சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Sarkozy loses his majority in the French Senate

பிரெஞ்சு செனட்டில் சார்க்கோசி அவருடைய பெரும்பான்மையை இழக்கிறார்

By Antoine Lerougetel
29 September 2011

use this version to print | Send feedback

ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் ஆளும் UMP கட்சி (Union for a Popular Movement)  செப்டம்பர் 25ம் திகதி நடைபெற்ற தேர்தல்களில் பிரெஞ்சு செனட்டில் கொண்டிருந்த கட்டுப்பாட்டை இழந்துவிட்டது. சோசலிஸ்ட் கட்சி (PS) மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளிடம் சார்க்கோசி தோற்றது செய்தி ஊடகத்தில் சிலரால்ஒரு நிறுவனத்தின் பூமியதிர்ச்சி என்று விவரிக்கப்பட்டது. நேரடியற்ற முறையில் தேர்ந்தெடுக்கப்படும் செனட்டில் ஐந்தாம் குடியரசின் 53 ஆண்டு காலத்தில் ஒருபொழுதும் சோசலிஸ்ட் கட்சி கட்டுப்பாட்டை அதன் மீது கொண்டதில்லை.

இந்த தேர்ந்தெடுப்பு சார்க்கோசி நிர்வாகத்தின் மிக பலவீனமான தன்மையைத்தான் வெளிப்படுத்தியுள்ளது. மக்களுடைய உரிமைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்கள் மீது தாக்குதல்களின் விளைவால் பெரிதும் செல்வாக்கை இழந்த நிலையில், 30 சதவிகித ஆதரவு அளவையே கொண்டுள்ள நிலையில், அரசாங்கம் ஜனாதிபதியின் நெருக்கமாக வேலைசெய்தவர்களுடன் தொடர்பு கொண்ட ஊழலினாலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல்-மே 2012 ல் ஜனாதிபதித் தேர்தல்களை நாடு நெருங்குகையில் சமூகப் பதட்டங்கள் பெருகியுள்ளன.

PS (123) மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (20), பசுமைவாதிகள் (10), இடது கட்சி (1), மற்றவை (24) என்று இவை மொத்தமாகப் பெற்றுள்ள இடங்களில் இவற்றிற்கு செனட்டில் 338 இடங்களில் 177 என்ற பெரும்பான்மையைக் கொடுத்துள்ளன.

சார்க்கோசியின் நம்பகத்தன்மைக்கு இந்த அடி கொடுத்துள்ள உட்குறிப்புக்கள் சர்வதேச தாக்கங்களைக் கொண்டுள்ளது. செப்டம்பர் 26 ம் திகதி பைனான்ஸியல் டைம்ஸ்  சுட்டிக்காட்டியுள்ளதுபோல், “பதவியில் இருப்பவருக்கு பிரச்சினைகள் குவிந்துகொண்டுள்ளன. ஜேர்மனியின் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெலுடன் யூரோப் பகுதிக் கடன் நெருக்கடியைத் தடுத்து நிறுத்த திரு சார்க்கோசி முன்னணியில் உள்ளார். தீர்வு ஏதும் இல்லாத நிலையில், பிரான்சின் பொது நிதிகள் மற்றும் பிரெஞ்சு வங்கிகள் பற்றி உணரப்படும் நலிவுற்ற தன்மை மீது சந்தைகள் கவலைக் குவிப்பைக் கொண்டுள்ளனபாரிஸால் இவை ஆக்கிரோஷமாக மறுக்கப்பட்டாலும்கூட.”

FT தொடர்ந்து கூறுகிறது: “செனட் முடிவின் ஒரு விளைவு பிரான்ஸ் நிதிய உறுதிப்பாட்டிற்குக் கொடுத்துள்ள உத்தரவாதத்தை, உள்நாட்டிலும் அது நிலவும் என்பதைத் தகர்ப்பதாக உள்ளது. அவருடைய நோக்கம் [ஜேர்மனியில் இருப்பதுபோல்] அரசியலமைப்பில் ஒருதங்க விதியை அமைத்தல்அதற்கு சமச்சீர் வரவு-செலவுத் திட்டங்கள் தேவை என்பது இப்பொழுது முடங்கிவிட்டது; ஏனெனில் அதற்கு செனட் மற்றும் தேசிய பாராளுமன்றத்தின் கூட்டமர்வில் 60 சதவிகிதப் பெரும்பான்மை தேவைப்படும்.”

