சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: Jaffna university students hold protest against military attack    

இலங்கை: யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இராணுவ தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்

M. Vasanthan
18 September 2011

use this version to print | Send feedback

கடந்த பலவாரமாக குண்டர்களினால் மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்ட  பயத்தையும் பீதியையும் பயன்படுத்தி இராணுவம் நடத்திய தாக்குதலுக்கு எதிராக, வடக்கில் யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் கல்வி சாரா ஊழியர்களும் செப்டெம்பர் 7 அன்று எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தினர்.  பொதுவாக கிறீஸ் பூதங்கள் என்று அழைக்கப்படுகின்ற இத்தகைய குண்டர்களின் பின்னால் இராணுவமும் பொலிசாரும் இருப்பதாக மக்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். 

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடந்த இந்த மறியல் போராட்டத்தில 500 க்கும் மேற்பட்ட மக்கள் பங்கு பற்றினார். இராணுவத் தாக்குதல்கள் மற்றும் பயமுறுத்தல்களை கண்டித்து சுலோக அட்டைகளை அவர்கள் தாங்கியிருந்தார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ், முஸ்லீம் மற்றும் சிங்கள மாணவர்களும் பங்கு பற்றியதோடு, வவுனியா பல்கலைக்கழகத்தில் இருந்து வந்த மாணவர் பிரதிநிதிகளும் பங்குபற்றியிருந்தார்கள். மேலும் நாடு பூராகவும் சம்பள மீளாய்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களும் பங்குபற்றினார்கள்.

ஆறு பல்கலைக்கழக  மாணவர்கள் இராணுவத்தினரால் தாக்கப்பட்டதே இந்த எதிர்புக்கான உடனடிக் காரணமாகும். இனந்தெரியாதோர் பல்கலைக்கழக மாணவிகளின் விடுதிப் பகுதியில் இருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, அவர்களை பாதுகாக்க சென்ற ஆறு மாணவர்களே துவிச்சக்கர வண்டியில் வந்த இராணுவத்தினரால் தாக்கப்பட்டார்கள். இத்தாக்குதலால் மாணவர்கள் சீற்றமடைந்தனர்.

எதிர்ப்புக் கூட்டத்தில் பேசிய மாணவர் ஒருவர் கூறியதாவது: ‘’இந்த தாக்குதல் பிரதானமாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள வாழுகின்ற பிரதேசங்களிலேயே நடைபெறுகின்றன. யுத்தம் முடிவுற்ற போதும் துன்புறுகத்தல்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. அரசாங்கம் இந்த மர்ம மனிதர்களின் தாக்குதல்களை நிறுத்துவதற்கு எந்த நடைவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் அதிலிருந்து தங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும் மக்களை பயங்கரவாதிகள் என சித்தரிக்கிறார்கள். எங்களைப் பாதுகாப்பதற்கு எங்களுக்கு உரிமையில்லையா?”        

அங்கு உரையாற்றியவர்கள், ஆகஸ்ட் 22 மற்றும் 31ம் திகதிகளில் யாப்பாணம் நாவாந்துறை மற்றும் கொக்குவில் பிரதேசங்களில், தமது கிராமங்களுக்குள் நுழைந்த ஆத்திரமூட்டல்காரர்களை விரட்டிய போது, மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை சுட்டிக்காட்டினர். அந்த மர்ம நபர்கள் இராணுவ முகாங்களை நோக்கி ஓடுவதை மக்கள் கண்டிருந்தனர். மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்த வேளை, இராணுவமும் பொலிசும் அவர்களை அடித்து கைது செய்தனர். கடந்த வாரங்களில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊர்காவற்துறை, நாவலி, சித்தங்கேனி போன்ற இடங்களிலும் மக்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது.

ஊர்காவற்துறையில் உள்ள பருத்தியடைப்பு கிராமத்தில், இரண்டு சந்தேக நபர்களை மக்கள் அணுகியபோது, அவர்கள் ஒருவரின் கழுத்தை நோக்கி கூரிய ஆயுதம் ஒன்றை வீசினர். தாக்கப்பட்ட கிரிஸ்ரின் பீற்றர் தனது தோளில் காயத்துடன் மயிரிழையில் உயிர் தப்பினார். பொலிசார் பீற்றரிடம் மூன்று தடவை முறைப்பாட்டை எடுத்த போதும் சந்தேக நபர்களை இதுவரை கைது செய்யவில்லை.

கடந்த மாதத்தில் இதேமாதிரியான சம்பவங்கள் கிழக்கு மாகாணத்தில் உள்ள  திருகோணமலை,  கிண்ணியா, மட்டக்களப்பு, பொத்துவில் ஆகிய பிரதேசங்களில்  நடைபெற்றன. இத்தகைய சம்பவங்கள் பற்றி குறிப்பிடும்போது பாதுகாப்பு செயளாளர் கோட்டபாய இராஜபக்ஷ, இராணுவ முகாம்களை, பொலிசாரை யார் தாக்குகிறார்களோ அவர்கள் பயங்கரவாதிகளாகவே கருதப்படுவார்கள் என்றார். யாழ்ப்பாண இராணுவத் தளபதி மஹிந்த ஹதுறுசிங்க, ‘’கிறீஸ் பேய் கதைகள் பொய்யானவை. யாரும் சட்டத்தை தமது கையில் எடுத்து பாதுகாப்பு படைகளைத் தாக்க அணுமதிக்க மாட்டோம் எனக் கூறினார். பயமுறுத்தி தாக்குதல் தொடுத்துவரும் குண்டர்களை விசாரணை செய்வதற்கு பதிலாக, இராணுவத்தினர் அவர்களுக்கு உதவுகின்றார்கள் என்ற மக்களின்  எதிர்பையே அவர்கள் இருவரும் குறிப்பிடுகின்றார்கள்.     

