சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Obama’s nuclear disarmament hoax

அணு ஆயுதம் களைதல் என்னும்  ஒபாமாவின் ஏமாற்றுத்தனம்

Peter Symonds
29 March 2012

use this version to print | Send feedback

இந்த வாரம் உலகத் தலைவர்கள் தென் கொரியாவில் அணுச்சக்திப் பாதுகாப்பு உச்சிமாநாட்டில் கூடியிருப்பது அணுச்சக்தி ஆயுதக்களைதல் மற்றும் உலக சமாதானம் பற்றி இழிந்த தன்மையை அதிகளவில் காட்டி கொள்ளும் ஒரு நிகழ்வாகிறது.

இதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வழிநடத்தும் முறையில் ஹான்குக் பல்கலைக்கழகத்தில் அணுவாயுதப் பயங்கரவாதம்குறித்த உச்சிமாநாட்டுப் பேச்சுக்கள் அணுவாயுதம் இல்லாத உலகம் என்னும் நம் பார்வையின்ஒரு பகுதியாகும் என்று மாணவர்களிடம் கூறினார். தன்னுடைய பதவியின்கீழ் அமெரிக்கா, ஒரு புதிய START உடன்பாட்டை ரஷ்யாவுடன் அணுவாயுதங்களை குறைப்பதற்கு கையெழுத்திட்டுள்ளதாகவும், புதிய அணுவாயுதங்களைத் தயாரிக்கும் உறுதிப்பாடு இல்லை என்றும், அணுவாயுதங்களை பயன்படுத்துவதாக அச்சுறுத்தல் அல்லது எப்பொழுதேனும் பயன்படுத்துவதன் அளவுகூட குறுகிவிடும் கூறினார்.

இத்தகைய மிக இறுமாப்புள்ள வார்த்தைஜாலங்களினால் எவரும் முட்டாள்தனமாக்கப்பட முடியாது. ஆளும் வர்க்கங்கள் எப்பொழுதுமே சமாதானம் என்ற பதாகையில் கீழ்த்தான் போருக்கான தயாரிப்புக்களை நடத்துகின்றன. ஆயுதக் களைதல் என்னும் கோஷமே தொழிலாள வர்க்கத்தை ஏமாற்றும் ஒரு வழிவகை என்பது மட்டுமின்றி, உடனடியாக உள்ள அல்லது தமக்கு போட்டியாக வரக்கூடியவர்கள்மீது இராணுவ மேன்மையை உறுதிசெய்துகொள்வதும்தான்.

ஒபாமா ஒப்புக் கொண்டுள்ளபடி, START உடன்படிக்கை முற்றிலும் செயல்படுத்தப்பட்டாலும்கூட, அமெரிக்கா 1,500 க்கும் மேல் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஆயுதங்களும், 5000 தாக்கும் குண்டுகளும் என்ற முறையில் பாரிய அணுச்சக்தி ஆயுதக்குவியலை கொண்டிருக்கும். இவை போட்டித் திறன் கொண்ட எந்த எதிர்ப்பாளர்களையும் அல்லது நட்பு நாடுகளையும்கூட முற்றிலும் தகர்த்துவிடும். சாத்தியப்பாட்டின் அளவை குறைப்பதிலும்கூட அமெரிக்கா ஒருபோதும் ஒரு முதல் அணுத்தாக்குதலை நிராகரிக்கவில்லை. அதாவது ஆக்கிரமிப்பிற்கான ஒரு முன்கூட்டிய தாக்குதலில் அணுவாயுதத்தை பயன்படுத்தும் உரிமையை நிராகரிக்கவில்லை. 

அமெரிக்க அணுவாயுதங்களை இன்னும் உயர்தரத்திற்கு உயர்த்தவில்லை என்றாலும், ஒபாமா நிர்வாகம் குறைந்தப்பட்சம் 600 பில்லியன் டாலர் நிதியை அடுத்த தசாப்தத்திற்குள் ஆயுத உற்பத்தி நிலையங்கள், அவற்றை செயல்படுத்தும் முறை ஆகியவற்றை நவீனப்படுத்த செலவழிக்க உள்ளது. இவற்றில் ஒரு புதிய தலைமுறை நிலத்தில் இருந்து ஏவப்படக்கூடிய தொலைதூர ஏவுகணைகள், அணுச்சக்தியில் இயங்கும் புதிய நீர்மூழ்கிக்கப்பல் படைப்பிரிவு இன்னும் போர்த்திறன்வாய்ந்த 100 புதிய விமானங்களும் அடங்கும்.