வேலையின்மை விகிதம் கோடையில் உயர்ந்து 10 சதவிகிதத்திற்கும் அருகே இருந்தது; அதே நேரத்தில் பொருளாதார வளர்ச்சி குறைந்து பூஜ்யம் என ஆயிற்று. இது அரசாங்கத்தைச் சிக்கன நடவடிக்கைகளை அதிகரிக்கும் கட்டாயத்திற்குத் தள்ளியது; அதில் தொழிலாள வர்க்கத்தை தாக்கும் வரிகளும் உள்ளன, இவை மேலும் நுகர்வை வலுவிழக்கச் செய்யும்.

அரசாங்கத்தின் மிக உயர்ந்த மட்டத்தில் பல தசாப்தங்களாக நிலவும் நிதிய மற்றும் அரசியல் ஊழல் குறித்த குற்றச்சாட்டுக்கள் இப்பொழுது சார்க்கோசிக்கும் அருகே வந்துவிட்டன; Karachigate விவகாரத்தில் அவருடைய மிக நெருக்கமான சக நண்பர்களான பிரதம மந்திரி எடுவார்ட் பலடூர், ஆயுத விற்பனையாளர் Ziad Taddiekine, Thierry Gaubert இன்னும் ஏராளமான பேர் தொடர்பு கொண்டுள்ளனர்.

செப்டம்பர் 19, 20 திகதிகளில் தேர்தல்களின் முதல் சுற்று குறித்த வாக்காளர் விருப்பங்கள் பிரான்சுவா ஹோலண்டிற்கும் மார்ட்டின் ஆப்ரிக்கும் (இருவரும் சோசலிஸ்ட் கட்சியினர்) 28 மற்றும் 27 சதவிகிதத்தைக் கொடுத்துள்ளன; சார்க்கோசிக்கு 25 சதவிகிதம்தான். ஊழல்கள் மற்றும் இடது, வலது முதலாளித்துவக் கட்சிகளின் அரசியல் திவால்தன்மை, அவைகள் குடியேறுபவர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகியோரைப் பலிகடா ஆக்குதல் என்ற தன்மையில் ஊக்கம் பெற்றுள்ள தேசிய முன்னணி (National Front) வேட்பாளர் மரின் லு பென் 19 சதவிகித விருப்பங்களைக் கொண்டுள்ளார். ஒரு இரண்டாம் சுற்றுக் கணிப்பில் ஹோலண்டிற்கு 57%, ஆப்ரிக்கு 54% மற்றும் சார்க்கோசிக்கு 46% என்று கருத்துக் கணிப்பு நிறுவனங்களின் மாறுபட்ட நிலைப்பாடுகளும் கிடைத்துள்ளன.

பிரெஞ்சு செனட் மிகவும் ஜனநாயக விரோதத்தன்மை கொண்ட அமைப்பு ஆகும். இது நேரடியாக அனைத்து மக்களின் வாக்குகளாலும் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை; 150,000 தேர்ந்தெடுக்கும் உரிமையுள்ள உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறது; இவர்களில் 95% நகரசபை அல்லது உள்ளூராட்சி உறுப்பினர்கள் (communal councillors), விகிதத்திற்கு பொருந்தாத எண்ணிக்கையுடன் மரபார்ந்த பழமைவாத கிராம சபைகளில் இருந்து வருபவர்கள்.

இந்த முடிவு சார்க்கோசியின் சிக்கன நடவடிக்கைகளின் ஆழ்ந்த செல்வாக்கற்ற தன்மையுடன் பெரிதும் தொடர்புடையதாகும். அதுதான் UMP 2008 உள்ளூராட்சித் தேர்தல்களில் பிரான்ஸின் 36,872 கம்யூன்களின் நகரசபை குழுக்களில் கடுமையான தோல்விக்கு வழிவகுத்தது.

