சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

Greek parliament approves “property tax” as PASOK pledges more pain

PASOK அதிக தாக்குதலுக்கு உறுதியளிக்கையில் கிரேக்கப் பாராளுமன்றம் “சொத்து வரிக்கு” ஒப்புதல் கொடுக்கிறது

By Robert Stevens 
29 September 2011

use this version to print | Send feedback

ஏற்கனவே வேலைகள், வாழ்க்கத் தரங்கள் மற்றும் மில்லியன் கணக்கான உழைக்கும் வர்க்கத்தினர், அவர்கள் குடும்பங்களின் எதிர்காலங்களை அழித்துக் கொண்டிருக்கும் சிக்கன நடவடிக்கைகளை விரிவாக்குவதை, கிரேக்கப் பாராளுமன்றம் ஒரு புதிய சொத்துவரி விதிப்பதற்கு ஒப்புதல் கொடுத்துள்ளது மூலம் எடுத்துக்காட்டப்படுகின்றது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கிரேக்கத் தொழிலாள வர்க்கத்தின் மீது முன்னோடியில்லாத, வரலாற்றுத் தன்மை படைத்த வறுமைத் தரங்களை சுமத்தியுள்ள PASOK அரசாங்கத்தின் தரத்திற்குக்கூட, இந்த வரிச் சட்டம் குறிப்பிடத்தக்க வகையில் தீவிரமானதாகும். கிட்டத்தட்ட 5.5 மில்லியன் வீடுகள் சொந்தக்காரரகளின் மின்விசைக் கட்டணத்துடன் இது சேர்க்கப்படும்கிட்டத்தட்ட 80 சதவிகித வீடுகளுக்கு. இது சராசரியாயாக ஒரு குடும்பத்திற்கு ஓராண்டில் 1,000 முதல் 1,500 யூரோகற்கள் வரை கூடுதல் செலவைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது; கட்டணத்தை செலுத்தமுடியாத வீடுகளின் மின்வசதி வெட்டப்பட்டுவிடும்.

இப்புதிய வரி ஆளும் சமூக ஜனநாயக PASOK கட்சியின் அனைத்து 154 உறுப்பினர்கள் மற்றும் ஒரு சுதந்திர பாராளுமன்ற உறுப்பினரின் ஆதரவுடன் 300 அங்கத்தவர்கள் உள்ள பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டுள்ளது. ஆண்டு ஒன்றிற்கு 2.4 யூரோ பில்லியன்களை வருமானமாகக் கொள்ளும் நோக்கத்தை உடைய இந்த வரி முதலில் ஒரு தற்காலக நடவடிக்கை என்று விவரிக்கப்பட்டது; ஆனால் வாக்கெடுப்பு இதை நிரந்தரமாக்கியுள்ளது.

இந்த வரி PASOK மற்றும் கிரேக்க முதலாளித்துவத்தின் நோக்கம் பற்றிய ஒரு மேலதிக அறிக்கை என எடுத்துக் கொள்ளப்படலாம். சர்வதேச நிதியச் சந்தைகள் மற்றும் சர்வதேச நாணய நிதியம், ஐரோப்பிய மத்திய வங்கி, ஐரோப்பிய ஒன்றியம் (IMF, ECB, EU) என்னும்முக்கூட்டின்கோரிக்கைகளைத் திருப்தி செய்வதற்காக மக்களுக்கு எதிராக எடுக்கப்படும் செயல்களாகும்.

இச்சட்டவரைவு இயற்றப்பட்டது கிரேக்க அரசாங்கத்திற்கு முன்னரே ஒப்புக் கொள்ளப்பட்ட கடன் உடன்பாடான 8 பில்லியன் யூரோ கொடுக்கப்படுமா என்பது பற்றி முக்கூட்டின் ஆலோசனைகளில் முக்கிய இடத்தைக் கொண்டுள்ளது. இது இல்லாவிடின், அரசாங்கம் அக்டோபர் 10ம் திகதிக்குப் பின்னர் கையில் ரொக்கம் ஏதும் இராது என்று கூறியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியஆய்வாளர்கள்இன்று கிரேக்கத்திற்கு திட்டமிடப்படும் நடவடிக்கைகளை மேற்பாற்வையிட வருகின்றனர்.