இப்பொழுது நடைபெறுகிறது அணுவாயுதக் களைதல் அல்ல; ஆயுதப் போட்டிதான். இந்தப் புதிய கட்டமைப்பை விளங்கிக்கொள்ள முக்கியமானது, அணுவாதக் கருவிகளின் எண்ணிக்கையில் இல்லை, விநியோக முறைகளிலும், அவற்றை கண்டுகொள்ளலை மறைத்தல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மிகவும் துல்லியமாக்குவதில் அடங்கியுள்ளது. மேலும், நிலைநிறுத்தப்பட்டுள்ள அணுவாயுதக் கருவிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுகையில், அமெரிக்கா விரைவில் பல்லாயிரக்கணக்கான புதிய கருவிகளை அதன் பெரிய கிடங்கான 400 தொன்கள் அடர்த்தி செய்யப்பட்டுள்ள யுரேனியத்தில் இருந்து கட்டமைக்கும் திறனை கொண்டுள்ளது.

ஆயுதக் களைதல் என்னும் மறைப்பில், அமெரிக்கா தன்னுடைய முழு அணுவாயத நிலைப்பாட்டு மேன்மையைத் தக்க வைத்துக் கொள்வதில் உறுதியாக உள்ளது. தென் கொரிய உச்சிமாநாட்டின் உண்மையான நோக்கம் ஏற்கனவே அணுவாயுதங்கள் இல்லாத நாடுகள் உரிய மூலப்பொருளை அடையமுடியாமலும் அதையொட்டி அணுவாயுதத் தயாரிப்பில் ஈடுபடமுடியாமல் தடை செய்வதும் ஆகும். அவ்வகையில் புதிய ஆக்கிரமிப்புப் போர்களை நடத்துகையில், அமெரிக்கா ஆயுதத்திறன் உடைய எதிரியைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய தேவையில்லை.

அணுவாயுதக் களைதல், உலக சமாதானம் பற்றிய நற்செய்தி உபதேசகரான ஒபாமா சியோலில் கிடைத்த வாய்ப்பை ஈரான் மற்றும் வடகொரியாவிற்கு எதிரான அச்சுறுத்தல்களைப் புதுப்பிப்பதற்கும் பயன்படுத்தினார். ஹான்குக் பல்கலைக்கழகத்தில் அவர் ஈரானை, ஈரானின் அணுச்சக்தித் திட்டம் குறித்து இராஜதந்திர தீர்வு முறை வகையில் முடிவு காணும் நேரம் குறைந்துவிட்டது,என்று அச்சுறுத்தினார். ஈரான்மீது கிட்டத்தட்ட ஒரு பொருளாதார முற்றுகையைச் சுமத்தியபின், அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் தெஹ்ரான் NPT எனப்படும் அணுவாயுதப் பரவல்தடை உடன்படிக்கையின் கீழ் வளர்க்கப்பட்டுள்ள நிலையங்களையும், திட்டங்களையும் கைவிட்டுவிடுமாறு கோருகின்றன.

ஈரான் மீது ஒபாமாவின் நிலைப்பாடு முற்றிலும் பாசாங்குத்தனம் ஆகும். ஈரான் அணுவாயுதப் பரவல்தடை உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளது. அதன் அணுசக்தி நிலையங்கள் சர்வதேச அணுசக்தி அமைப்பின் (IAEA) கண்காணிப்பிற்கு உட்பட்டவை. அதன் தலைவர்கள் தாங்கள் அணுவாயுதங்களை தயாரிக்கப் போவதில்லை என்று வலியுறுத்தி வருகின்னர். அப்படியும்கூட, ஒபாமா நிர்வாகம் ஈரான் மீது போருக்குத் தயாரிப்புக்களை நடத்திவருகிறது: அதே நேரத்தில் இஸ்ரேல், இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் என்று அணுவாயுதங்களைக் கொண்ட நாடுகளைப்பற்றித் தன் கண்களை மூடிக் கொண்டுவிடுகிறது. இந்நாடுகள் அணுவாயுதப் பரவல்தடை உடன்படிக்கையில் கையெழுத்தும் இடவில்லை, சர்வதேச அணுசக்தி அமைப்பின் கண்காணிப்பினை அங்கு அனுமதிப்பதும் இல்லை.

ஈரானுடன் கையாள்கையில் அனைத்து விருப்பதேர்வுகளும் மேசைமீது உள்ளன என்று ஒபாமா பலமுறையும் அறிவித்துள்ளார். அதாவது, அணுவாயுதங்களை பயன்படுத்துவது என்பது நிராகரிக்கப்படவில்லை. பல முறை அமெரிக்கச் செய்தி ஊடகம் பென்டகனில் திட்டமிடுபவர்கள் புதிய அணுவாயுதங்களைப் பயன்படுத்தி ஈரானின் நிலத்தடி யுரேனிய அடர்த்தியாக்கும் ஆலைகளை அழிப்பது குறித்துப் பரிசீலிக்கின்றனர் என்று தகவல் கொடுத்துள்ளது.

