சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : லிபியா

NATO steps up bombing, killing hundreds, as Libyan “rebel” offensive stalls

லிபிய “எழுச்சியாளர்” தாக்குதல் மந்தகதியடைகையில், நேட்டோ குண்டு வீசுதலை அதிகரித்து நூற்றுக்கணக்கானவர்களை கொல்கிறது

By Alex Lantier
19 September 2011

use this version to print | Send feedback

வார இறுதியில் லிபியா நெடுகிலும் நகரங்கள் மீது குண்டுத் தாக்குதல்களை நேட்டோ நடத்தியது; மோதல்கள், சிர்ட்டே மற்றும் பனி வலிட்டில் முயம்மர் கடாபிக்கு விசுவாசமாக உள்ள துருப்புக்களுக்கும் நேட்டோ ஆதரவுடைய தேசிய மாற்றுக்காலக் குழுவின் (NTC)  படைகளுக்கும் இடையே தொடர்ந்தன.

நேட்டோ குண்டுவீச்சினால் பெருகிய இறப்புக்கள் நேர்ந்துள்ளதாகத் தகவல்கள் பெருகிய முறையில் தெரிவிக்கின்றன. நேற்று நேட்டோ செய்தித் தொடர்பாளர் சனிக்கிழமையன்று நேட்டோப் படைகள் சிர்ட்டேயில் 11 இலக்குகளையும் அருகே உள்ள அல்-ஜுப்ரா பாலைவனச் சோலையில் 11 இலக்குகளையும், இன்னும் தெற்கே சபா நகரத்தில் 3 இலக்குகளையும் தாக்கியதாகத் தெரிவித்தார்.

கடாபி ஆட்சியின் அதிகாரி ஒருவரான மௌசா இப்ரஹிம் நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டார்; அதில் சிர்ட்டே நகர முக்கிய ஹோட்டல் மற்றும் அருகே இருந்த குடியிருப்பு இல்லத் தொகுப்பில் நேட்டோ விமானத் தாக்குதலை அடுத்து  354 பேர் கொல்ல்பட்டனர், 700 பேர் காயமுற்றனர் என்று கூறப்பட்டுள்ளது. இன்னும் 89 பேர் காணாமற் போயுள்ளனர் என்றும் அது கூறியுள்ளது.

கடந்த 17 நாட்களில், சிர்ட்டே நகரத்தில் 2,000 பேருக்கும் மேலானவர்கள் நேட்டோ வான் தாக்குதல்களால் கொல்லப்பட்டனர் என்று அவர் சேர்த்துக் கொண்டார்.

நேட்டோ செய்தித் தொடர்பாளர் கேர்ணல் ரோலண்ட் லவோய் லிபியக் குடிமக்கள் இறப்பு பற்றிய அறிக்கைகளை ஒதுக்கித் தள்ளும் வகையில், “அடிக்கடி பல நேரமும் இவை ஆதாரமற்றவை, முடிவானவை அல்ல என்றுதான் வெளிப்பட்டுள்ளது என்றார்.

செப்டம்பர் 8ம் திகதி வெளியிடப்பட்ட NTC மதிப்பீடுகளின்படி லிபியப் போரில் 30,000 பேர்கள் இறந்தும் 50,000 பேர்கள் காயங்களிற்கும் உள்ளாகியுள்ளனர். லிபிய நகரங்களுக்கு எதிரான நேட்டோவின் மாபெரும் வான்தாக்குதல், தவிர்க்க முடியாமல் குடிமக்கள் இறப்பை ஏற்படுத்துகின்றன, NTC ஐ கடாபி விசுவாசப் படைகளைத் தோற்கடிக்க உதவுகின்றன, அவை போதுமான கட்டுப்பாடும் இராணுவப் பயிற்சியும் பெற்றிராவிட்டாலும், என்று கூறப்படுகிறது.