அரசாங்கத்தின் உள்ளூராட்சிசீர்திருத்தம்”, நகரசபைகளுக்கு நிதி இல்லாமல் செய்து, சமூக இடர்களை பெருக்கி விட்டது என்று Nouvel Observateur சுட்டிக்காட்டியுள்ளது. “உள்ளூராட்சி பிரான்ஸ் அதன் பழியைத் தீர்த்துக் கொண்டது….. அரசாங்கம் போதிய நிதிய ஆதாரங்கள் மாற்றப்படாமல் தன்னாட்சிப்பகுதிகளின் பங்கை அதிகப்படுத்தியது. இதன் பின்னர்…. அரசாங்கமும் வலதும் நிதிய ஊழல்கள் குறித்து கையாள வேண்டியதாயிற்று.” (See also, “Bourgi affair exposes French imperialism’s criminal activities in Africa”)

செனட்டிற்கான வாக்களிப்பானது, 150,000 தேர்தல்தொகுதிகளைக் கொண்ட உள்ளூர் அதிகாரத்துவத்தினர், பதவி நாடுவோர், கட்சி அதிகாரிகள் மற்றும் கனவான்கள் நிறைந்த இப்பிரிவு இடதிற்கு அதிகம் நகர்ந்துவிட்டது என்ற பொருளைத்தராது. சீர்திருத்தமானது, அதிகாரத்துவ தனிச்சிறப்புரிமைகள் மீது பாதிப்பைக் உண்டாக்கியது என்று பலரும் முணுமுணுக்கின்றனர். முதலாளித்துவ இடது கட்சிகள் UMP முகாமிற்குள் இருக்கும் நெருக்கடியினால் ஆதாயம் அடைந்தன; அதேபோல் ஒத்திராத கன்சர்வேடிவ் பட்டியல் அளிக்கப்பட்டதில் இருந்தும் ஆதாயம் அடைந்தன; பிந்தையது உத்தியோகப்பூர்வ UMP வேட்பாளர்களின் வாக்குகளைப் பெற்றது.

வெளியுறவு மந்திரி அலன் யூப்பே தன் கட்சியின் தோல்விக்கு UMP க்குள் இருக்கும் சக்திகளைத்தான் குறைகூறினார். Le Point  கூறுகிறது: “ஏற்கனவே பல வாரங்களாக பெரும் கவலை உணரப்பட்டது. நான் வலதில் பிளவுற்றிருப்போர் பட்டியல் பற்றிக் கவலைப்படுகிறேன்; இது எனக்கு அதிக உளைச்சலைத் தருகிறது என்று UMP யின் உயர்மட்டத்தில் உள்ள Jean-François Copé கூடக் கூறினார்.”

முடிவுகள் அறிவிக்கப்பட்டபின், யூப்பே ஐந்து அல்லது ஆறு மாவட்ட பிரிவுகளைச் சுட்டிக்காட்டினார்; அங்கு ஒத்துவராத வேட்பாளர்கள்நம் இடங்களை இல்லாமல் செய்துவிட்டனர்.” பிரதம மந்திரி பிரான்சுவா பியோன்பெரும்பான்மைக்குள் இருக்கும் பிளவுகள்தான் காரணம் என்றார்.

சார்க்கோசியின் ஜனாதிபதி பதவிக் காலத்தில் முன்னதாக நியமிக்கப்பட்டிருந்த மந்திரிகள், குறிப்பாக அவருடையஇடதுபுறம் சாய்பவர்களுடன் தொடர்பு கொண்டவர்கள் மற்றும் இனவழிச் சிறுபான்மையைச் சேர்ந்தவர்கள் அவரைக் கைவிட்டு, பதவிக்கு நிற்கின்றனர் அல்லது வலதிலுள்ள சார்க்கோசியின் போட்டியாளர்களுக்கு ஆதரவு கொடுக்கின்றனர். Rachid Date, Rama Yare, Adela Amara, Jean-Louis Borloo, Hervé Morin, Patrick Deeding, Pierre Chiron, Dominique Paella ஆகியோர் இப்பட்டியலில் உள்ளனர்.

UMP க்குள் சார்க்கோசி 2012 ல் மறுபடியும் நிற்கக்கூடாது என்றும் பெருகிய கொந்தளிப்பு இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. France-Soir உடைய Remy Desserts “இப்பொழுதில் இருந்து முதல் சுற்றிற்கு பாதை இன்னும் தொலைவில் இருப்பது உண்மையே. ஆனால்  குடியரசின் ஜனாதிபதி மீண்டும் தேர்தலில் நிற்க மாட்டார் என்பதை இரகசியமாக நம்புவர்களின்  எண்ணிக்கை அதிகமாகிவிட்டது என்று வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் UMP பிரதம மந்திரி Jean-Pierre Raffarin, முடிவுகளுக்குப் பின் தொலைக்காட்சியில் பேசியபோது இவ்வாறு குறிப்பிட்டார்: “அவர் தேர்தலுக்கு நின்றால், எமது வேட்பாளர் நிக்கோலா சார்க்கோசியே.” உண்மையில் செல்வாக்கு நிறைய உடைய பிற UMP காரர்களிடையே Raffarin அக்கட்சியின் முக்கிய வட்டங்களுக்குள் மாற்றீட்டு வேட்பாளராக வரலாம் எனக் கூறப்படுகிறது.

