கின்ற நிலையில், இந்த ஆண்டு(2011) மார்ச்சில் குறைந்தபட்சமாக 400-500 கனநொடி நீர்வரத்து மட்டுமே இருந்தது,” என பங்களதேஷ் நீர்பாசன அபிவிருத்தி ஆணையம் சமீபத்தில் உத்தியோகப்பூர்வமாக கணக்கிட்டிருந்தது.

நீர்-பகிர்மான உடன்படிக்கை எட்டப்படாதது குறித்து பங்களதேஷ் நாளிதழ்கள் அவற்றின் அதிருப்தியை வெளியிட்டிருந்தன. Daily Star இதழ் புதனன்று அதன் தலையங்கத்தில் குறிப்பிட்டது: “சம்பவங்கள் திரும்பிய விதத்தில், அது சரியாக போகவில்லையென்று உணர்ந்ததால், நாம் பின் வாங்கியுள்ளோம்.”

New Age இதழில் வெளியான ஒரு தலையங்கம் முற்றிலும் மடத்தனமாக இருந்தது. இந்தியாவை நம்ப முடியாது என்று குறிப்பிட்ட அத்தலையங்கம், “நம்நாட்டின் வழியாக பரிவர்த்தனை வசதிகளைக் கோரும் புதுடெல்லியின் கோரிக்கையைத் திருப்திப்படுத்தாமல் இருந்தமைக்காக அரசு பாராட்டிற்குத் தகுதியுடையதாகும். பல வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளதைப் போல, பரிவர்த்தனையானது பங்களதேஷ்ஷிற்குக் கிடைத்திருக்கும் ஒரு துருப்புச்சீட்டாகும். அரசு அதை நாட்டின் அதிகபட்ச நலனுக்குப் பயன்படுத்த வேண்டும்,” என்று குறிப்பிட்டது. மேலும் அத்தலையங்கம் குறிப்பிடுகையில், பதிலுக்கு பதிலாக பங்களதேஷ் அதன் அஷூகன்ஜ்-அக்ஹௌரா இருப்புப்பாதையை இந்தியா பயன்படுத்துவதற்கு அனுமதித்த அதன் முடிவையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வாதிட்டது.

இந்தியாவுடனான ஒரு பரிவர்த்தனை உடன்படிக்கையானது, பங்களதேஷ் அரசிற்கு பணத்தோடு-பிணைந்த ஒரு வரத்தை அளிக்கக்கூடும். ஆசிய வளர்ச்சி வங்கியின் ஓர் ஆய்வை மேற்கோளிட்டுக் காட்டிய பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிட்டது: “தொடக்கத்தில் பங்களதேஷ் $50 மில்லியன் அமெரிக்க டாலரை வேண்டுமானால் ஈட்டலாம். ஆனால் ஐந்து ஆண்டுகளில் உள்கட்டமைப்பைக் கட்டமைத்த பின்னர் அந்த தொகை $500 மில்லியனுக்குச் செல்லக்கூடும். நீண்டகால ஓட்டத்தில் அது $1.0 பில்லியன் வரையிலும் கூட செல்லக்கூடும்.”

எவ்வாறிருந்த போதினும், இத்தகையவொரு நாடுகடந்த பரிவர்த்தனையின் முக்கிய பயனாளியாக இந்தியா இருக்கும். பங்களதேஷ் வழியாக வடகிழக்கு இந்தியாவிற்கு இருப்புப்பாதை, சாலைகள், ஏன் நீர்பாசன இணைப்புகளையும் கூட உருவாக்குவதென்பது, புதுடெல்லியைப் பொறுத்தவரையில், பொருளாதார மற்றும் தேசிய-பாதுகாப்பு காரணங்களுக்காக முன்னுரிமையாக உள்ளது. தற்போது, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள், சிலிகுரி முனை (Siliguri Corridor) அல்லது கோழிக்கழுத்து (Chicken's Neck) எனப்படும் ஒரு குறுகிய நிலப்பகுதியால் (அந்த குறுகிய இடம் வெறும் 21 கிலோமீட்டர் மட்டுமே நிலப்பகுதியைக் கொண்டிருக்கிறது) நாட்டின் ஏனைய பகுதிகளோடு இணைக்கப்பட்டுள்ளது.