பனி வலிட்டிற்கு எதிரான நேட்டோ நடவடிக்கைகள் தெற்கு லிபியாவில் கடாபி ஆதரவுடைய பகுதிகளை, சிர்ட்டேயில் இருந்து கடாபி பிறந்த இடம் வரை வெட்டிவிடும் நோக்கத்தைக் கொண்டுள்ளன என்பது தெளிவு; இது வடகிழக்கே  பெங்காசியை சுற்றியுள்ள NTC கட்டுப்பாட்டின் கீழுள்ள பகுதிகளை வடமேற்கேயுள்ள திரிப்போலிப் பகுதிகளிடமிருந்து பிரிப்பது ஆகும். கடந்த மாதம் NTC படைகளின் தாக்குதலை ஒட்டி திரிப்போலி வீழ்ச்சியுற்றது; நகரத்தின் மின்வசதி, நீர் வசதிகள் துண்டிக்கப்பட்டன; NTC சார்புடைய பழங்குடி மக்கள் நௌபுசா மலைப்பகுதியில் இருந்து வந்து நகரத்தைத் தாக்கினர்.

 

 

NTC படைகள், வியாழன் மற்றும் சனிக்கிழமையன்று சிர்ட்டேக்கு எதிரான தாக்குதல்களை நடத்தி, நகரத்திற்குள் ஒரு மைல்தூரம் உட்புகுந்துவிட்டதாகவும் கூறியுள்ளன. ஆனால் அவை ராக்கெட் மற்றும் வெடிகுண்டுத் தாக்குதலால் விரட்டியடிக்கப்பட்டன; இவை 75,000 மக்களைக் கொண்ட நகரத்தின் உயர் கட்டிடங்கள், அடுக்கு வீட்டு வளாகங்களில் இருந்து வந்தன என்று கூறப்படுகிறது.

நேட்டோ குண்டுத் தாக்குதல்கள் மற்றும் நேட்டோ சோதனைத் தாக்குதல்கள் நகரத்தைப் போர்ப் பகுதியாக மாற்றுகையில் குடிமக்கள் சிர்ட்டேயிலிருந்து தப்பியோட முயன்றனர். நகரத்தை விட்டு நீங்கிக் கொண்டிருந்த ஒரு வணிகரான அப்துல் அசிஸ், அசோசியேட்டட் பிரஸ்ஸிடம், “நீண்ட காலமாக சிர்ட்டேயில் மின்வசதி இல்லை. சில நேரங்களில் தண்ணீர் இருக்கும், சில நேரம் இருக்காது. தற்போதைக்கு உணவு உள்ளது, ஆனால் மருந்துகள் இல்லை சிர்ட்டேயில் வசிப்பது ஆபத்தானது. நேற்று என் வீட்டருகில் அவர்கள் போர் நடத்திக் கொண்டிருந்தனர். என்னுடைய குழந்தைகள் பெரிதும் பயந்துவிட்டன, எனவேதான் நான் நகரை விட்டுச் செல்கிறேன் என்றார்.

NTC அறிக்கை ஒன்று சிர்ட்டேயை சுற்றி நடந்த மோதல்களில், NTC 24 பேரை இழந்துவிட்டது, 54 பேர் காயமுற்றனர் என்று அறிவித்துள்ளது. NTC பிரிகேட் தளபதி ஒருவரான சலேப் அபு ஷாலா, அல்-ஜசீராவிடம் நிலைமைபரிதாபத்திற்குரியது என்றார், “மத்திய கட்டுப்பாடு இல்லை, நாங்கள் பின்வாங்கி, சீர் செய்துகொண்டு மீண்டும் மூன்று முன்னணிகளில் பழையபடி நுழைவோம் என்றார்.

ஞாயிறன்று NTC படைகள் ஒழுங்கு குலைந்து பனி வலிட்டில் இருந்து நகரத்திற்குள் நுழைய முயன்றபோது பெரும் குண்டுத் தாக்குதல்கள், ஸ்னைபர் தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாமல் பின்வாங்கின. கடாபி ஆதரவுப் படைகள் நகரத்திற்கு அருகே உள்ள முக்கியமான உயர்ந்த மலைப் பகுதிகளின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதால் NTC யினால் முன்னேற முடியவில்லை.