செவ்வாய் மாலை வாக்கெடுக்கப்படுகையில், பொலிஸ் ஏதென்ஸில் பாராளுமன்றத்தை சுற்றி எஃகு வளையம் ஒன்றை நிறுவியது. பொலிஸ் கலகப் பிரிவு படையினர் கூடியிருந்த ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்களைக் கலைப்பதற்கு தாக்குதல் நடத்தி கண்ணீர்ப்புகைக் குண்டையும் பயன்படுத்தினர். பல நூற்றுக்கணக்கான பிற சீருடைப் பொலிசும் திரட்டப்பட்டு சின்டகமா சதுக்கத்திற்கு அருகே உள்ள இடங்கள் மூடப்பட்டன.

அன்றே ஏதென்ஸ் இரண்டாவது தொடர்ச்சியான நாளாக போக்குவரத்து வேலைநிறுத்தங்களால் பாதிக்கப்பட்டது; இதில் நிலத்தடி இரயில் ஊழியர்கள், பஸ் டிரைவர்கள் ஆகியோரும் அடங்குவர். இது பல இடங்களில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது. வரிவசூலிப்பவர்களும் சுங்க அதிகாரிகளும் ஒரு 48 மணி நேர வேலைநிறுத்தத்தை ஊதியக் குறைப்பை எதிர்த்து நடத்தத் தொடங்கினர்.

அட்டிகா பிராந்தியத்தில் இருந்து நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தலைநகருக்கு வரிசைக் கார்களில் வந்து  அரசாங்கத்தின் திட்டமான ஆயிரக்கணக்கான பொதுத்துறை ஊழியர்கள்தயார்நிலையில்உபரித்தொழிலாளர்களாக (reserve labour) வைக்கும் முறைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இத்திட்டம் பொதுத்துறை ஊழியர்களின் ஊதியத்தை 40% ஆண்டு ஒன்றிற்குக் குறைத்துவிடும்; அதன்பின் அவர்கள் வேலையில் தொடர்ந்து இருப்பர் என்பதும் நிச்சயம் இல்லை.

ஏதென்ஸ் மெட்ரோ மற்றும் பிரயோஸ்-கிபிசியா மின்இரயில்வே (ISAP) தொழிலாளிகள் புதன் அன்றும் இன்னொரு வேலைநிறுத்தம் செய்தனர். டிராம், பஸ், பார ஊர்தி மற்றும் புறநகர் ரயில் பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டன; டாக்ஸி டிரைவர்கள் மற்றும்ஒரு இரு-நாள் வேலைநிறுத்தத்தை தங்கள் தொழில்துறை கட்டுப்பாட்டுத் தளர்ச்சி பெறுவதற்கு எதிராகச் செய்தனர்.

இன்று மருத்துவர்களும் ஒரு நான்கு மணி நேரப் பணி நிறுத்தம் தொடங்குகின்றனர். செவிலியர்களும் நாளை வேலைநிறுத்தம் செய்கின்றனர். இதைத்தவிர மெட்ரோ, தேசிய ரயில் இணையங்கள், ISAP மற்றும் டிராம் பணிகளிலும் வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது.

சொத்து வரி என்பது சிக்கன நடவடிக்கையின் ஒரு புதிய தாக்குதல் நடவடிக்கையின் மையப் பகுதி ஆகும். இதில் பொதுத்துறைத் தொழிலாளர்கள் ஐந்தில் ஒரு பகுதி அகற்றப்படுவது, பொதுத்துறை ஊதியங்களில் 20% குறைக்கப்படல் (ஏற்கனவே சுமத்தப்பட்டுவிட்ட 30% தவிர) மற்றும் ஓய்வூதியங்களில் சராசரியாக 4% குறைப்பு (முன்பே தொடக்கப்பட்டுவிட்ட 10% வெட்டைத் தவிர) ஆகியவை அடங்கும். பின்னோக்கிய வரி விலக்குகள் கொடுப்பது குறைக்கப்படுவது என்பது ஜனவரி 2011ல் இருந்து நடைமுறைக்கு வரும்.

