சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

Report warns of deepening global jobs crisis

உலக வேலைகள் நெருக்கடி தீவிரமாகும் என்று அறிக்கை எச்சரிக்கிறது

By Kate Randall 
28 September 2011

use this version to print | Send feedback

வேரூன்றிவிட்ட உலக வேலைகள் நெருக்கடியில் ஆபத்துக்கள் பெருகுகின்றன என்று சர்வதேசத் தொழிலாளார்துறை அலுவலகம் (ILO) மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அலுவலகங்களின் (OECD) புதிய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

பாரிசில் 20 மிகப் பெரிய பொருளாதார சக்திகளான G20 ன் தொழில் துறை மந்திரிகளின் இரு-நாட்கள் கூட்டத்திற்கு முன்னதாக வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை, குழுவின் முன்னேற்றம் அடைந்துள்ள மற்றும் எழுச்சி பெரும் நாடுகளின் பெருகிய வேலையின்மைத் தன்மை பற்றியும் பொருளாதார நடவடிக்கைகள் குறைவது பற்றியும் எச்சரிக்கிறது. G20 பொருளாதாரங்களில்மீட்பு கிட்டத்தட்ட தேக்க நிலைக்கு வந்துவிட்டது போல்தோன்றுகிறது என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது.

எண்ணிக்கைகளில் நாம் காண்பது குறித்து மிகவும் கவலைப் படுகிறோம் என்று OECD இன் வேலைப் பகுப்பாய்வு பிரிவின் தலைவர் Stefani Scarpetta செய்தியாளர்களின் கூட்டத்தில் கூறினார். “வேலைகள் மற்றும் சமூகக் கொள்கைகள் தற்போதைய நெருக்கடி குறித்த கொள்கையின் மையத்தில் இருக்க வேண்டும் என்றார் அவர்.

ILO/OECD அறிக்கை சமீபத்திய G20 வேலை வளர்ச்சி 2008ல் தொடங்கிய மந்தநிலையினால் தோற்றுவிக்கப்பட்ட 20 மில்லியன் வேலைகள் இழப்பை ஈடு செய்தவதற்கு போதுமானதாக இல்லை என்று குறிப்பிடுகிறது. “2012 முடியும் வரை, வேலைகள் 0.8 சதவிகிதத்தில் வளர்ச்சி ஏற்படவேண்டும், வேலையில் குறைப்புக்கள் என்பது இன்னும் 20 மில்லியன் அதிகரித்து G20 நாடுகளில் மட்டும் 40 மில்லியன் என ஆகிவிடும் என்று அறிக்கை எச்சரித்துள்ளது.

பெருகும் வேலைகள் நெருக்கடி, நுகர்வோர் செலவுகளைக் குறைத்து, சமூக அழுத்தங்களை அதிகரிக்கும் என்பதால் பொருளாதாரத்திற்கு அழுத்தம் கொடுக்கும் என்று அறிக்கை மேலும் எச்சரிக்கிறது. “இது வாடிக்கையாக நடக்கும் செயல் அல்ல என்றார் Scarpetta. “சமூக பதட்டங்கள் அதிகரிக்கக்கூடிய ஒரு நிலைமையே எம்முன்னால் உள்ளது. ஒரு நாட்டில் ஏற்படும் சமூக பதட்டங்கள் மற்ற நாடுகளுக்கும் தாக்கங்களை கொண்டுள்ளது என்னும் பிரச்சினையை G20 உணர வேண்டும்.”

பொருளாதாரக் கரைப்பிற்கு மூன்று ஆண்டுகளுக்குப் பின், வேலையின்மை விகிதம் G20 நாடுகள் முழுவதிலும் அதிகமாக உள்ளன; பெரும்பாலானவற்றில் விகிதங்கள் ஒரு சதவிகிதப் புள்ளியின் ஒரு பகுதிதான் முன்னேற்றம் அல்லது முன்னேற்றம் காட்டத் தொடங்கிய நிலை உள்ளது. மந்தநிலை தொடங்கியதில் இருந்தே, வேலையின்மை விகிதம் ஸ்பெயின், பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் 50%க்கும் அதிகமாகி விட்டது.