தரைவழி போக்குவரத்திற்கு மாற்றாக விமான போக்குவரத்தையே அபிவிருத்தி செய்ய முடியும். வடகிழக்கு பிராந்திய அபிவிருத்திக்கான மத்திய அமைச்சகம் சிறிய விமானநிலையங்கள் மற்றும் சிறிய விமானச்சேவைகள் மூலமாக ஏனைய பிராந்தியங்களுடனான விமான இணைப்பை அதிகரிக்க முன்மொழிந்துள்ளது. ஆனால் அத்திட்டம் அதன் அதிக செலவுகளின் காரணமாக சாத்தியமில்லையென்று நிறுத்தப்பட்டுள்ளது.

பங்களதேஷ் உடனான நெருங்கிய உறவை வளர்ப்பதென்பது இந்திய செல்வாக்கின்கீழ் தெற்காசியாவை எவ்வாறு ஒருங்கிணைத்து வளர்ப்பதென்பதற்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும்; இருக்க வேண்டும் என, சிங் விஜயத்திற்கு சில நாட்களுக்கு முன்னர், பல நாளிதழ்கள் வாதிட்டன. இந்தியாவின் Business Standard அதன் செப்டம்பர் 5ஆம் தேதி தலையங்கத்தில் குறிப்பிட்டதாவது: “பங்களதேஷிற்கு அளிக்கப்பட்ட வர்த்தக சலுகைகள்" சிறிய விலையேயாகும், “இதேபோன்ற உடன்படிக்கைகள்" நேபாளம், பூடான் மற்றும் பாகிஸ்தானுடனும் கூட செய்யப்பட்டால் இறுதியாக வடிவமெடுக்கையில் ஓர்அதிர்வூட்டும் தெற்காசிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கை" விளையும். இதுபோன்று கொடுப்பதும், வாங்குவதும் பேரத்தின் ஒரு பாகமாகவே உள்ளது.”

செவ்வாயன்று, Indian Expressஇல் வெளியான ஒரு தலையங்கம் பின்வருமாறு பானர்ஜியை விமர்சித்தது: “நீர்-பகிர்மானம் குறித்த முக்கிய பிரச்சினைக்காக, அவர் பிரதம மந்திரியுடன் டாக்கா செல்ல மறுத்தமை, ஏமாற்றமளிக்கிறது. ஏனெனில் அதனால் இந்திய நலன் பாதிக்கப்பட்டது. அதற்கடுத்த நாள் வெளியான Times of India இன் தலையங்கம் குறிப்பிட்டது: “இராஜாங்க அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு முக்கியத்துவம் பெற்ற, ஒரு வெளிப்படையான பிளவைத் தவிர்ப்பதற்கு திரிணாமுல் முயன்றிருக்க வேண்டும்," என்றது.

அந்த விஜயம், விரும்பிய உடன்படிக்கை இல்லாமலேயே நிறைவுற்றது என்றபோதினும், இருதரப்பும் தொடரும் அவர்களின் கூட்டுறவை அடிக்கோடிட்டு காட்டி, அந்த நிகழ்வைக் காப்பாற்ற முயன்றன.

வரலாற்றுரீதியில் இந்தியாவுடன் BNP விட அதிக நெருக்கமாக உள்ள ஆளும் அவாமி லீக், 2009இல் அதிகாரத்திற்கு திரும்பியவுடனே இன்னும் நெருக்கமான கூட்டுறவை அபிவிருத்தி செய்ய அது ஆர்வமாக இருப்பதாக புது டெல்லிக்கு சமிக்ஞை காட்டியது. 2009இன் பிற்பகுதியில் அது டாக்காவிற்கு அருகில், அசாம் ஐக்கிய விடுதலை முன்னனியின் தலைவரும், ஸ்தாபகருமான அரபிந்தா ராஜ்கோவாவைக் கைது செய்து, இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தது. அதுவரையில் பங்களதேஷ் உல்ஃபா (ULFA) நடவடிக்கைகளுக்கு மறைமுகமாக உடன்பட்டிருந்தது.

வடகிழக்கு அசாமில் ஒரு தனி அரசை ஸ்தாபிக்க போராடிவரும் உல்ஃபா, வடகிழக்கில் கொண்டு வரப்படும் இந்திய திட்டங்களுக்கு ஒரு தடையாக உள்ளது.

இந்திய கரங்களில் ராஜ்கோவாவை ஒப்படைத்தமைக்கு விடையிறுப்பாக, பங்களதேஷின் அபிவிருத்தி திட்டங்களுக்கு உதவியாக புதுடெல்லி $1 பில்லியன் கடனுதவியை நீட்டிப்பதாக சிங் அறிவித்தார். அவ்வாறு செய்ததன் மூலமாக, பங்களதேஷ் அதன் உள்கட்டமைப்பு அபிருத்திக்காக சீனாவைச் சார்ந்திருப்பதை இந்தியா குறைக்க விரும்பியது.