இடது முன்னணிக் கூட்டணியான இடது கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி இணை ஜனாதிபதி வேட்பாளரான Jean-Luc Mélenchon, ஜனாதிபதிப் போட்டி தொடங்கிவிட்டது, இது நல்லதிற்குத்தான் என அறிவித்தார். “இடதிற்குச்சென்ற பின், புதிய செனட்….நிக்கோலா சார்க்கோசியின் அரசியல் திட்டத்தை ஜனாதிபதித் தேர்தல் வரை தடுத்துவிட முடியும் என்றார்.

சோசலிஸ்ட் கட்சியும் அதன் நட்பு அமைப்புக்களும் இடது முன்னணி உட்பட, சார்க்கோசியின் பிற்போக்குத்தன கொள்கைகளுக்கு எதிரான ஒரு தடையை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடும் என்ற கருத்து Jean-Luc Mélenchon, அவருடைய பங்காளிகளின் உண்மை நிலை பற்றி வெளிப்படுத்துகிறது. சோசலிஸ்ட் கட்சியானது Jean-Luc Mélenchon உடன் சேர்ந்து கொண்டு சார்க்கோசிக்கும் நேட்டோவின் நவ காலனித்துவ இராணுவ நடவடிக்கையை லிபியாவில் நடத்தப்படுவதற்கும் முழு ஆதரவைக் கொடுத்துள்ளது. வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறை குறைக்கப்பட வேண்டும் என்பதற்கு சோசலிஸ்ட் கட்சி ஆதரவைக் கொடுக்கிறது; அதேபோல் வங்கியாளர்களுக்கு நிதி கொடுப்பது முன்னுரிமை பெற வேண்டும் என்றும் கூறுகிறது. கிரேக்கத்திற்கு முக்கூட்டு—EU, ECB, IMF—இரு பிணை எடுப்புக்களைக் கொடுக்காதற்காக இணைந்த பேரழிவு தரும் சிக்கன நடவடிக்கைகளை சோசலிஸ்ட் கட்சி எதிர்க்கவில்லை; அதேபோல் வங்கிகளின் ஆணையில் ஸ்பெயின் மீது சுமத்தப்படும் நடவடிக்கைகளையும் எதிர்க்கவில்லை.

லிபிய மக்களுக்கு எதிரான கொள்ளைமுறை, நவ காலனித்துவ இராணுவத் தலையீடு சார்க்கோசியினால் தொடக்கப்பட்டது பற்றி ஏதும் கூறக்கூடாது என்பதாக உள்ளது. புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) மற்றும் இடது முன்னணியில் இருந்து UMP வலதுசாரி வரை முழு அரசியல் ஸ்தாபனமும் அதற்கு ஆதரவு கொடுத்தது. மேலும் அது தேர்தல் பிரச்சினையானால் அது எதிர்ப்பைத் தூண்டக்கூடும், குறிப்பாக சமூகத்தில் அடக்கப்பட்ட குடியேறியுள்ள சமூகங்களிடையே என்றும் அஞ்சுகிறது. எனவே பேசக்கூடாதது என்பதில் யூரோ நெருக்கடி, ஐரோப்பாவில் அரசாங்கக் கடன், உலகப் பொருளாதார நெருக்கடி ஆகியவையும் உள்ளன; இவைகள் குறிப்பிட்டால் பின்னணி உறுத்தல்கள் என்றுதான் காணப்படும். ஒவ்வொரு வேட்பாளரும் பிரான்சின் சமூக, பொருளாதார பிரச்சினைகளை தேசிய அரசுக் கருத்திலோ அல்லது ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்களுடன் தொடர்பு என்ற வகையிலோ செயல்படுத்தும் உறுதியைக் காட்டுகின்றனர். செப்டம்பர் 27ம் திகதி Mediapart ல் வந்துள்ள கட்டுரை ஒன்று, போட்டி முகாமான ஹோலண்ட், ஆப்ரி ஆகியோருக்கு வேலைசெய்வதற்காக முதலாளித்துவ சார்பு பொருளாதாரப் பேராசிரியர்கள் மற்றும் வங்கியாளர்களும் என்னும் நீண்ட குழுவினரைப் பட்டியலிட்டுள்ளது.