முன்னாள் லிபிய விமானப் படை விமானியும் இப்பொழுது NTC யில் ஒரு தளபதியாகவும் இருக்கும் சப்ரி சலேம்ஒழுங்கான அமைப்பு இல்லாதது”, மற்றும் பல NTC பிரிவுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாதது ஆகியவை குறித்துத் தாக்கிப் பேசினார். “நாங்கள் சென்றோம், எவரும் எங்களை எதுவும் கேட்கவில்லை. NTC படைகள் ஏற்கனவே நகரத்தில் ஏராளமாக உள்ளனர் என்று கேள்விப்பட்டு நாங்கள் பனி வலிட்டிற்குள் நுழைந்தோம். ஆனால் எவருமே இல்லை. அதன்பின் நாங்கள் கடாபிப் படைகளின் தீவிர தாக்குதலுக்கு உட்பட்டுப் பின்வாங்கினோம்.”

நேட்டோ போர் விமானங்கள் பனி வலிட் மீது சுற்றிக் கொண்டிருந்தன; ஆனால் NTC படைகள் அவை நகரத்தின் மீது குண்டு போடவில்லை என்று கூறின.

NTC யின் மோசமான செயற்பாடு குறித்து நேட்டோ சக்திகளிடையே உயரும் கவலைகளும் பொறுமை இழப்பும் உள்ளன. ஆரம்பத்தில் இருந்து லிபியா மீதான போருக்குப் பெரும் ஆதரவு கொடுத்துவரும் நியூ யோர்க் டைம்ஸ்  NTC யின் தளக் கட்டுப்பாட்டு அதிகாரிகளை தவறான இராணுவ வெற்றி அறிவிப்புக்களைக் கொடுப்பது பற்றித் தாக்கியுள்ளது. “தங்கள் எஜமானர்கள் தூக்கி எறியும் கற்பனைக் கோட்டைகளை நாய்கள் மீட்பது போல், தொலைக்காட்சி படமெடுக்கும் குழுக்களும் புகைப்படக்காரர்களும் எதிரிக் கோட்டைகள் வீழ்ச்சி அடையும் முன்னணிகளைப் படம் எடுக்க விரைகின்றனர், ஆனால் தாக்குபவர்கள் நகருக்கு வெளியே இருப்பதைத்தான் காண்கின்றனர். அங்குகூட இருட்டிய பின்னர் தங்கும் திட்டத்தைக் கொண்டிருக்கவில்லை.”

லிபியாவில் நடைபெறும் இராணுவ நடவடிக்கைகள் கடாபி ஆட்சிக்கு எதிராக NTC யை ஆதரிப்பதற்கு NATO தலையீடு செய்வதற்கு நியாயப்படுத்திய பொய்களை அம்பலப்படுத்துகின்றன. மார்ச் மாதம் கடாபி எதிர்ப்பாளர்களை பெங்காசியில் பாதுகாத்தல் என்னும் மறைப்பின் கீழ் தொடக்கப்பட்ட இத்தாக்குதல்குடிமக்கள் கொல்லப்படுவது என்பது பொறுத்துக் கொள்ள முடியாதது எனக் கூறப்பட்டதுஇப்பொழுது பெரும் மக்கள் கொலைகளை ஏற்படுத்தியுள்ள வெற்றிக்கான போராக அப்பட்டமாக மாறிவிட்டது. வலது சாரி NTC சக்திகளுடன் இணைந்து செயல்படும் நேட்டோ, திரிப்போலியில் வளைந்து கொடுக்கும் கைப்பாவை ஆட்சியை நிறுவ முயல்கிறது; அந்த ஆட்சி லிபியாவின் பெரும் எண்ணெய் இருப்புக்களை மேற்கத்தைய நிறுவனங்களுக்கு ஒப்படைக்கும் என்றும் எதிர்பார்க்கிறது.

வெள்ளியன்று ஐ.நா. பாதுகாப்புச் சபை ஒருமனதாக லிபியாவின் மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப்படுவதற்கு வாக்களித்தது. இதையொட்டி NTC தேவையான ஆயுதங்களை இறக்குமதி செய்துகொள்ளலாம், லிபிய எண்ணெய் நிறுவனங்களின் முடக்கப்பட்ட சொத்துக்களை மீண்டும் பெறலாம்; இதையொட்டி தங்கள் செயல்களை அவை தொடரமுடியும்.