இந்த நடவடிக்கைகள் கடந்த 12 மாதங்களில் 200,000 மக்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ள நிலைமையில் நடைமுறைக்கு வருவதாகும். இது வேலையில்லாதவர்களின் எண்ணிக்கையைக் கிட்டத்தட்ட 40% என்று ஓராண்டிற்குள் உயர்த்திவிட்டது.

PASOK அரசாங்கம் 50 பில்லியன் யூரோக்கள் தனியார்மயமாக்கும் திட்டத்தில் சுறுசுறுப்பாக இல்லை என்று முக்கூட்டு குறைகூறியுள்ளது. அதை முகங்கொடுக்கும் வகையில், அரசாங்கம் இம்மாத இறுதிக்கள் தனியார்மயமாக்கல் உடன்பாடுகள்மூலம் 1.7 பில்லியன் யூரோக்களை சேமிக்கும்  திட்டங்கள் அறிவிக்க உள்ளது.

நிதி மந்திரி எவாஞ்சலோஸ் வெனிஜிலோஸ் அரசாங்கம் சிக்கன நடவடிக்கைகளில்கூடுதல் கூறுபாடுகள்பற்றி ஆராயும் என்றும்இந்த வேதனையளிக்கும் நடவடிக்கைகள்தேவை என்றும் கூறினார். “நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் எதிர்பார்த்த வருமானம், சேமிப்பு ஆகியவற்றைக் கொடுக்கவில்லை. மாறாக இன்னும் செலவைக் குறைக்க வேண்டும் என்ற உடனடித் தேவையைத்தான் கொடுத்துள்ளது.”

பிரதம மந்திரி ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூ செவ்வான்று பேர்லின் வந்திருந்தார். அங்கு ஜேர்மனியச் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் மற்றும் ஜேர்மனியப் பெருவணிகப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தினார். 1,000க்கும் மேற்பட்ட ஜேர்மனிய தொழில்துறைத் தலைவர்களுக்கு பாப்பாண்ட்ரூ தன் அரசாங்கத்தின்மனித சக்திக்கும் அப்பாற்பட்ட தன்மையில்அதுவும் ஆழ்ந்த மந்தநிலையின் மத்தியில் சுமத்திய சிக்கன நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளுமாறு கோரினார்.

கிரேக்கம் கொடுத்துள்ள உறுதிமொழிகள் அனைத்தையும் காப்பாற்றும் என நான் உறுதியளிக்கிறேன்.” என்று அவர்களுக்கு உத்தரவாதம் அளித்தார். கிரேக்கத்தின் பெரும் செல்வந்தர்கள் சுவிஸ் வங்கிச் சேமிப்புக்களில் மொத்தம் 600 பில்லியனுக்கும் மேலாகக் கொண்டுள்ளனர் என்ற தகவல் வந்தபின் இச்சொற்கள் கூறப்பட்டன; இத்தொகை நாட்டின் முழுப் பொதுக்கடனைப் போல் இருமடங்கு ஆகும்.

தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் நிலைமைகள் ஏற்கனவே பொறுக்க இயலாமல் உள்ளன. ஏதென்ஸ் பல்கலைக்கழக தத்துவக்கூடத்தின் பட்டதாரியான மரியா கப்பா செய்தி ஊடகத்திடம், “ஓராண்டுகாலமாக வேலைதேடிக் கொண்டிருக்கிறேன்; வேலைகிடைப்பது மிக அரிது. இச்சிக்கன நடவடிக்கைகளால் செல்வந்தர்கள் பாதிக்கப்படுவதை நான் காணவில்லை, எப்பொழுதும் வறியவர்கள்தான் விலை கொடுக்கின்றனர்என்றார்.

50 வயது டாக்டர் கிரியகி அலெக்ஸ்யு கூறினார்: “இது மோசமான நிலைமை. எங்கள் வாழ்வை முற்றிலும் வங்கிக் கடன்கள், கடன் அட்டைகள் என வேறுவிதமாகக் கட்டியமைத்தோம். இப்பொழுது அவர்கள் எங்கள் ஊதியங்களைக் குறைக்கின்றனர், வணிகம் சரிந்துகொண்டிருக்கிறது. எப்படி நாங்கள் கடன்களைக் கட்ட முடியும்? இது எதில் முடியும்? இதைத் தீர்ப்பதற்கு அவர்கள் ஏதும் செய்யாவிட்டால், மக்கள் பட்டினி கிடப்பர். இறுதியில் வெடித்தெழுந்து தெருக்களுக்கு வருவர்.”