G20 நாடுகளில் தற்பொழுது உத்தியோகபூர்வ வேலையின்மை விகிதத்தில் தென்னாபிரிக்காதான் உயர்ந்துள்ளது; அதிர்ச்சிதரும் 25.7% என்பது அங்கு காணப்படுகிறது; அதற்கு நெருக்கமாக பின் தொடர்ந்த நிலையில் ஸ்பெயின் 21.2% வேலையின்மை விகிதத்தை கொண்டுள்ளது. இந்த அறிக்கை ஆகஸ்ட் 2011ல் அமெரிக்காவில் வேலையின்மை விகிதம் 9.1% என்று கூறுகிறது; இது கடந்த ஆண்டு இருந்த நிலையில் இருந்து 0.5%தான் குறைவாகும். இம்மூன்று நாடுகளிலும் வேலை நெருக்கடிகள் குறிப்பாக மொத்த உள்நாட்டு உற்பத்தி GDP பெருமளவு சரிந்துள்ளதுடன் இணைந்துள்ளன.

G20 நாடுகளிடையே உலக நெருக்கடியால் பொருளாதாரத்துறைகள் பலவகையிலும் மாறுபட்டுள்ள நிலையில், கட்டமைப்புத் துறையில் வேலை என்பது மிகக் கடுமையான பாதிப்பிற்குட்பட்டுள்ளது. இதைத்தவிர, பெரும்பாலான முன்னேற்றம் அடைந்துள்ள பொருளாதாரங்கள் உற்பத்தித் தொழில் வேலைகளில் பெரும் இழப்புக்களைக் கண்டுள்ளன. கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் முழுவதுமே உற்பத்தித்துறையில் 5% அல்லது அதற்கும் மேல் சரிவுகளைக் கண்டுள்ளன.

வேலைகள் நெருக்கடி இன்னும் வேரூன்றி நிற்கும்போது, நீண்டகால வேலையின்மை எண்ணிக்கையும் தீவிரமாக உயர்ந்துள்ளது. 2011 முதல் காலாண்டை ஒட்டி, வேலையற்றோரில் மூன்றில் ஒரு பகுதி அல்லது அதற்கும் மேலானவர்கள் ஓராண்டிற்கும் மேலாக என்னும் முறையில் பிரான்சில் 40.5%, ஜேர்மனியில் 47.3%, இத்தாலி 50%, ஜப்பான் 50.2%, தென் ஆபிரிக்கா 68.3% மற்றும் ஸ்பெயின் 40.5% என்று காணப்படுகின்றனர்.

நீண்ட கால வேலையின்மை என்பது மிகத் தீவிரமாக கனடா, ஸ்பெயின், பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் பெருகிவிட்டது. 2011 முற்பகுதியில் அமரிக்காவில் நீண்டகால வேலையற்றோரின் பகுதி மூன்று மடங்கு அதிகரித்து, இதுகாறும் இல்லாத சான்றாகிவிட்டது.

இந்த நாடுகள் அனைத்திலும், நீண்டகாலமாக வேலையில்லாதோரின் தொகுப்பு வேலையற்றோர் மற்றும் அவர்கள் குடும்பங்கள் பெரிதும் நம்பியுள்ள சமூகநலத் திட்டங்கள் மீதான தாக்குதலையும் இணைந்து எதிர்கொள்கிறது. “நீண்டகால வேலையின்மையோடு தொடர்புடைய தீவிர சமூக நலச் செலவினங்கள் உள்ளன; ஏனெனில் இத்துடன் வறுமை, சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் பாதிக்கப்பட்ட நபர்களின் குழந்தைகள் பள்ளிகளில் தோல்வி அடைதல் ஆகியவை பெருகும் இடர்களும் உள்ளன என்று அறிக்கை எச்சரிக்கிறது.