மக்கள் மத்தியில் எதிர்ப்பு வளர்ச்சியடைந்த போது, தமிழ் முதலாளித்துவ கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இந்த மர்ம தாக்குதலை நிறுத்துவதற்கு நடைவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திற்கு  வேண்டுகோள் விடுப்பதற்காக  சில பொது அமைப்புகளுடன் இணைந்து அகிம்சை வழியிலான உண்ணா விரத பிரச்சாரத்தை செப்டெம்பர் 10ல் ஆரம்பிப்பதற்கு அழைப்பு விடுத்தது. மக்கள் மத்தியில் ஏற்பட்ட கோபத்தை தணிப்பதற்கே தமிழ் கூட்டமைப்பு இந்த உண்ணாவிரதத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது..

அதே நேரத்தில் ஜனாதிபதி இராஜபக்ஷவை சந்தித்த தமிழ் கூட்டமைப்பு, மக்களை சாந்தப்படுத்த உதவுமாறு கேட்டுக்கொண்டது. இராஜபக்ஷவின் போலியான உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட பின்னர் தமிழ் கூட்டமைப்பு உடனடியாக உண்ணா விரத்தத்தை கைவிட்டது. பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ. சுமந்திரன் கூறுகையில், இராஜபக்ஷ நவாந்துறை மக்களுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு பிறப்பிப்பதாகவும், கிறீஸ் பேய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் உடன்பட்டுள்ளார், என ஊடகங்களுக்குத் தெரிவித்தார். உண்ணா விரத பிரச்சாரம் ரத்துச் செய்யப்பட்டதை நியாப்படுத்திய அவர், “நாம் அராசங்கத்துக்கு கொஞ்சம் கால அவகாசம் கொடுக்க வேண்டும்,” என்றார்.    

கூட்டமைப்பின் நடவடிக்கைகள் தமிழ் மக்களின் நலன்கள் மீதான அக்கறையினால் அன்றி, அரசாங்கத்துடன் உறவை ஏற்படுத்திக்கொள்வதை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்சி தமிழ் முதலாளித்துவத்திற்கு சில சலுகைகளை பெறுவதற்கு அரசாங்கத்துடன் உறவை ஏற்படுத்த விரும்புகின்றது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் கூட்டத்தில் உரையாற்றியவர்கள், தொடரும் துன்புறுத்தல்கள் சம்பந்தமாக இராணுவத்தையும் அரசாங்கத்தையும் கண்டனம் செய்த அதே வேளை, தமிழ் கூட்டமைப்பு மீதும் அதிருப்தி வெளியிட்டனர். சர்வதேச சமூகம் என சொல்லப்படுவது, இராணுவம் மக்கள் மீது நடத்தும் தாக்குதல்கள் சம்பந்தமாக கவனம் எடுக்க வேண்டும் என ஒருவர் தெரிவித்தார்.

இது ஒரு பொய்யான எதிர்பார்ப்பாகும். அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரதான ஐரோப்பிய நாடுகள் உள்ளடங்கிய சர்வதேச சக்திகள், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்திற்கு முழுமையான ஆதரவு கொடுத்தன. யுத்தத்தின் இறுத்திக் கட்டத்திலும் அதற்கு பின்னரும் மனித உரிமைகள் பற்றி அவர்கள் பேசியது, தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதான அக்கறையினால் அல்ல. அவர்கள் தமது மூலோபாய நலனிலேயே அக்கறை கொண்டுள்ளனர். இந்த சக்திகள், தமது மூலோபாய போட்டியாளரான சீனாவுடன் கொண்டுள்ள உறவிலிருந்து விலகுமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காகவே கொழும்பின் யுத்தக் குற்றங்கள் உட்பட மனித உரிமை மீறல்களை உபயோகிக்கின்றன.

தமிழ் தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதற்காக, வடக்கு மற்றும் கிழக்கில் தனியான முதலாளித்துவ அரசை அமைப்பதற்காக பெரும் வல்லரசுகளின் ஆதரவை பெற முயற்சிக்கும் வங்குரோத்து முன்னோக்கையே புலிகள் அடிப்படையாகக் கொண்டிருந்தனர். புலிகள் தோல்வியடையும் வரை இந்த நிலைப்பாட்டுக்கு தமிழ் கூட்டமைப்பு ஆதரவு கொடுத்தது. அது இப்பொழுது, முதலாளித்துவ வர்க்கத்துக்கு சிறப்புரிமைகளை கொடுக்கும் ஒரு சமரசத்தை எட்டுவதற்காக இந்த சக்திகளின் உதவியைப் பெற முயற்சிக்கின்றது.

அரசாங்கமும் இராணுவமும், இராணுவ அதிகாரத்தை பலப்படுத்துவதற்காகவும் பீதியையும் அச்சத்தையும் உருவாக்குவதற்காகவும் இத்தகைய குண்டர்களின் ஆத்திரமூட்டல்களை உபயோகிக்கின்றன அல்லது ஆதரவளிக்கின்றன. வடக்குக் கிழக்கிலிருந்து, அரசாங்க பாதுகாப்பு படைகள் அனைத்தையும் நிபந்தனையின்றி திருப்பியழைத்து இராணுவ ஆக்கிரமிப்புக்கு முடிவுகட்டுவதும், உயர் பாதுகாப்பு வலையங்களை நீக்குவதும், புலிகள் அல்லது பயங்கரவாத சந்தேக நபர்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள எல்லா அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வதும், தமிழ் மற்றும் முஸ்லீம் உட்பட சிறுபான்மை மக்களுக்கு எதிரான பாரபட்சத்துக்கு முடிவு கட்டுவதும் அவசர கோரிக்கைகளாகும்.