கணவன், மனைவியான டிமிட்ரிஸ் மற்றும் மேரி ஆண்ட்ரூ ஆகியோர் இருவரும் உழைக்கின்றனர்; ஆனால் பிரிட்டனின் டெய்லி டெலிகிராப்பிடம் அவர்கள் செலவழிக்கக் கூடிய வருமானம் இரண்டு ஆண்டுகளில் 50% குறைந்துவிட்டது என்றனர். “அரசியல்வாதிகள் தூக்கிலிடப்பட வேண்டும் என்பதை நாங்கள் விரும்புகிறோம். பலரும் இதைக் கூறுகின்றனர். அரசியல்வாதிகளுக்கு மரண தண்டனை வேண்டும்கிரேக்கத்தில் இதற்கு ஈடான சொற்றொடர் துரோகிகளின் வாயில்.”

சமூக வெடிப்பைத் தூண்டாமல் மற்றும் சிக்கன நடவடிக்கை எடுக்கப்படமுடியாமா எனக் கேட்கப்பட்டதற்கு ஏதென்ஸின் வணிகம் மற்றும் தொழில்துறைக்குழு கூறியது: “அரசாங்கம் எல்லா வரம்புகளையும் கடந்துவிட்டது. நாட்டை வறிய மக்களின் இறுதி தங்குமடமாக்கிவிட்டது.”

கிரேக்க Economic Monthly பத்திரிகை மக்கள்மிக விரைவில் வெடித்தெழலாம், ஏனெனில் திகைப்பிலுள்ள நிலைமை இப்பொழுது மிகத்தீவிரமாக உள்ளதுஒருவகையில் அது ஜூன் மாதம் நடந்த பெட்ரோல் குண்டுகள், தெருமறிப்பு ஆகியவற்றை பரிதாபகரமானதாக்கிவிடும்.” என்று எச்சரித்துள்ளது.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக அரசாங்கம் ஒன்றன்பின் ஒன்றாக சிக்கன நடவடிக்கைகளைத் தொழிற்சங்கத்தின் உடந்தையுடன் சுமத்தியுள்ளது. கிட்டத்தட்ட அரங்கத்தில் வாடிக்கையாக நடப்பது என்பதுபோல், கிரேக்கத் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கள் சில மாதங்களுக்கு ஒரு முறை தொழில்துறை நடவடிக்கை தினத்திற்கு அழைப்பு விடுகின்றன. இதன் நோக்கம் தொழிலாளர்கள் சீற்றத்தை திசைதிருப்பமுடியும், அதே நேரத்தில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிரான உண்மையான சவால் என்பது இராது.

இந்த இலக்கிற்காக தனியார் துறை GSEE மற்றும் அரசாங்க ஊழியர்களின் ADEDY தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கள் அக்டபோர் 5 அன்று ஒரு பொதுத்துறை தேசிய அளவிலான வேலைநிறுத்தம் ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளது; இதைத்தவிர நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் அக்டோபர் 19ம் தேதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தொழிற்சங்கங்களின் சிக்கன நடவடிக்கைகளுக்கான ஆதரவின் உண்மை நடவடிக்கை சமீபத்தில் OME-OTE தொழிற்சங்கம், OTE தொலைத்தொடர்பு தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம் GSEE உடைய ஆதரவுடன் செய்துகொண்ட உடன்படிக்கையில் நன்கு தெளிவாகிறது. மூன்றாண்டு உடன்பாட்டின்படி, OTE யின் Deutsche Telekom கட்டுப்பாட்டின் நிர்வாகம் செலவினங்களை 160 மில்லியன் யூரோக்கள் குறைக்கும்; அதற்காக ஊதிய வெட்டுக்கள் கிட்டத்தட்ட 11% மேற்கொள்ளப்படும், மற்றும் பணி நேரம் 40 ல் இருந்து 35 என்று குறைக்கப்படும்.