வேலை இருப்போரைப் பொறுத்தவரை, தகுதிக்குக் குறைவான வேலையில் உள்ளவர்களின் பெரும்படை இன்னும் கூடுதல் நேரம் உழைக்கத்தயார், ஆனால் வேலை கிடைக்கவில்லை என்ற நிலையில் உள்ளவர்கள் கணிசமாக அதிகரித்துவிட்டது. ஸ்பெயின், இந்தோனிசியா மற்றும் ஆர்ஜென்டினாவில் குறிப்பிட்ட நகர்ப்புறங்களில் மொத்த தொழிலாளர் தொகுப்பில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட சதவிகிதத்தினர் 2010ல் வேறுவழியின்றி பகுதிநேர வேலை பார்ப்பவர்கள் என இருந்தனர், அதாவது முழுநேர வேலை தேவை என்பவர்களுக்கு பகுதிநேர வேலைதான் என்ற நிலை. இத்தகைய தொழிலாளர்கள் வறுமை இடரை அதிகம் பெறுகின்றனர்.

உலகப் பொருளாதார நெருக்கடியினால் மிகவும் பாதிப்பிற்கு உட்பட்டவர்கள் இளைஞர்கள் ஆவர்; இந்த அறிக்கை இளைஞரிடையே வேலையின்மை தீவிரமாகியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது. ஒவ்வொரு G20 நாட்டிலும், இளைஞர்களிடையே வேலையின்மை விகிதம் என்பது மூத்தவர்கள் விகிதத்தைப் போல் இரண்டு அல்லது மூன்று மடங்கு உள்ளது; நெருக்கடியின்போது இது இன்னமும் அதிகரித்துள்ளது. ஸ்பெயினின் இளைஞர்களிடையே உத்தியோகபூர்வ வேலையின்மை விகிதம் என்பது இருமடங்கிற்கும் மேல் அதிகமாகி, 45% க்கு அருகே எட்டிவிட்டது. தென் ஆபிரிக்க இளைஞர்களில் பாதிக்கும் மேலானவர்கள் வேலையின்றி உள்ளனர்.

கல்வி, வேலை அல்லது பயிற்சி என எதிலும் இல்லாமல் இருக்கும் இளைஞர்கள் நிலை பெருகி விட்டது குறித்தும் அறிக்கை குறிப்பிட்டுள்ளது இதற்கு NEET குழு என்று பெயர் ஆகும். அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் வேலைச் சந்தையில் நுழைவதில்லை, வாழ்நாள் முழுவதும் வேலையின்மை, வறுமை என்ற நிலையை முகங்கொடுக்கின்றனர்; தங்கள் வீடுகளை அமைத்துக் கொள்ளுதல், குடும்பத்தை ஏற்படுத்தும் திறன் ஆகியவற்றை இது இழக்கச் செய்துவிடுகிறது.

இளைஞர்களைத் தவிர, மக்களின் மற்ற பிரிவினர், வேலையின்மையினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களில், குறைந்த திறமை உடையவர்கள், தற்காலிகத் தொழிலாளர்கள் மற்றும் குடியேறியவர்கள் ஆகியோர் உள்ளனர். எல்லா G20 நாடுகளிலும் வேலை செய்யும் வயதில் உள்ள பெண்கள் வேலையின்மையில் ஆண்களைவிட அதிக சதவிகிதத்தில் உள்ளனர். வயதான தொழிலாளர்களும் கணிசமாக தொழிலாளர் தொகுப்பில் குறைந்த விகிதத்தையே  கொண்டுள்ளனர்.

எழுச்சி பெற்று வரும் G20 நாடுகளில், தற்காலிக, தற்செயல் வேலை அதிகமாக இருக்கும் நிலையைத்தான் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இதைத்தவிர தொழிலாளர்கள் முறைசாராப் பிரிவு என்பதிலும் பணிபுரிகின்றனர். ஆர்ஜென்டினா, மெக்சிகோ, இந்தியா ஆகிய நாடுகளில் பாதிக்கும் மேற்பட்ட விவசாயத்துறையில் இல்லாத தொழிலாளர் தொகுப்பு முறைசாரப் பிரிவில்தான் உள்ளனர்.