அமெரிக்கத் தலமையில் நடந்த ஆப்கானிய, ஈராக்கியப் படையெடுப்புக்களைப் போலவே, ஈரானுக்கு எதிரான ஒரு சட்டவிரோத ஆக்கிரமிப்புப் போரை தொடக்குவதின் முக்கிய நோக்கம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார, மூலோபாய நலன்களுக்கு உகந்த ஆட்சியை தெஹ்ரானில் நிறுவுவதுதான். இதற்கு முந்தைய ஆட்சியைப் போலவே, ஒபாமா நிர்வாகமும் மத்தியக் கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் உள்ள எரிசக்தி வமான பிராந்தியங்களில் அமெரிக்க மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துவதில் தீவிரமாக உள்ளது. இதனால் வாஷிங்டன் ஐரோப்பிய, ஆசியப் போட்டி நாடுகளுக்கு தன் நிபந்தனைகளை ஆணையிட முடியும்.

உலக முதலாளித்துவ நெருக்கடியின் மோசமாகிவரும் நிலை, பூகோள-அரசியல் அழுத்தங்களை அதிகரித்து வருகிறது. அணுவாயுதப் போரின் ஆபத்தைக் குறைத்தல் என்பதற்கு முற்றிலும் மாறாக, ஒபாமா நிர்வாகம் கணிசமாக இதை உயர்த்தியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் அது அமெரிக்க மூலோபாயக் குவிப்பை ஆசியாவிற்கு நகர்த்தி, சீனாவிற்கு எதிரான முழுத் தீவிர அழுத்தத்தைக் கொடுத்துள்ளது. இப்பிராந்தியம் முழுவதும் அமெரிக்கா உடன்பாடுகளையும் மூலோபாய கூட்டுக்களையும் வலுப்படுத்தி, புதிய இராணுவத் தளங்களை நிறுவுதல், சீனாவிற்கு எதிரான இராஜதந்திர, இராணுவ ஆத்திரமூட்டுதல்களை நடத்துதல் ஆகியவற்றையும் செய்துள்ளது.

சியோலில் ஒபாமாவின் வட கொரிய அணுவாயுதங்களைக் குறித்த கருத்துக்கள் நேரடியாக பியோங்யாங்கிற்கு எதிரானவை அல்ல. ஆனால் அதன் நட்பு நாடான பெய்ஜிங்கிற்கு எதிரானவை ஆகும். ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அவர் சீனா தொடர்ச்சியாக மோசமான நடத்தைக்கு வெகுமதிகொடுத்து வருவதாகவும், வட கொரியாவின் வேண்டுமென்ற ஆத்திரமூட்டுதல்களை பொருட்படுத்துவது இல்லை என்றும் குற்றம் சாட்டினார். அமெரிக்க ஏகாதிபத்தியம் அணுவாயுதமேந்திய சீனாவை பல வெடிப்புத் தன்மைகொண்ட பிராந்தியத்தில் எதிர்நோக்குகையில் 1990கள், 2000களில் நிகழ்ந்த அப்பிராந்தியத்தை உள்ளடக்கிய போர்கள் இப்பொழுது புதிய மற்றும் மிகவும் ஆபத்தான வடிவத்தை எடுத்துள்ளன.

1938ல் நான்காம் அகிலத்தின் நிறுவன ஆவணமான இடைமருவு வேலைத்திட்டத்தில் லியோன் ட்ரொட்ஸ்கி, ஆயுதக் களைதல் என்பது முதலாளித்துவமும் அதன் முகவர்களும் போர்த்தயாரிப்பின்போது மக்களை ஏமாற்றுவதற்காக பயன்படுத்தும் உட்பொருளற்ற கருத்துக்களில் ஒன்றுதான் என்றார். முழுப் பிரச்சினையும் எவர் எவரை ஆயுதம் களையவைப்பர் என்பதுதான்என்று அவர் எழுதினார். போரைத் தவிர்க்க அல்லது முற்றுப்புள்ளி வைக்க நாம் பயன்படுத்தக்கூடிய ஆயுதக் களைதல் தொழிலாளர்கள் முதலாளித்துவத்தை ஆயுதம் களைய வைப்பதேதான் என்று கூறினார்.

இந்த உலகில் பேரழிவு தரக்கூடிய அணுவாயுதப்போரைத் தடுக்கும் திறன் உடைய ஒரே சக்தி முதலாளித்துவத்தை அகற்றி, சோசலிசத்தை ஸ்தாபிப்பதற்கான ஓர் ஐக்கியப்பட்ட புரட்சிகர சர்வதேசத் தொழிலாளர் வர்க்கத்தின் இயக்கம்தான்.