NTC யின் பல பிரிவுகள் இப்பொழுது தங்கள் மேற்கத்தைய ஆதரவு கொண்ட இராணுவ நடவடிக்கையினால் கிடைத்துள்ள நிதிய, அரசியல் ஆதாயங்களை எப்படிப் பிரித்துக் கொள்ளலாம் என்ற பூசலில் உள்ளன. புவியியல் அடிப்படையில் அவை பிரிக்கப்படும் (பெங்காசி, திரிப்போலி தளங்களைக் கொண்டுள்ள இருப்புக்கள் அடிப்படையில்); இதைத்தவிர அரசியல் வேறுபாடும் கருத்திற்கொள்ளப்படும். NTC யில் பழங்குடிச் சக்திகள், பல இஸ்லாமிய அடிப்படைவாதப் பிரிவுகள் அல் கெய்தாவுடன் தொடர்புடைய லிபிய இஸ்லாமியவாதப் போராளிக் குழு (LIFG) மற்றும் முன்னாள் கடாபி ஆட்சி அதிகாரிகள் ஆகியோர் அடங்கியுள்ளனர்.

நேற்று NTC யின் தலைவர் மஹ்மத் ஜிப்ரில் திட்டமிடப்பட்டிருந்த லிபிய அரசாங்கத்திற்கான காபினெட் கூட்டம் ஒன்றை இரத்து செய்தார்; “ஒரு புதிய இடைக்கால அரசாங்கம் அமைப்பது பற்றிய அறிவிப்பு காலவரையறையற்று ஒத்திப்போடப்பட்டுள்ளது; ஆலோசனைகள் இறுதியாகும் வரை இந்நிலை நீடிக்கும் என்றார். இன்னும் பெண்கள், இளைஞர்கள் ஆகியோர் துணை மந்திரிகள், லிபிய அமைச்சரகங்களின் இயக்குனர் தலைவர்களாக பதவிகளை நிரப்பக் கேட்டுக் கொள்ளப்படுவர் என்றும் அவர் கூறினார்.

பாதுகாப்பு அமைச்சரகம் ஒசாமா அல்-ஜுவிலிக்கும், எண்ணெய்த்துறை அப்தெல் ரஹ்மான் பின் யெசாவிற்கும் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முந்தைய அறிவிப்பான அமெரிக்காவில் பயின்ற பொருளாதார வல்லுனர் அல் தர்ஹுனி எண்ணெய் துறைக்குத் தலைமை வகிப்பார் என்பதில் இருந்து மாற்றத்தைக் குறிக்கிறது. மாறாக அவர் பொருளாதார விவகாரங்களின் துணைத்தலைவர் என்ற பொறுப்பை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது NTC தலைமை பற்றி கடந்த செவ்வாயன்று அதன் உறுப்பினர்களில் ஒருவர், இஸ்லாமியவாத தலைவர் இஸ்ரெயில் அல்-சலாபி கடுமையாகக் கண்டித்ததை அடுத்து வந்துள்ளது; அவர் முன்னாள் LIFG உறுப்பினரும், திரிப்போலி இராணுவப் பிரபு அப்தெல் ஹகிம் பெல்ஹஜ்ஜின் நண்பரும் ஆவார். NTC யின் ஜிப்ரில் பிரிவு லிபியாவைஒரு புதிய கொடுங்கோன்மை, சர்வாதிகாரத்திற்கு இட்டுச் செல்லுகிறது, “இது கடாபி ஆட்சியை விட மோசமாகும் என்று கூறினார்.

அவர்களை இவைஅதிதீவிரவாத மதச் சார்பற்றவர்கள் என்று தாக்கினார்; அவர்கள்வாழ்க்கை முழுவதும் நலன்தரக்கூடிய உடன்பாடுகள் மூலம் தங்களைச் செல்வந்தர்களாக ஆக்கிக் கொள்ள முயல்கின்றனர் என்றார். கடாபி ஆட்சியின் முன்னாள் அதிகாரி, லிபிய அரச சொத்துக்கள் தனியார்மயம் ஆக்கப்படுவதற்கு ஆதரவு கொடுத்தவரான ஜிப்ரில் பெங்காசியின் முக்கியத் தளத்தில் இருந்து NTC ஐ வழிநடத்திய பின்னர் திரிப்போலிக்கு வெள்ளியன்று வந்தார்.