வேலை நெருக்கடியுடன் வருமான சமத்துவமற்ற தன்மை அதிகரித்துள்ளதும் இணைந்து வந்துள்ளது. ஜப்பான், பிரான்ஸ் ஆகிய நாடுகளைத் தவிர மற்றவற்றில் மிக அதிக ஊதியம் பெறும் 10% நபர்களின் வருமானம் 10 சதவிகிதம் மிகக் குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்களுடையதை விட ஒப்புமையில் உயர்ந்துள்ளது. இதற்குப் பல காரணிகள் உடந்தை ஆகும் என அறிக்கை கூறுகிறது; இதில் தொழில்நுட்பத் திறமை உடைய தொழிலாளர்களுக்கு கூடுதல் ஊதியம் கொடுக்கப்படுதல், மற்றும்தொழிற்சங்கங்கள் மற்றும் கூட்டுப் பேரம் பேசுவதின் வலிமை இழக்கப்பட்டுவிட்டது என்பதும் காரணங்கள் ஆகும்.

நிதியத் துறை உலகமயமாக்கப்பட்டிருப்பது, அதன் குறிப்பான ஊதிய வழக்கங்கள், அதாவது பெரும் செல்வக்கொழிப்புடைய ஊக வணிகர்களின் எண்ணிக்கை, உலக மக்களில் பெரும்பாலானவர்கள் இன்னும் வேலையின்மை மற்றும் வறுமை பெருகிய நிலையில் இருக்கும்போது நெருக்கடியில் இருந்து ஆதாயம் அடைந்தவர்கள் என்பதைப் பற்றியும் அறிக்கை குறிப்பிடுகிறது.

ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அப்பால், வருமான சமத்துவமின்மை எதிர்மறை விளைவுகளைத்தான் தோற்றுவிக்கிறது; இவை சமூக நேர்த்தி மற்றும் பொருளாதாரச் செயற்பாடுகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடும் என்று அறிக்கை கூறுகிறது. சாதாரண சொல்லாட்சியில் இதன் பொருள் வேலையின்மை, சமூக சமத்துவமின்மை என்ற தீய நிலைமைகள் சமீபத்தில் பிரிட்டனில் நடந்த சமூக வெடிப்புக்களை போல் தூண்டிவிடும் என்பதாகும்.

G20 நாடுகளிலும் மற்ற இடங்களிலும் உள்ள அரசாங்கங்கள் வேலைகள் நெருக்கடியை எதிர்கொள்வதற்கு சமூகநலத் திட்டங்களை தாக்குதலை விரிவுபடுத்தி, ஆழ்ந்த சிக்கன நடவடிக்கைகளையும் சுமத்துகின்றன. அமெரிக்காவில் 26 மில்லியன் மக்கள் வேலையின்மையில் இருக்கும்போது, பெருநிறுவனங்கள் 2 டிரில்லியன் டாலருக்கும் மேல் ரொக்கத்தைக் கொண்டுள்ளன; இப்பணம் ஆட்குறைப்பு, ஊதியக் குறைப்பு, உற்பத்தித்திறனில் அதிகரிப்பு ஆகியவற்றின் மூலம் வந்தது. பெருநிறுவன அமெரிக்கா ஒரு முதலீட்டு வேலைநிறுத்தம் என்று கூறப்படக்கூடிய செயலில் ஈடுபட்டுள்ளது, நாட்டை தொழிலாளர்களிடம் இருந்து ஆழ்ந்த சலுகை பெறவும், சமூகநலச் செலவுகள்மீது தாக்குதல் நடத்தும்படியும் மிரட்டுகிறது.

ILO/OECD அறிக்கை கொடுத்துள்ள தகவல்கள் உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு மூன்று ஆண்டுகளுக்குப் பின்னரும் அது வெளிப்படுத்திய பொருளாதார முரண்பாடுகள் எதுவும் தீர்க்கப்படவில்லை என்பதைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தற்பொழுது உள்ள யூரோ நெருக்கடி, உலகம் முழுவதும் தீவிரமாகியுள்ள பொருளாதார வளர்ச்சிச்சுருக்கம், மற்றும் பெருகிய வேலையின்மை ஆகியவை சர்வாதிகாரம், போர் இவற்றிற்கு வெளியே முதலாளித்துவம் தன் நெருக்கடியை தீர்த்துக் கொள்ள இயலாத தன்மையைத்தான் சுட்டிக் காட்டுகின்றன.